வியாழன், 28 டிசம்பர், 2017

அழகிரியில் மையம்

குறிஞ்சி மலர் பல ஆண்டுகள் இடைவெளிவிட்டு பூக்கிறதோ இல்லையோ மதுரைக்கார உடன்பிறப்பு அழகிரி இடையிடையே திமுகவை ஒழிப்பது ,ஸ்டாலின் தலைமை பற்றி குரல் கொடுப்பதற்கு தவறுவதில்லை.

அவரை திமுகவினரே மறந்து கட்சிப் பணியாற்றுகையில் தினமலர் போன்ற பத்திரிகைகள் அழகிரிக்கு கொம்பு சீவி விடுவதில் அயராது பணியாற்றிக்கொண்டுதான் இருந்தன,இருக்கின்றன.
 எல்லாம் போகட்டும் திமுகவில் இருந்து தலைவராலேயே  நீக்கப்பட்டவர் இப்படி திமுக வறட்சி பற்றி பேச உரிமை இருக்கிறதா?


அப்படி இருந்தாலும் அப்படி பேசும் தகுதி அழகிரிக்கு இருக்கிறதா?
ஸ்டாலின் முழுத் தலைமையில் 2016 தேர்தலை திமுக சந்தித்தது.

அப்போது இந்த அழகிரி திமுக தொண்டர்களை பாஜகவுக்கும்,அதிமுகவுக்கும் வாக்களிக்க அறிக்கைவிட்டவர்.பேட்டியளித்தவர் என்பதை திமுகவினருக்கு,தமிழநாட்டினரும் மறந்திருக்க மாட்டார்கள்.

அந்த தேர்தலில்தான் 89 என்ற அளவில் திமுகவை ஸ்டாலின் வெற்றி பெற வைத்தார்.
அதுவும் எப்படி பட்ட சூழல்.?
மத்திய மோடி அரசின் ஆதரவு,தேர்தல் ஆணையத்தின் நிபந்தனையற்ற ஆதரவு,அரசு அதிகாரிகள்,காவல்துறையினர் கொத்தடிமைத்தன பணிகள்,அனைத்துக்கும் மேலாக வாக்குக்கு மடை திறந்து விடப்பட்ட பணம்.

120 க்கும் மேலான திமுக முன்னணி 11 மணியளவில் வாக்குகள் பாதி கூட எண்ணப்படாத நிலையில் பிரதமர் மோடி ஜெயலலிதாவுக்கு முதல்வரானதும் வாழ்த்துகள்  என்ற உடனே சர,சர வென மாறியது.
ராதாபுரம் உடன்பட 7 தொகுதிகள் திமுக வென்றதாக கூறப்பட்ட நிலையில் தபால் வாக்குகள் செல்லாது என கூறி அதிமுகவை அதிகார  பூர்வமாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.எதிர்த்த திமுகவினர் துணை ராணுவத்தை வைத்து வெளியே தூக்கி எறியப்பட்டனர் .

இப்படி எல்லாம் பல இடையூறுகளுக்குப் பின்னர்தான் 89 இடங்கள் கிடைத்தன.

ஆனால் அதற்கு முன்னர் 2011 இல் இதே அழகிரி இருக்கையில்தான் அதுவரை தக்க வைத்திருந்த எதிர்க்கட்சி இடத்தை கூட விஜயகாந்த் கட்சியிடம் இழந்து நின்றது.

அப்போது அழகிரி தனது செல்வாக்கை எங்கே முடக்கி வைத்திருந்தார்?
 முந்தைய மதுரை மாநகராட்சி தேர்தலில் தனது சொந்த வட்டத்தில் அழகிரி நிறுத்திய அவரது ஆதரவாளர் திமுக சார்பில் நின்று பரிதாபமாக தோற்றுப்போனாரே அதற்கு அஞ்சா நெஞ்ச அழகிரி என்ன சொல்கிறார்.


ஒரு வட்டத்திலேயே அதுவும் குடியிக்கும் பகுதியிலே தனது ஆதரவாளரான திமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க முடியாத அழகிரி வாக்குக்கு 12000/-,6000/-என்று விலை கொடுத்து வாங்கப்பட்ட ஆர்.கே,நகர் இடைத்தேர்தலை திமுகவின் இமாலய தோல்வி என்பது எந்த வகையான மதிப்பீடு ?

அவருடைய திருமங்கலம் பணம் கொடுக்கும் முறையை விட அடுத்தக்கட்ட நம்பகமான ஹவாலா முறைக்கு தினகரன் போன பின் தினகரனுக்கு வெற்றி என்பது கிட்டாமல் போகுமா என்ன?

வாக்காளர் எண் குறிப்பிட்ட 20 ரூபாய் தாளைக் கொடுத்து  வாக்களித்தப்பின்னர்  12000 என்றால் அடித்தட்டு மக்கள் வாழும் தொகுதியில் அனைத்து வாக்குகளும் எங்கே விழும்.?
அது அவர்களின் ஒரு மாத ஊதியம் அல்லவா?ஒரு வீட்டில் 4 வாக்குகள் இருந்தால் 48,000/-இரண்டுபவுனுக்கு நகை எடுத்து விடலாமே.

வாடிக்கையான அதிமுக தொகுதியிலேயே 6000/- கொடுத்து,இரட்டை இலை சின்னத்தில் நின்றும் கூட அதிமுக தோற்றிருக்கிறது.

