ஞாயிறு, 30 ஜூன், 2019

இந்தியாவில் வளரும் பாசிசம்.

மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி

இந்த நாட்டின் அரசு அமைப்புகள் அனைத்தும் பார்ப்பனிய மயப்படுத்தப்பட்டு விட்டது என்பதற்கு மற்றொரு சாட்சியாக மாறியிருக்கின்றார் சஞ்சீவ் பட். 

காவி பயங்கரவாதிகளை எதிர்ப்பவர்கள், அம்பலப்படுத்துபவர்கள் என்ன நிலைமைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பதை இந்த நாடு அமைதியாக பார்த்துக் கொண்டுதான் இருகின்றது. 
முற்போக்குவாதிகள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள செயல்பாட்டாளர்கள் தவிர வேறு யாருமே காவி பயங்கரவாதிகளால் தினம் தினம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் கைதுகளையும், கொலைகளையும், தாக்குதல்களையும் பெயரளவிற்குக் கூட கண்டிப்பது கிடையாது. 
அந்த அளவிற்கு இந்திய மக்களின் மனங்களில் பாசிசம் திணிக்கப்பட்டு நச்சாக்கப்பட்டிருக்கின்றது.
Sanjiv Bhattஒரு பக்கம் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவிக்க சதித்திட்டம் தீட்டிய கொலைகாரர்கள் எல்லாவகையான ஆதாரங்கள் இருந்தாலும் விடுவிக்கப்படுவதும், ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் கூட தேர்ந்தெடுக்கப்படுவதும், இன்னொரு பக்கம் காவி பயங்கரவாதிகளை துணிவுடன் அம்பலப்படுத்திய நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப்படுவதும் வெட்கமற்ற முறையில் நடந்தேறிக் கொண்டு இருக்கின்றது.

குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த மோடி அரங்கேற்றிய வரலாறு காணாத இன அழிப்பு நடவடிக்கையை அம்பலப்படுத்திய ஒரே காரணத்திற்காகவும், கடைசிவரை மோடி கும்பலின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் சட்ட ரீதியாக மோடியை சிறைக்கு அனுப்ப போராடியதற்காகவும் சஞ்சீவ் பட் தற்போது பழிவாங்கப்பட்டிருக்கின்றார்.

1900 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதை முன்வைத்து அத்வானி தலைமையில் ரத யாத்திரை நடைபெற்றபோது, குஜராத்தில் ஆட்சியில் இருந்த ஜனதா தளம் அரசு அவரைக் கைது செய்தது.
 இதைக் கண்டித்து விசுவ இந்து பரிஷத், பிஜேபி போன்றவை போராட்டத்தில் ஈடுபட்டன. குஜராத்தின் ஜாம்நகர் துணை எஸ்.பி.பியாக இருந்த சஞ்சீவ்பட் தலைமையிலான போலீஸார் இது தொடர்பாக 1990 அக்டோபர் 30 ஆம் தேதி 150 பேரைக் கைது செய்தனர். 
அதில் ஒருவர்தான் பிரபுதாஸ் வைஷ்னானி. ஒன்பது நாட்கள் போலீஸ் காவலுக்குப் பிறகு ஜாமீனில் வீட்டிற்குத் திரும்பிய இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்து விடுகின்றார்.
போலீசார் தாக்கியதாலேயே பிரபுதாஸ் வைஷ்னானி இறந்ததாக அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்திருந்திருந்தனர். 
இந்த வழக்கில்தான் 29 ஆண்டுகள் கழித்து தற்போது ஜாம்நகர் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கின்றது. மேலும் ஐந்து பேருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது.

அத்வானி நடத்திய ரத யாத்திரையால் இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட கலவரங்களும் படுகொலைகளும் நடைபெற்றது என்பதும், அதன் தொடர்ச்சியாக பாபர்மசூதி இடிக்கப்பட்டது என்பதும் இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத கறுப்புப் பக்கங்கள். 
குஜராத்தில் மட்டும் 26 கலவரங்கள் நடைபெற்றது. அதில் 99 பேர் கொல்லப்பட்டார்கள். அதே போல உ.பியில் 28 கலவரங்கள் நடைபெற்றது. 
அதில் 224 பேர் கொல்லப்பட்டார்கள். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக சாமானிய மக்களுக்கு மதவெறி ஊட்டி அவர்களை பார்ப்பனியத்தின் கூலிப்படையாக மாற்றி சிறுபான்மையின மக்களுக்கு எதிராக ஏவிவிடும் கேடுகெட்ட கும்பல்களைத்தான் சஞ்சீவ்பட் அன்றும் கைது செய்திருக்கின்றார்.
 மும்பை ஐ.ஐ.டி.யில் படித்த சஞ்சீவ் பட் நினைத்திருந்தால் நல்ல வருமானம் தரும் ஏதாவது ஒரு வேலைக்குப் போயிருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.
 ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாகப் பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தின் காரணமாகத்தான் இந்தப் பணியைத் தேர்ந்தெடுத்தார்.
ஆனால் எவ்வளவுதான் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று போராடினாலும் அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனங்களை தட்டிக் கேட்டால், அம்பலப்படுத்தினால் என்ன நேருமோ அதுதான் சஞ்சீவ் பட்டுக்கும் தற்போது நேர்ந்திருக்கின்றது.

கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த மோடி தலைமையில் கூட்டப்பட்ட காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் “இந்துக்கள் தங்கள் கோபத்தை முஸ்லிம்கள் மீது காட்டுவதை கண்டு கொள்ள வேண்டாம், அவர்கள் முஸ்லிம்களுக்கு பாடம் புகட்டட்டும்” என்று நரேந்திர மோடி காவல்துறை உயரதிகரிகளுக்கு உத்திரவிட்டதை அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சஞ்சீவ்பட் அம்பலப்படுத்தினார்.
 அம்பலப்படுத்தியதோடு தனது உயரதிகரிகளை தொடர்புகொண்டு திட்டமிட்டு நடக்கவிருக்கும் படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றார்.
 ஆனால் முழுவதும் காவிமயப்படுத்தப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கொலைகார அரசு இயந்திரம் எதுவும் அவர் சொல்வதைக் கேட்கவில்லை. 
பிப்ரவரி 28 ஆம் தேதி காவி பயங்கரவாதிகளுக்குப் பயந்து குல்பர்க சமூகக் கூடத்தில் தஞ்சம் அடைந்த காங்கிரசின் முன்னாள் எம்.பி ஹஸன் ஜாஃப்ரி உட்பட 69 முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

சஞ்சீவ் பட் இது தொடர்பாக உச்சநீதி மன்றத்திலும் மனுத் தாக்கல் செய்தார். 
அதில் மோடி 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி நடத்திய கூட்டத்தில் தான் கலந்து கொண்டதையும், மோடி கலவரம் நடப்பதற்கு ஆதரவாக செயல்பட்டதையும், இது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு சரியாக விசாரிக்கவில்லை என்பதையும் அதில் குறிப்பிட்டு இருந்தார். 
ஆனால் அந்தக் கூட்டத்தில் சஞ்சீவ்பட் கலந்து கொள்ளவே இல்லை என்று அன்றைக்கு டி.ஜி.பியாக இருந்த சக்ரவர்த்தி மறுத்தார். 
ஆனால் சஞ்சீவ் பட்டின் ஓட்டுநராக இருந்த பந்த் அன்றைய கூட்டத்தில் சஞ்சீவ்பட் கலந்து கொண்டதாகவும் அவருக்காக தான் வெளியே வண்டியுடன் காத்திருந்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.

இந்த சாட்சி எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்பதுதான் உண்மை. 
எப்படியெல்லாம் தாங்கள் முஸ்லிம் பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொன்றோம், எப்படி வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்து சூலாயிதத்தால் குத்திக் கொன்றோம் என்று ரத்தவெறி பிடித்த மிருகங்கள் பேசியதை வீடியோ பதிவாக வெளியிட்ட தெகல்கா ஆவணங்களை வைத்துக் கொண்டே மோடியையும், கலவரத்தில் ஈடுபட்டவர்களையும் தண்டிக்க இந்த நாட்டின் நீதிமன்றங்களுக்குத் துப்பில்லாதபோது ஒரு டிரைவரின் வாக்குமூலமா ஏற்றுக் கொள்ளப்பட போகின்றது?

ஆனால் மோடி அந்த ஓட்டுனரையும் மிரட்டினார். 
சஞ்சீவ்பட் தன்னை மிரட்டி மோடிக்கு எதிராக பொய் வாக்குமூலம் வாங்கி விட்டதாக அந்த ஓட்டுநரிடமே புகார் ஒன்றை எழுதி வாங்கி, அதன் அடிப்படையில் சஞ்சீவ் பட்டை சிறையில் வைத்தார். 
மேலும் அவர் சிறையில் இருந்த போது அவரது வீட்டில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் திருடப்பட்டன. சஞ்சீவ்பட்டைப் போலவே 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி மோடி நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டவரும், பின்னர் அப்ரூவராக மாறியவருமான பாஜக முன்னாள் அமைச்சர் ஹிரோன் பாண்டியா படுகொலை செய்யப்பட்டார்.

2010 ஆம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக விசாரித்து வந்த சிறப்பு புலனாய்வுத் துறையிடம் மோடி 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி நடத்திய கூட்டத்தில் தான் கலந்துகொண்டதையும் அதில் மோடி “இந்துக்கள் தங்கள் கோபத்தை முஸ்லிம்கள் மீது காட்டுவதை கண்டு கொள்ள வேண்டாம், அவர்கள் முஸ்லிம்களுக்கு பாடம் புகட்டட்டும்" என்று சொன்னதையும் வாக்குமூலமாக மீண்டும் பதிவு செய்தார் சஞ்சீவ்பட். 
இதனால் ஆத்திரம் அடைந்த மோடி இனி மேலும் இவரை விட்டுவைத்தால் தன்னுடைய பிரதமர் கனவுக்கே வேட்டு வைத்துவிடுவார் என்று எண்ணி அவரை சிறைக்கு அனுப்ப முடிவு செய்தார். அதன் விளைவாக சஞ்சீவ் பட் அனுமதி பெறாமல் பணிக்கு வராது இருந்தது, அரசு வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 2011ஆம் ஆண்டில் அவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். 
பிறகு 2015ல் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

போதை மருந்துகள் வைத்ததாக எழுந்த புகார்களின் பேரில் 2018 செப்டம்பரில் இருந்து சஞ்சீவ் பட் சிறையில் இருந்து வருகிறார். 
தற்போது அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனையானது செஷன்ஸ் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டது என்பதால் இன்னும் மேல்முறையீடு செய்யும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் காவி பயங்கரவாதம் தலைவிரித்து ஆடும் காலத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கைதான் நம்மிடம் வறட்சியாக இருக்கின்றது.

