ஞாயிறு, 17 டிசம்பர், 2017

தேர்தல் ஒத்திவைப்பு யாருக்கு அவமானம்?

ஆர்.கே, நகர் தேர்தல் அதிமுக வைப்பொறுத்தவரை மானப் பிரச்னை.

ஓபிஎஸ்ஸை வளைத்துப் போட்டு டம்மியாக்கி யாச்சு.இரட்டை இலை சின்னம் வாங்கியாயிற்று.

அதிமுகவே இப்போது தன்கையில் என்றுள்ள எடப்பாடி பழனிசாமி இந்த இடைத்தேர்தலில் தோற்றால்?

அதைத்தவிக்க வழக்கமான வாக்குக்குப் பணம் தான் சரி.
இல்லாவிட்டால் திமுக எளிதில் வென்று விடும்.

தினகரனோ மறைமுகமாக குக்கரில் பணம் வைத்துக்கொடுக்க ஆரம்பித்து விட்டார்.
இரண்டாம்  கூட கிடைப்பது அரிதாகிய நிலை.
கையில் ஆட்சியையும்,மோடியின் ஆசியையும் வைத்திருக்கும் தான் தோற்பதா?

ஒரு வாக்குக்கு 6000 விலை.களத்தில் அமைசர்கள்..ச.ம.உ க்கள்,மக்களவை,மாநிலங்கவை உறுப்பினர்கள்.மூட்டைகளில் 2000தாள்கள்.காவல்துறை உதவியுடன் பணப்பட்டுவாடா?
தேர்தல் பார்வையாளர்கள் வருவதை சொல்ல அரசு அதிகாரிகள்.போதாதா புகுந்து விளையாட.
பார்வையாளர்களிடம் மாட்டினாலும் பரவாயில்லை என்றுதான் அதிமுக அடலேறுகளுக்கு   கூறப்பட்டுள்ளதாம்.


இந்த இடைத்தேர்தல் நிறுத்தப்படும்.என்ற வாய்ப்பு கிடைக்குமே.அதைத்தான் பாஜக தமிழிசை நாள்தோறும் முழங்குகிறாரே?
ஆனால் இந்த பண மழை வைபவத்தில் திமுக கலந்து கொள்ளவில்லை.
ஒரு நேர்மையான போட்டியை தரவே திமுக தலைவர் ஸ்டாலின் விரும்புகிறாராம்.

ஆர்.கே.நகரில், தி.மு.க., சார்பிலும், ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும்' என, மூத்த நிர்வாகிகள் தெரிவித்த யோசனையை, ஸ்டாலின் ஏற்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

ஜெயலலிதா மறைவால், அ.தி.மு.க.,வில் நிலவும் உட்கட்சி பூசல், கூட்டணி பலம், அரசு மீதான அதிருப்தி உள்ளிட்ட காரணங்களால், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தி.மு.க., உறுதியாக வெற்றி பெறும் என திமுக  தலைமை எண்ணுகிறது.

ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க., மற்றும் தினகரன் தரப்பினர், வாக்காளர்களுக்கு, ஆயிரக்கணக்கில் பணப் பட்டுவாடா செய்கின்றனர்.
அந்த அளவுக்கு இல்லை என்றாலும், அதில் பாதியாவது தந்தால் தான், தி.மு.க.,வுக்கு வெற்றி கிடைக்கும் என, சில மூத்த நிர்வாகிகள், செயல் தலைவர், ஸ்டாலினிடம் தெரிவித்தனர். 
ஆனால், ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.


அதற்கு ஸ்டாலின்  கூறிய காரணங்கள்:

* தேர்தலின் போது, பிரசார பணியில் ஈடுபடும் தொண்டர்களுக்கு, பணம் தரப்படும்; ஆனால், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நடந்த இடைத் தேர்தலின் போது, கட்சி பேதமின்றி, அனைத்து வாக்காளர்களுக்கும், பணப்பட்டு வாடா செய்யும், 'பார்முலா'வை, அழகிரி தான் அறிமுகம் செய்தார்

* அதை தொடர்ந்து, தமிழகத்தில் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும், கட்சிகள், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்கின்றன. குறிப்பாக, இடைத்தேர்தல் என்றால், பணம் தான் பிரதானமாகஉள்ளது.* இது, இளைஞர்கள் மற்றும் நேர்மையான வாக்காளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அழகிரி ஆரம்பித்து வைத்த கலாசாரத்தை, நான் முடித்து வைக்க விரும்புகிறேன்* ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, அ.தி.மு.க.,வினர் அனைவரும், அவர் காலில் விழுவர். ஜெயலலிதா, எங்கு சென்றாலும் வரவேற்று,பிரமாண்டமாக பேனர் வைப்பர். இதனால்,போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு, மக்கள் சிரமப்பட்டனர்

* செயல் தலைவரான பின், என்னை சந்திக்க வருபவர்கள், சால்வைக்கு பதில், புத்தகம் தருமாறு கூறினேன். அந்த புத்தங்கள், கிராமங்களில் உள்ள 
நுாலகங்களுக்கு தரப்படுகின்றன. என் காலில் யாரும் விழக்கூடாது என, உத்தரவிட்டு உள்ளேன்

*கோவையில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, அ.தி.மு.க.,வினர் வைத்த பேனரால் விபத்தில் சிக்கி, இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, கட்சியினர் யாரும், பேனர் வைக்கக் கூடாது என, அறிவித்தேன். இவற்றுக்கு, இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

எம்.ஜி.ஆர், மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதா வரவுக்குப்பின் தமிழக அரசியலே காழ்ப்புணர்வு,பணம்,மிரட்டல் என்று சீர்கெட்டு போய்விட்டது.

