சனி, 30 ஏப்ரல், 2011

இயற்பியலே கடவுள்,,,,,,

பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே                                        -ஸ்டீபன் ஹாக்கிங்


இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது கடவுள் அல்ல, இயற்பியல்ன் கோட்பாடுகளின் விளைவுகளே காரணம் என்று கூறியுள்ளார் உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து இயற்பியலாளர் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்.

Muscular dystrophy எனும் உடலியல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரான ஹாக்கிங், விண்வெளியியல் ஆய்வுக்கு ஆற்றிய சேவை மிகப் பெரியது. பிளாக் ஹோல்ஸ் குறித்த இவரது ஆய்வு மிகப் பெரியது. இவர் எழுதிய ‘த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்’ என்ற புத்தகம் மிகப் பிரபலமானது.

பிரபஞ்சம் உருவானதற்குக் காரணமான பிங் பாங் குறித்த கருத்தையும் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தையும் இதில் அவர் விளக்கியுள்ளார்.இங்கிலாந்தின் சன்டே டைம்ஸ் இதழின் சிறந்த புத்தக வரிசையில் தொடர்ந்து 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது இந்தப் புத்தகம்.
தற்போது ஹாக்கிங் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அது இந்த பிரபஞ்சததை கடவுள் உருவாக்கவில்லை. மாறாக, இயற்பியலின் விதிகளே பிரபஞ்சம் உருவாகக் காரணம் என்று கூறியுள்ளார்.இயற்பியலின் தவிர்க்க முடியாத விதிகளின் விளைவுகளால்தான் இந்த பிரபஞ்சம் உருவானதாக தனது சமீபத்திய ‘தி கிரான்ட் டிசைன்’ என்ற நூலில் எழுதியுள்ளார் ஹாக்கிங்.

இதுகுறித்து ஹாக்கிங் கூறுகையில், இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு அவ்வளவு பெரிய பிரமாண்டமான வெற்றிடம் இருந்தது. எனவே யாரும் வந்து பூமியை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவாகவே தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது இந்த பிரபஞ்சம்.

இது முற்றிலும் இயற்பியல் சார்ந்ததே. சுருக்கமாக சொன்னால் இந்த பிரபஞ்சம், சுயம்புவாக உருவானது. இதை உருவாக்க கடவுளுக்கு அவசியம் இல்லை. நமது பிரபஞ்சத்தின் அன்றைய நிலை, இன்றைய நிலை, நாம் இந்த பிரபஞ்சத்தில் வாழ முடிவது என அனைத்துக்குமே ஏதாவது ஒரு காரணம் உள்ளது. எதுவுமே மர்மம் இல்லை. எல்லாமே அறிவியல் சார்ந்தது.

பிரபஞ்சம் தானாக உருவாகவில்லை, அதை உருவாக்கியவர் கடவுள்தான். கடவுளின் சக்திதான் பிரபஞ்சத்தை உருவாக்கியது என்பது தவறு, அது சாத்தியமில்லை. கடவுள் வந்து தொட்டுக் கொடுத்து ‘ஏ பிரபஞ்சமே உருவாகு’ என்று கூறினார் என்று சொல்வது அபத்தமானது என்று கூறியுள்ளார் ஹாக்கிங்.

அதேசமயம், 1998ல் ஹாக்கிங் எழுதிய ‘த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்’ நூலில், பூமியின் உருவாக்கலில் கடவுளுக்கும் பங்கு இருக்கலாம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில், பிரபஞ்சத்தின் முழுமையான வரலாற்றை நாம் பார்க்கும்போது, அது முற்றிலும் மனிதகுலத்தின் வெற்றியாக கூறிக் கொள்ள முடியும். அதில் கடவுளுக்கும் ஒரு இடம் இருக்கலாம் என்று கூறியிருந்தார் ஹாக்கிங்.

ஆனால் தற்போது முற்றிலும் இது இயற்பியல் சார்ந்த நிகழ்வு என்று அடித்துக் கூறியுள்ளார் ஹாக்கிங்.தனது புதிய புத்தகத்தில் அவர் கூறுகையில், பிக் பாங் காரணமாக சூரிய குடும்பமும், கோள்களும் உருவாகின. பூமியும் உருவானது. இதற்குக் காரணம், இயற்பியலின் விதிகளால் ஏற்பட்ட விளைவுகளே. இங்கு கடவுளுக்கு எங்குமே இடமில்லை. முற்றிலும் அறிவியல் சார்ந்த நிகழ்வு இது.

என் முன் இரண்டு கேள்விளை வைக்கிறேன். முதல் கேள்வி, நம்மால் புரிந்து கொள்ள முடியாத காரணங்களுக்காக கடவுள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கினாரா என்பது.2வது கேள்வி, அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் பிரபஞ்சம் உருவானதா என்பது. இதில் நான் 2வது கேள்வியையே ஆதரிக்கிறேன். நீங்கள் விரும்பினால் அறிவியலின் கோட்பாடுகளை ‘கடவுள்’ என்று கூறிக் கொள்ளலாம். அதேசயம் இதைத் தவிர வேறு எந்த கடவுளும் பிரபஞ்சத்துக்கு உரிமை கொண்டாட முடியாது என்பது எனது கருத்து என்கிறார் ஹாக்கிங்.

இருப்பினும் பல விஷயங்கள் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. குறிப்பாக பிளாக் ஹோல்கள். இந்த ‘இருண்ட சக்தி’ பிரபஞ்சம் உருவானபோது ஏற்பட்டதா அல்லது பிரபஞ்சம் உருவானபோது அழிந்து போனதின் மிச்சமா என்பது இதுவரை விளங்கவில்லை. தற்போதைக்கு பிரபஞ்சத்தின் வரலாறு குறித்து உலக அளவில் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ள ஒரே முடிவு பிக் பாங் தியரி மட்டுமே. மிகப் பெரிய வெடிப்புப் பிரளயத்தைத் தொடர்ந்து இந்த பிரபஞ்சம் உருவானதாக இந்த பிக் பாங் தியரி கூறுகிறது. 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பேரண்ட வெடிப்பு நடந்ததாக கடந்த ஆண்டு கணித்துக் கூறப்பட்டது.

தற்போது வெளியாகியிருக்கும் ஹாக்கிங்கின் நூலும் பிரபஞ்ச வரலாறு குறித்த புதிய பார்வைக்கு வித்திடும் என்கிறார்கள்.அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியலாளர் லியோனார்ட் லோடினோவுடன் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளார் ஹாக்கிங். இது செப்டம்பர் 9ம் தேதி வெளியாகிறது.                                                                                                               நன்றி:தமிழ்நியுஸ்சினிமா.காம்
===============================================================================================================
புகைப்பவரா நீங்கள்,,,,,அப்போ இதைப் படியுங்களேன்,,,,,

புகைத்தலின் ஆபத்துகள் பற்றி அறியாதவர்கள்  உண்டு.கேட்பவர் அதிகமில்லை.அதிலும் கேட்க வேண்டியவர்கள் காதில் விழுத்துவதே இல்லை.எனவே சில தகவல்களை மட்டும் மனத்தில் அசை போடுவதற்காக முன் வைக்கிறேன்.
புற்று நோய்கள், மாரடைப்பு, பிரசர், சிறுநீரகப் பாதிப்பு, பக்கவாதம் போன்ற மிகக் கடுமையான ஆபத்துக்கள் பற்றி இங்கு மீண்டும் சொல்லப் போவதில்லை.
நாளடைவில் ஏற்படும் பாதிப்புகள்
• புகைத்தல் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் உயர் இரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. இது மாரடைப்பு, பக்கவாதம் ஆகியன வருவதற்கு முக்கிய காரணங்களாகும்.
• புகைத்தலால் ஆஸ்த்மா நோயின் தீவிரம் அதிகரிக்கிறது. சுவாசக் குழாய்களில் அழற்சி அதிகரிப்பதால்ஆஸ்த்மாவைத் தணிக்க எடுக்கும் மருந்துகளின் செயற்பாட்டுத்தன்மையையும் குறைக்கிறது.
• ஆர்பாட்டமில்லாமல் படிப்படியாக நோயாளி உணரா வண்ணம், கண்பார்வையை முற்றாகச் சிதைக்கும் மக்கியூலர் டிஜெனரேசன் (macular degeneration) என்ற நோய் வருவதற்கான சாத்தியம் ஏனையவர்களை விட அதிகம் புகைப்பவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாகும்.
• கண் பார்வை குறைவதற்கு மற்றொரு காரணமான வெண்புரை நோய் (cataract) வருவற்கான வாய்ப்பும் புகைப்பவர்களுக்கு அதிகமாகும்.
• மற்றவர்கள் முன் நாணி நிற்க வைக்கும் கறை படிந்த பற்களுக்கும், அசிங்கமாகத் தோற்றமளிக்கும் முரசு நோய்களுக்கும் புகைத்தல் முக்கிய காரணமாகிறது.
• முரசு வீங்குதல், முரசு கரைதல், வாய்நாற்றம் ஆகியவற்றைத் தோற்றுவிப்பதுடன் பற்கள் விரைவில் விழுந்து விடுவதற்கும் புகைத்தல் காரணமாகிறது.
• புகைப்பவர்களிடையே மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான சாத்தியமும் அதிகமாகும்.
• மனைவி சமிக்கை காட்டினாலும் கணவன் புறமுதுகிட்டு ஓடுவதற்கு, அதாவது ஆண்குறி விறைப்படுவதில் குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களில் புகைத்தலும் முக்கியமானதாகும்.
30 முதல் 40 வயதுகளிலேயே அவ்வாறான நிலை ஏற்படுவதற்கான சாத்தியம் மற்றவர்களை விட 50 சதவிகிதம் அதிகமாகும். சிகரெட்டில் உள்ள நிகொடின் இரத்தக் குழாய்களைச் சுருங்கச் செய்கிறது. ஏனைய பகுதிகளில் உள்ள இரத்தக் குழாய்களைப் போல ஆணுறுப்பில் உள்ளவையும் சுருங்குகின்றன. நாட் செல்ல மேலும் சுருங்கி அது விறைப்படைவதற்கு வேண்டிய இரத்தம் செல்லத் தவறுவதால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுகிறது.
• வேலைக்கு செல்ல முடியாது அதிக சுகவீன லீவு எடுக்க வேண்டிய நிலையும் புகைப்பவர்களுக்கு நேர்கிறது. மற்றவர்களைவிட 25 சதவிகிதம் அதிகளவு நாட்களை இவர்கள் அவ்வாறு எடுக்கிறார்கள்.
• புகை கண்களை அதிகம் உறுத்துகிறது. வாய்க்கு அருகில் இருப்பதால் புகைக்கும்போது வெளிவரும் வெப்பமும், நச்சுப் பொருட்களும் கண்ணின் மென் திசுக்களைப் பாதித்து, கண் கடித்தல், உருட்டுதல், சிவத்தல் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன.
• புகைக்கும் ஓவ்வொரு சிகரெட்டும் சருமத்திற்கான இரத்த ஓட்டத்தை சுமார் ஒரு மணி நேரத்திற்குக் குறைக்கின்றன. இதனால் சருமம் வெளிறி சுருக்கங்கள் வேளையோடு ஏற்பட்டு வயதான தோற்றத்தையும் கொடுக்கின்றன.
• ஒருவர் நாளடைவில் போதிய உடற் பயிற்சி செய்தல், காய்கறிகள் பழவகைகளை அதிகம் உண்ணல் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைப் பின்பற்றினாலும், புகைத்தலும் செய்தால் நன்மைகள் யாவும் கரியாகிவிடும்.
   இதைப்படித்ததும் ஏற்படக்கூடிய பதட்டத்தைப் போக்க ஒரு இழுப்புக்குத்தொன்றுகிறதா?
வேறு வழியில்லை புகை பிடிப்பதை விட்டுத் தள்ளுங்கள்.இல்லையெனில் புதைக்குழிக்குள் உங்களை அது தள்ளிவிடும்.
 

இந்திய-இலங்கை ஒப்பந்தம்,{ரகசிய .?}


சிங்களஅரசு இந்திய அரசுக்கு வழங்கிய சில உறுதிமொழிகளை அடுத்து சிங்கள அரசுக்கு இந்தியாஆதரவு அளிக்கப்போவதாக செய்திகள் வருகின்றன.பக்‌ஷே அரசு இந்திய அரசுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றினால் அவருக்கு ஆதரவு கொடுப்பதாக மன்மோகன் சிங் தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.
 தொலைபேசி மூலம் நடந்த இப்பேச்சு வார்த்தையில் விடுதைலைப்புலிகளுக்கு எதிரானபோர் முடிவுற்ற பின்னர் இந்தியாசெய்த உதவிகளுக்கு பலனாக வழங்கிய உறுதிமொழிகளே அவைகள்.

இதற்கு முன்உருவான ஒப்பந்தங்களையே ராஜபக்‌ஷே அலட்சியம் செய்யும் போது வெறும் வாய் வார்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு ரகசியமாக புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கென  இந்திய_-சிங்கள அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்த ஆதரவு என்பது காங்கிரசின் துரோகத்தை மீண்டும் ஒருமுறை இப்போது பார்க்கப்போகின்றோம்.சிங்களம் வழங்கிய உறுதிமொழிகளில் அதிகரப்பரவலாக்கமும் அடங்குமாம்.
சில நாட்கள் முன்னர் அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்டு காவல்த்துறை செயற்படத் தொடங்கினால் தன்னால் கூட பாதுகாப்பாக தமிழர் பகுதிகளுக்கு சென்றுவர முடியாது என மகிந்த குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
போர்க்குற்றத்தில் நான் மாட்டினால் உன்னையும்[இந்தியாவின் ரகசியாஅதரவ்வையும் கூறி] மாட்டிவிடுவேன் என்ற மிரட்டலினாலேயே இந்தியா சிங்களத்திற்கு உதவு ஒப்புக்கொண்டிருக்கக் கூடும்.
எந்த விதத்திலும் சிங்கள அரசுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுக்கக் கூடாது என தமிழக தலைவர்கள் கருணாநிதி,ஜெயலலிதா,போன்றோர் தங்கள் பகை மனப்பாண்மையை விட்டு விட்டு  ஒருமித்தக் குரல்  கொடுக்க வேண்டும். உண்மையிலேயே தமிழர்,ஈழத்தமிழர் கள் நலனில் அவர்கள் கூறிவரும் அக்கறை இருந்தால் உடனே குரல் கொடுக்க வேண்டும்.
டைம்ஸ் குறிப்பாகத் தனது தலையங்கத்தில்  கூறியவை உங்கள் பார்வைக்கு

”இந்தப் போர் குற்றங்களில் வெளியாருக்கும் பங்குண்டு. இந்தியா சிறீலங்காவின் புலிகளுக்கு எதிரான போர்த்திட்டத்தை ஆதரித்ததுடன் 2010-ல் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளில் ராஜபக்சேவுக்கு சிறப்பு மதிப்பும் அளித்தது. புலிகளை வெறுக்க இந்தியாவுக்கு சரியான காரணங்கள் இருந்தன, அவற்றில் 1991-ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் அடங்கும். மேலும் சிறீலங்காவில் சீனா தனது ஆதிக்கத்தை விரிவாக்கி வருவதைப் பற்றிய கவலைகளும் இந்தியாவுக்கு இருக்கிறது. ஆனால் இந்தியத் தலைவர்கள் தனது அண்டை நாட்டினால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களை புறக்கணிக்க முடியாது.”

