மயிரிழையில் தப்பித்தவர்கள்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்த லில், பாஜக வெட்ககரமான வெற்றியை பெற்று, நூலிழையில் தோல்வி யிலிருந்து தப்பியுள்ளது.
கடந்த 2012 தேர்தலில் 115 இடங்களைப் பெற்றிருந்த பாஜக, 2017தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின்தேசியத் தலைவர் அமித்ஷா சாவல்விட்டிருந்தார்.
ஆனால், அந்த சவாலை உடைத்து நொறுக்கியிருக்கும் குஜராத் மக்கள், 99 இடங்கள் என்ற இரட்டை இலக்க எண்ணிக்கைக்குள் முடக்கி, அதிர்ச்சி அளித்துள்ளனர்.
16 இடங்களை காங்கிரசிடம் பறி கொடுத்துள்ள பாஜக, இந்த முறை 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியா சத்திலேயே வெற்றிபெற்று உயிர் பிழைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்தமாவட்டமான மேஹ்சனாவில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் 5 தொகுதிகளில் பாஜக தோல்வி அடைந்துள்ளது.
மோடி பிறந்த ஊரான வத்நகர், உன்ஜா தொகுதியில் இடம்பெற்றுள்ள நிலையில், இங்கு பாஜக வேட்பாளர் படேல் நாராயண பாய் 24 ஆயி ரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.
இங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஆஷா படேல் வெற்றி பெற்றார்.
குஜராத்தில் பழங்குடியினருக்கான 26 ரிசர்வ்டு தொகுதிகளில் பாஜக-வுக்கு 11 இடங்கள் வரையே கிடைத்தன. காங்கிரஸ் 14 இடங்களுக்கு அதிகமாககைப்பற்றியது.
தாழ்த்தப்பட்டவர் களுக்கான 13 தனித்தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணிக்கே பெரும் பான்மை இடங்கள் கிடைத்தன.குஜராத் வாக்கு எண்ணிக்கையைப் பொறுத்தவரை, ஜமால்பூர்-காதியாதொகுதிக்கான முடிவே முதலில் அறி விக்கப்பட்டது.
இங்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இம்ரான் கேதாவாலா சுமார் 37 ஆயிரம் வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றார்.குஜராத்தின் கிராமப்புற தொகுதி கள் பெரும்பாலானவற்றில் பாஜகவை கழுவி புறந்தள்ளிவிட்டன.
நகர்ப்புறங் களில் மட்டும் மீண்டும் அக்கட்சிக்கு வாக்கு கிடைத்துள்ளது.
கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி முதற்கட்ட மாக தேர்தல் நடைபெற்ற 89 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கே பெரும்பான்மையான இடங்கள் கிடைத்துள்ளன.
ஆனால், இரண்டாம் கட்டத் தேர்தல் நடைப்பெற்ற 93 தொகுதிகளில்தான் பாஜக கூடுதல் இடங்களைப் பிடித்துள்ளது.
பண மதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டி-யும் தன்னை பழிவாங்கக் காத்திருக்கின்றன என்பதை உணர்ந்து கொண்ட மோடி, முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில், “நான் ஒரு ஏழை; பிற்படுத்தப்பட்ட குடும்பத்திலிருந்து டீ விற்கும் தொழிலாளியாக வாழ்க்கை யைத் துவக்கியவன் என்று ஆரம்பித்து குஜராத்தின் இன்றைய ஜொலி ஜொலிப்புக்கு தான்தான் காரணம்” என்றுவெற்றுப் பெருமிதங்களை அள்ளிவிட்டார்.
அகமதாபாத் - மும்பை புல்லட் ரயில் திட்டம், துவாரகை இடையிலான தொங்குபாலம், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு போன்ற விஷயங்களை சுட்டிக்காட்டினார்.
ஆனால், அது எடுபடவில்லை. கருத்துக் கணிப்புகளும் உளவுத்துறை ரிப்போர்ட்டும் இத்தகவல்களை மோடிக்கு கடத்திய நிலையில், மோடி தனது வழக்கமான பாணிக்கு மாறி, இந்து - முஸ்லிம் வகுப்பு வாதப் பேச்சை கையிலெடுத்தார்.
இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் முழுக்க முழுக்க, தன்னைக் கொலை செய்வதற்கு, காங்கிரஸ் தலைவரான மணிசங்கர் ஐயர், பாகிஸ்தான் கூலிப்படையை ஏற்பாடுசெய்தார் என்று பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார்.
அடுத்ததாக இஸ்லாமியரான அகமது படேலை குஜராத்தின் முதல்வராக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது என்றார்.
குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருக்கிறது என்றார். ஒரு கட்டத்தில் கோயில்வேண்டுமா? மசூதி வேண்டுமா? என்றார்.
இறுதியாக குஜராத் மண்ணின் மைந்தனான தன்னை காங்கிரஸ் ஒழித்துக் கட்ட முயற்சிப்பதாக, பரிதாபத்தை வரவழைக்கும் விதமாக பேசினார்.
குஜராத் மக்கள் தன்னை கைவிட்டுவிடக் கூடாது என்று கண்ணீர் விட்டு அழுதார்.
மோடியின்இந்த அழுகாச்சி , மதவெறி பிரச்சாரமே, கடைசிநேரத்தில், பாஜக படு தோல்வி அடையாமல் கைகொடுத்துள்ளது.
மதவெறியையும்,பாகிஸ்தான் எதிர்ப்பையும் துண்டித்தான் இந்த மயிரிழை உயிர் தப்பல் நடந்துள்ளது.
ஆனால் இதுவே அடுத்த பொதுத்தேர்தலிலும் கரை சேர்க்கும் என்று பாஜக,மோடி கும்பல் மனப்பால் குடிக்கக் கூடாது.பொய் எத்தனை நாள் கைகொடுக்கும்.?
மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும்.ஏழைகள் வாழ்வாதாரத்துக்கு வேலைவாய்ப்பை உயர்த்த வேண்டும்.அவைகளை செய்யாவிட்டாலும் பரவாயில்லை.முட்டாள்தனமான பொருளாதார முடிவுகளை எடுத்து ஏழைகளை கசக்கிப்பிழிந்து மேலும் ஏழைகளாக்கவும்,பணக்காரர்களை மேலும் பணமுதலைகளாக்குவதையும் மோடி மஸ்தான் கும்பல் நிறுத்த வேண்டும்.
குஜராத் மக்கள் விழித்துக் கொண்டார்கள் என்பதைத்தான் பாஜக 127இல் இருந்து 99க்கு வந்ததை காட்டுகிறது.
எனினும் இந்த தேர்தலில், பாஜக - காங்கிரஸ் இடையிலான வாக்கு சதவிகிதம் சிறிய அளவிலேயே உள்ளது.
கடந்த முறை 61 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்த காங்கிரஸ், இந்த முறை 77 இடங்களை கைப்பற்றியுள்ளது.
அதன் கூட்டணி மற்றும் ஆதரவு வேட்பாளர்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 82 ஆகிறது.
குஜராத் - மொத்த இடங்கள்- 182
பாஜக 99
காங்கிரஸ் 77
தேசியவாத காங்கிரஸ் 1
பாரதிய பழங்குடிகள் கட்சி 2
சுயேச்சை 3
மொத்தம் 182
இமாச்சல் மொத்த இடங்கள் 68 -
பாஜக 44
காங்கிரஸ் 21
சிபிஐ(எம்) 1
சுயேச்சைகள் 2
மொத்தம் 68
முதல்வர் வேட்பாளர் தோல்வி
இமாச்சலப்பிரதேசத்தில் பாஜக வெற்றிபெற்றிருந்தாலும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேம் கமார் துமால் தோற்றுப் போனார்.
சுஜன்பூர்தொகுதியில் போட்டியிட்ட பிரேம் குமார் துமாலை, காங்கிரஸ் வேட்பாளர் ராஜிந்தர்ரானா சுமார் 3 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
அதேவேளை யில், 6 முறை அம்மாநில முதல்வராக பதவி வகித்த- காங்கிரஸ் கட்சியின் வீரபத்திர சிங்,அக்ரி தொகுதியில் 6 ஆயிரத்து 51 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
==================================================================================================================================
போலி சாமி ஜக்கி வாசுதேவ் விரைவில் சிறையில் .“நதிகளை மீட்போம்” என்றபெயரில் இயக்கம் நடத்திய ஈசா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளார் .
ஒரு அரசாங்கம் ஆற்றையும், நீர் நிலை களையும் மாசுபடுத்தும் போதும், அதைக் கெடுக்கும் போதும் அதைத் தடுப்பதுதான் சாமியாரின் வேலை என்று மட்டுமே ஜக்கிவாசுதேவினை சந்தித்த போது நான்தெரிவித்தேன்.
இதுவரை நாடு முழுவதும் 9 ஆறுகளை நான் மீட்டெடுத்து இருக்கின்றேன். ஆனால் இதுவரை ‘மிஸ்டு கால்’ மூலம் நதிகளை மீட்டுஎடுப்பது குறித்து எனக்கு எதுவும் தெரிய வில்லை. அது எப்படி சாத்தியம் என்பதும் தெரியவில்லை. இதுபோன்ற சாமியார்களுடன் அரசியல் வாதிகளும் சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ள மனித உறவுகளைச் சிதைக் கின்றனர்.
நதிகளை மீட்கும் ஜக்கியின் திட்டம் மக்களிடம் இருந்து நிலத்தை பறிப்பதற்கான திட்டம். இத்திட்டத்தைக் காட்டி பல மாநிலங் களில் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
இது தவறான நடவடிக்கை. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ராம் ரஹீம்பாபா, ஆசாரம் பாபா உள்ளிட்ட 4 பிரபலசாமியார்கள் சிறைக்குப் போயிருக்கின்ற னர்.
பழங்குடி பாதுகாப்பு சங்கத் தலைவர் முத்தம்மாள் தொடர்ந்துள்ள வழக்கு ஜெயித்து விட்டால் ஐந்தாவது சாமியாராக ஜக்கி வாசுதேவ் சிறையில் இருப்பார்.
இவரை அம்பலப்படுத்தாவிட்டால் ஆறுகளுக்கும், சுற்றுச்சூழ லுக்கும் பெரும் கேடு ஏற்படும். ஜக்கி வாசுதேவ்வின் மோசடிகளை மக்களிடம் அம்பலப்படுத்த உள்ளேன்.
இதன் ஒருபகுதி யாக வரும் 19 ஆம் தேதி கோவையில் ‘தர்மம்காப்போம்’ என்ற பெயரில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனது பெயரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மோசடி ஆவணங்கள், ஈசா மையத்தில் சிலர் மர்மமான முறையில் இறந்து போயிருப்பது, சேலத்தில் 9 லட்சம் மரங்கள் நட்டு இருப்பதாக பொய்யான தகவலை பரப்பியது என ஈசா மையம் மேல் உள்ள பல குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தப் போகிறேன்."
-‘தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங்.
இன்று,
டிசம்பர்-19.
- கோவா விடுதலை தினம்
- தமிழக அரசியல் தலைவர் க.அன்பழகன் பிறந்த தினம்(1922)
- முதல் இந்தோ-சீன போர் துவங்கியது(1946)
- போர்ச்சுகீசிய குடியேற்ற நாடான டாமன் மற்றும் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டது(1961)