கூகுளின் மை ஆக்டிவிட்டி(My activity)

 பிரபலமான தேடல் தளமாக கூகுளை பற்றி சில உண்மைகளைப் பார்ப்போம்.
நீங்கள் கூகுள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, அதை நம்பி உங்களைப் பற்றிய பல செய்திகளை  அளிக்கிறீர்கள்''
தமது பயனர்களுக்கான அந்தரங்க உரிமை விதிமுறைகள் மற்றும் நிபந்தனையின் முதல் வரியில் கூகுள் தெளிவாகக் கூறியுள்ளது.
ஆனால், ''மை ஆக்டிவிட்டி (My activity)'' செயல்பாட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை விரும்பினால் நீங்கள் அகற்றிக்கொள்ளக் கூடிய  வசதியை  கூகுள் வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
பலர் அறியாமல் உள்ளனர் .
எளிமையான வழிமுறைகளில் எப்படி இதைச் செய்வது என்பதை விளக்குகிறோம்.
மை ஆக்டிவிட்டியை அழிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

ஒவ்வொரு முறை நீங்கள் கூகுளில் தேடும்போதும், அந்தத் தேடலை கூகுள் உங்களது கணக்குடன் தொடர்புபடுத்தி வைக்கிறது.
மின்னஞ்சல் (ஜி மெயில்) உள்பெட்டியில் தேடுவது, இணையத்தில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்வது என நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் இது பதிவிட்டுக்கொள்ளும்.
இத்தகவல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ''மை ஆக்டிவிட்டி (My activity)'' எனும் தளத்தில் சேமிக்கப்பட்டு இருக்கும். நீங்கள் இங்குதான் முதலில் செல்ல வேண்டும்.
குறிப்பிட்ட பக்கங்களையே, குறிப்பிட்ட ஒரு நடவடிக்கையையோ அழிக்க வேண்டும் என்றால், தேடல் செயல்பாட்டைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பக்கத்தைத் தேடி அழிக்கலாம். அல்லது கொடுக்கப்பட்ட தேதி வரம்புவரை, தேர்வு செய்யப்பட்ட அல்லது அனைத்துப் பக்கங்களையும் அழிக்கலாம்.
இப்படி அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்த எச்சரிக்கை கூகுளிடம் இருந்து வரும். ஆனால் உண்மையில், உங்கள் தேடல் வரலாறை அழிப்பது, உங்கள் கூகுள் கணக்கில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
யூடியூபில் நீங்கள் எதை பார்க்கிறீர்கள் என்பதையும், எதை தேடுகிறீகள் என்பதையும் கூகுள் பின்தொடர்கிறது.
உங்கள் பார்வையில் உள்ள விருப்பங்களை அறிந்தே முதல் பக்கத்தில் அது தொடர்பான காணொளிகளை வரிசைப்படுத்தி காண்பிக்கிறது.
ஆனால், இதையும் எளிதாக அழித்துவிடலாம். இடது பக்கம் மெனுவில் உள்ள ஹிஸ்டரியை க்ளிக் செய்து, ''அனைத்து தேடுதல் வரலாறு'' மற்றும் '' அனைத்து பார்வை வரலாறு'' என இரண்டையும் க்ளிக் செய்யவும். 
இப்படி தேர்வு செய்தபின் உங்கள் விருப்பங்களை பதிவு செய்யாமல் அழிக்கலாம்.
கூகுள் உங்களைப் பற்றி தெரிந்துகொள்வதுடன், அதன் வாடிக்கை விளம்பரதாரர்களுக்கும் உங்களை பற்றிய தகவல்களைக் கொடுக்கிறது.
அதனால்தான் உங்கள் தேடல் விருப்பம் தொடர்பான  சில விளம்பரங்களை நீங்கள் அடிக்கடி காண்கிறீர்கள்.
ஆனால் நீங்கள் விரும்பினால் விளம்பரதாரர்களுக்கு உங்களைப்பற்றி என்ன தகவல்களை கூகுள்  அனுப்பியுள்ளது என்பதை நீங்கள் கண்டறியலாம்.
இதை பார்ப்பதற்கு கூகுள் கணக்குக்குள் லாகின் செய்து, தனிப்பட்ட தகவல் & அந்தரங்க உரிமை (Personal info & privacy) பக்கத்திற்குச் செல்லவும்.
பிறகு ஆட்ஸ் செட்டிங் (Ads Settings) ஆப்ஷனுக்கு சென்று, மேனேஜ் ஆட்ஸ் செட்டிங் (Manage ads settings) ஆப்ஷனை க்ளிக் செய்யவும். 
இதை நீங்கள் செயலிழக்க செய்வதன் மூலம், உங்களைப் பற்றி கூகுள் வைத்துள்ள தகவல்கள் தொடர்பாக விளம்பரங்கள் வராது. 
ஆனால் விளம்பரமே வராமல் செய்வதற்கான வாய்ப்பு இல்லை.காரணம் அது போன்ற விளம்பரங்கள் வருமானத்தில்தான் உங்களுக்கு இலவசமாக தேடல் வசதியை கூகுள் வழங்குகிறது.
நீங்கள் ஆண்ட்ராய்ட் சாதனம் வைத்திருந்தால், உங்கள் தொலைபேசியுடன் நீங்கள் சென்ற இடங்களின் பட்டியலை கூகுள் வைத்திருக்கும்.
கூகுள் மேப்ஸ் பக்கத்தில் இருந்து இத்தகவல்கள் அனைத்தையும் அழிக்கவேண்டுமானால் நீங்கள் இந்தப் பக்கத்துக்குச் செல்லவேண்டும்.
லோகேஷன் டிராக்கிங்கை ஆப் செய்யவும், முழு வரலாற்றையும் அழிக்கவும்.
குறிப்பிட்ட நாளுக்கான அல்லது நேரத்துக்கான வரலாற்றை அழிக்கவும் முடியும். 
கழிவுக்கூடை  வாய்ப்பை  கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் மேற்கொண்ட  ஒரு குறிப்பிட்ட பயணத்துக்கான பதிவை மட்டும்கூட அழிக்கலாம் .
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
போலிக்கு சிகப்பு முக்கோணம்.
போலிச் செய்திகளை பரிசோதனை செய்யும் வலைத் தளங்களால் பொய் என்று உறுதிசெய்யப்பட்ட செய்திகளின் அருகே கடந்த டிசம்பர் 2016 முதல் சிகப்பு நிற  சின்னத்தை முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனம் காட்டத் தொடங்கியது.
