திங்கள், 25 ஆகஸ்ட், 2014

வ்ரலாறை திரிப்போம்....,

இனி அடுத்துவரும் தலை முறையினர் திரிக்கப்பட்ட வரலாற்றை,அதாவது பாஜக அரசால் திரிக்கப்பட்ட வரலாற்றை தான் படிப்பார்கள்.அதில் ஆர்.எஸ்.எஸ். கொட்சே தடுக்க முயன்றும் காந்தி தன்னைத் தானே சுட்டுக்கொண்டார்.இந்திய விடுதலைக்காக பொராடியது ஆர்.எஸ்.எஸ்,பஜ்ரங்தள்,ஜனசங்கம் என்று கூட வரலாறு பதிவாகி இருக்கலாம்.
வரலாற்றைப் புரட்டுவதை - திரிபுவாதம் செய்வதை ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவாரும், அதன் அரசியல் முகமான பி.ஜே.பி.யும் தன் கொள்கைக் கோட்பாடுகளாகவே கொண்டு வந்திருக்கின்றன. அதுவும் மத்தியில் ஆட்சி அதிகார லகானைக் கையில் பிடித்தவுடன் அது தன் பாசிசத் திருக்கை வாலை எடுத்துக்கொண்டு சொடுக்க ஆரம்பித்துவிட்டது. 
அசல் ஆர்.எஸ்.எஸ். அக்மார்க் முத்திரைக்காரரை இந்திய வரலாற்றுத்துறைத் தலைவராக நியமித்துவிட்டது பி.ஜே.பி. ஆட்சி.
சங்கப்பரிவார் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மிகவும் தீவிர உறுப்பினர்;  இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணைப் பிரிவான அகிலபாரதிய இதிஹாஸ் சங்கலன் யோஜனா (இந்திய வரலாற்றுப் பாதுகாப்பு அமைப்பு)வின் ஆந்திர மாநிலத் தலைவராவார்.
காக்கடியா பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மதம் குறித்த பாடத்திட்டத்தின் தலைவராக உள்ளார். இவர் தற்போது மகாபாரதம் நடந்த தேதியை நிர்ணயிக்கும் திட்டத்திற்குத் தலைமையேற்று பல்கலைக்கழக மாணவர்களுடன் சேர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார். இவரது மகாபாரதப் போர் நடந்த தேதி ஆய்விற்கு கோவாவைத் தலைமையகமாகக் கொண்ட சனாதன தர்ம சாஸ்தா சாரிட்டபிள் டிரஸ்ட் பொருளாதார உதவி செய்துள்ளது.
மிகவும் குழப்பமான கற்பனைக் கதையாக உள்ள புராணங்கள் மற்றும் இதிகாசங்களை ஆய்வு செய்து மகாபாரதம் பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே யுத்தம் நடந்த காலத்தையும் தேதியையும் நிர்ணயம் செய்வார்களாம்.
இந்திய வரலாற்று ஆய்வு மய்யக் குழுமத்தில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எல்லப்ப பிரகத சுதர்ஷன் ராவ் மகாபாரதம் போன்ற குப்பைகளைத் தோண்டி எடுக்கத் தகுதியானவர்தான்!
இவர் புராண இதிகாசங்களில் குறிப்பிடப்படும் கிரகணம், நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு, பேரழிவு மற்றும் பெரும் பஞ்சங்களைக் கணக்கில் எடுத்து மகாபாரதக் காலத்தை நிர்ணயம் செய்துவிடுவாராம். இந்தத் தகுதி ஒன்றே போதும் இந்திய வரலாற்றை நிர்ணயிக்க என்று கருதுகிறார்கள்.
இவர் இந்தியாவில் வாழும் பழங்குடி மக்களின் மதம் குறித்து ஆய்வு செய்து அவர்களின் மூல மதம் சனாதனமே என்று உறுதிபடக்கூறும் ஆசாமி. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்பான அகிலபாரதிய இதிஹாஸ் சங்கலன் யோஜனா 1978ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தூண்களில் ஒருவரான ஆப்தே மற்றும் மொர்பந்த் பிங்களே போன்றோர்களால் இந்திய வரலாற்றை இந்துமதக் கலாச்சார வரலாறாக மாற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அவர்களின் எண்ணப்படியே இந்திய வரலாற்று ஆய்வுக் குழுமத்தின் தலைவராக தீவிர இந்துத்துவவாதியான இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வரலாறு சரஸ்வதி நதிக்கரையில் இருந்து ஆரம்பித்தது என்றும் தென்பகுதி மக்கள் ஆப்ரிக்கக் கண்டங்களில் இருந்து கப்பல் மூலமாக வந்தவர்களாக இருக்கலாம் என்றும் கர்நாடகாவில் வாழும் நீக்ரோக்கள் போன்ற மக்களைச் சான்றாக வைத்துக் கூறக்கூடியவரைத்தானே இந்தப் பெரிய பொறுப்பில் நியமனம் செய்வார்கள்.
இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவின் (ICHR) தலைவராகப் பொறுப்பேற்றுள்ள இவர் ஜாதி முறைக்கு ஆதரவானவர். கோல்வாக்கரின் சீடர் அல்லவா!
இணையத்தில் 2007ஆம் ஆண்டில் தன்னுடைய பிளாக்கில் இந்திய ஜாதியமுறை மறுமதிப்பீடு (Blog-Indian Caste system: A Reappaisal)என்கிற தலைப்பில் ராவ் எழுதும்போது, இந்தியக் கலாச்சாரத்தில் வேரூன்றியுள்ள பண்புகள், பழமைவாய்ந்த முறைகளைக் கொண்டவையாக உள்ளன. நேர்மறையாக மீண்டும் அவற்றைக் கொண்டு வரவேண்டும் என்று எழுதியுள்ளார்.