இன்றைய தமிழக அரசியல் தளம் இந்திய அளவில் ஊழல் .பணம் ,சொத்துக்குவிப்பு ,குதிரைப்பேரம் என அசிங்கப்பட்டுள்ளது.
அதை ஜெயலலிதா மறைவுக்குப்பின் அவரைப்போல் பிரபலம் இல்லா அதிமுக தலைவர்கள் உள்ள இப்போதுதான் சீர் செய்ய ,நாகரிக அரசியல் உருவாக்க இதுதான்  சமயம் .அதை நான் செய்ய திமுகவினர் ஒத்துழைக்க வேண்டும்.

அதேபோல், ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு, யார் பணம் வழங்கினாலும், தி.மு.க., தரப்பில் தர வேண்டாம். பணம் தரும் கலாசாரத்தை, இனி, தி.மு.க., கையில் எடுக்காது.
அ.தி.மு.க., ஓட்டுகளை, தினகரன் தரப்பு பிரிக்க வாய்ப்பு உள்ளதால், நமக்குள்ள ஓட்டு வங்கியே, வெற்றிக்கு போதுமானது" என, ஸ்டாலின் கூறி விட்டார்.

இந்த தேர்தல் பண விவகாரத்தில் மீண்டும் நிறுத்தப்பட்டால் அது தமிழ் நாட்டு மக்களுக்கு அசிங்கம் என்று சில ஊடகங்கள் தவறான கருத்தை வெளியிடுகின்றன.

உண்மையில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் ,அதை தற்போது கைக்குள் வைத்திருக்கும் பாஜக மத்திய அரசுக்கும்தான் கேவலம் வந்து சேரும்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள்,பயங்கரவாதிகள் உள்ள காஷ்மீர்,நக்சல் பாரிகள் உள்ள இடங்களில் எல்லாம் 
தேர்தலை வெற்றிகரமாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு தம்மாம்துண்டு தொகுதியில் ஒழுங்காக 
தேர்தலை நடத்த்த முடியவில்லை என்றால் அது அசிங்கம் இல்லையா?

துணை ராணுவப்படை ,ஆயுத்தக்காவல்படை என்று வைத்துக்கொண்டு பணம் கொடுப்பவர்களை அடக்க முடியாதவர்களைப் பார்த்து பாகிஸ்தான்காரன் நம்மை பற்றி என்ன நினைப்பான்?
தமிழக ஊழல் ஆட்சியாளர்கள்,அதிகாரிகள்,குட்கா புகழ் காவல்துறை போன்வற்றை அறிந்தவர்கள் தேர்தல் அறிவிப்பும்,நடைமுறைகளும் எப்படி கடினமாக இருக்க வேண்டும்.

தேர்தல் அறிவித்து நடை முறை வரும்  போதே ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகள் புகார் பட்டியலில் உள்ள அதிகாரிகள்,காவலர்களை மாற்றிவிட வேண்டாமா?அதற்கு என்ன தயக்கம்?யார் தடுக்கிறார்கள்.
தடுத்தாலும் அதை மீறி செயல்படும் தன்னாட்ச்சி அதிகாரம் கொண்டதுதானே ஆணையம்.
அதிகாரத்தை குவித்து வைத்துக்கொண்டு பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை.

தேர்தல் நிறுத்தம்  என்பது கையாலாகத்தனம் இல்லையா? அரசியல்வாதிகளுக்கும் அரசுக்கும் பணிந்து போவது கேவலம் இல்லையா? 
அந்த அவமானத்தில் அந்த அறிவிப்பை பார்த்து தட்டிக்கேட்காத மத்திய அரசுக்கும், நீதித்துறைக்கும் கூட பங்குள்ளது.
தேர்தல் ஒத்தி வைப்பு யாருக்கு கேவலம்.?
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிகள் பணம் கொடுப்பதை தடுக்க கண்டிப்பான நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம் உண்டாகி விட்டது.
ஆர்.கே,நகர் தேர்தலில் தற்போது பணம் கொடுப்பவர்களை கைது செய்தால் சிலர் பணம் வாங்கியிருக்க தங்களுக்கு பணம் தரும் முன் ஏன் கைது என்று சிலர் காவலர்களை தடுப்பதும்,காவல்நிலையம் முன் மறியல் செய்து கைதான வள்ளலை வெளியே விட சொல்லும் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்து விட்டன.
இது மோசமான இழி நிலை.மக்கள் 1000க்கும்,பிரியாணிக்கும் அலையும் நிலையை அதிமுக திட்டமிட்டே உருவாக்கி விட்டது.
அழகிரி ஆரம்பித்த 100,200ஐ 6000 அளவுக்கு அதிமுக ஏற்றி விட்டதுதான் அதிமுக அரசின் சாதனை.
அதை மக்கள் தங்களுக்கான உரிமை என்கிற அளவுக்கு இறங்கி போராடுவது மக்களாட்சி தத்துவத்தையே கூறு போடும் செயலாகும்.

======================================================================================
ன்று ,
டிசம்பர்-17.
  • பூட்டான் தேசிய தினம்
  • அயர்லாந்தின் முதலாவது ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது(1834)
  • கோவாவை இந்தியா, போர்ச்சுகலிடம் இருந்து கைப்பற்றியது(1961)
  • பிரேசிலில்  முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது(1989)
=======================================================================================