செவ்வாய், 30 ஜூலை, 2013

காங்கிரஸ் ஆட்சியும், ஊழல்களும் :


suran


 சுதந்திரமடைந்த பின்னரும் இந்தியா உயர் மட்ட ஊழல்கள் பலவற்றைக் கொண்ட வர லாற்றை கொண்டுள்ளது.
 பிரதான கட்சிகளாக அதிக காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆனாலும், சில காலம் ஆட்சியில் இருந்த இன்றைய பிரதான எதிர் கட்சியான பா.ஜ.க. ஆனாலும் இரண்டுமே ஊழல் வரலாற்றில் முன்னணியில் தான் உள்ளன.
காங்கிரஸ் ஆட்சிகால ஊழல் வரலாறு1960லேயே துவங்கிவிட்டது. அப்போது வெளிவந்த தர்ம தேஜா கடனுதவி ஊழல் ரூ. 22 கோடி அளவிற் கான ஊழல்.
 இன்றைக்கு நடைபெறும் ஊழல் களின் தொகையை ஒப்பிட்டு பார்த்தால் அது மிக மிக சிறிய தொகையாகத் தோன்றும். ஆனால் அது அன்றைக்கு நாடாளுமன்றத் தைப் புரட்டி போட்ட ஒன்று. இந்திரா காலத்தில் நகர்வாலா ஊழல் என்பதும் மிக வும், பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று.
அது வெறும் 60 லட்சம் அளவிலானது.
 மிகவும் பரபரப்பான எதிர்பார்ப்போடு ஆட்சிக்கு வந்த ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் 1987 ல் மிகவும் பிர பலமடைந்த போபர்ஸ் பீரங்கி ஊழல் இன் றைக்கும் பேசப்படும் பிரபலமான ஒன்று.
அதில் திருமதி சோனியாவின் உறவினர் குத் ரோச்சி சம்பந்தப்பட்டிருந்தும், அவர் கைதா காமல் அரசின் பாதுகாப்போடு நாட்டை விட்டு அனுப்பப்பட்டதும், அவர் குற்ற தொடர்ப்பு அம் பலமான பின்னரும் கூட சி.பி.ஐ. அவரைக் கைது செய்யாமல் சால்ஜாப்பு சொல்லி கடை சியில் அவரைக் கைது செய்யும் வாய்ப்புகளை யெல்லாம் கைவிட்டு, இறுதியில் அதையேக் காரணமாக் கூறி அவரை குற்ற வழக்கி லிருந்து விடுவித்ததும் மறக்க இயலாத உண் மைகள். தற்போது குத்ரோச்சி மரணத்தின் மூலம் அதன் அத்தியாயம் முடிவுக்கு வந்து விட்டது.1992ல் ஹர்ஷத் மேத்தா என்பவர் சம் பந்தப்பட்ட பங்கு பத்திர ஊழல் மிகவும் பிரபல மானது. இதில் சுமார் ரூ.500 கோடிக்கு மேல் ஊழல் நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அதற்கு பின்பலமாக இருந்தவர்கள் அனை வரும் தப்பிவிட்டனர்.
1996 சுக்ராம் தொலை தொடர்பு அமைச்சராக இருந்தபோது செய்த தொலை தொடர்பு ஊழலில் அவர் தண்ட னைக்கு உள்ளானார்.

suran
 2002ல் ரூ. 2000 கோடிக் கான முத்திரை தாள் மோசடி வெளி வந்து மிக பரபரப்பாக பேசப்பட்டு, சில நாட்களில் ஓய்ந்து போனது. பொதுவாக ஒன்றை ஒன்று மிஞ்சி வெளிவரும் பெரிய ஊழல்களால் முந்தைய ஊழல்களின் பரபரப்பு சிறிது நாட்களில் மங்கிப் போவது இந்திய அரசியலில் தொடர் நிகழ்ச்சியாகிவிட்டது.
2010 ல் வெளி வந்த 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் ஒரு பெரிய சூறாவளியையே ஏற்படுத்தி மலைக்க வைத்தது. 1,76,000 கோடி ரூபாய் என்பது யாரா லும் கற்பனை செய்ய முடியாத தொகையாக இருந்தது. அதில் அரசியல்வாதிகள், அதிகாரி கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் இணைந்து கூட்டணி அமைத்து நாட்டின் வளத்தை எப்படி கொள்ளை அடிக்க முடியும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.
உச்சநீதிமன்ற கிடுக்கிப்பிடியால் அமைச்சர் ராஜா பதவி இழந்ததோடு, சுமார் ஒரு ஆண்டு சிறையிலும் கழித்தார். கலைஞரின் மகள் கனிமொழி சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். தற் போது கூட அதன் முழு பரிமாணமும் வெளி வராமல் உள்ளன. வழக்கு என்னவாகும் என்பதும் புதிராகவே உள்ளது.
சாக்கோ தலைமையிலான நாடாளுமன்றக் குழு ராஜா வையோ, பிரதமர் மன்மோகன் சிங்கையோ விசாரிக்காமலேயே பிரதமருக்கு சம்பந்த மில்லை என்று கூறி தனது கடமையை முடித்துக் கொண்டுள்ளது. எதிர் கட்சி உறுப் பினர்களின் குரல் மறைக்கப்பட்டே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதை ஒட்டியே தான் 2010ல் ரூ.7000 கோடி அளவிற்கான காமன்வெல்த் விளை யாட்டு முறைகேடுகள், ஆதர்ஸ் வீட்டு வசதி ஒதுக்கீட்டு ஊழல் போன்றவைகளும் வெளி வந்துள்ளன. சுரேஷ் கல்மாடி எனும் காங் கிரஸ் எம்.பி. சில மாதங்கள் சிறையில் இருந் தார். இவையேல்லாம் புதிய தாராளமயக் கொள்கைகளும், உலகயமாக்கலும் ஊழலை எந்த அளவிற்கு வளர்த்தியிருக்கிறது என்ப தை வெளிப்படுத்துகிறது.
suran
 பிரதமரின் நேரடி பொறுப்பிலிருந்த நிலக்கரி படுகை ஒதுக் கீட்டு ஊழலில் ரூ.1,86,000 கோடி முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகி தற்போது சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்திடம் குட்டு வாங்கியுள் ளதைப் பார்த்தோம்.
அதுபோல் தான் பிரதமர் மன்மோகன் சிங்கின் நேரடி பொறுப்பிலுள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் எஸ் பேன்ட அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் சுமார் ரூ. 200,000 கோடி சம்பந்தப்பட்டுள்ளது. இதுவும் உச்சநீதிமன்றத்தின் ஆய்வில் உள்ளது.
இந்தியாவில் பிரதமராக இருக்கும் மன்மோகன் சிங் தாராளமயக் கொள்கையின் பிதாமகன் மட்டுமல்ல இந்தியாவின் செல்வ வளத்தையெல்லாம் பெருமுதலாளிகளும், கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களுக்குள் பங்கிட்டு, கொள்ளை அடிக்க உதவுவதிலும் முதன்மையானவராகவே உள்ளார் என்பது தற்போது வெளிவரும் முறைகேடுகளி லிருந்து புலனாகிறது. இந்த ஊழல்கள் எல்லாம் முதன்மை தணிக்கை அதிகாரியால் தான் வெளிக்கொண்டு வரப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 காங்கிரஸூக்கு எதிர்க்கட்சியாக இருந் தாலும் பா.ஜ.க.வும் தாராளமயக் கொள்கை களிலோ, ஊழல் நடவடிக்கைளிலோ சற்றும் மாறுபட்டதல்ல என்பதை தொடர்ந்து நிரூ பித்தே வந்துள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தான் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் பங்காரு லட்சுமண் கைநீட்டி லஞ்சம் பெறும் அரிய காட்சியை டெகல்கா அம்பலப்படுத்தியது. அதற்காக அவர் பதவி யை இழந்தது மட்டுமல்ல, தண்டிக்கப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்..
ஆளும் பா.ஜ.க ஆட்சியினர் ஆயுத பேரம் நடத்தி முறை கேடாக லஞ்சம் பெற்ற காட்சிகள் அனைவரை யும் ஸ்தம்பிக்க வைத்தது. வித்தியாசமான கட்சி என்னும் முழக்கத்தோடு ஆட்சிக்கு வந்தவர்கள் வெளிப்படுத்திய வித்தியாசமான ஒரே காட்சி அதுமட்டுமே. சவப்பெட்டி ஊழல் சந்தி சிரிக்க வைத்தது. தென் இந்தியாவில் தாமரை மலர்ந்து விட்டது என்று பெருமை யோடு பேசிக் கொண்ட பா.ஜ.க.வினர் எடி யூரப்பா நில ஒதுக்கீடு ஊழலில் சிக்கி பதவியை இழந்தது மட்டுமன்றி கட்சியி லிருந்து தானாக வெளியேறும் அளவிற்கு அந்த கட்சி அம்பலப்பட்டு போய் நின்றது.
பா.ஜ.க. ஆட்சியில் கர்நாடகத்தில் சுரங்க முறைகேடுகளும், அதில் அமைச்சர்களே தலைமை தாங்கியதும் கூட அந்த கட்சியின் நிலையை வெளிப்படுத்தியது. காங்கிரஸூக்கு மாற்றாக பா.ஜ.க. வர இயலாது என்பதை இந்த நிகழ்ச்சிகளெல்லாம் பறை சாற்றின.
suran
 சமீபத்தில் ரயில்வேத் துறை அமைச்சர் பன்சால் தன் பதவியை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரது மருமகன், அவர் வீட்டில் இருந்து கொண்டே ரயில்வே போர்டு உயர் அதிகாரியின் பதவி உயர்விற்காக ரூ. 2 கோடி பேரம்பேசி ரூ. 90 லட்சம் லஞ்சம் பெற்ற போது கையும், களவுமாக பிடி பட்டார். இத்தகைய உறவுகள் மாட்டுவதும், லஞ்சக் குற்றச்சாட்டுக்கு உள்ளாவதும், அதிகார மையங்களாகத் திகழ்வதும் புதிதல்ல. வாஜ் பாய் பிரதமராக இருந்த போது அவரது வளர்ப்பு மகளின் கணவர் ரஞ்சன் பட்டாச்சாரியா அதி கார மையமாகத் திகழ்ந்து பல முறைகேடு களில் ஈடுபடுவதாக ஏராளமான புகார்கள் வந்தன.
அது போல் தான் காங்கிரஸ் திருமதி சோனியாவின் மருமகன் வதேரா மீதும் இத்தகைய புகார்கள் வெளிவந்துள்ளன. இப்படி ஆட்சியாளர்களின் உறவு முறைகள் அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களை வளப் படுத்திக் கொள்ளும் ஏராளமான செய்திகள வந்து கொண்டே தான் உள்ளன.
மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஊழல்களிலிருந்து ஆட்சியாளர் கள் தப்பிக்க பல வித யுக்திகளையும் கை யாள்கிற போது பல நேரங்களில் நீதி மன்றங் களின் தலையீடு காரணமாகவே வழக்குகள் தொடரப்படுவதும், சி.பிஐ கடுமையான உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் செயல்பட வேண் டிய நிலை ஏற்படுவதையும், அதனால் தான் குற்றவாளிகள் பலரும் வழக்குகளில் சிக்கி யுள்ளதையும் நாம் பார்த்துக் கொண்டிருக் கிறோம்.
நீதி துறையிலும் கூட சில கறுப்பு ஆடுகள் இருக்கின்றன என்ற நிலை இருந் தாலும், அவைகளை களையெடுக்க உச்சநீதி மன்றம் உரிய முறையில் தலையீடு செய்வதில் லை என்ற உண்மை இருந்தாலும் கூட உச்ச நீதிமன்றங்களின் தலையீடுகள் ஊழலுக்கு எதிரானப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
suran