- செ.கார்கி
 முகிலன் எங்கே?
முகிலன் தானே தலைமறைவாகி இருக்கக் கூடும் என்ற செய்தியை நம்ப வைக்கும்படி உளவுத்துறையும் அரசும் பரப்பிக் கொண்டிருக்கின்றன. இன்னும் எட்டு வாரங்கள் கழித்து சிபிசிஐடி, ’இதற்கு மேல் எங்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று சொல்லிவிடுவதற்கு தான்  ஊடகங்கள் வழியாக இந்த  பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது’என்று சந்தேகம் எழுப்பியுள்ளது இளந்தமிழகம் அமைப்பு.
முகிலனைத் தேடும் பணிக்கு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மேலும் எட்டு வார அவகாசம் கேட்டுப்பெற்றிருக்கும் நிலையில் இளந்தமிழகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எழுதியுள்ள கடிதத்தில்,...நேற்று ஜூன் 27 அன்று முகிலனின் ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கம் போலவே சீலிடப்பட்ட கவரில் முன்னேற்ற அறிக்கையைக் கொடுத்தது சிபிசிஐடி. நிர்மல் குமார், எம்.எம். சுந்தரேசன் ஆகிய இரு நீதிபதிகள் வழக்கை விசாரித்தனர்.  சிபிசிஐடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றும் பெண்டுல்லம் போல் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு வழக்கின் திசைப் போவதாகவும் சிபிசிஐடியிடம் சில க்ளு இருப்பதாகவும் ஆனால் அவர்களால் அதை துல்லியமாக்க முடியவில்லை என்றும் திரு எம்.எம்.எஸ். கூறினார். ஒருவர் பின் ஒருவராக விசாரணை செய்து வருகின்றனர். இன்னும் ஆழமாகப் போக வேண்டியிருக்கிறது என்றும் நீதிபதி எம்.எம்.எஸ். சொன்னார்.
ஜுன் 3 தேதியிட்ட ஒரு  தமிழ் நாளிதழில் ’முகிலன்  உயிருடன் இருக்கிறார்’ என்ற தலைப்பிட்டு இத்தகவல் சிபிசிஐடியிடம் இருந்து  பெறப்பட்டதாகச் சொல்லி ஒரு செய்தி வந்தது. இப்படியான புரளிகள் பரப்பபடுகின்றன என்றும் முன்பு முகநூலில் ஒரு காவல் ஆய்வாளரே முகிலன் ‘சமாதி’ எனப் பதிவிட்டுள்ளார் என்றும் வழக்கறிஞர் சுதாராமிலங்கம் நீதிபதியிடம் முறையிட்டார். சிபிசிஐடி விசாரித்துக் கொண்டிருக்கிறது என்று நீதிபதி சொன்னார்.
அரசு தரப்பு வழக்கறிஞர்  ’எட்டு வாரம்’ அவகாசம் கேட்டார். வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆறு வாரம் மட்டுமே கொடுக்கச் சொல்லி கேட்டார்.  நீதிபதி எட்டு வாரத்திற்கு ஒப்புக் கொண்டார்.  வழக்கு விசாரணை ஆகஸ்டு 22 ஆம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
கடந்த மூன்று முறையாக சிபிசிஐடி தரப்பில் இருந்து இரகசிய அறிக்கையே கொடுக்கப்படுகிறது. விசாரணை நடந்துகொண்டிருப்பதால் இப்படி தருகிறோம் என்கிறார்கள். ஆனால், அதே சிபிசிஐடி பத்திரிகைகளுக்கு செய்தி கொடுக்கிறது.  விசாரணை எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்ற விவரம் தெரிந்தால் அது விசாரணையைப் பாதித்துவிடும் என்று கவலைப்படும் சிபிசிஐடி, ’முகிலன் உயிருடன்  இருக்கிறார், வட இந்தியாவில் இருக்கிறார்,  மாவோயிஸ்ட்டுகளோடு இருக்கிறார்’ என விதவிதமான செய்திகள் வருவதால் விசாரணை பாதிக்கப்படும் என்று கவலைப்படுவதாக தெரியவில்லை. அப்படி வரும் செய்திகள் சிபிசிஐடி அதிகாரிகள் சொல்வதாகவே வருகிறது.  முன்னேற்ற அறிக்கையை இரகசியமாக தரும் சிபிசிஐடி அதிகாரிகள் ஊடகங்களில் வரும் செய்திகளை மறுப்பதோ அல்லது கட்டுப்படுத்தவோ இல்லை. ஊடகங்களில் வெளிவரும் புரளிகளால் பாதிக்கப்படாத விசாரணைதான், சிபிசிஐடி யின் விசாரணை அறிக்கையை எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் பார்ப்பதால் பாதிக்கப்பட்டு விடுமா? அல்லது நத்தைப் போல் நடக்கும் விசாரணையை மறைப்பதற்கா செய்யும் மாய்மாலமா இது?
 ஒருவழியாக முகிலன் தானே தலைமறைவாகி இருக்கக் கூடும் என்ற செய்தியை நம்ப வைக்கும்படி உளவுத்துறையும் அரசும் பரப்பிக் கொண்டிருக்கின்றன. இன்னும் எட்டு வாரங்கள் கழித்து சிபிசிஐடி, ’இதற்கு மேல் எங்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று சொல்லிவிடுவதற்கு தான்  ஊடகங்கள் வழியாக இந்த  பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.பிப்ரவரி 15 முதல் ஜூன் 27 வரை சொல்லிக் கொள்ளும் படியான எந்த துப்பும் துலக்க முடியாத சிபிசிஐடி மேலும் எட்டு வாரம் அவகாசம் கேட்டுப் பெற்றுள்ளது.
அரசுத் தரப்பில் முதல் பத்து நாட்கள் விசாரணையையே தொடங்கவில்லை. பின்னர், எழும்பூர் ரயில் நிலையத்தை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை என்று சொன்னார்கள். ஒருமாதம் கழித்து, அவர் மீண்டும் ரயில் நிலையத்திற்கு வந்து மதுரை மகால் ரயில் நிற்கும் நடைபாதையில் இருக்கும் பதிவு கிடைத்துள்ளது என்றனர்.
மதுரை மகால் ரயில் இரவு 11:50 மணிக்கு புறப்படுகிறது. பத்தரை மணியில் இருந்து 11: 50 வரையான ஒன்றே கால் மணிநேர சிசிடிவி பதிவைக் கூட ஒழுங்காகப் பார்க்காமல் முகிலன் ரயில் நிலையத்தை விட்டு வெளியே போய் விட்டார் என்ற செய்தியைப் பரப்புவானேன். தொடக்கம் முதலே அவர் திட்டமிட்டு தலைமறைவாகிவிட்டார் என்ற குழப்பதை ஏற்படுத்தும்  அரசின் முயற்சிகளை நம்மால் அடையாளம் காண முடிகிறது.
காலம் கடந்து போக போக முகிலனுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையும்கூட காணாமலாக்கப்பட்டுவிடுமோ என்று தோன்றுகிறது. ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்பு, தாது மணல் கொள்ளை எதிர்ப்பு, கிரானைட் மலைக் கொள்ளை எதிர்ப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அம்பலப்படுத்தல் என முகிலன் பயணித்த களங்கள் எல்லாம் பல்லாயிரம் கோடி பணம் புரள்பவை. இதனால் அவர் உயிருக்கு ஆபத்து நேர்ந்திருக்குமோ என்பதுதான் எல்லோரது கவலையும். ஆனால், நீதிபதிகளோ அத்தகைய எவ்வித கவலையுமின்றி துளியும் சமூகப் பொறுப்பு இன்றி இந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கிறார்கள். அதனால்தான், அவர்களால் எட்டு வாரம் கால அவகாசத்தை அள்ளிக் கொடுக்க முடிகிறது!’என்று கண்டித்திருக்கிறார் செந்தில்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழக தலைமைச் செயலாளராக  சண்முகம் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் நிதித் துறை கூடுதல் தலைமை செயலாளராக இருந்து வந்தார்.


1985-ம் ஆண்டு தஞ்சை உதவி மாவட்ட ஆட்சியராக பணியை தொடங்கினார். அதன்பின்னர், சிவகங்கை, புதுக்கோட்டை கலெக்டராகவும், பல்வேறு முக்கிய துறைகளிலும் பொறுப்பு வகித்துள்ளார்.


கடந்த திமுக ஆட்சியில் இருந்தே சண்முகம் நிதித்துறை செயலாளர் பொறுப்பை கவனித்து வருகிறார். கிரிஜா வைத்தியநாதன் 2017 டிசம்பரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவரது பொறுப்பை கூடுதலாக சண்முகம் கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வீட்டு வசதித்துறை செயலாளராக இருக்கும் எஸ்.கிருஷ்ணன் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்படலாம் என உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டம் வேலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம். நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், முதல் பட்டதாரி ஆவார். வேளான் முதுகலை பட்டம் பெற்றவர். 1985-பேட்ச் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார்.

கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் முதல் நிதித்துறை செயலாளராக இருக்கும் சண்முகம், மாநிலத்தின் நிதி நெருக்கடியை சமாளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது இவருக்கு பல தரப்பினரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்தது. இவர் 9 பட்ஜெட்களையும், 2 இடைக்கால பட்ஜெட்களையும் தாக்கல் செய்திருக்கிறார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் கலைஞர்  மற்றும் ஜெயலலிதா ஆகியோரது திட்டங்களான இலவச வண்ணத் தொலைக்காட்சி ,அம்மா உணவகம் ஆகிவற்றுக்கு நிதிஆதாரங்களை  ஒதுக்கி சிறப்பாக தமிழக பட்ஜெட்டை கையாண்டு பாராட்டு பெற்றவர் சண்முகம்.

இதன்மூலம் பல தலைவர்களின் கவனம் பெற்றார். இவரது இந்த நிர்வாகத் திறமை தலைமை செயலாளர்பொறுப்பிலும் வெளிப்படும் என எதிர்பார்க்கலாம்..
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 மனுதர்ம சாஸ்திரம்
சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகு மக்களுக்கு எங்கு பார்த்தாலும் மனிதரின் சுயமரியாதைக்கு விரோதமான ஆதாரங்களை ஒழிப்பதில் கவலையும் ஊக்கமும் அதிகமாகி வருகின்றது.

 சென்னை, வடஆற்காடு, சேலம், தஞ்சை, திருநெல்வேலி, மதுரை முதலிய இடங்களில் கூடிய பல மகாநாடுகளில் வர்ணாசிரம தர்மம் என்பதை கண்டித்திருப்பதுடன் அதற்கு ஆதாரமான புஸ்தகங்களையும் பகிஷ்கரிக்கத் தீர்மானங்களும் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன.

சில மகாநாடுகள் மனுதர்ம சாஸ்திரத்தை நெருப்பில் கொளுத்தி சாம்பலைக் கரைத்தும் வந்திருக்கின்றன.

அரசாங்கமும் சட்டசபை மெம்பர்களும் இதைக் கவனிக்கப் போகிறார்களா என்று தீர்மானிக்க முடியவில்லை. 
பழைய காலமாயிருந்திருக்குமானால் இம்மாதிரி பெரும்பான்மையான மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியை மதித்து அரசாங்கமானது வருணாசிரமத்தை அழித்து சட்டம் செய்திருக்கும் என்பதோடு வருணாசிரமக் கொள்கைக்காரர்களை கழுவிலேற்றி இருக்கும் என்றும் கூட சொல்லலாம். 

ஏனெனில், நிரபராதிகளான 8000 சமணர்கள் கழுவேற்றப்பட்டதாக சொல்லும் சரித்திரத்தைப் பார்க்கும்போது இவ்வளவு அக்கிரமமும் ஜீவகாருண்யமும் அறிவும் அற்றத்தன்மையான கொடுமையை சகித்துக் கொண்டிருக்கும் என்றும் யாரும் சொல்ல முடியாது.

 நமது அரசாங்கங்கள் பழய கால அரசாங்கங்களைப் பின்பற்றிக் கழுவேற்றா விட்டாலும் சட்ட மூலம் கொடுமைகளை ஒழிக்கவாவது உதவ வேண்டாமா என்று கேட்கின்றோம்.

