செவ்வாய், 31 மே, 2016

மின் கணக்கு

மாதம் 100 யூனிட்இலவசம் என்றதும் புளகாங்கிதமடைந்த பலருக்கு தாங்கள் உபயோகிக்கும்

மின்பொருட்கள் இயங்க எடுக்கும் மின்அளவு பற்றிதெரிவதில்லை.
அவர்களுக்காக சிறிய விளக்கம்.
"இரண்டு 60 வாட்ஸ் பல்புகள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால் மாதம் 18 யூனிட் செலவாகும்.   

ஆனால் அதுவே 60 வாட்ஸ் பல்புகளுக்குப் பதிலாக 15 வாட்ஸ் கொண்ட 2 சி.எப்.எல் பல்புகளை தினமும் 5 மணி நேரம் உப யோகித்தால் மாதம் 4.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும். 

அதுபோல 40 வாட்ஸ் திறன் கொண்ட 2 டியூப் லைட்கள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால், மாதம் 12 யூனிட் செலவாகும். 

750 வாட்ஸ் திறன் கொண்ட அயர்ன் பாக்ஸ் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 22.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.
150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும்.

2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட 1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம் உப யோகப்படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும். 

அதுவே 200 வாட்ஸ் ஏர் கூலர் என்றால் மாதம் 30 யூனிட் செலவாகும். 

75 வாட்ஸ் திறனுள்ள 2 மின்விசிறி தினமும் 8 மணி ஓடினால், மாதம் 36 யூனிட் செலவாகும். 

400 வாட்ஸ் வாஷிங்மெஷின் தினமும் ஒரு மணி நேரம் உபயோகப்படுத்தினால் மாதம் 12 யூனிட் செலவாகும். 

100 வாட்ஸ் டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும்.
500 வாட்ஸ் மிக்ஸி தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 15 யூனிட் மின்சாரமும், 
300 வாட்ஸ் வெட் கிரைண்டர் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 9 யூனிட் மின்சாரமும் செலவாகும்.
200 வாட்ஸ் கம்ப்யூட்டர் தினமும் ஒரு மணி நேரம் இயங்கினால் மாதம் 6 யூனிட் மின்சாரமும், 
740 வாட்ஸ் குதிரை திறனுள்ள பம்பு மோட்டார் தினமும் ஒரு மணி நேரம் ஓடினால், மாதம் 22 யூனிட் மின்சாரமும் தேவைப்படும். 

7 வாட்ஸ் திறனுள்ள மொபைல் பேட்டரி சார்ஜர் தினமும் ஒரு மணி நேரம் பயன்படுத்தப்பட்டால் மாதம் 0.21 யூனிட் மின்சாரம் காலியாகும்.
இந்த மின் நுகர்வு கணக்கை வைத்து நீங்கள் உபயோகிக்கும் மின்சாரத்தை கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

அதிகமாக மின்சக்தியை செலவிடும் சாதனங்களை சிக்கனமாக உபயோகிக்கப்பாருங்கள்.

தேவையற்ற நேரங்களில் மின் சாதன சுவிட்சுகளை அணைத்து வையுங்கள்.

அதுதான் பாதுகாப்பு.


=====================================================================================
இன்று,
 மே-31.

 • உலக  புகையிலை எதிர்ப்பு தினம்

 • தென்னாப்பிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது(1910)

 • டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது(1911)

 • மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது(1962)

 • தென்னாப்பிரிக்க குடியரசு அமைக்கப்பட்டது(1961)

=====================================================================================திங்கள், 30 மே, 2016

சாதி இரண்டொ"ழிய"

திமுக தலைவர் கலைஞர் இந்திய பிரதமருக்கு மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி கடிதம் எழுதியுள்ளார். 

அக்கடிதம் முழுக்க தெரியாவிட்டாலும்,கலைஞர் கடிதம் எழுதிவிட்டார் என்பதற்காக பிரதமர் உடனே மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப் போவது இல்லை என்றாலும் ,  மீனவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது பற்றி நாம் கொஞ்சம் விவாதிக்கலாமே.

 மீனவர்சமுதாயம்பழங்குடியினர்பட்டியலில் சேர்ப்பதுஎன்பது சரியானசெயல் அல்ல.
தமிழகத்தில் நரிக்குறவர்கள் போன்று மீனவர்கள் என்று தனிசமுதாயம் அல்ல.

‪இன்றுவரை அந்த சாதியை,சேர்க்க வேண்டும் இந்த சாதியை சேர்க்க வேண்டும் என்று ஒவ்வொருவரையும்  பிற்பட்டோர்‬ பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று இன்று சைவ வேளாளர் ,பிராமணர் தவிர அனைத்து இனத்தினரையும் சேர்க்கப்பட்டுவிட்டனர்.


சைவ வேளாளர்களும்,ஓதுவார்களும்,பிராமணர்களும் இன்னும் சிறிது  நாட்களில் பிற்பட்டோர் ஆகி விடலாம்.யார் கண்டது.அங்குள்ளவர்களில்  மட்டும் அனைவரும் பண முதலைகளா?ஏழைகளே இல்லையா?
இதி ஒரு வேடிக்கை பிராமணர்,சைவ வேளாளர் ,ஒதுவார்  இவர்களுக்கு இனையான சைவர்களும் ,மேலும் ஒதுவார்,சைவ வேளாளர்களுடன் திருமணச்சம்பந்தம் வைத்துக்கொள்ளும் இணை சமூகமான சைவசெட்டி மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியாம்.

இது எப்படியானது?அச்சமுதாயத்தில் அப்போது பதவியில் இருந்த யாரோ ஒருவர் அரசானை திருத்தம்தான் காரணமாக இருந்திருக்கக் கூடும்.

அது போன்ற அதிகாரம் படைத்தப்பதவியில் அமர்ந்திருப்போர்கள் செய்யும் அரசாணை திருத்தங்கள்தான் இன்று வயது தளர்வு,மதிப்பெண்கள் குறைப்பு,கட்டணங்கள் இல்லாமை,காலிப்பணியிட ஒதுக்கீடுகள் குறிப்பிட்டவர்களுக்கு அதிகமாக ஒதுக்கீடு அதுவும் போக பொதுபிரிவிலும் பங்கு என்று அரசையே ஆட்டிப்படைத்து வருகிறது.

இப்போது பிற்பட்டோர் எல்லோரும் வன்னியர்கள் போல்  மிகவும் பிற்பட்டோர் பட்டியலுக்கு அனைவரும் நகர்ந்து முன்னேறி  வருகின்றனர்.

இப்போது பழங்குடியினரா?


மீனவர் தொழிலில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மதத்தவர்,இனத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பரதர்,நாடார்,முக்குவர்,இஸ்லாமியர,இந்துக்கள்,கிருத்தவர்கள் உட்பட்ட அனைவரும் பகுதிக்கு தக்கவாறு உள்ளனர்.

ஆனால்இந்தஇனமக்கள்அனைவரும்மீன்பிடித்தொழில் செய்வதில்லை.அதில் பரதர்,முக்குவர் மிகவும் பிற்பட்டோர் களாகவும்,இஸ்லாமிய ,நாடார் மீனவர்கள் பிற்பட்டோர் பிரிவிலும்தான் உள்ளனர்.
குறிப்பாக வணிகத்துறையில்தலை தூக்கிநிற்கும்நாடார் மக்கள் தூத்துக்குடிதருவை குளம்பகுதிகடற்கரைகளில் மீனவர்களாக தலை முறை,தலைமுறையாகஉள்ளனர்.