சமீபத்தில் இத்தகைய ஊழல் பேர்வழிகள் பதவிகளில் அமர்ந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதையும், அதை ஆளும் கட்சிகள் தங்க ளுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை யும் தடுக்கும் முகத்தான் இரண்டு முக்கிய தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. வழக்கறிஞர் லல்லி தாமஸ் என்பவர் தொடர்ந்து வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக் மற்றும் எஸ்.ஜே. முகோபாத்யாயா வழங்கிய தீர்ப்பில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கப்பட்ட உடனேயே மக்கள் பிரிதிநிதி களாக அவர்கள் நீடிக்க முடியாத நிலைமை வரும்.
 மேல் முறையீடு செய்யப்போவதாகக் கூறி எம்.பி.யாகவோ, எம்.எல்.ஏ. வாகவோ பதவியில் நீடிக்க முடியாது என்று கூறியுள் ளனர்.
 அரசியல் சட்டத்தில் உள்ள ஒரு பிரிவையே சட்ட விரோதம் என்றும் அறிவித் துள்ளனர். நாடாளுமன்றத்தில் தற்போது எம்.பிக்களாக உள்ள 543 பேரில் 162 பேர் மீது நீதிமன்றங்களில் கிரிமினல் வழக்குகள் உள்ளன. 1460 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அரசிய லில் கிரிமினல்கள் நுழைவதைத் தடுக்க கடு மையான சட்டங்கள் தேவையென்றாலும் கூட இந்த தீர்ப்பு அரசியல் பழிவாங்குதலுக்கு பயன் பட்டு, ஜனநாயக அமைப்புக்கே சீரழிவை ஏற்படுத்தி விடும் ஆபத்து உள்ளது.மேலும் மற்றொரு வழக்கில் உச்ச நீதி மன்றம் ஒருவர் குற்ற வழக்கில் கைது செய்யப் பட்டு நீதிமன்ற காவலிலோ அல்லது காவல் துறையின் பிடியிலோ இருந்தால் கூட அவர் கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. பொதுவாக இந்த தீர்ப்பு நல்ல நோக்கத்துக்காக அளிக்கப்பட்டிருந் தாலும் கூட இன்றைக்கு சி.பி.ஐ. போன்ற மத் திய புலனாய்வு அமைப்புகளே ஆளும் அர சின் பகடைக்காய்களாக பல நேரங்களிலும் பயன்படுத்தப்பட்டு, எதிர்க்கட்சியினரை வேட்டையாடவும், பொய் வழக்குகளில் சிக்க வைக்கவும் பயன்படுத்தப்படுகின்ற போது இத்தீர்ப்பு அவர்களுக்கு மிகவும் பயன்படும் ஒன்றாக அமைந்து விடும். மாநிலங்களில் காவல்துறையினர். எப்போதுமே ஆளும கட்சி யின் எடுபிடிகளாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
 குறிப்பாக ஒரு குறிப்பிட்ட எதிர் கட்சி வேட்பாளர் போட்டியிடாமல் தடுக்க காவல்துறையைப் பயன்படுத்தி ஒரு பொய் வழக்கை சூட்டி, கைது செய்து அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதையே தடுத்து விடலாம். பின்னர் அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று விடுதலையானாலும், குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் கூட ஆளும் கட்சியின் நோக்கம் நிறைவேறிவிடும். எனவே தான் மார்க்ஸிஸ்ட் கட்சி உள் ளிட்ட இடதுசாரி கட்சிகளும் இத்தீர்ப்புகள் குறித்த தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி யுள்ளன. 34 ஆண்டுகாலம் மேற்கு வங்க இடதுசாரி ஆட்சியில் தோழர்கள் ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சாரியா ஆகியோர் முதல்வர் களாக இருந்தபோதும் அவர்கள் மீதோ அவர் களது அமைச்சரவை சகாக்கள் மீதோ அடா வடி அரசியல் நடத்தும் மம்தாவால் கூட ஊழல் குற்றசாட்டு சுமத்த இயலவில்லை.
suran
 கேரளத் தில் 1957 ல் துவங்கி பல தடவை இடது ஜன நாயக முன்னணி ஆட்சிக்கு வந்து, தோழர்கள் இ.எம்.எஸ்., இ.கே.நாயனார், வி.எஸ்.அச்சு தானந்தன் ஆகியோர் முதல்வர்களாக ச் செயல்பட்ட போதும் எவ்வித ஊழல் குற்றச் சாட்டுக்கும் உள்ளாகவில்லை. திரிபுராவில் அதிசயம் ஆனால் உண்மை என்று தினமணி யால் புகழாரம் சூட்டப்பட்ட தோழர் நிருபன் சக்கரவர்த்தி துவங்கி இன்றை முதல்வர் மாணிக் சர்க்கார் வரை எந்த ஊழல் குற்றச் சாட்டும் இல்லை.
அரசியல் வழக்குகளைத் தவிர்த்து யார் மீதும் கிரிமினல் வழக்குகளும் இல்லை. எனவே மார்க்ஸிஸ்ட் கட்சிக்கு பயப்பட எதுவும் இல்லை. இருந்தாலும் இன் றைய இந்திய அரசியல் சூழ்நிலையில் ஆட்சிக்காக எத்தகைய பாதகமும் செய்ய தயாராக உள்ள கட்சிகளுக்கு இந்த தீர்ப்புகள் ஆயுதமாக மாறி விடக் கூடாதே என்ற கவலை ஜனநாயக சக்திகள் அனைத்துக்கும் உள்ளது.
 ஊழல் பேர்வழிகளைக் கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகை யில் ஊழல் கண்காணிப்பு ஆணையம், சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகளை சுயேட்சையான தாக மாற்றி, அதிக அதிகாரம் வழங்குவது, ஊழல் வழக்குகள் மற்றும் கிரிமினல் வழக்கு களை விரைந்து நடத்தி தண்டனை வழங்கு வதை உத்தரவாதப்படுத்துவது, முதன்மை தணிக்கை அலுவலர்களுக்கு உரிய பாது காப்பை உத்தரவாதப்படுத்துதல், சுவிஷ் நாட்டு வங்கிகளில் முடங்கி கிடக்கும் ஊழல் பணத்தை வெளிக்கொண்டு வந்து கைப்பற்று வது, தேர்தல் சீர்திருத்தங்களின் மூலம் தேர்த லில் பணத்தின் திருவிளையாட்டை தடுத்து நிறுத்துவதற்கான ஆக்க பூர்வமான நடவடிக் கைகள் போன்றவைகளே ஊழலையும், அரசி யலில் கிரிமினல்களின் ஆதிக்கத்தையும் ஒழிக்க உதவும்.

அனைத்து ஜனநாயக சக்தி களும் இதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர் வை ஏற்படுத்தி, அதற்கான வலுவான குரலை யும், இயக்கங்களையும் உருவாக்க குரல் கொடுப்பதுமே இன்றையத் தேவை.