"சிகப்பு நிறக் குறியீட்டைப் போன்ற வலிய சின்னங்களை அந்தப் போலிச் செய்திகளுக்கு அருகில் வைப்பதால் அது அச்செய்தி மீது ஆழமான நம்பிக்கையை உருவாக்குகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது நாங்கள் அச்செய்தி பொய் என சொல்லும் வகையில் அதை காட்டும்  நோக்கத்திற்கு நேர் எதிரானது," என்று முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது .
அதனால் இனி சிகப்பு நிற எச்சரிக்கை சின்னத்துக்குப் பதிலாக  அந்தப் போலிச் செய்திகளின் அருகில் உண்மையான தொடர்புடைய செய்திகளை  காண்பிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அந்த எச்சரிக்கை சின்னம் காண்பிக்கப்படுவதால் போலிச் செய்திகள் படிக்கப்படுவது குறையாவிட்டாலும், அவை பகிரப்படுவது குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இனிமேல் எச்சரிக்கை சின்னம் காண்பிக்கப்படுவதற்கு பதிலாக போலி செய்திகளின் உண்மைத் தன்மை உறுதிசெய்யப்பட்ட செய்திகள் அந்தப் பதிவுகளின் அருகில் காண்பிக்கப்படும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேகம் குறையும் ஐபோன் 
புதிய ஐபோன்களை வாங்குவதை தூண்டுவதற்காக ஆப்பிள் நிறுவனம் பழைய ஐபோன்களின் வேகத்தை குறைக்கிறது என்ற சந்தேகம் நீண்டகாலமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
ஆனால்  பழைய ஐபோன்களில் பேட்டரியின் திறன் குறைவதால் அதற்கேற்றவாறு அதன் இயக்க வேகத்தை குறைப்பதாக ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.
தனது வாடிக்கையாளர்களின் சாதனங்களின் "வாழ்க்கையை நீடிக்க வேண்டுமென" தான் விரும்புவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயமானது 'ரெட்டிட்' என்ற சமூக இணையதளத்தில் பயனர் ஒருவர் தனது ஐபோனின் செயல்பாட்டு சோதனை முடிவுகளை வெளியிட்டவுடனே பலருக்கு தெரிய வந்தது. 
அதாவது, ஐபோன் 6 எஸ் மாடலை பயன்படுத்தி வந்த அவருடைய திறன்பேசியின் இயக்க வேகம் காலப்போக்கில் குறைந்துவிட்டது. 
ஆனால், அதன் பேட்டரியை புதியதாக மாற்றியவுடன் மீண்டும் அதன் வேகம் அதிகரித்து காணப்பட்டது.
"நான் எனது சகோதரரின் ஐபோன் 6 பிளஸ் மாடலை பயன்படுத்தியபோது அது என் மாடலைவிட வேகமாக செயல்படுவதை அறிந்தபோது இதில் ஏதோ பிழை இருப்பதுபோல் தோன்றியது" என்று ரெட்டிட்டில் பதிவிட்டுள்ளார் அந்த பயனர்.
வெவ்வேறு ஆப்பிள் இயங்குதள பதிப்புகளில் இயங்கும் பல ஐபோன்களை கொண்டு சோதனையை நடத்திய தொழில்நுட்ப இணையதளமான ஜீக்பென்ச், சில ஐபோன்களின் இயக்க வேகம் வேண்டுமென்றே குறைக்கப்படுவதை கண்டறிந்துள்ளது.
===================================================================================================================
நாட்டிலேயே முதல் இடம்.
குழந்தை திருமணம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது என்று மத்திய குற்ற ஆவண காப்பகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது,
கடந்த 2016 ஆண்டு தமிழகத்தில் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 55 வழக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. 



தமிழகத்துக்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 51 வழக்குகளும், மூன்றாவது 41 வழக்குகள் பதிவாக மேற்கு வங்கம் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

அதேவேளையில்,  அருணாச்சல பிரதேசம், பீகார், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், சண்டிகர், லட்சத்தீவு, கோவா ஆகிய மாநிலங்களில் ஒரு வழக்கு கூட பதிவாக வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நாடு முழுவதும்  திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் மொத்தம் 326 வழக்குகள் பதிவாகி  உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


கடந்த   2015-ம் ஆண்டில் 77 வழக்குகள் பதிவாகி உள்ள நிலையில், 2016ம் ஆண்டு இது 55ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

                                               1905 தீயணைப்பு வாகனம்.
======================================================================================
ன்று,
டிசம்பர்-30.
  • தாமஸ் ஆல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்(1891)
  • மங்கோலியா, கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது(1911)
  • ஐரிய சுதந்திர நாடு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது(1937)
  • உலகின் மிகப் பெரிய செப்பினாலான புத்தர் சிலை ஹாங்காங்கில் அமைக்கப்பட்டது(1993)
========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?