இப்போது பல்வேறு சாதி,மத மக்களாக பிரிவுக்குள்ளான இவர்களை சேர்ப்பது என்பது அரசுக்கு மிகப்பெரிய தலைவலியையும்,குழப்பத்தையும்,வீண் கலவரத்தையும்தான் உண்டாக்கும்.

இதை அரசியலாக்கி எதிர்கால தமிழத்தை குழபப்த்துக்கும் ,கலவரத்துக்கும் உட்படுத்த வேண்டாம்.

 பொறுப்பான ,மூத்த அரசியல் தலைவரான கலைஞர் இதை வேறுவடிவில்மீனவர்சமுதாயத்துக்கு நலன்களை உண்டாக்கும் திட்டங்களை கிடைக்கச்செய்யலாம்.

ஏற்கனவே மீனவர் சமுதாயத்துக்கு டீசல் மானியம்,மீன் பிடித்தடை காலத்துக்கு உதவித்தொகை அதிகரிப்பு,மீனவர் ஒய்வூதியம் என்று பல நலத்திட்டங்கள் உள்ளன .

மீன் துறை மூலம் மீனவர் அடையாள அட்டைவைத்திருப்பவர்களுக்கு அவை வழங்கப்பட்டும் வருகிறது.ஆனால் அவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு அவர்கள் சொல்லுவதுதான் விலை.அரசு நிர்ணயிப்பதில்லை.என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .

விவசாயிகளைப் போல் ஆள்வைத்து உழுவது,உரம் வாங்குவது,விதை வாங்குவது  ,பயிரிட்டு அறுவடை வரை ஆட்களுக்கு வட்டிக்கு வாங்கி கூலி கொடுத்து பணி செய்யும் பழு இல்லை.

மீன்கள் வளப்பதற்கு அவர்கள் ஒரு துரும்பையும் கிள்ளி போட்டதில்லை.வேண்டுமானால் மீன் விருத்தி தடை காலத்திலும் ஒருவருக்கும் தெரியாமல் மீனை பிடித்துவரும் பணியைத்தான் செய்கிறார்கள்.

இன்று அவர்கள் பகுதியில் சொந்த வீடும்,வாகனமும் இல்லாதவர்களை அரசு கண்டு பிடித்தால் பரிசே வழங்கலாம் .


.அதே பகுதியில் வீடு ,வாசலின்றி ,வேலையும் இல்லாமல் தவிக்கும் சில சமுகத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் .

மேலும் ஏதாவது உதவ வேண்டும் என்றால் உண்மையிலேயே பிற்பட்டோர்,ஒதுக்கப்பட்டோர்,நலிவுற்றொர்களை  போன்றவர்களை கண்டறிந்து அரசு உதவலாம். 

வெறும் சாதி,மதம் அடிப்படையில் மட்டும் சலுகைகள் வழங்குவது இன்னமும் சாதி ,மத பிளவுகளைத்தான் அதிகரிக்கும்.

அதற்கு முதல் கட்டமாக கலப்பு மணம் செய்து கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு  சாதி,மத சான்றுகளைப்பதிய வேண்டாம் என்று சொல்லுவோர்களிடமும் கண்டிப்பாக சாதிச்சான்றுகளை வேண்டும் என்று பள்ளி,கல்லூரிகளில் கேட்பதை நிறுத்தச் சொல்ல வேண்டும்.

சலுகைகள்,உதவித்தொகைகள் கேட்போர்கள் மட்டும் அந்தந்த விண்ணப்பத்தில் சாதிச்சான்றை இணைக்கச்சொல்லலாமீ?
===============================================================================================

இன்று,
மே-30.

 • அல்பேனியா தனி நாடாகியது(1913)
 • இந்தியாவில் கோவா தனி மாநிலமாகியது(1987)
 • பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது(1635)
 • திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர்(1845)
===============================================================================================

ஞாயிறு, 29 மே, 2016

மது விலக்கில் அடுத்தப்படி ?படிப்படியான மது விலக்கு தனது முதல்படியாக 500 கடைகளை மூடுவதாக ஆரம்பமாகியுள்ளது.

அத்துடன் கடையின் விற்பனை நேரத்தை குறைத்துள்ளது ஜெயலலிதா அரசு.

இதன் மூலாம் இலக்கை அடைய முடியுமா?

500 கடைகளை மூடுவது இன்னமும் மாவட்ட ஆட்சியர்களிடம் பட்டியல் கேட்பது வரையிலான பணி வரைதான் வந்துள்ளது.

கடைகள் விற்பனை நேரம் குறைப்பால் 6% விற்பனை குறையும் என்று அரசால் கூறப்பட்டது.
ஆனால் நிலையோ வேறு.

12 மணிக்கு டாஸ்மாக் கடை திறப்புக்கு காலை 6 மணி முதலே காத்திருந்து கைகள் நடுங்க வாங்கிச்சென்ற குடிமக்களைப் பார்க்கையில் 30 மணி நேரம் திருப்பதியில் பக்தர்கள் காத்திருந்ததாக அன்றைய செய்திக்கும் அதற்கும் வித்தியாசம் இல்லை என்றுதான் உணர முடிந்தது.

இதனால் விற்பனையில் என்ன பாதிப்பு வந்திருக்கும்.?

இது முதல் நாள் நிகழ்வு.

ஆனால் அடுத்தடுத்த நாட்களில் காலையில் பழைய நிலையிலேயே மது அருந்து கூடங்கள் (பார் )திறந்து குடி  மக்கள் பார்களில் அதிக விலையில் மது வாங்கி அருந்துவதைஅனேகமாக  எல்லா கடைகளிலும் பார்க்க முடிந்தது.

ஆனால் மது கடைகள் மூடப்பட்டுதான் இருந்தன.
முதல் நாள் இரவிலேயே மதுப்பாட்டில்கள் பார்களில் வைக்கப்பட்டு,அல்லது பார்  நடத்துபவர்களால் வாங்கி குவிக்கப்பட்டு வழக்கமான காலைகளில் அதிக விலைக்கு குடிமக்கள் ஏக்கம் தீர விற்கப்பட்டது.

இதை காவல்துறையோ ,கலால் அதிகாரிகளோ கண்டு கொள்ளவில்லை,தடுக்கவில்லை.

இதனால் விற்பனை 6% குறைவு என்பது இல்லாமல் போய்விட்டது.

மூடப்படும் கடைகளோ ஏற்கனவே உயர் நீதிமன்றத்தால் மூட வேண்டும் என்று ஆணையிடப்பட்டும் தமிழக ஜெயலலிதா அரசு மூடாமல் வைத்திருந்த நெடுஞ்சாலை ,பள்ளி,கோவில்கள் அருகே உள்ள மதுக்கடைகள்தான்.

இக்கடைகளை தாங்கள் உத்திரவிட்டும் ஏன் இன்னமும் மூடவில்லை என்று உயர் நீதிமன்றம் இரு முறை கண்டனம் தெரிவித்த மதுக்கடைகள்தாம்.

அந்த கடைகளும் எதிர்பார்த்த அளவு இல்லாமல் முதலுக்கு மோசமாக விற்பனை மிகக் குறைவாக உள்ள கடைகள் பட்டியல்தான்  தற்போது உதவி ஆணையர் (கலால்),டாஸ்மாக் மேலாளர்கள் ,மாவட்ட ஆட்சியர்களால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த பட்டியலிலும் குறைவான விற்பனைக்கடைகளுக்குதான் முதலிடமாம்.