மேலும் அவர், பழங்காலங்களில் ஜாதி முறை நன்றாக இருந்தது. எவ்வித புகார்களையும், எந்தத் தரப்பினரிடமிருந்தும் வந்ததாகக் காணமுடியவில்லை. ஜாதிய முறை சமுதாய அமைப்பைச் சீர்குலைப்பதாக தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டு வந்துள்ளது. ஆளும் வர்க்கத்தினரால் சமூக அந்தஸ்து மற்றும் பொருளாதார அந்தஸ்தைப் பெறுவதற்காகவே அவ்வாறு கூறப்பட்டு வந்துள்ளது.
இந்தியர்களின் ஜாதிய அமைப்பு முறையானது, நாகரிகம் மற்றும் பின்னாளில் வளர்ந்துவரும் கலாச்சாரங்கள் ஆகியவற்றுக்கான தேவைகளுக்குப் பதில் அளிப்பவையாக இருக்கிறது. வருண முறையுடன் ஒருங்கிணைந்துள்ளன என்று கூறக்கூடிய பழமைவாய்ந்த ஆவணமாக, தர்மசாஸ்திரங்கள் உள்ளன என்றும் எழுதி உள்ளார்.
சுரன்25082014

வரலாற்றாளர்கள் மத்தியில் ஜாதிய முறை குறித்த அவருடைய பார்வை தற்போது பெரும் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. வரலாற்றாளர் டி.என்.ஜா கூறும்போது, ராவின் கட்டுரை அவருடைய முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. அவருடைய மதநம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது. நவீன காலத்துக்கும் பழமையான ஜாதியமுறை பொருந்தும் என்றால், மோடிக்குப் பதிலாக பிரதமராக பார்ப்பனர் ஏன் இல்லை? மிகவும்  பிற்படுத்தப்பட்ட பிரதமரால் ராவ் நியமிக்கப்பட்டுள்ளதும் ஏன்? என்று டி.என்.ஜா வினவியுள்ளார்.
ராவ் ஜாதிய முறை மற்றும் வருண முறைக்கு இடையே வேறுபாட்டை உருவாக்குகிறார். ஜாதிய முறை ஜாதிகளைக் குறித்து விவரிக்கும் அதேநேரத்தில், வருணமுறையானது தனிநபர்களின் செயல்களைக் குறிப்பதாக உள்ளது என்கிறார்.
வருணம் ஒருவரை மோட்சத்துக்கு அழைத்துச் செல்கிறது (ஆன்மாவின் விடுதலை). நாகரீக சமுதாயத்தில் ஜாதி முறையானது பொருளை, மனித உழைப்பு முறையைக் குறிப்பதாக உள்ளது என்று ராவ் கூறுகிறார்.
ராவ் மேலும் வாதிடும்போது, இந்தியாவில் சமுதாயத்தில் உள்ள பழக்கவழக்கங்கள் குறித்து ஆங்கிலக் கல்வியாளர்கள், இந்திய அறிஞர்கள் பழமைக்காலத்தில் உள்ளவற்றை வெளிக்கொணர்வதில்லை. ஏழாம் நூற்றாண்டுகளில் முசுலீம்கள் ஆட்சியின்போது வடஇந்தியாவில் இதற்கான ஆதாரங்களைக் கண்டறியலாம் என்று கூறுகிறார்.
சுரன்25082014
மேலும் அவர் கூறும்போது, ஜாதிய முறைகள் குறித்துத் தவறாக புரிந்துகொள்வது என்பது தர்ம சாஸ்திரங்களைத் தவறாகப் படிப்பதற்கான காரணமாக அமைந்துவிடும். அதுவே நவீன ஜனநாயகம் மற்றும் தேர்தல் அரசியல்களில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். பழமையான ஜாதிய முறை என்பது ஜாதிகளுக்கான அமைப்புகள், ஜாதீயவாத அமைப்புகளாக மாறி உள்ளன. அதுவே ஜாதிய முறையின் நோக்கத்துக்கு எதிராக அமைந்துவிடுகின்றன _ இவ்வாறு ராவ் தன்னுடைய இணையத்தில் எழுதி உள்ளார். - (டைம்ஸ் ஆப் இந்தியா, 15.7.2014)
இது இவருடைய சொந்தச் சரக்கல்ல - இவர்களின் குருநாதரான எம்.எஸ்.கோல்வாக்கர் சொன்னதுதான். அவர்களின் வேத நூல் என்று சொல்லப்படும் ஞானகங்கையில் (Bunch of Thoughts) வெளிப்படையாகவே ஜாதியைத் தன் தோளில் தூக்கி வைதிகப் பூணூலால் முத்தமிடுகிறார்.
பழங்காலத்திலேயே ஜாதிமுறை இருந்து வந்தது. நாம் அந்தக் காலகட்டத்தில் உச்சியிலே இருந்தோம். இந்த ஜாதிமுறை நமது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தது என்று சொல்ல முடியாது. உண்மையில் இந்த ஜாதி அமைப்பு முறை சமூகத்தில் ஒற்றுமையைக் காப்பாற்றவே துணைபுரிகிறது. (நூல்: ஞானகங்கை) என்ற கோல்வாக்கரின் முன்மொழிவைத்தான் இந்த ஆந்திர ராவ் வழிமொழிகிறார்.
ஒரு பார்ப்பன அமைப்பு தனக்குப் பிறவியிலேயே கிடைக்கும் முதலில்லா ஆதிக்கத்தை விட்டுக்கொடுக்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?
