வெற்றி எல்லாம் வெற்றி அல்ல?
உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்திருக்கும் உள்ளாட்சித் தேர்த லில் பாஜக அமோக வெற்றி பெற்றிருப்பதாக இந்திய கார்ப்பரேட் ஊடகங்கள் தொடர்ந்து ஊதுகுழல் மூலம் ஜால்ரா அடித்து வருகின்றன.
சமூகவலைத்தளங்களி லும் ‘பாஜக ஐடி (போட்டோ ஷாப்)பிரிவினர்’, மிகைப்படுத்தி பிரச்சா ரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
ஆனால் உத்தரப்பிரதேசத்தின் உள்ளாட்சி அமைப்புகளில், சரிபாதி இடங்களுக்கும் மேல் எதிர்க்கட்சிகள் கைப்பற்றி இருப்பதையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட பெருநகரங்கள் தவிர, வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்பட்ட நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பாஜக படுதோல்வி அடைந்திருப்பதையும் அவர்கள் மூடி மறைத்து வரு கின்றனர்.
பொதுவாக, உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்பது மேயர் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை வைத்து மட்டும்தீர்மானிக்கப்படுவதல்ல.
==========================================================================================
இன்று,
டிசம்பர்-03.
==========================================================================================
போபால் விஷவாயு விபத்து.
முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம்.
சமூகவலைத்தளங்களி லும் ‘பாஜக ஐடி (போட்டோ ஷாப்)பிரிவினர்’, மிகைப்படுத்தி பிரச்சா ரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
ஆனால் உத்தரப்பிரதேசத்தின் உள்ளாட்சி அமைப்புகளில், சரிபாதி இடங்களுக்கும் மேல் எதிர்க்கட்சிகள் கைப்பற்றி இருப்பதையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட பெருநகரங்கள் தவிர, வாக்குச்சீட்டு முறை பயன்படுத்தப்பட்ட நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பாஜக படுதோல்வி அடைந்திருப்பதையும் அவர்கள் மூடி மறைத்து வரு கின்றனர்.
பொதுவாக, உள்ளாட்சி தேர்தல் வெற்றி என்பது மேயர் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை வைத்து மட்டும்தீர்மானிக்கப்படுவதல்ல.
மாறாகமாநகராட்சி வார்டுகள், நகராட்சி, பேரூராட்சி வார்டுகள் என உள்ளாட்சி அமைப்புகளின் பல்வேறு மட்டங்களி லும் கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி, பிரதிநிதிகளின் எண்ணிக்கை, கட்சிகள் வாங்கியிருக்கும் வாக்கு சதவிகிதம் ஆகியவையும் முக்கியமான தாகும்.
அந்த வகையில், பாஜக அமோக வெற்றி பெற்றிருக்கிறதா என்று பார்த்தால், இல்லை என்பதும், பாஜகவை உத்தரப்பிரதேச மக்கள் புறக்கணித்திருக்கிறார்கள் என்பதும் புரியும்.
14 மாநகராட்சி மேயர் பதவிகளை மட்டுமே கைப்பற்றியுள்ள, மற்றஅனைத்து உள்ளாட்சி அமைப்புக் களிலும் படுதோல்வி அடைந்துள் ளது.
மாநகராட்சி வார்டுகளில் கூடஅக்கட்சியால் வெற்றிபெற முடிய வில்லை.
உத்தரப்பிரதேசத்தில் மொத்த முள்ள 16 மாநகராட்சிகளில் 14 மாநகராட்சி மேயர் பதவிகளை பாஜக கைப்பற்றியிருக்கிறது.
ஆனால், 16மாநகராட்சிகளிலும் உள்ள 1300வார்டுகளில் (முடிவு அறிவிக்கப்பட்ட வை 1299 வார்டுகள்) 596 வார்டுகளில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றுள்ளது.
