அம்மா மின்சாராமாவது தரலாமே

 இதுதாண்டா [இங்கு]நடுநிலை நாளேடு[களின் நிலை.]


"தற்போது தமிழகத்தில் வெளிவரும்  சில வார, நாளேடுகள் அப்பட்டமாக தி.மு.கழகத் தைப் பற்றிய உண்மைக்கு மாறான செய்தி களையே தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்களே?'
கலைஞரின் பதில் :- 
'அப்படியெல்லாம் செய்தால்தான் அவர்களுடைய பிழைப்பு நடைபெறும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. "பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே" என்ற பாடல்தான் அந்தச் செய்திகளைப் பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது. அப்படிப்பட்ட செய்திகளை வெளியிட நாம் ஏன்
இடம் கொடுக்க வேண்டும்? 
இப்படிப் பட்ட உண்மைக்கு மாறான செய்திகளை வெளி யிட்டால்தான் தங்கள் பத்திரிகைக்கு அரசு விளம்பரம் கிடைக்கும் என்ற அளவுக்கு அந்தப் பத்திரிகையாளர்கள் ஆளாகியிருக்கிறார்கள்! இப்படித்தான் பிழைக்க வேண்டும் என்பது ஒரு ரகம்; எப்படியும் பிழைக்கலாம்
என்பது இன்னொரு ரகம்! அந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இவர்கள்! உதாரணத்திற்கு "தினமலர்"நாளேடு வெளியிட்ட இரண்டு செய்திகளைக் கூறுகிறேன். "நடிகர் விஷாலுக்கு வலை, கருணாநிதி விருப்பம் நிறைவேறுமா?" என்ற தலைப்பில் ஒரு செய்தி. நடிகர் சங்கப் பொதுக் குழு கூட்டத்தில் அவர்
பேசியதையொட்டி, அவரை கழகத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று நான் கூறினேனாம். இது முழுக்க முழுக்க பொய்ச் செய்தி. அதுபோலவே திருமண நாளையொட்டி என்னிடம் ஆசி பெற என் மகன் ஸ்டாலினும், மருமகளும் கோபாலபுரம் வந்தார்கள்; வந்தவுடன் நேரே வந்து என்னிடம் ஆசி பெற்றுச்
சென்றார்கள். அதைப்பற்றி என்னைச் சந்திக்க அவர்கள் விரும்பியபோது நான் மறுத்து விட்டதாக ஒரு
பொய்ச் செய்தியை அந்த நாளேடு வெளியிட்டிருக்கிறது. நான் அவர்களைச் சந்திக்கவோ, ஆசி கூறவோ மறுத்து விட்டதாக அந்த நாளேடு நிரூபிக்க முடியுமா? அந்தப் பத்திரிகை யின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்குத் தெரிந்துதான் இப்படியெல்லாம் வெளியிடுகிறார்களா? அல்லது
அவருடைய பார்வையில் அந்த நாளேடு தற்போது நடைபெறவில்லையா? உதாரணத் திற்கு 2 செய்திகளை
மட்டும் கூறினேன். ஒவ்வொரு நாளும் அந்த நாளேடு கழகத்தைப் பற்றி இப்படி இட்டுக்கட்டி செய்திகளை
வெளியிடுவதையே அண் மைக்கால வழக்கமாக கடைப்பிடித்து வருகிறது. நல்ல அளவிலே நடைபெறும்
அந்த நாளேட்டுக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு பிழைப்பு?"
சுரன் 28082014
பிற்பட்டோர் இட ஒதுக்கீடு தயாராகிறது.
இதுவரை திமுக தரப்பு செய்திகளை தாராளமாக் வெளியிட்டு வந்த நக்கீரனும் இந்த கும்பலில் சேர்ந்து கொண்டுவிட்டது.திமுக தரப்பு செய்திகளை குமுதம் ரிப்போர்டர் அளவுக்கு அசிங்கமாக வெளியிடுகிறது.அதிலும் ஸ்டாலினுக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதில் விருப்பமாக செயல்படுகிறது.பின்னணியில் ஏதோ  இருப்பது போல் தோன்றுகிறது.
================================================================================
அம்மா மின்சாராமாவது தரலாமே’
"தமிழகத்தில் 20-8-2014 அன்று மின் பற்றாக்குறை, 900 மெகாவாட்டாக அதிகரித்த தால், சென்னை புறநகர் பகுதிகளில், மின் தடை செய்யப்பட்டது. அன்று மின் தேவை 11,320 மெகாவாட்டாக அதிகரித்தது. மின் உற்பத்தி 10,380 மெகாவாட் என்ற அளவில் இருந்ததால், 940 மெகாவாட் மின்
பற்றாக்குறை ஏற்பட்டது. இதை யடுத்து, சென்னையைத் தவிர்த்து, மற்ற அனைத்து இடங்களிலும் மின்
தடை செய்யப்பட்டது. மின் பற்றாக்குறை, ஆயிரம் மெகாவாட்டைத் தாண்டும் பட்சத்தில் சென்னையிலும்,
மின் தடை செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது."" இது "தினமலர்" நாளேடு முதல் பக்கத்தில் 20ஆம்
தேதி வெளியிட்ட செய்தி. அதுமாத்திரமல்ல;