குற்றவாளிகள்,,,,,,


எதிர்பார்த்தது போலவே இலங்கைக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள இந்திய அரசு, நிபுணர்குழு அறிக்கையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்துள்ளதாகவும், அப்பாவி மக்களை பாதுகாப்பு வலயத்திற்குள் வரவழைத்து இலங்கை இராணுவம் குண்டு வீசி கொன்றதாகவும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

போர்க் குற்றத்தில் பங்கு,,,,,,,,,,,,,,,
இலங்கை போர்க் குற்றம் புரிந்துள்ளது உண்மைதான் என்பதை ஒப்புக்கொள்ளும் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளிவந்தும்,மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று வீசும்போது கடைபிடிக்கும் அதே கள்ளமவுனத்தை கடைபிடித்தபடியே, தற்போது இலங்கையை போர்க் குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றுவதற்காக கமுக்கமாக களமிறங்கி உள்ளது.
இந்தியாவின் ஆதரவு தங்களுக்கு கிடைத்துள்ளதை உறுதிபடுத்தியுள்ள இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
இலங்கை இராணுவம் தமிழர்களை கொன்று குவிப்பதற்கு துணைபோன மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு, தற்போது போர்க் குற்றச்சாட்டில் சிக்கி உள்ள ராஜபக்சவை காப்பாற்ற முட்டுக்கொடுக்க தொடங்கி இருப்பது, தமிழர்களுக்கு இழைக்கும் பச்சை துரோகம் என இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கு தமிழக தலைவர்கள் பலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதே சமயம் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் இங்கே மற்றொன்றையும் குறிப்பிடுகிறார்கள்."போர்க் குற்றத்திற்காக இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப்படுமானால்,ஆயுத உதவி மட்டுமல்லாது போர் வியூகம் அமைத்து கொடுத்தது வரையிலான இந்திய அரசு அளித்த உதவியை இலங்கை காட்டிக்கொடுக்கும்.
அது மட்டுமல்லாது,கிளிநொச்சி வீழ்ந்தவுடன் போரை நிறுத்தி புலிகளை நிர்ப்பந்தத்தின் மூலம் சரணடைய செய்யவோ அல்லது பேச்சுவார்த்தைக்கு வரவோ செய்யலாம் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.ஆனாலும் அப்பாவி தமிழர்கள் உயிர் இழந்தாலும் பரவாயில்லை போரை தொடர்ந்து நடத்தி புலிகளை முற்றாக அழித்தொழிக்குமாறு இந்தியாதான் கூறியது.
எனவே போரில் பொதுமக்கள் பலியானதற்கு இந்தியாதான் காரணம் என்று கூறி காட்டிக்கொடுக்கவும் இலங்கை தயங்காது என்பதால்தான், இலங்கையை காப்பாற்ற பதறி துடித்துக்கொண்டிருக்கிறது மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு.
செய்தி தளம்
============================================================================
கே.பாலசந்தர்
கே.பாலசந்தர்
பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான கே. பாலசந்தர் இந்தியாவில் திரைப்படத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகெப் பால்கே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2010-ம் ஆண்டுக்கான தாதா சாகெப் பால்கே விருது பாலசந்தருக்கு வழங்கப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பு வெள்ளியன்று வெளியிடப்பட்டது.
தங்கத் தாமரைப் பதக்கம் மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கம் கொண்டது இந்த விருது .
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு அடுத்தபடியாக தமிழ்த் திரையுலகிலிருந்து இந்த விருதைப் பெறுகிறார் பாலசந்தர்.
கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் பங்காற்றிவருகிறார் பாலசந்தர்.
உலகநாயகன் கமல்,ரஜினி,பிரகாஷ்ராஜ்,விவேக்,சரிதா,சுஜாதா,ஜெய்கணேஷ்,சார்லி போன்றோர் இவரின் அறிமுகங்களே,.
===========================================================================புதுவை கவர்னர் இக்பால் சிங் ஒரு பிக்பாக்கெட்டாமே!
'பிக்பாக்கெட்' இக்பால் சிங்?ந்தியாவின் தேசிய கௌரவங்கள் லிஸ்ட்டில் கவர்னர்களுக்கு முக்கிய இடமுண்டு. அரசியல் சட்டத்தின் ஆட்சியை அவர்தான் பாதுகாக்கிறார் என்ற பில்டப்பும், கவர்னர் மாளிகை, குடியரசு தின மரியாதை என்று ஏகப்பட்ட அயிட்டங்களும் அதில் அடக்கம்.
அப்பேற்பட்ட மரியாதை கொண்ட இந்த பதவியை பிக்பாக்கெட் என்று அழைப்பதில் சில அப்பாவி தேசபக்தர்களுக்கு வருத்தம் இருக்கும். போகட்டும், வருத்தத்தை கொஞ்சம் தாங்கிக் கொண்டு மீதியைப் படியுங்கள், நீங்களே கும்முவீர்கள்!
வெளியே குதிரை வளர்ப்பு தொழிலைக் காட்டிவிட்டு உள்ளுக்குள் முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியிருக்கும் ஹசன் அலியை அமலாக்கப்பிரிவு கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இந்த ஹசன் அலி சிங்கப்பூர் போவதற்கு பாஸ்போர்ட் வாங்கிக் கொடுத்தவர் தான் தற்போது புதுச்சேரியில் கவர்னராக இருக்கும் இக்பால் சிங். அப்போது பீகார் மாநில காங்கிரஸ் எம்.பியாக இருந்தவர்.
இந்த சிங்கப்பூர் விஜயம் மூலமும் கருப்புப் பணம் வெளியேறிக்கிறது என்பதால் ஹசன் அலிக்கும், கவர்னர் சிங்குக்கும் உள்ள தொடர்பை தற்போது விசாரித்து வருகிறார்கள். எனினும் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த கவர்னர் என்பதால் சிங் அப்படி சுலபமாக சிக்கவிடமாட்டார்கள்.
நேற்று அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் புதுச்சேரி பந்த் நடந்திருக்கிறது. நோக்கம் ஊழல் கவர்னரை மாற்றச் சொல்வது. அதிலும் கூட அந்த சிங்கை தண்டிக்க வேண்டும் என்று கூட அவர்கள் கோரவில்லை. சரி, ஊழல் கட்சியான அ.தி.மு.கவே மக்கள் ஆதரவுடன் பந்த் நடத்துமளவுக்கு சிங் என்ன செய்தார்?
இவரது அப்பா லால்சிங், ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது அடிபட்டவராம். அந்த தகுதியை வைத்து அரசியலில் ஆளான இக்பால் சிங் மோசடிகளின் மூலம் சொத்து பத்துக்களை பெருக்கி வருகிறார். சரக்குக்கு பேர் போன புதுச்சேரியில் இவர் குடிக்கும் சீமைச்சாராய விஸ்கியின் ஒரு ஃபுல்லின் விலை ஒரு இலட்சமாம். கவர்னரின் உதவியாளரான அதிகாரிகளே இதை புரோக்கர்கள் மூலம் வாங்கி வைப்பார்களாம். என்ன விடயமாக இருந்தாலும் கவர்னரோ அவரது உதவியாளரான எஸ்.கே.சிங்கோ இலஞ்சத்தை வெளிப்படையாக கேட்டு வாங்குவார்களாம்.
வீட்டுவசதித் துறையில் பெரும் ஊழல் நடந்ததாக ஒரு புகார் கவர்னருக்கு வர சிங் என்ன செய்தார் தெரியுமா? உடனே அந்த மந்திரியை தொடர்பு கொண்டு பங்கு கேட்டு மிரட்டினாராம். இவையெல்லாம் சில பத்திரிகைகளில் வந்துள்ளன. ஒருவேளை இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று தேசபக்தர்கள் கேட்கக்கூடும். அதற்காகவே ஒரு 70mm ஸ்பெஷல் கொள்ளை ஒன்று நடந்து ஆதாரப்பூர்வமாக அனைத்து பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது.
தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவின் மகன் சுகன்ஜித்சிங்கும், இந்த இக்பால் சிங்கின் மூத்த மகனும் சேர்ந்து ஒரு அறக்கட்டளையை (கொள்ளையடிக்கிறதெல்லாம் இப்ப இந்த பேரில்தான்) துவங்கி அதன்மூலம் ஒரு மருத்துவ கல்லூரியை தொடங்க திட்டமிட்டனர். டாக்டர் கல்லூரியென்றால்தான் நன்கொடையை வைட்டமின் சி-யில வாங்க முடியும். இதற்கு காரைக்கால் அருகே நெடுங்காட்டில் 50 ஏக்கர் நிலத்தை வளைத்திருக்கின்றனர். அடுத்து புதுவை அரசின் அனுமதி கோரிய போது சுகாதார செயலாளர் விஜயன் மறுத்திருக்கிறார்.
உடனே அவரை விடுமுறையில் அனுப்பிவிட்டு வேறு அதிகாரியைப் போட்டு காரியத்தை சாதித்த போது விசயம் வெளியே வந்து நாறத் துவங்கியிருக்கிறது. இதில் பேரு ரிப்பேரு ஆனதும் நம்ம இக்பால் சிங், அப்போது கூட மனமில்லாமல் கல்லூரிக்கான அனுமதியையும், இடத்தையும் விற்பதற்கு முயற்சி செய்கிறாராம். இது நடந்தால் ஊழல் செய்யாத மாதிரியும் இருக்கும். நிஜத்தில் பல பத்து கோடிகளை சாப்பிட்ட மாதிரியும் இருக்கும்.
கடைசியாக்த்தான் இந்த சர்தார்ஜியோட நட்பு கருப்புப் பணக்குதிரை ஹசன் அலியோட இருக்கிறது என்பது தெரிய வந்தது. இதற்க்காக டெல்லி சென்று விளக்கம் கொடுத்த சர்தார்ஜி இன்னும் பதவி விலகாமல் ஜம்மென்று இருக்கிறார். அப்படியே அவர் பதவி விலகினாலும் அது ஒன்றும் தண்டனை இல்லையே? கொள்ளையடித்த பணம் இருக்கையில் அடுத்து மேகலாயாவிற்கு கூட கவர்னராக செல்லலாம்.
கவர்னர் மாளிகை என்று எல்லா மாநிலங்களிலும் ஒரு பெரும் நிலப்பரப்பை வளைத்து மாளிகைகளை கட்டி, நூற்றுக்கணக்கான வேலையாட்கள், அதிகாரிகளைப் போட்டு, இவர்களுக்கு செய்யப்படும் மரியாதை என்ன, போற்றுதல் என்ன, புடலங்காய் என்ன…
புதுச்சேரி போன்ற சிறு மாநிலங்களிலேயே இவர்கள் இப்படி ஆட்டம் போட்டால் பெரிய மாநிலங்களில் எப்படி ஆட்டம் போடுவார்கள்? ‘ரப்பர் ஸ்டாம்பு’ என்று கேலி செய்யப்படும் இந்த ஜந்துக்களே இப்படி என்றால் அதிகாரம் கொண்ட அமைச்சர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்?
காங்கிரசு கட்சி தனது பழைய பெருச்சாளிகள் பலருக்கும் இப்படித்தான் வாழ்வும், தொழிலும் அளித்து வருகிறது. ஹைதராபாத்தில் என்.டி.திவாரி போட்ட குத்தாட்டம் உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது அந்த குத்தாட்டம், வழிப்பறிக் கொள்ளையாக புதுச்சேரிக்கு வந்திருக்கிறது. நீங்கள் மிகவும் மதிக்கும் இந்திய அரசியல் சட்டத்தின் பாதுகாவலர்களான கவர்னர்களின் நடைமுறை இப்படித்தான் இருக்கிறது. இவர்களை தண்டிக்க வேண்டுமென்றால் இந்த பெருச்சாளிகளை உருவாக்கும் அரசியல் அமைப்பை தகர்க்க வேண்டும். தேவையில்லை என்பவர்கள் என்ன செய்யலாம் சொல்லுங்கள்!                                                                                                                                                                  *  வினவு தளத்தில் இருந்து நன்றியுடன் மீள் பதிவு.
===============================================================================================================
ஒரு கண்ணாடி மொ[மு]ழி பெயர்க்கிறது...