அதனால் டாஸ்மாக் வரவுகளில் ஒன்றும் பாதிப்பு இராது என்பதுதான் இன்றைய கள நிலவரம்.

முதல் படி  500 கடைகள் மூடல்,விற்பனை நேரம் குறைப்பால் ஜெயலலிதா அரசுக்கு இன்றைய அளவில் டாஸ்மாக் வசூலில் பாதிப்பில்லை.

ஆனால் அடுத்தடுத்த படிகள் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.

ஜெயலலிதாவின் படிப்படியாக மது விலக்கில் அடுத்தப்படி ? 

அடுத்தப்படியே இருக்குமா என்பதும் தெரியவில்லை.
=====================================================================================
இன்று,
மே-29.
 • சர்வதேச அமைதி காப்போர் தினம்
 • ஆஸ்திரிய-ஹங்கேரி பேரரசு அமைக்கப்பட்டது(1867)
 • நைஜீரியா மக்களாட்சி தினம்(1999)
 • எவரெஸ்ட் சிகரம் முதன் முதலில் தொடப்பட்ட தினம்(மே 29)
மனிதனின் கனவுகளுக்கு எல்லையே இல்லை என்று அழுத்தி சொன்ன எவரெஸ்ட் தொடுதல் நிகழ்ந்த தினம் இன்று தான்
உலகின் மிக உயரமான அந்த சிகரத்தை தொடுவதற்கான முன்னெடுப்புகள் நெடுங்காலமாக நடைபெற்றன. தொட பத்துக்கும் மேற்பட்ட முயற்சிகள் .கொஞ்சம் மரணங்கள் இதுதான் அதுவரைக்கும் 
எவரெஸ்ட் நோக்கி போனவர்களின் கதை. உச்சிக்கு போக போக பிராண வாயு அளவு குறையும், எண்ணற்ற சிக்கல்கள் உருவாகும்.தலைவலி, ஞாபக மறதி, மயக்கம், பசி இழப்பு, உடல் செயல்பாடுகள்
ஒருங்கிணைப்பின்மை,மனப்பிறழ்வு கொஞ்சம் போனால் கோமா இதெல்லாம் வந்து சேரும்
ஜான் ஹன்ட் எனும் இங்கிலாந்து நபர் தலைமையில் பதினோரு பேர் கொண்ட குழு கிளம்பியது.அதில் ஒருவர் தான் எட்மன்ட் ஹிலாரி நியூசிலாந்து நாட்டில் பிறந்த எட்மன்ட் குட்டிப்பையனாக
படிப்பில் சுமார் தான்;கூச்ச சுபாவம் வேறு -பள்ளிக்கு போகும் பொழுது இரண்டுமணிநேர ரயில் பயணத்தில் அவர் படித்த சாகச கதைகள் அவரை வேறு கனவு உலகத்திற்கு சென்றது கூட்டி
போனது;அந்த கதைகளில் வரும் நாயகர்கள் போல சாகசங்கள் செய்ய குத்துசண்டை கற்றுக்கொண்டார் ;மலையேற்றம் என ஈடுபாட்டுடன் விஷயங்களை செய்தார் .
தேனீ வளர்ப்பில் வெயில் காலங்களில் ஈடுபட்டு அதில் வரும் வருமானத்தில் ஏறவே கடினமான சிகரங்களுக்கு நண்பர்களோடு போவார் .உலகப்போரில் ஈடுபட போய் தீக்காயங்களுக்கு உள்ளாகி 
மீண்டு வந்தார் ;எவரெஸ்ட் சிகரத்தை எப்படியாவது விட வேண்டும் என ஆவல் கொண்டிருந்தார் .வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அச்சிகரம் செல்லும் பார்டர் திறக்கபபடும் அப்பொழுது அங்கு
போய் சேர்ந்தார் -உடன் நேபாளிய செர்பா மக்களுள் ஒருவரான டென்சிங் சேர்ந்து கொண்டார் .
நெருங்கிபழகிய இருவரும் முன்னேறினார்கள் ;கடுமையான சூழலில் ,பனி பள்ளங்களில் தப்பித்து சென்று சிகரத்தை 1953 இல் இதே நாளில் தொட்டார்கள் .காலை நான்கரை மணிக்கு எழுந்து
எல்லாரும் தூங்கிக்கொண்டு இருந்த பொழுது இருவரும் கிளம்பி போய் உச்சத்தை அடைந்தார்கள்.யார் முதலில் தொட்டார்கள் என இறுதிவரை சொல்லாமல் பெருந்தன்மையாக இருவரும் சேர்ந்தே
தொட்டதாக சொன்னார்கள் .அதற்கு பிறகும் தன் சாகசத்துக்கான தேடலை விடாமல் ஹில்லாரி தென் மற்றும் வட துருவங்களை தொட்டார் .
நேபாளில் ஹிமாலய அறக்கட்டளையை உருவாக்கி பல பழங்குடியினரின் மருத்துவ மற்றும் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க உதவினார் .எப்படி இப்படி சாதனைகள் செய்கிறீர்கள் என கேட்ட
பொழுது ,"இயல்பான எளியவன் நான் !புத்தகங்கள் படித்து மேகங்களில் மிதந்தவன் நான் .அசாதரணமான கனவுகளை கண்டு அசாதரணமாக ஊக்கத்தோடு உழைத்தேன் .சிம்பிள் !" என்றார் . மனிதனின்
கனவுகளுக்கு எல்லையே இல்லை என்று அழுத்தி சொன்ன எவரெஸ்ட் தொடுதல் நிகழ்ந்த தினம் இன்று
                                                                                                                                    - பூ.கொ.சரவணன் , 
=====================================================================================
யூ டியூப்பின்   புதிய விளையாட்டு …

யூ டியூப் நிறுவனம் பலரும் பகிர்ந்து கொள்ளும்  வீடியோக்களை வழங்கி வருகிறது.  
இது தவிர முப்பரிமாண வீடியோக்கள், நேரடி நிகழ்ச்சிகளை 360 டிகிரியில் பயனாளர்கள் பார்க்கும் படி  சேவைகளையும் தற்போது  வழங்கி வருகின்றது.
இவற்றையெல்லாம் தாண்டி விளையாட்டு ரசிகர்களுக்காக புதிய வசதி ஒன்றினை யூ டியூப் அறிமுகம் செய்யவுள்ளது.
இதன்படி உலகெங்கிலும் உள்ள ஹேம் பிரியர்கள் யூடியூப்பில் இணைந்து நேரடியாக ஹேம் விளையாடி மகிழ முடியும்.
இப்படி விளையாடிக்கொண்டிருக்கையில் புதிய  பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஒன்லைன் ஊடாக அவர்களுக்கு தெரியப்படுத்தும்  வசதியும் தரப்படவுள்ளது.
வரும் ஜுன் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள இவ் வசதியின் ஊடாக E3 2016 நிகழ்வும் காண்பிக்கப்படவுள்ளது.
இச் சேவையினை https://gaming.youtube.com/e3 எனும் இணையத்தள முகவரியின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
==========================================================================================
சனி, 28 மே, 2016

போலி (வாக்காளர்) களே வெல்லும்?

முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி கோபால் சாமி "தமிழ்நாட்டில் யாராலும் தேர்தலுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியாது' என்று கூறுகிறார்.

