உம் பணம் .... இனி எம் பணம்....!

பணமதிப்பிழப்பு, திட்டமிடா ஜிஎஸ்டி வரி  மூலம் இந்திய மக்களை  போட்டுத்தாக்கிய உலக பொருளாதார வல்லுநர் மோடி தனது புதிய குண்டாந்தடியை மக்கள் தலையில் போட தூக்கியுள்ளார்.

வங்கியில் சாமானிய மக்கள், நடுத்தர குடும்பத்தினர் போட்டுள்ள டெபாசிட் பணத்தை முழுவதுமாக உடனே திருப்பித்தர வேண்டிய அவசியம் வங்கிகளுக்கு இல்லை என்பது போன்ற சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது.

 ஏற்கனவே வங்கி இருப்பு 1000க்கு குறைந்தால் அபராதம் என்ற கொள்ளை இருக்கையில் இது அதைவிட பகல் கொள்ளை அல்லது தீவட்டிக்கொள்ளையை மிஞ்சிய கொள்ளை.


வங்கிகளை நஷ்டத்தில் இருந்து மீட்கவும், வங்கிச் சீர்திருத்தங்கள் செய்யவும், “வங்கித் தீர்மானம் மற்றும் டெபாசிட் காப்பீடு மசோதா 2017 ’’ என்ற மசோதாவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. 


இந்த மசோதாவில் சாமானிய மக்களின் சேமிப்புகளையும், டெபாசிட்களையும் முடக்கும் வகையில் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா சட்டமாக நிறைவேறினால், வங்கிகளை இழப்பில் இருந்து காக்கும் வகையில் ‘தீர்மானம் கழகம்(ரெசலூஷன் கார்பரேஷன்) என்ற அமைப்பு உருவாக்கப்படும்.


இந்த தீர்மானம் கழகம் வங்கிகளை திவாலாகவிடாமல் காப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும். வாராக்கடன் வசூலில் வங்கிகளுக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. 


வாராக்கடன்வசூலிப்பில் வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துப் பார்த்தும் அதில் 20 சதவீதம் மட்டும் வெற்றி பெற்றுள்ளன. 
இந்நிலையில், அரசு வங்கிகளின் திவால் சூழலை உணர்ந்த மத்திய அரசு ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு தொகையாக வழங்குவதாக உறுதியளித்தது.

 வங்கிகள் எதிர்காலத்தில் திவாலாகா வகையில் காப்பதற்காக தீர்மானம் கழகம் உருவாக்கப்பட உள்ளது.

இந்த “வங்கித் தீர்மானம் மற்றும் டெபாசிட் காப்பீடு மசோதா 2017 ’’ என்ற மசோதாவை மோடி தலைமையிலான அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டு வந்தது. 



ஆனால், தற்போது, இந்த மசோதா நாடாளுமன்றத்தின் தேர்வுக்குழுவின் முன் பரிசிலனைக்கு இருக்கும் நிலையில், வரும் 15ந்தேதி தொடங்கும் குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த மசோதாவை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதாவில் பிரிவு 52ன்படி, தீர்மானம் கழகத்துக்கு ஏராளமான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு வங்கியின் அடிப்படை கடமையைக் கூட ரத்து செய்யும் அதிகாரம் இதற்கு இருக்கிறது.


அதாவது, நாம் வங்கியில் வைத்திருக்கும் டெபாசிட் தொகையை, நாம் கேட்கும் போது உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்பது இப்போது வங்கிகளின் கடமையாகும்.


இனி அப்படி இருக்காது. அந்த உத்தரவாதத்தை ரத்து செய்வதற்கு தீர்மானம் கழகத்துக்கு (Resolution Corporation) இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.


இந்த சட்டம் மூலம்  ஒரு லட்சத்துக்குமேல் வங்கியில் நீங்கள் வைத்திருந்தால் நீங்கள் ஒரு லட்சத்துக்குத்தான் வரவு செலவு வைக்க முடியும்.


அதற்கு மேல் உள்ள பணத்தை வங்கி நிர்வாகம் தனது செயல்பாடுகளுக்கு உபயோகிக்க முடியும்.வங்கி நினைத்தால்தான் அதை பாவம் என்று உங்களுக்கு வழங்கும்.

அதாவது அது உங்கள் பணமாக இராது.வங்கி பணமாக அது வங்கிக்கு தேவைப்படும் வரை கருதப்படும்.அதற்கு இந்த சட்டம்  வகை செய்கிறது.