மொழி தெரியாதவர்களுக்கு மொழிபெயர்க்கும் ‘மூக்கு கண்ணாடி’..! மக்களிடையே தொடர்புக்கு அடிப்படையானது மொழி. இன்று அறிவியல் வளர்ச்சியால் உலகமே சுருங்கிவிட்டது. அதனால் பலமொழிகளை அறிந்து வைத்திருப்பது நமக்க அவசியமாகிறது.
இப்போது நமக்கு  உதவும்வகையில் மொழிபெயர்க்கும் கண்ணாடிவந்திருக்கிறது. இந்தமூக்குக்கண்ணாடியுடன்இணைந்துஒருடிரான்ஸ்லேட்டர் (மொழிபெயர்க்கும்)  கருவிஇருக்கும்.  இதுஒருகேமராவும்,  மைக்ரோ போனும் இணைந்தகருவியாகும். இந்தகண்ணாடியை அணிந்துகொண்டு நீங்கள் வாசிக்கும்போது மைக்ரோபோன் வேலைசெய்து அதை மெமரிகருவிக்கு அனுப்பும். அங்கிருந்து அதற்கான மொழிபெயர்ப்பு வார்த்தை உங்களுக்குத்தெரியும்படியாக காட்டப்படும். இதனால் நீங்கள்எளிதில் அறிவிப்புகளையோ, பத்திரிகைகளையோ வாசித்துஅறிந்துகொள்ளமுடியும். புதியஉலகம்- அறிவித்தல்  எமது செய்திகளை எமது அனுமதியின்றி  பிரதியிடுபவர்கள்  பிரதியிடுவதாயின் தயவுசெய்து எமது தளமுகவரினை இறுதியில் சேர்த்துக்கொள்ளல் வேண்டும். உங்கள் ஆதரவுக்கு நன்றி. இந்தக்கருவி ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கு சோதனை முறையில் வெற்றி கிடைத்துவிட்டது. ஆனால் நாம் வாசிக்கும் வேகத்துக்கு மொழி பெயர்க்கும் வேகம் இல்லை. எனவேஇதன் வேகத்தை அதிகரிக்கவும், வார்த்தைகளை மொழிபெயர்த்து உச்சரித்து சொல்லும் வகையில் மாற்றவும் ஆய்வுகள் நடந்து வருகிறது. படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, மொழித்தடுமாற்றம் உடைய பலருக்கும் இந்தக் கண்ணாடி உபயோகப்படும்.
                                                                                                                                நன்றி:புதிய உலகம்.கொம்
===============================================================================================================,
1995-ல் மேற்கு வங்கத்தில் ஆயுதங்கள் வீசப்பட்டதில் மத்திய காங்கிரசு அரசுக்கும் பங்கு......
பிரகாஷ் காரத்


”1995ஆம் ஆண்டு டிசம்பரில் மேற்குவங்கத்தின் புருலியா மாவட்டத்தில் விமானம் மூலம் ஆயுதங்கள் வீசப்பட்ட சம்பவமா னது நம் நாட்டின் இறையாண் மையின் மீதான மோசமான தாக் குதலாகும். அப்போது நடை பெற்ற புலனாய்வுகளும், நீதி மன்ற விசாரணையும், புருலியா வில் ஆயுதங்கள் வீசப்பட்டதானது அப்பகுதியில் இயங்கிக் கொண்டி ருந்த ‘ஆனந்த மார்க்கம்’ என்னும் அமைப்புக்காகத்தான் என்பதும், மேற்குவங்க இடதுமுன்னணி அர சாங்கத்தைப் பலவீனப்படுத்தி வன் முறை மூலம் வீழ்த்துவதற்காகவே இவ்வாறு ஆயுதங்கள் வீசப்பட்டது என்பதும் நிரூபிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான குற்றத்துடன் பிணைக்கப்பட்டு இன்றளவும் தலைமறைவாக வுள்ள நீல்ஸ் கிறிஸ்டியன் நீல்சன் என்கிற கிம் டேவி என்பவனும், இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று, பின்னர் விடுதலையாகியுள்ள பீட்டர் பிளீச் என்பவனும் இப்போது வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் இதன் பின்னணியில் உள்ள சதிச் செயல்கள் குறித்து எண்ணற்ற கேள்விகளை எழுப்பியுள்ளன.

புருலியாவில் ஆயுதங்கள் வீசப்பட இருப்பது தொடர்பாக, பிரிட்டிஷ் உளவு ஸ்தாபனமான எம்ஐ5 என்னும் அமைப்பு இந்தி யாவின் ‘ரா’ (ரிசர்ச் அண்டு அனா லிசின் விங்) அமைப்பிற்கு 1995 நவம்பரிலேயே தெரிவித்திருந் தும், சம்பவம் டிசம்பரில் நடை பெற்று ஒரு வாரம் கழித்துத்தான் மத்திய அரசு, மேற்கு வங்க அர சுக்கு இந்தத் தகவலைப் பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தது.

புருலியாவில் ஆயுதங்கள் வீசப்பட்ட சமயத்தில் அப்பகுதியில் கலைக்குண்டா என்னும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ரேடார் செயல் படவில்லை.
விமானம் மூலம் ஆயுதங்கள் வீசப்பட்டபின்னர், அந்த விமானம் சென்னையில் தரையிறக்கம் செய்யப்பட்டு மீண்டும் செல்வ தற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சதித் திட்டம் குறித்து மத் திய அரசுக்கு முன்னமேயே தெரிய வந்திருந்தும், அது தொடர் பான தகவலை, மத்திய அரசு மேற்கு வங்க மாநில அரசுக்கு பதிவுத் தபாலில் அனுப்பி, சம்பவம் நடைபெற்ற பின்னர்தான் அது மாநில அரசால் பெறப்பட்டிருக் கிறது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட கிம் டேவி, டென்மார்க்கில் கடந்த பத்தாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருந்தபோதிலும், அவ னை மீண்டும், இந்தியாவிற்குக் கொண்டுவர இந்திய அரசு எவ் வித முயற்சியும் மேற்கொள்ள வில்லை.

கிம் டேவி தற்சமயம் அளித் துள்ள விவரங்களில், தான் எப்படி மும்பை விமானத் தளத்திலிருந்து நேபாளத்திற்குத் தப்பிச் சென் றேன் என்பதையும் தனக்கு அப் போது நாடாளுமன்ற உறுப்பின ராக இருந்த பப்பு யாதவ் எப்படி முழுமையாக உதவினார் என்ப தையும் தெரிவித்திருக்கிறான். பீகா ரைச் சேர்ந்த இந்த பப்பு யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பீகார் சட்டமன்ற உறுப்பினர் அஜித் சர்க்காரை கொலை செய்த தற்காக ஆயுள் தண்டனை அனுப வித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும், மேற்படி பிளீச்சும், கிம் டேவியும் இந்தியாவில் அதிகாரி கள் பலர் தங்கள் சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்தார்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் இடது முன் னணி ஆட்சியிலிருப்பது சர்வ தேச சக்திகள் பலவற்றாலும், இந்தி யாவிலேயே பல்வேறு சக்திகளா லும் தாங்கிக் கொள்ள முடியவில் லை. அன்றைய தினம் ‘ஆனந்த மார்க்கம்’ என்றால், இன்றைய தினம் மாவோயிஸ்ட்டுகளைப் பயன்படுத்தி எப்படியாவது இடது முன்னணியை வீழ்த்த வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக் கிறார்கள்.

மாவோயிஸ்ட் வன்முறையா ளர்களுக்கு மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் உதவியும், ஆதரவும் அளித்து வருகிறது. மத்திய உள் துறை அமைச்சரே, மேற்குவங்கத் தில் நடைபெறும் ‘‘கொலைபாதகச் செயல்களுக்கு’’, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணியைச் சேர்ந்த 265 முன்னணி ஊழியர் கள் கொல்லப்பட்டதற்கு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையே குறை கூறுகிறார்.

புருலியாவில் விமானம் மூலம் ஆயுதங்கள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக முழுமையான வகை யில் மீண்டும் புலனாய்வு மேற் கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பாக பப்பு யாதவ் விசார ணைக்கு உட்படுத்தப்பட வேண் டும். நம் நாட்டிலிருந்து கிம் டேவி தப்பிச் சென்ற விதம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவன் தப்பிச் செல்ல உதவிய அனைவரும் குற்றவாளிக் கூண் டில் ஏற்றப்பட வேண்டும்.

இந்த சதித் திட்டம் குறித்து மத்திய அரசுக்கு முன்னமேயே தெரிய வந்திருந்தும், அது தொடர் பான தகவலை, மத்திய அரசு உடனடியாக மாநில அரசுக்குத் தெரிவித்து உஷார்படுத்திட முன் வரவில்லை. மாறாக தகவலை பதிவுத் தபால் மூலமாக அனுப்பி வைத்தது. அது சம்பவம் நடை பெற்ற பின்னர்தான் மாநில அர சால் பெறப்பட்டிருக்கிறது.

இவ்வாறு இந்த சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்புகள் மெத்தனமாக நடந்து கொண்டிருப்பதால், இப்போது மீண்டும் மத்திய புலனாய்வு அமைப்புகளிடமே இப்பொறுப் பைக் கொடுப்பதில் அர்த்தம் ஏது மில்லை. எனவே பணியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் மூலம் நீதித்துறை விசாரணை மேற்கொள்ளப்பட்டு, இதன் பின் னால் உள்ள சதித்திட்டங்களுக் கான வலைப்பின்னல் வெளிக் கொணரப்பட வேண்டும்.

பாருங்கையா,
தனது நாட்டிலேயே தனக்குப்பிடிக்காத கட்சியின் மாநில அரசை வீழ்த்த இந்த காங்கிரசு எப்படியெல்லாம் செய்கிறது.தேசத்தின் பாதுகாப்பே போனாலும் பரவாயில்லை தனது எதிரியை ஒழிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம்.
இப்படியே மெய்ண்டென் பண்ணிகிட்டு போங்க, நாடு வெளங்கிடும். 

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

இதுவாக இருக்கலாம்........

ஜெயிக்கப்போவது யாரு,?

தேர்தல் முடிந்து மாதக்கணக்கில் இத்தேர்தலில் முடிவு
காண காத்திருக்க வேண்டிய நிலையில் தேர்தல்
ஆணையம் தமிழக மக்களை வைத்து விட்டது.அதற்கு காரணம் 
என்ன என்றுத் தெரியவில்லை.மற்ற மாநிலத்தில் தேர்தல் என்பது
சரியான காரணமாகத் தெரியவில்லை.அப்படி என்றால் தேர்தலை
சற்றுத்தள்ளி வைத்திருக்கலாமே? அவசர அவசரமாக நடத்த வேண்டிய தேவை என்ன? சரி விடுங்க.நடந்து முடிந்த கதை.
இப்போது லட்சக்கணக்கில் பந்தயம் கட்டும் விடயமாக இத்தேர்தல் காத்திருப்பு  ஆகிவிட்டது.பல கோடிகள் “யார் ஜெயிப்பார்?” என பந்தயத்தில் புரளுவதாகத் தெரிகிறது.
   களம் இறங்கி கருத்து கேட்டும்,பத்திரிகை அலுவலக நாற்காலியில் உட்கார்ந்தே கருத்துக் கணித்தும்[?] பல் வேறு முடிவுகள் நம் தமிழக,இந்திய பத்திரிகைகளில் வந்து விட்டன.அதைப் படிப்பவர்கள்.ஒரளவு தெளிவுடனும்.சற்றுக் குழப்பத்துடனும் தங்கள் கருத்தைச் சேர்த்தும் ஒரு முடிவுக்கு வந்திருப்பார்கள்.இப்போது எனது முறை.என்னால் முடிந்த அளவு கருத்துக்களைக்கூறி உங்களைக் குழப்பவே இது.                                                                   இது நிச்சயமாக அலுவலக நாற்காலிக் கருத்துக்கணிப்புதான் 100சதம் சரியாக எவ்வளவு வாய்ப்புள்ளதோ அதே அளவு 100சதம் தவறாகவும் வாய்ப்புள்ளது என உங்களுக்கு இப்போது உத்திரவாதம் தருகிறேன்.                                                                                                                                              இனி கதைக்கு வருவோம்.2006ல் ஜெயலலிதாவிற்கு இருந்த எதிர்ப்பு அலை இப்போது கருணாநிதி அரசுக்குக் கிடையாது .ஜெ ,யின் எதிர்ப்புஅலை பல்வேறு மட்டத்திலும் இருந்தது .அரசு ஊழியர்கள் தங்கள் உரிமைகளை இருப்பதையும் இழந்து போராடி வேலை இழந்து மீண்டிருந்தனர்.ஆனால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள வில்லை.பாடம் புகட்டத்தயாராக இருந்தனர்.40க்கு40 என மக்களவை த்தேர்தலில் பாடம் கற்பிக்க அவர்களும் ஒர் காரணம். இலவச வேட்டி சேலை வழங்க கமிசனை எதிர்பார்த்து ஆந்திராவில் கோடிக்கணக்கில் கொள்முதல் செய்ய இங்குள்ள நெசவாளர்கள் மிகவும் நொந்துபோனார்கள்.ஏர்கனவே விலைவாசி,நூல் விலை ஏற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் கஞ்சித்தொட்டி திறந்து வாழும் நிலைக்குத்தள்ளப்பட்டனர்.ஆனால் கஞ்சித்தொட்டி திறந்தால் தனது ஆட்சிக்கு கெட்டப்பெயர் என்று வலுக்கட்டாயமாகாத்தடுத்து போலீசாரைக் கொண்டுத்தாக்கியதில் பல நெசவாளர் மண்டை உடைந்து ரத்தசரித்திரமாயினர்.அவர்கள் கோபம் காத்திருந்தது.
வெள்ளம் ,வறட்சி என தஞ்சை விவசாயிகள் பாதிக்கப்பட்டும்-அரசு சரியான கொள்முதல் விலையை வேளாண் பொருட்களுக்குத்தராததும்  பஞ்சப்பராரிகளாக விவசாயிகளை ஆக்கியது.எலிக்கறி சாப்பிட்டு வயிற்றைக் கழுவும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.  ஜெ,  அரசோ கண்டு கொள்ளவில்லை. மாறாக எலியை சுட்டுத்தின்று வந்தவர்களில் ஒரு சிறுவன் மரணமான போது எலிக்கறிதின்ற மற்றவர் கள் சாகவில்லையே என பத்திரிகையில் கேலியாக பேட்டி வேறு கொடுத்தார்.
   திருமண உதவித்தொகை,முதியோர் உதவித்தொகை,குடும் ப அட்டைகளில் அரிசி ,சீனி வாங்க விதவிதமான முத்திரைகள். குடும்பத்தலைவர் கண்டிப்பாக மாதாமாதம் கடையில் வந்து கையொப்பம் செய்தால்தான் அரிசி.மக்கள் நொந்து போனார்கள்.
பால் விலை,பேருந்து கட்டணங்கள் அதிகம்.
 மிகை ஊதியம்[போனஸ்] கிடையாது. போதுமடா சாமி ஜெயலலிதாவின் சாதனைகள்.
 இவையனைத்தும் கருணாநிதி கருவூலத்தை காலி செய்துவிட்டார்.என்றபெயரில் தரப்பட்ட கசப்பு மருந்து எனக்கூறினார்.
                இப்போது 2006 முதல் கலஞர் அதே கருவூலத்தை வைத்து தானே இலவசங்கள்,சலுகைகள் தந்தார்.தருகிறார். அரசு ஊழியர் பழைய சலுகைகளைத்தந்ததுடன் ஊதுயக்குழு நிலுவையையும் தந்தார்.நெல்,கரும்பு கொள்முதல் விலைகளை கூடக்கொடுத்தார். குடும்ப அட்டையில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தந்தார். சிலவற்றை போராடியும் பெற்றுக்கொண்டனர்.  இப்படி பல.
 சொல்லிக்கொள்ளுமளவு எந்த அதிருப்தியும் கருணாநிதி ஆட்சி மேல் இல்லை.ஆனாலும் ஆட்சிமாற்றம் இருக்கும் மக்கள் அதிருப்தி கோப அலை வீசுகிறது.இதுபொன்று தினம் ,தினம் பத்திரிகைகளில் செய்தி.
 கூர்ந்து கவனித்தால் தெரியும் கலஞர் கூறியபடிஇச்செதிகளின் பிறப்பிடமே ஜெயலலிதா மீண்டும் வரவேண்டும் என திட்டம் போட்டு செயல்படும் அவாள் பத்திரிகைகள்தான்.தினமலர்,இந்து,தினமணி,துக்ளக்,ஜீனியர் விகடன்,ஆனந்தவிகடன் வகையறாக்கள்,கல்கி,இந்தியா டுடே,இன்னும் பிற...
                        இந்த ஆட்சியாளர் மீது மக்களுக்கு கோபம் என்றால் அலைக்கற்றை ஊழல் தான் ,இலங்கை தமிழர் பிரச்சினையும்கூட,
 ஆனால் இது கூட கிராமப் புறங்களில் பாதிக்கவில்லை. ஜெயலலிதா கறைபடா கரத்துக்கு சொந்தக்காரரா? வளர்ப்புமகன் திருமணம்,டான்சி,சிப்காட் நிலம்,ஊட்டி ஓட்டல்,பிறந்தநாள் பரிசு,வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது,சிறுதாவூர் பங்களா,கொடநாடு வளைப்பு சொல்லிக்கொண்டேபோகலாம்.சிப்காட் விவகாரத்தில் தனது கையெழுத்தையே தான் போடவில்லை என்றுக் கூறி மாட்டிக்கொண்ட சத்யபுத்ரி தானே ஜெயலலிதா.
 இப்போது தி.மு.க, வுக்கு தோல்வி என்று சொல்வபவர்கள் அவாள்கள் ஊடகங்கள்தான்.
 என்னைப்பொறுத்தவரை தி.மு.க ,கணிசமான இடங்களைக் கைப்பற்றும்.மக்கள் இரு ஆட்சியையும் சரியாகக் கணித்திருந்தால் எரிகிற கொள்ளியில் எது பரவாயில்லை என்று தீர்மானித்திருந்தால் தி.மு.க.தான்.அதிக இடங்களைக் கைப்பற்றும்.
 அவாள் பத்திரிக்கை பாதிப்பால்மக்கள் குழம்பி வாக்களித்திருந்தால் தனிப்பெரும்பாண்மை யாருக்கும் கிடைக்காது. 
 கூட்டணி அமைச்சரவைதான் அமையும். இங்கிருந்து அங்கும்-அங்கிருந்து இங்கும் என கடைசிநேர கூட்டணிக்கட்சிகள் தாவல் இருக்கும்.அப்போதானே அமைச்சரவை அமைக்க முடியும். சிரிப்புக்காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது.தேர்தல் முடிவு வந்தபின்னர்.பார்த்துக்கொண்டிருங்கள்-காத்துக்கொண்டிருங்கள்.
 மற்றவை 13-ம் ,தேதிக்குப் பின்னர்,,,
                                                                                                                                              