பிறகு ஏன் உங்களுக்கு தண்டச் சம்பளம்... தேர்தல் ஆணையத்தைக் கலைத்து விட்டுப் போவதுதானே என்று ஊடகத்தில் கேள்வி கேட்க ஆள் இல்லாதது அவர்களின் புண்ணிய கணக்கு. 
தேர்தல் அதிகாரிகள் நேர்மையாக தேர்தலை நடத்துகிறார்கள் என்று எண்ணும் மக்களின் பாவக்கணக்கு.
அன்றைய தமிழகத் தேர்தல் ஆணையாளர் பிரவீன்குமார், அவர் கையொப்பமிட்ட ஆவணம் ஒன்று தரும் தகவலில் நாம் அறிவது... ஏற்கனவே இரண்டு மனையும், ஒரு வீட்டையும் வைத் திருந்தவருக்கு அ.தி.மு.க. அரசு வீட்டை தந் துள்ளது. Noidaவில் ரூபாய் 35.25 லட்சம் கொடுத்து 28-7-2011ல் வீட்டை வாங்கியவர் 34.90 லட்சம் கட்டிவிட்டார்.

அது மட்டுமில்லை... இதே நேரத்தில் அவருக்கு தமிழக அரசு சென்னையில் bid dated  10-9-2012-ல் 85 லட்சம் மதிப்புள்ள வீட்டை வழங்கியது. இதிலும் அவர் ஜனவரி 2014-வரை 40 லட்சம் கட்டிவிட்டார். 
அதாவது ஒரு மாதத்திற்கு சுமார் மூன்று லட்சம் கட்டி, 26 மாதத்தில் 75 லட்சத்துக்கு மேல் கட்டி விட்டார். மாதச்சம்பளம் 75,300 ரூபாய் மட்டுமே வாங்கிக்கொண்டு, எப்படி இதனைச் செய்ய முடியும் என்று சிந்திப்போர்கள் சிந்திக்க...

2009-2014-ல் இந்தியாவின் வாக்காளர் எண்ணிக்கை சராசரியாக 13.6% உயர்ந்துள்ளது. 

 ஆனால் இத்தகைய பிரவீன்குமாரர்கள் காலத்தில்தான் தமிழகத்தில் மட்டுமே 29.1% என ஒரேயடியாக உயர்ந்துள்ளது. 

அதாவது 1.21 கோடி வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  

இந்த அதிசயம் வேறு எந்த மாநிலமும் காணாத அசுரத்தனமான வளர்ச்சி. 

வாக்காளர்கள் அதிகம் ஆக... ஆக... அ.தி.மு.க.ஜெயிக்கும் நிலையினைக் காணமுடிகிறது. 
ஆனால் வாக்காளர்கள் சேர்க்கையும் National census data-வுடன் ஒத்துப்போக (TALLY) மறுக்கிறது. 
அப்படியானால் எந்த அடிப்படையில் இந்த அசுரத்தனமான வாக்காளர் சேர்க்கை சாத்தியம் ஆயிற்று.
2011-ல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் சிறுகச் சிறுக அ.தி.மு.க. ஏன் கவனமாக வாக்காளர் சேர்ப்பு செய்யவேண்டும். 

தேர்தல் காலத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் இப்படி சேர்க்கப்பட்ட போலி வாக்காளர்களை வைத்து அ.தி.மு.க. தேர்தல் அதிகாரி துணையுடனே வாக்குப் பதிவை உயர்த்திக் காட்டிவிட்டு, போதும் என்ற அளவுக்கு வாக்குகள் சேர்த்து tally செய்வது சாத்தியமே.
ஒரு வாக்காளன் பெயரில் 13 பூத் ஸ்லிப் இருந்த அவலத்தை நீதிமன்றம்வரை தி.மு.க. சமர்ப்பித்தும் இன்றைய தமிழக தேர்தல் ஆணையாளர் லக்கானி "சுமார் 40 லட்சம் போலியாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையில்...

 "சென்னையில் மட்டுமே சுமார் ஒரு லட்சம் நீக்கப்பட்டது' என்றும், "தமிழகம் முழுவதும் சுமார் 6.5 லட்சம் நீக்கப்பட்டது' என்றும் தெரிவித்தார். 

அப்படியென்றால் சுமார் 32 லட்சம் போலி வாக்காளர்களை வைத்துக்கொண்டே தமிழ்நாட்டில் 2016 தேர்தல் நடைபெற்றிருக்கிறது என்பது வருத்தமான விஷயம்.
பல இடங்களில் மின்வெட்டு, விலைவாசி மற்றும் தண்ணீர் பிரச்சினை காரணமாக அ.தி.மு.க. வேட்பாளர்கள்  ஊருக்குள்ளே நுழைய அனுமதி மறுப்பு என்ற பிரச்சினைகள். 


2014-ல் மட்டும் இல்லை... 2016-ல் நடந்த நிகழ்வு காலத்திலே போலி வாக்காளர்கள் தந்த நம்பிக்கையில். அ.தி.மு.க. சுமார் 10% ஓட்டுகளை தனதாக்கிக்கொள்ளும் வாய்ப்பில்தான், "இரண்டுநாளில் முடிவுகள் தெரியும்' என்று அதீத நம்பிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவால் சொல்ல முடிகிறது. 

வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போதே தி.மு.க. கூட்டணி 107 இடங்களில் முன்னிலை பெற்று 24 இடங்கள் ஊசலாடிக் கொண்டிருக்கும்போதே ஜெயலலிதா அவர்களுக்கு பிரதமர் பாராட்டும் தெரிவிக்க முடிகிறது என்றால் "ஏன்' என்றும் சிந்திப் போர்கள் சிந்திக்க...
ஜனநாயக நாட்டில் ஒரு கணிசமான அளவில் போலியான வாக்காளர்களைச் சேர்த்து விட்டு பின்னர் வெறும் பூத்ஸ்லிப் வைத்துக் கொண்டு மட்டுமே ஓட்டுப் போட்டுவிடலாம் என்றால்... இதனை வீடு, வீடாக கடந்த 10 ஆண்டுகளில் சென்று சரி பார்க்காத திட்டமிட்ட காரியத்தின் பின்னால் ஒளிந்துள்ளது தேர்தல் கமிஷனுடன் கைகோர்த்த அ.தி.மு.க.வின் 2014 மற்றும் 2016 வெற்றிக் கூட்டணி.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நீதிமன்றம் சென்று இந்தப் போலி வாக்காளர்களை நீக்காத வரை அதிக ஓட்டுப் பதிவுகள் நடந்தால் "அ.தி. மு.க. வெல்கிறது' என்ற தொடர் செய்தியை,  தண்ணீருக்கும் உப்புக் கும் வரி கட்டிக் கொண்டே நாமும் படித்துக்கொண்டே இருக்கலாம்.