                                                                                                                         --எஸ்.நூர்முகம்மது

 பீ போன் வைரஸ்

மிக வேகமாகப் பரவி, அதிக அழிவினை ஏற்படுத்தக் கூடிய பீ போன் (‘Beebone’ ) வைரஸ் இந்தியாவில் வேகமாகப் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏறத்தாழ 20 பெயர்களில் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் தங்குகிறது.
suran
இந்தியாவில் கம்ப்யூட்டர் வைரஸ்களைக் கண்காணிக்கும் Computer Emergency Response TeamIndia (CERTIn) என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
 இது ட்ரோஜன் வகை வைரஸ் என்றும், பயனாளரிடம் அவருக்கே தெரியாத வகையில், அவரின் அனுமதி பெற்று, மற்ற வைரஸ்களையும் கம்ப்யூட்டரில் பதிக்கும் தன்மை கொண்டதாக இது உலவுகிறது.
டிஜிட்டல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த வல்லுநர்கள், இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க, கூடுதல் பாதுகாப்பு வழிகளை மேற்கொள்ளுமாறு, கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். குறிப்பாக கம்ப்யூட்டரில் இணைத்து, எடுத்து பயன்படுத்தும் ஸ்டோரேஜ் சாதனங்களைப் பயன்படுத்துவதில் அதிகக் கவனம் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள ஆட்டோ ரன் வசதியினை முடக்கி வைப்பது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும்.
விண்டோஸ் சிஸ்டம் பைல்கள் அவ்வப்போது மேம்படுத்தப்பட வேண்டும்.
நம்பிக்கைக்கு சந்தேகம் தரும் இணைய தளங்களைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 மிக வலுவான பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம்களைப் பயன்படுத்த வேண்டும் எனவும் இவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
பீ போன் வைரஸுடன் இணைந்து வோப்பஸ் (Vobfus) என்ற வைரஸும் செயல்படுவதாக காஸ்பெர்ஸ்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒன்றை ஒன்று அழிக்கவிடாமல் காப்பாற்றும் தன்மை கொண்டுள்ளதால், இரண்டையும் தயாரித்த குழுக்கள் ஒருவருக்கொருவர் ஒரே தீய நோக்கத்துடன் இந்த வைரஸ்களைத் தயாரித்து அனுப்பி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
suran
பீ போன் வைரஸ் பல பெயர்களில் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டு, அவற்றின் பெயர்களும் தரப்பட்டுள்ளன. அவை
(Kaspersky), W32/Autorun.worm.aaeh!gen (McAfee), W32/VobFusBX (Sophos), Trojan horse ( Symantec), TrojanFBZZ! 41E0B7088DD9 (McAfee), Trojan. Win32.SelfDel.aqhh (Kaspersky), Trojan. Win32.Jorik.Fareit.qsl (Kaspersky), BeeboneFMQ! 039FA2520D97 (McAfee), W32.Changeup! gen40 (Symantec) and Worm.Win32.Vobfus.dxpf (Kaspersky).
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் அனைவரும் இந்த பெயர்களில் பைல்கள் தென்பட்டால் மிகவும் கவனமாகச் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
 மேலே, வைரஸின் பெயர்களைக் கண்டறிந்த ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்களின் பெயர்கள் அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ளன.
suran

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

உலகில் விற்பனைச் சந்தை குறித்து கருத்துக் கணிப்பு மற்றும் ஆய்வு நடத்தி வரும் இப்ஸாஸ் (IPSOS) என்னும் நிறுவனம், ஸ்மார்ட் போன் வழியே இணையத்தைப் பார்க்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, இதே வகையில் இயங்கும் அமெரிக்க மக்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம் என அறிவித்துள்ளது.
ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களில், 36 சதவீதம் பேர், 18 முதல் 29 வயதினராக இருக்கின்றனர்.
 சமூக தளங்கள் இளைஞர்களின் வாழ்வில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் இந்த அமைப்பு கண்டறிந்துள்ளது.
இந்தியாவில் இண்டர்நெட் பயன்படுத்தும் 11 கோடி பேர்களில், 6 கோடியே 20 லட்சம் பேர், பேஸ்புக் தளத்தினைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அறிவிக்கபட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
suransuran


சனி, 27 ஜூலை, 2013

வாக்களிப்பது உயிர் [போகும் ]கடமை?
மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, உள்ளாட்சி தேர்தல்களுக்கான அறிவிப்பு, சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே அங்கு பல்வேறு அரசியல்கலாட்டாக்கள் அரங்கேறின.திரினாமுல்  காங்கிரசார் தாங்கள் எப்படியாவது வெற்றி  பெற வெண்டும் என்று பல அட்டுழியங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
மாற்றுக் கட்சியினர் வேட்பு மனூவை தாக்கல் செய்ய விடாமல் காவல்துறையினர் துணையுடன் தடுத்து தாங்களே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவித்துக்கொண்டனர்.
இவர்கள் நடந்து கொள்ளும் முறையைப்பார்த்தால் தமிழகத்தில் இப்போது நடந்து முடிந்த ஊராட்சி,கூட்டுறவு தேர்தல்கள் போல் இரு க்கிறது அல்லவா?


தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் விஷயத்தில், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மேற்கு வங்க மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மீராவுக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
 ஒரு வழியாக, சுப்ரீம் கோர்ட் தலையீட்டின்படி, ஆறு கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தன.இடது சாரிகள் மட்டுமின்றி காங்கிரசாரும் தாக்கப்பட்டுள்ளனர்.இடது சாரி தொண்டர்கள் இதுவரி 8 பேர்களுக்கு மேல் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
எதிர் கட்சிகளை மட்டுமின்றி மக்களையும் கொடுமைக்குள்ளாக்கி வருகின்றனர் திரினாமுல் கட்சியினர்.
suran
கடைசி கட்ட தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது. ஜல்பய்குரி பகுதியில், விறுவிறுப்பான ஓட்டுப் பதிவு நடந்தது.
அப்போது, திரிணமுல் காங்., தொண்டர்கள் சிலர், மகேந்திர பர்மன், 65, என்பவரது வீட்டுக்கு வந்தனர். முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு, படுத்தபடுக்கையாக இருக்கும் அவரை, ஓட்டளிக்க அழைத்தனர்.
அவரின் மனைவி, "என் கணவரால், எழுந்து நடக்க முடியாது. மேலும், தற்போது கடுமையான வெயில் அடிக்கிறது.
எனவே, ஓட்டளிக்கும்படி, அவரை கட்டாயப்படுத்த வேண்டாம்' என, கெஞ்சினார். திரிணமுல் தொண்டர்கள், அதை ஏற்க மறுத்து விட்டனர்.மகேந்திர பர்மனை, கடும் வெயிலில் வலுக்கட்டாயமாக ஓட்டுச் சாவடிக்கு தூக்கி சென்று, ஓட்டளிக்க வைத்தனர். ஓட்டளித்து முடித்ததும், அவரை, அங்கேயே விட்டுச் சென்றனர்.
சிறிது நேரத்திலேயே, அவர், மயங்கி விழுந்து விட்டார்.அருகிலிருந்தவர்கள், மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர்,ஏற்கனவே இறந்து விட்டதாகதெரிவித்தனர்.
இந்த சம்பவம், ஜல்பய்குரி பகுதியில் வசிக்கும் மக்களிடையே, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 இதுகுறித்து, மகேந்திர பர்மனின் மனைவி கூறுகையில், ""என் கணவரால், எழுந்து நடமாட முடியாத நிலையில், அவரால் எப்படி ஓட்டளிக்க முடியும்? ஆனால், நாங்கள் கெஞ்சி கேட்டும், திரிணமுல் கட்சியினர், அதை பொருட்படுத்தவில்லை. அவர்கள தான், என் கணவர் இறந்தார்,'' என்றார்.

இதுகுறித்து, ஜல்பய்குரி பஞ்சாயத்து தேர்தலில், திரிணமுல் காங்., சார்பில் போட்டியிட்ட, சாகர் மொகோந்தோ கூறுகையில், ""நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி, ஓட்டளிக்க வைக்கவில்லை. எதிர்க்கட்சியினர், எங்கள் மீது, வீண் பழி போடுகின்றனர்,'' என்றார்.

இதற்கிடையே தேர்தல் மோதலில், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த, அப்துல் அஜீஸ் என்பவர், கொல்லப்பட்டார்.

வாக்களிப்பது உயிர் போகும் கடமை?
suran


--------------------------------------------------------------------------------------------------------------------------------------

விக்கிலீக்ஸ். புதிய கட்சி!
பல்வேறு நாடுகளின் அமெரிக்க தூதரகங்கள், தங்கள் நாட்டு அரசுக்கு ரகசிய அறிக்கை அளிப்பது வழக்கம்.
 இந்த அறிக்கைகளில் அரசியல் நிலவரங்கள், அமெரிக்காவுக்கு எதிரான விஷயங்கள் என்று பல தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.
மற்ற நாடுகளை பற்றிய மோசமான விமர்சனங்களும் இருக்கும்.
தூதரகங்களின் இந்த ரகசிய அறிக்கையை விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனால் அவரை கைது செய்ய அமெரிக்கா தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால், லண்டனில் உள்ள ஈகுவடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் அடைந்த அவர் கடந்த ஓராண்டாக அங்கேயே தங்கியுள்ளார். அவர் எப்போது வெளியே வந்தாலும், கைது செய்ய பொலிசார் தயார் நிலையில் உள்ளனர்.
suran
இந்நிலையில், தனது தாய்நாடான அவுஸ்திரேலியாவில் செனட் சபை தேர்தல் நடக்க உள்ளதால், ஊழல் கறைபடியாத வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து செனட் சபைக்கு அனுப்பப் போவதாக அசாஞ்ச் தெரிவித்திருந்தார்.
இதற்காக லண்டனில் உள்ள ஈகுவடார் அலுவலகத்தில் இருந்தபடி நேற்று அவுஸ்திரேலியா தலைநகர் மெல்போர்னில் வீடியோகான்பரன்ஸ் மூலம் புதிய கட்சியை அசாஞ்ச் தொடங்கி வைத்தார்.
மேலும், தனது கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள 7 வேட்பாளர்களின் பெயர்களை அவர் அறிவித்தார். தான் விக்டோரியா தொகுதியில் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார்.
அசாஞ்ச் வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 2 பேரும் இடம்பெற்றுள்ளனர். மேற்குவங்கத்தை சேர்ந்தவர்களுக்கு பிறந்தவரான பினோய் கம்ப்மார்க், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு பிறந்தவரான சுரேஷ் ராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

