இடுகைகள்

ஆகஸ்ட், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செப்டம்பர் மாதம்

படம்
முக்கிய நிகழ்வுகள் 1, 1875 தமிழ்நாட்டில் முதன்முதலாக  மதுரையிலிருந்து திருச்சி வரை ரயில் ஓடியது. 1, 1916 அன்னிபெசன்ட் அம்மையார்  "ஹோம் ரூல் இயக்கம்' ஆரம்பித்தார். 1, 1939 இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. 1, 1956 இந்தியாவில் பல தனியார் காப்பீடு நிறுவனங்கள் அரசுடமையாக்கப்பட்டு இந்திய காப்பீடுக் கழகம் உருவானது. 2, 2012 அமெரிக்க விண்கலத்தில் பயணித்த சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் 44 மணி,  2 நிமிடம் நடந்து சாதனை செய்தார். 4, 1978 அண்ணா பல்கலைக்கழகம் உருவானது. 7, 1970 ரஷ்யாவின் லூனா-15 விண்கலம் நிலவில்  இறங்கியது. 11, 2001 அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத்தின் மீது விமானத் தாக்குதலில் 2,974 பேர்  மரணம். பலர் காயமடைந்தனர். 13, 1906 முதன்முதலாக ஐரோப்பாவில் ஆகாய விமானம் பறந்தது. 15, 1981 தஞ்சைப் பல்கலைக் கழகம்  அமைக்கப்பட்டது. 17, 1988 தென்கொரியாவின், சியோல் நகரில், 24ஆவது ஒலிம்பிக் நடைபெற்றது. 159 நாடுகளுடன், 237 போட்டிகளில் 8,465 பேர் கலந்து கொண்டனர். 18, 1968 இந்திய உளவுத்துறை  உருவாக்கப்பட்டது. 19, 1945 பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில்,  "இந்தியாவுக்குச...

போலி [சினிமா விசிடி] களை ஒழிக்க ..

படம்
திருட்டு விசிடியை ஒழிக்க நடிகர் விஷால் ரஜினி,விஜய் ரசிகர்கள் களம் இறங்கினால் போதும் என்று வழி கூறியுள்ளார். அப்படி என்றால் இதுவரை இந்த திருட்டு விசிடிகளை இவர்கள்தான் வாங்கினார்கள்.இனி வாங்காவிட்டால் போதும் திருட்டு விசிடி ஒழிந்து விடும்  என்று சொல்ல வருகிறாரா?இல்லை இவர்கள் களம் இறங்கி கடைகளில் புகுந்து ப்ழிக்க சொல்லுகிறாரா? ஏற்கன்வே ஆணானப்பட்ட கமல்ஹாசனே கடைகளில் புகுந்து விசிடிகளை கைப்பற்றியும் காவல்துறையினர் விற்றவர்களுக்கே ஆதரவாக இருந்து தோல்வியடைந்த கதை விஷாலுக்கு தெரியாதா?கமல்ஹாசன் மீதே கடைகளை நாசம் செய்ததாக வழக்கு பதிவானதும் தெரியுமா? முதலில் திருட்டு விசிடி என்று சொல்லுவதே தவறு.வாங்குபவர்கள்50 ரூபாய் வரை கொடுத்து வாங்குகிறர்கள்.இது முந்தைய திரையரங்கு கட்டணம்தான்.இப்பொது ஒரு குடும்பம் படம் பார்க்க [காபி,பாப்கார்ன் உட்பட]2000 ஆகிறது.பின்னே போலி திரைப்பட தகடுகள் பரவாமல் என்ன செய்யும்.? இந்த படங்களை போலி வியாபாரிகளுக்கு கொடுப்பது யார்? உங்கள் திரைத்துறையை சார்ந்தவ்ர்கள்தானே?ஆனால் அதை தடுக்கச்சென்று அடி வாங்குவது மட்டும் ரசிகர்களா? முதலில் அங்குள்ள ஓட்டைகளை அடைக்கப் பாருங்...

இந்த வார உலகம்

படம்

ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்.

