போர் துவங்கியதும் விளங்கி விடும்,
இன்றைய பரபர செய்தி அரை நூற்றாண்டாக அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டே இருந்த ரஜினி மீண்டும் தனது அரசியல் வாயை திறந்துள்ளார். அவர் அரசியலுக்கு வருவதை பார்ப்பது நமக்கு காலத்தின் கட்டாயம் என்று வேறு அறிவித்து விட்டார். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன். காலம் குறைவாக உள்ளதால் அதற்கு முன் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை. லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து அப்போது முடிவு செய்யலாம். என்றும் மேலும் கதைத்துள்ளார். தான் அரசியலுக்கு வருவதும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாலும் இனி" நான் உட்பட யாரும் அரசியல் பற்றி பேசக் கூடாது. யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். அரசியல் அறிக்கை விடவும், மக்களுக்காக போராட்டம் பண்ணவும் நிறைய பேர் உள்ளனர்."என்று சொன்னதுதான் ரஜினி அரசியல் செய்யப்போகிறாரா?அரசியல் பேசாமல் மக்களுக்காக போராடாமல் இவர் தேர்தலில் வென்று முதல்வராவது எப்படி?எதற்காக?என்பது புரியவில்லை. இப்படி செய்யாமல் தினகரனின் ஹவாலா முறையில் வென்று ஆட்சியைப்பிட...