                                                                                                                                                                                                                                                                                                           நன்றி:நக்கீரன் .
                  ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி மெரினாவில் நாளை கூட்டம் :- வைகோ 
                  கைபுள்ள அடுத்த ப்ராஜக்டை கையில் எடுத்துட்டாரு !?அதிமுகவுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உ(க)ள்ள உறவு

தேர்தல் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைப் பட்சமாகவே இருந்ததையும், ஆளுங்கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதைப் போலச் செயல்பட்டதையும் தமிழகமே நேரிலே கண்டது. 
தேர்தல் ஆணையத்திடம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எத்தனை முறை தான் புகார் மனுக்களைத் தருவது? பணப்பட்டுவாடா பற்றி நாளேடுகளில் செய்திகள் வராத நாள் உண்டா? அமைச்சர்களைப் பற்றி எத்தனையோ புகார்கள்! 
பொது மக்கள் திரண்டு நின்று, சில அமைச்சர்களைத் தொகுதிக்குள்ளேயே வரவிடாமல் தடுத்து விரட்டியடித்தார்கள் என்று எத்தனை செய்திகள் வெளிவந்தன? 
அதையெல்லாம் மீறி அந்த அமைச்சர்கள் அந்தத் தொகுதிகளில் பின்னர் எப்படி வெற்றி பெற்றார்கள்? மூன்று அமைச்சர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்ட கரூர் அன்புநாதன் பிரச்சினை என்ன? துபாயில் ஓட்டல் என்றும், வெளிநாடுகளில் ஏராளமான சொத்துகள் என்றும், கோடிக்கணக்கான ரூபாய் முதலீடுகள் என்று பேசப்பட்ட பெரிய ஊழல் எவ்வாறு மூடி மறைக்கப்பட்டது? 
570 கோடி ரூபாய் திருப்பூரில் பிடிபட்டதையே வங்கியின் பணம் என்று டெல்லியிலிருந்தே கூறி விட்டார்களே? 
சிறுதாவூரில் முதலமைச்சர் ஜெயலலிதா பங்களாவில் இருந்த கன்டெய்னர்கள் புகைப்படமாக எடுத்து பார்ப்போர் அதிர்ச்சி அடையும் அளவுக்கு வெளியிடப்படவில்லையா? 
நாட்டின் வருமான வரி மற்றும் அமலாக்கத் துறைச் சட்டங்களுக்கெதிரான இந்த நிகழ்வுகள் என்ன ஆயிற்று? 
===============================================================தேர்தல் பணிகள் தொடங்கியதில் இருந்தே தேர்தல் கமிஷன் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டது. அவர்கள் ஆளும் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து செயல்பட்டார்கள். ஆளும் கட்சியின் பண பலமும், தேர்தல் கமிஷனின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளும் தி.மு.க.வை தோல்வி அடைய செய்துவிட்டன.===============================================================
இந்தியாவில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையமே தமிழகத்தில் நுhறு கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்தார்களே; சட்டத்திற்குப் புறம்பான இந்தச் சம்பவங்களில் சட்டப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? 
ஒரு சில ஊடகங்களும், நாளேடுகளும் நடுநிலை தவறி, ஆளுங்கட்சியின் ஊதுகுழல்களாக மாறி, தி.மு.க. வின் மீது வெறுப்புப் பிரச்சாரத்தை ஏவி விட்டு, பத்திரிகா தர்மத்தைக் காப்பாற்றுவதைப் போலப் பகல் வேடம் போட்டார்களே! 
இவ்வளவையும் மீறி, அனைத்து வகை ஆயுதப் பிரயோகங்களையும் எதிர்த்துப் போராடி தி.மு.கழகம் தற்போது பெற்ற வாக்குகளை விட அதிகமாகப் பெறுவதற்கான வழிவகைகள் உள்ளனவா? 
இருந்தால் சொல்லுங்கள், ஏற்றுக் கொள்கிறேன்!
வாக்காளர் பட்டியலில் இலட்சக்கணக்கான போலி வாக்காளர்கள் உள்ளிட்ட ஏராளமான தவறுகள் இருக்கின்றன என்று எத்தனை முறை புகார் மனுக்கள் தரப்பட்டன? 
கடைசியாக தேர்தலுக்கு முன்பு தரப்பட்ட வாக்காளர் பட்டியலை இப்போது வேண்டுமானாலும், “தி இந்து” இதழே எடுத்துப் பார்த்துக் கொள்ளட்டும். 
என்னுடைய திருவாரூர் தொகுதியில் மட்டும் 11,036 போலி வாக்காளர்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு, தேர்தல் ஆணையரிடமே அதன் நகல்கள் தரப்பட்டன.
 மற்ற தொகுதிகளை எடுத்துக் கொண்டால், ஆவடியில் 19,723 
- கொளத்தூரில் 5,588 - 
திருப்போரூரில் 13,404 -
 பாலக்கோட்டில் 20,199 - 
வானூரில் 10,768 - 
விக்ரவாண்டியில் 11,592
 - கள்ளக் குறிச்சியில் 21,247 
- அவினாசியில் 23,270 -
 திருப்பூர் (வடக்கு)
 - 24,286 -
 திருப்பூர் தெற்கு 12,024 - 
பல்லடத்தில் 28,805 - 
உடுமலைப்பேட்டையில் 14,243 -
 குன்னம் 21,231 -
 சோளிங்கர் 22,227 - 
பெரம்பலுர் 25,105 - 
காங்கேயம் 23,956 - 
கலசப்பாக்கம் 20,098 என்று சொல்லிக் கொண்டே போகலாம். 
இவ்வளவு போலி வாக்காளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் இருந்தார்கள். இதையெல்லாம் மீறித் தான் தி.மு. கழக அணி 100 வாக்குகளுக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் இரண்டு தொகுதிகளிலும், 1000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் 8 இடங்களிலும், 5000 வாக்குகள் வித்தியாசத்தில் 21 இடங்களிலும், 10000 வாக்குகள் வித்தியாசத்தில் 22 இடங்களிலும் என்று 53 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. தி.மு. கழகமும், அ.தி.மு.க. வும் இந்தத் தேர்தலில் நேரடியாக போட்டியிட்ட 172 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் 89 இடங்களிலும், அ.தி.மு.க. 83 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 
 “இந்து” இதழிலேயே என்று 20-5-2016 அன்று உண்மை நிலையைப் படம் பிடித்து காட்டியிருந்தீர்களே?
இன்னும் சொல்லப் போனால், உங்களுடைய 25ஆம் தேதிய இதழில், ஆளும் அதிமுக ஆட்சி அமைப்பதற்குத் தேவையான சாதாரண பெரும்பான்மையை சமீபத்தில் நடந்து முடிந்த தமிழகச் சட்டப் பேரவைத் தேர்தலில் பெற்றுள்ள போதிலும், தொகுதி வாரியாக நடத்தப்பட்ட ஆய்வில், அதிமுக வேட்பாளர்களில் இரண்டு பேர், மொத்தம் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்குக்குக் குறைவான வாக்குகளைப் பெற்று டெபாசிட் தொகையைப் பறி கொடுத்துள்ளனர் என்றும், இதற்கு நேர் மாறாக தி.மு. கழகத்தால் நிறுத்தப்பட்டுள்ள 176 வேட்பாளர்களும் தங்கள் டெபாசிட் தொகையைத் திரும்ப பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது என்றும் எழுத வில்லையா?
