மோடி பிரச்சாரம் செய்த 12 தொகுதிகள் ?

மோடி பிரச்சாரம் செய்த 12 தொகுதிகளில் 
பாஜக படுதோல்வி

‘தலை தப்பியது தம்புரான் புண்ணியம்’ என்று சொல்வார்கள். 

பாஜகவினரும் இப்போது அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். 

அந்த தம்புரான் பிரதமர்மோடியா, பாஜக தலைவர் அமித் ஷாவா, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதியா? என்பதுபாஜகவினர் மட்டுமே அறிந்த உண்மை. 

ஆனால், உண்மையிலேயே உண்மை என்னவென் றால், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வைக்கரையேற்றியவர்கள், நோட்டா, சுயேச்சை வேட்பாளர்கள், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள்தான். 

அவர்கள் இல்லையென்றால், பாஜக 22 ஆண்டுகால ஆட்சியை இழந்து அவமானப்பட்டிக்கும். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 99 இடங்களைப் பெற்று பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. 

காங்கிரஸ் 77, தேசியவாத காங்கிரஸ் 1, பாரதிய பழங்குடி கட்சி 2, சுயேட்சைகள் 3 இடங்களைப் பெற்றுள்ளனர்.பாஜக பெற்ற 99 இடங்கள் என்பது, பெரும்பான்மையைக் காட்டிலும் 7 இடங்கள் மட்டுமே அதிகம். அதாவது 8 இடங்கள் குறைவாகப் பெற்றிருந்தால், பாஜக 22 ஆண்டுகால குஜராத் ஆட்சியை இழந்திருக்கும். 

ஆனால், நோட்டா வாக்குகளும், சுயேச்சைகள் பெற்றவாக்குகளும் சேர்ந்து பாஜக-வை தப்பிக்க வைத்து விட்டன.சுமார் 25 தொகுதிகளில் சுயேச்சைகளுக்கும் நோட்டாவும்இல்லாவிட்டால் பாஜக படுதோல்வி அடைந்திருக்கும்.ஏனெனில், 9 தொகுதிகளில் பாஜக - காங்கிரஸ் இடையிலான வாக்கு வித்தியாசம் 2000 வாக்குகளுக்கும் குறைவுதான். 

16 தொகுதிகளில் பாஜக - காங்கிரஸ் இடையிலானவாக்கு வித்தியாசம் 3000 வாக்குகளுக்கும் குறைவுதான்.சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 25 தொகுதிகளை காங்கிரஸ் பறிகொடுத்திருக்கிறது. 

குஜராத்திலுள்ள தோல்கா தொகுதியை எடுத்துக் கொண்டால், இங்கு பாஜக - 71,530 வாக்குகளையும்; காங்கிரஸ் - 71,203 வாக்குகளையும் பெற்றுள்ளன. 
வாக்கு வித்தியாசம் வெறும் 327-தான். 
ஆனால், இங்கு சுயேச்சைகளுக்கு கிடைத்த வாக்குகள் மட்டும் 4,222. பகுஜன் சமாஜ்கட்சிக்கு கிடைத்த வாக்கு 3,139. நோட்டா- 2347 வாக்குகளையும், தேசியவாத காங்கிரஸ் 1,198 வாக்குகளையும் பிரித்திருக்கின்றன.

போதாட் தொகுதியில் பாஜக 79,623 வாக்குகளையும் காங்கிரஸ் 78,717 வாக்குகளையும் பெற்றன. வாக்கு வித்தியாசம் வெறும் 906 மட்டும்தான். 
இங்கு பகுஜன் சமாஜ்கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகள் மட்டும் 966. நோட்டா1334 வாக்குகளையும், தேசியவாத காங்கிரஸ் 656 வாக்குகளையும் தனியாக பெற்றுள்ளன.

பதேபுரா தொகுதி நிலவரமும் இதுதான். இங்கு பாஜக60,250; காங்கிரஸ் 57,539 என வாக்குகளைப் பெற்றுள்ளன.வாக்கு வித்தியாசம் வெறும் 2711. ஆனால், இத்தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் பெற்ற வாக்குகள் மட்டும்2,747. 
இக்கட்சி தவிர பகுஜன் சமாஜ் 1186 வாக்குகளையும்; நோட்டா 4,573 வாக்குகளையும் பிரித்து விட்டன.

போர்பந்தர் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் மோத்வாதியா 70,575 வாக்குகளைப் பெற, பாஜக வேட்பாளர் 72,430 வாக்குகளைப் பெற்றார். 
வாக்கு வித்தியாசம் 1855. ஆனால், இங்கு பகுஜன் சமாஜ் கட்சி பெற்ற வாக்குகள் மட்டும் 4,337 வாக்குகள்.


நோட்டாவும் தன் பங்கிற்கு3433 வாக்குகளை பிரித்து விட்டது. 

விஜாபூரில் பாஜக 72,326 வாக்குகளைப் பெற,காங்கிரஸ் 71,162 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தது.வித்தியாசம் என்று பார்த்தால் 1,164 வாக்குகள்தான். ஆனால், இத்தொகுதியில் நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள் மட்டும் 1280. 