 

வியாழன், 28 ஏப்ரல், 2011

புலம் பெயர் தமிழர் செய்த குற்றம்,,,,,,,


சாய்பாபாவின் மரணம் குறித்தும், இதற்காக கிரிக்கெட் விளையாடாமல் பிரார்த்தனை செய்வதாக அறிவித்த சச்சின் டெண்டுல்கர் குறித்தும் விமர்சனம் செய்துள்ளார் வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். 
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் முன் நடந்த தமிழர் ஆர்பாட்டம்

                                                                                                                                                                            ஐ நா அறிக்கை - புலம்பெயர் தமிழர் மீது குற்றச்சாட்டு 
-----------------------------------------------------------------------
இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் நிகழ்ந்த விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலருக்கு ஆலோசனை கூற அமைக்கப்பட்ட மூவர் குழுவின் அறிக்கையில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் செயல்பாடுகளும் கணிசமாக விமர்சிக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளுக்கு கணிசமான பொருளுதவியையும், தார்மீக ஆதரவையும் பல ஆண்டுகளாக புலம் பெயர் தமிழர்கள் வழங்கி வந்துள்ளனர் என்றும் இவர்கள் இலங்கை அரசு மீது மனக்குறைகளை கொண்டிருக்கின்றனர் என்றும் ஐ நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரம் விடுதலைப் புலிகள் செய்யும் அத்து மீறல்களையும், வன்னியில் நடைபெற்ற மனிதப் பேரழிவில் புலிகள் வகித்த பங்கு குறித்தம் ஒப்புக் கொள்ள புலம் பெயர் தமிழர்கள் மறுப்பது, நீடித்த அமைதியை உருவாக்க தடையாக இருப்பதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
போரின் இறுதி கட்டத்தில் வன்னிப் பகுதியில் பல்லாயிரக்கணக்கானோரை கட்டாயமாக பிடித்து வைத்திருந்தது, தப்பிச் செல்ல முயன்றோரை வன்முறையால் தடுத்தது, சிறார்களை பலவந்தமாக படையணிகளில் சேர்த்தது போன்ற விடயங்களை புலிகள் செய்தாலும் புலம் பெயர் தமிழர்கள் பலர் இது பற்றி பேசத் தயங்கியதாக கூறப்பட்டுள்ளது.

வன்னிப் போரில் இரு தரப்புக்கும் இடையே சிக்கித் தவிக்கும் போது மக்களை காப்பாற்றுவதை விட தமிழ் ஈழம் என்ற அரசியல் கோட்பாட்டை காப்பாற்றவே புலம் பெயர் தமிழர்களில் ஒரு சாரார் முன்னுரிமை அளித்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் மாபியா கும்பல் போன்ற நடவடிக்கைகளை கைக் கொண்டு புலம் பெயர் தமிழர்களிடம் நிதி வசூல் செய்தார்கள் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் சார்பு அமைப்பாக வெளி நாடுகளில் செயல்பட்ட அமைப்பு தற்போது தனியார் வர்த்த அமைப்புக்கள் மூலம் இயங்குவதாகவும், சில கோயில் நிதிகளில் அது ஆதிக்கம் செலுத்துவதாகவும் ஐ நா கண்டறிந்துள்ளது.
பணம் வழங்கியது
புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும், பிற வழிகளில் இருந்தும் விடுதலைப் புலிகள் பெற்ற பணம் இன்னமும் இருப்பதாகவும், அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நலனுக்கு அது செலவிடப்பட வேணடும் என்றும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புலம் பெயர் தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கும் - புலிகளின் அதிதீவிர தமிழ் தேசியத்துக்கும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியமை இலங்கை தமிழர்கள் மத்தியில் எதிர்மறையான விளைவுகளை - அதாவது பிளவுகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் இந்த அறிக்கை இது சிங்கள தேசியத்தை பலப்படுத்தவும் வழி வகுத்ததாக கூறியுள்ளது. இலங்கையில் வாழும் அனைத்து இனத்தினர் மட்டுமல்லாது - புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்களும்- தமக்கு பொதுவான தாயகத்தில்- மற்றவர்களின் உரிமைகளை மதித்துப் போற்றி வாழ்வதில்தான் இலங்கைக்கு ஸ்திரமான எதிர்காலம் ஏற்படும் என்று யோசனை கூறப்பட்டுள்ளது.
நல்ல கல்வியறிவும், பொருளாதார வளமும் பெற்றுள்ள புலம் பெயர் தமிழர்களால் இலங்கையின் எதிர்காலத்தில் மேலும் ஆக்கபூர்வ பங்களிப்பை வருங்காலத்தில் வழங்க முடியும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. 
இலங்கை அரசைக் குறைகூறும் அறிக்கையில் இப்படி தமிழர்களைப் பற்றியும் சில குறைகளைக் கூறியுள்ளது அய்.நா.
உரிமைக்காக போராடும் ,வலிய ராணுவத்தை எதிர்த்துப் போராடும் போது இது போன்ற சில தவறுகள் ஏற்படுவது தவிர்க்க இயலா செயல்கள்.
 அப்பாவி மக்களை கொல்வதையே குறிக்கோளாகக் கொண்ட இலங்கை அரசை எதிர்கொள்ள பணமும் ஆயுதங்களும் தேவை என்பதை அறியாததல்ல அய்.நா,சபை.
இப்போதைய நிலமையே அப்பாவி மக்களை புலிகள் அழித்தொழிப்பு என்ற பெயரில் கும்பல்,கும்பலாகக் கொன்று குவித்ததற்கான போர்க் குற்றவாளி ராஜபக்‌ஷே என்ற பிரகடனமும் அதற்கான தண்டனையை சர்வதேச அரங்கில் வழங்க வேண்டும் என்பது தான்.
============================================================================
பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.

பெட்ரோலுக்கு விலை நிர்ண யிக்கும் அதி காரத்தை கடந்த ஜூன் மாதம், எண்ணெய் நிறுவனங்க ளிடமே மத்திய அரசு ஒப்படைத் தது. விலை நிர்ணயத்தில் தனது பொறுப்பை அரசு கை கழுவியதன் விளைவாக 15 நாட்களுக்கு ஒரு முறை, பெட்ரோல் விலை உயர்த்தப் பட்டு வருகிறது. கடைசியாக, ஜனவரி மாதம் விலை உயர்த்தப் பட்டது.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கிய தால், மத்திய அரசின் அறிவுறுத் தலின் பேரில், அதன் பிறகு பெட் ரோல் விலை உயர்த்தப்பட வில்லை.
 தமிழ்நாடு உள் ளிட்ட 4 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்து விட்டது. மேற்கு வங்காளத்தில் மே 10ம் தேதியுடன் தேர்தல் முடிவடைகிறது. இந்நிலை யில், பெட்ரோல் விலையை உயர்த் தத் திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன.

இதுகுறித்து பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தலைவர் ரன்பீர் சிங் புடோலா கூறுகையில்,” மக்களும், அரசும் அடங்கிய அமைப்பின் ஒரு அங்கமாகவே நாங்கள் உள்ளோம். குறிப்பிட்ட முடிவை எடுத்தால், எங்களுக்கு எதி ராக சூழ்நிலை திரும்பிவிடும். எனவே, சிறிது காலத்துக்கு இந்த நஷ்டத்தை தாங்கிக்கொள்ளலாம் என்று விலையை உயர்த்தாமல் இருந்தோம். தற்போது, கூடிய விரைவில் பெட் ரோல் விலையை உயர்த்த முடிவு செய் துள்ளோம்.

இன்றைய நிலையில், பெட் ரோலை லிட்டருக்கு ரூ.7.50 நஷ்டத் தில் விற்று வருகிறோம். டீசலை 18 ரூபாய் 11 காசுகளும், மண்ணெண் ணெயை 28 ரூபாய் 33 காசுகளும், கியாஸ் சிலிண்டரை 315 ரூபாய் 86 காசுகளும் நஷ்டத்தில் விற்று வருகிறோம். இதனால், தினமும் எங்களுக்கு ரூ.297 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. மாதத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி முதல் ரூ.6 ஆயிரம் கோடி வரை நஷ்டத்தைச் சந்தித்து வருகிறோம். இதன்மூலம், கடந்த மார்ச் மாதத்துடன் எங்களது கடன் அளவு ரூ.53 ஆயிரம் கோடி யாக உயர்ந்து விட்டது
” என்றார்.

லிட்டருக்கு
 
மே 15ம் தேதி பெட்ரோல் விலை உயர்வு பற்றி அறிவிக்கப் படும் என்றும், லிட்டருக்கு ரூ. 3 வரை இந்த உயர்வு இருக்கும் என் றும் இந்தியன் ஆயில் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரூ.50க்கு கீழ் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல், கடந்தாண்டு தொடர்ந்து ஆறு முறை உயர்த்தப்பட்டு, தற் போது ரூ.60ஐத் தாண்டி விட்டது. இந் நிலையில் மே 10ம் தேதி இரவில் பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வர லாம். இதன்மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 70 ஆக உயரும் ஆபத்து உள்ளது.
==========================================================================

சாய்பாபா மரணம்                  - தஸ்லிமா நஸ்ரின்


தற்போது ஸ்வீடன் நாட்டுக் குடியுரிமையைப் பெற்று ஸ்வீடனில் பாதுகாப்புடன் வசித்து வரும் இந்த நிலையில், சாய்பாபாவின் மரணம் குறித்தும், இதற்காக பிரார்த்தனை செய்யுமாறு சச்சின் டெண்டுல்கர் விடுத்த அழைப்பையும் தஸ்லிமா விமர்சித்துள்ளார்.
ஏன் சாய்பாபாவின் மரணத்திற்காக மற்றவர்கள் சோகமாக இருக்க வேண்டும். அவருக்கு 86 வயதாகி விட்டது. அவரை மரணமடைய அனுமதிப்பதுதான் சரியானது, நியாயமானது. சச்சின், அவருக்காக பிரார்த்தனை செய்வதாக கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது என்று கூறியுள்ளார் தஸ்லிமா.
இதேபோல இன்னொரு செய்தியில், சாய்பாபா இறந்து விட்டார். 2022 ஆம் ஆண்டுதான் இறப்பேன் என்று முன்பு அவர் கூறியிருந்தார். ஆனால் அதற்கு முன்பே இறந்து போய் விட்டார் என்று கிண்டலடித்துள்ளார்.
யாரும் சாய்பாபாவின் அஸ்தியை தங்களது விரல் நக இடுக்குகளில் மறைத்து எடுத்துக் கொண்டு வந்து அதைப் பத்திரப்படுத்த முயல மாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று சற்று காட்டமாகவே விமர்சித்துள்ளார்.
ஒரு பாபா போய் விட்டார். இனி ஆயிரக்கணக்கானோர் அந்த இடத்தைப் பிடிக்க முயல்வார்கள். காரணம், பக்தி பிசினஸ் தற்போது நல்ல லாபகரமானதாக இருப்பதால் என்று கூறியுள்ளார்.

