சி.ஏ.ஜி.,சொல்வது வேதவாக்கா??

சொல்வது என்ன வேதவாக்கா??
ஆடிட்டர்கள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா ??
அரசு என்பது தொழில் நிறுவனம் அல்ல. லாப நோக்கை மட்டும் கணக்கிட....
மக்கள் நலனுக்காக பல விசயங்களில் சமரசம் செய்வதுதான் அரசு.. இதில் இழப்பு ஏற்ப்படுவது சகஜம்மே....

இப்படி கேட்டவர், சொன்னவர் யார்??
ஆ.ராசாவா?? - இல்லை
கலைஞரா?? - இல்லை

இப்படி மத்திய தலைமை தணிகை கணக்காயரை நாக்கை பிடுங்குவதை போல கேட்டதோடு மட்டும் அல்லாமல், இந்தியா முழுதும், நாளேடுகளில் சிஏஜி அறிக்கையை கடுமையாக விமர்சித்து முழு பக்க விளம்பரத்தை அரசு செலவில் கொடுத்தவர், வேறுயாருமல்ல சாட்சாத் ஜெயலலிதா தான்...

2001-06 அதிமுக அரசின் மீது இதே CAG தணிகை அறிக்கை தாக்கல் செய்தபோது, அந்த அறிக்கையை மறுத்து, இந்திய அளவில் அனைத்து பத்திரிகைகளிலும் ஒரு முழு பக்க அளவில், (6.8.2004) அன்று அரசு செலவில் விளம்பரத்தை வெளியிட்டார்.. அப்போதைய தமிழக முதல்வர் ஜெயா.அதுதான் இந்த படம்...

மேலே உள்ளது ஜெயலலிதா சி.ஏ.ஜி.அறிக்கைகள் பற்றி வெளியிட்ட விளம்பரம்.சி.ஏ.ஜி சொல்வதெல்லாம் உண்மை இல்லை என்று குறி முழுப்பக்க விளம்பரம் வெளியிட்டவர் ஜெயலலிதா.
ஆனால் அவரும் அவர் அடிபொடிகளும்தான் அதே சிஏ.ஜி 2ஜி கணக்கை ஊழல் என்று திமுகவுக்கு எதிராக பயன் படுத்திக்கொண்டவர்கள்.
=========================================================================================

தலைகீழாக ஒரே நாளில் மதிப்பு இறங்கிய பிட்காயின் !!
2017 டிசம்பர் 17ஆம் தேதிக்குப் பின்னர் மட்டும் 30 புள்ளிகள் குறைந்துள்ளது.அன்று 15 புள்ளிகளும் இன்று 22.12.17ல்  15 புள்ளிகளும்  குறைந்துள்ளது 

நடப்பாண்டின் துவக்கத்தில் இருந்து கிரிப்டோகரன்சி எனப்படும் பிட்காயின் மதிப்பு தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வந்தது. இந்த ஆண்டில் மட்டும் 1500 சதவீதம் இதன் மதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஒரு பிட்காயின் மதிப்பு 954 டாலராக இருந்தது. தொடர்ந்து பிட்காயின் மதிப்பு அதிகரித்து வந்ததால், அந்தந்த நாடுகள் தற்போது விசாரணையில் இறங்கியுள்ளன. இதற்கென தனி அமைப்புகளை நிறுவி, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவிலும் சட்டப்படி அங்கீகரிக்கப்படாத வர்த்தகம் என்பதால், குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிட்காயின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 
இந்த வர்த்தகத்தின் நம்பகத்தன்மையும் தற்போது கேள்விக்குறியாகி இருப்பதால், மதிப்பு இறங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், தென் கொரியாவின் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்டு இருந்த யூபிட் எக்ஸ்சேஞ்ச், திவாலாகி இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது. நடப்பாண்டில் இரண்டாவது முறை இந்த எக்ஸ்சேஞ்ச் ஹேக் செய்யப்பட்ட பின்னர் திவாலாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


பிட்காயின் வர்த்தகம் எளிதில் ஹேக் செய்யப்படக் கூடியது என்பதால், இந்த வர்த்தகத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஓராண்டாக தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்த பிட்காயின் வர்த்தகம், தற்போது இறங்குமுகத்தில் உள்ளது. மேலும், இது இறங்கவும் வாய்ப்பு உள்ளது. உயரவும் வாய்ப்பு உள்ளது என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்ததால், தன்னை சரி செய்து கொள்வதற்கு இதுபோன்று இறங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சந்தையில் அதிக பணப் புழக்கம் இருக்கும்போது பிட்காயின் மதிப்பு அதிகரிக்கும். பணப் புழக்கம் குறையும்போது, பிட்காயின் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது. அதேபோல், சந்தையில் வாங்குவதற்கு குறைவான பிட்காயின் இருக்கும்போதும், அதன் மதிப்பு அதிகரிக்கும். சிறு மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் வர்த்தகத்தில் பெரிய மாற்றங்களை உருவாக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
                          படத்தில் இருப்பவர்கள் லாலு பிரசாத்தும் அவரது மனைவி மக்களும் .(1982)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?