இவர்களுக்கிடையே ஸ்டாலின் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று அறிவித்தும் 12000/+குக்கரை புறந்தள்ளி திமுக பெற்ற வாக்குகள் 25000 .அதில் ஒவ்வொரு வாக்கும் விலைமதிக்கமுடியாதவை அல்லவா?

12000/,6000/-கொடுப்பதை இந்த கையாலாகாத தேர்தல் ஆணையம் தடுத்திருந்தால் நிலை என்னவாயிருக்கும்?
அனைத்து வாக்குகளும் உதய சூரியனை நோக்கி அல்லவா பாய்ந்திருக்கும்.

தொகுதிமக்களின் வறுமையை விலைபேசி வாக்குகளை வாங்கி பெற்ற வெற்றிக்கு பெயர் என்னவாயிருக்கும்.

விலைக்கு விற்றவர்கள் தொகுதிக்கு ஏதாவது கேட்டு கையை நீட்டி பேச முடியுமா?
ஒரு தொகுதியில் 12000+குக்கர் கொடுத்தவர் பொதுத்தேர்தலில் இப்படி கொடுக்க முடியுமா?

ஒவ்வொரு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெல்லும் என்பது எழுதப்படா விதியாக தமிழகத்தில் உள்ளது திருமங்கலம் புகழ் அழகிரிக்கு தெரியாதா?
திமுக ஆட்சி காலத்தில் பெண்ணாகரத்தில் அதிமுக காப்புத்தொகையை இழந்தது தெரியாதா அழகிரிக்கு.?
அதன்பின் வந்த தேர்தலில் அதிமுகதான் ஆட்சி அமைத்ததும் தெரிந்திருக்குமே?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தினகரன்,எடப்பாடி அணிக்கு வாழ்வா?சாவா?நிலை.அதில் வெற்றிக்கு எந்த நிலைக்கு செல்ல அவர்கள் தயார்.


அதிமுகவுக்கு ஆணையம்,மோடி,அதிகாரிகள்,காவல்துறையினர் கூட்டு.மேலாக 6000 வாக்குக்கு விலை,இரட்டை இலை..
அப்படியிருந்தும் அதிமுக தோல்வி. காரணம் ஏலத்தொகை 12000/-குக்கர்.ஹவாலா முறையில் வாக்குப்பதிவு குக்கர் என்றால் 12,000 நிச்சயம் என்ற நிலை.

இவைகளை மீறி வாக்குக்கு பணம் தரும் வேலையை  திருமங்கலத்தில் அழகிரி ஆரம்பித்து வைத்ததை ஆர்.கே.நகரில் ஸ்டாலின் முடித்து வைத்திருக்கிறார்.அதற்கு தந்த விலைதான் காப்புத்தொகை இழப்பு.

ஆனால் பெற்ற 25000 வாக்குகள் என்பதில் ஒவ்வொரு வாக்குமே பலலட்சம் பெருமானமானது.
திமுகவுக்கு பெருமை தருவது.

திருமங்கலத்தில் திமுகவுக்கு ஏற்பட்ட திருமங்கல பார்முலா கறை தற்போது துடைத்து எறியப்பட்டுள்ளது .
அந்தவகையில் திமுக மாபெரும் வெற்றியைத்தான் பெற்றுள்ளது.
பாஜகவுக்கு சென்ற தேர்தலில் வாக்கு கேட்ட அழகிரிக்கு திமுக,ஸ்டாலின் பற்றி தற்போது பேச எந்த வித தகுதியோ,அருகதையோ இருப்பதாக தெரியவில்லை.

அவர் திமுகவை விட்டு தலைவர் கலைஞரால் நீக்கப்பட்டவர்.
மீண்டும் திமுகவில் சேர்க்கும் அளவு அவரின் நடவடிக்கைகளும் இல்லை.திமுக தொண்டர்கள் யாரும் அவரை ஒரு பொருட்டாக எண்ணவுமில்லை.

அழகிரி மக்கள் ஆதரவு உள்ளவர்,அவர் தலைமையேற்றால் திமுக வெற்றி பெறும் என்ற மாயையை உருவாக்குவது  ஊடகங்கள்தான்.
அவர்களின் குறியே திமுகவை அழிப்பதுதான்.

அதுதான் திமுக ஆரம்பிக்கப் பட்ட நாள் முதல் ஊடகங்களின் தலையாயப் பணியாக இருந்து வந்தது.இருக்கிறது.
அது சம்பத்,எம்ஜிஆர்,ஜெயலலிதா என்று வந்து அழகிரியில் மையம் கொண்டுள்ளது.
======================================================================================
ன்று,
டிசம்பர்-28.

  • லண்டன்  வெஸ்ட்மின்ஸ்டில் முதல்  தேவாலயம் திறக்கப்பட்டது(1065)
  • கலிலியோ கலிலி, நெப்டியக்ஷன் கோளைக் கண்டுபிடித்தார்(1612)
  • தெற்கு ஆஸ்திரேலியா, அடிலெய்ட் ஆகியன அமைக்கப்பட்டன(1836)
  • இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்டது (1885)
======================================================================================
*ஏழை மக்களுக்கு 24மணி நேரமும் ஆம்புலன்ஸ் சேவை செய்திட சிவகாசி, விருதுநகர் மற்றும் ஓசூர் உலகநாயகன் கமல்ஹாசன் நற்பணி இயக்கங்கள் சார்பாக முன்று இலவச ஆம்புலன்ஸ் பொதுமக்களுக்கு வழங்கி இயங்கி வருகிறது.
வாழ்த்துகள் !