"தூக்கம்" இருவகை
தூக்கம் என்பது உடலுக்கு ஓய்வு கொடுத்து மீண்டும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு மூளையானது தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் ஓர் இயற்கை வழி.
ஒருவருடைய உடல் உழைப்பு, தூங்கும் விதம், சுற்றுச்சூழல், உடல் நலம் மற்றும் மனநலத்தைப் பொறுத்து தூக்கம் அமைகிறது. பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம்,
தூக்கத்தில் ‘ரெம்’ தூக்கம், ‘நான் ரெம்’ தூக்கம் என்று இருவகை உண்டு.
நாம் தூங்கும்போது இந்த இரண்டும் மாறி மாறி அலைபோல வரும். ‘ரெம் தூக்கம்’ (REM Sleep - Rapid Eye Movement Sleep) என்பது கண் அசைவுத் தூக்கத்தைக் குறிக்கும். இந்தத் தூக்கத்தில் மூடிய இமைகளுக்குள் விழிகள் உருண்டபடி இருக்கும். கனவுகள் வருகிற தூக்கம் இது.
‘நான் ரெம்’ தூக்கம் (NREM Sleep - Non Rapid Eye Movement Sleep) என்பது கண் அசையா தூக்கத்தைக் குறிக்கும். இது ஆழ்ந்த தூக்கம் உண்டாகிற நிலை.
இதில் கனவுகள் வருவதில்லை. ஆனால் இந்த தூக்கம் வந்து ஒன்றரை மணி நேரம் கழித்து ஒரு சிலருக்கு மட்டும் பேய்க்கனவு வந்து அலறி எழுந்திருப்பார்கள்.
தூக்கம் குறையும்போது உடலின் நலம் பாதிக்கப்படுகிறது. இளம் வயதில் தேவையான அளவுக்குத் தூங்காதவர்களுக்கு நாற்பது வயதிலேயே ஞாபக மறதி வந்துவிடுகிறது. தேவையில்லாமல் கோபம் வருகிறது. எதிர்ப்படுபவர்களிடம் எல்லாம் எரிந்து விழுந்து அவர்களின் தூக்கத்தையும் கெடுத்து விடுகிறார்கள். ஒருவருக்குத் தொடர்ந்து தூக்கம் கெடும்போது பசி குறையும்.
அஜீரணம் தலை காட்டும். உணவின் அளவு குறையும். உடல் எடை குறையும். பணியில் ஆர்வம் குறையும். பகல் முழுவதிலும் தூக்கக் கலக்கத்தில் இருப்பார்கள்.
சோர்வும் தலைவலியும் நிரந்தரமாகிவிடும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு போன்ற பிரச்னைகள் வரும் அபாயமும் உண்டு.
இன்றைய அவசர உலகில், பரபரப்பான வாழ்க்கைமுறையில், தூங்கும் நேரம் ஆறு மணி நேரத்துக்கும் கீழாகக் குறைந்து விட்டது. இழப்பு, சோகம், கடன் போன்றவற்றால் ஏற்படுகிற மனக்கவலை, மன அழுத்தம் போன்றவை இரவுத் தூக்கத்தைக் குறைக்கும்.
முதுமையில் ஏற்படுகிற மூட்டு வலி, ஆஸ்துமா, இதயநோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய், நெஞ்செரிச்சல், இரைப்பைப் புண், புராஸ்டேட் வீக்கம் போன்றவற்றாலும் தூக்கம் கெடும். நன்றாகத் தூங்கி எழுவதற்குத் தினமும் தூக்க மாத்திரையைச் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது.
உலக அளவில் கோடிக்கணக்கான பேருக்கு இப்படி செயற்கை வழியில்தான் தூக்கம் வருகிறது.
இந்தத் தூக்க மாத்திரைகளில் பல வகை உண்டு. அவற்றில் முக்கியமானவை ஓபியம், லிப்ரியம், டயசிபாம், லோராசிபாம் ஆகியவை.
தூக்கம் வரவில்லையா?
ஒரு காம்போஸ்/வேலியம் மாத்திரையைப் போட்டுக்கோ’’ என்று இலவச ஆலோசனை சொல்வார்கள்.
‘டயசிபாம்’ எனும் வேதிப்பெயர் கொண்ட மன அமைதி மாத்திரையின் வியாபாரப் பெயர்கள்தான் இவை. ஒரு விபத்து போல் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து இது.
பதினெட்டாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஓபியம், தூக்க மருந்தாகப் பல ஆண்டுகளுக்குப் பயன்பட்டது. ஆனால் அந்த மருந்துக்குப் போதை தரும் பண்பும் இருந்ததால் அதற்குப் பலரும் அடிமையாகிவிட்டனர். அதைத் தவிர்க்க மாற்று மருந்து தேவைப்பட்டது.
அந்தச் சூழலில் 1957ல் நியூஜெர்சியில் ரோச் மருந்து நிறுவனத்தில் பணிபுரிந்த டாக்டர் லியோ ஸ்டெர்ன்பச் என்பவர் மன அமைதிக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கினார். இவர் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வேதிமூலக்கூறுகளின் அமைப்பை மாற்றி செயற்கையாக 40க்கும் மேற்பட்ட புதிய வேதிப்பொருள்களை தயாரித்தார்.