50 சதவிகிதத்திற்கும் அதிகமான இடங்களில் அக்கட்சி தோற்றுள்ளது.இங்கு, சமாஜ்வாதி கட்சி 202 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 147 இடங்களையும், காங்கிரஸ் 110 இடங்களையும், மீதமுள்ள இடங்களை சுயேச்சைகளும்தான் கைப்பற்றி இருக்கின்றனர்.
இதேபோல் 198 நகராட்சிகளில் வெறும் 70 நகராட்சிகள் மட்டுமே பாஜக-வுக்கு கிடைத்திருக்கிறது. அதாவது உத்தரப்பிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, மூன்றில் ஒருபகுதி (35 சதவிகிதம்) அளவிற் கான நகராட்சிகளையே கைப்பற்றி யுள்ளது. நகராட்சி வார்டுகளிலும் பாஜகபடுதோல்வியையே சந்தித்திருக் கிறது.
மொத்தமுள்ள 5 ஆயி ரத்து 261 நகராட்சி வார்டு உறுப்பினர்களில் 5 ஆயிரத்து 260 வார்டுகளுக் கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் வெறும் 922 வார்டுகளில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றுள்ளது.
அதாவது 18 சத விகித வார்டுகளை மட்டுமேபிடிக்க முடிந்துள்ளது.
82 சதவிகித இடங் களில் பாஜகவுக்கு தோல்விதான் கிடைத்துள்ளது.
பேரூராட்சிகளிலும் இதே நிலைதான்.
438 பேரூராட்சிகளில் 100 பேரூராட்சிகளில் மட்டுமே பாஜகவெற்றி பெற்றிருக்கிறது.
இது 22 சதவிகித வெற்றிதான்.
மொத்தமுள்ள 5 ஆயிரத்து 434 பேரூராட்சி வார்டு உறுப்பினர் இடங்களில்- 5 ஆயிரத்து 433 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அதில் பாஜக-வுக்கு கிடைத்தது வெறும் 664 இடங்கள் (12 சதவிகிதம்) மட்டுமே ஆகும்.
பேரூராட்சி வார்டுகளில் 88 சதவிகித இடங்களில் பாஜக தோற்றுள்ளது.
ஒட்டுமொத்தத்தில் பெருநகரம் தவிர்த்து ஊரக மற்றும் கிராமப்புற பகுதிகளில் பாஜகவிற்கு பலத்த அடி கிடைத்துள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பாஜக அடி வாங்கிய இடங்களெல்லாம் வாக்குக்சீட்டு முறையில் தேர்தல் நடை பெற்ற இடங்களாகும்.
மேயர் உள்ளிட்ட மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்தப்பட்ட இடங்களில் மட்டுமே பாஜக-வுக்கு வெற்றி கிடைத்துள்ளது.
இது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்தே பாஜக வெற்றி பெறுவதாக கடந்த சில ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது.
இவ்வாறு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேட்டில் ஈடுபட்டும் கூட பாஜக-வுக்கு உத்தரபிர தேச உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியே கிடைத்திருக்கிறது; அக்கட்சியை உத்தரபிரதேச மக்கள்புறக்கணித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
உத்தரப்பிரதேச தேர்தல்முடிவு, குஜராத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்ற நிலையில், அவசர அவசரமாக மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மோடி அரசு தற்போது திரும்பப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தேர்தல் அன்று ஆயிரக்கணக்கான வாக்குப்பதிவு எந்திரங்களில் யானை சின்னத்துக்கு அளிக்கும் வாக்குகள் தாமரைக்கு போய் பதிவாக்குவதாக குற்றசாட்டுகள் எழுந்ததையும் ,அதை தேர்தல் ஆணையம் எந்திரக்கோளாறு சரி செய்து விட்டோம் என்று மழுப்பியதையும் நினைவு கூறுங்கள்.