 ஒருக்கால் மத விஷயத்தில் தலையிட முடியாது என்று சொல்வார்களானால் மத விஷயங்களையாவது கவனித்து மதத்தில் எப்படி சொல்லியிருக்கின்றதோ யார் யாருக்கு என்ன என்ன வேலை இடப்பட்டிருக்கின்றதோ, யார் யாரின் நடத்தை எப்படி இருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருக்கின்றதோ அப்படியாவது நடக்கும்படி பார்க்க வேண்டும்.
 அப்படியும் இல்லாமல் இப்படியுமில்லாமல் பார்ப்பானும், வெள்ளைக்காரனும் மாத்திரம் பிழைக்க என்ன என்ன மாதிரி நடக்க வேண்டுமோ எப்படி எப்படி சீர்திருத்தம் செய்ய வேண்டுமோ அப்படியெல்லாம் சூழ்ச்சிகள் செய்துக் கொண்டு மதவிஷயத்தில் பிரவேசிக்க மாட்டோம் என்று சொல்வது வடிகட்டின அயோக்கியத்தனமாகுமென்றே சொல்லுவோம்.
இச்சூழ்ச்சிகளைப் பார்க்கும்போது இதுசமயம் மகமதிய அரசாங்கத்தில் வாழும் யோக்கியதையாவது நமக்குக் கிடைக்காதா என்று ஆசைப்பட வேண்டியதாயிருக்கின்றது. 

காரணமென்னவென்றால், வீரர் கமால்பாஷா அவர்கள் ஒரு அரச விசாரணைக்கு கொரானை ஆதரவாக காட்டியபோது “அது அக்காலத்து சங்கதி இக்காலத்திற்கு செல்லாது” என்று அதைப் பிடுங்கி வீசி எறிந்தாராம். குரான் வாக்கியம் செதுக்கப்பட்ட இடங்களையெல்லாம் அழித்து சுயமரியாதையையும் கைத்தொழிலையும் கவனியுங்கள் என்று எழுதி வருகிறாராம்.

 மகமதியரைவிட வெள்ளைக்காரருக்கும், பார்ப்பனர்களுக்கும் மதபக்தியிருக்கின்றது என்று சொன்னால் எந்த பைத்தியக்காரராவது நம்ப முடியுமா என்று கேட்கின்றோம்.

எனவே மதம் என்கிற புரட்டுகளையும், மதாச்சாரியார்கள் என்கின்ற அயோக்கியர்களையும், சாஸ்திரம், வேதம், புராணம் என்பவைகளாகிய அதர்ம அக்கிரம ஆதாரங்களையும் குருட்டுத்தனமாய் பின்பற்றாமல் அன்பு, ஜீவகாருண்யம், அறிவு, சத்தியம் என்பவைகளை ஆதாரமாய் வைத்து அவற்றிற்கு விரோதமாய் உள்ளவைகளையெல்லாம் அடியோடு ஒழிப்பதற்கு முற்பட வேண்டியதுதான் பகுத்தறிவுள்ள மனிதன் கடமை. ஆதலால் அதற்கு ஒவ்வொருவரும் முற்பட வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 04.12.1927)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 நன்றி மறக்கும் திரையுலகு,
பிரபல தயாரிப்பாளரும் விநியோகிஸ்தருமான பிரமிட் சாய்மிரா ஸ்வாமிநாதன் மரணத்திற்கு திரையுலகில் இருந்து யாரும் வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது நிறுவனம் 2000களில் தமிழ் சினிமா, இசை மற்றும் பொழுதுபோக்கு காட்சிகளில் தனக்கென நிரந்தர இடம் பிடித்த பிரபல நிறுவனமாக விளங்கியது.
ஸ்வாமிநாதன்

பிரமிட் சாய்மீரா என்றால் தெரியாதவர்கள் சினிமாவில் யாருமில்லை.

இவரது நிறுவனத்தில் 2007 ஆம் ஆண்டு 'கண்ணாமூச்சி ஏனடா' என்ற படத்தை யூடிவி, ராடன் மீடியாவுடன் இணைந்து தயாரித்தார்.மேலும், 'மொழி' படத்தை விநியோகம் செய்துள்ளார். பின்னர் ஸ்பை த்ரில்லர் படமான முக்பீர் (2008) ஐ இந்தியில் தயாரித்தார்.

நடிகர்கள்  ரஜினிகாந்தின் ‘குசேலன்’,  விஜய்யின் 'அழகிய தமிழ் மகன்', அஜித்தின் ‘பில்லா’, ஜோதிகாவின் ‘மொழி’, மாதவனின் ‘எவனோ ஒருவன்’, ஆர்யாவின் ‘நான் கடவுள்’ போன்ற வெற்றி படங்களை  தயாரித்து, விநியோகம் செய்துள்ளார். ரஜினி,விஜய்,அஜித் ஆகியோருடன் நெருங்கி பழகிய உள்ளார்.
ஆனால் நேற்று அவர் மரணமடைந்தார் .ஆனால் பலனடைந்த எந்த பிரபல நடிகரும் அவரது மரணத்திற்கு வரவில்லை.
சினிமா உலகமும் அவருக்கு தகுந்த மரியாதை செய்யவில்லை. பிரபல தயாரிப்பாளருக்கே இந்த நிலையா என எல்லோரும் வருந்துகிறார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

சனி, 29 ஜூன், 2019

அதிமுகவுக்கும் சரிவுதான்...!

ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தலைமை பிடிக்காமல் தினகரன் தலைமையை ஏற்று அமமுகவுக்கு சென்றவர்கள், அமமுக செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றால், மீண்டும் அதிமுகவுக்கு வராமல் திமுகவுக்கு செல்வது ஏன்?

அதிமுக அரவணைத்து செல்லவில்லையா?
அரவணைக்கவில்லை என்றால் அமமுகவைப்போல் அதிமுகவும் பலவீனம் அடைகிறதா?
என்ற கேள்வி எழுகிறது.

கே.சி.பழனிசாமி
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்தில்  அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி வெளியிட்டதாகவல்கள் தான் இப்போது அதிமுக உள்ளே பெரும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது..
 
89ல் ஜானகி அணி, ஜெ. அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டு, இரண்டு அணிகளும் தோல்வியை சந்தித்தது. திமுக வெற்றி பெற்றது. 
அதைப்போன்றுதான் இன்றைக்கு பாராளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலும் நிலைமை இருக்கிறது. 
தொண்டர்கள் என்ன நினைத்தார்கள் என்றால், சசிகலா, தினகரன் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். ஜெயலலிதா இருக்கையில் எப்படி இருந்ததோ அதைப்போல பொதுச்செயலாளர் பதவி வர வேண்டும். 

பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும். 
அப்படி பலப்படுத்தினால் மட்டும்தான் வரும் தேர்தலில் ஓரளவுக்காவது வெற்றி வாய்ப்பை பெற முடியும்.
 
நடந்து முடிந்த தேர்தலில் தோல்வி என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதைவிட முக்கியமான விஷயம் வாக்கு வித்தியாசம். சில பாராளுமன்றத் தொகுதிகளில் ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசம் உள்ளது.
இன்னும் சில தொகுதிகளில் நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசம்.
 சில தொகுதிகளில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசம். இந்த நிலை நீடித்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் தொகுதிக்கு ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்ற தோற்றம் உருவாகிறது.
இதனால் அதிமுக தொண்டர்கள், கட்சியை ஒருங்கிணைத்து 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, காலப்போக்கில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். 
இதனை தினகரன் செய்யாததால், அதற்கு அவர் முன்வராததால், அவரை விட்டு வெளியேறுகிறார்கள். 

அமமுகவில் இருந்து வெளியேறுபவர்களை அதிமுக தலைமையில் இருப்பவர்கள் அரவணைத்து செல்வதில்லை. 
அவரவர்கள் அவர்களது நிலையை தக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
 
தங்க தமிழ்செல்வன் வந்தால் தேனியில் தனக்கு இடைஞ்சல் வரும் என ஓ.பன்னீர்செல்வம் நினைக்கிறார். செந்தில் பாலாஜி வந்தால் தனக்கு இடையூறு வரும் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். 
மார்க்கண்டேயன் வரக்கூடாது என்று கடம்பூர் ராஜு நினைக்கிறார்.
 கலைராஜன் வரக்கூடாது என ஜெயக்குமார் நினைக்கிறார். 
கோவையில் வேலுமணி, முன்னாள் மேயர் வேலுச்சாமியை, முன்னாள் மந்திரி தாமோதரனை புறக்கணிக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் ஓ.பன்னீர் செல்வம், முனுசாமி, மனோஜ் ஆகியோரை சேர்த்துக்கொண்டு ராஜகண்ணப்பன், நத்தம் விஸ்வநாதன் உள்பட மற்றவர்களை புறக்கணிக்கிறார்கள்.
 
ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்., வேலுமணி, தங்கமணி ஆகிய நான்கு பேரும் தங்களுக்கு போட்டியாக கட்சிக்குள் யாரும் வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
 தங்களுக்கு போட்டியாக வருபவர்களை கட்சிக்குள் விடக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
 இதனால் கட்சி பலவீனமாகிறது என்பதை அவர்கள் நினைப்பதில்லை.
 இவர்களின் இந்த போக்கு அமமுகவுக்கு மட்டும் அல்ல, அதிமுகவுக்கும்தான் சரிவு.
 அதிமுகவும்தான் பலவீனம் அடைகிறது என்கிறார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 கேரளாவும் இடதுசாரிகளும்.
கேரளாவில் மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது நடைபெற்றுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டது.
அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு இந்த விவகாரம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. 20 இடங்களில் ஓரிடத்தில் மட்டுமே இடதுசாரி கூட்டணி வென்றது.

19 தொகுதிகளை காங்கிரஸ் அணி கைபற்றியது. ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
பாஜக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
அதற்கு காரணம் ராகுல் கேரளாவில் போட்டியிட்டதுடன் பலமுறை பரப்புரை செய்ததும்,மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது அதற்கு காங்கிரசுத்தேவை என காராளமக்கள் எடுத்த முடிவுதான்.

இந்தநிலையில், கேரளா மாநிலத்தில் காலியாக உள்ள 44 உள்ளாட்சி இடங்களுக்கு ஜூன் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளும் போட்டியிட்டன.

இந்த இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று  வெளியானது. அதில், ஆளும் இடதுசாரி முன்னணி 22 இடங்களில் வெற்றி பெற்றது. காங். தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 17 இடங்களில் மட்டுமே வென்றது. பாஜக கூட்டணி  5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் செல்வாக்கை இடது முன்னணி தக்க வைத்துக் கொண்டது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுவிட்சர்லாந்து (SWITZERLAND) நாட்டில் உள்ள வங்கிகளில் உலக நாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் என அனைவரும் தங்கள் பணத்தை சுவிஸ் வங்கிகளில் சேமித்து வருகின்றனர்.
இந்த நாட்டில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்யும் நபர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது விவரங்களை வெளியிடாமல் பாதுகாத்து வந்தது.
இதனால் இந்தியாவில் பெரும்பாலானோர் சுவிஸ் வங்கிகளில் பணத்தை சேமித்து வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியிருக்கும் பணத்தை இந்தியா கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

 இது தொடர்பாக இந்திய அரசு இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் தொடங்கியுள்ள வங்கிக்கணக்கு தொடர்பான விவரங்களை கேட்டு சுவிட்சர்லாந்து அரசிடம் தொடர்ந்து பேசி வந்தது.

இந்நிலையில் வெளிநாட்டினர் தங்கள் நாட்டு வங்கிகளில் சேமித்து வரும் பணம் குறித்த விவரங்களை சுவிட்சர்லாந்து மத்திய வங்கி ஆண்டுதோறும் அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருந்த வெளிநாட்டினரின் மொத்த தொகை குறித்த புள்ளி விவரங்களை நேற்று வெளியிட்டது.