வெள்ளி, 26 ஜூலை, 2013

காசில்லாமலேயே சாப்பிடலாம்......?கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.27, நகர்ப்புறங்களில் ரூ.33 செலவு செய்து வாழுகிற தகுதி படைத்தவர்கள் ஏழைகள் அல்ல என்று வறுமைக்கோடுக்கு மத்திய திட்டக்கமிஷன் இலக்கணம் வகுத்துள்ளது.இது பற்றிய அறிவிப்பு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அனல்பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், மும்பையில் ஒருவர் ரூ.12–க்கு முழுச் சாப்பாடு சாப்பிட முடியும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜ் பாப்பர் எம்.பி. கூறி, எரிகிற தீயில் எண்ணெய் வார்த்திருக்கிறார்.
மற்றொரு காங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூத், டெல்லியில் ஜூம்மா மசூதி அருகில் 5 ரூபாய்க்கு சாப்பாடு சாப்பிடலாம் எனக்கூறி கொளுந்து விட்டு எரிகிற தீயில் மேலும் எண்ணெய் வார்த்துள்ளார்.
ஆனால் ஜூம்மா மசூதி பகுதியில் டீக்கடை நடத்தி வருகிற ஒருவர், ’’ ரஷீத் மசூத் அந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் மறுபடியும் ஜூம்மா மசூதி பக்கம் வந்து செல்லட்டும்’’ என கூறி இருக்கிறார். டெல்லி டீக்கடைகளில் கிடைக்கிற மலிவு விலை ரொட்டியின் விலையே ரூ.3 என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபற்றி பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘ மும்பையில் 12 ரூபாயில் முழு சாப்பாடு சாப்பிடலாம், 5 ரூபாயில் டெல்லியில் சாப்பிடலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளதை ஏற்றுக்கொள்ளவில்லை.
 உணவு பாதுகாப்பு அவசர சட்டம் அமலுக்கு வந்தபின்னர், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 150 மக்கள் நலத்திட்டங்களில் முதியோர் பென்ஷன் திட்டம் மட்டுமே வறுமைக்கோடுக்கு கீழே உள்ளவர்களுக்கு அமல்படுத்தப்படுகிற திட்டமாக உள்ளது.

அடுத்த ஆண்டு முதியோர் பென்ஷன் திட்டமும் அந்த வரையறையில் இருக்காது’’ என்றார்.
இந்த நிலையில் ரூ.12–க்கு, ரூ.5–க்கெல்லாம் சாப்பாடு கிடைக்கிறது என்ற காங்கிரசாருடன் போட்டி போட்டுக்கொண்டு, மத்தியில் ஆளும் காங்கிரஸ் மந்திரிசபையில் மரபுசாரா எரிசக்தித்துறை மந்திரியாக உள்ள தேசிய மாநாடு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா, ஒரு ரூபாயில் ஒருவர் சாப்பிட முடியும் என நேற்று கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:–
நீங்கள் விரும்பினால் ஒரு ரூபாயிலோ அல்லது 100 ரூபாயிலோ உங்கள் வயிற்றை நிரப்பிக்கொள்ளலாம். எவ்வளவு என்பது நீங்கள் சாப்பிட விரும்புவதைப் பொறுத்து அமைகிறது.
நாங்கள் ஏழைகளின் வாழ்க்கையை மாற்றி அமைப்பதற்காக உழைக்கிறோம். எனவே அவர்கள் நன்றாக சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழலாம், நாடும் முன்னேற்றம் அடையும்.இவ்வாறு அவர் கூறினார்.
பருக் அப்துல்லா முன்பு கூறியவர்களை கேலி செய்ய கூறினாரா?அல்லது தனது காங்கிரசு ஜால்ராவை தட்டியுள்ளாரா?
இந்தியாவின்  நடுத்தர ,அடித்தட்டு மக்கள்  வாழ்வை விட்டு விலகியுள்ள இவரை போன்ற அரசியல்வாதிகள் இப்படி பேசுவது காரணம் என்ன வென்று தெரியவில்லை.
suran
இந்தியாவில் ஏழ்மை இல்லை.37 ரூபாயில் ஒருவர் தின வருமானம் பெற்றாலே குடும்பம் நடத்தி விடலாம் என்பதை நிருபிக்கத்தான் இந்த அரசியல் கூத்தாடிகள் கேலிக் கூத்து   காண்பிக்கிறார்கள்.

நம்மை போல் உழைத்து அந்த பணத்தில் சாப்பிட்டால்தானே இவர்களுக்கு விலைவாசி தெரியும்.நக்கலும் குறையும்.
ஊரை அடித்து உலையில் போட்டு அதில் தின்று கொழுத்தவர்களுக்கும்,அன்னியர்களிடம் கையூ ட்டு பெற்று நாட்டை விற்றுக்கொண்டிருப்பவர்களுக்கும் மக்களின் -  நாட்டின் நிலவரம் எங்கு புரியும்.?
ஆனால் இது போன்ற பேச்சுகள் காங்கிரசை மக்களிடம் விட்டு விலக்கி விடும்.தமிழகத்தில் முன்பு பக்தவத்சலமும்,2005களில் தமிழகத்தில் ஜெயலலிதாவும் பேசிய பேச்சுகள் தான் அவர்களின் பதவியை அடுத்த தேர்தல்களை பறித்தது.

எலிக்கறி சாப்பிடுவது உடலுக்கு நல்லது என பக்தவச்சலமும்,தஞ்சை மாவட்டத்தில் வறட்சியால் எலிக்கறி சாப்பிடுகிறார்கள் என்ற போது ஜெயலலிதா அவர்கள் தங்கள் ஆசைக்காக சாப்பிடுகிறார்கள்.அப்படி ஒன்றும் வறுமை இல்லை என்றது இப்போது நினைவுக்கு கொண்டுவர அரசியல் வியாதிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்துடன் விட்டால் பரவாயில்லை.
"கையில் காசில்லாமலேயே சாப்பிடலாம்.என்ன பிச்சை எடுக்க வேண்டும் "என்று சரத் பவரோ ,திக் விஜய் சிங்கோ சொல்லி தொலைக்காமல் இருந்தால் போதும்.

இல்லை என்றால் அடுத்த வாக்கு பிச்சை இவர்களுக்கு கிடைப்பது அரிதாகி விடும்.

என்ன செய்வது காங்கிரசும்,அதன் கூட்டணி கட்சிகளும் 2-ஜி,3-ஜி,நிலக்கரி,கெலிகாப்டர் ,போன்று பலவழிகளிலும் கோடிகளை லட்சக்கணக்கில் குவித்து வாழ்கிறார்கள்.

சாதாரணமக்களின் வாழ்வு அவர்களுக்கு அன்னியமாகி விட்டது.
1000 ரூபாய் நோட்டுகள் அவர்களின் காதலி குறையத்தான் பயன்படும் நிலை.
நம் போன்றவர்கள் தயவு அடுத்த வாக்கு பதிவின் போது மட்டும் போதும்.

இவர்கள் அதுவரை இப்படியும் சொல்வார்கள்.

இன்னமும் சொல்வார்கள்.
suran
 ---------------------------------------------------------------------------------------------------------------------------------

2 ரூபாய் காசோலை
---------------------------------------------

டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையாக ரூ. 2 மற்றும் ரூ.3 என்று எழுதப்பட்ட காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.
அரியான பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாயிகளின் பயிர்கள் கடும் சேதத்திற்குள்ளானதை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் அரசாங்கத்திடம் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் எங்களுக்கு ஒரு தொகையை தந்து உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.
இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரியான அரசானது விவசாயிகளுக்கு 2 ரூபாய் மதிப்பிலான காசோலையை வழங்கியுள்ளது.
suran
ஆனால் இந்த காசோலையானது எங்களது வருமையை அசிங்கப்படுத்துவது போன்று உள்ளது என கூறி விவசாயிகள் இந்த காசோலையினை நிராகரித்துவிட்டனர்.
இது குறித்து அரியான அமைச்சர் புபைன்டர் சிங் ஹோடா கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எம்.ஏல்.ஏ.கள் மற்றும் பிற அதிகாரிகள் இணைந்து இந்த தொகையினை வழங்கியுள்ளோம் எனவும் இந்த இழப்பீட்டுத் தொகையானது சரியான தொகையாகும் என கூறியுள்ளார்.
"அரியானா அரசாங்கம் கொடுத்துள்ள இந்த காசோலை எங்களை இழிவுபடுத்தும் "
என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------\

suran


‘வரலாறு காணா விலைவாசி உயர்வு’

