suran
அப்படி கண்காணிக்க வாய்ப்பிருப்பது உண்மைதான் 
ஒருவர் ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் வைத்திருந்தலோ அல்லது அவரது கூகுள் கணக்கில் லாக்-இன் செய்திருந்தாலோ, அவர்களின் ஒவ்வொரு தகவல்களும் கூகுள் கணக்கில் கண்காணிக்கப்பட்டு, மாத கணக்கில் சேகரித்து வைத்திருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூகுளில் உள்ள ‘மாப்பிக்கிங் சாதனம்’ (Mapping Device) நீங்கள் சமீபத்தில் எங்கு பயணம் மேற்கொண்டிறீர்கள் என்பதை துல்லியமாக காட்டும். இந்த நடவடிக்கைகளை உங்களின் இடத்தை குறிக்கும் வரைப்படத்தில் (location history map) காணமுடியும்.
ஒருவர் கூகுள் கணக்கில் ஒருமுறை லாக்-இன் செய்துவிட்டால், அதிலுள்ள வரைபடத்தில் சிவப்பு நிற சிறிய ஒளியும், கோடுகளும் தென்பட்டு, நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்பதையும், எங்கு இருக்கிறீர்கள் என்பதையும் காட்டும்.
இது குறித்து கூகுள் தெரிவிக்கையில், இந்த சேவை கட்டாயம் பயன்படுத்த வேண்டியதல்ல. இதனை உங்கள் ஸ்மார்ட்போனில் எப்படி ஆஃப் செய்வது என்ற வழிமுறைகள் அளித்துள்ளேம் என்று குறிப்பிடுக்கிறது.
மேலும், பயன்பட்டாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் உள்ள பழைய தகவல்களை அழிக்கவும் கூகுள் நிறுவனம் வகை செய்து தந்திருக்கிறது.
மொபைல்போன் வரலாற்றில், 'ஸ்மார்ட் போன்கள்' வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள போதும், வாடிக்கையாளர்கள் இவற்றுக்கு அடிமையாகி வருவது உடல்நலம், மனநலம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வழிவகுத்துள்ளது.மனிதர்களின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக மொபைல்போன்கள் மாறியுள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரிடமும், இவற்றின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 2000க்கு பின் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் மொபைல் போன், கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. இதேபோல் பன்னாட்டு நிறுவனங்களின் மொபைல்போன்கள் இந்தியாவில் அதிகளவு இறக்குமதி ஆக துவங்கின. தொடர்ந்து வாடிக்கøயாளர்களின் ரசனைக்கேற்ப அதிநவீன தொழில்நுட்பங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.தொலைதொடர்புத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக இன்டர்நெட் பயன்பாடுக்கான கட்டணம் குறைய துவங்கியது. 
இவற்றை மொபைல்போன்களில் பயன்படுத்தும் அதிக பயன்பெறும் வகையில், 'ஸ்மார்ட் போன்கள்' அறிமுகப்படுத்தப்பட்டன.
suran
இவற்றின் விலை மிக அதிகம் இருந்த காரணத்தால், பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. பன்னாட்டு நிறுவனங்களுக்குள் ஏற்பட்ட போட்டி காரணமாக விலை ஓரளவு குறைய துவங்கியுள்ளது.'பேஸ்புக்', 'டிவிட்டர்' உள்ளிட்ட அனைத்து சமூகவலைதளங்களை பயன்படுத்த உதவும் காரணத்தால், இன்று மக்களிடமும் ஸ்மார்ட்போன்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஸ்மார்ட் போன்கள் பல சிறப்பை கொண்ட போதும், பெற்றோர், உறவினர், நண்பர்களுடன் நேரம் செலவிடுதலை குறைத்தல், குற்றச்சம்பவங்களில் ஈடுபட வழிவகுத்தல் உள்ளிட்ட பல பாதிப்புகளையும் கொண்டுள்ளன.

டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர்களை போல பயன்படுத்தலாம்; மைக்ரோசாப்ட் டாக்குமென்ட்ஸ் தயாரித்தல் மற்றும் எடிட் செய்யலாம்; தெரியாத பகுதிகளுக்கு செல்லும் போது ஜி.பி.எஸ்., தொழில்நுட்பம் பயன்படுத்தலாம் என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. ஆனால், உறவினர், நண்பர் வட்டத்தில் இருந்து தனிமைப்படுதல், அருகில் உள்ளவர்களை தவிர்த்து தொலைதூர தெரிந்த மற்றும் அறிமுகம் இல்லாத நபர்களுடன் கலந்துரையாடுதல் என பல சிக்கல்களும் உள்ளன. இதில், அதிக நேரம் செலவிடுவதால் காலப்போக்கில் மனஅழுத்தத்துக்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
மொபைல்போன்களை பயன்படுத்தி, தமக்கு தாமே போட்டோ எடுத்துக்கொள்ளும் முறை தான் 'செல்பி' என்ற பெயரில், தற்போது பிரபலமடைந்து வருகிறது. வித்தியாசமான வகையில் போட்டோக்களை எடுக்க நினைத்து பல விபரீதங்களை வாடிக்கையாளர்கள் சந்திக்கும் நிலை, ஏற்படுகிறது. தண்டவாளத்தில் ரயில் வரும்போது அருகே நிற்பது, ஆபத்தான மலைசிகரங்களில், அபாயத்தை மறந்து போட்டோ எடுக்க முயற்சிப்பது உள்ளிட்டவை இதற்கு சில உதாரணங்கள்.

நவீன தொழில்நுட்பங்களை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்துவதால் நேரம் வீணாவதை தடுக்கலாம். உடல் நலம் மற்றும் மனநலத்தை பாதுகாக்கலாம். 
எந்த  பழக்கமும் ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டும்போது அதற்கு அடிமையாக்கிவிடும். தகவல் பரிமாறிக்கொள்வதற்கு பயன்படுத்தப்படும் கருவி, மொபைல்போன்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். அவற்றை நம் கட்டுப்பாட்டில் வைக்க பழக வேண்டும்,
------------------------------------------------------------------------------------------
suran