ஆண்டுதோறும் பூணூலைப் புதுப்பிக்க ஆவணி அவிட்டம்; குடியரசுத் தலைவராக ஆன நிலையிலும் பூணூல் திருமேனியுடன் திருவனந்தபுரம் கோவிலில் காட்சி அளிக்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை மனக்கண் முன் நிறுத்திப் பாருங்கள். அவாளின் நோக்கம் என்னவென்று எளிதில் புரியும்.
நாங்கள் விரும்பிய ஆட்சி வந்து விட்டதால், இந்துக் கலாச்சாரக் கல்வி, சமஸ்கிருதத்துக்கு முக்கிய இடம், வேதக் கணிதம் இவற்றைப் புகுத்துவோம் என்று ஆர்.எஸ்.எஸ். கிளம்பிவிட்டது. முழுமையான பலம் கிடைத்துவிட்டது, இனி பாடத்திட்டத்தை மாற்றுவார்களாம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கியத் தலைவரும் கலாச்சாரக் கல்வி எழுச்சி மய்யத்தின் ஒருங்கிணைப்பாளருமான தீனாநாத் பத்ரா  டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அளித்த பேட்டி அவர்களின் போக்கை வெளிப்படுத்துகிறது.
இந்தியக் கல்வி அமைப்பில் முழுமையான மாற்றம் கொண்டு வருவோம். இதுநாள் வரை ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த கல்வியைக் கண்மூடித்தனமாக நம் மீது திணித்து விட்டார்கள். தற்போதுள்ள கல்வியினால் இந்துக் கலாச்சாரத்திற்கு அழிவே தவிர எழுச்சி என்றும் கிடையாது. ஆகையால் இந்தியக் கலாச்சார வழியில் கல்வியில் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். தற்போதுள்ள அடிமைக் கல்விமுறையில் மாற்றம் கொண்டுவந்து இந்துக்கலாச்சார கல்வி முறையைக் கொண்டுவர கலாச்சார கல்வி எழுச்சி மய்யம் (சிக்க்ஷா சான்ஸ்கிரித் உதான் நியாஸ்) என்ற ஒன்றை ஆரம்பித்து கடந்த 30 ஆண்டுகளாக போராடி வந்தோம். இதுநாள் வரை இந்துமதக் கலாச்சாரத்திற்கு எதிரான ஆட்சி இருந்தது. ஆனால் இன்று முழுமையாக எங்கள் கரங்களில் இந்திய மக்கள் ஆட்சியைத் தந்துள்ளார்கள். புதிய மாற்றங்களைக் கொண்டு வந்து நாட்டை வழிநடத்துங்கள் என்று எங்களுக்கு ஆணையிட்டுள்ளனர். ஆகவே இந்திய தேசியத்தின் எழுச்சிக்கு முதலில் கல்வியில் மாற்றம் கொண்டுவர வேண்டும். எங்களது இந்தக் கோரிக்கையை  பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் சென்று வலியுறுத்துவோம் என்று தீனாநாத் பத்ரா கூறினார். மேலும் அரசியல் மாற்றம் எங்களுக்குப் பெரிய ஆறுதலைக் கொடுத்துள்ளது. இதுநாள்வரை நாங்கள் எங்கள் இந்துக் கலாச்சாரத்தை குழந்தைகளுக்கு எப்படிக்கொண்டு செல்வது  என்று திகைத்து நின்றபோது மக்கள் புதிய மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளனர்.
சுரன்25082014
இந்துக் கலாச்சாரக் கல்விதான் சரியானது
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும், முக்கியமாக உயர்கல்விக்குத் தகுதிபெறும் வயதில் உள்ள பள்ளி மாணவ/மாணவிகள் எதிர்காலத்தில் இந்தியாவைப் பெரிய மாற்றத்திற்குக் கொண்டுவரும் சக்திகள், ஆகவே இவர்களை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்தில் இருந்தே இந்துக் கலாச்சாரக் கல்விதான் இவர்களின் எதிர்கால வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும்.
இந்துக் கலாச்சாரக் கல்வி முறையை விரிவுபடுத்த சிற்றூர்கள், கிராமங்கள் என இந்தியாவில் உள்ள அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வை ஊட்ட அகில பாரதிய சமூகத் தொண்டு இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளோம். இதில் எல்லா ஊர்களிலும் சென்று பள்ளி மற்றும் கல்லூரியில் மாணவ மாணவிகள் உட்பட அனைவருக்கும் 3 மாதம் பயிற்சி அளிக்க உள்ளோம் என்று சொல்லும் அவர், தற்போதைய கல்வி முறையைப் பற்றி மேலும் கூறும்போது, தற்போது நாம் கற்கும் கல்விமுறை குருடன் யானையைத் தடவிப் பார்த்துக் கூறுவது போலாகும், நமது நாடு ஆன்மீக வளமுள்ள நாடு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆன்மீகக் கல்வியில் சிறந்து விளங்கியதால் தான் இன்றும் உலக அரங்கில் இந்தியாவை அனைவரும் வியப்புடன் பார்க்கும் வகையில் இருக்கிறது. ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு இந்துக் கலாச்சாரம் அழிவிற்கு உட்பட்டது.
இந்திய மக்கள் பெருவாரியாக எங்களுக்கு ஆதரவு அளித்து இழந்துபோன கலாச்சாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஆணையிட்டுள்ளனர். எங்களுக்கான கடமையைச் செவ்வனே செய்ய சரியான காலம் இதுதான் என்று கூறினார்.
தீனாநாத் பத்ரா இந்தியக் கல்வி முறையில் இந்துக் கலாச்சாரக் கல்வி வேண்டும் என்று நீண்ட காலமாகவே போராடி வருபவர். வாஜ்பாய் அரசின்போது இவர் சில மாநிலங்களில் கல்வியில் மாற்றத்தைக் கொண்டுவருவதில் வெற்றியும் பெற்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து குஜராத், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் பாடப்புத்தகங்களில் பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டது.  இதோ
இன்னொரு காவி!
