காசில்லாமலேயே சாப்பிடலாம்......?



கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.27, நகர்ப்புறங்களில் ரூ.33 செலவு செய்து வாழுகிற தகுதி படைத்தவர்கள் ஏழைகள் அல்ல என்று வறுமைக்கோடுக்கு மத்திய திட்டக்கமிஷன் இலக்கணம் வகுத்துள்ளது.இது பற்றிய அறிவிப்பு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அனல்பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், மும்பையில் ஒருவர் ரூ.12–க்கு முழுச் சாப்பாடு சாப்பிட முடியும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜ் பாப்பர் எம்.பி. கூறி, எரிகிற தீயில் எண்ணெய் வார்த்திருக்கிறார்.
மற்றொரு காங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூத், டெல்லியில் ஜூம்மா மசூதி அருகில் 5 ரூபாய்க்கு சாப்பாடு சாப்பிடலாம் எனக்கூறி கொளுந்து விட்டு எரிகிற தீயில் மேலும் எண்ணெய் வார்த்துள்ளார்.
ஆனால் ஜூம்மா மசூதி பகுதியில் டீக்கடை நடத்தி வருகிற ஒருவர், ’’ ரஷீத் மசூத் அந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் மறுபடியும் ஜூம்மா மசூதி பக்கம் வந்து செல்லட்டும்’’ என கூறி இருக்கிறார். டெல்லி டீக்கடைகளில் கிடைக்கிற மலிவு விலை ரொட்டியின் விலையே ரூ.3 என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபற்றி பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘ மும்பையில் 12 ரூபாயில் முழு சாப்பாடு சாப்பிடலாம், 5 ரூபாயில் டெல்லியில் சாப்பிடலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளதை ஏற்றுக்கொள்ளவில்லை.
 உணவு பாதுகாப்பு அவசர சட்டம் அமலுக்கு வந்தபின்னர், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 150 மக்கள் நலத்திட்டங்களில் முதியோர் பென்ஷன் திட்டம் மட்டுமே வறுமைக்கோடுக்கு கீழே உள்ளவர்களுக்கு அமல்படுத்தப்படுகிற திட்டமாக உள்ளது.

அடுத்த ஆண்டு முதியோர் பென்ஷன் திட்டமும் அந்த வரையறையில் இருக்காது’’ என்றார்.
இந்த நிலையில் ரூ.12–க்கு, ரூ.5–க்கெல்லாம் சாப்பாடு கிடைக்கிறது என்ற காங்கிரசாருடன் போட்டி போட்டுக்கொண்டு, மத்தியில் ஆளும் காங்கிரஸ் மந்திரிசபையில் மரபுசாரா எரிசக்தித்துறை மந்திரியாக உள்ள தேசிய மாநாடு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா, ஒரு ரூபாயில் ஒருவர் சாப்பிட முடியும் என நேற்று கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:–
நீங்கள் விரும்பினால் ஒரு ரூபாயிலோ அல்லது 100 ரூபாயிலோ உங்கள் வயிற்றை நிரப்பிக்கொள்ளலாம். எவ்வளவு என்பது நீங்கள் சாப்பிட விரும்புவதைப் பொறுத்து அமைகிறது.
நாங்கள் ஏழைகளின் வாழ்க்கையை மாற்றி அமைப்பதற்காக உழைக்கிறோம். எனவே அவர்கள் நன்றாக சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழலாம், நாடும் முன்னேற்றம் அடையும்.இவ்வாறு அவர் கூறினார்.
பருக் அப்துல்லா முன்பு கூறியவர்களை கேலி செய்ய கூறினாரா?அல்லது தனது காங்கிரசு ஜால்ராவை தட்டியுள்ளாரா?
இந்தியாவின்  நடுத்தர ,அடித்தட்டு மக்கள்  வாழ்வை விட்டு விலகியுள்ள இவரை போன்ற அரசியல்வாதிகள் இப்படி பேசுவது காரணம் என்ன வென்று தெரியவில்லை.
suran
இந்தியாவில் ஏழ்மை இல்லை.37 ரூபாயில் ஒருவர் தின வருமானம் பெற்றாலே குடும்பம் நடத்தி விடலாம் என்பதை நிருபிக்கத்தான் இந்த அரசியல் கூத்தாடிகள் கேலிக் கூத்து   காண்பிக்கிறார்கள்.

