சனி, 23 ஆகஸ்ட், 2014

யாரோ பெத்தப்பிள்ளைக்கு

முல்லைப்பெரியாறு வென்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் என்ற பெயரில் அதிமுக தொண்டர்கள் பாராட்டு விழா நடத்தியுள்ளனர்.
இந்த வெற்றி முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்ந்த வழக்கில் கிடைத்த தீர்ப்புதான்.
இன்றைய முதல்வர் இதில் போராடி பெற்றதில்லை.தீர்ப்பு இவர் ஆட்சி காலத்தில் வந்துள்ளது.
அதற்கு விவசாயிகள் பெயரில் கோடிகளை கொட்டி தனக்குத்தானே விழாவா?
தென்னையை வைத்தவர் ஒருவர.இளநீரை அருந்துபவர் இன்னொருவர் கதை தான்.
இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் எம்ஜியார் முதல்வராக இருந்த காலத்தில் போடப்பட்ட மலையாள ஒப்பந்தம்தான்.
அதைப்பற்றி முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துறை முருகன் தினமர் இதழுக்கு கொடுத்த பேட்டி :-

"முல்லை பெரியாறு அணைக்கு, 999 ஆண்டுகள் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன. இதுவரை, 100 ஆண்டுகள் தான் முடிவடைந்துள்ளன. அணையில், 152 அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்கி வைக்க வேண்டும்.முல்லை பெரியாறு அணைக்கு கீழே பெரியாறில், இடுக்கி அணையை கேரளா, கட்டி விட்டது. அந்த அணையில், 73 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்கலாம். முல்லை பெரியாறு அணையில், 10.5 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்கலாம். இடுக்கி அணையிலிருந்து, 800 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்க, கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது.

முல்லை பெரியாறு அணையில், தண்ணீர் நிரம்பிய பின், கீழே உள்ள அணைக்கு, தண்ணீர் செல்ல முடியும். எனவே, முல்லை பெரியாறு அணை, ரொம்ப பழமையாகி விட்டது. அந்த அணைக்கு பாதுகாப்பு இல்லை என்ற புரளியை, கேரளாவில் கிளப்பி விட்டனர். பின், மத்திய நீர் வள ஆதாரகுழுவுக்கு, கேரள அரசு கடிதம் எழுதியது.அக்ழுவின் தலைவராக இருந்த தாமஸ், ஒரு மலையாளி. அவர் அணைக்கு சென்று, ஆய்வு செய்தார். 'அணை நன்றாக இருக்கிறது' என, பத்திரிகையாளர்களிடம் தாமஸ் தெரிவித்தார். பின் திருவனந்தபுரம் சென்ற அவரை, அங்குள்ளவர்கள், 'நீங்கள் மலையாளியாக இருந்து, இப்படி கருத்து தெரிவிக்கலாமா?' என கேட்டனர். பின், தமிழகத்திலிருந்து இன்ஜினியர்களை, தாமஸ் வரவழைத்தார்.
அந்த இன்ஜினியர்களில், ஒருவரை தவிர, மற்றவர்கள் அனைவரும் மலையாளிகள். மதுரை கலெக்டராக இருந்தவரும் மலையாளி. இப்படி பெரும்பாலானவர்கள் மலையாளிகள்என்பதால், அவருக்கு அது, வசதியாகி விட்டது. அவர்களிடம், தாமஸ், 'அணையின் நீர்மட்டத்தை, 152 அடியிலிருந்து, 136 அடிக்கு குறைத்து விடுங்கள். அணை பலவீனமாகி விட்டது. அணையை பலப்படுத்த வேண்டும். அதற்கு மூன்று திட்டங்களை நான் சொல்கிறேன். அதை நீங்கள்நிறைவேற்றுங்கள்' என்றார்.


'நீர்மட்டத்தை, 156 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கும் போது, 16 டி.எம்.சி., தண்ணீர் குறைவதால், ஐந்து மாவட்டங்களுக்கு நீர் வரத்து குறைகிறது. நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. முதல்வர் எம்.ஜி.ஆரிடம் சொல்கிறோம்' என, கூறிவிட்டு வந்திருக்க வேண்டும். 
ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை. 
'அணையின் அடிகளை குறைப்பது குறித்த கோப்புகள் ஏதும் இல்லாமல், அமைச்சரவை கூட்டத்தில் வைத்து, ஒப்புதல் பெறாமல், எந்த துப்பும் இல்லாமல், அப்போது கேரள முதல்வர் அச்சுதானந்தமேனனுடன் வாய்மொழி உத்தரவை மேற்கொண்டது ஏன்?' என, அப்போதை அ.தி.மு.க., அரசுக்கு நான் கேள்வி எழுப்பினேன். 
இது, முல்லை பெரியாறு விஷயத்தில், அ.தி.மு.க., செய்த முதல் துரோகம்.கடந்த, 1979ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை இந்த பிரச்னை நீடித்தது. தி.மு.க., ஆட்சி வந்த பின், மத்திய அரசிடம், 'என்ன செய்ய போகிறீர்கள்?' என, பல முறை வலியுறுத்தி கேட்டோம். 
அதன் பின், மிட்டல் தலைமையில் கமிட்டிநியமிக்கப்பட்டது.