படம்
2004 -2007 காலகட்டத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தார்.  அப்போது, ஏர்செல் தனது சேவையை விரிவாக்கம் செய்வதற்காக பல்வேறு இடங்களுக்கான உரிமம் கேட்டு தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு விண்ணப்பம் செய்தது. ஏர்செல் நிறுவனத்தோடு மேலும் இரு நிறுவனங்களும்உரிமம் கேட்டு விண்ணப்பித்தன.  உரிமம் வழங்குவதற்காக, ஏர்செல் நிறுவனத்திடம், தேவையில்லாத, முக்கியத்துவம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டன. விசாரணைகள் நடத்தப்பட்டன. ஆனால், இந்த நடைமுறையை மற்ற இரு தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம், அமைச்சகம் மேற்கொள்ளவில்லை.  அவர்களுக்கு உடனடியாக உரிமம் வழங்கப்பட்டுவிட்டது. அதே நேரம், ஏர்செல்லுக்கு உரிமம் வழங்குவதில் இழுத்தடிப்பு நடந்தது.  இவ்விவகாரத்தில் சி.பி.ஐ., யின் முதற்கட்ட விசாரணையில், தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் அமைச்சர், ஏர்செல் நிறுவனத்திற்கு நிர்பந்தம் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.  மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளைவிற்கும்படி, ஏர்செல்லின் அப்போதைய அதிபர் சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட...

செப்டம்பர்20 ம்,22ம்

படம்
 பெங்களூரில் 18 ஆண்டுகளாக நடந்து வந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, நீண்ட இழுபறிக்குப் பின் 118 வாய்தாக்களுக்குப்பின் நேற்று இறுதி வாதம் முடிந்தது.    செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பு அளிப்பதாக பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா அறிவித்துள்ளார் .  அன்றைய தினம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66.64 கோடி சொத்து சேர்த்ததாக ஜனதா கட்சி தலைவராக இருந்த சுப்ரமணியசுவாமி சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார்.  அதையேற்று விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.  தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் விசாரணை நடத்திய பின், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். சென்னையில் 1996 முதல் 2003 வரை விசாரணை நடந்தது. பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் 2004ம் ஆண்டு பெங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அங்கு ...

கால்டுவெல்

படம்
கால்டுவெல் என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழி நூலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதே.  இவர் 1814-ம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார்.  இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது லண்டன் மிஷனரி சொசைட்டி என்னும் கிறிஸ்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838 ஜனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். பின்னர் இவர் நற்செய்தி பரப்புவதற்கான சபை  எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார். தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார். 1841-ல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய 'திராவிட ...

அம்மா மின்சாராமாவது தரலாமே

படம்
 இதுதாண்டா [ இங்கு ] நடுநிலை நாளேடு [ களின் நிலை .] "தற்போது தமிழகத்தில் வெளிவரும்  சில வார, நாளேடுகள் அப்பட்டமாக தி.மு.கழகத் தைப் பற்றிய உண்மைக்கு மாறான செய்தி களையே தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்களே?' கலைஞரின் பதில் :-  'அப்படியெல்லாம் செய்தால்தான் அவர்களுடைய பிழைப்பு நடைபெறும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. "பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே" என்ற பாடல்தான் அந்தச் செய்திகளைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது. அப்படிப்பட்ட செய்திகளை வெளியிட நாம் ஏன் இடம் கொடுக்க வேண்டும்?  இப்படிப் பட்ட உண்மைக்கு மாறான செய்திகளை வெளி யிட்டா ல்தான் தங்கள் பத்திரிகைக்கு அரசு விளம்பரம் கிடைக்கும் என்ற அளவுக்கு அந்தப் பத்திரிகையாளர்கள் ஆளாகியிருக்கிறார்கள்! இப்படித்தான் பிழைக்க வேண்டும் என்பது ஒரு ரகம்; எப்படியும் பிழைக்கலாம் என்பது இன்னொரு ரகம்! அந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இவர்கள்! உதாரணத்திற்கு "தினமலர்"நாளேடு வெளியிட்ட இரண்டு செய்திகளைக் கூறுகிறேன். "நடிகர் விஷாலுக்கு வலை, கருணாநிதி விருப்பம் நிறைவேறுமா?" என்ற தலைப்பில் ஒ...