 உதாரணமாக மகன்,மகளின் திருமணம், படிப்புச் செலவுக்காக ரூ.10 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்து இருப்போம். முதிர்காலம் முடிந்தபின், அந்த தொகையை திருப்பிக் கேட்டால், வங்கிகள் அதை முழுமையாக உடனடியாக கொடுக்க வேண்டியது கடமையாகும். 

ஆனால், தீர்மானம் கழகம் உத்தரவிட்டால், அந்த தொகையை வங்கிகள் முழுமையாக உடனடியாக வழங்க வேண்டிய அவசியம் இல்லை.

டெபாசிட் தொகையில், குறிப்பிட்ட பகுதியை வங்கி தனது மூலதனத்துக்கு எடுத்துக் கொள்ளும் அல்லது கூடுதலாக 10 ஆண்டுகளுக்கோ அல்லது 20 ஆண்டுகளுக்கு பாசிட்டாகமாற்றிக்கொள்ளும். 

அதற்கு  உங்கள்  அனுமதி, ஒப்புதல் தேவையே இல்லை. 
அதற்கு கூடுதல் வட்டி தரவும் வேண்டியதில்லை.

பாவப்பட்டால்  அப்போது நடப்பில் இருக்கும் பணவீக்கத்துக்கு ஏற்ப வட்டி தர தீர்மானம் கழகம் முடிவு எடுக்கும்.ஆனால் அதற்கு எந்த உறுதியும் கிடையா.


அதாவது நம்முடைய சேமிப்பின் பகுதியை நம்முடைய அனுமதி இல்லாமல் வங்கிகள் எடுத்துக் கொண்டு, முழுமையாக உடனடி தேவைக்கு தராமலும் மறுக்கலாம். 
இது சட்டமாக நிறைவேறிவிட்டால், நீதிமன்றம் இதில் தலையிட முடியாது.


 மசோதாவை நிறைவேற்ற போதுமான கோரம் மக்களவை,மாநிலங்ககளவை இரண்டிலுமே பாஜகவுக்கு உள்ளது என்பதுதான் கோரமான உண்மை.


மகன், மகள் திருமணத்துக்காகவும், படிப்புச் செலவுக்காகவும், வீடு கட்டவும், நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் சேர்த்து வைத்த டெபாசிட் தொகையை முடக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.


மேலும், இந்த சட்டத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில்,மூத்த குடிமக்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள், அவர்களின் டெபாசிட்களுக்குதான்அதிகமான ஆபத்து ஏற்படும்.

இம்மசோதா கொண்டுவர முக்கிய காரணம் வராக் கடன் தானாம் .

இந்திய வங்கிகளில் ஆயிரக்கணக்கில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் வங்கிகள் தள்ளாடும் நிலைக்கு வரக்காரணம் 12 பெருசுகள் தானாம்.

அவர்கள் பெயர்களைக்கேட்டால் உங்களுக்கு இந்த அரசின் மீதும் ,வங்கிகள் மீதும்  வரலாம்.
அம்பாணிகள்,அதானி ,விஜய் மல்லையா போன்ற பண முதலைகள்தான்.

இவர்கள் உலக,இந்திய அளவில் பணக்காரர்கள் பட்டியலில் முதல் 100க்குள் இருப்பவர்கள்.
பணக்காரர்கள் பட்டியலில் இவர்கள் பெயரை வெளியிடுவார்கள் கடன்காரர்கள் பட்டியலை வெளியிட மறுக்கிறார்கள்.

இந்த பணமுதலைகள் நினைத்தால் ஒரு நாளில் கடனை தீர்க்கலாம்.
அல்லது வங்கிகள் இவர்கள் அடமான சொத்துக்களை விற்று கடனை தீர்க்கலாம்.

ஆனால் இதை செய்யாமல் தங்கள் எதிர்கால வாழ்வுக்கு,குழந்தைகள் கல்விக்கு,திருமணத்துக்கு நம்பிக்கையான இடம் என்று பணத்தை வங்கிகளில் போட்டு எதிர்கால கனவுகளில் இருக்கும் அப்பாவி மக்கள் பணத்தில் விளையாடுவது எந்த வகையில் சரியாகும்.