அணை சோதனையிட்டு, பாதுகாப்பாக உள்ளது என்ற அறிக்கையை, மத்திய அரசுக்கு, மிட்டல் கமிட்டி வழங்கியது. அதை மத்திய அரசு ஏற்று, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த மிட்டல் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தான், 142 அடி வரை, அணையில் தண்ணீர் நிரப்பலாம் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த ஆணையை, மறுபரிசீலனை செய்ய, கேரள அரசு உச்ச நீதிமன்றத்திடம் கேட்டது. உச்ச நீதிமன்றம்,கேரளாவின் வேண்டுகோளை ஏற்கவில்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்ற ஆணையை செல்லாததாக்க வேண்டும் என்று, கேரள அரசு 2006ல், ஒரு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. அந்த சட்டத் திருத்தத்தின் நோக்கம், பெரியாறு அணை, கேரளமாநிலத்திற்கு உட்பட்டது என்றும், 136 அடி வரை தான், அணையில் தண்ணீர் நிரப்ப முடியும் என்பதையும் பறைசாற்றத்தான். மூன்று மாதம் கழித்து, தேர்தல் வந்தது.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், உச்ச நீதிமன்றத்தில், வழக்கு நடத்தினோம். 
கேரளாவின் சட்டத் திருத்தம் செல்லாது என, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதன் பின், அரசியல் சாசன சட்டத்திலேயே, பிரச்னைகளை, கேரள அரசு கிளப்பியது. 
அதனால், இந்த வழக்கு, அரசியல் அமைப்பு பெஞ்சிற்கு, மாற்றப்பட்டது.அந்த பெஞ்ச், தங்களுக்கு உதவுவதற்காக, நீதிபதி ஆனந்த், தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தது.

வரலாறுகளை மறைத்து...:
அதன் பின், நீதிபதி ஆனந்த் கமிட்டி, அணை பலமாக இருக்கிறது என அறிக்கை தாக்கல் செய்தது. அதுவரையில், நாங்கள் ஆட்சியில் இருந்தோம்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், அந்த அரசியல் அமைப்பு பெஞ்ச், 142 அடி வரை தண்ணீரை தேக்கலாம் என, கூறியது. இப்படி தீர்ப்பு சொல்லும் நேரத்தில், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிட்டார். ஆனால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடி, நீதிமன்ற தீர்ப்பை பெற்ற நாங்கள், தீர்ப்பு வரும் நேரத்தில், ஆட்சியில் இல்லாததை பயன்படுத்தி, அதற்காக, தான் தான் மெனக்கெட்டது போல, இன்றைக்கு காட்டிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.

இதுவரை நடந்த உண்மை  வரலாறுகளை மறைத்து, பாராட்டு விழா என்ற பெயரில் பஜனை நடத்துகின்றனர். 
அதில் முதல்வரும் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் கலந்து கொள்கிறார். இது எப்படியிருக்கிறது என்றால், எங்கள் வீட்டில் வளர்த்த தென்னை மரம், பக்கத்து வீட்டில் சாய்ந்து, முடக்கு தென்னை கொடுப்பது போல் ஆகி விட்டது."
                                                                                                                              ,                                                                                                                     - துரைமுருகன்