ஜார்க்கண்ட் மாநிலம் ஹராரிபாக்கில் இந்துக் கலாச்சாரக் கல்வி வளர்ச்சித் தலைவர் அதுல்பாய் கடோரி மே 17-ஆம் தேதி 2014 தைனிக் ஜாகரன் இந்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் சமஸ்கிருதமே மூலமொழியாகும். உலகின் முதல் நூலான ரிக்வேதம் சமஸ்கிருத மொழியில்தான் எழுதப்பட்டது. ஆன்மீக சக்தி கொண்ட மொழி சமஸ்கிருதம் என்பதால் அதன் புனிதம் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது ஆனால் ஆங்கிலேயன் நம்மை அடிமைகொண்ட பிறகு அவனது மொழிக்கு நம்மை அடிமையாக்கினான். ஆகையால் இன்று ஆன்மீக மொழியான நமது சமஸ்கிருதம் பள்ளிகளில் இல்லாமல் போய்விட்டது. இருக்கும் சில இடங்களிலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.
நமது ஆன்மீக மொழியைக் கற்காத காரணத்தால்தான் இன்று நம் நாடு பின்தங்கிய நிலையில் உள்ளது. சமஸ்கிருதமே நமது ஆன்மீக அறிவியல் வாழ்வியல் மொழி. இத்தனை ஆண்டுகளாக இருந்த காங்கிரஸ், ஆங்கிலேயர்களின் பினாமிகள் போல் செயல்பட்டு நாட்டை அவர்களுக்கு விற்றுவந்தார்கள். ஆகையால்தான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படாமல் இருக்க சமஸ்கிருத மொழியை வளரவிடாமல் தடுத்தார்கள்.
நாங்கள் கல்வியைச் சீரமைக்கும் பணியைத்தான் மேற்கொள்கிறோம். சமஸ்கிருதக் கல்விமூலம் அடையும் பயன் இன்னும் 10 ஆண்டுகள் கழித்துத் தெரியவரும். புதிய அரசிடம் நாங்கள் கேட்கும் மாற்றம் இவைதான்.
1. இந்திய வரலாற்றில் ஆன்மீக மற்றும் புனிதமான கலாச்சார மாற்றங்களுடன் கூடிய பாடங்களைச் சேர்த்தல்
2.    கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை மய்யமாகக் கொண்ட கல்வி.
3. இந்துக் கலாச்சாரம் கூறும் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பை மய்யமாகக் கொண்ட கல்வி.
4. வேதக் கணிதம்.
5. பொதுமொழியான சமஸ்கிருதத்தில் கல்வி.
6. எந்த ஒரு தலையீடும் இல்லாத தன்னாட்சிக் கல்வி. எங்களின் இந்த மாற்றங்களைப் புதிதாகப் பதவியேற்கும் நரேந்திர மோடி நிறைவேற்றுவார்.
இது எங்களுக்கான கோரிக்கைகள் அல்ல, இந்திய நாட்டின் வளமான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நமது ரிஷிகளும் முனிவர்களும் கண்ட கனவு. இந்தக் கனவை நரேந்திர மோடி அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நாங்கள் உறுதிபடக் கூறுகிறோம் என்று கூறினார்.
சுரன்25082014

*** *** ***
ஏதோ இப்பொழுது ஆட்சிக் கட்டிலில் ஏறிய நிலையில்தான் இப்படிச் சொல்கிறார்கள் என்று தவறாகக் கருதவேண்டாம்.
வாஜ்பேயி பிரதமராக இருந்த காலகட்டத்திற்குச் சற்றுப் பயணிக்கலாமே!
கே.எஸ்.லால், பி.பி.சின்ஹா உள்ளிட்ட 18 பேர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டார்கள். இவர்கள் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமரின் கோவில் முன்னர் இருந்தது என்று சாதித்தவர்கள்.
அந்தக் கருத்தில் வெறித்தனமாகவிருந்த பி.ஆர்.குரோவர்தான் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (Indian Counsil for Historical Research) தலைவராக நியமிக்கப்பட்டார்.
பிரபல வரலாற்றுப் பேராசிரியர்களான சுமித்குப்தா, கே.எம்.பணிக்கர் உறுப்பினர் செயலாளராகவிருந்த டி.கே.வி.சுப்பிரமணியம் உள்ளிட்ட 12 புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர்.
மத்தியபிரதேச மாநிலத்தை பி.ஜே.பி.தான் ஆட்சிசெய்து கொண்டிருந்தது. அதன் கல்வித்துறை அமைச்சர் விக்ரம் வர்மா கூறியதுதான் உச்சக்கட்டமான உச்சரிப்பு.
வரலாற்றை எழுதும்போது அக்கால சமூக, பொருளாதார அமைப்புகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டுமே தவிர, ஆளுகிற மனிதர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அடிப்படையாகக் கொண்டு கருத்தை உருவாக்கக் கூடாது என்ற கருத்தை ஏற்க முடியாது. இந்தக் கண்ணோட்டத்தில் வரலாற்றை எழுதுவது, இந்திய வரலாற்றுக்கும் பெருமை சேர்ப்பது ஆகாது. ஓர் இந்து அரசரை மக்களுக்கு எதிராக நடந்தார் என்றோ, ஒடுக்குமுறைக்காரர் என்றோ குறை சொல்லக் கூடாது என்று வரலாற்றை எழுதுவதற்கென்றே புதுப் புத்தியைக் கொடுத்த குணாளர்கள் இவர்கள்.
