போர் துவங்கியதும் விளங்கி விடும்,
இன்றைய பரபர செய்தி அரை நூற்றாண்டாக அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டே இருந்த ரஜினி மீண்டும் தனது அரசியல் வாயை திறந்துள்ளார்.
அவர் அரசியலுக்கு வருவதை பார்ப்பது நமக்கு காலத்தின் கட்டாயம் என்று வேறு அறிவித்து விட்டார்.
வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன். காலம் குறைவாக உள்ளதால் அதற்கு முன் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை. லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து அப்போது முடிவு செய்யலாம். என்றும் மேலும்
கதைத்துள்ளார்.
தான் அரசியலுக்கு வருவதும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாலும் இனி" நான் உட்பட யாரும் அரசியல் பற்றி பேசக் கூடாது. யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம்.
அரசியல் அறிக்கை விடவும், மக்களுக்காக போராட்டம் பண்ணவும் நிறைய பேர் உள்ளனர்."என்று சொன்னதுதான் ரஜினி அரசியல் செய்யப்போகிறாரா?அரசியல் பேசாமல் மக்களுக்காக போராடாமல் இவர் தேர்தலில் வென்று முதல்வராவது எப்படி?எதற்காக?என்பது புரியவில்லை.
இப்படி செய்யாமல் தினகரனின் ஹவாலா முறையில் வென்று ஆட்சியைப்பிடிக்கப் போகிறாரா?அரசியலுக்கு வரும் முன்பே குழப்புவதை பார்த்தால் ரசிகர் (மூத்த குடிமக்) களை அரசியல் பேசாதே என்பதை பார்த்தால் அரசியலில் ரஜினி குதிக்கப் பயப்படுகிறார் என்பவர்கள் வாயை அடைக்க மட்டுமே இந்த அறிவிப்பு என்று எண்ணம் வருகிறது.
காவிரி பிரச்னைக்கு ஒரு கோடி ,பள்ளிக் கட்டிட வாடகை 3கோடி,மாநகராட்சி க்கு 3500க்குமேல் வாடகை போன்றவைகளை கொடுக்க முடியாமல் வறுமையில் வாடும் ரஜினிக்கு இன்றைய தேர்தல் முறையில் அரசியலில் செலவழிக்க பணம் இருக்குமா?
அதனால் வரும் சட்டமன்றத்தேர்தல் போரில் கலந்து கொள்வது ஐயமே.
அடுத்து "அரசியல் மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது. சிஸ்டத்தை மாற்ற வேண்டும். உண்மையான, வெளிப்படையான, நேர்மையான, ஆன்மீக அரசியல் கொண்டு வர வேண்டும் என்பதே எனது நோக்கம்."
என்கிறார் அரசியல் ஞானிஆகிக்கொண்டிருக்கும் நடிகர் ரஜினி காந்த் .
தேசிய அரசியல்,திராவிட அரசியல்,தமிழ்த் தேசிய அரசியல் என்று வரிசைகட்டி நிற்கும் தமிழக அரசியல் நிலவரத்தில் ரஜினி புதிதாக ஆன்மிக அரசியலை கொண்டுவர முனைகிறார்.
அது எந்த அளவுக்கு இருக்கும்,மக்கள் ஆதரவை பெற எந்த அளவு உதவும்.?
தமிழகத்தில் ஏற்கனவே ஆன்மிக அரசியல் இருக்கிறது.
இந்து ஆன்மிகத்துக்கு பாஜக,இந்து முன்னணி கள்,முஸ்லீம் ஆன்மிகத்துக்கு பல் லீக்குகள்,கிறிஸ்த முன்னேற்ற முன்னணி உடன்பட பல கிறிஸ்த ஆன்மிக அரசியல் அமைப்புகள் இருக்கத்தான் செய்கிறது.
இதில் ரஜினி ஆன்மிகம் எந்தவகை?அதை மக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் அளவு செய்யமுடியுமா?
இவை எல்லாம் கவைக்குதவா பேச்சு .
இன்றைய நிலையில் ரஜினி சொல்லும் ஆன்மிக அரசியல் பாஜகவை நோக்கிய ஆன்மிக வழிதான்.
ஆந்திராவில் நடிகர் சிரஞ்சிவி ஆரம்பித்த பிரஜா சக்தி கட்சி தேர்தலில் வென்ற பின்னர் காங்கிரசில் இணைந்தது போல் தான் அவரது ஆத்ம நண்பர் ரஜினி ஆன்மிக அரசியல் வழியும் தட்டப்படுகிறது.
கைக்காசை செலவழிக்க ரஜினிக்கும் விருப்பம் இல்லை .அவரது மனைவி,குடும்பமோ அதைவிட சிக்கனம் என்பதைத்தான் பள்ளிக்கட்டிட வாடகை,மாநகராட்சி கடை வாடகை எல்லாம் எடுத்துக் கூறும் வரலாறு.
இப்படிப்பட்டவர்கள் திமுகவையே திணறடிக்கும் தினகரன்,அதிமுக கட்சிகள் பண அரசியலுடன் போட்டியிட்டு மீள முடியுமா?
கைக்காசை செலவழிக்க மிக,மிக யோசிக்கும் இதுவரை சம்பாதித்த தமிழக சினிமா வருமானத்தில் பெங்களூரில் சொத்துக்களை வாங்கி குவித்திருக்கும்,கர்நாடகாவில் தொழிற்சாலைகள் நடத்தும் சிக்கன ரஜின க்கு இன்றைய வாக்குக்கு காசுவாங்குவதை தடுத்த திமுகவையும்,காவல்துறையையும் எதிர்த்து சாலை மறியல்,காவல்நிலைய முற்றுகை நடத்தும் அளவுக்கு உள்ள தமிழக அரசியல் எந்த அளவுக்கு ஒத்துப் போகும்?
இதற்கான விடை எல்லாம் போர் துவங்கியதும் விளங்கி விடும்.
=========================================================================================
இன்று,
டிசம்பர்-31.
இறுதியாக அந்நாள் வந்துவிட்டது...!?!

- பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவிற்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது(1599)
- விக்டோரியா மகாராணி, கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்(1857)
- வெள்ளொளிர்வு விளக்கு முதல் முறையாக தாமல் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது(1879)
- மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது(1909)
இறுதியாக அந்நாள் வந்துவிட்டது...!?!