மது விலக்கில் அடுத்தப்படி ?
படிப்படியான மது விலக்கு தனது முதல்படியாக 500 கடைகளை மூடுவதாக ஆரம்பமாகியுள்ளது.
அத்துடன் கடையின் விற்பனை நேரத்தை குறைத்துள்ளது ஜெயலலிதா அரசு.
இதன் மூலாம் இலக்கை அடைய முடியுமா?
500 கடைகளை மூடுவது இன்னமும் மாவட்ட ஆட்சியர்களிடம் பட்டியல் கேட்பது வரையிலான பணி வரைதான் வந்துள்ளது.
கடைகள் விற்பனை நேரம் குறைப்பால் 6% விற்பனை குறையும் என்று அரசால் கூறப்பட்டது.
ஆனால் நிலையோ வேறு.
12 மணிக்கு டாஸ்மாக் கடை திறப்புக்கு காலை 6 மணி முதலே காத்திருந்து கைகள் நடுங்க வாங்கிச்சென்ற குடிமக்களைப் பார்க்கையில் 30 மணி நேரம் திருப்பதியில் பக்தர்கள் காத்திருந்ததாக அன்றைய செய்திக்கும் அதற்கும் வித்தியாசம் இல்லை என்றுதான் உணர முடிந்தது.
இதனால் விற்பனையில் என்ன பாதிப்பு வந்திருக்கும்.?
இது முதல் நாள் நிகழ்வு.
ஆனால் அடுத்தடுத்த நாட்களில் காலையில் பழைய நிலையிலேயே மது அருந்து கூடங்கள் (பார் )திறந்து குடி மக்கள் பார்களில் அதிக விலையில் மது வாங்கி அருந்துவதைஅனேகமாக எல்லா கடைகளிலும் பார்க்க முடிந்தது.
ஆனால் மது கடைகள் மூடப்பட்டுதான் இருந்தன.
முதல் நாள் இரவிலேயே மதுப்பாட்டில்கள் பார்களில் வைக்கப்பட்டு,அல்லது பார் நடத்துபவர்களால் வாங்கி குவிக்கப்பட்டு வழக்கமான காலைகளில் அதிக விலைக்கு குடிமக்கள் ஏக்கம் தீர விற்கப்பட்டது.
இதை காவல்துறையோ ,கலால் அதிகாரிகளோ கண்டு கொள்ளவில்லை,தடுக்கவில்லை.
இதனால் விற்பனை 6% குறைவு என்பது இல்லாமல் போய்விட்டது.
மூடப்படும் கடைகளோ ஏற்கனவே உயர் நீதிமன்றத்தால் மூட வேண்டும் என்று ஆணையிடப்பட்டும் தமிழக ஜெயலலிதா அரசு மூடாமல் வைத்திருந்த நெடுஞ்சாலை ,பள்ளி,கோவில்கள் அருகே உள்ள மதுக்கடைகள்தான்.
இக்கடைகளை தாங்கள் உத்திரவிட்டும் ஏன் இன்னமும் மூடவில்லை என்று உயர் நீதிமன்றம் இரு முறை கண்டனம் தெரிவித்த மதுக்கடைகள்தாம்.
அந்த கடைகளும் எதிர்பார்த்த அளவு இல்லாமல் முதலுக்கு மோசமாக விற்பனை மிகக் குறைவாக உள்ள கடைகள் பட்டியல்தான் தற்போது உதவி ஆணையர் (கலால்),டாஸ்மாக் மேலாளர்கள் ,மாவட்ட ஆட்சியர்களால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பட்டியலிலும் குறைவான விற்பனைக்கடைகளுக்குதான் முதலிடமாம்.
அதனால் டாஸ்மாக் வரவுகளில் ஒன்றும் பாதிப்பு இராது என்பதுதான் இன்றைய கள நிலவரம்.
முதல் படி 500 கடைகள் மூடல்,விற்பனை நேரம் குறைப்பால் ஜெயலலிதா அரசுக்கு இன்றைய அளவில் டாஸ்மாக் வசூலில் பாதிப்பில்லை.
ஆனால் அடுத்தடுத்த படிகள் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.
ஜெயலலிதாவின் படிப்படியாக மது விலக்கில் அடுத்தப்படி ?
அடுத்தப்படியே இருக்குமா என்பதும் தெரியவில்லை.
இன்று,
மே-29.
- சர்வதேச அமைதி காப்போர் தினம்
- ஆஸ்திரிய-ஹங்கேரி பேரரசு அமைக்கப்பட்டது(1867)
- நைஜீரியா மக்களாட்சி தினம்(1999)
- எவரெஸ்ட் சிகரம் முதன் முதலில் தொடப்பட்ட தினம்(மே 29)
மனிதனின் கனவுகளுக்கு எல்லையே இல்லை என்று அழுத்தி சொன்ன எவரெஸ்ட் தொடுதல் நிகழ்ந்த தினம் இன்று தான்
உலகின் மிக உயரமான அந்த சிகரத்தை தொடுவதற்கான முன்னெடுப்புகள் நெடுங்காலமாக நடைபெற்றன. தொட பத்துக்கும் மேற்பட்ட முயற்சிகள் .கொஞ்சம் மரணங்கள் இதுதான் அதுவரைக்கும்
எவரெஸ்ட் நோக்கி போனவர்களின் கதை. உச்சிக்கு போக போக பிராண வாயு அளவு குறையும், எண்ணற்ற சிக்கல்கள் உருவாகும்.தலைவலி, ஞாபக மறதி, மயக்கம், பசி இழப்பு, உடல் செயல்பாடுகள்
ஒருங்கிணைப்பின்மை,மனப்பிறழ்வு கொஞ்சம் போனால் கோமா இதெல்லாம் வந்து சேரும்