 - எனும் வாக்கியம் எக்காலத் திற்கும் பொருந்தும் போலும்! அந்த அளவுக்கு முந்திய காலத்தைவிட அதற்கு அடுத்த காலத்தில் அது உயருகிறதே தவிர, குறைந்தபாடாய் இல்லை. இப்போதும் இதே நிலைதான்.
 ‘உயர்ந்தவன் யார் ?
கிராமவாசியா- நகரவாசியா?
 இல்லை,
 'விலைவாசி’!'
எனும் கந்தர்வனின் கவிதை நித்திய உண்மையாகிப் போனது.
நல்ல பொன்னி அரிசி விலை கிலோ ரூபாய் ஐம்பதைத் தாண்டிவிட்டது.பருப்பு விலை நூறை எட்டிவிட்டது.நல்லெண்ணைய் விலை லிட்டர் இருநூற்றி ஐம்பதை நெருங்கிவிட்டது. இப்படியெல்லாம் ஆகும் என்று சில ஆண்டுகளுக்கு முன்புகூட யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.விலைவாசி உயருகிறது என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால் இந்த வேகத்தில் அது எகிறும் என்று நினைத்த தில்லை. 
முந்திய காலங்க ளுக்கும் தற்போதைய காலத் திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான் & இந்தப் படுவேகம் தான்.
நுகர்வோர் விலைவாசிப் புள்ளியானது ஆண்டுக்கு 9%க்கும் மேலே உயர்ந்து வருகிறது. அதிலும் உணவுப் பொருட்களின் விலையானது கிட்டத்தட்ட 11 % உயர்ந்து வருகிறது. “ இது மிகவும் அதிகம்தான்” என்று ரிசர்வ் வங்கி கவர்னர் (7.6.13 இல்) ஒப்புக் கொண்டிருக்கிறார். நாட்டின் நிதியமைச்சரான ப.சிதம்பரமும் இதை ஒப்புக்கொண்டுவிட்டு, குடுகுடுப்பைக்காரன் நல்ல சேதி தருவது போல, “ராபி விளைச்சல் நல்லதாக அமையும்போது உணவுப் பொருள் விலைவாசி குறையும்” என்று (6.6.13. இல்) சொல்லியிருக்கிறார். ஆக, ஆட்சியாளர்கள் ஏதும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. இயற்கையாகப் பார்த்துக் கண் திறந்தால் தான் உண்டு!
இந்த நாட்டின் தற்போதைய அவல நிலையே இதுதான். “ஆன்லைன்” வர்த்த கம் எனப்பட்ட ஊக வணிகம் உள்ளிட்ட சகல மோசமான சக்திகளையும் கட்ட விழ்த்துவிட்டு,அவை சந்தையைத் தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டிவைப்பதை ஆட்சி யாளர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்களது “தலையிடாக்” கொள்கை வினோதமானது. முரட்டுக் காளைகளை அவிழ்த்து விடுவார்கள்.
ஆனால் அவற்றை மீண்டும் பிடித்துத் தொழுவத்தில் கட்டிப்போட மாட்டார்கள். மோசமான சக்திகளை அனுமதித்தார்களே,அது தலையிடும் கொள்கையல்லவா?“ஆன்லைன்” வர்த்தகத்திற்கு அவர்கள் அனுமதி தராமலிருந்திருந்தால் விலைவாசி இவ்வளவு கொடுமையாக உயர்ந்திருக்காது.
இதற்கு இன்னொரு காரணம், பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை இஷ்டம் போல உயர்த்திக் கொள்ள எண்ணை நிறுவனங்களை அனுமதித்தது.சக்கரங்கள் சுழன்றால்தான் பொருள்கள் இடம் மாறும்.அவை சுழல எண்ணை வேண்டும்.அவற்றின் விலையை இஷ்டத்திற்கு உயர்த்திக் கொள்ளலாம் என்றால்,அவை சுமந்து செல்லும் சகல பொருட்களின் விலையும் உயரத்தான் செய்யும்.குறிப்பாக டீசல் விலை உயர்வு லாரி வாடகையையும் ரயில் கட்டணத்தையும் உயர்த்துகிறது.
கேட்டால் ‘உலகச் சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்தால் என்ன செய்ய முடியும்?’ என்று அப்பாவிகள் போலக் கேட்கிறார்கள்.உண்மை என்னவென்றால், அது உயர்ந்தாலும் உயராவிட்டாலும் எண்ணை மீது அரசு விதித்துள்ள அநியாய வரிகளே இவ்வளவு அதீத விலைக்கு அடிப்படைக் காரணம்.வரிகளைக் குறைத்தாலே போதும் எண்ணை விலை குறைந்துபோகும். அதற்குத் தயாராயில்லை அரசு.
இப்போது இன்னொரு விவகாரம் வந்து சேர்ந்திருக்கிறது.ரூபாயின் மதிப்பு வீழ்ந்து விட்டதால், இறக்குமதிக்கு அதிக செலவாகிறது என்கிறார்கள். அது உண்மைதான். சில ஆண்டுகளுக்கு முன்புகூட ஐம்பது ரூபாய் கொடுத்தால் ஓர் அமெரிக்க டாலர் கிடைத்தது. இப்போது கிட்டத்தட்ட 59ரூபாய் கொடுத்தால்தான் அது கிடைக்கும்!
இந்தியாவின் “நாணயம்” படு மோசமாக வீழ்ந்துவிட்டது! ஆனால், இதற்கு யார் பொறுப்பு? இந்த நாட்டின் ஏழைபாழைகளா? சாட்சாத் ஆட்சியாளர்கள்தாம் பொறுப்பு. அவர்கள்தாம் தாராளமயம் & தனியார்மயம் & உலகமயம் எனச் சொல்லி இந்தியப் பொருளாதாரத்தை அமெரிக்கப் பொருளாதாரத்தோடு கோர்த்து விட்டவர்கள்.
வளர்ச்சி உலகமயமானால் நல்லது.ஆனால் தளர்ச்சி உலகமயமாகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவானது தனது நெருக்கடியை “உலகமயம்”என்ற பெயரில் இந்தியா போன்ற நாடுகளின் தலையில் சுமத்தி வருகிறது.மிக அண்மை யில் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட சரிவுக்குக்கூட அமெரிக்க அரசின் நிதி நடவடிக்கைகளும்,அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளுமே காரணம் என்கின்றன பத்திரிகைகள் (டைம்ஸ் ஆப் இன்டியா, 19.6.13).
அமெரிக்காவின் இத்தகையத்தாக்கு தல்களை எதிர்கொள்ளும் வல்லமை மிக்கதாக, சொந்தக் காலில் நிற்கக் கூடியதாக இந்தியப் பொருளாதாரத்தை உருவாக்காதது யார் குற்றம்?
ஆட்சியாளர்களது குற்றமே என்பதில் சந்தேகம் வேண்டாம். அமெரிக்கா & ஐரோப்பாவின் பொருளாதாரச் சேட்டை களை எல்லாம் எதிர்த்து முறியடித்து நிற்க பக்கத்தில் உள்ள சீனாவால் முடிகிறது என்றால், நம்மால் ஏன் முடியாது? விஷயம், அத்த கைய சுயசார்பு பொருளா தாரக் கொள்கைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான்.
அதற்கு ஆட்சி யாளர்கள் தயாராக இல்லை.இவர்கள் கரடுதட்டிப் போனவர்கள், சகலத்திற்கும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பெருமுதலாளிகளையே நம்புகிறார்கள். ஏழை மக்கள் தரும் வரிப்பணத்தை எடுத்து இதே பெருமுதலாளிகளது கார்பரேட் நிறுவனங்களுக்கு மானியங்களாகக் கொடுத்து,அவர்கள் காப்பாற்றட்டும் இந்தியாவை என்று கையைக் கட்டி நிற்கிறார்கள். அப்படித் தரப்படும் மானியம், வரிச்சலுகைகள் மட்டும் வருடத்திற்கு கிட்டத்தட்ட ஐந்துலட்சம் கோடி ரூபாய்!
இது இந்திய அரசினுடைய வரவு&செலவு திட்டத்தில் உள்ள நிதிப்பாற்றாக்குறையாகிய அதே ஐந்து லட்சம் கோடி ரூபாய்க்குச் சமம்.அதை வெட்டி இதைச் சரிசெய்தால் விலைவாசி குறையும்.அல்லது அந்தத் தொகையைக் கொண்டு மத்திய அரசே களத்தில் இறங்கினால் எத்தனையோ வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த முடியும்.அதனால் வெகு மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்து விலைவாசி உயர்வை அவர்க ளால் எதிர்கொள்ள முடியும்.இரண்டும் செய்யாமல் நாட்டைப் பெரும் கார்பரேட் நிறுவனங்களின் கொட்டடியில் கட்டிப் போட்டு விட்டார்கள், பாவிகள்.
தனியார் துறையே கூடாது, அதன் பங்களிப்பே தேவையில்லை என்பதன்று எனது வாதம். அதை மட்டுமே ஓர் அரசு நம்பியிருப்பதுதான் நாட்டின் அவலம் என்கிறேன்.தனியார் துறையின் செயல் பாட்டைக் கண்காணித்துக் கொண்டே, பொதுத்துறையின் செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்கிறேன்.
தற்போது அரசானது வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலிருந்தும் வாபசாகிக் கொண்டிருக்கிறதே,அது கூடாது என்கிறேன். ‘பொதுநல அரசு’ எனும் மகத்தான கோட்பாட்டைக் கைவிடு கிறதே, அதை வேண்டாம் என்கிறேன்.
அரசாங்கம் என்றால் மக்களிடம் என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது?அது சாலை போடும், பேருந்துவிடும், மருத்துவமனை கட்டும், மருந்து தரும், பள்ளிக்கூடம் கட்டும், கல்வி கொடுக்கும், குழாய் அமைக்கும், குடி தண்ணீர் தரும் & இப்படித்தான் நினைப்பு இருந்தது. இவற்றை ஒவ்வொன்றாய்க் கழட்டிவிட்டு விட்டது அரசு.சாலைபோட்டு காசு அடிக்கும் வேலை தனியார் கம்பெனி களுக்குத் தரப்பட்டுவிட்டது.
அரசு மருத்துவமனைகள் கவலைக்கிடமான நிலையில் உள்ளன. தனியார் மருத்து வமனைகள் கொழிக்க கண்ஜாடை காட்டப்படுகிறது. கல்வி இலாகாவானது சரஸ்வதியிடமிருந்து பிடுங்கப்பட்டு லட்சுமியிடம் கொடுத்தாகிவிட்டது.
இதிலே இப்போதைய உச்சம் குடிநீர் விநியோகமும் தனியார் வசம் போய்ச் சேர்ந்தது. சமீபத்தில் சென்னையில் குடிநீர் விநியோக நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியதும் மக்கள் தவித்துப் போய்விட்டார்கள். அப்போது தான் தெரிந்தது மாநகரத்தார் குடிநீருக்கு ஆட்சியாளர்களை நம்பவில்லை,தனியார் நிறுவனங்களைத்தான் நம்பியிருக்கிறார்கள் என்பது.
ஒரு லிட்டர் பச்சைத் தண்ணீரின் விலையும்,பதப்படுத்தப்பட்ட அரை லிட்டர் பாலின் விலையும் ஒன்று. சுத்தமான குடிநீருக்கு அவ்வளவு கிராக்கி, அவ்வளவு விலை!
“யுனிசெப்” நிறுவனத்தின் கணக்கின் படி இந்திய மக்களில் கால்வாசிப் பேருக்குத்தான் அவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் குடிநீர் கிடைக்கிறது.மற்றவர்கள் எல்லாம் வெளியிடங்களிலிருந்து அதை எடுத்து வருகிறார்கள். இதில் பெண்களுக்குத்தான் ஏகப்பட்ட சிரமங்கள், அவமானங்கள் என்கிறது அதனுடைய அறிக்கை.
பத்து லட்சம் பேருக்கும் அதிகமா னோர் வாழும் இந்திய நகரங்கள் 35.இதில் எந்தவொரு நகரமும் இடைவிடாது குடிநீர் விநியோகம் செய்வதில்லை.சில மணி நேரம் அது வந்தாலே ஆச்சரியம்.
சுத்தமான குடிநீரின் அவசியம் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை.அசுத்த நீரின் வழியாகவே பல வியாதிகள் பரவுகின்றன.இந்தியாவில் வயிற்றுப் போக்கு நோயின் காரணமாக மட்டும் தினசரி 1600 பேருக்கும் மேலானோர் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வியாதிக்கு மூலகாரணம் அசுத்த நீர். இருநூறு பேரைச் சுமந்து செல்கிற ஜம்போஜெட் விமானங்கள் எட்டு தினசரி விழுந்து நொறுங்கினால் எத்தனை சாவு நேரிடுமோ அத்தனை! அப்படி விமானங்கள் விழுந்தால் இந்த நாட்டில் எவ்வளவு களேபரம் எழும்!
ஆனால் தினசரி இத்தனை ஏழைபாழைகள் செத்துக் கொண்டிருப்பது பற்றிக் கவலைப்படுவார் இல்லை!
இதிலே கண்மாய்கள் வறண்டு போகின்றன என்பது மட்டுமல்ல, கண்மாய்களே காணாமல் போகின்றன! மதுரையில் எனது வீடு உள்ள பகுதியில், நான் அதைக் கட்டும்போது பக்கத் திலிருந்த கண்மாய் இப்போது இல்லை.
விளைவு என்னவென்றால், இந்தக் கோடைப்பருவத்தில் நிலத்தடி நீர் வற்றிப் போய்விட்டது. பணத்துக்கு லாரியில் தண்ணீர் வாங்கி மேலே தொட்டியில் நிரப்புகிறோம் அந்தப் பகுதியில் உள்ள சகலரும்.
நிலமும்,நிலத்தடி நீரும் வரன் முறையின்றிப் பயன்படுத்த,பெரும் தலைவர்களுக்கும், பெரும் கம்பெனிகளுக்கும் அனுமதி அளிக்கப்படுவதால் வற்றாத பூமித்தாயின் மார்பும் வற்றிப் போனது.குடிநீருக்காக மட்டுமல்லாது குளிக்கிற நீருக்காகவும் தனியார் நிறுவனங்களை நம்பியிருக்க வேண்டிய அவலநிலை நாட்டில் வந்துவிட்டது.

