முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போலி [சினிமா விசிடி] களை ஒழிக்க ..

திருட்டு விசிடியை ஒழிக்க நடிகர் விஷால் ரஜினி,விஜய் ரசிகர்கள் களம் இறங்கினால் போதும் என்று வழி கூறியுள்ளார்.
அப்படி என்றால் இதுவரை இந்த திருட்டு விசிடிகளை இவர்கள்தான் வாங்கினார்கள்.இனி வாங்காவிட்டால் போதும் திருட்டு விசிடி ஒழிந்து விடும்  என்று சொல்ல வருகிறாரா?இல்லை இவர்கள் களம் இறங்கி கடைகளில் புகுந்து ப்ழிக்க சொல்லுகிறாரா?
சுரன் 31082014
ஏற்கன்வே ஆணானப்பட்ட கமல்ஹாசனே கடைகளில் புகுந்து விசிடிகளை கைப்பற்றியும் காவல்துறையினர் விற்றவர்களுக்கே ஆதரவாக இருந்து தோல்வியடைந்த கதை விஷாலுக்கு தெரியாதா?கமல்ஹாசன் மீதே கடைகளை நாசம் செய்ததாக வழக்கு பதிவானதும் தெரியுமா?
முதலில் திருட்டு விசிடி என்று சொல்லுவதே தவறு.வாங்குபவர்கள்50 ரூபாய் வரை கொடுத்து வாங்குகிறர்கள்.இது முந்தைய திரையரங்கு கட்டணம்தான்.இப்பொது ஒரு குடும்பம் படம் பார்க்க [காபி,பாப்கார்ன் உட்பட]2000 ஆகிறது.பின்னே போலி திரைப்பட தகடுகள் பரவாமல் என்ன செய்யும்.?
இந்த படங்களை போலி வியாபாரிகளுக்கு கொடுப்பது யார்? உங்கள் திரைத்துறையை சார்ந்தவ்ர்கள்தானே?ஆனால் அதை தடுக்கச்சென்று அடி வாங்குவது மட்டும் ரசிகர்களா?
முதலில் அங்குள்ள ஓட்டைகளை அடைக்கப் பாருங்கள்.
எதற்கு கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறீர்கள்.
படம் வெளியாகும் போதே பட விசிடிகளை 30 ரூ,க்கு த்யாரிப்பாளரே வெலியிட்டு விட்டால்?
வெளி மானில உரிமை,உலக் உரிமை,மொழி மாற்று உரிமை  கொடுப்பது போல் விசிடி வெளியிட உரிமையை ஒருவருக்கு வழங்கி வெளியில் திருட்டுத்தனமாக விற்கப்படும் விலையில் விசிடிகளை விற்றால் தன்னாலேயே போலிகள் காணாமல் போய் விடும்.
இதனால் திரையரங்குகளில் படம் ஓட முடியாது என்கிறீகளா.
இப்போதும் திருட்டு விசிடிகளால் பட ஓட்டம் பாதிப்பில்தானே உள்ளது.தயாரிப்பாளருக்கு திருட்டு விசிடி பணம் கைக்கு வருகிறது.நட்டம் குறையத்தானே செய்யும்.
இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் அதோடு ஒத்துப்போய்தான் தொழில் செய்ய முடியும்.
அதைத்தான் உலக நாயகன் கமல்ஹாசனும் படம் வெளியாகும் போதே டிடிஎச் முறையில் ஒளிபரப்பினால் தயாரிப்பாளர் பணம் ச்மபாதிக்க வாய்ப்புள்ளது ,நட்டம் வராது என்று.
ஆனால் அதற்கு இப்போது வரவேற்பு கிடைக்கவில்லை.
ஆனால் அந்த நிலை வரும் காலமும் வந்து கொண்டுதான் இருக்கிறது.
எல்லாவற்றையும் முன்னதாக சொல்லி வாங்கிக்கட்டிக்கொள்வதே கமல்ஹாசனின் வழமை .
ஆனால் அவர் கூறியதுதான் நடக்கும் அதுதான் இதுவரை நாம் கண்ட உண்மை.







