ரெட்டிஸ் பேப்பர்ஸ்

2017ஆண்டில்  டுவிட்டரில் அதிகமாக  ரீடுவிட் செய்யப்பட்ட பதிவு எது தெரியுமா? 
டுவிட்டரில் 'நஹ்ஹட்ஸ்' சாப்பாடு வகையை ஓசியில்  கேட்ட  கார்ட்டர் வில்க்கர்சன் என்பவரின்  டுவிட்டர் பதிவுதான்  வைரலாக பரவியுள்ளது. 

அந்த டுவிட் தான் இந்த ஆண்டிலேயே அதிக அளவில் ரீடுவிட் ஆகியுள்ளது.
அவரின் அந்த டுவிட்டர் பதிவுக்கு பின் வித்தியாசமான கதை உள்ளது.



அமெரிக்காவில் மிகவும் பேமஸான உணவு பொருட்களில் ஒன்று 'சிக்கன் நஹ்ஹட்ஸ்'. இந்த உணவுக்கு அமெரிக்கர்கள் சொத்தையே எழுதி வைத்து விடுவார்கள் . 

 'வெண்டிஸ்'  என்ற உணவு விடுதியிடம்  கார்ட்டர் வில்க்கர்சன் தனது வித்தியாசமான கோரிக்கை வைத்து இருந்தார்.

அது "ஒரு வருடம் முழுக்க இலவசமாக எனக்கு சிக்கன் நஹ்ஹட்ஸ் வேண்டும், அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு இருந்தார்.

முதலில் அவரின் கேள்வியை வென்டிஸ் கண்டு கொள்ளவில்லை.ஆனால் கார்ட்டர் விடாமல் அதையே டுவிட்டியதால் எரிச்சலான வென்டிஸ்
 " உங்களுடைய இந்த டுவிட் 18 மில்லியன் ரீ டிவிட் ஆகிவிட்டால் ஒரு வருடம் முழுக்க உங்களுக்கு இலவசமாக சிக்கன் நஹ்ஹட்ஸ் வழங்கத் தயார்."என்று பதில் டுவிட் அனுப்பியது .
"ஆனால் ஒரு வருடத்திற்குள் இந்த சாதனையை எட்ட வேண்டும்" என்று நிபந்தனையையும் விதித்தது.
     தனது ஓசி நஹ்ஹட் முயற்சியில் தளராத கார்ட்டர் இதையே சவாலாக எடுத்து பலரிடம் டுவிட்டி உதவ கேட்டார்.

பலன்? 
இதுவரை அவர் ஓசி கேட்ட டுவிட் 3.6 மில்லியன் முறைகள் ரீடுவிட் ஆகியுள்ளது.

ஆனால் இந்த ஆண்டு முடிய சிலநாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அவரால் கண்டிப்பாக 18 மில்லியன் ரீ டிவிட் தொட முடியாது என்று கூறப்படுகிறது. 

 14 மில்லியன் கனவுதான்.
5 மில்லியனை  தொடுவதே சிரமம்.
அதனால் அவர் இந்த சவாலில் தோற்றுவிட்டதாக கூறப்படுகிறது. 
ஆனாலும் கார்ட்டர் ஒருவகையில் ஒபாமா சாதனையை முறியடித்து சாதனை படைத்து விட்டார்.

இந்த வருடத்தில் அதிகம் ரீடுவிட் செய்யப்பட்ட டுவிட்டர் பதிவில் அவருடைய டுவிட் தான் முதலில் உள்ளது.  
ஒபாமா டுவிட் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் நிற பாகுபாடு குறித்த டுவிட்தான்  1.7 மில்லியன் முறை ரீடுவிட் செய்யப்பட்டு இதுவரை முதலிடத்தில் இருந்தது.

 ஒபாமாவை இரண்டாவது இடத்துக்கு தள்ளி 
3.6 மில்லியன் ரீ டுவிட்டில் கார்ட்டர் முதலிடம் பெற்று விட்டார்.
இதற்காகவாது வென்டிஸ் ஒருவாரமாவது ஓசி கோழி நஹ்ஹட்ஸ் கொடுக்கலாம்.