இவ்வளவும் எதனால்?அரசு தனது பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதால்,அரசு அரசாக இல்லாமல் ஆகிவருவ தால்.
போகிற போக்கைப் பார்த்தால்,சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கிற வேலையைக் கூட தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு “அக்கடா”என்று இருக்கலாம் என்று நினைப்பார்கள் போலும்!

இந்தத் தனியார்மயச் சிந்தனை யிலிருந்து விடுபட்ட, அரசின் பொறுப்பை உணர்ந்து, மக்கள் நலனுக் காகத் தேவையான தலையீடுகளைச் செய்கிற கொள்கைகள் நடப்புக்கு வரவேண்டும்.

அப்படி வந்தாலொழிய விலைவாசி கட்டுக்குள் வரப்போவதில்லை, தண்ணீருக்கும் தனியார் நிறுவனங்களை நம்புகிற நிலை மாறப் போவதில்லை.

வருகிற காலம் மக்களவைத் தேர்தல் காலம். மத்தியில் புதிய ஆட்சி பற்றி, பு-தியவர்களின் ஆட்சி பற்றிப் பேசப்படுகிறது. 
 அதற்கும் முன்னால் பேசப்பட வேண்டிய விசயம், புதிய, நல்ல மாற்றுக் கொள்கைகள் பற்றி.

மனிதர்களைப் பற்றிப் பேசுவது எளிது,கொள்கைகளைப் பற்றிப் பேசுவது கடினம்.

 ஆனாலும், என்றைக்கு தேசம் அந்தக் கடின வேலையை மேற்கொள்கிறதோ,

அன்றைக்கே அதற்கு விடிவு!
                                                                                                                                           -அருணன் 
suran
 suran

வியாழன், 25 ஜூலை, 2013

ஏழைகளே இல்லை.


suran

மன்மோகன் சிங் வாயை திறந்து பேசுவதில்லை.
பேச ஆரம்பித்தால் பொய்.
பொய்யைத்தவிர வேறில்லை.
பிரதமர் மன்மோகன் சிங்கை தலைவராகவும், மான்டேக் சிங் அலுவாலியாவை துணைத் தலைவராகவும் கொண்ட மத்திய திட்டக்கமிஷன், நேற்று முன்தினம், புள்ளிவிவர அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
 அதில், நாட்டில் ஏழைகள் எண்ணிக்கை குறைந்து விட்டத.
 மக்களின் வருமானம் அதிகரித்து விட்டது என புள்ளிவிவரங்கள் இடம்பெற்றிருந்தன.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகள் நூற்றுக்கு பதினோரு பேர் மட்டும்தான்.
 கிராமத்தில் ஏழைகள் விகிதம் நூற்றுக்கு 15 பேர் என்றால், நகரத்தில் 7 பேர்தான் ஏழைகள்!
டெண்டுல்கர் கணிப்புமுறையில், 2004-05-ஆம் ஆண்டில் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்த ஏழைகள் எண்ணிக்கை 40 கோடி. 2011-12-ஆம் நிதியாண்டில் ஏழைகள் எண்ணிக்கை 27 கோடியாகக் குறைந்துவிட்டது; அதாவது 13 கோடி பேர் வறுமைக் கோட்டை தாண்டிக் குதித்துவிட்டார்கள்!
இந்தக் கணிப்புமுறையில், ஐந்து நபர்கள் உள்ள ஒரு குடும்பம், நகர்ப்புறத்தில்மாதம்  தலா ரூ.1,000 சம்பாதிக்கும் என்று வைத்துக் கொண்டால், (மாதம் ரூ.5,000) அவர்கள் வறுமைக் கோட்டைத் தாண்டிக் குதிக்கும் வல்லமை பெற்றுவிட்டார்கள் என்று பொருள்.
கிராமப்புறங்களில் தலா மாதம் ரூ.816 சம்பாதிக்கும் குடும்பம் (மாதம் ரூ.4,080), ஏழைக் குடும்பம் என்ற நிலையிலிருந்து விடுபட்டுவிடுகிறது.
இந்தக் கணக்கீடு தனிநபர் நுகர்வுத் திறன் அடிப்படையிலானவை. இந்த நுகர்வுப் பொருள் என்பது பெரும்பாலும் அடிப்படை உணவுப் பொருளாகப் பட்டியலிடப்பட்டு, அவற்றை வாங்கும் சக்தி உள்ளவர்களை ஏழையர் பட்டியலில் இருந்து நீக்கி - அல்லது மேலுக்கு உயர்த்தி - விடுவதுதான் இந்த கணக்கீடுகளின் வேலையாக இருக்கிறது.
suran
டெண்டுல்கர் கணிப்புமுறை சரியல்ல என்று பல தரப்பிலும் கருத்து கூறப்பட்டு, ரங்கராஜன் தலைமையிலான ஒரு குழுவை திட்டக் கமிஷன் நியமித்துள்ள நிலையில், அந்தக் கமிஷன் 2014-ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் (ஒருவேளை மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு) தனது கணிப்புமுறை ஆலோசனைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், இவ்வாறு ஓர் அறிக்கையை மத்திய அரசு வெளியிடுவதன் நோக்கம் தங்களது ஆட்சிக் காலத்தில் விலைவாசி உயர்வு, நாணய மதிப்புக் குறைவு, வேலையில்லாத் திண்டாட்ட அதிகரிப்பு, நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளுக்கு நடுவிலும் வறுமை ஒழிக்கப்பட்டிருக்கிறது என்கிற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தத்தான் என்று தோன்றுகிறது.
இந்தியாவில் மூன்றுவேளை உணவு உண்பவன் ஏழை கிடையாது என்பதுதான் அடிப்படை கணிப்புமுறை என்றால், பிச்சைக்காரர்களில் பலரும்கூட வறுமைக்கோட்டைத் தாண்டி அப்பால் விழுந்துவிடுவார்கள். இந்தியாவில் ஏழ்மை என்பதை இன்றைய தேதியில் வெறும் நுகர்வுப்பொருள் தொடர்புடையதாகக் காண்பது சரியல்ல.