suran
யாரோ பெத்தப்பிள்ளைக்கு .....பாராட்டு .
எந்த விவசாயிகள் சங்கம் இந்த விழாவை நடத்துகிறது.விழாவுக்கான செலவு எவ்வளவு.வருமானவரித்துறை க்கு செலவு கணக்கை தாக்கல் செய்தார்களா?இவ்விழா செலவை பற்றி பகிரங்கமாக வரவு செலவை அந்த விவசாயிகள் தாக்கல் செய்வார்களா?பத்திரிக்கை விளம்ப்ரச்செலவே சில கோடிகளை எட்டுகிறதே.தமிழ் நாட்டில் விவசாய சங்கங்கள் ,விவசாயிகள் இப்படி வெட்டி விழாக்கள் நடத்தும் அளவுக்கு அவ்வளவு செழிப்பாகவா இருக்கிறார்கள்.அப்படி என்றால் விவசாயிகள் தெருவில் நாற்றுக்களுடன் இறங்கிப் போராட்டம் நடத்துவது வெறும் பொழுது போக்குக்குத்தானா?
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாட்ஸ்ஆப்-க்கு 'ஆப்பு' 
வைத்த டெலிகிராம்
பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக மக்களை அதிகம் கவர்ந்தது வாட்ஸ்ஆப் என்னும் மென்பொருள். இதன் வளர்ச்சியைக் கண்டு மிரண்ட பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப்-பையே விலைக்கு வாங்கியது.
சமூக வலைதளங்களில் அமோகமாக ஆட்சி செய்து வந்த வாட்ஸ்ஆப்-பை வீழ்த்த வந்து விட்டது இன்னொரு சமூக வலைதளம். அதுதான் டெலிகிராம் மென்பொருள் ( Telegram Messenger). இதை ரஷ்யாவின் நிகோலாய் மற்றும் பவல் டுரவ் சகோதரர்கள் உருவாக்கியுள்ளனர். இவர்கள் ஏற்கனவே 'விகே' எனும் சமூக வலைதளத்தை உருவாக்கினர். (இதை ஐரோப்பாவில் பேஸ்புக்கிற்கு அடுத்து அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர்).
டெலிகிராம் மென்பொருள் 2013 அக்டோபரில் வெளியிடப்பட்து. அப்போது ஒரு நாளைக்கு 1 லட்சம் பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்தினர். பின் அபார வளர்ச்சி பெற்று இந்த ஆண்டு மார்ச்சில் 1.5 கோடி பேரைத் தொட்டுள்ளது.
வாட்ஸ்ஆப்- பை விட இதில் அதிக வசதிகள் உள்ளன. பாதுகாப்பு வசதிகளும் அதிகம். வாட்ஸ்ஆப் மென்பொருள் முதல் ஆண்டு மட்டுமே இலவசம். அதற்குப் பிறகு இதைப் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் டெலிகிராம் மென்பொருள் எப்போதும் இலவசம்.
வாட்ஸ்ஆப்-ல், ஒரு குரூப்பில் 50 நபர்களுக்கு மட்டுமே செய்தி அனுப்ப முடியும். ஆனால் டெலிகிராமில் 200 பேருக்கு குரூப் மூலம் செய்திகள் அனுப்பிக்கொள்ளலாம்.
வாட்ஸ் ஆப்-ல் வீடியோ, ஆடியோ, போட்டோஸ் ஆகியவற்றை மட்டும்தான் அனுப்பமுடியும். டெலிகிராமில் எல்லா விதமான பைல்களையும் அனுப்பலாம்.
வாட்ஸ்ஆப் மென்பொருளை மொபைல் போன்களை தவிர கம்ப்யூட்டரில் பயன்படுத்த முடியாது. டெலிகிராம் மென்பொருளை மொபைல், டேப்லெட்கள் மற்றும் கம்ப்யூட்டரில் விண்டோஸ் இயங்குதளங்களில் நேரடியாக பயன்படுத்தலாம்.
வாட்ஸ்ஆப்-ல் பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. டெலிகிராம் மென்பொருளில் போட்டோக்களை உங்கள் சம்மதம் இல்லாமல் யாரும் பார்க்கமுடியாது. மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை அளித்துள்ளனர்.
வாட்ஸ்ஆப் மென்பொருள் ஆங்கில மொழியில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. டெலிகிராம் மென்பொருளில் ஆங்கிலம், ஸ்பானிஸ், அரபிக், ஜெர்மன், இத்தாலியன், டச்சு, போர்ச்சுகீசு ஆகிய மொழிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதை டவுன்லோட் செய்வதற்கு கீழ் உள்ள இணையதளத்திற்கு செல்லுங்கள்:
android - https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger
iphone/ipad - https://itunes.apple.com/us/app/telegram-hd/id898228810
windows mobiles - http://www.windowsphone.com/en-us/store/app/telegram-messenger-beta/945b96a7-aadc-4dd0-806a-c2d1e0e6ca9a
website version - (இணைய தளம் மூலம் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்) - http://zhukov.github.io/webogram/

                                                                                                                                                                                        நனறி:தினமலர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------