தமிழ் நாட்டில் வாக்குப்பதிவு எண்ணிக்கை பாதியிலேயே முதல்வரானதுக்கு வாழ்த்து தெரிவித்து வாக்கு எண்ணிக்கையையே மாற்றியவர்களுக்கு இது ஒன்றும் பெரிய வேலை அல்ல.
மேயர்கள் மட்டும் பெரும்பாலும் பாஜக.ஆனால் மாநகராட்சி,நகராட்சி,ஊராட்சி உறுப்பினர்கள் 85% எதிர்க்கட்சியினர் என்ற விபரீத வெற்றி வெற்றியா?
"அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்."
ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.
இன்று,
டிசம்பர்-03.
- உலக மாற்றுதிறனாளிகள் தினம்
- நவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் பிறந்த தினம்(1795)
- இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம்(1884)
- இந்திய-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது(1971)
- இந்தியாவின் போபாலில் விஷவாயு கசிவு ஏற்பட்டது.பல்லாயிரக்கணக்கில் படுகொலை.(1984)
==========================================================================================
போபால் விஷவாயு விபத்து.
முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் உண்மை முகம்.
போபால் நகரில் 1984 ஆம் வருடம் டிசம்பர் 3 அன்று அழுகுரலும் ஓலமும் கேட்டுக்கொண்டுஇருந்தது.
அங்கு அமைந்திருந்த அமெரிக்க கம்பெனியான யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்த ரசாயனப் பொருள் கசிந்தது.எண்ணற்ற உயிர்களை பலிவாங்கியது அந்த விஷவாயு கசிவு.
ஆம் 1984 ஆம்ஆண்டு டிசம்பர் 2 இரவில் கசிந்த விஷவாயு டிசம்பர் 3 வரை தொடர்ந்தது.அந்த இரவில் விவசாய ப்பயிர்களை அழிக்கும் பூச்சிகளை கொல்ல தயாரிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளிப்பட்ட மீத்தையில் ஐசோ சயனைடு என்ற வேதியியல் விஷவாயு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகள், முதியோர் என 3 ஆயிரம் உயிர்களை உடனடியாக பலிவாங்கியது.
தப்பிக்க முயன்றவர்களையும் விடவில்லை.13 ஆயிரம் பேர்கள் அதன் பின்னர் மடிந்தனர்.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு ரத்த சம்பந்தமான நோய் மற்றும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகினர்.
இரண்டு லட்சம்பேர்கள் இன்னும் கேன்சர், காசநோய் மற்றும் கண்பார்வை பறிப்பு போன்றவைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.ஐப்பான் நாட்டிற்கு ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் இன்றளவும் அணுகுண்டு வீச்சை நினைவுபடுத்திக்கொண்டு இருப்பது போல் இந்தியாவில் உள்ள போபால் நகரமும் நமது நினைவைவிட்டு அகலாது.பாதிப்புகள் தொடர்ந்தும், பாதிப்பு ஏற்படுத்திய அமெரிக்க ஆலையின் நட்டஈடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் கிடைத்தபாடில்லை.
ஒரு ஆலை விபத்து இப்படி ஒரு சமூக நாசத்தை ஏற்படுத்தியது இதுவே முதல் தடவை.இந்தக்கொடுமை ஏற்பட்டது குறித்து பல ஆய்வுகள் மெற்கொள்ளப்பட்டுள்ளன.நூல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளியிட்ட புத்தகத்திலிருந்து “ஆலை விபத்தல்ல” என்று யூனியன் கார்பைடின் நச்சுப்புயலும் நயவஞ்சக அரசியலும் என்ற புத்தகத்தை எழுதிய தோழர்.வே.மீனாட்சிசுந்தரம் அவர்களின் வார்த்தையை அப்படியே கூறுவது பொருத்தமாகும்.“இது நிகழ்வு என்று அறியப்படுகின்றது. யூனியன் கார்பைடு என்ற அமெரிக்க பெரு நிறுவனத்தின் கொலைபாதக லாபவெறியின் விளைவாக நிகழ்ந்த படுகொலை என்று தான் கூறவேண்டும்.