காந்தியாரும், அலி சகோதரர்களும் இணைந்து அறிவித்த கிலாபத் இயக்கத்தை சுதந்திரப் போராட்டம் என்று கூறுவது தவறு. அது பெருமைக்குரியதல்ல; பாகிஸ்தான் பிரிவினைக்கு வித்திட்டதே அந்தக் கிலாபத் இயக்கம்தான் என்கிற அளவுக்கு அந்த அமைச்சர் சென்றார் என்றால் இவர்கள் சுவாசிக்கும் காற்றும் வெளியிடும் காற்றும் எல்லாம் இந்துவெறி நஞ்சேதான்.
இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்திற்குப் பச்சைப் பாசிசவாதி பி.ஆர்.குரோவரை நியமனம் செய்ததோடு அவர்கள் கைகளைக் கட்டிக் கொள்ளவில்லை.
ஆர்.எஸ்.எஸ்.-இன் பிரச்சாரகர்களில் ஒருவரான கே.ஜி.ரஸ்தோகி - 1947இல் நடைபெற்ற மதக்கலவரத்தில் பங்கேற்றதற்கான மறைக்க முடியாத சான்றுகளை உடையவர். அவர் தனது ஆப் பிடி (Aap biti) என்ற சுயசரிதையில் தனது சொந்த வார்த்தைகளில் அந்த இடத்தில் ஒரு விநோதமான நிகழ்ச்சி நடந்தது. தாக்குவதற்காகச் சென்றவர்கள் (இந்துக்கள்)  கொலை நடந்த வீட்டில் காணப்பட்ட ஒரு அழகான பெண் (முஸ்லீம் பெண்) தொடர்பாகத் தங்களுக்குள்ளேயே ஒருவரோடு ஒருவர் சண்டையிடத் துவங்கினார்கள். தாக்கச் சென்றவர்கள் தங்கள் நோக்கத்தை மறந்து அப்பெண்ணை உரிமை கொண்டாடப் போட்டியிட்டார்கள். நான் அவர்களை மிரட்டினேன்.
பின் மனதுக்குள் ஒரு தீர்வு வந்தது. நான் அந்தப் பெண்ணைச் சுட்டுக் கொன்றேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர் அவர். இவர் தூக்குமரத்தில் தொங்கவிடப்படவில்லை. சிறையில்கூட அடைக்கப்படவில்லை. ஆனால், இந்த நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனத்தில் கல்வியாளர்களைத் தேர்வு செய்யும் குழுவில் நியமிக்கப்பட்டார்.
இந்துத்துவா என்பது ஒரு மதம் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை என்று விளக்கமளித்த ஒரு தீர்ப்பின் மூலம் பா.ஜ.க.வின் மதச்சார்பு நிலைக்குச் சட்டபூர்வ அங்கீகாரம் அளித்த முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாவின் தலைமையில் பாடத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் குழுவை மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமைத்தது.
நாட்டின் உயர் கல்வியைச் சீரமைக்கப் பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலாளராக பா.ஜ.க. தொடர்புடைய ஹரிகௌதம் என்பவர் நியமிக்கப்பட்டார்.
ஸ்டேட்ஸ்மேன் (6.11.99) ஏட்டின் தலையங்கம்.
ரஸ்தோகியின் நியமனக் காலம் முடிவதற்குள் இந்திய வரலாறு முற்றிலும் மாற்றி எழுதப்படும். இந்துக்கள் தேசப் பக்தர்கள் எனவும் அனைத்து சிறுபான்மையினரும் மதவாத ஆக்கிரமிப்பாளர்கள் என்றும், நாட்டின் அனைத்துக் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்கப்படும் என்று ஸ்டேட்ஸ்மென் தலையங்கம் தீட்டியது.
சுரன்25082014

.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பாசிச குரூரக் கண்ணோட்டத்தோடு பாடத் திட்டங்கள் அமைக்கப்பட்டு பிஞ்சு நெஞ்சங்கள் நஞ்சுக் காடுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. சரஸ்வதி, சிசுமந்திர் என்கிற பெயரிலும், வித்யாபாரதி என்கிற பெயரிலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நாடெங்கும் கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார்கள்.
14 ஆயிரம் பள்ளிகளையும், 60 கல்லூரிகளையும் நடத்தி வருகிறார்கள்; மேல் படிப்புக்கான 25 கல்வி நிறுவனங்களும் உண்டு. ஜெய்ப்பூர், அஹ்மத் நகர் ஆகிய நகரங்களில் இந்துத்துவா ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கின்றனர். 18 இலட்சம் மாணவர்கள் இவர்களின் இந்துத்துவா கோட்பாட்டுக் கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர்.
நவம்பர் 14ஆம் நாள் நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாட அரசு ஆணையிருந்தும் கோகுலாஷ்டமியைத்தான் (கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாளாம்) குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகிறார்கள். டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்பதே அரசு ஆணை. ஆனால், இவர்கள் நடத்தும் பள்ளிகளிலோ, வேதகால முனிவரான வியாசரின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகப் போற்றி வருகின்றனர். (புராண வியாசரின் பிறந்த நாளை எப்படித்தான் தேடிப் பிடித்தார்களோ!)
உத்தரப்பிரதேசத்தில் இவர்களின் சரஸ்வதி சிசுமந்திர் பள்ளியில் ஏழாம் வகுப்பில் இடம் பெற்றுள்ளவை:
முலாயம்சிங் யாதவ் இக்கால இராவணன் என்று ஏன் அழைக்கப்படுகிறார்?
பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது முலாயம்சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர்?
(அவுட் லுக் 10.5.1999)
இதுபோன்ற கேள்விகள் இடம்பெற்றால், அந்தப் பிஞ்சு உள்ளங்கள் எந்த அளவு ரத்த வெறியோடு தயாரிக்கப்பட்டு வெளியில் அனுப்பப்படும்?