புதன், 27 ஏப்ரல், 2011

கதைவிடும் நேரம்,,,?

                          ஜெ,,,யின் கதை........                                                                                                                           எழுத்தாளர் வாஸந்தியின் ஜெயலலிதா-ஒரு சொல்லோவியம் (ஏ போர்ட்ரேட்) என்ற புத்தகத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஜெயலலிதா தாக்கல் செய்த  வழக்கில் கூறப்பட்டு இருப்பதாவது: 

ஒருவரைப்பற்றிய தகவல்களை வெளியிட வேண்டுமானால், சம்பந்தப்பட்ட அந்த நபரிடம் தகவலை சரிபார்த்துவிட்டு, அவரது கருத்தையும் சேர்த்து வெளியிடுவதுதான் பத்திரிகைகளின் நடைமுறையில் இருந்து வரும் விஷயமாகும். ஒருவரது வாழ்க்கை சரிதையை வெளியிடுவதற்கு முன்பதாக இந்த நடைமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இந்த நிலையில் வாஸந்தி, "ஜெயலலிதா ஒரு சொல்லோவியம்'' (ஜெயலலிதா ஏ போர்ட்ரேட்) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தை புதுடெல்லியில் உள்ள பென்குயின் புக்ஸ் இந்தியா என்ற தனியார் நிறுவனம் வரும் மே மாதம் வெளியிட உள்ளது.   வெளியாக இருக்கும் அந்த புத்தகத்தில் உள்ள ஒரு பகுதி ஆங்கில வாரப்பத்திரிக்கை ஒன்றில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில், எனது பிறப்பு, எனது ஆரம்பகால பெயர் விவரங்கள், "ஜெயா'' என்ற பெயர் எங்கள் குடும்பத்தில் வந்த விதம், எனது தந்தையைப் பற்றிய தகவல்கள், எனது சினிமா வாழ்க்கை, எனது நட்பு வட்டாரம், என்னிடம் பாசம் காட்டியவருக்கு நான் எழுதிய கடிதங்களின் விவரம், எனது அரசியல் பொது வாழ்க்கை, அதில் நான் சந்தித்த சவால்கள், வழக்குகள், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை குறிப்பிட்டு எழுதப்பட்டு உள்ளது. 

இந்த விவரங்கள் வெளியானால் என்னைப்பற்றி மக்களிடம் உள்ள நல்லெண்ணம் பாதிக்கப்படும். அரசியல் வாழ்க்கையில் எனது நிலையில் பாதிப்பு உருவாகும். எனது பொது வாழ்க்கைக்கு பங்கம் நேரிடும். இந்த விவரங்களை வெளியிடுவது, ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையின் உரிமைகளை மீறுவது போன்றது. என்னைப்பற்றி வாசந்தி எழுதியுள்ள சரிதை, பொய்யானது, மரியாதை குறைவானது, உள்நோக்கம் கொண்டது, அவதூறானது, நாகரீகமற்றது, எல்லை தாண்டிய அநாகரீகமானது.   எனது வாழ்க்கை பற்றி அவர் எழுதியுள்ள சரிதையில் சில விஷயங்கள் மறைமுகமாக தெரிவிக்கப்படுகின்றன. அவை உண்மைக்கு மாறானவை மற்றும் களங்கத்தை ஏற்படுத்தக் கூடிய அவதூறான தகவல்களாகும். எனவே அந்த புத்தகத்தை எந்த வடிவிலும், எந்த பெயரிலும், எந்த நாளிலும், எனது சரிபார்த்தல் இல்லாமல் வெளியிட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுவை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:  தன்னால் சரிபார்க்கப்படாத தகவல்கள் அவரது சரிதையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் அவை பொய்யானவை என்றும் அவதூறானவை என்றும் வழக்கில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். அங்கீகாரம் இல்லாமல் எழுதப்பட்ட தகவல்களை சரிதை (பயோகிராபி) என்று குறிப்பிடமாட்டேன் என்று ஆங்கில நாளிதழில் வாசந்தி கூறியிருப்பதையும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அந்த வகையில் பார்க்கும்போது, சரிதை எழுதுவதற்கு ஜெயலலிதாவின் ஒப்புதல் பெறப்படவில்லை. வழக்கு வாதத்தின்போது ஜெயலலிதா தரப்பு வக்கீல், "ஜெயலலிதாவின் சரிதை புத்தகத்தை வாங்குவதற்கு இணைய தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டார்.   வெளியிடப்படும் கட்டுரையில் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை விவரங்கள் இருக்கிறது

என்றால், அதை வெளியிடுவதற்கு முன்னதாக உண்மை நிலவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு இருக்க வேண்டும் என்று ஒரு வழக்கில் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. எனவே வாஸந்தி எழுதிய "ஜெயலலிதா ஏ போர்ட்ரேட்'' என்ற சரிதையை வெளியிடுவதற்கு ஜுன் 7ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. வழக்கு விசாரணை ஜுன் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அன்று பென்குயின் நிறுவனம், வாசந்தி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.என்றும் கூறப்பட்டுள்ளது.
 ============================================================================


ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்
      ஸ்பெக்ட்ரம் கதை              முடிந்து போன விசயம்,,,,?                                                        ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சர்ச்சையை முடிந்துபோன விவகாரமாகக் கருதும்படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அப்போதைய நிதி அமைச்சர் யோசனை கூறியிருந்ததாகவும் இது மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்றும் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு தெரிவித்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான இந்தக் குழு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடத்தி வரைவு அறிக்கை ஒன்றை உறுப்பினர்களிடையே சுற்றுக்கு விட்டுள்ளது.
ஆனால் தங்களிடம் கருத்துக் கேட்காமல் இந்த வரைவு தயாரிக்கப்பட்டு சுற்றுக்கு விட்டுள்ளதாக குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவி்த்துள்ளனர்.
அமைச்சர் சிதம்பரம் மட்டுமின்றி பிரதமர் கூட மறைமுகமாக அப்போதைய தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா தன்னிச்சையாக செயல்பட அனுமதித்துவிட்டதாக வரைவு அறி்க்கையில் குறைகூறப்பட்டுள்ளது. அலைக்கற்று விஷயத்தில் சற்று ஒதுங்கியிருக்கும்படி பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொள்ளப்பட்டதால், தனது வஞ்சகத் திட்டத்தை ஆ.ராசா நிறைவேற்றிக்கொள்ள முடிந்துள்ளது என்று வரைவு அறிக்கை கூறுகிறது. ஆனால் 2007 நவம்பரி்ல் எழு,திய கடிதம் ஒன்றில் பிரதமரின் மேலான சில யோசனைகளை ஆ.ராசா புறக்கணித்தது குறித்து கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்சினை குறித்து தொலைதொடர்பு கமிஷன் ஆராய்ந்தபோதிலும் பரிந்துரை எதையும் கூறவில்லை என்றும் இதேபோன்று இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), பகிரங்க ஏலம் மூலம் இந்த ஒதுக்கீட்டை செய்யும்படி கூறவில்லை என்றும் பிரதமருக்கு ராசா கூறியது பாதி உண்மைதான், மீதி உண்மையையும் தன் உள்நோக்கத்தையும் அவர் மறைத்துவிட்டார் என்று வரைவு அறி்க்கை சாடியுள்ளது. இந்த விஷயத்தில் ஒளிந்திருந்த உண்மைகளையும் அதனால் நாட்டுக்கு ஏற்படக்கூடிய இழப்புகளையும் கண்டுகொள்ள பிரதமர் அலுவலகம் தவறிவிட்டது அல்லது மௌனம் காத்துவிட்டது என்று அது குறிப்பிட்டுள்ளது.
அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைச்சர்கள் குழு ஒன்றை அமைக்கும்படி சட்ட அமைச்சர் கூறவில்லை என்று ராசா தெரிவித்திருந்தார். ஆனால் இது விஷயத்தில் சட்ட அமைச்சரின் யோசனையை பிரதமரின் அலுவலகம் அறிந்திருந்தும் ராசாவின் வார்த்தைகளே அவர்களிடம் எடுபட்டிருக்கிறது என்பதையும் வரைவு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. முதலில் வந்தவருக்கு முதலில் ஒதுக்கீடு என்ற கொள்கையால் இழப்பு எதுவும் பெரிதாக ஏற்பட்டுவிடவில்லை என்பதைப்போல் அமைச்சர் கபில் சிபல் கருத்து வெளியிட்டதை அறிக்கை கண்டித்துள்ளது.
அலைக்கற்றை அதிகம் இல்லை என்பதால் விண்ணப்பங்களை ஏற்பதற்கான தேதியை 2007 செப்.25 என நிர்ணயித்ததாகக் கூறிய ஆ.ராசா, புதிதாக சிலருக்கு வழங்கும் அளவுக்கு அலைக்கற்றை உள்ளது என்று ஒரு கட்டத்தில் கூறியுள்ளார். தமது உள்நோக்கத்தை நிறைவேற்றுிக் கொள்ளும் வகையில் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக் கொள்கையை அவர் திரித்துக்கொண்டிருக்கிறார். அலைக்கற்றை என்பது அரிதான ஒரு திறன்.. அதை மனதிற்கொண்டு அதற்கான மதிப்பை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறிய அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 2008 பிப்.15-ம் தேதி பிரதமருக்கு அனுப்பிய குறிப்பில் இந்த விவகாரத்தை முடிந்துபோன ஒன்றாகக் கருதும்படி கூறியது வருந்தத்தக்கது என்று வரைவு அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அதேநேரத்தில் அலைக்கற்றை ஒதுக்கீட்டை பகிரங்க ஏலத்தின் மூலம் ஒளிவு மறைவு இல்லாமல் செய்ய வேண்டும் என்று கூறியதாக அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அது பாராட்டியுள்ளது.
பொதுக்கணக்குக் குழுவின் கூட்டம் வியாழக்கிழமை நடக்கிறது. இதில் வரைவு அறிக்கை குறித்து ஆளும் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
==========================================================================
            நித்யாவின் அஞ்சலி கதை..                                                                                                     சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த நித்யானந்தா தனது பாதுகாவர்களுடன் பந்தாவாக வந்ததால் அந்தப் பகுதியில் தேவையற்ற சலசலப்பு ஏற்பட்டது. தன்னை விவிஐபிக்கள் இருந்த வரிசையில் அனுமதிக்குமாறு அவர் கோரியதற்கும் சாய்பாபா உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

உள்ளே வரும்போது மட்டுமல்ல வெளியே போகும் போதும் பிரமுகர்கள் வழியிலேயே செல்ல முயன்ற நித்தியாவை தடுத்து பொதுவழியிலேயேஅனுப்பிவைக்கப்பட்டார். பாவம் இன்னொரு கடவுள் அவதாரம்.
============================================================================
தனித் தமிழீழமே தி.மு.கவின் குறிக்கோள்.              [கதையல்ல நிஜம்]                                                                                     என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தி.மு.க உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தின் பின்னர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் யுத்தக் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் மனித உரிமை மீறலுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இதனால் இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
இலங்கை யுத்தக் குற்றங்களுக்காக ஐ.நா. அமைப்பு நடத்திய விசாரணையில் இலங்கை கடற்படையினர் ஈழத்தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் நடைபெற்று இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா. குழு தெரிவித்துள்ளது.

இறுதி கட்டப்போரில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது போன்றவை உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளன.

போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. குழு பரிந்துரைத்தவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

போர் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் எனவும் மத்திய அரசை தி.மு.க உயர்நிலை செயல்திட்ட குழு வலியுறுத்துகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   குதிரை எல்லாம் ஒடியபின் லாயத்தை பாதுகாப்பாக மூடிவைப்பது போல்  கருணாநிதி அறிவிப்பு உள்ளது.
 ஓட,ஓட தமிழீழ மக்களை இந்தியாவின் துணையுடன் ராஜபக்‌ஷே குண்டுமழை பொழிந்து கொன்றுதீர்த்த்போது மெரினாவில் உட்கார்ந்து கவிதைக்கண்ணீர் வடித்து விட்டு,5மணிநேரம் உண்ணாநிலையில் இருந்ததுடன் தனது கடமையை முடித்து விட்டு இப்போது இவ்வாறு அறிக்கைவிடுவது எதற்காக?யாரை ஏமாற்ற அல்லது யாருக்கு எச்சரிக்கைவிட,,
 அய்யா கலைஞரே இந்தியா அய்.நா சபையில் இலங்கைக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடாது.அறிக்கைக்கு ஆதரவாக சீனா,ரஷ்யாவுடன் செயல்படும்.வெளிப்படையாக இல்லாவிட்டாலும்,மறைமுகமாக சேர்ந்துதான் இருக்கும். இப்போ என்ன செய்வீங்க,,?