 அதன் படி கடந்த 2018- ஆம் ஆண்டில் சுவிஸ் நாட்டு வங்கிகளில் இருந்த இந்தியர்களின் மொத்த சேமிப்பு தொகையின் சுமார் ரூபாய் 6,757 கோடி ஆகும்.

 இந்த சேமிப்பு தொகை முந்தைய ஆண்டை விட 6 சதவீதம் குறைந்து உள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.இந்த வங்கிகளில் சேமிக்கும் தொகை என்பது இந்திய அரசால் கருப்புப்பணமாக் கருதப்படுகிறது.

இந்த தகவலை அறிந்து மத்திய அரசு அதிர்ச்சி அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏனெனில் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் லட்சக்கணக்கான கோடியில் பணம் சேமித்து வைத்திருப்பதாக அரசியல் கட்சிகள் தெரிவித்து வந்த நிலையில், சுவிட்சர்லாந்து அரசு வெளிட்ட அறிக்கையில் குறைவான தொகையே இடம் பெற்றுள்ளது.

அதே போல் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சேமித்து வரும் தொகை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.காரணமாக அந்த வங்கிகள் "முன்பு கார்ப்ரேட்கள்,பணமுதலைகளுக்கு அரசு பல கெடுபிடிகளை வைத்திருந்ததால் இந்தியர்கள் வெளிநாடுகளில் தங்கள் கருப்புப்பணத்தை வங்கிகளில் பதுக்கி வைத்திருந்தனர்.ஆனால் தற்போதைய அரசை அவர்கள் தங்கள் நலனை பாதுகாக்கும் அரசு  என்று எண்ணுவதால் வெளிநாட்டுக்களில் சேர்த்துவைப்பது குறைகிறது ."
என்றே கூறுகின்றன.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஜி.எஸ்.டி.காமிக்ஸ்  
ஜி.எஸ்.டி. வரி நடைமுறைகளை, காமிக் புத்தக வடிவத்தில் விளக்கும் புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது.சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புமுறை, கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது.


இதன்மூலம் ஒரே பொருளுக்கு பல்வேறு இடங்களில் வரி விதிக்கப்படுவது தடுக்கப்படுவதுடன், பொருட்களின் விலை குறையும் என்று மோடி அரசு கூறியது.

 எனினும், அறிமுகப்படுத்தி 3 ஆண்டுகள் ஆகியும், பொருட்களின் விலை குறையவில்லை-
 என்பது ஒருபுறமிருக்க, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நடைமுறையும், இப்போது வரை வணிகர்களுக்கு குழப்பமாகவும் ,தலைவலியாகவுமே உள்ளது.

இந்நிலையில், ஜி.எஸ்.டி. விதிகளை விளக்கும் வகையில், காமிக் கதைகள் பாணியில் புத்தகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
 “அட்வெஞ்சர்ஸ் ஆப் தி ஜி.எஸ்.டி. மேன்” என்ற தலைப்பிலான இந்த ஜிஎஸ்டி காமிக் புத்தகத்தை, ஸ்ரீநிவாஸ் கோட்னி என்பவர் எழுதியுள்ளார்.

இதில், ஜி.எஸ்.டி. வரி நடைமுறைகள் மற்றும் விதிகள், சுருக்கமாகவும் நகைச்சுவையாகவும் கேலிச்சித்திரங்கள் மூலமாக எடுத்துரைக்கப்பட்டு உள்ளன.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
புது தலைமைச் செயலாளர்
தமிழக தலைமைச் செயலாளர் பதவி பட்டியலில் முதலில் இருந்த ஆளுநரின் செயலாளர் ராஜகோபால், பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் சரியாக செயல்படாமல் நக்கீரன் மீது எடுத்த அவசர நடவடிக்கை எடுத்து சொதப்பி நீதிமன்றத்தின் கண்டனத்தை பெற்றதால் அவரை தலைமைச் செயலாளர் பதவியில் நியமிக்க மத்திய அரசு தயங்கியது. 
கே.சண்முகம்                    திரிபாதி

 
இதனால் முதல்வர் பழனிச்சாமி நிதித்துறை செயலாளராக இருக்கும் சண்முகத்தை தலைமைச் செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுத்து அதற்கான பரிந்துரை கோப்பை கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைத்தது. 

நேற்று அனுப்பிய அந்த கோப்பில் ஆளுநர் கையெழுத்துப்போடாமல் இருந்ததாகவும், நிர்மலா தேவி விவகாரத்தில் கவர்னர் மாளிகைக்கு ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து ராஜகோபால்தான் காப்பாற்றினார் என்பதால் அவர் தலைமைச் செயலாளராக வரவேண்டும் என்று கவர்னர் விரும்பியதாகவும் கூறப்பட்டது.
 
ஆனால்  டெல்லியில் இருந்து வந்த உத்தரவையடுத்து, இன்று காலை புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமிப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளார் ஆளுநர்.
 இதையடுத்து நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகம் புதிய தமிழக தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது. மற்றபடி டிஜிபியாக திரிபாதியே முன் கணித்தபடி பதவியில் அமர்த்தப்படுகிறார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 சுற்றுசூழலைப்போலவே கல்லூரியும் தரங்கெட்டது ?
மாணவர்கள் படிக்க இயலாத தரமற்ற பொறியியல் கல்லூரிகள் என அண்ணா பல்கலைக்கழகம் ஒரு பட்டியல் போட்டுள்ளது. 
கருப்பணன்

அந்தப் பட்டியலில்  தமிழகத்தில் 89 பொறியியல் கல்லூரிகளில் தரமற்றவை என விவரத்துடன் கூறியுள்ளது. 

அந்த 89 கல்லூரிகளில் பல முக்கிய விஐபிகள் நடத்தும் கல்லூரிகளும் அடங்குகிறது.

 இதில் குறிப்பாக தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சரான கே சி கருப்பனனின் கல்லூரியும் உள்ளது, சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஈரோடு மாவட்டம் பவானி யைச் சேர்ந்தவர். 

இவர் ஈரோட்டிலிருந்து கோபிசெட்டிபாளையம் செல்லும் வழியில் பல கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். 
அதில் ஒன்றுதான் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் இன்ஜினியரிங் காலேஜ். 

இந்தக் கல்லூரி தரமற்றவை இதில் மாணவர்கள் சேர்க்கை கூடாது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 அந்த பட்டியலில்  வருகிறது. 

ஒரு அமைச்சர் அதுவும் சுற்றுச்சூழல் அமைச்சர் தனது கல்லூரி தரமற்றது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருப்பது என்றால் அமைச்சரின் கல்லூரியின் லட்சணம் எப்படி இருக்கும்?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
வெள்ளி, 28 ஜூன், 2019

ஏன் இந்த திடீர் நெருக்கடி

 பிஎஸ்என்எல் ;
 மூழ்கும் கப்பல் அல்ல!
தொலைத் தொடர்பு இலாகாவுக்கு கடந்த ஜூன் 17அன்று பி.எஸ்.என்.எல். நிர்வாகம் ஒரு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத் தால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
 பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ள தென்றும் தேவையான நிதி உடனடியாக விடுவிக்கப்பட வில்லை என்றால் ஜூன் மாத ஊதியத்தை ஊழியர்களுக்கு வழங்குவதற்கும், பி.எஸ்.என்.எல்.   நிறுவனத்தின் அன்றாட சேவைகளைத் தொடர்வதற்குமே கூட சிரமம் ஏற்படும் என்றும் கடிதத்தில் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், ஊழியர்களையும் பொது மக்களையும், தவறாக வழிகாட்டும் வகையில் பல ஊடகச் செய்திகளை சில சுயநல சக்திகள் வெளியிட்டு வரு கின்றன.

 பி.எஸ்.என்.எல்.  வாடிக்கையாளர்களை தனியார் நிறுவனங்களுக்கு மாறி விடுமாறு ஆலோசனை கூறும் அளவிற்கு அவர்கள் விஷமச் செய்திகளைப் பரப்பி வருகின்றனர்.

பிரச்சனை என்ன?
தற்போது பி.எஸ்.என்.எல். மட்டுமல்ல; அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நடைமுறைப் படுத்தி வரும் கழுத்தறுப்பு விலைக் குறைப்பின் காரணமாக அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் குரல்வளை யையும் நிதி நெருக்கடி என்பது நெரித்துக் கொண்டி ருக்கிறது.
செப்டம்பர் 2016- இல் சேவைகளைத் துவக்கிய காலம் முதல் அடக்க விலைக்கும் குறைவாகவே ஜியோ நிறுவனம் சேவைகளை வழங்கி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பொருளாதார பலத்தை வைத்துக் கொண்டு, போட்டியாளர்களை எல்லாம் வெளியேற்றுவ தற்காக இத்தகைய விலை குறைப்பை செய்து வருகிறது.
அரசாங்கமும், டிராய் அமைப்பும் ஜியோ நிறுவனத்துக்கு நேரடி மற்றும் மறைமுக உதவிகளைச் செய்து வரு கின்றன. அதன் விளைவாக, பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வருமானமும் தலை கீழாக அதல பாதாளத்துக்குச் சரிந்துள்ளன.
 ரிலையன்ஸ் ஜியோ தொடுத்த கொடூரமான கட்டண யுத்தம் காரணமாக, ஏற்கனவே ஏர்செல், டாடா டெலி சர்வீசஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃபோ காம், டெலினார் உள்ளிட்ட பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.

பிஎஸ்என்எல் நிறுவனம் திறனற்றதா?
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் செயல் திறன் குறித்துப் பேசுவோர், ஒரு விஷயத்தை மறக்கக் கூடாது. இன்றிருப்ப தைக் காட்டிலும் ஒரு லட்சம் ஊழியர்கள் கூடுதலாக இருந்த காலத்தில், இதே பி.எஸ்.என்.எல். நிறுவனம், 2004-05 ஆம் ஆண்டில் நிகர லாபமாக 10,000 கோடி ரூபாயை ஈட்டியது.

ஆனால் அதன் பின்னர், 7 ஆண்டுகள் நீண்ட காலத்திற்கு, தனது கட்டமைப்புகளை விரிவாக்குவதற்குத் தேவையான புதிய கருவிகள் வாங்குவதற்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை அப்போதிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அனுமதிக்கவில்லை.
பி.எஸ்.என்.எல். நிறுவனம் அதற்காக வெளியிட்டு, இறுதி செய்யப்பட விருந்த டெண்டர்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக ரத்து செய்யப்பட்டன.
இது பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதித்தது.
மேலே சொல்லப்பட்ட நெருக்குதலுக்குப் பிறகும் கூட, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரும் வரை பி.எஸ்.என்.எல். நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

2014-15 நிதியாண்டு முதற்கொண்டு, பி.எஸ்.என்.எல்.  நிறுவனம் செயல்பாட்டு லாபத்தைத் தொடர்ந்து ஈட்டி வந்தது. 2015- ஆம் ஆண்டு தனது சுதந்திர தின உரையின் போது கூட, பிரதமர் நரேந்திர மோடி நிறுவனம் செயல்பாட்டு லாபத்தை ஈட்டத் துவங்கியுள்ளதைப் பெருமையோடு குறிப்பிட்டார்.
 இன்றைய நிதி நெருக்கடிகளுக்கு இடையிலேயும், பி.எஸ்.என்.எல். நிறுவனம், தனது மொபைல் வாடிக்கை யாளர் தளத்தைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
 உதாரணமாக, 2017-18- ஆம் ஆண்டில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மொபைல் வாடிக்கையாளர்கள் 11.5 % அதிகரித்தனர்.

