இலங்கை இணைய தளத்தில் முதல்வர் ஜெயலலிதாவை-பிரதமர் மோடியை கிண்டலடித்து வெளியிட்ட செய்தி மிக அசிங்கமான நடவடிக்கைதான்.அதை நிச்சயம் கண்டிக்க வேண்டும் .அதை திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் கண்டித்தான்.பின்னர் ஜெயலலிதாவை தாக்கி எழுதப்பட்ட கட்டுரை நீக்கப்பட்டது.அதற்காக இலங்கை அரசு மன்னிப்பும் கேட்டுக் கொண்டது.

அந்தமன்னிப்புக்குப் பிறகுதான் இங்குள்ள மானமிகு பலருக்கு ஆவேசமும்,வீரமும் பொத்துக்கொண்டு வந்துள்ளது.
ஆங்காங்கே அதிமுகவினர் போராட்டம் செய்து கொண்டிருக்கின்றனர்.அவர்கள் போராட்டம் நடத்துவதில் ஒரு நியாயம்,கட்டாயம் உள்ளது.
ஆனால் தமிழ்த்திரையுலகினர் அதாவது அதிமுக தொழிற்சங்கத்தினர் மன்னிப்பு கேட்டதற் க்கு பின்னர் போராடியுள்ளனர்.
அதுதான் ஏன் என்று தெரியவில்லை.
அம்மாவுக்கு நன்றி தெரிவித்து ஊர்வலம் நடத்திய பின்னர் மீண்டும் தங்களின் விசுவாசத்தை காட்டிட இந்த வாய்ப்பை பிடித்துக்கொண்டுள்ளனர்.விக்கிரமன்,சீமான் பொன்ற ஜெயலலலிதா அடிமைகள் தவிர சிலர் இதில் கலந்து கொண்டதற்கு தங்கள் படம் பிரச்னை இல்லாமல் வெளியாக வேண்டுமே என்ற பயம்தான்
காரணம்.சூர்யா,போன்றோர்களுக்கு வரிசையாக படங்கள் வர வேண்டிய கட்டாயம்.விஜயக்கோ தனது கத்தி படத்தின் தலையின் மேல் ராஜபக்சே பினாமி படம் என்ற கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது.அதற்கு நாம் தம்ளர் சீமான் கட்சி[?]கண்டனம் வெளியிட்டுள்ளது.படம் தலைவா நிலைக்கு போய்விடக்கூடாது என்ற காரணம்.மற்றபடி கலந்து கொண்டவர்கள் தாங்களும் திரை உலகைச் சேர்ந்தவர்கள் என்பதை கட்டிடும் கட்டாயத்தில் உள்ளவர்கள்.
இதற்கு முன்பிருந்த முதல்வரை இலங்கை பிரச்னைக்கே அவர்தான் காரணம் என்று ஈழ வியாபாரம் செய்தவர்கள் ,இனப்படுகொலையை அவர்தான் நடத்தியதாக கூறியவர்கள் இன்று சுதி மாறி பேசவும் ,போராடவும் காரணம் என்ன?
இவர்களின் ஒருதலை பட்சமான போக்குதானே காரணம்.
இந்த போராட்டத்தில் கமலஹாசன்,ரஜினிகாந்த்,அஜித் போன்ற பெருந்தலைகள் கலந்து கொள்ளவில்லை.
காரணம் இது சொம்பு தூக்கும் போராட்டம் என்று தெரிந்து கொண்டதால்தான்.
தங்கள் படம் வெளியாக பிரச்னை எழுப்பப்பட்டால் அதை எப்படி சமாளிக்க வெண்டும் என்று கமல் போன்றோருக்கு தெரியும்.விஜய் போன்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்காமல் படம் வெளிவர வைக்கத்தேரியும்.
இந்த திரையுலக சொம்புகளுக்கு ஒரே கேள்வி .
முந்தைய முதல்வரும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்தார்,மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதி குவித்தார்.ஆனால் அதற்கும் இலங்கை அரசு அவரை கேவலமாக கருத்துக்களை தெரிவித்து கண்டித்தது.அப்போது நீங்கள் இலங்கை அரசையோ,மத்திய அரசையோ கண்டிக்கவில்லையே .மாறாக கையாலாகாதவர் என்று முதல்வரைதானே கண்டித்தீர்கள்.இப்போது மட்டும் நேர் எதிராக நடந்து கொள்ள என்ன காரணம்.?அவதூறு வழக்கு-ஆட்டோ பயம் மட்டும்தானா?
கவிஞர் தாமரை என்பவரின் அன்றைய பேச்சு -இன்றைய பேச்சையும் ஒப்பிட்டு வெளியான ஒரு கானொளி மட்டுமே உங்கள் முதுகெழும்பை காட்டிக்கொடுத்து விடுகிறதே.







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?