நகரத்தில் ரூ.5,000-க்கு அதிகமாக சம்பாதிக்கும் 5 பேர் கொண்ட குடும்பம் வறுமைக் கோட்டுக்குள் வராது. டெண்டுல்கர் கணிப்புமுறை அதைத்தான் நிறுவுகிறது.
 அப்படியானால் 5 பேரும் வேலை செய்கிறார்கள் என்று கருதத் தேவையில்லை, இது சராசரிதான் எனப்படுகிறது.
இருப்பினும்கூட, ஒரு குடும்பத் தலைவன், தலைவி இருவர் மட்டுமே வேலைசெய்து, நகர்ப்புறத்தில் மாதம் ரூ.15,000 சம்பாதித்தாலும் (நகரப்புறத்தில் ஒரு சித்தாள் கூலி நாளுக்கு ரூ.300) குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலை.அதுதான் ஏழ்மை.
அரசுப் பள்ளியில் பெரும்பாலும் தரமான கல்வியில்லை என்று தெரிந்திருந்தும் ஒருவேளை மதிய உணவுக்காகக் குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பும் குடும்பங்கள் - நகரம் என்றாலும் கிராமம் என்றாலும் - அனைத்துமே ஏழைக் குடும்பங்கள்தானே?
எந்த நகரத்தில் வீட்டு வாடகை - அது குடிசை என்றாலும்கூட - ரூ.2,000க்குக் குறைவாக இருக்கிறது?
suran
 நகரத்தின் பாலங்களுக்கு அடியிலும், நடைபாதையிலும் படுத்துறங்குபவர்களை விடுங்கள். மாதம் 3,000 ரூபாய் கொடுத்து நாற்றமடிக்கும்  குடிசைகளிலும், தாற்காலிகக் கட்டடங்களிலும் வசிப்பவர்களை வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களாகக் கருத முடியுமா என்ன?
என்னதான் சேவையுணர்வுடனான சிகிச்சையோ, சுகாதாரமான சூழலோ, தரமான மருந்துகளோ இல்லாமல் போனாலும்கூட வேறு போக்கிடம் இல்லாமல், அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைபெறும் அனைத்துக் குடும்பங்களும் ஏழைகள் அல்லாமல் வேறென்ன?
மன்மோகன் சிங்,சோனியா காங்கிரசு அரசு மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறது.இரு நாட்களுக்கு முன்னர்தான் பண வீக்கம் பற்றி மன்மோகன் சிங் கவலை தெரிவித்தார்.இப்போது இந்தியாவில் ஏழைகளே இல்லை என்று புள்ளி விபரங்களை வெளியிடுகிறார்.
இவர்கள் வாயை திறந்தாலே புள்ளி விபரப் பொய்கள் தான் குதித்து நாடெங்கும் ஊர்வலம் வருகிறது.அந்நிய மூலதனத்தால் இந்தியா எங்கோ பொய் விடும் என்றார்கள்.அந்நிய மூலதனம் வந்து சென்றதால்தான் இன்றைய பணமதிப்பு வீழ்ச்சி.
சில்லறை விற்பனையில் அன்னியர் வந்தால் விவசாயிகளுக்கும்,நாட்டிற்கும் நல்லது என்கிறார் மன்மூகன் சிங்.ஆனால் அன்னியர்களுக்குத்தானெ நல்லது என்கிறது நடமுறை .
மாதம் 10 லட்சத்துக்கு மேல் அரசிடம் சம்பளம்,படிகள்,சலுகைகளைப் பெற்றுகொண்டு மக்களுக்கு சேவை செய்யும் இவர்கள் 1000/- மட்டும் பெற்றுக்கொண்டு வாழ்ந்து காட்டுவார்களா?[அதுவே கிராமம் என்றால் 816/-]
அப்படி மாண்டேக் சின்கும்,மன்மோகன் சிங்கும் வாழ்ந்து காட்டி விட்டால்.நாமும் இந்தியாவில் ஏழைகளே இல்லை என்று ஏற்றுக்கொள்வோம் .அவர்களை திட்டியதற்கு காலில் விழுந்து மன்னிப்பும் கூறுகிறோம்.!


suran

புதன், 24 ஜூலை, 2013

ஸ்டெம் செல்


suran


நம் உடலில் உள்ள பாகங்கள் நோய்கள் மற்றும் விபத்துகளால் பாதிக்கப்படும்போது   உதவுபவை ஸ்டெம் செல்கள்தான்.
புற்றுநோய், மாரடைப்பு, அல்சீமர்ஸ், எய்ட்ஸ் உள்ளிட்ட பல நோய்களுக்கான உயிர் காக்கும் சிகிச்சைகள் தொடங்கி, உடல் பாகங்களுக் கான மாற்று பாகங்களை  சோதனைக்கூடத்தில் உற்பத்தி செய்வது வரையிலான பல அதிச யங்களை நிகழ்த்தி வருகின்றன ஸ்டெம் செல்கள்.  உடலின் எல்லா வகையான உயி ரணுக்களையும், உற்பத்தி செய்யும் திறனுள்ள  கரு ஸ்டெம் செல்கள் களின் ஊற்றான கருக் களை சிதைக்காமல், கருஸ்டெம் செல்களை உற்பத்தி செய்ய முடியாது.
இதனால் கருத விர்த்த உடலின் இதர பகுதிகளில் உள்ள ஸ்டெம்செல்களைக் கொண்டு உடலின் பல்வேறு வகையான உயிரணுக்களை உற்பத்தி செய்வதும், தோல் உயிரணுக்கள் உள்ளிட்ட பல உயிரணுக்களில் இருந்து ஸ்டெம் செல்களை உருவாக்கியபின் அவற்றை சிகிச்சைகளுக்கு பயன்படுத்துவதுமான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுவாரசிய மாக, தாய்ப்பால் சுரக்கும் மார்பக திசு மற்றும் தாய்ப்பாலில் கரு ஸ்டெம் செல்களைப் போன்ற ஸ்டெம்செல்கள் இருக்கின்றன எனும் ஆச்ச ரியமான அறிவியல் உண்மையை கண்டுபிடித் திருக்கிறார் மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர்கள் பொடெய்னி ஹசியா டோவ்.
இதுவரை புரதங்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின்களின் களஞ்சியம் என்று எண்ணப்பட்டு வந்த தாய்ப்பாலில் ஸ்டெம் செல்களும் இருக்கின்றன.என்பதை உறுதி செய்துள்ளது இந்த ஆய்வு. 
கருஸ்டெம் செல்களுக்கு  நிகரான ஸ்டெம்செல்கள் தாய்ப்பாலிலும் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இனி கருக்களை சிதைத்துத்தான் ஸ்டெம் செல்களை எடுக்க வேண்டும் என்ற நடைமுறைச் சிக்கலுக்கு டாட்டா சொல்லி விடலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் 70 சதவிகித பெண்களின் தாய்ப்பாலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டுள்ள தாய்ப்பால் ஸ்டெம்செல்களில், கரு ஸ்டெம் செல்களில் உள்ள பல மரபணுக்கள்  செயல் படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. 
முக்கியமாக, சோதனைக்கூடத்தில் வளர்க்கப்பட்ட இந்த தாய்ப்பால் ஸ்டெம்செல்கள், எலும்பு, நரம்பு, இதயம், மற்றும் கணைய உயிரணுக்களாக வளர்ந்து, பின் அந்தந்த தசைகளாகவும் வளர்ச்சி அடைந்தன என்பது குறிப்பிடத் தக்கது.
இன்னும் சுவாரசியமாக, சில தாய்ப்பாலில் உள்ள உயிரணுக்களில் சுமார் 30 சதவிகிதம் உயிரணுக்கள் ஸ்டெம் செல்களாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
குரங்குகள் மற்றும் எலிகளின் மீதான ஆய்வுகளில், இத்தகைய தாய்ப்பால் ஸ்டெம் செல்கள் ரத்தத்தில் சென்று கலப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அது சரி, இந்த தாய்ப்பால் ஸ்டெம்செல் களால் என்ன பயன் ?  
தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளின் உடலுக்குள் செல்லும் தாய்ப்பால் ஸ்டெம்செல்கள், குழந்தை களின் உடல் பாகங்களின் வளர்ச்சிக்கு உதவக்கூடும் என்கிறார் ஆய்வாளர் ஹாசியா டோவ்.
தாய்ப்பால் ஸ்டெம்செல்கள் மீதான மேலதிக ஆய்வுகள் மூலம் அவற்றிலிருந்து உருவாகும் பல்வேறு வகையான உயிரணுக் கள், ஸ்டெம்செல் சிகிச்சைகளுக்கு தகுதியானவை என்பது முதலில் நீருபிக்கப்பட வேண்டும்.
 அதன் பிறகு, தாய்ப்பால் ஸ்டெம்செல்களைக் கொண்டு, சிதைந்துபோன இதய தசைகளை மீண்டும் வளர்த்தெடுப்பது, நரம்புச் சிதைவு நோய்களுள் ஒன்றான அல்சீமர்ஸ் போன்ற வற்றிற்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு மருத்துவ முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில், கரு ஸ்டெம் செல்களுக்கு நிகரான வளர்ச்சி திறனுள்ள ஸ்டெம் செல்கள் என்றால் அவை விந்தகம் மற்றும் சூலகம் ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கும் என்றே எண்ணப்பட்டு வந்தது ஆனால் தற்போது, அத்தகைய ஸ்டெம்செல்கள் தாய்ப்பால் சுரக்கும் மார்பகதிசு, எலும்பு மஜ்ஜை உள்ளிட்ட உடலின் இதர பகுதிகளிலும் இருப்பது ஆதாரப்பூர்வமாக நீரூபிக்கப்பட்டுள்ளது.
ஆக, இதுவரை குழந்தைகளின் வளர்ச் சிக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தாய்ப்பால், இனி உயிர்காக்கும் பல ஸ்டெம்செல் சிகிச்சை களுக்கும், பயன்படப்போகிறது என்பது மகிழ்ச்சியான செய்திதான்.
suran
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
புற்றுநோய் தரும் "பயோக்லிட்டசோன்'
-----------------------------------------------------------

"பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளும் நீரிழிவு நோயாளிகளுக்கு, சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுவதாக சில மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
அதே சமயம், குறைந்த செலவில் கிடைத்த இம்மாத்திரைகள், நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை, கட்டுப்படுத்தி வந்தன

"பயோக்லிட்டசோன்' (Pioglitazone) வகை மாத்திரைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், தங்களுக்கான மாத்திரைகள் கிடைக்காமல், நீரிழிவு நோயாளிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
நடுத்தர வயது மற்றும் வயோதிகர்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோய்க்கு, பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனங்களின், நூற்றுக்கணக்கான மாத்திரைகள், சந்தையில் உள்ளன. இவற்றில், "பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகள், மருத்துவர்களால் அதிகம் பரிந்துரைக்கப்பட்டு வந்தன.
suran
 இந்நிலையில், "இவ்வகை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்வதால், நோயாளிகளுக்கு, சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுகிறது' என, சில மருத்துவர்கள் கூறி வந்தனர். இதையடுத்து, சந்தையில் விற்கப்பட்டு வந்த, 30க்கும் மேற்பட்ட, "பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகள் விற்பனைக்கு, மத்திய அரசு, கடந்த மாதம், 18ம் தேதி, தடை விதித்தது.
இந்த தடை உத்தரவை உடனடியாக அமல்படுத்த கோரி, மாநில மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்ககம், மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு மருந்து வினியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கம் உள்ளிட்டோருக்கு, கடந்த வாரம், "நோட்டீஸ்' அனுப்பியது. இதையடுத்து, தங்களுக்கான மாத்திரைகள் கிடைக்காமல், நீரிழிவு நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

 நீரிழிவு நோய்க்கு, சந்தையில், நூற்றுக்கணக்கான மாத்திரைகள் உள்ளன. தற்போது, தடை விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட வகை மாத்திரையை, உட்கொண்டு வந்த நோயாளிகள், மருத்துவரின் பரிந்துரைப்படி, மாற்று வகை மாத்திரைகளை உட்கொள்ளலாம்.
"பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளும் நீரிழிவு நோயாளிகளுக்கு, சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுவதாக சில மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
அதே சமயம், "குறைந்த செலவில் கிடைத்து வந்த இம்மாத்திரைகள், நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை, சிறப்பாக கட்டுப்படுத்தி வந்தன' என்ற கருத்தும், மருத்துவர்கள் மத்தியில் நிலவுகிறது.
"பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகளின் பக்க விளைவுகள் குறித்து, மருத்துவர்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் நிலவி வருவதால், இம்மாத்திரைகள் மீதான தடை விரைவில் நீக்கப்படும் என, எதிர்பார்க்கிறோம்.
suran
இம்மாத்திரையின் தன்மை குறித்து, பல மருத்துவர்கள் அறிந்திருக்கவில்லை. பெரும்பான்மையான நீரிழிவு நோயாளிகளின் பயன்பாட்டில் இம்மாத்திரை உள்ளதால், இது குறித்து வாய் திறக்கவும், சில டாக்டர்கள் தயங்குகின்றனர். எனவே, அனுபவம் வாய்ந்தவர்கள் ஒன்றிணைந்து, இம்மாத்திரை குறித்து, முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.

நோய்க்கான மருந்து, மாத்திரைகளும், பலகட்ட பரிசோதனைகளுக்கு பின் தான், விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில், 10 ஆண்டுகளாக விற்பனையில் இருந்த, "பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகளால், நோயாளிகளுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய்
வருவதாக கூறி, இதன் விற்பனைக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கணக்கில் இம்மாத்திரைகளை உட்கொண்ட நீரிழிவு நோயாளிகள் மத்தியில், புற்றுநோய் அச்சம் ஏற்பட்டுள்ளது.
suran
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

சர்க்கரை நோய் 
உள்ளவர்கள் கவனிக்கவும்:
 கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியாக  பொன்னிறமாக வறுத்து தனித் தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு விடும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
suran


செவ்வாய், 23 ஜூலை, 2013

கறுப்பு ஜுலை-30ஆண்டு.

'நான் இறந்த பின்பு எனது இரு கண்களையும் ஒரு தமிழனுக்குக் கொடுங்கள். மலரப் போகும் தமிழீழத்தை நான் அந்த இரு கண்களாலும் பார்க்க வேண்டும்"

ஆனால் மண்டைகள் பிளக்கப்படுகின்றன. வயிறுகள் கிழிக்கப்படுகின்றன; கை, கால்கள் வெட்டப்படுகின்றன; ஆணுறுப்புகள் அறுக்கப்படுகின்றன. தமிழீழத்தைக் காண தன் தன் கண்களை இன்னொருவனுக்கு வழங்கும்படி கேட்டுக் கொண்ட குட்டிமணியின் கண்கள் தோண்டப்பட்டு புத்தரின் காலடியில் போடப்படுகின்றன.
 
குட்டிமணி தங்கத்துரை, ஜெகன் உட்பட 34 தமிழ் இளைஞர்கள் அங்கு சிதைக்கப்பட்ட பிணங்களாக விழுந்து கிடக்கின்றனர்.
 
1983 ஆம் ஆண்டு ஜூலை 23 இலங்கை வரலாற்றில் கறுப்புத்தினம் இரத்தக் கறைபடிந்த நாள். பேரின வாதிகள் மிருகங்களாக மாறித் தமிழர்களை வேட்டையாடிய கொடுமை மிகுநாள். ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொலையுண்ட 29 ஆவது நிறைவு ஆண்டு.

இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983 ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று இன்றுடன் 30 வருடங்களாகின்றன.
ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள்.
தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன.
தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
கலவரத்தின் தாக்கம் இன்றும் தொடருகிறது.
வீதிகளில் வாகனங்கள் மறிக்கப்பட்டு தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடித் தேடி கலகக்கரார்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

பழிக்கு பழி : -

பலர் பலியில் முடிந்தது

யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியில் 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி நள்ளிரவுக்குச் சற்று முன்னதாக இராணுவத்தினர் பயணம் செய்த வாகனங்களின் மீது விடுதலைப்புலிகள் நடத்திய வழிமடக்குத் தாக்குதலில் 13 இராணுவத்தினர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்கள்.
ஆயுத மோதல்கள் சிறிய அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தக்காலப்பகுதியில் ஒரே தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த மேலும் இரண்டு படைச்சிப்பாய்கள் பின்னர் மரணமடைந்ததையடுத்து, இந்தத் தாக்குதலில் இறந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருந்தது. ஆயினும் இந்தச் சம்பவத்தில் உடனடியாகக் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரே பொதுவாக இதில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.

தூண்டப்பட்ட உணர்வுகள்

இறந்த இராணுவத்தினருடைய சடலங்களுக்கு கொழும்பு பொரல்லையில் உள்ள கணத்தையில் இறுதிக்கிரியைகள் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதனை உறவினர்களும், அவர்களைச் சேர்ந்தவர்களும் விரும்பவில்லை. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இது பின்னர் கலவரமாக வெடித்தது.
suran
இக்கலவரத்தின் காரணமாக பலர் வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் இழந்தனர்

ஏரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதைப்போன்று யாழ்ப்பாணத்தில் பௌத்த பிக்கு ஒருவரை உயிரோடு எரித்துவிட்டர்கள் என்றும், கொழும்பில் தாக்குதல் நடத்துவதற்காக விடுதலைப்புலிகள் வந்துவிட்டார்கள் என்றம் காட்டுத் தீ போன்று பரப்பப்பட்ட வதந்தியையடுத்து, கொழும்பு நகரின் பல இடங்களிலும் ஏனைய பல நகரங்களுக்கும் கலவரங்கள் பரவின.
இந்தக் கலவரங்களில் பலர் வெட்டிக்கொல்லப்பட்டார்கள். சில இடங்களில் குடும்பமாகத் தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
400 தொடக்கம் 3000 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
ஆயினும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம் என்றே கூறப்படுகின்றது.

சிறையிலும் தாக்குதல்

suran
நகரப்பகுதிகளில் மட்டுமல்லாமல் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
இலங்கையின் வரலாற்றில் மிகமோசமான சிறைக்கலவரமாக சிறைச்சாலைப் படுகொலையாக இது பார்க்கப்படுகின்றது.
பின்னாளில் பல அரசியல் திருப்பங்களுக்கு வித்திட்டிருந்த இந்த வன்முறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றே பாதிக்கப்பட்ட பலரும் கூறுகின்றார்கள்.
இந்த வன்செயல்கள் காரணமாக சிங்களவர்கள் மற்றும் தமிழர்களுக்கிடையில் இனரீதியாக ஏற்பட்டிருந்த பிளவை சீர்செய்வதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைககளும் பின்னர் வந்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்படவில்லை என்கிற விமர்சனங்கள் இன்றளவும் இருக்கின்றன.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த வன்முறைகள் குறிப்பிட்ட ஓர் இனத்திற்கு எதிரான அழிப்பு நடவடிக்ககையாகவே இலங்கைத் தமிழ் மக்களால் 
இன்றும் கருதப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மலத்தை கையில் எடுத்து,
--------------------------------------
'சாக்லேட்' மனித வெடிகுண்டுகள்,
---------------------------------------------------------
suran
suran