ஆனால் இதே ஆண்டில் ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்கள் 9.5 %, வோடஃபோன் 3.8%, ஐடியா நிறுவனம் 3.2% என்ற அளவில் மட்டுமே அதிகரித்தன.
2019 ஏப்ரல் மாதத்தில் கூட, பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2,32,487 புதிய மொபைல் வாடிக்கையாளர்களை அதிக ரித்துள்ளது. ஆனால் ஏர்டெல் 29,52,209 மொபைல் வாடிக்கையாளர்களையும் வோடஃபோன் 15,82,142 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன.
நிதி நிலை குறித்துப் பேசினாலும் கூட, தனியார் நிறுவ னங்களோடு ஒப்பிடும் போது, பி.எஸ்.என்.எல். நிறுவ னத்தின் நிலை அந்த அளவு மோசமல்ல.
 இன்றைய தேதி யில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கடன் 13,000 கோடி ரூபாய்கள் மட்டுமே. ஆனால் வோடஃபோன் ஐடியா நிறுவ னம் ரூ. 1,18,000 கோடியும், ஏர்டெல் நிறுவனம் ரூ.1,08,000 கோடியும் கடன் வைத்துள்ளன.
 ரிலையன்ஸ் ஜியோ நிறு வனம் கூட 1,12,000 கோடி ரூபாய் அளவுக்கு மிகப் பெரிய கடன் சுமையைக் கொண்டுள்ளது.

மிகப்பெரும் சொத்து
மேலும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நிதி அடித்தளம் போதுமான வலிமை கொண்டதாகவே உள்ளது. 7.5 லட்சம் வழித்தட கிலோ மீட்டர் அளவு கண்ணாடி இழை வலைக் கட்டமைப்பு பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் உள்ளது.
 ஆனால், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திடம் 6.25 லட்சம் கிலோ மீட்டரும், ஏர்டெல் நிறுவனத்திடம் 2.5 லட்சம் கிலோ மீட்டரும், வோடஃபோன் ஐடியா நிறுவனத்திடம் 1.6 லட்சம் கிலோ மீட்டரும் மட்டுமே உள்ளன. பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் நாடு முழுவதும் ரூ.ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள நிலங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.
வேறு எந்த நிறுவனத்திடமும் இவ்வளவு பெரிய சொத்துக்கள் இல்லை. மேற்சொன்ன இத்தனை வலிமைகள் இருந்தும், பி.எஸ்.என்.எல். நிறுவனம் கடுமையான பணப்புழக்க குறை பாட்டை சந்தித்து வருகிறது.

தொலைத்தொடர்புத் துறைக்கு இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி தான் இதற்கு காரணம். பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 100% பங்குகளும் இந்திய அரசுக்குச் சொந்தமானது.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில், பி.எஸ்.என்.எல். நிறுவ னத்தின் குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன தேவை களைப் பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும். பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொடங்கி நடைபெற்று வரும் இந்த பதினெட்டரை ஆண்டுக் காலத்தில், மக்களின் வரிப்பணத்திலிருந்து ஒரு பைசா கூட நிதி உதவியாக பி.எஸ். என்.எல். நிறுவனம் அரசிடம் இருந்து பெறவில்லை என்று கூறுவது உண்மைதானே தவிர மிகைப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.

இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் போதெல்லாம் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை அரசு மேற்கொள்ளும்போது அதற்குக் கை கொடுப்பது பி.எஸ்.என்.எல். நிறுவனம் மட்டுமே. இந்த சமயங்களில் எல்லாம், தங்கள் பொறுப்புகளி லிருந்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தப்பி ஓடி விடுகின்றன. அது மட்டுமன்றி, பின் தங்கிய மற்றும் தொலை தூரப் பகுதிகளில் வாழும் மக்கள் மங்கள் தொலைத்தொடர்புத் தேவைகளுக்கு பி.எஸ்.என்.எல்.  நிறுவனத்தை மட்டுமே நம்பியுள்ளனர்.
எனவே, பி.எஸ். என்.எல். நிறுவனத்தின் நிதி ஸ்திரத் தன்மையை உறுதிப் படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கே உள்ளது. எனினும் மத்தியில் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அனைத்து அரசுகளும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தி வந்துள்ளன.
 இன்றும் இதே நிலைமை தொடர்கிறது. உதாரணமாக, மொபைல் சேவை வழங்குவதற்கு தனியார் நிறுவனங்க ளுக்கு 1995- ஆம் ஆண்டிலேயே அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். -க்கு, 2002- ஆம் ஆண்டில்தான் மொபைல் சேவை அனுமதி வழங்கப்பட்டது. மேலும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 4 ஜி சேவையினை வழங்கி ஐந்தாண்டுகள் ஆகிறது. ஆனால் இன்று வரை பி.எஸ்.எம்.எல் நிறுவனத்திற்கு 4 ஜி அலைக்கற்றையை அரசாங்கம் வழங்கவில்லை. இவ்வாறாகத்தான் அரசின் கொள்கை முடிவுகள், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் வளர்ச்சியை கடுமையாக பாதித்துள்ளன.
 2000- ஆம் ஆண்டு, பி.எஸ்.என்.எல். நிறுவனம் உரு வாக்கப்பட்டபோது, அதன் நிதி ஸ்திரத் தன்மை பாது காக்கப்படும் என்று மத்திய அமைச்சரவை உறுதி அளித்தி ருந்தது.
ஆனால், இந்த வாக்குறுதி காகிதத்தில் மட்டுமே உள்ளது. தொலைத் தொடர்புத் துறையின் உண்மையான கட்டுப்பாட்டாளராக பி.எஸ்.என்.எல். மட்டுமே உள்ளது.

 பி.எஸ்.என்.எல். நிறுவனம் சந்தையில் இருப்பதால் மட்டுமே, தனியார் நிறுவனங்கள் கட்டணங்களை தன்னிச் சையாக உயர்த்தி வாடிக்கையாளர்களை கொள்ளை யடிக்க முடியவில்லை. பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூடப் பட்டால், தனியார் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை தங்கு தடையின்றி சுரண்டுவதற்கான சூழ்நிலை ஏற்படும். எனவே, நாட்டின் நலன் மற்றும் நாட்டு மக்களின் ஒட்டுமொத்த நலன்களை கருத்தில் கொண்டு, பி.எஸ்.என்.எல் எனும் மாபெரும் நிறுவனத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------ 
"தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டத்தில், மத்திய நீர் வளத்துறை கேட்ட தகவல்களை தராமல், பொதுப்பணித் துறை அலட்சியமாக இருந்த தகவல் அம்பலமாகி உள்ளது."

 தமிழகத்தில், காவிரி - வைகை - குண்டாறு; தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு உள்ளிட்ட ஆறுகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த 2012 முதல், மத்திய அரசிடம் நிதி பெறும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.


அப்போது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்.,அரசு, இத்திட்டத்திற்கு நிதி வழங்க மறுத்து விட்டது.
 இதை தொடர்ந்து, 2014ல், பா.ஜ., ஆட்சிக்கு வந்தது முதல், மீண்டும் நிதி பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
 ஆறுகள் இணைப்பு திட்டத்தை, மத்திய அரசு நேரடியாக செயல்படுத்த உள்ளதாக கூறப்பட்டதால், மாநில அரசின் முயற்சி யில் பின்னடைவு ஏற்பட்டது.

இதில், தாமிரபரணி - கருமேனியாறு-நம்பியாறு திட்டபணிகள் ஏற்கனவே துவங்கியதால், கன்னடியன் கால்வாய் அமைப்ப தற்கு, பிரதமரின் திட்டத்தின் கீழ் நிதியுதவி கோரப்பட்டது.இந்த கால்வாய் அமைத்தால், திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில், தண்ணீர் தட்டுப் பாட்டால் தவிக்கும் சாத்தான்குளம், திசையன் விளை உள்ளிட்ட பகுதிகள் பயன் பெறும்.

இதற்கான நிதி பெறும்தொடர் முயற்சிகளை, பொதுபணித் துறை அதிகாரிகள் மேற்கொள்ளாமல், அலட்சியம் செய்துள்ளனர்.இதனால், மத்திய அரசு கொடுத்திருந்த காலக்கெடு, ஏப்., 18ல் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து விழித்துக் கொண்ட பொது பணித்துறை, மத்திய அரசிடம் நிதி வழங்க, கால நீட்டிப்பு கேட்டுள்ளது. கால நீட்டிப்பு கேட்பதற்கான உரிய விளக்கத்தை அளிக்கும் படி, மத்திய நீர்வள ஆணையம் தரப்பில், பொதுப்பணித் துறையிடம் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு,துறை அதிகாரிகள், உரிய விளக்கத்தை அளிக்க தவறி விட்டனர்.
இத்தகவல், தற்போது அம்பலமாகி உள்ளது. இதனால், இத்திட்டத் திற்கு, மத்திய அரசின் நிதி கிடைப்பது கேள்விக்குறியாகி உள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
 தனியார் கல்லூரிகளில் 
ஏன் இந்த திடீர் நெருக்கடி
 தமிழகத்தில் ஆசிரியர் தகுதி குறித்த யு.ஜி.சி., உத்தரவை உரிய காலத்தில் பின்பற்ற நடவடிக்கை எடுக்காத உயர் கல்வி துறையால் தனியார் கல்லுாரிகள் தற்போது கடும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பணிநீக்கம் செய்யப்படும் ஆசிரியர் இடத்தில் புதிய தகுதியுள்ள ஆசிரியர்கள் கிடைக்காததால் அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது.
தமிழகத்தில் 450க்கும் மேற்பட்ட சுயநிதி கல்லுாரிகள் உள்ளன. அரசிடமிருந்து எவ்வித நிதியுதவியும் பெறாமல் தன்னாட்சி அந்தஸ்து பெற்று செயல்படுகின்றன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பணியில் உள்ளனர். இக்கல்லுாரிகளில் பல்லாயிரக்கணக்கானமாணவர்கள் பயில்கின்றனர்.


யு.ஜி.சி., விதிப்படி பல்கலைகள் மற்றும் பல்கலைக்கு உட்பட்ட இணைவிப்பு கல்லுாரிகளில் பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் செட்/நெட் அல்லது பிஎச்.டி., தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் மதுரை காமராஜ், சென்னை மற்றும் நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைகள் மற்றும் இணைவிக்கப்பட்ட கல்லுாரிகளில் இவ்விதி பின்பற்றப்படவில்லை என நாகர்கோவிலில் உள்ள மூட்டா அமைப்பை சேர்ந்த அனந்தகிருஷ்ணன் ஜன., 2014ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'தகுதியில்லாத ஆசிரியர்கள் நியமனங்கள் குறித்த விவரங்களை சம்மந்தப்பட்ட பல்கலைகளுக்கு புகார்தாரர் அளித்தால், அதன் மூலம் பல்கலைகள் சம்மந்தப்பட்ட கல்லுாரிகளில், தகுதியில்லாத ஆசிரியர் நியமனங்கள் குறித்து மூன்று மாதங்களுக்குள் விசாரித்து யு.ஜி.சி.,க்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின் யு.ஜி.சி., சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என 11.8.2014 ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

துாங்கியதா பல்கலைகள்
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுப்படி பல்கலைகள் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அதன் அறிக்கையை யு.ஜி.சி.,யிடம் அளித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை. உதாரணமாக, மதுரை காமராஜ் பல்கலையில் கல்யாணி, அவருக்கு பின் செல்லத்துரை என துணைவேந்தர்கள் பதவியில் இருந்த காலத்தில் இப்பிரச்னையில் எள் அளவுகூட அக்கறை காட்டவில்லை. மாறாக விதிமீறிய நியமனங்கள் தான் தொடர்ந்தன.

