வீக்கம் அதிகம் , மதிப்பு சரிவு

நாட்டின் தொழில்துறை உற்பத்தி, நடப்பாண்டில் 2.2 சதவிகிதம் என்ற அளவில் சரிவை சந்தித்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் கணக்கிடப்பட்ட தொழில்துறை உற்பத்தி அடிப்படையில், இந்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 


கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில், நாட்டின் தொழில்துறை உற்பத்தி 2.5 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது அதைவிடவும் சரிந்துள்ளது.

உற்பத்தி மற்றும் சுரங்கத் துறைகளில் குறைந்துபோன பணித்திறனே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டாலும்; உண்மையில், மத்திய பாஜக அரசு மேற்கொண்டுவரும் தவறான பொருளாதார நடவடிக்கைகள், பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவையே, தொழில் உற்பத்தி வீழ்ந்ததற்கு முக்கியக் காரணமாகியுள்ளது.


தொழில்துறை உற்பத்தி குறியீடுஅடிப்படையில் தொழிற்சாலை உற்பத்தி அளவிடப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொழிற்துறை உற்பத்தி 4.2 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருந்தது.
 மாத அடிப்படையை மட்டும் எடுத்து பார்த்தால், செப்டம்பரில் தொழில்துறை உற்பத்தி 4.14 சதவிகிதம் என்ற அளவில் சிறப்பாகவே இருந்தது. 

ஆனால், 2016 நவம்பரில் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் எல்லாம் மாறிவிட்டது. நடப்பு, 2017-18ஆம் நிதியாயாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 2.5 சதவிகிதமாக உள்ளது. 

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த விகிதம் 5.5 சதவிகிதமாக இருந்தது. தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் உற்பத்தி துறைதான் சுமார் 77.63 சதவிகிதம் பங்களிக்கும்.


 இந்நிலையில்தான் கடந்த ஆண்டு 4.8 சதவிகிதமாக இருந்த உற்பத்தி துறை வளர்ச்சி, தற்போது 2.5 சதவிகிதமாக குறைந்துள்ளது.

நுகர் பொருட்கள் உற்பத்தி நடப்பாண்டில் 1.9 சதவிகிதம் குறைந்துள்ளது. 

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அது 6 சதவிகித வளர்ச்சி கண்டிருந்தது.தனித்தனி துறைகளாக எடுத்துக் கொண்டால், சுரங்கத் தொழில் உற்பத்தியானது 0.2 சதவிகிதமாக வீழ்ந்துள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபரில் சுரங்கத் துறை 1 சதவிகித வளர்ச்சியுடன் இருந்தது. 
தங்க நகை, புகையிலை சார்ந்த பொருள் உற்பத்தி, ரப்பர், பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி சரிவைச் சந்தித்துள் ளன. புகையிலை உற்பத்தி மைனஸ் 20.9 சதவிகிதமாக குறைந்துள்ளது. 

ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியும் மைனஸ் 16.1 என்ற அளவில் உள்ளது.மின்துறையில் மட்டும் மின் உற்பத்தியானது 0.2 சதவிகிதம் உயர்வு கண்டு, 3 சதவிகிதத்திலிருந்து 3.2 சதவிகிதமாகியுள்ளது. மருந்து உற்பத்தி, ரசாயன உற்பத்தி மற்றும் தாவரவியல் உற்பத்தியிலும் வளர்ச்சி உள்ளது. 

இவற்றின் வளர்ச்சி 23 சதவிகிதமாக உள்ளது. 
மோட்டார் வாகன உற்பத்தி 12.8 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது.


நுகர்வோர் பணவீக்கம் அல்லது சில்லரை பணவீக்கம் நடப்பாண்டின் நவம்பர் மாதத்தில் 4.88 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 

கடந்த ஆண்டு இதே காலத்தில் நுகர்வோர் பணவீக்கம் 3.63 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது பண வீக்கம் 1 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. 
இதனால், கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு, அனைத்துப் பொருள்களின் விலையும் தற்போது உயர்ந்துள்ளது. 

நுகர்வோர் பணவீக்கம் 4 சதவிகிதம் வரை உயரலாம் என்றே ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. 
அடுத்த இரண்டு காலாண்டுகளில் பணவீக்கம் 4.3 சதவிகிதம் முதல் 4.7 சதவிகிதம் அளவுக்கு இருக்கும் என்று கூறியிருந்தது. 


ஆனால், அதையும் தாண்டி பணவீக்கம் உயர்ந்துள்ளது. 
சர்வதேச சந்தையில் சமீபகாலமாக மீண்டும் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை, உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வில் எதிரொலிக்கத் துவங்கி இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 


ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மூலப் பொருள்களின் விலை உயர்ந்ததும் முக்கியக் காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.



தொழில்துறை உற்பத்தி வீழ்ச்சி, பண வீக்கம் உள்ளிட்டவை காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதன்கிழமையன்று 16 காசுகள் சரிந்து 64.56 ரூபாயாக உயர்ந்தது. 

அமெரிக்க கரன்சி விற்பனையாளர்கள் அதிக அளவு டாலர்களை வாங்கியதாலும், அதன் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மதிப்பு சரிந்தது.

=====================================================================================
ன்று,
டிசம்பர்-15.
  •  கூடைப்பந்தாட்டத்தை ஜேம்ஸ் நெய்ஸ்மித் விதிகளுடன்  அறிமுகப்படுத்தினார்(1891)

  • இந்திய அரசியல் தலைவர் சர்தார் வல்லபாய் பட்டேல் இறந்த தினம்(1950)

  • உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்(1966)

  • நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 இணைய உலாவி வெளியிடப்பட்டது(1994)
======================================================================================
                                         சீன மொழியில் உலகப் பொது மறை .





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?