ஜான் ஹன்ட் எனும் இங்கிலாந்து நபர் தலைமையில் பதினோரு பேர் கொண்ட குழு கிளம்பியது.அதில் ஒருவர் தான் எட்மன்ட் ஹிலாரி நியூசிலாந்து நாட்டில் பிறந்த எட்மன்ட் குட்டிப்பையனாக
படிப்பில் சுமார் தான்;கூச்ச சுபாவம் வேறு -பள்ளிக்கு போகும் பொழுது இரண்டுமணிநேர ரயில் பயணத்தில் அவர் படித்த சாகச கதைகள் அவரை வேறு கனவு உலகத்திற்கு சென்றது கூட்டி
போனது;அந்த கதைகளில் வரும் நாயகர்கள் போல சாகசங்கள் செய்ய குத்துசண்டை கற்றுக்கொண்டார் ;மலையேற்றம் என ஈடுபாட்டுடன் விஷயங்களை செய்தார் .

தேனீ வளர்ப்பில் வெயில் காலங்களில் ஈடுபட்டு அதில் வரும் வருமானத்தில் ஏறவே கடினமான சிகரங்களுக்கு நண்பர்களோடு போவார் .உலகப்போரில் ஈடுபட போய் தீக்காயங்களுக்கு உள்ளாகி
மீண்டு வந்தார் ;எவரெஸ்ட் சிகரத்தை எப்படியாவது விட வேண்டும் என ஆவல் கொண்டிருந்தார் .வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அச்சிகரம் செல்லும் பார்டர் திறக்கபபடும் அப்பொழுது அங்கு
போய் சேர்ந்தார் -உடன் நேபாளிய செர்பா மக்களுள் ஒருவரான டென்சிங் சேர்ந்து கொண்டார் .
போய் சேர்ந்தார் -உடன் நேபாளிய செர்பா மக்களுள் ஒருவரான டென்சிங் சேர்ந்து கொண்டார் .
நெருங்கிபழகிய இருவரும் முன்னேறினார்கள் ;கடுமையான சூழலில் ,பனி பள்ளங்களில் தப்பித்து சென்று சிகரத்தை 1953 இல் இதே நாளில் தொட்டார்கள் .காலை நான்கரை மணிக்கு எழுந்து
எல்லாரும் தூங்கிக்கொண்டு இருந்த பொழுது இருவரும் கிளம்பி போய் உச்சத்தை அடைந்தார்கள்.யார் முதலில் தொட்டார்கள் என இறுதிவரை சொல்லாமல் பெருந்தன்மையாக இருவரும் சேர்ந்தே
தொட்டதாக சொன்னார்கள் .அதற்கு பிறகும் தன் சாகசத்துக்கான தேடலை விடாமல் ஹில்லாரி தென் மற்றும் வட துருவங்களை தொட்டார் .

நேபாளில் ஹிமாலய அறக்கட்டளையை உருவாக்கி பல பழங்குடியினரின் மருத்துவ மற்றும் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க உதவினார் .எப்படி இப்படி சாதனைகள் செய்கிறீர்கள் என கேட்ட
பொழுது ,"இயல்பான எளியவன் நான் !புத்தகங்கள் படித்து மேகங்களில் மிதந்தவன் நான் .அசாதரணமான கனவுகளை கண்டு அசாதரணமாக ஊக்கத்தோடு உழைத்தேன் .சிம்பிள் !" என்றார் . மனிதனின்
கனவுகளுக்கு எல்லையே இல்லை என்று அழுத்தி சொன்ன எவரெஸ்ட் தொடுதல் நிகழ்ந்த தினம் இன்று

- பூ.கொ.சரவணன் ,
யூ டியூப் நிறுவனம் பலரும் பகிர்ந்து கொள்ளும் வீடியோக்களை வழங்கி வருகிறது.
இது தவிர முப்பரிமாண வீடியோக்கள், நேரடி நிகழ்ச்சிகளை 360 டிகிரியில் பயனாளர்கள் பார்க்கும் படி சேவைகளையும் தற்போது வழங்கி வருகின்றது.
இவற்றையெல்லாம் தாண்டி விளையாட்டு ரசிகர்களுக்காக புதிய வசதி ஒன்றினை யூ டியூப் அறிமுகம் செய்யவுள்ளது.
இதன்படி உலகெங்கிலும் உள்ள ஹேம் பிரியர்கள் யூடியூப்பில் இணைந்து நேரடியாக ஹேம் விளையாடி மகிழ முடியும்.
இப்படி விளையாடிக்கொண்டிருக்கையில் புதிய பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஒன்லைன் ஊடாக அவர்களுக்கு தெரியப்படுத்தும் வசதியும் தரப்படவுள்ளது.
வரும் ஜுன் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ள இவ் வசதியின் ஊடாக E3 2016 நிகழ்வும் காண்பிக்கப்படவுள்ளது.
இச் சேவையினை https://gaming.youtube.com/e3 எனும் இணையத்தள முகவரியின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
==========================================================================================