நீங்களே உங்கள் கேள்வியில் கேட்டிருப்பது போல, குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்து விட்டது உண்மை தான். 
ஆளுங்கட்சியின் இராட்சசப் பணநாயகமும், தேர்தல் ஆணையத்தின் நயவஞ்சகச் செயல்பாடுகளுமே தி.மு.க. வின் வெற்றி வாய்ப்பைத் தட்டிப் பறிக்க முக்கியமான காரணம்!
தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை எந்தச் சவாலையும் சாமர்த்தியமாக எதிர்கொள்ளும்; இப்போது தி.மு. கழகத்தை விட சவால்களைச் சந்திக்க வேண்டியவர்கள் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வினர் தான். 
ஆளுங்கட்சி 32 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது உண்மை என்ற போதிலும், அங்கே வெற்றி பெற்ற அ.தி.மு.க. உறுப்பினர்கள் 131 பேர் தான். 
அதிலும் ஒருவர் இறந்தது போக மீதி 130 பேர் தான். அதாவது தனிப் பெரும்பான்மைக்கு வேண்டிய 118 பேரை விட 12 பேர் தான் அங்கே அதிகம். 
எனவே அவர்களை எங்கும் அலை பாய விடாமல் பிடித்து வைத்திருக்க வேண்டிய சவால் அ.தி.மு.க. வுக்குத் தான் உண்டு. 
சர்க்கஸில் கம்பியில் நடப்பதைப் போன்ற நிலை அவர்களுக்கு! 
எங்களைப் பொறுத்தவரையில் 2011ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பிறகு வெறும் 23 இடங்களில் தான் தி.மு. கழகம் வெற்றி பெற்று, பிரதான எதிர்க் கட்சியாகக் கூட வர முடியாத நிலையிலே இருந்தோம். 
தற்போது தி.மு. கழகம் மட்டும் 89 உறுப்பினர்களைக் கொண்டு பேரவையிலே இடம் பெற்றுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி, கழக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளை ஆளுங்கட்சி எப்படி எதிர் கொள்ளப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்!
தமிழகச் சட்டப் பேரவையின் வரலாற்றில், தி.மு. கழகம் 1971-ல் 184 உறுப்பினர்களுடன் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஆளுங்கட்சியாக இருந்திருக்கிறது; 
இப்போது 89 உறுப்பினர்களுடன் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய எதிர்க் கட்சியாகவும் உருவெடுத்திருக்கிறது. 
ஆளுங் கட்சியாகவும், எதிர்க் கட்சியாகவும் தி.மு. கழகம் ஏற்படுத்தியிருக்கும் சரித்திரச் சான்றுகளை யாராலும் மறைத்து விட முடியாது!
ஆளுங்கட்சியின் அரட்டல், உருட்டல், பயமுறுத்தல், பாய்ச்சல், பொய் வழக்குகளைப் போடுதல் போன்ற ஜனநாயக விரோதச் செயல்முறைகளைத் தொடர்ந்து பார்த்து வெறுப்பு அரசியலைப் புரிந்து கொண்டிருப்பதால், அதற்கெல்லாம் பயப்படாத அடியாக, நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டேன்.
 தி.மு. கழகத்திற்கு துரோகம் விளைத்தவர்கள், தற்போது விளைவிக்க நினைப்பவர்கள் ஆகியோருக்கு துணை போகக் கூடாது என்பதற்காக, துரோகம் விளைவிப்பவர்களுக்கு துணை போகாத அடியாக இருக்க வேண்டுமென்று குறிப்பிட்டேன். 
என்னுடைய உடன்பிறப்புகளுக்கு நான் கூறியதன் பொருள் நன்றாகவே விளங்கும். உள்கட்சி பிரச்சினையால் ஒருசில இடங்களில் கழக உறுப்பினர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தது உண்மை தான். அதுபற்றி செயற்குழுவில் சிலர் பேசத் தான் செய்தார்கள். 
அவ்வாறு கட்சிக்கு, கட்சியின் உறுப்பினர்களுக்குத் துரோகம் செய்தவர்கள் பற்றி கழகத் தலைமை நன்றாகப் புரிந்து கொள்ள இந்தச் செயற்குழு பெரிதும் உதவியாய் அமைந்தது. எதிரிகளைக் கூட மன்னித்து விடலாம்; துரோகிகளை மன்னிக்க முடியுமா?
தி.மு. கழகம், மேற்கு பகுதியில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இந்தத் தேர்தலில் மட்டுமல்ல; கடந்த சில தேர்தல்களில் பின் தங்கி யிருப்பது உண்மை தான்! 
ஆனால் தேர்தலுக்கு முன்பு வந்த கருத்துக் கணிப்பு கள் இந்தத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தி.மு. கழகக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றே அறிவித்திருந்தது. 
மேற்கு மண்டலம் பெருந்தொழில்கள், சிறு மற்றும் குறுந்தொழில்களைச் சார்ந்துள்ள மண்டலமாகும். மின்வெட்டு, அ.தி.மு.க. அரசின் தொழில் நேயமற்ற அணுகுமுறை ஆகியவற்றினால், மேற்கு மண்டலத் தொழில்கள் சிதைந்து, முதலீடுகள் நோய்வாய்ப்பட்டு, தொழிலாளர்கள் வாழ்வாதாரம் தேடி அண்டை மாநிலங்களுக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதைக் காரணமாகச் சொல்லப்பட்டது. 
அந்தக் கணிப்பையும் மீறி இந்த முறை அங்கே தி.மு.கழகம் பெருமளவில் வெற்றி பெற முடியாமல் போனதற்குக் காரணம் “கன்டெய்னர்கள்” தானோ என்ற சந்தேகமும் உள்ளது. 
இத்தகைய கொடுமைகளிலிருந்து கொங்கு மண்டலத்தை மீட்டெடுக்க கழகம் உடனடியாக ஆக்க பூர்வமானதும், ஆரோக்கியமானதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைக் கழகத் தலைமை நன்றாகவே புரிந்து கொண்டுள்ளது.
 தேர்தல் தள்ளி வைக்கப்படாமல் அந்த இரண்டு இடங்களிலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெற்றிருக்குமானால், இரண்டு இடங்களிலுமே தி.மு.கழகம் வெற்றி பெற்றிருக்கும். 
இருந்தாலும், தற்போது அங்கே தேர்தல் தள்ளி வைக்கப் பட்டதால் கழகத்தின் வெற்றி வாய்ப்பு குன்றிப் போய் விடாது என்றே நினைக்கிறேன்.
172 இடங்களில் போட்டியிட்ட தி.மு.கழகம் 89 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 
இது 51.74 சதவிகிதம். 
தி.மு. கழகக் கூட்டணிக் கட்சிகள் 60 இடங்களில் போட்டி யிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது 15 சதவிகிதம்தான். 
இதற்குக் காரணமாக கூட்டணி கட்சிகளை நான் சிறிதும் குறை கூறவிரும்பவில்லை. 
அந்தத் தொகுதிகளில் தி.மு. கழக உறுப்பினர்கள் அவர்களை வெற்றி பெறச் செய்கின்ற அளவுக்கு அவர்களுடன் இணைந்து முழு மூச்சோடு உழைக்கவில்லையோ என்று தான் கருதுகிறேன்.