தமிழ் வாழ்க,,,,,,

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு இன்று அவசரமாக கூடுகிறது2ஜீ அலைக்கற்றை இரண்டாவது குற்றப்பத்திரிக்கையில் தயாளூ அம்மாள் விடுபட காரணம் தயாளு அம்மாள் முன்பு எழுதிய கடிதம் தானாம்.
கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகி சரத்குமாருக்கு தொலைக்காட்சி ஆரம்பித்தபோது ”தனக்கு தமிழைத்தவிர ஆங்கிலம் போன்றவைத்தெரியாது எனவே நிவாகத்தை அவரே நல்லமுறையில் கவனித்துக்க்ள்ள வேண்டும்”என எழுதிய கடிதம் கூட்டப்பதிவுகள் சி.பி.அய் வசம் கிடைத்ததுதான் காரணம்.இதன் மூலம் அவருக்கு கடனாகப்பெற்ற விபரம் எதுவும் தெரியாது.விசாரிப்பது தேவையற்ற வேலை என சி.பி.அய் ,முடிவெடுத்ததாம்.
தமிழ் கலைஞரை மட்டுமல்ல அவரது மனைவியையும் காப்பாற்றியுள்ளது.  
================================================================================================
கறுப்புப் பணப்பட்டியல் விக்கி லீக்ஸ் வெளியிடப்போகிறதாம்
ஸ்விஸ் வங்கிகளில் போடப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க 10 பேர் கொண்ட குழுவை  மத்திய அரசு நியமித்துள்ளது.
இந்நிலையில், ஸ்விஸ் வங்கிகளில் போடப்பட்டிருக்கும் பணத்தில், இந்தியர்களின் பணம்தான் அதிகம் என்கிற திடுக்கிடும் தகவலை விக்கி லீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள விக்கி லீக்ஸ் இணையதள தலைவர் ஜூலியன் அசாங்கே, இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
ஸ்விஸ் வங்கிகள் மட்டுமின்றி, அவற்றின் கட்டுப்பாட்டில், இதர நாடுகளில் இயங்கும்  வங்கிகளில்  போடப்பட்டிருக்கும் பணத்தின் பெரும்பகுதி இந்தியர்களுடையதுதான் என்றும் ஜூலியன் அசாங்கே கூறியுள்ளார்.
அந்த இந்தியர்கள் யார் என்பது பற்றிய தகவல்களை பெறுவதற்கான வழிமுறைகள் தமக்கு தெரியும் என்று அவர் கூறினார்.
இந்தியர்கள், பெருமளவு பணத்தை ஸ்விஸ் வங்கிகளில் போட்டு வைத்திருப்பதால், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதாக அசாங்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விக்கி லீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள தகவல்கள் பற்றி, இந்திய அரசு காட்டி வரும் அக்கறை உலகிலேயே மிகவும் மோசமானது என்று ஜூலியன் அசாங்கே  சாடியுள்ளார்.
இந்தியர்களின் பணத்தை மீட்டு கொண்டு வருவதற்கு, ஸ்விஸ் அதிகாரிகளுடன் செய்து கொண்டிருக்கும்   இரட்டை வரிவிதிப்பு முறை இடையூறாக இருப்பதாக இந்திய அரசு கூறி வரும் காரணத்தை ஜூலியன் அசாங்கே  நிராகரித்தார்.
இந்த விஷயத்தில் இந்திய அரசு, தன் நாட்டு மக்களை தவறாக வழி நடத்த முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் அறிந்தவரை, இந்திய  பிரதமர் மன்மோகன் சிங் ஊழலற்றவர் என்றபோதிலும், கருப்பு பண விசயத்தில் அவரது நடவடிக்கை ஏமாற்றம் அளிப்பதாக ஜூலியன் அசாங்கே கூறியுள்ளார்.
ஸ்விஸ் வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்பவர்கள் பற்றிய விவரங்களை விக்கி லீக்ஸ் இணையதளத்திற்கு கசியவிட்ட ,ஸ்விஸ் ஜூலியஸ் பேயர் வங்கியின் முன்னாள் ஊழியர் ருடோல்ஃப் எல்மர் பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டதை ஜூலியன் அசாங்கே சுட்டிக்காட்டினார்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

2-ஜியும் அல்கொய்தா அணுகுண்டும்,,,,,,,


ஜப்பான் நிலநடுக்கம். அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள்
ஜப்பான் நாட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட பயங்கர சுனாமிக்கு பின் தொடர்ந்து 400 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால்ஜப்பான் மக்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.ஜப்பானை கடந்த மார்ச் 11ம் தேதி 9.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர சுனாமி ஏற்ட்டது அல்லவா?. இதன் பின் கடந்த 40 நாட்களில் 5.0 ரிக்டர் அளவில் 400 முறை ஏற்பட்டுள்ள நிலநடுக்கம், ஜப்பான் மக்களை மனரீதியாக பாதித்துள்ளது.
புகுஷிமா டாய்ச்சி அணு உலை கதிர்வீச்சை கட்டுப்படுத்த ஊழியர்கள் திணறி வரும் நிலையில் தொடர் நிலநடுக்கம், பணியை பெரிய அளவில் பாதித்துள்ளது. ஒவ்வொரு முறை நிலநடுக்கம் ஏற்படும் போது இன்னும் அணு உலை கதிர்வீச்சு அபாயத்தை ஏற்படுத்துமா? கதிர்வீச்சு தாங்கிய புதிய மேகம் நகர்ந்து வருமா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது.
சில நேரங்களில் நிலநடுக்கம் இல்லாத போதும், சாதாரண நிலஅதிர்வின் போதும், மரக்கிளைகள் அசையும் போது, நிலநடுக்கம் வருவதை போன்ற பயத்தில் உறைந்துள்ளனர். இதனால் ஒவ்வொரு முறை நிலநடுக்கம் ஏற்படும் போது டோக்கியோ எலக்ட்ரிக் பவர் செய்தி தொடர்பாளர் தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு விளக்கம் அளித்து வருகிறார்.
 புவியியல் ஆராய்ச்சியாளர் ரோஸ் எஸ்.ஸ்டெயின்என்பவர் ஜப்பானில் நடத்திய ஆய்வுக்குப் பின் கூறுகையில்,"அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இது தொடர்ந்து ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும்" என்றார்.
மார்ச் 11ம் தேதிக்கு பின் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவது குறைந்துள்ளது. தொடர்ந்து குறையும். ஆனால் சாதாரண நிகழ்வை விட அதிகளவில் நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் என்று புவியியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


 பலரும் திடீரென அதிர்வு ஏற்படுவது போல உணர்ந்து பாதிக்கப்படுகின்றனர். கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமிக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 400க்கும் அதிகமாக இருக்கும் என்றும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 800க்கும் அதிகமாக இருக்கும் என்றும் ஜப்பான் தெரிவித்துள்ளது.
........................................................................................................................................................................ 

அணு ஆயுதத் தாக்குதலை நடத்துவோம்.

ஒசாமா பின்லேடன் பிடிபட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ ஐரோப்பாவில் நாங்கள் மறைத்து வைத்துள்ள அணு குண்டை வெடிக்கச் செய்வோம் என்று அல் கொய்தா அமைப்பு எச்சரித்ததாக விக்கிலீக்ஸ் ஆவணத் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ஐரோப்பாவில் நாங்கள் ஒரு அணுகுண்டை மறைத்து வைத்துள்ளோம். ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டாலோ அல்லது பிடிக்கப்பட்டாலோ, உடனடியாக அந்த குண்டை வெடிக்கச் செய்வோம் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் இணையதளம் இதுதொடர்பான ஆவணத்தை வெளியிட்டுள்ளது. கியூபாவின் குவான்டனாமோவில் அமெரிக்கா அமைத்துள்ள கொடுங்கோல் சித்திரவதைச் சிறை தொடர்பான ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் பல பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் ஒன்றில், அல் கொய்தாவின் இந்த எச்சரிக்கை செய்தியும் இடம் பெற்றுள்ளது.
இந்த ரகசிய ஆவணங்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய செய்தி நிறுவனங்கள் சிலவற்றுக்கு விக்கிலீக்ஸ் கொடுத்துள்ளது. அந்த ஆவணத்தில் இடம் பெற்றுள்ள முக்கியத் தகவல்கள் விவரம் வருமாறு:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தீவிரவாத தாக்குதலை அல் கொய்தா தொடுத்த சமயத்தில், கராச்சி நகரில் முக்கிய அல் கொய்தா தலைவர்கள் ஒரே இடத்தில் குவிந்து அந்த தாக்குதலைக் பார்த்தனர். மேலும் இந்த தாக்குதலுக்கு தி்ட்டமிட்ட முக்கிய்த தலைவர் விமானங்கள் இரட்டைக் கோபுரத்தை தாக்கி சிதைத்த காட்சிகளை நேரடியாக பார்த்து ரசித்தார். கராச்சியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து மிக மிக பாதுகாப்பான முறையில் இவர்கள் அந்தக் காட்சிகளை டிவி ஒளிபரப்பின் மூலம் பார்த்துள்ளனர்.
இந்த வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு மருத்துவமனையில்தான், ஏமன் நாட்டில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். கோல் கப்பல் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளில் முக்கியமான நபர், டான்சில் ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நியூயார்க் நகரில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் ஒரு சில நாட்களில் அத்தனை அல் கொய்தா தலைவர்களும் ஆப்கானிஸ்தானுக்கு ஓடி விட்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டைக் கோபுரத் தாக்குதல் சம்பவத்திற்கு முக்கியக் காரணமான பின்லேடனும், அவனது துணைத் தளபதியான அய்மான் அல் ஜவாஹிரியும் சம்பவத்தன்று கராச்சியில் இருந்தது இந்த ஆவணம் மூலம் தெரிய வருவதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 11ம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பின்னர், நான்கு நாட்கள் கழித்து காந்தஹாருக்கு பின்லேடன் போயுள்ளார். அங்கு அல் கொய்தா தீவிரவாதிகள் கூடியுள்ளனர். அப்போது, ஆப்கானிஸ்தானை நாசகார அமெரிக்க கும்பலிடமிருந்து காப்போம் என்று உறுதி மொழி எடுத்துள்ளனர்.

2ஜி- குற்றப் பத்திரிக்கை தாக்கல்


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதே போல கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
அதே நேரத்தில் இன்றைய குற்றப் பத்திரிக்கையில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளின் பெயர் அதில் இடம் பெறவில்லை.
இதையடுத்து வரும் மே 6ம் தேதி ஆஜராகுமாறு கனிமொழிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.பி ரியாலிட்டி நிறுவனம் தனது இன்னொரு நிறுவனமான சினியுக் மற்றும் மற்றும் குசேகாவ் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனம் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியளவுக்கு நிதியதவி அளித்தது. இதை கலைஞர் டிவி வட்டியோடு திருப்பித் தந்துவிட்டாலும், அந்த நிதியுதவியை டிபி ரியாலிட்டி ஏன் தந்தது என்பது கேள்வியாகியுள்ளது.
குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கித் தந்தததற்கு லஞ்சமாகவே இந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அந்த நிறுவனம் தந்ததாக சிபிஐ கருதுகிறது.
இதையடுத்து கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் குமார் ரெட்டியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. கலைஞர் டிவி அலுவலகத்திலும் சோதனை நடத்திய சிபிஐ, அதன் பங்குதாரர்கள் என்ற வகையில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரிடமும் விசாரணை நடத்தியது.
இந் நிலையில் சிபிஐ இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாள், கனிமொழி எம்.பி, சரத்குமார் ரெட்டி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால், இன்றைய குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாளின் பெயர் அதில் இடம் பெறவில்லை. கனிமொழி, சரத் குமாரின் பெயர்களே இடம் பெற்றன.
கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் களில் ஒருவரான கனிமொழி, 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான குற்றச் சதியில் இணைந்து செயல்பட்டதாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் 80,000 பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது நினைவிருக்கலாம். அதில், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா, நீரா ராடியா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அதிகாரிகள், ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாஹித் உஸ்மான் பல்வா, இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லெஸ் நிறுவன இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் டெலிகாம் அதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரிகள் கெளதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோர் மீது சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழி, தயாளு அம்மாள் மற்றும் நிர்வாக இயக்குனர் சரத் குமார் ரெட்டி ஆகியோருக்கு முறையே 20, 60 மற்றும் 20 சதவீத பங்குகள் உள்ளன.
சிபிஐ இன்று தாக்கல் செய்த துணைக் குற்றப் பத்திரிகையிலும் ஆ.ராசாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவர் ஸ்பெக்ட்ரத்தை குறைந்த விலையில் ஒதுக்க தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டை சிபிஐ கூறியுள்ளது.
கனிமொழி, சரத் குமார் தவிர சினியுக் நிறுவனத்தின் கரிம் மொரானி மற்றும் குசேகாவ் நிறுவனத்தின் ராஜிவ் அகர்வால் மற்றும் இந்த நிறுவனங்களின் பங்குதாரரான ஷாகித் உசேன் பல்வாவின் தம்பி ஆஷிப் பல்வா ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சிபிஐ குற்றப்பத்திரிகையில் கலைஞர் டி.வியின் 60 சதவீத பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாளின் பெயர் சேர்க்கப்படாதது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
===========================================================================
அய்.நா,அறிக்கையை கண்டுகொள்ளாமல் இலங்கை அரசு விட்டுவிடும்படியும்,அய்.நா,சபையில் தாங்கள் பார்த்துக்கொள்வதாகவும் ரஷ்யாவும்,சீனாவும் பக்சேக்கு ஆலோசனைவழங்கியுள்ளன. வீட்டோ வாக்கு உள்ள இந்நாடுகளால் அறிக்கையின் நோக்கமே மழுங்கடிக்கப்பட்டுவிடும். இது போன்று வீட்டோ பயன்பாட்டை தீயவழிகளுக்கு செயல்படுத்தும் நாடுகள் இருக்கையில் அய்.நா,சபை என்ன பயனுள்ள சேவைகளை செய்ய இயலும்.
 //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

திங்கள், 25 ஏப்ரல், 2011

காமன்வெல்த் [கல்]மாடி கட்டிட ஊழல் கைது,,,,

பெட்டியில் என்ன,?


 
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் கோடிக்கணக்கில் ஊழல் புகழ் கல்மாடியை சி.பி.ஐ.,ஒருவழியாக இன்று[25.04.2011] கைது செய்தது .காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளை செய்து வந்தவரும் அந்த கமிட்டிக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவராகவும் இருந்து வந்தவர் சுரேஷ்கல்மாடி.

இவர் காங்.,தலைவர் சோனியாவிற்கு நெருக்கமானவராக இருந்தவர். போட்டிக்கான மைதானம் அமைத்தல், போட்டி ஒளிபரப்பு உரிமம். தளவாட பொருட்கள் வாங்கியது , லண்டன் ஜோதி ஓட்டம் பணிகள் ஏற்பாடு உள்ளிட்ட கான்ட்ராக்ட் பணியில் பல கோடி முறைகேடு செய்தார் என்பது குற்றச்சாட்டு. இதனையடுத்து சி.பி.ஐ., பல மாதங்களாக விசாரணை நடத்தியது.

இதில் ஏ.எம்., பில், டி.எஸ்.ஆர்., கம்பெனிகளுக்கான கான்ட்ராக்ட் பணியில் முறைகேடு செய்ததற்கான ஆவணங்கள் கிடைத்தது. எனவே இன்று கல்மாடியை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர் முன்னதாக இன்று 4 வது நாளாக விசாரணை நடத்த சி.பி.,ஐ., தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். கல்மாடியை கைது செய்தது குறித்து சிபி.ஐ., செய்திதொடர்பாளர் தாரனிமிஸ்ரா ‌இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இவர் மேலும் கூறுகையில் நாளை பாட்டியாலா கோர்ட்டில் கல்மாடி ஆஜர் செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார்.

