பத்துக்கு ஒன்று தவறு .

உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் செய்த ஆய்வில்,  இந்தியா உட்பட வருவாய் குறைவான நாடுகளில் விற்பனை செய்யும் பத்து மருந்துகளில் ஒரு மருந்து தரம் குறைந்தது அல்லது தவறான கலவை மருந்து என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த பத்தாண்டுகளில் முதன் முதலாக இந்த ஆய்வறிக்கையை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அத்னோம் கெபிரேயஸ், “வருவாய் குறைந்த கீழ் மட்டத்தில் வாழும் மக்கள் போலியான மருந்துகளால் பாதிக்கப்படுகின்றனர். 


ஆப்பிரிக்க நாடுகளில் விற்பனையாகும் மருந்துகளில் 42 சதவிகிதம் தவறான மருந்துகள். வட அமெரிக்கா, தென் அமெரிக்காவில் விற்பனையாகும் மருந்துகளில் 21 சதவிகிதம் தவறானவை. 

இதே போல் ஐரோப்பா கண்டத்தில் விற்பனையாகும் மருந்துகளில் 21 சதவிகிதம் தவறானவை” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச அளவில் வருடத்திற்கு நிமோனியா காய்சலால் பாதிக்கப்பட்ட 72 ஆயிரம் முதல் 1 லட்சத்து 69 ஆயிரம் குழந்தைகள் போலி மருந்துகளால் பலியாகின்றனர்.

 சகாரா–ஆப்பிரிக்க பகுதியில் அமைந்துள்ள நாடுகளைச் சேர்ந்த மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் தரம் குறைவான மருந்தால் மரணமடைகின்றனர்.

மலேரியா காய்ச்சலுக்கான மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகளில் பெரும்பாலானவை தவறான மருந்துகளாக உள்ளன.

 அத்துடன் புற்று நோய், நீரிழிவு, கருத்தடை மருந்து, மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான மருந்துகள் ஆகியவைகளிலும் தவறான மருந்துகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்திற்கு வரும் தகவல்களில் இருந்து தெரியவருகிறது.

இவை எல்லாம் போலி, தவறான கலவை, தரம் குறைந்த மருந்துகள் பற்றிய சிறு அளவு தகவல்கள்தான். பெரும்பாலான போலி மருந்துகள் பற்றிய தகவல் தெரியவருவதில்லை. 

அங்கீகாரம் பெறாத மருந்துகள், தரம் குறைந்த மருந்துகள், மருந்து கலவையில் பற்றிய தகவலில் தவறான விபரங்களை அளித்தல் போன்ற மருந்துகள் போலி மருந்துகள் என்று கூறப்படுகிறது.

இந்த போலி மருந்துகள் நோயை குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்லாமல், இவற்றால் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் பல வியாதிகளும் வருகின்றன. 

இந்த போலி மருந்துகளால் ஆபத்தை விளைவிக்கும் நுண்ணியிர்களின் எதிர்ப்பு குறைகின்றது. இந்த போலி மருந்து உட்கொள்பவர்களால் மற்றவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படுகிறது. 
மருந்துகளை ஏற்றுக் கொள்ளாமல் தடுக்கும் பாக்டிரியா அல்லது வைரஸ்களை அழிக்க முடியாமலும் போகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில் எல்லாவித நோய்களுக்குமான தரம் குறைந்த, தவறான கலவை மருந்துகள் விற்பனை செய்வதாக உலக சுகாதார நிறுவனத்திற்கு தகவல்கள் வந்துள்ளன.
=====================================================================================
                                                                                                     அல்லற்கண் ஆற்றுப்பார் நட்பு."
                                                                                      ஊக்கத்தை குறைக்கும்                                                                                           எண்ணங்களையும்,இடர்காலத்தில் நழுவி விடும் நண்பனையும் நாம்                                                               எண்ணிப்பார்க்கவே கூடாது.
ன்று,
டிசம்பர்-12.


  • கென்யா விடுதலை தினம்(1963)
  • இந்திய தலைநகர் கல்கத்தாவில் இருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது(1911)
  • ரொடீசியா நாடு, ஜிம்பாப்வே என பெயர் மாற்றப்பட்டது(1979)
  • ரஷ்யா, சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது(1991)
  • =====================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?