இந்த லாப வெறியை நியாயப்படுத்த இந்திய அரசும் தன்னிச்சையாக செயல்படும் அமைப்புகளான சிபிஐ, நீதித்துறை ஆகியவையும் மக்களை எவ்வாறு ஏமாற்றின” என்பதாக குறிப்பிடுகின்றனர்.அதே நிலைதான் இப்பொழுதும். சிபிஐ மற்றும் நீதிமன்றங்களின் நிலையை தமிழகத்தில் நாமும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.
யூனியன் கார்பைடு கம்பெனி நிர்வாகமும் மாறிவிட்டது.
டௌ கெமிக்கல்ஸ் எடுத்துள்ளது.
இவ்வளவு கொடுமைக்கு இந்திய மக்களை ஆளாக்கிய யூனியன் கார்பைடு நிறுவனர் வாரன் ஆண்டர்ஸன் அமெரிக்காவுக்கு தப்பவிடப்பட்டார்.
அதற்கு அன்றைய பிரதமர் ராஜீவகாந்தியும்,முதலவர் அர்ஜுன் சிங்கும் தனி விமானம் ,பாதுகாப்பு கொடுத்து உதவி உள்ளனர்.
அங்கேயே செத்தும் போனார்.
அதற்குப்பின்னர் பல ஆலை விபத்துக்கள் இந்தியாவில் நடந்திருக்கிறது.
போபால் விஷவாயு கொலைபாதகச்செயல் போல் வேறு எந்த விபத்தும் நடந்திடவில்லை.தொழிற்சாலை விபத்துக்கள் நடக்காமல் இருக்கமுடியாது.பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கோள்ளவேண்டிய தொழிலாளர் ஆய்வுத்துறை அரசின் கைப்பாவை ஆக உள்ளது.
தொழிற்சாலை விபத்துக்களினால் உயிர்ப்பலிகள் ஏற்படுகிறது.மனிதர்கள் விலங்குகள் மற்றும் மரம் செடிகொடிகளுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றது.உடல் ஊன பாதிப்பு.அதே போன்று சுற்றுப்புற பாதிப்புகள்.அதனால் மாசு அடைவது நடைபெறுகின்றது.
உடல் ஊனம் மற்றும் இறப்பு போன்றவைகள் தமிழக மின்வாரியத்தில் தொழிலாளர்கள் மின்விபத்தில் சகஜமாக நடைபெறுகின்றது.தினம் தோறும் ஒரு விபத்தாவது நடைபெறுகின்றது.ஆலைகளில் ஏற்படும் கழிவுகள், அதனால் ஏற்படும் மாசு ஆகியவைகள் சுற்றுப்புறச்சூழலை கெடுக்கின்றன என்றாலும் அதையும் விபத்தாகத்தான் கொள்ளவேண்டும்.காற்று மாசுபடுவதால் ஒரு வருடத்தில் மட்டும் இந்தியாவில் 6 லட்சம்பேர்கள் இறக்கின்றனர் என்று ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது.
இன்றைக்கு தில்லி மாநகரத்தில் மக்களை பாதிக்கும் மாசை உருவாக்கி இருப்பதற்கு காரணம் வாகனங்கள் வெளியிடும் புகைமட்டுமல்ல.அந்த நகரத்தில் உள்ள தொழிற்சாலைகள் வெளியிடும் கழிவுப் புகையும் காரணமாக உள்ளது.
அதனால் யமுனா ஆற்றின் கரையோரத்தில் உள்ள மாசை உண்டாக்கும் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மூடப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர் நகரத்தில் ஐஓசி ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒரு பிளாண்ட் முழுவதும் எரிந்து சாம்பலாகியது.உயிர்ச்சேதாரமும் ஏற்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலம் கோர்பாவில் வேதாந்தா நிறுவனம் பால்கோ அனல் மின்நிலையத்தின் சிம்னியை 790 அடிக்கு உயர்த்தும்போது அது அப்படியே சரிந்து 47 பேர்களின் உயிரைப்பறித்தது.