நம்மை போல் உழைத்து அந்த பணத்தில் சாப்பிட்டால்தானே இவர்களுக்கு விலைவாசி தெரியும்.நக்கலும் குறையும்.
ஊரை அடித்து உலையில் போட்டு அதில் தின்று கொழுத்தவர்களுக்கும்,அன்னியர்களிடம் கையூ ட்டு பெற்று நாட்டை விற்றுக்கொண்டிருப்பவர்களுக்கும் மக்களின் -  நாட்டின் நிலவரம் எங்கு புரியும்.?
ஆனால் இது போன்ற பேச்சுகள் காங்கிரசை மக்களிடம் விட்டு விலக்கி விடும்.தமிழகத்தில் முன்பு பக்தவத்சலமும்,2005களில் தமிழகத்தில் ஜெயலலிதாவும் பேசிய பேச்சுகள் தான் அவர்களின் பதவியை அடுத்த தேர்தல்களை பறித்தது.

எலிக்கறி சாப்பிடுவது உடலுக்கு நல்லது என பக்தவச்சலமும்,தஞ்சை மாவட்டத்தில் வறட்சியால் எலிக்கறி சாப்பிடுகிறார்கள் என்ற போது ஜெயலலிதா அவர்கள் தங்கள் ஆசைக்காக சாப்பிடுகிறார்கள்.அப்படி ஒன்றும் வறுமை இல்லை என்றது இப்போது நினைவுக்கு கொண்டுவர அரசியல் வியாதிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்துடன் விட்டால் பரவாயில்லை.
"கையில் காசில்லாமலேயே சாப்பிடலாம்.என்ன பிச்சை எடுக்க வேண்டும் "என்று சரத் பவரோ ,திக் விஜய் சிங்கோ சொல்லி தொலைக்காமல் இருந்தால் போதும்.

இல்லை என்றால் அடுத்த வாக்கு பிச்சை இவர்களுக்கு கிடைப்பது அரிதாகி விடும்.

என்ன செய்வது காங்கிரசும்,அதன் கூட்டணி கட்சிகளும் 2-ஜி,3-ஜி,நிலக்கரி,கெலிகாப்டர் ,போன்று பலவழிகளிலும் கோடிகளை லட்சக்கணக்கில் குவித்து வாழ்கிறார்கள்.

சாதாரணமக்களின் வாழ்வு அவர்களுக்கு அன்னியமாகி விட்டது.
1000 ரூபாய் நோட்டுகள் அவர்களின் காதலி குறையத்தான் பயன்படும் நிலை.
நம் போன்றவர்கள் தயவு அடுத்த வாக்கு பதிவின் போது மட்டும் போதும்.

இவர்கள் அதுவரை இப்படியும் சொல்வார்கள்.

இன்னமும் சொல்வார்கள்.
suran
 ---------------------------------------------------------------------------------------------------------------------------------

2 ரூபாய் காசோலை
---------------------------------------------

டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையாக ரூ. 2 மற்றும் ரூ.3 என்று எழுதப்பட்ட காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.
அரியான பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாயிகளின் பயிர்கள் கடும் சேதத்திற்குள்ளானதை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் அரசாங்கத்திடம் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் எங்களுக்கு ஒரு தொகையை தந்து உதவுமாறு கேட்டுக் கொண்டனர்.
இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரியான அரசானது விவசாயிகளுக்கு 2 ரூபாய் மதிப்பிலான காசோலையை வழங்கியுள்ளது.
suran
ஆனால் இந்த காசோலையானது எங்களது வருமையை அசிங்கப்படுத்துவது போன்று உள்ளது என கூறி விவசாயிகள் இந்த காசோலையினை நிராகரித்துவிட்டனர்.
இது குறித்து அரியான அமைச்சர் புபைன்டர் சிங் ஹோடா கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எம்.ஏல்.ஏ.கள் மற்றும் பிற அதிகாரிகள் இணைந்து இந்த தொகையினை வழங்கியுள்ளோம் எனவும் இந்த இழப்பீட்டுத் தொகையானது சரியான தொகையாகும் என கூறியுள்ளார்.
"அரியானா அரசாங்கம் கொடுத்துள்ள இந்த காசோலை எங்களை இழிவுபடுத்தும் "
என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------\

suran


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?