அரசின் இந்த கொடுமையான சட்டத்துக்கு  வங்கிகளும், வங்கி ஊழியர்களும் எதிர்த்து குரல் கொடுத்தாலும் உலக பொருளாதார நிபுணர்கள் மோடி,அருண் ஜேடலி அரசு கண்டு கொள்ளாமல் வரும் மக்களவை கூட்டத்தொடரில் வெளியே தெரியாமல் சட்டம் நிறைவேற்ற முடிவெடுத்துள்ளது.

இரு அவையிலும் நம்மக்கள் கொடுத்த பெரும்பான்மை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை செல்லாக்காசாக்கி விடும்.

மக்கள் கொடுத்தப் பெரும்பாண்மையை வைத்து மக்களுக்கே   ஆப்பு வைப்பதில் மோடியை யாரும் விஞ்சமுடியாது.

மக்களுக்காக அரசா ,அரசுக்காக மக்களா?என்றால் மோடி சொல்லும்  பதில் இந்திய மக்கள் அனைவருக்கும் தெரிந்ததுதானே?

=======================================================================================
ன்று,
டிசம்பர்-14.


  • இந்திய எரிபொருள் சேமிப்பு தினம்
  • ரைட் சகோதரர்கள், தமது வான்வெளிப் பயணத்தை முதல் முறையாக சோதித்தனர்(1903)
  • ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது(1939)
  • ஐநா.,வின் தலைமையகத்தை நியூயார்க் நகரில் அமைக்க முடிவு (1946)
 சோவியத் ஒன்றியம்
‘‘ஐரோப்பா கண்டத்தை ஒரு பெரும் பூதம் துரத்திக் கொண்டிருக்கிறது. அந்த பூதத்தின் பெயர் கம்யூனிசம்….’’
– சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு மாமேதை காரல் மார்க்ஸ், கம்யூனிஸ்ட் அறிக்கை என்ற தனது நூலை இந்த வரிகளுடன் தான் துவக்கினார். 
இன்றைக்கும் அது பொருந்துகிறது. கம்யூனிசம் என்ற பூதத்திற்கு ஒரு உருவம் கொடுத்தால் எப்படி இருக்கும்? 
அது லெனின் என்ற மாமேதையைப் போல இருக்கும்; ஸ்டாலின் என்ற மாவீரனைப் போல இருக்கும்… என்று கூறலாம். ஆனால், கம்யூனிசம் என்ற பூதம் இந்த இரண்டு பெரும் தலைவர்களையும் விட பிரம்மாண்டமானது. அத்தகைய பிரம்மாண்டத்திற்கு உருவம் கொடுத்தால் எப்படி இருக்கும்? அது சோவியத் ஒன்றியத்தைப் போல இருக்கும்.

சோவியத் ஒன்றியம் என்றொரு நாடு இருந்தது. சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் என்பது அதன் முழுப்பெயர். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு USSR என்ற எழுத்துக்கள் இந்த உலகம் முழுவதும் அனைத்துத்தரப்பு மக்களையும், அன்றாடம் உழைத்து வாழும் ஒவ்வொரு தொழிலாளியையும், ஒவ்வொரு விவசாயியையும், ஒவ்வொரு இளைஞனையும் மாணவனையும் சுண்டி இழுத்தது; கவ்விப் பிடித்தது என்று கூறினால் இப்போது விந்தையாக இருக்கும்.