ஆனால் ஒன்றுகூட அவருக்குத் திருப்தி தரவில்லை. ஒன்றே ஒன்றை மட்டும் மீண்டும் பரிசோதித்துப் பார்ப்பதற்காக தனியாக எடுத்து வைத்தவர், அதன்பின் அதை மறந்துவிட்டார்.
பதினெட்டு மாதங்கள் கழித்து அவருடைய பரிசோதனை அறையை சுத்தம் செய்ய வந்தவர் ‘‘இந்த மருந்தை வெளியில் கொட்டி விடவா’’ எனக் கேட்டபோதுதான் அவருக்கு அப்படி ஒரு மருந்தை ஏற்கனவே தயாரித்து வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. அது கெட்டுப் போயிருக்கும், கொட்டி விடலாம் என்றுதான் முதலில் நினைத்தார்.
எதற்கும் அதை விலங்குகளிடம் பரிசோதித்துப் பார்க்க அரைமனதுடன் முய்னறார்.
அந்தப் பரிசோதனை முடிவு அவருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அந்த மருந்து சுண்டெலிகளுக்கு தூக்கத்தைத் தூண்டியது; ஆக்ரோஷமான பூனைகளை அமைதிப்படுத்தியது.
உடனே அதை மறுபடியும் பரிசோதித்தார். முதலில் அவர் தயாரித்தபோது இருந்த வேதி அமைப்பு இப்போது மாறியிருந்தது. புதிய மூலக்கூறு அதில் காணப்பட்டது.
இது ’குளோர்டயசிபாக்சைட்’ என்ற வேதிப்பொருளைச் சேர்ந்தது என்றும், மூளை நரம்பணுக்களில் ‘காபா’ (GABA) எனும் என்சைமைத் தூண்டுவதன் மூலம் இது தூக்கத்தை வரவழைக்கிறது என்றும் கண்டறிந்து அவர் அறிவித்தார்.
1960ல் இதை ’லிப்ரியம்’ என்ற வியாபாரப் பெயரில் ரோச் நிறுவனம் மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தது.இதைத் தொடர்ந்து இந்த மருந்தின் வேதி அமைப்பையும் மாற்றி டயசிபாம், லோராசிபாம் என 40க்கும் மேற்பட்ட தூக்க மருந்துகளைத் தயாரித்தனர்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் செயல்பட்டு உலக மக்களின் தூக்கம் வராத கண்களுக்கு நல்ல தூக்கத்தைத் தந்துகொண்டிருக்கின்றன.
========================================================================================
இன்று,
மே-27.
- இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இறந்த தினம்(1964)
- ரஷ்ய ஜார் மன்னன் முதலாம் பீட்டர் பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தான்(1703)
========================================================================================
தளபதி ஸ்டாலின்
1953: பிறந்தது
1967: அரசியல் வாழ்க்கை
தொடக்கம் .
1976: அவசர நிலை மிசா சட்டத்தின்
கீழ் கைது
1982: தி.மு.க இளைஞரணி
தலைமை
1989,1996, 2001,2006 ஆண்டுகளில்
முறையாக தேர்வு
1996: சென்னை மாநகர மேயர்
2001: சென்னை மேயராக மீண்டும்
தேர்வு
2003: கழக
துணை பொதுசெயலாளர்
2006: உள்ளாட்ச்சி துறை மற்றும்
ஊரக வளர்ச்சித்துறை
அமைச்சர்
2008: கழக பொருளாளர்
2009: தமிழ்நாட்டின் துனை முதல்வர்
2011: கொளத்தூர் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்
2016 கொளத்தூர் சட்டமன்ற
உறுப்பினர்
இது வரை தமிழகம் கானாத 89 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட எதிர் கட்சி தலைவர்.
=========================================================================================
முழுக்க கண்ணாடியால் ஆன ஐபோன்களை 2017ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
ஐபோன் என்றாலே பொதுவாக, பளபளப்பான வடிவமைப்பு, கண்ணாடிக்கு நிகரான தோற்றம்தான் .
ஆனால், முற்றிலும் கண்ணாடியிலான ஐபோன்களை தற்போது ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் விதமாக, இந்த கண்ணாடி ஐபோன்கள் தயாரிக்கப்படுகின்றன.
இதற்கான பணிகளை, ஆப்பிள் நிறுவனத்தின் மேற்பார்வையில் கேட்சர் டெக்னாலஜி என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
அந்நிறுவனமே, இந்த தகவலை உறுதி செய்துள்ளது.
2017ம் ஆண்டில் கண்ணாடியிலான ஐபோன்கள் விற்பனைக்கு வரும் என்றும், தற்போது உள்ளதைப் போலவே கண்ணாடி ஐபோன்களின் விலையும் இயல்பாக இருக்கும் என்றும் கேட்சர் டெக்னாலஜி குறிப்பிட்டுள்ளது.
=========================================================================================
தேர்தலில் தோற்று போன காரணங்களை வேட்பாளர்களிடம் கேட்டறிந்தார் விஜயகாந்த்.