அதிமுக அரசு பதவியேற்பு விழாவின் போது எதிர்க்கட்சித் தலைவரான முக. ஸ்டாலினுக்கும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் உரிய மரியாதை கொடுத்து இருக்கைகள் ஒதுக்கப்படவில்லை .
முன்பொரு முறை, ஜெயலலிதா பதவியேற்பு நிகழ்ச்சிக்குக் கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் சென்றிருந்த போதும் உரிய மரியாதை கொடுத்து இருக்கை ஒதுக்கீடு செய்யப் படவில்லை. 
ஒவ்வொரு முறையும் தவறு நிகழ்வதும், அதற்கு நொண்டிச் சமாதானம் சொல்வதும் வாடிக்கையாகி விட்டது என்பதை மறந்து விட முடியாது. 
எனினும் இந்த முறை, தமிழகத்தின் நலன்களுக்காக தி.மு.க. வுடன் இணைந்து செயல்பட இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். 
தமிழகத்தின் நலன் களுக்காகவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் ஜெயலலிதா வோடு மட்டுமல்ல; யாருடனும் இணைந்து பணியாற்றத் தி.மு.கழகம் தயங்கியதில்லை என்பதை அதன் கடந்த கால வரலாறு எடுத்துக்காட்டும்.

தி.மு.கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் “தி இந்து” ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள  பேட்டி.
=========================================================================================
இன்று,
மே-28.
 • ஆர்மீனியா குடியரசு தினம்
 • பிலிப்பைன்ஸ் கொடி நாள்
 • நேபாள குடியரசு தினம்
 • கிரீசில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது(1952)
 • என்.டி.ராமா ராவ் பிறந்த நாள் (19230
என்.டி.ராமா ராவ்
கிருஷ்ணர், ராமர் என்றால், திரைப்படம் பார்க்கும்  மக்களின் மனதில் நிற்பவர்,
'நன்டமுரி தாரக ராமா ராவ்' என்ற, என்.டி.ராமா ராவ்!
ஆந்திர மாநிலம், நிம்மகுரு என்ற கிராமத்தில் 1923 - மே 28 பிறந்தார்; 

திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் கொண்டு, 1947ல், மன தேசம் என்ற படத்தில், சிறு வேடத்தில் நடித்தார். பின், பல்லேடுரி பில்ல படத்தில் கதாநாயகனாக நடித்தார்; 
தொடர்ந்து, பாதாள பைரவி, மல்லேஸ்வரி, சந்திரஹாரம் என, சூப்பர் ஹிட் படங்களில் நடித்து, தன் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தினார். 
40 ஆண்டுகளில், 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
திரைப்படம் கொடுத்த புகழை தக்கவைத்து தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர் பெற்ற அரசியல் வெற்றியை கண்டு தெலுங்கு தேசம் கட்சியைத் துவங்கினார். 
அவரை ராமர்,கிருஷ்ணரின் அவதாரமாகவே பார்த்து மயங்கிப்போயிருந்த ஆந்திரமக்களின் அமோக ஆதரவை பெற்று  1983 முதல், 1994 வரை, மூன்று முறை ஆந்திர முதல்வராக இருந்தார் . 
சிறந்த நடிகருக்கான, பிலிம் பேர் விருதை, 10 முறையும்; தேசிய விருது, பத்மஸ்ரீ விருதையும் வென்றுள்ளார். மாரடைப்பு காரணமாக, 1996 ஜன., 18ம் தேதி இறந்தார். என்.டி.ராமா ராவ் பிறந்த தினம் இன்று!
=========================================================================================
உலகத்தையே வெப்பத்தால் வாட்டி வதைத்து வந்த எல் நினோ முடிவடைந்துள்ள நிலையில், ஜூன் மாதத்தில் குளிர் தரும் லா நினோ துவங்க உள்ளது. 
இதனால் இந்தியாவில் மழை அளவு வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிக வெப்பம் இருக்கும் காலத்தை எல் நினோ எனவும், குளிர் மற்றும் மழை நிலவும் காலத்தை லா நினா எனவும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டு அழைக்கின்றனர். 
அந்த வகையில் தற்போதைய நிலரப்படி, கடந்த 2 ஆண்டுகளாக நிலவிய கடும் வெப்பமே, 20 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்டுள்ள வலிமையான எல் நினோவாக கருதப்படுகிறது. 
இதற்கு முன் 1982 மற்றும் 1997 ம் ஆண்டுகளில் ஏற்பட்டதே கடுமையான எல் நினோ காலமாக கருதப்பட்டது. 
எல் நினோவின் காரணமாகவே பல பகுதிகளில் கடுமையான வறட்சியும், பல பகுதிகளில் மழையால் பெரு வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. 
2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் எல் நினோ தீவிரமடைந்ததன் காரணமாகவோ சென்னையில் 3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை ஒரே சமயத்தில் பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டது.

உலகை வெப்பத்தால் வாட்டிய எல் நினோ காலநிலை முடிவடைந்து விட்டதாக இரு நாட்களுக்கு முன் ஆஸ்திரேலிய வானிலை மையம் அறிவித்திருந்தது. 

இதனையடுத்து ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் லா நினா காலநிலை துவங்க உள்ளது. 
கடந்த ஒரு மாதமாக வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திர காலமும் நாளையும் முடிவடைகிறது. 

இதனால் உலக அளவில் காலநிலையில் பெரும் மாறுபாடு ஏற்பட உள்ளது. 

எல் நினோ அபரிமிதமாக இருந்ததாலேயே கடந்த 2 ஆண்டுகளாக வழக்கமான தென் மேற்கு பருவநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

தற்போது துவங்க உள்ள லா நினோவால் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் நல்ல பருவமழை ஏற்படும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

அதிக மழையும், அதனால் வெள்ளப் பெருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். 

வழக்கமான மழை காலத்துடன் லா நினோவும் இணைவதால் மழை அளவு வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

அதே சமயம் லா நினோவால் இந்தியாவில் பருவமழை காலம் முன் கூட்டியே துவங்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெள்ளி, 27 மே, 2016

"தூக்கம்" இருவகைதூக்கம் என்பது உடலுக்கு ஓய்வு கொடுத்து மீண்டும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு மூளையானது தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் ஓர் இயற்கை வழி. 
ஒருவருடைய உடல் உழைப்பு, தூங்கும் விதம், சுற்றுச்சூழல், உடல் நலம் மற்றும் மனநலத்தைப் பொறுத்து தூக்கம் அமைகிறது. பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம்,
 தூக்கத்தில் ‘ரெம்’ தூக்கம், ‘நான் ரெம்’ தூக்கம் என்று இருவகை உண்டு. 
நாம் தூங்கும்போது இந்த இரண்டும் மாறி மாறி அலைபோல வரும். ‘ரெம் தூக்கம்’ (REM Sleep - Rapid Eye Movement Sleep) என்பது கண் அசைவுத் தூக்கத்தைக் குறிக்கும்.  இந்தத் தூக்கத்தில் மூடிய இமைகளுக்குள் விழிகள் உருண்டபடி இருக்கும். கனவுகள் வருகிற தூக்கம் இது. 
‘நான் ரெம்’ தூக்கம் (NREM Sleep - Non Rapid Eye Movement Sleep) என்பது கண் அசையா தூக்கத்தைக் குறிக்கும். இது ஆழ்ந்த தூக்கம் உண்டாகிற நிலை. 
இதில் கனவுகள் வருவதில்லை. ஆனால் இந்த தூக்கம் வந்து ஒன்றரை மணி நேரம் கழித்து ஒரு சிலருக்கு மட்டும் பேய்க்கனவு வந்து அலறி எழுந்திருப்பார்கள்.

தூக்கம் குறையும்போது உடலின் நலம் பாதிக்கப்படுகிறது. இளம் வயதில் தேவையான அளவுக்குத் தூங்காதவர்களுக்கு நாற்பது வயதிலேயே ஞாபக மறதி வந்துவிடுகிறது. தேவையில்லாமல் கோபம் வருகிறது. எதிர்ப்படுபவர்களிடம் எல்லாம் எரிந்து விழுந்து அவர்களின் தூக்கத்தையும் கெடுத்து விடுகிறார்கள். ஒருவருக்குத் தொடர்ந்து தூக்கம் கெடும்போது பசி குறையும்.