22ஆம் தேதிய "தினமலர்" இதழின் முதல் பக்கத்தில் "காற்றாலை கைகொடுக்காததால் மின்சார வினியோகத்தில் நெருக்கடி - மாவட்டங்களில் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டு"என்ற
தலைப்பில் வந்துள்ள கொட்டை எழுத்துச் செய்தியில்,"தமிழகத்தில் காற்றாலைகள் கை கொடுக்காததால், மின் உற்பத்தி, தேவையைக் காட்டிலும் குறைவாக உள்ளது. பற்றாக்குறையைச் சமாளிக்க சென்னையைத் தவிர மற்ற மாவட்டங் களில் அறிவிக்கப்படாத மின் தடை அமல்படுத்தப் பட்டது. கடந்த 19ஆம் தேதி மின் பற்றாக்குறை 340 மெகாவாட், 20ஆம் தேதி 940 மெகாவாட், 21ஆம் தேதி 1,190 மெகாவாட் எனப் படிப்படியாக அதிகரித்து வருகிறது. 
சுரன் 28082014
இ தனால், சென்னை தவிர்த்து, மற்ற அனைத்துப் பகுதிகளிலும், நாள் 
தோறும் 3 முதல் 4 மணி நேரம் வரை மின் தடை அமல்படுத்தப்படுகிறது. முன் அறிவிப்பு இல்லாமல்
திடீரென மின் தடை செய்யப்படுவது, பொதுமக்க ளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது"என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. சமீப காலமாக, அனல் மின் நிலையங்களில், "பாய்லர் டியூப் பஞ்சர், ஹைட்ரஜன் வாயு கசிவு" என பல காரணங்களால் மின் உற்பத்தி பாதிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. இவை அனைத்தையும் மூடி மறைத்து விட்டு, பேரவையில் முதலமைச்சரும், துறை அமைச்சரும் கடந்த சட்டப்பேரவையிலே என்ன சொன்னார்கள் தெரியுமா? கழக உறுப்பினர் கரூர் கே.சி. பழனிச்சாமி பேசும்போது, தமிழகத்தில் ஓரளவு மின்வெட்டு என்று தொடங்கியதுதான் தாமதம், உடனே முதல் அமைச்சர் எழுந்து, 
"தமிழகத்தில் இப்பொழுது ஓரளவு மின்வெட்டு இருப்பதாகக் கூறுவது சரியல்ல; முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில்தான் மின்வெட்டு இருந்தது. நடப்பாண்டிலேயே நாங்கள் மின்வெட்டை முழுமையாக நீக்கியிருக்கிறோம்" 
என்று கூறியவுடன், அ.தி.மு.க. உறுப்பினர்கள் எல்லாம் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள். 
முதலமைச்சர் பேசியதைத் தொடர்ந்து, அவரைவிட மூத்த அமைச்சரான நத்தம் விசுவநாதன் எழுந்து, "தமிழகத்தில் மின்வெட்டை அடியோடு நீக்கிய பெருமை முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களையே சாரும். 
சுரன் 28082014
வீட்டுக்குப் போகலாம் என்கிறாயே அங்கு மின்சாரம்தான் இல்லையே.இவ்வளவு வெளிச்சம்,காற்று வருமா?
அம்மா அவர்கள் எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக மின்வெட்டை முற்றிலும் 
நீக்கியிருக்கிறார்கள். இப்பொழுது காற்றாலை மின்சாரம் தேவைக்கு அதிகமாகவே கிடைத்து வருகிறது.
மின் தடை என்பது வேறு, மின்வெட்டு என்பது வேறு என்பதை உறுப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்""
என்றெல்லாம் வகுப்பு எடுத்தார். முதல் அமைச்சரும், துறை அமைச்சரும் பேரவையில் இவ்வாறு பெருமை
அடித்துக் கொண்டு இன்னும் ஒரு மாதம் முடியவில்லை. அதற்குள் என்ன கதி ஏற்பட்டுள்ளது? 
ஒருவேளை இப்படி வரக்கூடும் என்பதை உணர்ந்தேதான், முதல் அமைச்சர் மாட்டிக் கொள்ளட்டும் என்பதற் காகவே மின்வெட்டை நீக்கிய பெருமை முதல் அமைச்சருக்கே சாரும் என்று துறையின் அமைச்சர் கூறினாரோ?என்று கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
எது எதுக்கோஅம்மா பெயரில் கடைதிறக்கும் இந்த அம்மையார் அரசு அம்மா பெயரில்மின்சாரம் தர ஏதாவது வழி செய்யக்கூடாதா?
இதுதான் இருளில் மூழ்கியுள்ள தமிழகத்தின் இப்போதைய எதிர்பார்ப்பு.
சுரன் 28082014

---------------------------------------------------------------------------------------------------------------------------------
         
சுரன் 28082014
                                                                                                                                   

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?