சாதி வெறிக்கு தூக்கு
உடுமலைப்பேட்டையில் பட்டப் பகலில் சாதிஆணவப் படுகொலை செய்யப்பட்ட சங்கர்வழக்கில் கௌசல்யாவின் தந்தை உள்படஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது.
ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. சந்தேகத்திற்கு இடமின்றி சாட்சியங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று சொல்லி கௌசல்யாவின் தாயார் உள்ளிட்ட மூன்று பேர் விடுவிக்கப்பட்டனர்.
திருப்பூர் வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி அலமேலுநடராஜன் செவ்வாயன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார்.
வேறு சாதியை சேர்ந்த கௌசல்யாவை திருமணம் செய்த சங்கருக்கு எதிராக கௌசல்யா தந்தை ,மற்றும் உறவினர்கள் கொலைவெறித் தாக்குதல்நடத்தினர்.
இதில் சங்கர் உயிரிழந்தார்.
கௌசல்யா படுகாயம் அடைந்து உயிர் பிழைத்தார். கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய்அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை உள்ளிட் டோர் தான் இந்த கொலையை நிகழ்த்தினர் எனகௌசல்யா பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்.
இந்நிலையில் சின்னச்சாமி, அன்னலட்சுமி, பாண்டித்துரை உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை, கூட்டுச் சதி,தீண்டாமை வன்கொடுமை உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் செவ்வாயன்று நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பளித்தார்.
இதில் கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி (வயது 40) தூண்டுதலில் கொலைச்சதி திட்டமிடப்பட்டு சங்கர் கொலை செய்யப்பட்டதால் அவருக்கு மரண தண்ட விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
அத்துடன் திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன் (31), பழனியைச் சேர்ந்த மணிகண்டன் (25), திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தசெல்வக்குமார் (25), திண்டுக்கல் புதுப்பட்டிபொன்மாந்துரையைச் சேர்ந்த கலைதமிழ் வாணன் (24), திண்டுக்கல்லைச் சேர்ந்த மதன்(எ) மைக்கேல் (வயது 25) ஆகிய 5 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.அத்துடன் திண்டுக்கல் புதுப்பட்டியைச் சேர்ந்த தன்ராஜ் (எ) ஸ்டீபன் தன்ராஜ் (23)என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது.
ஒவ்வொருவருக்கும் இரட்டை தண்டனைகௌசல்யா தந்தை சின்னச்சாமி உட்பட மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆறு பேர் மீதும் இந்த கொலை வழக்கில் பல்வேறு பிரிவுகளில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள் ளன.
அதன்படி ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் சிறை தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தசிறைதண்டனைகள் அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்றும் அத்துடன் இரு வேறு பிரிவுகளின் கீழ் மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
அதன்படி ஆறுபேருக்கும் இரட்டை மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தன் ராஜ், வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (39) என்பவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.அத்துடன் குற்றவாளிகளுக்கு அபராதமாக ரூ.11 லட்சத்து 95 ஆயிரம் விதிக்கப்பட்டது. இந்ததொகையை வசூலித்து இரு சம பாகங்களாகப் பகிர்ந்து சங்கரின் மனைவி கௌசல்யாவுக்கும், சங்கரின் தந்தை வேலுச்சாமிக்கும் வழங்கும்படியும் நீதிபதி அலமேலு நடராஜன் உத்தரவு பிறப்பித்தார்.
நீதிமன்றத்தில் நடந்தது என்ன?முன்னதாக, செவ்வாயன்று திருப்பூர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டபோது குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பளிக்கத் தொடங்கினார். அப்போது முதல்குற்றவாளியான சின்னச்சாமி மற்றும் ஏழு குற்றவாளிகள் ஆகிய எட்டு பேர் மீது குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்தார்.
இதையடுத்து மேற்படி குற்றவாளிகளிடம் தண்டனை அளிப்பது குறித்து நீதிபதி, குற்றவாளிகள் தரப்பு கருத்துக்களை கேட்டார். சின்னச்சாமி தான் குற்றம் செய்யவில்லை என்று கூறியபோது, இப்போது தண்டனை அளிப்பது பற்றித்தான் கேட்கிறேன்.