கணக்குப் பாடத்தில்கூட அவர்களின் கோணல் புத்தியை விடவில்லை.
10 கரசேவகர்கள் சேர்ந்து பாபர் மசூதியை இடித்தால் இத்தனை நாளாகும்? 20 கரசேவகர்கள் இடித்தால் எத்தனை நாளாகும்? இதுதான் கணக்குப் பாடமாம்.
யூதர்கள்மீது வெறியைக் கிளப்புவதற்கு அடால்ப் ஹிட்லர் இந்த முறையைத்தான் பின்பற்றினார். யூதர் பெற்ற இலாபம் எவ்வளவு என்பதற்குப் பதிலாக யூதன் அடித்த கொள்ளை எவ்வளவு என்று கேட்கப்பட்டிருக்கும். பாசிஸ்டுகளும், நாஜிகளும் கையாளும் அதே பாணியைத்தான் இந்த ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., சங்பரிவார் பாசிஸ்டுகளும் பின்பற்றி வருவதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
இயேசுநாதர் இமயமலைக்கு வந்து இந்து சாமியார்களிடம் உபதேசம் பெற்றுதான் பைபிள் எழுதினாராம்; மெக்காவில் பச்சைத் துணி போட்டு மூடப்பட்டு இருப்பது சிவலிங்கம்தான் என்றும் பாடப் புத்தகத்தில் எழுதி வைத்துள்ளார்கள். கிருஷ்ணன் கடவுளிடத்திலிருந்துதான் கிறிஸ்து வந்தார் என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறவில்லையா?
சுரன்25082014
இந்திய வரலாறு - தலைமுறைகளை அழிக்கும் குண்டுகளைத் தயாரிக்கும் ஆலைகளாக (Bomb Factories) மாற்றப்பட்டு விட்டது பா.ஜ.க. ஆட்சியில் என்கிறார்கள் ஃபிரண்ட் லைன் ஏட்டின் கட்டுரையாளர்கள் பார்வதி மேனன் அவர்களும், டி.கே.இராஜலட்சுமி அவர்களும்.
பாடத் திட்டங்களை ஆய்வு செய்வதற்கென்றே உள்ள அரசு அமைப்பு தேசிய கல்வி மற்றும் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் (National Council for Educational Training and Research) என்பதாகும்.
பா.ஜ.க. பள்ளிகளில் நடத்தும் பாடத் திட்டங்களைப் பற்றி ஆய்வு செய்த குழு தெரிவித்துள்ள கருத்து மனித மனசாட்சியைத் தட்டி எழுப்பக்கூடியதாகும்.
இத்தகைய கருத்துகளைக் கொண்ட நூல்கள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படுமேயானால், நம் நாட்டின் எதிர்காலம் சீர்குலைந்துவிடும்; நாடு பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.
பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் கல்வித் திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் இந்தத் தன்மைபற்றி ஃபிரண்ட் லைன் ஏடு (20.11.1998) இவ்வாறு கூறுகிறது.
இந்த வரலாற்றுத் தவறுகள் ஒரு பக்கம் சார்ந்த பொய்கள், மாச்சர்யங்கள் காலத்தால் உண்மைக்குப் புறம்பானவை என எடுத்து வீசப்பட்டவை,
கோட்பாடுகள், கற்பனைகள் இவையெல்லாம் அப்படியே விட்டு வைக்கப்படவில்லை. பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் இவை அவ்வப்போது அதிகப் பொய்களைக் கொண்டு வலுவூட்டப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா ஏதோ இப்பொழுதுதான் இந்தப் பார்ப்பனிய வெறித்தனத்தை அரங்கேற்றுவதாகக் கருதக்கூடாது.
1992இல் உ.பி.யில் ஆட்சியில் இருக்கும்போதே திட்டமிட்டுக் கல்வித் துறையைக் காவிமயமாக்கியது.
50 வரலாற்றுப் பேராசிரியர்கள் அப்பொழுதே அதனைக் கண்டித்துக் கருத்துத் தெரிவித்தனர்.
பாபரின் தளபதி மீர்பாசி. அவன் அயோத்தியிலும், அதேரியிலும் இருந்த இந்துக் கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டு அந்த இடங்களில் மசூதியைக் கட்டினான். பாபரின் மதக் கொள்கை இதுதான்.
ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இந்தியாவை ஆக்கிரமித்தார்கள். இந்தியாவின் பூர்வீகக் குடிமக்களான திராவிடர்களைத் தென்பகுதிக்கு விரட்டிவிட்டார்கள் என்பது பொய். ஆரியர்கள் இந்தியாவின் பூர்வீகக் குடிகள்.
இவைபோன்ற உண்மைக்கு மாறானவற்றைப் பொய்யென்று தெரிந்தே உ.பி. பா.ஜ.க. அரசு 1992ஆம் ஆண்டிலேயே பள்ளிப் பிள்ளைகளுக்குப் பாடங்களாக வைத்திருந்தது.
இவற்றைக் கண்டித்து ஜவகர்லால் நேரு, ஜமியாமிலியா மற்றும் டில்லி பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 50 வரலாற்றுப் பேராசிரியர்கள் கூட்டறிக்கை விடுத்தனர்.
அறிவுசார் நூல்களைக் கட்டுப்படுத்தத் திட்டமா?