தொழிற்சாலைகள் அமையக்கூடாது என்று யாரும் கூறவில்லை.
ஆனால் அது மக்களை பாதிக்கும் ஒன்றாக மாறும்போது தான் கவலையளிக்கின்றது.எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தில் குரூட் ஆயில் ஏற்றிவந்த கப்பல் உடைந்து அத்தனையும் கடலில் கொட்டியது.கடலில் விழுந்த எண்ணெய் படலத்தை எடுப்பதற்குள் மீனவர்கள் வாழ்வாதாரம் அழிந்தது.
ஆனால் அது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்குழு அளித்த அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் ஒன்றாக உள்ளது.கப்பலை ஓட்டி வந்த பைலைட்டுக்கு போதுமான ஓய்வு அளிக்காததன் காரணமாகவே அந்த விபத்து என்று முடிவுக்கு வந்தது அந்தக்குழு.
நடைமுறையில் என்ன நடக்கவேண்டும் என்பதை விசாரணைக்குழு கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.நடைமுறை என்ன?
ஒரு கப்பல் ஒரு துறைமுகத்திற்கு வருகிறதென்றால் துறைமுக எல்லைக்கு வந்தவுடன் கப்பலை இயக்கி வந்த பைலட் கப்பல் இயக்கத்தை நிறுத்தி அக்கப்பலின் பொறுப்பை அத்துறைமுகத்தின் கட்டுப்பாட்டிற்குள் விட்டு விடவேண்டும்.
துறைமுக நிர்வாகம் தனது பைலட் மூலம் கப்பலை இழுத்துச்சென்று ஜெட்டியில் கட்டி நிறுத்துவார்கள்.அவ்வாறு இருக்க, கப்பலை இயக்கிவந்த பைலட்டுக்கு ஓய்வில்லை அதனால் தான் இந்த விபத்து என்று முடிவுக்கு வந்தது வினோதமானது.
அதே போன்ற தீ விபத்து 2017 ஜுன் மாதத்தில் சென்னைக்கு அருகில் உள்ள வல்லூர் அனல் மின்நிலையத்தில் ஏற்பட்டது.
அனல் மின்நிலையத்தின் மின்உற்பத்தி செய்யும் ஜெனரேட்டரில் ஏற்பட்ட தீவிபத்தால் குளிரூட்டுவதற்கான ஹைட்ரஜன் வாயு கசிவு ஏற்பட்டது.
கொலைகாரன் வாரன் ஆண்டர்ஸன் |
அந்தக்கசிவு இல்லாமல் ஹைட்ரஜன் வாயு முழுமையாக வெளிவந்திருந்தால் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டு அதன் மூலம் ஏற்படும் 2300 டிகிரி செல்சியஸ் வெப்பம் வெளிவந்திருக்கும்.அருகில் எச்பிஸி நிறுவனத்தின் எண்ணெய் டேங்குகள் தீப்பிடித்து, அதன் அருகிலுள்ள ஐஓசி எல்பிஜி பாட்டலிங் பிளாண்ட் எரிந்து, அருகிலுள்ள எல்பிஜி பெட்ரோனாஸ் ஆலை தீப்பிடித்து இருந்தால் 5 கி.மீ சுற்றுவட்டாரமே அழிந்து போயிருக்கும்.
என்ன இது?
அது தான் நடக்கவில்லையே என்று நினைக்கலாம்.
இந்த பாதிப்பு ஏற்படும் என்று இந்த நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் தெரியுமா?