மனித குலம் தனது வரலாற்றில் முதன் முதலாக பார்த்த பிரம்மாண்டம்; அதிசயம்; தொழிலாளி வர்க்கம் நினைத்தால் இந்த உலகின் கட்டமைப்பையே தலைகீழாகப் புரட்டிப் போடும்; புரட்சி நடத்தும் என்பதை உணர்த்திய மகத்தான வரலாறுதான் சோவியத் ஒன்றியம்.
USSR என்று பளிச்சிட்ட எழுத்துக்கள் கொண்ட நாடு – சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் என்ற நாடு – இன்று இல்லை. ஒரே ஒன்றியமாக இருந்த குடியரசுகள் 1992இல் ஏகாதிபத்திய சதிகாரர்களின் சூழ்ச்சியால் தனித்தனி குடியரசுகளாக பிரிந்தன. அதில் மிகப்பெரும் குடியரசு நாடு ரஷ்யா. ரஷ்ய கூட்டமைப்பு என்ற பெயரில் இன்று நாம் பார்க்கிற ரஷ்யா, கடந்த 25 ஆண்டுகளாக – முதலாளித்துவ நாடாக இருந்தாலும் ரஷ்ய மக்களின் வாழ்வில், உணர்வில் கலந்திருக்கிறது சோவியத் ஒன்றியம்.
சோவியத் ஒன்றியத்தைத்தான் சிதைத்துவிட்டோமே… அந்த ஒன்றியத்தில் இணைந்திருந்த உக்ரைன் போன்ற குடியரசு நாடுகளை படிப்படியாக ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக மாற்றிவிட்டோமே… எஞ்சியிருக்கும் ரஷ்யாவால் என்ன செய்துவிட முடியும்… அதுவும் கூட முதலாளித்துவ பொருளாதாரத்தைப் பின்பற்றுகிற நாடுதானே… என தப்புக்கணக்கு போட்டுவிட்டன ஏகாதிபத்தியமும் அதன் தலைமைப் பீடமான அமெரிக்காவும்.
கம்யூனிச பூதம் செத்து விட்டது என்று எக்காளமிட்டது அமெரிக்க ஏகாதிபத்தியம்.
அந்தோ பரிதாபம்… கம்யூனிச பூதம் ரஷ்யாவின் வடிவில், சீனாவின் வடிவில் இதோ துரத்திக் கொண்டிருக்கிறது.
கம்யூனிச பூதமான சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு, தனிக்காட்டு ராஜா போல தன்னைக் கருதிக் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் 1990களில் இராக்கை தாக்கியது; வளைகுடா பிரதேசத்தில் எண்ணெய் வெறிக் கொண்டு கொடிய போர்களை கட்டவிழ்த்து விட்டது; ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளை உருவாக்கியது; தலிபான்களைக் கொண்டு வெறியாட்டம் நடத்தியது; உலகின் பல பகுதிகளிலும் அமெரிக்காவின் நாசகர உளவு ஸ்தாபனமான சிஐஏ, ஏராளமான பயங்கரவாதக் குழுக்களை உருவாக்கி ஆயுதமும் நிதியும் அள்ளி வழங்கியது; 2000த்தின் துவக்கத்தில் அதே தலிபான்களையும் பயங்கரவாதிகளையும் அழிப்பதாகக் கூறி ஆப்கானிஸ்தான் மீது தீராத யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டது.
லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது; மீண்டும் இராக்கை யுத்தக்களமாக்கியது; லட்சக்கணக்கான குழந்தைகள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள்; ஏகாதிபத்தியத்தின் முன் மண்டியிட மறுத்த மாவீரன் சதாம் உசேனைத் தூக்கிலிட்டது; இராக்கை கைப்பற்றிய கையோடு லிபியாவைச் சிதைத்தது; வெள்ளைப் பெட்ரோல் வளம் கொழிக்கும் அந்த நாட்டை ரத்த பூமியாக்கியது; அமெரிக்காவிற்கு அஞ்ச மறுத்த ஜனாதிபதி மும்மர் கடாபியை ஒரு தெரு நாயைப் போல சுட்டு சாக்கடையில் வீசி எறிந்தது; சிரியாவில்… தலிபான்களை விட கொடிய ஐஎஸ் பயங்கரவாதிகளை உருவாக்கி ஆயுதமும் பணமும் கொடுத்து சிரியாவின் மக்களைக் கொன்று குவித்தது.
இரண்டாம் உலக யுத்தத்தில் கொடியவன் ஹிட்லரின் படைகளுக்கு சோவியத் ஒன்றியத்தின் ஸ்டாலின்கிராடில் எப்படி சமாதி கட்டப்பட்டதோ அதேபோல அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடிய போர் வெறிக்கு சிரியாவில் சமாதி கட்டப் புறப்பட்டது ரஷ்யா. ரஷ்யாவின் ஆயுத வலிமை அமெரிக்காவிற்கு தெரியும். வேறுவழியில்லாமல், கடந்த 25 ஆண்டுகளில் முதன் முறையாக போர்நிறுத்தம் என்றும் பேச்சுவார்த்தை என்றும் பேசத் துவங்கியது அமெரிக்கா. ஆப்கன், இராக், லிபியா ஆகிய நாடுகளைப் போல சிரியாவும் கேட்பாரின்றி அடிமையாக்கப்படும் அபாயத்தை தடுத்து நிறுத்தியது ரஷ்யா. கடந்த சில ஆண்டுகளாக கொடிய ஆயுதங்களை ஏந்தி, அப்பாவிகளை குரூரமாக படுகொலை செய்து வந்த ஐஎஸ் பயங்கரவாதிகளை சிரியாவில் துவம்சம் செய்தன ரஷ்யப் படைகள்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?