கோடை காலம் பொதுவாக நமது நாட்டில் வறட்சியின் அடையாளமாக இருக்கும். ஆனால் இனி வரும் காலத்தில் அறிவு வறட்சியையும் சேர்த்து அறிவைத்தேடும் மக்களையும் வாட்டி எடுக்கப்போகிறது. வெயில் காலம் முடிந்த பிறகு வெப்பம் தணியும், ஆனால் அறிவு வறட்சி இனிமேல் வளமடையாது. ஆம், பழமைவாதிகளின் கரங்களில் மெல்ல மெல்ல அதிகாரங்கள் சென்று கொண்டிருப்பது அறிவு வளர்ச்சிக்கு இனிமேல் வறட்சிதானே.
கல்வி வளர்ச்சியின் தாக்கம் கடந்த சில நூற்றாண்டுகளாக மூடநம்பிக்கையைத் தகர்த்தெறிந்துவிட்டது. ஆனால் இந்த இந்துத்துவா தத்துவத்தைக் காப்பாற்ற அந்த வேத நூல்களை மீண்டும் மக்களிடையே பரப்பும் நோக்கத்தில்தான் கல்விப் பாதுகாப்புப்படை என்ற ஒன்றை உருவாக்கினார்கள்.
பல நூற்றாண்டுகளாகவே பல்வேறுபட்ட கலாச்சாரத்தின் தாக்கம் இந்தியாவின் இளைய தலைமுறையினரை புதிய முறையில் சிந்திக்கத் தூண்டியது. இதன் விளைவு உலக நாடுகளுடன் போட்டிபோடும் அளவிற்கு இந்திய இளைய தலைமுறையினர் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். இந்த நிலையில் மீண்டும் வேதக் கல்வியைப் புகுத்தி வருங்காலத் தலைமுறைகளைக் குழப்பும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரபல வரலாற்று ஆசிரியர் சேகர் பண்டோபத்யா எழுதிய இந்தியாவின் நவீன வரலாறு என்ற நூலை இந்துத்துவவாதிகள் நீண்ட நாட்களாக எதிர்த்து வந்தனர். சேகர் பண்டோபத்தியாவின் நூலுக்கு மறுப்பாக பத்ரா பல்வேறு புனைக்கதைகளை உள்ளடக்கிய இந்திய வரலாறு என்ற நூலை எழுதியுள்ளார்.
சேகர் பண்டோபத்யாவின் இந்திய வரலாற்று நூலைத் தடைசெய்வது; அந்த இடத்தில் தான் எழுதிய இந்திய வரலாற்று நூலை பள்ளிகள் முதல் கல்லூரி வரை புகுத்துவது போன்ற திட்டங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் அறிவுசார் நூல்கள் அனைத்தும் கலாச்சார சீரழிவு என்ற பெயரில் அகற்றப்பட்டு மதநூல்களைப் பாடநூல்களாகச் சேர்க்கும் பணியில் ஈடுபடப்போவதாகவும் திட்டங்கள் வகுக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்திய வரலாற்றை ஆரம்பத்தில் இருந்தே காவிகளின் பாணியில் மாற்றும் வேலை ஆரம்பிக்க உள்ளது.
*** *** ***
பத்ரா போன்ற பழமைவாதிகள் இந்திய வரலாற்றை மீண்டும் வேதகாலத்திற்குத் திருப்பி இந்தியக் கல்வியை இருண்டகாலத்திற்கு அழைத்துச்செல்ல ஒரு அச்சாரத்தைப் போட்டு இருக்கிறார்கள். இதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்தியக் கலாச்சாரக் கல்விப் பாதுகாப்புப் படை (சிக்ஷா பச்சாவ் ஆந்தோலன் சமிதி) வரும் காலம் இந்தியாவில் அறிவு வளர்ச்சிக்கான பாதை தடைப்பட்டு அறிவு வறட்சியை உருவாக்கும் நிலை உருவாக்கி விடும் ஆபத்தை எதிர்நோக்க வேண்டிய நிலை உருவாக்கி வருகிறது என்பது மாத்திரம் உறுதி. இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவின் தலைவராக ராவ் போன்றோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றால், நிலைமையைப் புரிந்து கொள்ளலாமே.
உண்மை வரலாற்றை தங்கள் விருப்பப்படி கழுத்தில் துண்டைப் போட்டு திரித்து எழுதும் இந்தக் கூட்டம்தான் உண்மையான வரலாற்றை எழுதிடும் ஆய்வாளர்களை மிரட்டும் அடியாள் வேலையிலும் ஆவேசமாக ஈடுபட்டு வருகின்றது.
சுரன்25082014
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல வரலாற்று ஆய்வாளர் வெண்டி டோனிகர் ஹிந்துத்துவ மாற்று வரலாறு (பிவீஸீபீ ணீஸீபீ கிறீமீக்ஷீஸீணீவீஸ்மீ பிவீஷீக்ஷீஹ்) எனும் தலைப்பில் அரியதோர் நூல் ஒன்றை எழுதினார்(2009). உலகப் புகழ்பெற்ற பெங்குவின் நிறுவனம் வெளியிட்டது. இந்நூலாசிரியர் அமெரிக்காவில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிபவர். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலிருந்து அவர் கவுரவ டாக்டர் பட்டங்களைப் பெற்ற பெருமைக்குரியவர்! சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை உடையவர்.
இந்துமத வேதங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர்கூட!
இவர் எழுதிய இந்த நூல் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாம்! அப்படி என்னதான் எழுதிவிட்டாராம்! அட்டைப்படத்தில் நிர்வாணப் பெண்களுடன் கிருஷ்ணன் இருப்பதுபோன்ற ஓவியம் இடம்பெற்றுள்ளதாம். ஆம், இதில் என்ன தவறு? இல்லாத ஒன்றையா சித்தரித்துள்ளார்?
கொஞ்ச நாட்கள் முன்பாகக்கூட இதுபோன்ற படங்களை கண்ணாடிச் சட்டம்போட்டு வீடுகளிலேயேகூட மாட்டி அழகு பார்த்ததுண்டே! குறிப்பாக முடிதிருத்தும் நிலையங்களில் சர்வசாதாரணமாகக் காண முடிந்ததே!