தெரிவிக்க விரும்பாத நிர்வாகங்களாவே இந்த நிறுவனங்கள் உள்ளன.அனல் மின்நிலையங்களில் நிலக்கரி எரிவதால் வெளியாகும் புகையில் கந்தகம் உள்ளது. அது காற்றில் மாசாக மாறி அமில மழை பெய்யும் நிலை உள்ளது.
நிலக்கரி எரிந்த சாம்பலில் உள்ள கனிமங்களில் முக்கியமானது பாதரசம் மற்றும் அலுமினிய தாது, ஆர்சனிக் கனிமங்கள்.
அவை கடலில் கலந்து அதிலுள்ள உணவுப்பொருட்களை மாசடையச்செய்கின்றது.
இப்படிப்பட்ட ஆபத்துகள் உள்ள கனிமங்கள் காற்றில் உள்ளது என்று சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை.ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்திற்கு சொந்தமான கொடைக்கானலில் மூடப்பட்ட பாதரசத்தை பயன்படுத்தும் ஆலையில் உள்ள பாதரசக்கழிவுகளை வெளியேற்றுவதற்கு நீண்ட நெடிய போராட்டங்கள் தேவைப்பட்டது.
போபால் விஷவாயு விபத்தில் வாயு கசிந்தபோது அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்னமாதிரியான சிகிச்சை அளிக்கவேண்டும் என்றுகூட அந்தப்பகுதியில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.
இதனால் எந்த மாதிரி சிகிச்சை அளிக்கவேண்டும் என்று தெரியாத சூழல் ஏற்பட்டது.இது கொடுமை அல்லவா?அதே நிலைதான் இன்று உள்ள தொழிற்சாலைகளிலும் உள்ளது.
சமீபத்தில் செப்டம்பர் மாதத்தில் ஹைதராபாத் அருகில் உள்ள செரலாப்பள்ளியில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு சொந்தமான சமையல் எரிவாயு பிளாண்ட் எரிந்து சாம்பலாகியது. அதற்குக் காரணம் எலக்ட்ரிக்கல் சர்க்யூட் கோளாறினால் ஏற்பட்ட தீ விபத்து என்று கூறப்படுகின்றது.
இன்னொரு பகுதியில் குரூடாயில் சேமித்து வைத்த டேங்கில் மின்னல் பாதிப்பினால் அது எரிந்து சாம்பலாகியது.
அதனால் ஏற்பட்ட புகை மக்களை பாதித்துள்ளது.
அப்படியெனில் தொழிற்சாலை விபத்துக்கள் நடக்காமல் இருக்கவேண்டும்.
அதற்கு அரசின் தொழிற்சாலை ஆய்வாளர்கள் சோதனை செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்திடவேண்டும்.
விபத்து நடந்தால் அது எதனால் ஏற்பட்டது என்ற விபரம் கண்டுபிடித்தல் அவசியம். தற்போது தொழிற்சாலை சட்டங்கள் இருந்தாலும் இப்படிப்பட்ட விபத்துக்கள் தொடர்கிறது.
அந்த சட்டத்தையும் நீர்த்துப்போகச்செய்ய மத்தியில் உள்ள மோடி அரசு இனி தொழிற்சாலை பாதுகாப்பை அந்தந்த நிறுவனங்களே செய்து கொள்ளும் வகையில் சட்டத்தை திருத்துகிறதாம்.என்ன கொடுமை இது?
தொடர்ந்து மக்களை சோதனை எலிகளாக வைத்துக்கொள்ளும் முதலாளிகளின் கொள்ளைக்கு ஆதரவான நடவடிக்கையாகும்.
இன்று போபால் விபத்தை நினைவு கூர்ந்து ஏகாதிபத்திய கொள்ளையடித்து பணம் குவிக்க எந்த இழி எல்லைக்கும் செல்லும் என்பதை மக்கள் உணரவேண்டும்.
இதுதான் பன்னாட்டு ஏகாதிபத்தியம்,முதலாளித்துவத்தின் உண்மை முகம்.