தமிழ் நாட்டில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் ஓசி என்றால் அலைவார்கள் என்பது கார்ட்டர் மூலம் தெளிவு.

"No one is born hating another person because of the color of his skin or his background or his religion..."
===================================================================================================

ன்று,
டிசம்பர்-09.
ஊழல் எதிர்ப்பு தினம்
  • உலக  ஊழல் எதிர்ப்பு தினம்

  • இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா பிறந்த தினம்(1946)
  • இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது(1946)
  • தான்சானியா விடுதலை தினம்(1961)
  • ஐக்கிய அரபு நாடுகள் அமைப்பு ஐ.நா.,வில் இணைந்தது(1971)
==================================================================================================
தேறுதல் அறிக்கை.,

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் இன்று முதல்கட்ட வாக்குப் பதிவு. நேற்றுதான் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
தேர்தல் அறிக்கை வெளியிடாத பாரதிய ஜனதா கட்சியை கிண்டல் செய்து செய்தி வெளியிட்டிருந்தார் குஜராத்தில் அந்த கட்சிக்கு சிம்மசொப்பனமாக திகழும் ஹர்திக் படேல். அதன் பிறகே இந்த அறிக்கையும் வெளியானது.


ஹர்திக் தமது டிவிட்டர் செய்தியில், "வீடியோ தயாரிக்கும் மும்முரத்தில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை தயாரிக்க மறந்துவிட்டது போலும்! 
நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு… குஜராத்தில், வளர்ச்சியுடன் சேர்ந்து தேர்தல் அறிக்கையும் காணமல் போய்விட்டது. ஐயா, யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள், மீண்டும் ஒருமுறை உங்கள் வழக்கமான பாணியில் தேர்தல் அறிக்கையை தூக்கி எறியுங்கள்".
ஹர்திக் படேல் இந்த டிவிட்டர் செய்தியை வெளியிட்ட சில மணி நேரங்களுக்கு பிறகுதான் நிதியமைச்சர் அருண் ஜெட்லியும், குஜராத் மாநிலத் தலைவர் ஜீதூ வகானியும் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்கள்.
ஒரு ஆவணத்தை வெளியிடுவது எங்களது நோக்கமல்ல, குஜராத்தில் நாங்கள் ஏற்படுத்தியிருக்கும் வளர்ச்சி விகிதத்தை தொடர்ந்து பராமரிக்க விரும்புகிறோம்" என்று கூறுகிறார் கட்சியின் மூத்த்த் தலைவர்களில் ஒருவரான அருண் ஜேட்லி.
உலகமே மந்தநிலையில் இருக்கும்போது, இந்த வளர்ச்சி விகிதத்தை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம், அதை மேலும் நேர்மறையாக பராமரிப்போம்" என்றார் அவர்.
குசேலன்னு ஒரு படம். 
40 கோடி லாஸ். பிரமிட் நடராஜன் திரைப்படத் தயாரிப்பை விட்டு வெளிய போனதுக்கு காரணம் அது தான்.  
இனிமே சினிமாவே வேணாம்னு ஒதுங்கி 10 வருஷத்துக்கு அப்பறம் பழைய சமையல் தொழிலுக்கே போயிருக்காரு. 
மெதுவா கடன்களை அடைத்து வருகிறார் . 
இப்ப அவர் தொடங்கியிருக்கும் சைவ உணவகம் "மாவடு".
பாவம் ரஜினியின் "குசேலன் " தயாரிப்பாளரை குசேலன் ஆக்கிவிட்டது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சேகர் ரெட்டியின் ரெட்டிஸ் பேப்பர்ஸ்.

இவை கணக்கில் உள்ளது மட்டுமே.


தங்களது ஊழல்களை மணல் கொள்ளையை கண்டு கொள்ளாமல் செய்தியாக்காமல் இருக்க
ஊடக மாமாக்களுக்கு போடப்பட்ட எலும்புத் துண்டு.!
எலும்புத் துண்டை பொறுக்கிய இவர்கள் வாய் மட்டும் குமரியில் இருந்து டெல்லிவரை கிழிகிறது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?