தேசியவாத காங்கிரஸ் 1037 வாக்குகளையும், பகுஜன் சமாஜ் 621 வாக்குகளையும் பிரிக்க பாஜக வெற்றிபெற்று விட்டது.தபோய் தொகுதியில் காங்கிரசை விட பாஜக 2839 வாக்குகளைக் கூடுதலாக பெற்றிருக்கிறது. இங்கு நோட்டாவுக்குகிடைத்தது 3046. 

கோத்ரா தொகுதியில் பாஜக வெறும்236 வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளது. 
இங்கு நோட்டாவுக்கு மட்டும் 3050 வாக்குகள் கிடைத்துள்ளன.

இதேபோல ஹிமத் நகரில் வெற்றி வித்தியாசம் 1712,நோட்டா பெற்றது 3334. கம்பத் தொகுதியில் வாக்கு வித்தியாசம் 2318. நோட்டா பெற்றது 2731. 
மட்டர் தொகுதியின் வெற்றி வித்தியாசம் 2406 என்றால் நோட்டாவுக்குகிடைத்திருப்பது 4090. பிராந்திஜ் தொகுதியின் வித்தியாசம் 2551; நோட்டா பெற்றது 2907.

 ராஜ்கோட் (கிராமப்புறம்)தொகுதியில் வாக்கு வித்தியாசம் 2179. இங்கு நோட்டாவுக்குகிடைத்தது 2559. 
அம்ரெத் தொகுதியில் 1883 வாக்குகளில்தான் பாஜக காங்கிரசை முந்தியிருக்கிறது. ஆனால்நோட்டா 3710 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. 

வாக்ராதொகுதியில் 2317 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவெற்றிபெற, நோட்டா 2807 வாக்குகளை பிரித்திருக்கிறது. 
விஸ்நகர் வித்தியாசம் 2869 என்றால் நோட்டா பெற்றது 2992. 
இவ்வாறு குஜராத் மாநிலத்தில் நோட்டா பெற்ற வாக்குகள் மட்டும் சுமார் 5 லட்சத்து 51 ஆயிரத்து 615 ஆகும்.எனவே, குஜராத் தேர்தலில் பாஜக-வுக்கு எதிரான வாக்குகளே அதிகம். 

ஆனால், அந்த எதிர்ப்பு வாக்குகள் ஒருங்கிணைக்கப்படாததால், பாஜக அதைத் தனக்குச்சாதகமாக்கி வெற்றி பெற்றுள்ளது என்பதுதான் உண்மை.




குஜராத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் (என்சிபி) கூட்டணி அமைத்திருந்தால் காங்கிரஸ் வெற்றிபெற்றிருக்கும் என்று என்சிபி மூத்தத் தலைவர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார். 

குஜராத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் 72 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. 

தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இடையிலான கூட்டணி முறிந்து, தேசியவாத காங்கிரஸ் தனியாக போட்டியிட்டது.

300இல் இருந்து 2000 வாக்குகளில் மட்டுமே  25 தொகுதிகளில் தப்பி கரையேறியுள்ளது  பாஜக!
2016 இல் அதிமுகவுக்கும் இதே கதிதான் உண்டானது.40 இல் இருந்து 1000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் அதிமுக 46 இடங்களை கைப்பற்றியது.
அதற்காக தேர்தல் ஆணையமும் அதிகாரிகளும் எவ்வளவு கோல்மாலில் ஈடுபட்டார்கள் என்பது தமிழகமறிந்தது.
அதுபோல்தான் குஜராத்தில் பாஜகவும் வெற்றிக்காக பாடுபட்டுள்ளது.மோடி அழுகை நாடகம்  வரை நடந்தேறியுள்ளது.
======================================================================================

ன்று,
டிசம்பர்-20.
  • உலக மனித ஒருமைப்பாட்டு தினம்
  • சோவியத்தின் முதலாவது ரகசிய காவல்துறை சேக்கா அமைக்கப்பட்டது(1917)
  • கார்டிஃப், வேல்சின் தலைநகராக அறிவிக்கப்பட்டது(1955)
  • போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான ஐ.நா., உடன்படிக்கை கையெழுத்தானது(1988)
=======================================================================================

ஜெயலலிதா சிகிசசை படம் டீசர் வந்துள்ளது.ஆனால் மூன்றாவது மாடி ஜன்னலில் அலங்கரா செடி தரையில் வளர்வது தெரிவது எப்படி?ஜெயலலிதா வீட்டிலேயே அறுவை சிகிசசை வரை  வசதி உண்டு.
எனவே இது போயஸ் வீடு அல்லது கொடநாடு ஆக இருக்கலாம்.
அப்போலோவில் ஜெயலலிதா ஆபத்தான நிலையில் சுயநினைவின்றி கொண்டுவரப்பட்டார்,அப்படியே இருந்து உயிரை விட்டார்,இட்லி கதை எல்லாம் போய்தான்  என்று மருத்துவமனை தலைவர் ரெட்டி சொல்லிவிட்டார்.
பின் இந்த உறிஞ்சல் மட்டும் எப்படி உண்மையாக இருக்கும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?