-------------------------------------------------------------------------------------------------------------அச்சில் முதல் தமிழ் நூல்.

காகிதத்தில் அச்சடிப்பது என்ற முறை வந்த பிறகு தமிழ் மொழியிலும் அச்சிடல் அறிமுகமானது. இது பெரும்பாலும் மதப் பிரச்சாரத்துக்காக இந்தியா வந்திருந்த கிறிஸ்தவத் துறவியர்களின் முயற்சிகளால் நடந்தது.
இங்கிலாந்தின் கிழக்கிந்தியக் கம்பனி வைத்திருந்த தடைகள், காலனித்துவச் சூழ்நிலைகள், நடைமுறைச் சிக்கல்கள், கல்வி இல்லாமை, சாதிய ஒடுக்குமுறைகள், அக்கறையின்மை எனப் பல்வேறு காரணங்களால் தமிழ் அச்சுக் கலை மந்தமாகவே வளர்ந்தது. 
இதனால் பெருமளவான இலக்கியங்கள் பதிக்கப்படாமலேயே அழிந்து போயிருக்கலாம். இன்று கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து பதிக்கப்பட்டவைதான்.
அச்சான முதல் நூல்
முதல் தமிழ்ப் புத்தகம் 1554 -ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் நாள் போர்ச்சுகீசிய நாட்டின் தலைநகரான லிஸ்பனில் வெளியானது. அதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ மற்றும் தோமா த குருசு எனும் மூவர்.அவர்கள் தமிழ் அறிந்த இந்தியர்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்களுடைய கிறிஸ்தவப் பெயர்களைத் தவிர மற்ற விவரங்கள் நமக்குத் தெரியவில்லை.
கார்த்தீயா ஏங் லிங்குவா தமுல் எ போர்த்துகேஸ் (Cartilha lingoa Tamul e Portugues) (தமிழில்: “தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த [திருமறைச்] சிற்றேடு”) என்னும் தலைப்பில் அந்த நூல் வெளியானது. அந்த நூலில் தமிழ்ச்சொற்கள் லத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோர்க்கப்பட்டிருந்தன.
இந்த நூல்தான் வரலாற்றிலேயே முதலில் அச்சேற்றப்பட்ட தமிழ் நூல்; இந்திய மொழியொன்றிலிருந்து ஐரோப்பிய மொழிக்கு எழுத்து மாற்றம் செய்யப்பட்ட முதல் நூல் என்று செக்கோஸ்லேவேகியாவின் தமிழ் அறிஞர் கமில் சுவெலபில் குறிப்பிடுகிறார்.
அச்சில் மூத்தது
மதுரை போன்ற இடங்களில் செப்புப் பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் எழுதப்பட்டுவந்த காலகட்டத்திலேயே இந்தத் தமிழ் அச்சு வெளியீடு நிகழ்ந்தது. தமிழில் முதலாவதாக அச்சேறிய இந்தப் புத்தகம் ரஷியா (1563), ஆப்பிரிக்கா (1624) மற்றும் கிரீஸ் (1821) நாடுகளில் முதன்முதலாக அச்சிட்ட நூல்களின் காலத்தை விட முந்தையதாக இருக்கிறது.
1865-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆங்கில நூலான “தமிழில் அச்சிடப்பட்ட நூல்களில் வகைப்படுத்தப்பட்ட அட்டவணை” (Classified catalogue of Tamil printed books) 1865 வரை 1755 நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டதாகக் கூறுகிறது. தமிழ் அச்சுப்
பண்பாடு: நிறுவனமயமாதல் நோக்கி (1860–1900) என்ற ஆய்வுக் கட்டுரை “1867 – 1900 ஆண்டுகளில், 8578 புத்தகங்கள் அச்சில் வந்திருப்பதைக் காண்கிறோம். விடுபடுதல்களோடு இணைத்து நாற்பது ஆண்டுகளில் (1860–1900) சுமார் பத்தாயிரம் நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டிருப்பதை அறிகிறோம்” எனக் கூறுகிறது.
======================================================================
சுரன் 31082014

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?