லண்டன்‌ சென்றசி.பி.ஐ., அதிகாரிகள் அங்குள்ள கம்பெனி நிறுவனத்தாரிடம் விசாரணை நடத்தி போதிய ஆவணஙகளை கொண்டு வந்தனர்.

இதனையடுத்து சுரேஷ் கல்மாடி காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

டில்லி முதல்வர் மீது நடவடிக்கை எப்போது ? கல்மாடியின் கைது பற்றி சி.பி.எம்., பொலிட்பீரோ உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில்; குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சுங்குலி கமிட்டி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சி.பி.ஐ.,விசாரணை தொடரப்பட வேண்டும். டில்லி முதல்வர் ஷீலாதீட்சித்துக்கும் இதில் தொடர்பு உண்டு எனவே விசாரணை துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

எண்டோசல்பான் -தடை செய்ய வேண்டும்.

 ‎

மண்ணையும், நீரையும் விஷமாக்கும் எண்டோசல்பான்

 எண்டோசல்பான் உள்பட கொடிய விஷம் கொண்ட பூச்சி மருந்து களை கட்டாயமாக விவசாயிகளை பயன்படுத்த செய்து, இந்திய விவ சாயிகளுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்து வருகிறது மத்திய காங்கிரஸ்  அரசு என்று கேரள முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் சாடியுள்ளார்.

கேரளமும், கர்நாடகமும் தடை செய்துள்ள எண்டோசல்பான் பூச்சி மருந்தை உடனடியாக நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி யுள்ளன.
”ஒரு முழுமையான விஷமான எண்டோசல்பான் பூச்சி மருந்து, மனிதர்களுக்கு பெரும் தீங்கு விளை வித்து வருவது மட்டுமின்றி, சுற் றுச்சூழலுக்கும் ஈடு செய்ய முடி யாத சேதாரத்தை ஏற்படுத்தி வரு கிறது. அப்படிபட்ட இந்த ரசாயன மருந்து இன்னும் நமது நாட்டில் பகிரங்கமாக விற்கப்பட்டு வரு கிறது.

கேரள மாநிலத்தில் காசர்கோடு மாவட்டத்தில் எண்டோசல்பான் பூச்சி மருந்தால் ஏற்பட்ட துயரங் கள் தொடர்கின்றன. 1995ம் ஆண்டு முதல் எண்டோசல்பான் பூச்சி மருந்தை தொடர்ந்து தெளித்ததன் மூலம் 500 உயிர்கள் பறிக்கப்பட் டுள்ளன என்று அதிகாரப்பூர்வ கணக்கு தெரிவிக்கிறது. 1970களுக்கு பிறகு என்று கணக்கிட்டால் சுமார் 4 ஆயிரம் பேர், எண்டோசல்பான் தெளிக்கும்போது அதை சுவாசித்த தால் உயிரிழந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. இந்த பூச்சி மருந்தை பயன்படுத்தி பிறகு அதன் தொடர்விளைவால் இன்றைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெரும் துயரத்தை அனுபவித்து வரு கிறார்கள். 9 ஆயிரத்திற்கும் அதிக மான மக்கள் செவித் திறனை இழந் திருக்கிறார்கள்; உடல் உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அது மட்டுமின்றி எண்டோசல்பான் பூச்சி மருந்து கலந்ததால் மண் ணும், நீரும் விஷமாக மாறியிருக் கிறது. இந்த மண்ணில் விளையும் உணவுப் பொருட்கள் மனித உட லில் பெரும் பாதிப்புகளை நீண்ட காலத்திற்கு ஏற்படுத்தும் அபாய மும் உள்ளது.

எண்டோசல்பானின் வர லாற்றை ஆராய்ந்தால் உலகம் முழு வதிலும் 74 நாடுகளில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நமது நாட் டில் கேரளாவும், கர்நாடகமும் தடை செய்துள்ளன. கேரள அரசு தனது அதிகார வரம்புக்கு உட் பட்டு, எண்டோசல்பானால் பாதிக் கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் அளித்து வருகிறது.

ஆனால், மத்திய அரசு, பாதிக் கப்பட்ட இந்த மக்களை பற்றி இது வரையிலும் சிந்திக்கவில்லை. கேர ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிக் கூட அளிக்க தயா ராக இல்லை. மாறாக, கேரள அரசு, எண்டோசல்பானால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயி ரம் நிவாரணமும், அவரை சார்ந்தி ருக்கும் குடும்பங்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரமும், இலவச ரேசன் பொருட்களும் வழங்கி வருகிறது. காசர்கோடு மாவட்டத்தில் 11 பஞ் சாயத்துகளில் இதன் பாதிப்பு தீவி ரமாக இருப்பதால் மேற்கண்ட நிவாரணத்தை இடது ஜனநாயக முன்னணி அரசு முழுமையாக அமல்படுத்தியுள்ளது.

இந்தப் பின்னணியில், நாடு முழு வதும் கொடிய பாதிப்புகள் ஏற் படாமல் இருக்க உடனடியாக எண் டோசல்பான் பூச்சி மருந்துக்கு மத் திய அரசு தடை விதிக்க வேண்டும். மேலும், இந்த மருந்தை பயன்படுத் தியதால் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பிடவும், பாதிக்கப்பட்டவர் களுக்கு நிவாரணம் அளிக்கவும் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும்.

அதுமட்டுமின்றி, இதுதொடர் பாக ஸ்டாக்ஹோம் நகரில் விரை வில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில், எண்டோசல்பானை உலகம் முழுவதிலும் தடை செய்ய வேண்டுமென இந்தியாவின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச் சகம் வலியுறுத்த வேண்டும். இதை செய்தால்மட்டுமே உலகம் முழு வதிலும் இந்தக் கொடிய விஷ முள்ள பூச்சி மருந்துக்கு முடிவு கட்ட முடியும்.

ஐக்கிய நாடுகள் சபையின் சுற் றுச்சூழல் மையத்தின் ஆய்வுக் குழு வானது, 3 ஆண்டு காலம் தீவிரமாக விவாதித்து, எண்டோசல்பான் பூச்சி மருந்தை உலகம் முழுவதி லும் தடை செய்ய வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. ஸ்டாக் ஹோம் சுற்றுச்சூழல் மாநாட்டில், தடை செய்யப்பட வேண்டிய மருந் துகள் தொடர்பாக இந்தக் குழு முன்வைத்துள்ள பட்டியலில் எண் டோசல்பான் முதலிடத்தில் உள் ளது.

இத்தகைய பின்னணியில், ரசா யன மருந்துகள் உற்பத்தியில் ஈடு பட்டுள்ள பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்ப்பந்தத்திற்கு பணியாமல், கோடிக்கணக்கான விவசாயிகள் மற்றும்மக்கலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எண்டோசல்பான் பூச்சி மருந்தை உடனடியாக இந்திய அரசு தடை செய்ய வேண்டும்

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

கறுப்புப் பணம்-அரசு தயக்கம் ஏன்?

சுவிட்சர்லாந்து வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணம் எவ்வளவு என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

கறுப்புப்பணம் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் அதை பொதுமக் களுக்குத் தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். வங்கிகளில் சில ஆயிரம் கடன் வைத்திருந்தால்கூட அவர்களது பெயர்களை வங்கிகள் நாளேடுகளில் வெளியிடுகின்றன. அவர் களது சொத்துகளை முடக்குகின்றன. ஆனால் இந்திய மக்களின் உழைப்பைச்சுரண்டி சேர்க்கப்பட்ட கறுப்புப்பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைத்துள்ள கனதன வான்களின் பெயர்களை வெளியிடுவது கூட பெரிய பாவம் என்று மன்மோகன் சிங் அரசு கருதுகிறது.

இத்தனைக்கும் கறுப்புப்பண விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் மத்திய அரசை உச்சநீதிமன்றம் மிகக்கடுமையான வார்த்தைகளால் கண்டித்து வருகிறது. ஆனால் ஆட்சியாளர்களுக்கு அது கொஞ்சம் கூட உறைக்கவில்லை
.

கறுப்புப்பணப் பிரச்சனையில் ஹசன் அலி என்ற ஒரே ஒரு நபரை மட்டும் குறிவைத்து விசாரணை நடைபெறுவது ஏன் என்பது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப்பணம் வைத் துள்ள மற்றவர்களின் பெயர் ஏன் வெளியே வர வில்லை; இந்த ஒரு நபர் மட்டும்தான் கறுப்புப் பணம் வைத்துள்ளாரா என்றெல்லாம் உச்சநீதி மன்ற நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பிய அடுத்த நாள், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை என்று சர்வ அலட்சியமாகப் பதிலளிக்கிறார்.

உண்மையில் கறுப்புப்பண முதலைகளை பாதுகாக்க மத்திய அரசு அனைத்து வகையி லும் முயல்கிறது என்பதுதான் விஷயம். அமெ ரிக்காவுடன் அணுசக்தி உடன்பாடு செய்து கொள்ள ஆட்சியை பணயம் வைக்கக்கூட துணிகிற ஆட்சியாளர்களுக்கு தேசத்தின் சொத்தை மீட்பதில் ஏன் இவ்வளவு அலட்சியம்
.

கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் யாரும் ஏழை, எளிய மக்கள் அல்ல. ஆட்சி அதிகாரத் தைப் பயன்படுத்தி கொள்ளையடித்த அரசியல் வாதிகள், தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிய பெருமுதலாளித்துவ நிறுவனங்கள், லஞ்ச ஊழலில் திளைக்கும் உயர் அதிகார வர்க் கத்தினர்தான் கறுப்புப்பணத்தின் ஊற்றுக்கண் ணாக விளங்குகின்றனர்.

தேசத்தையே அதிரவைத்த ஸ்பெக்ட்ரம் ஊழலின் மூலமாக பெறப்பட்ட பணம் கூட வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட் டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு ஊழல் மூலமாகக் கிடைத்த பணமும் வரிஏய்ப்பு மூலமாகச் சுருட்டப்பட்ட பணமும் தான் கறுப்புப்பணமாக மாறி வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்கு அளிக்கும் உணவு மானியத்தை வெட்டுகிறது மத்திய அரசு. உர மானியத்தை குறைக்கிறது. பெட்ரோல் - டீசல் விலையை அடிக்கடி உயர்த்தி அதிர்ச்சி கொடுக்கிறது. வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை வெளிக்கொணர்ந்தால் கோடிக்கணக்கான இந்திய மக்கள் பலன் பெறுவார்கள்.
ஆனால், கறுப்புப்பணத்தை வெளிக்கொணரும் அரசியல் உறுதி அரசுக்கு இல்லை என்பதே உண்மை. இந்த விஷயத்தில் அவர்களுக்கு இருப்பது கறுப்பு மனமே.
                                                                        நன்றி:தீக்கதிர்,

காத்திருக்கும்[ ஸ்டெர்லைட்] எமன்,,,,

Apr
23
  

ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு அனுபவம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடக் கோரிய வழக்கில் நீதிமன்ற ஆணைப்படி ஆய்வுகள் மேற்கொண்டதை விளக்கி, மதிமுக பொதுச் செயலர் வைகோ செய்தி வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:

"மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் ஜெய்தாபூர் என்ற இடத்தில் அணு மின் உலை அமைப்பதைக் கடுமையாக எதிர்த்து, ரத்தினபுரி மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பலத்த கிளர்ச்சி செய்து வருகின்றனர்.
தங்கள் வாழ்விடத்தையும், ஆபத்து வருமுன் காக்கும் எச்சரிக்கையுடன் போராடும் இதே மக்கள்தான், 90-களின் தொடக்கத்தில், மராட்டிய மாநிலத்தில், அரசு அனுமதியோடு அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை, சுற்றுச்சூழலுக்கும், தங்களின் வாழ்வுக்கும் பெரும் நாசம் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.

அப்போதைய மதிப்பில் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து அமைக்கப்பட்ட தொழிற்சாலையை, இயந்திரங்களை உடைத்து நொறுக்கினார்கள். பொதுமக்களின் எதிர்ப்பைக் கண்டு, அன்றைய மராட்டிய மாநில சரத் பவார் அரசு, ஸ்டெர்லைட் ஆலைக்குக் கொடுத்து இருந்த உரிமத்தை ரத்து செய்தது.


குஜராத் மாநிலத்தில் அனுமதி வாங்க முடியாமல், கோவாவில் கால் பதிக்க முடியாமல், தமிழ்நாட்டில் முத்து வளமும், மீன் வளமும் கொண்ட அழகிய கடல் பூங்காவாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தூத்துக்குடி கடலோரத்தில், ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலைக்கு, அன்றைய அண்ணா தி.மு.க. அரசின் அனுமதியையும், அன்றைய மத்திய காங்கிரஸ் அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியையும் பெற்று, ஸ்டெர்லைட் ஆலையை நிறுவியது.

கடற்கரையில் இருந்து 25 கிலோ மீட்டல் எல்லைக்கு உள்ளே ஆலை அமைக்கக்கூடாது என்ற சுற்றுச்சூழல் அமைச்சகம் வரையறுத்த சட்டவிதியை மீறி, 15 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளேயே ஸ்டெர்லைட் ஆலை, அ.தி.மு.க. அரசின் அனுமதியோடு அமைக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி, 250 மீட்டர் சுற்றளவுக்கு, அடர்த்தியான பசுமைச்சூழல் அமைக்க வேண்டும் என்று, முதலில் நிபந்தனை விதித்த தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம், ஒருசில நாள்களுக்கு உள்ளாகவே, 94 ஆகஸ்ட் 18 ஆம் நாள், 25 மீட்டர் சுற்றளவுக்கு பசுமைச்சூழல் அமைத்தால் போதும் என்று நிபந்தனையைத் தளர்த்திக் கொண்டது.

மன்னார் வளைகுடாவில் உள்ள வான்தீவு, கசுவர், கரைச்சல்லி, விளாங்கு சல்லி ஆகிய தீவுகள், ஆலையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு உள்ளேயே அமைந்து உள்ளன.

தூத்துக்குடி வட்டார மக்களும், மீனவர்களும், விவசாயிகளும், பொதுநல அமைப்பினரும், மறுமலர்ச்சி தி.மு.க.வும், தொடர் போராட்டங்களை நடத்தினர்.