குற்றம் செய்யவில்லை எனச் சொல்வதை ஏற்க முடியாது. இது போல் சொல்லக் கூடாது என்றார்.அப்போது குறைந்தபட்ச தண்டனை அளிக்கும்படி சின்னச்சாமி கேட்டுக் கொண்டார்.
ஏன் குறைந்தபட்ச தண்டனை அளிக்கவேண்டும், அதற்கு உங்கள் தரப்பு நியாயம் என்ன இருக்கிறது என நீதிபதி கேள்வி எழுப்பினார். மகன் இருக்கிறார், படிக்க வைக்க வேண்டும் என சின்னச்சாமி கூறினார்.
இதையடுத்து குற்றவாளிகள் ஒவ்வொருவரிடமும் நீதிபதி கேள்வி எழுப்பியபோதும் அனைவரும் குறைந்தபட்ச தண்டனை அளிக்கும்படி கேட்டனர்.
பின்னர் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் இது பற்றி ஏதாவது கூறுகிறீர்களா என நீதிபதி கேட்டார்.அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சங்கரநாராயணன் எழுந்து, இது அரிதினும் அரிதானவழக்கு என்ற அடிப்படையில் அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவரும், வழக்கறிஞர் செந்தில் குமாரும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி அதிகபட்ச தண்டனை வழங்கக் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து நீதிமன்றத்தை ஒத்தி வைத்தநீதிபதி அலமேலு நடராஜன் 12.50 மணிக்கு தீர்ப்பு விபரங்களை கூறுவதாகக் கூறிவிட்டு எழுந்து சென்றார். இதன் பிறகு மதியம் 1.30மணியளவில் மீண்டும் நீதிமன்றம் கூடியது.
நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பு விபரங்களைவாசித்தார்.
இதில் சின்னச்சாமி உள்ளிட்ட ஆறு பேருக்குஅவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் சட்டப் பிரிவுகள் ஒவ்வொன்றாக கூறி அவற்றுக்கான தண்டனைகளை அறிவித்தார்.
அதன்படி மரண தண்டனை அளிக்கப்பட்ட ஆறு குற்றவாளிகளுக்கும் இரண்டு பிரிவுகளில் இரண்டு மரண தண்டனைகள் வழங்கப்பட்டன. வெவ்வேறு பிரிவுகளில் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் பல ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மொத்தஅபராதத் தொகையில் ஒரு பகுதி அரசுக்கு வழங்கவும், மீதி தொகையை இரு பிரிவுகளாக கொலையுண்ட சங்கரின் மனைவி கௌசல்யாவிற்கும், சங்கரின் தந்தை வேலுச் சாமிக்கும் பிரித்து வழங்க வேண்டும் என்றும் நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பளித்தார்.
இன்று,
டிசம்பர்-13.
- மோல்ட்டா குடியரசு தினம்(1974)
- போலந்தில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது(1981)
- தமிழக எழுத்தாளர் தீபம் நா.பார்த்தசாரதி இறந்த தினம்(1987)
- பாய்ஜீ என்ற சீன ஆற்றின் டால்ஃபின் அரிய இனமாக அறிவிக்கப்பட்டது(2006)
தினமும் 4 லட்சம் ரூபாய் உணவுக்காக செலவிடும் பிரதமர் மோடியால் மாதம் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவாவதாக, குஜராத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் அல்பேஸ் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் ஆளும் பாஜகவை தோற்கடிக்க காங்கிரஸ் கூட்டணி தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.
குஜராத்தில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய அல்பேஸ் தாக்கூர், பிரதமர் மோடி தைவானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காளான் சாப்பிடுவதாகவும், ஒரு காளானின் விலை 80 ஆயிரம் ரூபாய் எனவும் தெரிவித்தார்.
அதனால் முன்னர் கறுப்பு நிறத்தில் இருந்த மோடி அழகாக மாறியுள்ளதாக விமர்சித்தார்.
தினமும் 5 காளான் சாப்பிடும் மோடியால் மாதத்துக்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவாவதாகவும், இது கேலி கூத்து என்றும் அல்பேஸ் தாக்கூர் விமர்சித்துள்ளார்.
தினமும் 5 காளான் சாப்பிடும் மோடியால் மாதத்துக்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவாவதாகவும், இது கேலி கூத்து என்றும் அல்பேஸ் தாக்கூர் விமர்சித்துள்ளார்.