அதேநேரம் 2014 முதல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தபோதும் கூட இணைவிப்புக் கல்லுாரிகளில் ஏராளமான புதிய கோர்ஸ்கள் துவங்கப்பட்டன. இதற்கு யு.ஜி.சி., விதித்த நெட்/செட் அல்லது பிஎச்.டி., தகுதியுள்ள ஆசிரியர்கள் இருந்தால் தான் அனுமதி அளிக்க முடியும் என ஏன் பல்கலைகள் கண்டிப்பு காட்டவோ, நடவடிக்கை எடுக்கவோ செய்யவில்லை.

அப்போதெல்லாம் தனியார் கல்லுாரிகளுக்கு ஆய்வுகளுக்கு சென்ற பல்கலை அதிகாரிகள் குழு இதுகுறித்து கல்லுாரிகளை எச்சரிக்க வில்லை. மாறாக கல்லுாரி நிர்வாகங்கள் நீட்டிய பைல் களில் 'கையெழுத்து' போட்டு கோர்ஸ்களுக்கு அனுமதியை அள்ளி வழங்கிய அதிகாரிகளை என்ன செய்வது? அவர்கள் குறித்து விசாரிக்க உத்தரவிடப்படுமா? துாங்கி வழிந்த பல்கலைகளால் தான் இவ்வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்றத்தில் புகார்தாரர் அனந்தராமன் மீண்டும் முறையிட்டதால் தான் பிப்.,2017 ல் இதை நீதிமன்றம் அவதுாறு வழக்காக (வழக்கு எண்: 933/2017) எடுத்தது.

இதன் பின் தான் பல்கலைகள் சுறுசுறுப்பு அடைந்து சுற்றறிக்கைகள் மேல் சுற்றறிக்கைகள் அனுப்பி 'எங்கள் மீது தவறு ஏதும் இல்லை. எல்லாமே கல்லுாரிகள் மீது தான் தவறு' என ஆதாரங்களை காட்டுகின்றன.

எனவே பல்கலைகளின் இதுபோன்ற பொறுப் பற்ற செயல் பாடுகள் காரணமாக இன்று தமிழக அளவில் தனியார் கல்லுாரிகள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளன. இதற்கு அந்த  கால கட்டங்களில் பல்கலைகளில் பதவியில் இருந்த துணைவேந்தர்கள், பதிவாளர்கள் தான் பொறுப்பு. அவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.தீராத குழப்பத்திற்கு யார் காரணம்
வழக்கு தொடர்ந்த 2014ம் ஆண்டிலேயே நீதிமன்றம் உத்தரவை உயர்கல்வி கடுமையாக அமல்படுத்தி இருந்தால் தனியார் கல்லுாரிகளுக்கு தற்போது இந்த குழப்பமே ஏற்பட்டிருக்காது என்பது தெளிவு. அதேநேரம், உரிய காலத்தில் 'நெட்' (தேசிய தகுதி தேர்வு) நடத்தப்படுவது போல் தமிழகத்தில் 'செட்' (மாநில தகுதி தேர்வு) தேர்வுகள் நடத்தப்படுவது இல்லை.

ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு பல்கலை பொறுப்பேற்று 'செட்' தேர்வை நடத்தும். ஆனால் இந்தாண்டு இதுவரை 'செட்' தேர்வுக்கான அறிவிப்பு கூட வெளியாகவில்லை. யு.ஜி.சி., உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் கண்டிக்கும் இந்த சூழ்நிலையில் தமிழக அரசு 'செட்' தேர்வு நடத்த இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
வழக்கம்போல் ஜூனில் இத்தேர்வு நடத்தப் பட்டு இருந்தால் பல தகுதியான ஆசிரியர்கள் கிடைத்து இருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். யு.ஜி.சி., உத்தரவை அமல்படுத்த காரணம் காட்டி 'செட்' தேர்வை ஏன் நடத்தவில்லை என நீதிமன்றமாவது தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியிருக்கலாம்.

யு.ஜி.சி., உத்தரவுப்படி தகுதியான ஆசிரியர்களை நியமிக்க கல்லுாரி நிர்வாகங்கள் தயாராக இருந்தாலும் தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பதில்லை.குறிப்பாக தமிழ், ஆங்கிலம் தவிர அறிவியல் பாடங்களுக்கு செட்/நெட் அல்லது பிஎச்.டி., முடித்த ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. பல பல்கலைகளில் தகுதியான பேராசிரியர் பலர் பிஎச்.டி., கைடு அந்தஸ்து விண்ணப்பித்து காத்துக்கிடக்கின்றனர்.
தற்போதுள்ள பணியில் உள்ள ஆசிரியர்கள் பிஎச்.டி., முடிக்க முயற்சித்தாலும் அதற்கான 'கைடுகள்' கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. உதாரணமாக ஒரு கல்லுாரியில் ஒரே நேரத்தில் 20 ஆசிரியர்கள் வரை வேலையிழக்க நேர்ந்தால் அங்கு படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நிலை என்னவாகும். தகுதியான ஆசிரியர்கள் தட்டுப்பாடுள்ள நேரத்தில் உடனடியாக 20 ஆசிரியர்களை கல்லுாரி நிர்வாகம் நியமிக்க முடியுமா?என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்

உடனடியாக 'செட்' தேர்வை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தாமதம் ஏற்படும்பட்சத்தில் நீதிமன்றம் தலையிட்டு தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும். இம்மாதம் அறிவிக்கப்பட்டு ஜூலையில் 'செட்' நடத்தினால் கூட 50 சதவீதம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளது.கடந்தாண்டுடன்கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை மூன்று ஆண்டுகள் தேர்வை நடத்தி முடித்த நிலையில், அடுத்து எந்த பல்கலை செட் தேர்வு நடத்த வேண்டும் என உயர்கல்வித்துறை இதுவரை அறிவிக்கவில்லை. இதற்கு யார் பொறுப்பேற்பது?


தனியார் கல்லுாரிகளில் உடனடியாக தகுதியான ஆசிரியர்களை நியமிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து நீதிமன்றத்தில் தெளிவாக தமிழக அரசு விளக்கம் அளிக்க முன்வர வேண்டும். போதிய பிஎச்.டி., கைடுகள் இல்லை. 'செட்' தேர்வு நடத்தவில்லை என்பதை தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் 'நெட்' தேர்வில் வெறும் 4 முதல் 5 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர்.
இதனால் உடனடியாக தகுதியான ஆசிரியர்கள் கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து நீதிமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அவகாசம் கிடைத்தால் தற்போதுள்ள ஆசிரியர்கள் யு.ஜி.சி., தகுதிகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். மாணவர்கள் நலனும் காக்கப்படும். தமிழக அரசு இவ்விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த திடீர் நெருக்கடியால் ஏராளமான ஆசிரியர்கள் பணியை இழந்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்து வேலையிழந்ததால் அவர்களின் குடும்பங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.அவர்கள் கூறியதாவது: எங்களுக்கு தகுதி இல்லை என்றால் 10 ஆண்டு களுக்கும் மேலாக எங்களிடம் படித்து அதன் மூலம் பெற்ற மாணவர்களின் கல்வியை என்ன செய்வது.
செட்/நெட் அல்லது பிஎச்.டி., முடிக்காத எங்களை ஒவ்வொரு ஆண்டும் விடைத்தாள் திருத்த பல்கலைகள் ஏன் அழைத்தன. அவதுாறு வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையிலும் நாங்கள் திருத்தும் பணிக்கு அழைக்கப்பட்டோம். அந்த விடைத்தாள்கள் ஏற்கப்படுமா?பிஎச்.டி., படிக்க நாங்கள் தயாராக உள்ளோம். அனைத்து தகுதிகளும் உள்ளன. ஆனால் கைடுகள் கிடைக்க வில்லையே. கிடைக்கும் சில கைடுகளுக்கும் 2 லட்சம் ரூபாய் வரை 'லஞ்சம்' கொடுக்க வேண்டுமே. கைடுகளுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக மதுரை காமராஜ் பல்கலை உள்ளிட்ட பல இடங்களில் புகார் எழுந்தும் இதுவரை உயர்கல்வி துறை என்ன நடவடிக்கை எடுத்தது.

தமிழக அரசும் இந்தாண்டு 'செட்' தேர்வு அறிவிப்பு வெளியிடவில்லை. இது ஜூனில் நடந்தால் குறைந்தபட்சம் 60 சதவீதம் பேர் தகுதி பெற்றிருப்போம். இது யார் தவறு. இதுபோன்ற பல காரணங்கள் உயர்கல்வி, தமிழக அரசு மீது சுட்டிக்காட்டப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தகுதியை உயர்த்திக் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் அதற்கான வழிமுறைகள் அமைத்து கொடுக் கப்படவில்லையே. 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்தும் திடீரென வெளி யேற்றப்பட்டால் எங்கள் குடும்பம் என்னாகும் என்பதை யாராவது நினைத்து பார்த்தார்களா?

உண்மை நிலை குறித்து தமிழக அரசு விசாரித்து நீதிமன்றத்தில் எடுத்துரைத்தால் ஆயிரக்கணக்கான ஆசியர்கள் குடும்பங் களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் என்றனர்.

தமிழகத்தின் மூத்த கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது:தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு மற்றும் உதவிபெறும் கல்லுாரிகளால் மட்டும் தேவையான தரமான உயர் கல்வியை வழங்கி விடமுடியாது. இதை உணர்ந்து தான் தனியார் சுயநிதி கல்லுாரிகளுக்கு அரசு அனுமதி வழங்கியது. இதற்காக எவ்வித நிதியும் பெறுவதில்லை.

ஆனால் அரசிடமிருந்து அனைத்து சலுகை களையும் பெரும் அரசு மற்றும் உதவிபெறும் கல்லுாரிகளுக்கான விதிமுறைகளை பின்பற்ற சொல்வது எவ்வகையில் நியாயம். தமிழகத்தின் பெருமைஇந்திய அளவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 48.6 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது தமிழகம் தான். ஆனால் இந்திய அளவிலான சேர்க்கை சதவீதம் 25.8 தான். இந்த பெருமை அதிக எண்ணிக்கையில் உள்ள சுயநிதி கல்லுாரிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்து படிப்பதால் தான் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.


குறிப்பாக கிராமப்புறங்களிலும் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடியதாக தனியார் கல்லுாரிகளே உள்ளன. அரசு கல்லுாரிகள் அங்கொன்றும், இங்கொன்றும் தான் உள்ளன.இதுதவிர இன்றைக்கு முன்னணி ஐ.டி., மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்புகளை பெறுவது சுயநிதி கல்லுாரிகளில் படித்த மாணவர்கள் தான்.

இக்கல்லுாரி மாணவர்களை நம்பித்தான் மிகப் பெரிய ஐ.டி., மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவிற்குள் தங்கள் நிறுவனங்களை துவக்குகின்றன. இதுவே நாட்டின் வளர்ச்சிக் கும் பின்னணியாக உள்ளது. அதுபோல் தேசிய அளவில் தரம் வாய்ந்த கல்லுாரிகள் (என்.ஐ. ஆர்.எப்.,) பட்டியலில் இடம் பெறுவதும், 'நாக்'கில் அதிகமாக கிரேடுகள் பெற்றுள்ளதும் சுயநிதி கல்லுாரிகள் தான்.


இது தவிர ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புக்களையும் இக்கல்லுாரிகள் அளிக்கின்றன. இங்கு பணியாற்றிய அனுபவம் மூலம் பெரும் பாலான துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் அரசு மற்றும் உதவிபெறும் கல்லுாரிகளில் பணி நியமனமாகின்றனர். நேரடி பணி நியமனங்கள் என்பது குறைவே. இதுபோன்ற சுயநிதி கல்லுாரிகளின் சாதனைகளை தமிழக அரசு உணர வேண்டும்.