இந்துமதப் புராணங்களில் கிருஷ்ணன் செய்த லீலைகளைத் (இப்படி ஒரு கிரீடம்) தானே அட்டைப்படத்தில் உருவகப்படுத்தியுள்ளனர்.
புத்தகத்தில் சிவலிங்கம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளதாம். (இவர்கள் யோக்கியதை அமெரிக்கா வரை கப்பலேறிவிட்டதா _ சபாஷ்!)
இது இந்துக்களின் மனதைப் புண்படுத்துவதாகக் கூறி ஷிக்ஷா பச்சாவ் அந்தோலன் என்ற அமைப்பின் தலைவர் தினானாத் பத்ரா என்ற டில்லி ஆர்.எஸ்.எஸ்.காரர் வழக்கொன்றை 2011இல் தொடர்ந்தார்.
இன்னும் தீர்ப்பு வெளிவராத நிலையில் பெங்குவின் நிறுவனம்_ வழக்குத் தொடுத்தவருக் கிடையே ஒப்பந்தம் பரிமாறப்பட்டு நூல்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக பெங்குவின் அறிவித்துவிட்டது.
சல்மான் ருஷ்டி எழுதிய சாத்தானிக் வெர்சஸ் என்ற நூலும் உலகமெங்கும் முஸ்லிம் மக்களிடமிருந்து எதிர்ப்புப் புயல் கோரத்தாண்டவம் ஆடியபோதுகூட கொஞ்சமும் அசைந்து கொடுக்காத பெங்குவின் _ போயும் போயும் இந்த இந்துத்துவாவாதிகளிடம் தாள் பணிந்துவிட்டதே என்ற ஆச்சரியம் -_ எழுத்தாளர் அருந்ததிராய் போன்றவர்களுக்கெல்லாம்.
கடைசிக் கடைசியாக பெங்குவின் அறிக்கை ஒன்றை வெளியிட்டேவிட்டது.
இந்தியச் சட்டங்களை மதிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாலும் எங்கள் ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை இருப்பதாலும் இந்தியாவிலிருந்து இந்த நூலைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம் என்பதுதான் அந்த அறிக்கை.
இந்துத்துவாவாதிகளின் அச்சுறுத்தல், வன்முறை ஆயுதம்தான் பெங்குவின் நிறுவனத்தின் இந்த முடிவுக்குக் காரணம் என்பதை இதற்கு மேலும் வெளிச்சம் போட்டா சொல்ல முடியும்?
பாசிஸ்டுகள் தங்களுக்கு எதிரான சக்திகளைக் கழுவேற்றக்கூடியவர்கள் ஆயிற்றே!
சுரன்25082014
உலகின் மூத்த பல்கலைக்கழகமான - புத்த சீலத்தின் பொக்கிஷமான நாலாந்தா பல்கலைக்கழகத்தை அழித்தவர்கள் யார்?
தர்மகுஞ்ச் என்று அழைக்கப்பட்ட அந்தப் பல்கலைக்கழகம் ஒன்பது அடுக்குகளைக் கொண்டது; புத்த சீலக் கருத்துகள், மருத்துவம், அறிவியல் கருவூலமாகக் காட்சியளித்த திபெத், சீனம், கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளிலிருந்தும் மாணவர்கள் வந்து அங்கு படித்துச் சென்றனர்.
அசோகனுக்குப் பிறகு வந்த வேதமத அரசர்கள் சிறுகச் சிறுக அப்பல்கலைக்கழகத்தை அழித்துத் தின்னும் கரையான்களாக மாறினர். லட்சக்கணக்கான ஏடுகள் அழிக்கப்பட்டு பராமரிப்பின்றி மண்மேடானது. இங்குள்ள நூல்கள் யாவும் யாகத் தீயில் எரிப்பதற்காக தொடர்ந்து கொண்டு செல்லப்பட்டதாக சீன யாத்திரிகன் பாஹியான் குறிப்பிட்டுள்ளார். அதுபோலவே தட்சசீலப் பல்கலைகக்கழகமும் மண்மூடிப்போக செய்யப்பட்டது.

7000 ஆசிரியர்களையும் 25,000 மாணவர்களையும் கொண்ட அந்த அறிவுக்கடலையே ஏப்பம் விட்டவர்கள் யார்?
அன்றைய முடியுடை வேந்தர்கள் பாசிச வேலையில் இறங்கினர் என்றால் இன்று ஜனநாயக முடி அணிந்த இந்துத்துவா மோடிகள் (பின்னணியில் இருப்பது ஆரியம்தானே!) வரலாற்றைப் புரட்டி எறியும் மோசடியில் குதித்துள்ளனர்.
பச்சையாக நாடாளுமன்றத்தில் 1200 ஆண்டுகால அடிமை மனப்பான்மை நமக்குப் பிரச்சினையாக உள்ளது என்று பேசியவர் வேறு யாரும் அல்லர் _ அவர்கள் மொழியில் பாரதப் பிரதமர் நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடிதான் அந்த பேச்சுக்குரிய கதாநாயகர்.
பொருளாதாரத்தில் கழுத்தை நீட்டுவதைவிட பண்பாட்டுத் தளத்தில் பார்ப்பனிய வாள்வீச்சுதான் அதிகமாக இருக்கப் போகிறது _ எச்சரிக்கை!
வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (மிசிபிஸி) புதிய தலைவரானார் எல்லப்ப பிரகத சுதர்ஷன் ராவ் _ எச்சரிக்கை!!
                                                                                                                                                                                            நன்றி;உண்மை.

சுரன்25082014