 அஜீரணம் தலை காட்டும். உணவின் அளவு குறையும். உடல் எடை குறையும். பணியில் ஆர்வம் குறையும். பகல் முழுவதிலும் தூக்கக் கலக்கத்தில் இருப்பார்கள். 
சோர்வும் தலைவலியும் நிரந்தரமாகிவிடும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு போன்ற பிரச்னைகள் வரும் அபாயமும் உண்டு.
இன்றைய அவசர உலகில், பரபரப்பான வாழ்க்கைமுறையில், தூங்கும் நேரம் ஆறு மணி நேரத்துக்கும் கீழாகக் குறைந்து விட்டது. இழப்பு, சோகம், கடன் போன்றவற்றால் ஏற்படுகிற மனக்கவலை, மன அழுத்தம் போன்றவை இரவுத் தூக்கத்தைக் குறைக்கும். 
முதுமையில் ஏற்படுகிற மூட்டு வலி, ஆஸ்துமா, இதயநோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய், நெஞ்செரிச்சல், இரைப்பைப் புண், புராஸ்டேட் வீக்கம் போன்றவற்றாலும் தூக்கம் கெடும். நன்றாகத் தூங்கி எழுவதற்குத் தினமும் தூக்க மாத்திரையைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. 
உலக அளவில் கோடிக்கணக்கான பேருக்கு இப்படி செயற்கை வழியில்தான் தூக்கம் வருகிறது. 
இந்தத் தூக்க மாத்திரைகளில் பல வகை உண்டு. அவற்றில் முக்கியமானவை ஓபியம், லிப்ரியம், டயசிபாம், லோராசிபாம் ஆகியவை.

தூக்கம் வரவில்லையா? 
ஒரு காம்போஸ்/வேலியம் மாத்திரையைப் போட்டுக்கோ’’ என்று இலவச ஆலோசனை சொல்வார்கள். 
‘டயசிபாம்’ எனும் வேதிப்பெயர் கொண்ட மன அமைதி மாத்திரையின் வியாபாரப் பெயர்கள்தான் இவை. ஒரு விபத்து போல் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து இது.

பதினெட்டாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஓபியம், தூக்க மருந்தாகப் பல ஆண்டுகளுக்குப் பயன்பட்டது. ஆனால் அந்த மருந்துக்குப் போதை தரும் பண்பும் இருந்ததால் அதற்குப் பலரும் அடிமையாகிவிட்டனர். அதைத் தவிர்க்க மாற்று மருந்து தேவைப்பட்டது.

அந்தச் சூழலில் 1957ல் நியூஜெர்சியில் ரோச் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்த டாக்டர் லியோ ஸ்டெர்ன்பச் என்பவர் மன அமைதிக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கினார். இவர் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வேதிமூலக்கூறுகளின் அமைப்பை மாற்றி செயற்கையாக 40க்கும் மேற்பட்ட புதிய வேதிப்பொருள்களை தயாரித்தார். 
ஆனால் ஒன்றுகூட அவருக்குத் திருப்தி தரவில்லை. ஒன்றே ஒன்றை மட்டும் மீண்டும் பரிசோதித்துப் பார்ப்பதற்காக தனியாக எடுத்து வைத்தவர், அதன்பின் அதை மறந்துவிட்டார். 
பதினெட்டு மாதங்கள் கழித்து அவருடைய பரிசோதனை அறையை சுத்தம் செய்ய வந்தவர் ‘‘இந்த மருந்தை வெளியில் கொட்டி விடவா’’ எனக் கேட்டபோதுதான் அவருக்கு அப்படி ஒரு மருந்தை ஏற்கனவே தயாரித்து வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. அது கெட்டுப் போயிருக்கும், கொட்டி விடலாம் என்றுதான் முதலில் நினைத்தார். 
எதற்கும் அதை விலங்குகளிடம் பரிசோதித்துப் பார்க்க அரைமனதுடன் முய்னறார்.
 
அந்தப் பரிசோதனை முடிவு அவருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அந்த மருந்து சுண்டெலிகளுக்கு தூக்கத்தைத் தூண்டியது; ஆக்ரோஷமான பூனைகளை அமைதிப்படுத்தியது. 

உடனே அதை மறுபடியும் பரிசோதித்தார். முதலில் அவர் தயாரித்தபோது இருந்த வேதி அமைப்பு இப்போது மாறியிருந்தது. புதிய மூலக்கூறு அதில் காணப்பட்டது. 
இது ’குளோர்டயசிபாக்சைட்’ என்ற வேதிப்பொருளைச் சேர்ந்தது என்றும், மூளை நரம்பணுக்களில் ‘காபா’ (GABA) எனும் என்சைமைத் தூண்டுவதன் மூலம் இது தூக்கத்தை வரவழைக்கிறது என்றும் கண்டறிந்து அவர் அறிவித்தார். 
1960ல் இதை ’லிப்ரியம்’ என்ற வியாபாரப் பெயரில் ரோச் நிறுவனம் மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது.இதைத் தொடர்ந்து இந்த மருந்தின் வேதி அமைப்பையும் மாற்றி டயசிபாம், லோராசிபாம் என 40க்கும் மேற்பட்ட தூக்க மருந்துகளைத் தயாரித்தனர். 
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் செயல்பட்டு உலக மக்களின் தூக்கம் வராத கண்களுக்கு நல்ல தூக்கத்தைத் தந்துகொண்டிருக்கின்றன.
========================================================================================
இன்று,
மே-27.
 • இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இறந்த தினம்(1964)
 • ரஷ்ய ஜார் மன்னன் முதலாம் பீட்டர்  பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தான்(1703)

========================================================================================
தளபதி ஸ்டாலின் 

1953: பிறந்தது
1967: அரசியல் வாழ்க்கை 
தொடக்கம் .

1976: அவசர நிலை மிசா சட்டத்தின் 
கீழ் கைது
1982: தி.மு.க இளைஞரணி
தலைமை
1989,1996, 2001,2006 ஆண்டுகளில்
முறையாக தேர்வு
1996: சென்னை மாநகர மேயர்
2001: சென்னை மேயராக மீண்டும்
தேர்வு
2003: கழக
துணை பொதுசெயலாளர்
2006: உள்ளாட்ச்சி துறை மற்றும்
ஊரக வளர்ச்சித்துறை
அமைச்சர்
2008: கழக பொருளாளர்
2009: தமிழ்நாட்டின் துனை முதல்வர்
2011: கொளத்தூர் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்
2016 கொளத்தூர்‬ சட்டமன்ற
உறுப்பினர்
இது வரை தமிழகம் கானாத 89 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட எதிர் கட்சி தலைவர்.

=========================================================================================
கண்ணாடி ஐபோன்.
முழுக்க  கண்ணாடியால்  ஆன ஐபோன்களை 2017ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் விற்பனை  செய்ய திட்டமிட்டுள்ளது.
ஐபோன் என்றாலே பொதுவாக, பளபளப்பான வடிவமைப்பு, கண்ணாடிக்கு நிகரான தோற்றம்தான் . 
ஆனால், முற்றிலும் கண்ணாடியிலான ஐபோன்களை தற்போது ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் விதமாக, இந்த கண்ணாடி ஐபோன்கள் தயாரிக்கப்படுகின்றன.

இதற்கான பணிகளை, ஆப்பிள் நிறுவனத்தின் மேற்பார்வையில் கேட்சர் டெக்னாலஜி என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது. 

அந்நிறுவனமே, இந்த தகவலை உறுதி செய்துள்ளது. 
2017ம் ஆண்டில் கண்ணாடியிலான ஐபோன்கள் விற்பனைக்கு வரும் என்றும், தற்போது உள்ளதைப் போலவே கண்ணாடி ஐபோன்களின் விலையும் இயல்பாக இருக்கும் என்றும் கேட்சர் டெக்னாலஜி குறிப்பிட்டுள்ளது.
=========================================================================================
           தேர்தலில் தோற்று போன காரணங்களை வேட்பாளர்களிடம் கேட்டறிந்தார் விஜயகாந்த்.
 
                                      அரசியலில் இருந்து விலகுகிறேன் :- தமிழருவி மணியன்