இவ்வாறு உயர்கல்வி துறை வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் சுயநிதி கல்லுாரிகள் முக்கிய பங்கு வகின்றன. இதனால் இக் கல்லுாரிகள் வளர்ச்சிக்கு தமிழக அரசு துணை யாக இருக்க வேண்டுமே தவிர, ஒரு நெருக்கடி வரும்போது பாராமுகமாக இருப்பது அரசின் சரியான நிலைப்பாடு அல்ல.இவ்வாறு தெரிவித்தனர்.
              திராவிடக் கிளி ?
----------------------------------------------------------------------------------------------------------------------------------
 

வியாழன், 27 ஜூன், 2019

மோடி அரசும் பங்குச் சந்தையும்

 புள்ளி விவரங்கள் தரும் உண்மைகள்
கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பங்கு சந்தை களில் காணப்படும் ஏற்ற, இறக்கங்களை அடிப்ப டையாகக் கொண்டு பல முதலாளித்துவ ஊட கங்கள் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சிக்கும் போக்கு காணப்படுகிறது.

குறிப்பாக நமது நாட்டில் 1990களில் புதிய பொரு ளாதார கொள்கை அமல்படுத்த துவங்கிய காலகட்டத்தில் இருந்து நாட்டில் ஏற்படும் அரசியல் நிகழ்வுகள், சர்வதேச பிரச்சனைகள், பருவ மாற்றங்களால் ஏற்படும் மழை, வெள்ளம், வறட்சி மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகளும் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு காரணிகளாக அமைகிறது.
இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக முதலா ளித்துவ ஏடுகள் மோடி தலைமையிலான அரசு, ‘வளர்ச்சியின் அரசு’  என்ற பெயரில், இந்தியா வளர்ந்து வருவதாகவும், நாடே முன்னேறி வருவது போன்ற மாயத் தோற்றத்தையும் படித்த மற்றும் மத்திய தர வர்க்கத்திடம் ஏற்படுத்தி வருகின்றன.
   சென்ற மத்திய மற்றும் மாநில தேர்தல்களில் பாஜக அரசு தேர்தல் நிதி பத்திரங்கள் வாயிலாக உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் இருந்து திரட்டிய மிகப் பெரிய அளவிலான நிதியை கொண்டு மிகப்பெரிய அளவிலான பரப்புரையை மேற்கொண்டும், மிகப் பெரிய அளவிலான விளம்ப ரங்களை கொண்டும் பல முதலாளித்துவ ஊடகங்கள் வாயிலாக தவறான தகவல்களை மக்கள் மன்றத்தில் கட்டமைத்து வருகிறது.

இதுகுறித்து மாநிலங்களவையில் பேசும் போது மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் டி.கே.ரங்க ராஜன் அவர்கள், கடந்த தேர்தலில் மட்டும் பாஜக 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு செலவு செய்திருப்பதாக ஊடக ஆய்வு மையம் (centre for media studies) வெளியிட்ட விபரத்தை தெரிவித்தார்.
 அதாவது நமது நாட்டின் மொத்த தேர்தல் செலவினத் தொகையில் பாஜக 45 சதவீதம் செலவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

பங்குச்சந்தை பித்தலாட்டம்
இத்தகைய நடைமுறை சூழலில் நமது நாட்டின் பங்கு சந்தை புள்ளி விவரங்களை ஆய்வு செய்து பார்க்கும் போது மோடி அரசின் பித்தலாட்டத்தை நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
மேற்கண்ட பங்கு சந்தை புள்ளி விபரங்களை பார்க்கும் போது ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்த பிர தமர்களில் பாரதிய ஜனதாவின் ஆட்சியில் தான் பங்கு சந்தை களின் வளர்ச்சி விகிதம் மிகவும் குறைந்து காணப்படுகிறது.

பாரத பிரதமர்களில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆட்சி யில் இருந்த வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பங்கு சந்தைகள் எதிர்மறை வளர்ச்சியை (Negative growth) காட்டியுள்ளது.
 நமது நாட்டில் புதிய பொருளாதார கொள்கைக்கு பின் பொறுப்பில் இருந்த எந்த பிரதமரும் வாஜ்பாய் ஆட்சி போன்று எதிர்மறை பங்கு சந்தை வீழ்ச்சியை காட்ட வில்லை.
 மறுபுறம் தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள மோடி காலகட்டத்தில் மிகக்குறுகிய அளவில் (9.50%) பங்கு சந்தைகள் வளர்ச்சியை காட்டியுள்ளது.
இது குறுகிய காலம், நமது நாட்டில் பிரதமர் பொறுப்பில் இருந்த தேவகவுடா, குஜரால் போன்றவர்களை காட்டிலும் அதிகம் என்று வேண்டுமானால் பெருமைபட்டுக் கொள்ளலாம்.

 நமது நாட்டில் ஐந்து ஆண்டுகள் தொடர் பொறுப்பில் இருந்த பிரதமர்களில் மோடி அரசு மட்டுமே குறைந்த அளவு பங்குச் சந்தை வளர்ச்சியை காட்டியுள்ளது என்பதே புள்ளி விபரங்கள் காட்டும் உண்மை.
மறுபுறம் இவையா வும் மூடி மறைக்கப்பட்டு மோடி நமது நாட்டின் வளர்ச்சி நாயகனாகவும், அவரால் தான் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வருவதாகவும் தவறான செய்திகளை முதலாளித்துவ ஏடுகள் தொடர்ச்சியாக பரப்புரை செய்து உண்மையான பொருளா தார நிலையை மறைத்து வருகிறது.
  மறுபுறம் சமீப காலத்தில் தேசிய பங்கு சந்தையில் (National stock exchange) சில பங்கு தரகர்கள் தனியாக இயங்கி பல நூறு கோடிகள் லாபம் சம்பாதித்த நிகழ்வும்; இது உண்மை என்று கண்டறியப்பட்டு பங்கு சந்தையின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதும், இத்தீர்ப்புக்கு எதிராக நாங்கள் தேசிய பங்கு சந்தையை பட்டியலிட உள்ளதால் (listing of National stock exchange) மேல் முறையீடு செய்ய போவதில்லை என்ற நிதி சார்ந்த அறிவிப்புகளும் இந்திய பங்கு சந்தையின் மேல் இருந்த நம்பகத் தன்மையை முதலீட்டாளர்களிடம் போக்கி விட்டது.
   இத்தகைய நடைமுறை சூழலில் பங்குச் சந்தைகளில் முதலீடுகளை செய்துள்ள முதலீட்டாளர்களின் பணம் பல பெரிய நிறுவனங்கள் திவாலாகும் நிலையில், பல தர நிர்ணயம் செய்யும் நிறுவனங்கள் வழங்கிய தவறான தர சான்றிதழ்களும் போலியானவை என்று கண்டறியப் பட்டுள்ள சூழலில் மோடி அரசின் எஞ்சிய காலத்தில் பங்கு சந்தைகள் வளர்ச்சி காண்பது அரிது. 
வேண்டுமானால் உரிய பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டால் தொடர் வீழ்ச்சிகளை தடுக்கலாம். 

ஆனால் வளர்ச்சியின் நாயகன் என்ற மோடியின் மோசடி பிம்பம் மக்கள் மன்றத்தில் களையும் நாள் வெகு தொலையில் இல்லை.

                                      பங்குச் சந்தை   நிலவரம் 1991-2019                        
    பிரதமர்                       கட்சி                       ஆட்சி துவங்கிய நாள்/                                         ஆட்சி முடியும் நாள்/                      (compaunded   annual growth rate)   கூட்டு வருடாந்திர 
                                                                               பங்கு சந்தை நிலவரம்                                        பங்கு சந்தை நிலவரம்                   வளர்ச்சி விகிதம் ( compaunded   annual growth rate)
பி.வி.நரசிம்மராவ்    காங்கிரஸ்              21/ஜூன்/1001    1337                                                        16 மே,1996    3823                                                                        23.90%
ஏ.பி.வாஜ்பாய்         பாரதிய ஜனதா        16/மே/1006         3823                                                     1/ஜூன்/1996   3725                                                                      -44.70%
எச்.டி.தேவகவுடா      ஜனதா                        1/ஜூன்/1996    3725                                                      21/ஏப்ரல்/97    3800                                                                        2.30%
ஐ.கே.குஜரால்             ஜனதா                       21/ஏப்ரல்/1997    3800                                                    19/மார்ச்/98    3821                                                                          0.60%
ஏ.பி.வாஜ்பாய்    பாரதிய ஜனதா             19/மார்ச்/1998    3821                                                  10/அக்டோபர்/99    4982                                                                18.50%
ஏ.பி.வாஜ்பாய்    பாரதிய ஜனதா       10/அக்டோபர்/1999    4982                                             22/மே/2004    4962                                                                             -0.10%
மன்மோகன் சிங்    காங்கிரஸ்                       22/மே/2004    4962                                                   22/மே/2009    13,887                                                                           22.80% 
மன்மோகன் சிங்    காங்கிரஸ்                       22/மே/2009    13,887                                                26/மே/2014    24,717                                                                           12.20%
மோடி                    பாரதிய ஜனதா                 26/மே/2014    24,717                                                  23/மே/2019    38,811                                                                              9.50% 
                                                                                                                                                                                                                                                                                                                                    source: Bloomberg, data as on May, 23,2019

ஆதாரம்:அவுட் லுக் மணி’ இதழில் அபராஜிதா குப்தா
எழுதிய ‘புல்ஸ் அப் தலால் ஸ்ட்ரீட் சார்ஜிடு அப்?’
என்ற கட்டுரையின் தகவல்கள்) வங்கியில் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத் தாதவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுக ளில் மட்டும் 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்த ‘வளர்ச்சி’ மோடியின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் படிப்படியாக அதிகரித்து வந்தி ருக்கிறது எனவும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இப்படி கடன் வாங்கியிருப்பவர்கள் எல்லாம் சாதாரண நபர்கள் அல்ல; மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை நடத்துபவர்கள்.
இவர்கள் வங்கி களில் வாங்கிய கடனை ஒருபுறம் செலுத்தாமல் இருந்து கொண்டே, மறுபுறம் புதுப்புது நிறுவ னங்களை தொடங்கி வருகின்றனர்.
இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய ஆட்சியாளர்கள், கடன் மோசடியில் ஈடுபடும் நிறு வனங்களுக்கு மீண்டும் கடன் கொடுக்க வங்கிக ளுக்கு நெருக்கடி கொடுக்கும் அவலம்தான் அரங் கேற்றப்பட்டு வருகிறது.

 அதே நேரம், மோடியின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் கல்விக்கடன் வழங்கும் மாண வர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப் பட்டு வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

2015ம் ஆண்டில் 3.34 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப் பட்ட கல்விக்கடன், 2019ஆம் ஆண்டு 2.5 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. 

மேலும் கல்விக்கடனை செலுத்த இயலாத மாண வர்களின் பட்டியலோடு, புகைப்படமும் வெளியி டப்படுகிறது. படித்து முடித்து வேலைக்கு காத்தி ருக்கும் நிலையில் கூட வீட்டிற்கு சென்று வங்கி அதிகாரிகளும் வசூல் ஏஜெண்டுகளும் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். 

 ஆனால் ரூ. 2.05 லட்சம் கோடி கடன் வைத்தி ருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்ப் பட்டியலைக்கூட மோடி அரசு வெளியிடத் தயாராக இல்லை. 

