வாக்களிப்பது உயிர் [போகும் ]கடமை?




மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, உள்ளாட்சி தேர்தல்களுக்கான அறிவிப்பு, சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே அங்கு பல்வேறு அரசியல்கலாட்டாக்கள் அரங்கேறின.திரினாமுல்  காங்கிரசார் தாங்கள் எப்படியாவது வெற்றி  பெற வெண்டும் என்று பல அட்டுழியங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
மாற்றுக் கட்சியினர் வேட்பு மனூவை தாக்கல் செய்ய விடாமல் காவல்துறையினர் துணையுடன் தடுத்து தாங்களே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவித்துக்கொண்டனர்.
இவர்கள் நடந்து கொள்ளும் முறையைப்பார்த்தால் தமிழகத்தில் இப்போது நடந்து முடிந்த ஊராட்சி,கூட்டுறவு தேர்தல்கள் போல் இரு க்கிறது அல்லவா?


தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் விஷயத்தில், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மேற்கு வங்க மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மீராவுக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
 ஒரு வழியாக, சுப்ரீம் கோர்ட் தலையீட்டின்படி, ஆறு கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தன.இடது சாரிகள் மட்டுமின்றி காங்கிரசாரும் தாக்கப்பட்டுள்ளனர்.இடது சாரி தொண்டர்கள் இதுவரி 8 பேர்களுக்கு மேல் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
எதிர் கட்சிகளை மட்டுமின்றி மக்களையும் கொடுமைக்குள்ளாக்கி வருகின்றனர் திரினாமுல் கட்சியினர்.
suran
கடைசி கட்ட தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது. ஜல்பய்குரி பகுதியில், விறுவிறுப்பான ஓட்டுப் பதிவு நடந்தது.
அப்போது, திரிணமுல் காங்., தொண்டர்கள் சிலர், மகேந்திர பர்மன், 65, என்பவரது வீட்டுக்கு வந்தனர். முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு, படுத்தபடுக்கையாக இருக்கும் அவரை, ஓட்டளிக்க அழைத்தனர்.
அவரின் மனைவி, "என் கணவரால், எழுந்து நடக்க முடியாது. மேலும், தற்போது கடுமையான வெயில் அடிக்கிறது.
எனவே, ஓட்டளிக்கும்படி, அவரை கட்டாயப்படுத்த வேண்டாம்' என, கெஞ்சினார். திரிணமுல் தொண்டர்கள், அதை ஏற்க மறுத்து விட்டனர்.மகேந்திர பர்மனை, கடும் வெயிலில் வலுக்கட்டாயமாக ஓட்டுச் சாவடிக்கு தூக்கி சென்று, ஓட்டளிக்க வைத்தனர். ஓட்டளித்து முடித்ததும், அவரை, அங்கேயே விட்டுச் சென்றனர்.
சிறிது நேரத்திலேயே, அவர், மயங்கி விழுந்து விட்டார்.அருகிலிருந்தவர்கள், மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர்,ஏற்கனவே இறந்து விட்டதாகதெரிவித்தனர்.
இந்த சம்பவம், ஜல்பய்குரி பகுதியில் வசிக்கும் மக்களிடையே, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 இதுகுறித்து, மகேந்திர பர்மனின் மனைவி கூறுகையில், ""என் கணவரால், எழுந்து நடமாட முடியாத நிலையில், அவரால் எப்படி ஓட்டளிக்க முடியும்? ஆனால், நாங்கள் கெஞ்சி கேட்டும், திரிணமுல் கட்சியினர், அதை பொருட்படுத்தவில்லை. அவர்கள தான், என் கணவர் இறந்தார்,'' என்றார்.

இதுகுறித்து, ஜல்பய்குரி பஞ்சாயத்து தேர்தலில், திரிணமுல் காங்., சார்பில் போட்டியிட்ட, சாகர் மொகோந்தோ கூறுகையில், ""நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி, ஓட்டளிக்க வைக்கவில்லை. எதிர்க்கட்சியினர், எங்கள் மீது, வீண் பழி போடுகின்றனர்,'' என்றார்.

இதற்கிடையே தேர்தல் மோதலில், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த, அப்துல் அஜீஸ் என்பவர், கொல்லப்பட்டார்.

வாக்களிப்பது உயிர் போகும் கடமை?
suran


--------------------------------------------------------------------------------------------------------------------------------------

விக்கிலீக்ஸ். புதிய கட்சி!
பல்வேறு நாடுகளின் அமெரிக்க தூதரகங்கள், தங்கள் நாட்டு அரசுக்கு ரகசிய அறிக்கை அளிப்பது வழக்கம்.
 இந்த அறிக்கைகளில் அரசியல் நிலவரங்கள், அமெரிக்காவுக்கு எதிரான விஷயங்கள் என்று பல தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.
மற்ற நாடுகளை பற்றிய மோசமான விமர்சனங்களும் இருக்கும்.
தூதரகங்களின் இந்த ரகசிய அறிக்கையை விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனால் அவரை கைது செய்ய அமெரிக்கா தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால், லண்டனில் உள்ள ஈகுவடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் அடைந்த அவர் கடந்த ஓராண்டாக அங்கேயே தங்கியுள்ளார். அவர் எப்போது வெளியே வந்தாலும், கைது செய்ய பொலிசார் தயார் நிலையில் உள்ளனர்.
suran
இந்நிலையில், தனது தாய்நாடான அவுஸ்திரேலியாவில் செனட் சபை தேர்தல் நடக்க உள்ளதால், ஊழல் கறைபடியாத வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து செனட் சபைக்கு அனுப்பப் போவதாக அசாஞ்ச் தெரிவித்திருந்தார்.
இதற்காக லண்டனில் உள்ள ஈகுவடார் அலுவலகத்தில் இருந்தபடி நேற்று அவுஸ்திரேலியா தலைநகர் மெல்போர்னில் வீடியோகான்பரன்ஸ் மூலம் புதிய கட்சியை அசாஞ்ச் தொடங்கி வைத்தார்.
மேலும், தனது கட்சியின் சார்பில் போட்டியிட உள்ள 7 வேட்பாளர்களின் பெயர்களை அவர் அறிவித்தார். தான் விக்டோரியா தொகுதியில் போட்டியிடுவதாகவும் அவர் கூறினார்.
அசாஞ்ச் வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 2 பேரும் இடம்பெற்றுள்ளனர். மேற்குவங்கத்தை சேர்ந்தவர்களுக்கு பிறந்தவரான பினோய் கம்ப்மார்க், கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு பிறந்தவரான சுரேஷ் ராஜன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?