 உச்சநீதிமன்றம் வெளியிடச் சொல்லியும் மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. 
நாட்டில் ஒரே சட்டம், ஒரே நீதி என  பேசும் பாஜக, வசதி படைத்த முதலாளிகளுக்குக் காக சட்டத்தை வளைத்து ஒடிக்கிறது.
 ஆனால் எளிய மக்களுக்கு சட்டத்தில் இருக்கும் வாய்ப்பை கூட வழங்காமல் விரட்டி அடிக்கிறது.
 இதே மோடி அரசு 2015 முதல் 2018ம் நிதி யாண்டு வரை கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கி யில் வாங்கிய கடன் ரூ. 3 லட்சத்து 8 ஆயிரத்து 286 கோடியை வராக்கடன் என்ற பெயரில் தள்ளு படி செய்து தனது விசுவாசத்தை வெளிப்படுத்தி யதும் கவனிக்கத்தக்கது.  

ஒரு நாட்டின் சமமான வளர்ச்சிக்கு மாறாக கார்ப்பரேட்களின் வளர்ச்சியில் மட்டும் அக்கறை காட்டும் அரசாக மோடி அரசு இருந்து வந்திருக்கிறது என்பதைத்தான் வெளிவரும் ஒவ்வொரு புள்ளி விபரங்களும் தெரிவிக்கின் றன. ஏற்கனவே நாட்டின் பொருளாதார நிலை பல துறைகளில் வீழ்ச்சியடைந்து வருகிறது.

 இந் நிலையில் வங்கிகளின் வாராக்கடனும் அதிகரித்து வருவது ஆரோக்கியமான போக்கு அல்ல. இது பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும்.

ஆகவே வங்கி மோசடியில் ஈடுபட்டு வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பட்டியலை பாரபட்சமின்றி வெளியிட்டு, அந்த நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

ஜூன் 23 அன்று வெளியான வாரமலர் இதழில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குறித்த கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதைப் படித்தால் தலை சுற்றுகிறது.
முதலில் இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் உள்ள கட்டுரையைப் படித்துவிடுங்கள்.


இதைப் படித்த பிறகு, ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். அதாவது இத்தனை ஆண்டுகளாக திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலைப் பார்த்துப் பயந்துபோயிருந்த நாசா தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் பார்த்துப் பயந்து போயிருக்கிறது !

இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் வரிகள் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

1. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கண்காணித்தபோது பல அறிவியல் அற்புதங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். பிறகு, வாழ்க்கையே ஒரு வட்டமாக இருந்த நிலையில், இந்தக் கோவில் மட்டும் சதுரமாக இருந்ததாம். சமூகத்தில் எல்லோரும் சமம் என உணர்த்துவதற்காக இப்படிக் கட்டப்பட்டிருக்கிறதாம்.
 உண்மை உண்மையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செவ்வக வடிவமானது. இரு பக்கங்கள் 254 மீட்டர் நீளத்தையும் மற்ற இரு பக்கங்கள் 237 மீட்டர் அளவையும் கொண்டவை. அதுபோக, எல்லோரும் சமம் என நிரூபிக்க கோவிலை எதற்கு கஷ்டப்பட்டு சதுரமாக கட்டவேண்டும். எல்லா ஜாதியினரையும் அர்ச்சகராக்கிவிட்டால் போதாதா?

2. நீள்வட்டப் பாதையில் சுற்றும் செயற்கைக் கோளால், சதுர வடிவமான மீனாட்சி அம்மன் கோவிலைப் படம் பிடிக்க முடியாது.
உண்மை உலகம் முழுவதும் எவ்வளவோ சதுர வடிவ கட்டடங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் செயற்கைக்கோள்கள் படம் பிடிக்காதா? இந்தக் கேள்வி ஒரு பக்கமிருக்க மீனாட்சி அம்மன் கோவிலை செயற்கைக்கோள் எடுத்த படத்தையும் இங்கே பார்க்கலாம்.3. 1984-ல் ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கல் கெப்ளர் என்ற விஞ்ஞானி சதுரவடிவில் ஒரு செயற்கைக்கோளை அனுப்பி மீனாட்சி அம்மன் கோவிலை படம் பிடித்தார்.
உண்மை: மைக்கல் கெப்ளர் என ஜெர்மன் விஞ்ஞானி யாரும் கிடையாது. தவிர, 1984-ல் மைக்கல் கெப்ளர் மட்டுமல்ல, ஜெர்மனியே எந்த செயற்கைக்கோளையும் விண்ணுக்கு அனுப்பவில்லை.

4. சதுரமான கோவில் வட்டவடிவமாகத் தெரிய கோவிலின் ஒரு கோபுரமான மொட்டை கோபுரம் தான் என்பதைக் கண்டறிந்தார். சாட்டிலைட் சிக்னல்களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள் அதை மொட்டை கோபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும். மொட்டை கோபுரம் அந்த சிக்னல்களை கிரகித்து குழப்பி அடித்து புது சிக்னலை சாட்டிலைட்டிற்கு அனுப்பும்.
உண்மை: கோபுரங்களின் மீது கலசங்களும் இடிதாங்கிகளும்தான் இருக்கின்றனவே தவிர, டிரான்ஸ்பான்டர்கள் ஏதும் கிடையாது.

5. அதே போல மொட்டை கோபுரத்தின் மீது எந்த இராடாரும் வேலை செய்யாது எனவும் கண்டறிந்தார்..
உண்மை இராடாரை எங்கு பொறுத்தினாலும் வேலை செய்யும். ஆனால், கோவில் கோபுரத்தின் மீது ஒருவரும் பொறுத்த மாட்டார்கள்.

6. ஆயிரங்கால் மண்டபம் உண்மையில் 965 கால்கள் உடையது என்பதை அறிந்து மிகவும் வியந்து போனார். காரணம் 965 என்பது விண்வெளியில் தவிர்க்க இயலாத எண்!! ஸ்பேஸ் சென்டர்களை நிலை நிறுத்தும் உயரத்தை 965 Stand எனக் குறிப்பிடுவார்கள்.!
உண்மை: ஆயிரங்கால் மண்டபம் 965 தூண்களைக் கொண்டதல்ல. 985 தூண்களைக் கொண்டது. மீதி 15 தூண்கள் இருக்க வேண்டிய இடத்தில் விஸ்வநாதர் சன்னிதி இருக்கிறது. தவிர, 965 ஸ்டான்ட் என விண்வெளியில் ஏதும் கிடையாது.

7. வாணியன் கிணற்று சந்துக்கு செல்லும் கிணற்று சுரங்கத்தில் இருந்த கல்லை புகைப்படம் எடுத்தவர் அதை என்லார்ஜ் செய்து பார்த்த போது ஓ.. ஜீசஸ் என அலறியே விட்டார்.! அப்பாறையில் இருந்த வரி வடிவங்கள் அச்சு அசலாக இராக்கெட்டுகளின் சர்க்யூட் பேனல்களின் வடிவத்தில் இருந்தது!!!
உண்மை: கிணற்றுச் சுரங்கம் எப்போதோ மூடி பூசப்பட்டுவிட்டது. அதிலிருந்து எந்தக் கல்லையும் யாரும் எடுக்க முடியாது.

8. மேலும் பொற்றாமரைக் குளத்தருகே மட்டும் இரவில் அமாவாசை பவுர்ணமி இரண்டிலும் ஒரே அளவுள்ள வெளிச்சம் இருப்பதைப் பார்த்து அதிசயத்து போனார்! அது எப்படி என்று இன்றுவரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.!
உண்மை இதை கோவில் நிர்வாகத்திடம் கேட்டால் சொல்லியிருப்பார்கள். காரணம், அங்கு பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகள் அம்மாவாசை, பௌர்ணமி தினங்களில் ஒரே மாதிரிதான் எரியும். அதனால், வெளிச்சத்தில் எந்த மாறுபாடும் இருக்காது. அதுமட்டுமல்ல, தேர்தல் நடக்கும் தினம், ரம்ஜான் தினத்தன்றுகூட எந்த மாறுதலும் இருக்காது.

9 . சித்தர் சந்நிதி, தட்சிணாமூர்த்தி சந்நிதி, முக்குறுணி விநாயகர் சன்னிதி, இவையெல்லாம் விண்வெளி வீரர்கள் அமரும் சேம்பர்கள் வடிவில் கட்டப்பட்டிருந்தன!!
உண்மை: மீனாட்சி அம்மன் கோவிலைப் பார்க்காதவர்கள்தான் இப்படி எழுத முடியும். உண்மையில் இந்த சன்னிதிகள் வெவ்வேறு வடிவில் அமைந்தவை. விண்வெளி வீரர்கள் இருக்கும் ராக்கெட்டுகள் வட்ட வடிவிலானவை.

10. நாயன்மார்கள் பிரகாரம்,108 லிங்கங்கள் பிரகாரம் இவையெல்லாம் ஸ்பேஸ் ஷட்டில் வடிவில் கட்டப்பட்டிருந்ததை பிரமிப்புடன் பார்த்தார்.
உண்மை: நாயன்மார் சிலைகளும் 108 லிங்கங்களும் சுவாமி சன்னதி அம்மன் சன்னதியிலும் பிரகாரங்களிலும் அமைந்திருக்கின்றன. தனியாக சன்னதி கிடையாது.
ஷப்பா…

(அது ஏன் எப்போது பார்த்தாலும் நாசா மட்டுமே நம் கோவில்களைப் பார்த்து வியக்கிறது? இஸ்ரோ, ராஸ்காஸ்மாஸ், SpaceX, JAXA, CSAASC, CNSA, ESA போன்றவையெல்லாம் வியப்பதில்லை? அவற்றுக்கு வியக்கத் தெரியாதா? நாசா விஞ்ஞானிகள் மட்டும் வேலைவெட்டியை விட்டுவிட்டு எந்நேரம் பார்த்தாலும் வியந்துகொண்டேயிருக்கிறார்கள்?)

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

------------------------------------------------------------------------------------------------------------------------------------

 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
#NoToJaiShriRam 
 ‘ஜெய் ஸ்ரீராம்’ கூறுமாறு, கடந்த ஒருவாரத்தில் மட்டும், 2 மதரசா ஆசிரியர்கள் உட்பட 3 இஸ்லாமியர்கள் மீது இந்துத்துவா வெறிக்கூட்டம் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது.


இதில், மதரசா ஆசிரியர்களான தில்லியைச் சேர்ந்த முகம்மது மோமின், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹபீஸ் முகம்மது ஷாரூக் ஹால்தர் ஆகிய 2 பேரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.

மோமின் தில்லி சாலையில், அடித்துத் தூக்கி வீசப் பட்டார். ஹால்தர் ரயிலிலிருந்து தள்ளி விடப்பட்டார்.

அதேநேரம், மின்கம்பத்தில் கட்டிப் போடப்பட்டு, சுமார் 7 மணிநேரம் தாக்கப்பட்ட, ஷாம்ஜெட்பூரைச் சேர்ந்த ஷாம்ஸ் தப்ரிஸ், பரிதாபமான முறையில் இறந்துபோனார்.

இந்நிலையில், இந்துத்துவா கும்பல், கடவுள் ஸ்ரீராமனின் பெயரைப் பயன்படுத்தி, வன்முறையை அரங்கேற்றுவதற்கு, பரவலாக இந்துக்கள் மத்தியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது.

 தயவுசெய்து, ஸ்ரீராமனின் பெயரால், இஸ்லாமியர்களைத் தாக்காதீர்கள் என்று, இந்துக்களே பலர் ட்விட்டரில், #NoToJaiShriRam என்ற ஹேஷ்டேக் உருவாக்கி, அதனை டிரெண்ட் ஆக்கியுள்ளனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
    இந்தி திணிப்பு இது மோடி பாணி.