மதிமுக, 96 டிசம்பர் 9 ஆம் நாள், என் தலைமையில் 20,000 க்கும் மேற்பட்டோர் உண்ணாநிலை அறப்போர் நடத்தியும், 97 ஏப்ரல் 20 ஆம் நாள், தூத்துக்குடி துணை ஆட்சியர் அலுவலகத்துக்கு முன் என் தலைமையில் மறியல் செய்து, பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டோம்.

பின்னர் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தூத்துக்குடி வரை, பல்லாயிரக் கணக்கானவர்களோடு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு நடைபயணத்தை மேற்கொண்டோம்.

97 ஆகஸ்ட் 30 ஆம் நாள், 25,000 பேர் பங்கு ஏற்ற ஸ்டெர்லைட் ஆலை முற்றுகைப் போரை என் தலைமையில் நடத்தியபின்னர், உயர்நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த ரிட் மனு மீது, 98 டிசம்பர் 9 ஆம் நாளில் இருந்து 14 ஆம் தேதி வரையிலும், நானே வழக்கில் நேரில் ஆஜராகி வாதாடினேன்.

வழக்கு தொடர்ந்து நடைபெற்றது. 2010 செப்டெம்பர் 28 ஆம் நாள் அன்று, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாண்புமிகு எலைட் தர்மாராவ், மாண்புமிகு பால் வசந்தகுமார் அமர்வு நீதிமன்றம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று, ஆணை பிறப்பித்தது.

அதனை எதிர்த்து, ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, தற்காலிகத் தடை ஆணை பெற்று உள்ளது.

நிரந்தரமாக மூட வேண்டும் என்று நானும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு முறையும் பங்கு ஏற்றேன்.

கடந்த பிப்ரவரி 25 ஆம் நாள் அன்று, உச்சநீதிமன்றம், நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வுக்கூடம் நீரி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆய்வு நடத்தி, எட்டு வாரங்களுக்குள் அறிக்கை தர வேண்டும் என ஆணையிட்டது. ஆய்வின்போது, எதிர்மனுதாரர்களையும் பங்கு ஏற்கச் செய்ய வேண்டும் என்றும் கூறியது.

40 நாள்கள் கழித்தே நீரி நிறுவனத்தில் இருந்து டாக்டர் நந்தி தலைமையில் ஆய்வுக்குழு ஏப்ரல், 6,7,8 தேதிகளில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வுகளை மேற்கொண்டது.

ஆலை வளாகத்துக்குள் மண், நீர், மாதிரிகளை சோதனைக்கு இம்முறை எடுப்பது இல்லை என்று நீரி நிறுவனம் கூறியதற்கு, நான் பலத்த எதிர்ப்புத் தெரிவித்ததன் பேரில், மாதிரிகள் எடுக்கப்பட்டன. ஆயினும், நம்முடைய தரப்பில் மாதிரிகள் எடுக்க  அனுமதிக்கவில்லை. மேலும், ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மண்டலத்தில் ஏற்படும் மாசு, நச்சுத்தன்மையைக் கண்டு அறியத் தேவையான கருவிகளை, நீரி ஆய்வுக்குழு கொண்டு வரவில்லை.

மீண்டும் ஆய்வு ஏப்ரல் 19 ஆம் நாள் தொடங்கியது. இதில், நானும், சுற்றுச்சூழல் நிபுணர் நித்தியானந் ஜெயராமன், வழக்கறிஞர் தேவதாஸ், தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் ஜோயல்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டோம்.

25 மீட்டர் சுற்றளவுக்கு, ஆலையில் அடர்ந்த பசுமைச்சூழல், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆணைப்படி அமைக்கப்பட்டு உள்ளதா? என்பதற்கான ஆய்வு நடத்தப்பட்டது. 80,000 மரங்கள் நடப்பட்டு இருப்பதாக, உண்மை இல்லாத ஒரு செய்தியை, ஸ்டெர்லைட் கூறி வருகிறது.

உயர்நீதிமன்றம் ஆலையை மூடச் சொன்னதற்குப் பின்னர், வெளி இடங்களில் இருந்து, குறிப்பாக ஆந்திர மாநிலத்தில் மண்ணில் இருந்து பிடுங்கப்பட்ட, ஓரளவு வளர்ந்த மரங்களையும், செடிகளையும், லாரிகளில் ஏற்றிக்கொண்டு வந்து, ஸ்டெர்லைட் வளாகத்துக்கு உள்ளே நட்டு வைத்து இருப்பதை, அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் நமக்குத் தெரிவித்து இருந்தனர். அதனால், பல இடங்களில் மரங்கள் பட்டுப்போய் நிற்பதும், ஒரு போலித்தோற்றத்தை ஏற்படுத்தவே, ஸ்டெர்லைட் முயற்சிக்கிறது என்பதையும், நீரி ஆய்வுக்குழுவிடம் தெரிவித்தோம்.

பல இடங்களில், புதிதாக ஊன்றப்பட்ட வேப்ப மரங்கள், இலைகளே இல்லாமல் காய்ந்து கிடப்பதைச் சுட்டிக்காட்டியபோது, இது இலையுதிர் காலம் என்றும், இனிமேல்தான் இலைகள் துளிர்க்கும் என்றும், ஸ்டெர்லைட் நிர்வாகம் அதற்கு விளக்கம் அளித்தபோது, மற்ற இடங்களில் எல்லாம் வேப்ப மரங்கள் இலைகள் இல்லாமல் வெறும் குச்சுகளாகவா நிற்கின்றன? என்று நாங்கள் மறுத்துக் கூறி, நீரி ஆய்வுக்குழு அதைப் பதிவு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினோம்.

ஸ்டெர்லைட் வளாகத்தில், ஆலையின் ஒரு பகுதியில் ஓரளவு மரங்கள் நடப்பட்டு இருந்தாலும், மற்ற இடங்களில் காங்கிரீட் தளங்கள் அமைக்கப்பட்டும், பசுமைச் சூழலுக்கு வாய்ப்பே இல்லாமல் ஆக்கப்பட்டும் இருப்பதையும் சுட்டிக் காட்டினோம்.

காற்று மண்டலத்தில், மாசும், தூசும், நச்சுப்புகையும் எந்த அளவுக்கு ஸ்டெர்லைட் ஆலையால் கலக்கிறது என்பதைக் கண்டு அறிய, ஆய்வுக்குழுவினர் ஆங்காங்கு அந்த ஆய்வுக் கருவிகளைப் பொருத்தினார்கள். எட்டு மணி நேரத்துக்கு ஒரு முறையும், 24 மணி நேரத்துக்கு ஒரு முறையும், அந்த ஆய்வுக்கருவியின் பதிவுகள் குறிக்கப்படும் என்றனர்.

20, 21 இரண்டு நாள்களும், நல்ல மழை பெய்ததால், காற்றில் படரும், தூசும், மாசும், சரியாகப் பதிவு செய்ய இயலாமல் போக வாய்ப்பு ஆயிற்று. இடையிடையே ஏற்பட்ட மின் தடையும், ஆய்வுக்குக் குந்தகம் ஆயிற்று.

ஆலைக்கு வெளியில் மீளவிட்டானில், காற்று மண்டலத்தில்,ஆலையில் இருந்து வெளியாகும் புகையால் ஏற்படும் பாதிப்பைக் கண்டு அறிய, ஆய்வுக்கருவியை, கூட்டுறவு வேளாண்மைச் சங்கக் கட்டடத்தில் அமைத்தபோது, அந்த ஊர் மக்கள் திரண்டு வந்து, கடந்த ஒரு வார காலமாக, ஆலையில் உற்பத்தியை மிகவும் குறைத்து விட்டார்கள் என்றும், ஆலைப்புகை, பத்தில் ஒரு மடங்குதான் தற்போது வருவதாகவும், ஆலை முழுவதும் இயங்கும் நாள்களில், காற்றில் கலந்து வரும் புகையால், தங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், தாங்கள் அங்கே குடி இருப்பதற்கே அவதிப்படுவதாகவும் கூறியதை, ஆய்வுக்குழுத் தலைவர் டாக்டர் நந்தியிடம் தெரிவித்தேன்.

ஆலையில் உற்பத்தி மிகவும் குறைக்கப்பட்டு விட்டது. பிப்ரவரி 25 முதல் மார்ச் 25 வரை, ஆலையில் ஒவ்வொரு நாளிலும் உற்பத்திக் கணக்கை, நீரி குழுவினர் ஆலை நிர்வாகத்திடம் ஆவணங்களின் ஆதாரங்களோடு பெற வேண்டும் என்று வற்புறுத்தினேன்.

தாமிர உருக்கு உற்பத்தி செய்வதற்கு, பல்வேறு நச்சு உலோகங்களும், ஆர்சனிக், யுரேனியம் உள்ளிட்டவையும் கலந்து உள்ள தாமிர அடர்த்திப் பொருளை, ஆஸ்திரேலியாவில் இருந்து, பல்லாயிரக்கணக்கான டன் கணக்கில் ஸ்டெர்லைட் நிர்வாகம் இறக்குமதி செய்து, தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆலைக்குக் கொண்டு வருகிறது.

ஆனால், நீரி குழுவினர் ஆய்வு செய்த நாள்களையொட்டி, ஒரு வார காலம் ஆலைக்குள் இந்தத் தாமிர அடர்த்தி கொண்டு வரப்படவில்லை என்பதையும் நீரி குழுவினரிடம் தெரிவித்தோம்.

இந்த நச்சு உலோகங்களாலும், ஆர்சனிக், யுரேனியத்தாலும் மற்றும் ஆலையின் இயக்கத்தாலும் ஏற்படும் கதிர் இயக்கத்தைச் சோதனை செய்ய, ரேடான் ஆய்வுக் கருவிகளுடன், மும்பை நகரில் இருந்து ஆய்வாளர்கள் இருவர், ஏப்ரல் 21 ஆம் தேதி வந்தனர். எட்டு இடங்களில் ஆய்வு செய்தனர். ஒவ்வொரு இடத்திலும், ஒரு மணி நேரம் கருவி இயக்கப்பட்டது.

ஆலையின் திடக்கழிவுகள் குவிக்கப்படும் இடங்களிலும், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆலையில் இருந்து நச்சுத்தன்மை மிக்க கழிவு நீரையோ, கழிவுப்பொருள்களையோ, வெளியில் கொண்டு போய் கொட்டப்படக்கூடாது என்பது, ஆலை கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனை ஆகும். ஆனால், அனுமதி பெறாமலேயே விரிவாக்க வேலைகளில் ஈடுபட்டு உள்ள ஸ்டெர்லைட் ஆலை, வெளியேற்றப்படும் கழிவுகளைக் கொண்டு போய், விரிவாக்கப் பகுதியில், பெரிய அளவில் 18 குழிகளைத் தோண்டி, அதில், கழிவு நீரைக் கொண்டு போய் கொட்டி வைத்து இருப்பதை, நீரி ஆய்வாளர் டாக்டர் நந்தியிடம் எடுத்துக் கூறி, அந்த இடங்களுக்கு அழைத்துச் சென்றோம். அங்கிருந்தும், நீரின் மாதிரிகளைச் சேகரித்து, ஆய்வுக்கு எடுத்துச் சென்று உள்ளனர்.

ஏற்கனவே ஆலைக்கு வெளிப்புறத்தில் நாம் சேகரித்த தண்ணீர், சேறு, மண் மாதிரிகளை, தமிழகத்தில் உள்ள ஒரு பரிசோதனைக் கூடத்துக்கு நிபுணர் நித்யானந்த் ஜெயராமன் மூலம் அனுப்பி வைத்து இருக்கிறேன். ஏற்கனவே இம்மாதிரி எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள், அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ் பெற்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் மைக் செர்னெயிக் என்பவருக்கு அனுப்பப்பட்டு, அவர் ஸ்டெர்லைட் ஆலையிலும் சுற்று வட்டாரத்திலும்

நடத்தப்பட்ட தண்ணீர், மண் சோதனைகளின் முடிவுகளை, தான் ஆய்வு செய்ததாகவும், அவை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருப்பதாகவும், ஆடு, மாடுகள் மற்றும் உயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் என்பதையும், தான் கையெழுத்து இட்டு அறிக்கையாகவே தந்து உள்ளார். அதனையும், என்னுடைய பிரமாண வாக்குமூலத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளேன்.

19, 20, 21 ஆகிய நாள்களிலும், 22 முற்பகல் வரையிலும், டாக்டர் நந்தி தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும், ஆய்வின்போது, சுற்றுச்சூழல் ஆய்வு நிபுணர் நித்யானந்த் ஜெயராமன், வழக்கறிஞர் தேவதாஸ், வழக்கறிஞர் ஜோயல், தராசு மகராசன் ஆகியோரும் பங்கு ஏற்றோம். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஆய்வின்போது, மிகவும் உபயோகம் உள்ள தகவல்களை, பேராசிரியை பாத்திமா பாபு அவர்களும் எங்களுக்குத் தந்தார்கள்.

முதல் நாள் பிற்பகலில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறையின் தலைவர், டாக்டர் அருணாசலம் அவர்களையும், உடன் அழைத்துச் சென்றபோது, அவரை அனுமதிக்கக்கூடாது என ஸ்டெர்லைட் நிர்வாக அதிகாரி கூறியபோது, எனக்கும் அவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. நீரி ஆய்வின் தலைவர், டாக்டர் அருணாசலத்தை, ஆய்வில் பங்கு ஏற்க அனுமதித்தார்.

மூன்றாம் நாள் ஆய்வின்போது, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத் தரப்பில் இருந்து என்னிடம் தங்கள் கருத்துகளைக் கூற வேண்டுமென்று என்னிடம் தெரிவித்தபோது, மக்கள் நலனுக்காக, பொது நன்மைக்காக நான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து, நீதிக்காகப் போராடி வருகிறேன். இதுகுறித்து நிர்வாகத்துடன் விவாதிப்பது சரியல்ல என்று கூறி மறுத்து விட்டேன்.

நாக்பூரின் நீரி நிறுவனம், 98 ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு நாசம் விளைவிக்கும் என்று அறிக்கை தந்தது.

2003 ஆம் ஆண்டில், நீரி நிறுவனம் இந்த ஆலைக்கு ஆதரவாகவும், 2005 ஆம் ஆண்டில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூறியதை மறுத்தும், ஆய்வு அறிக்கை தந்து உள்ளது.

வருகின்ற 29 ஆம் தேதி, உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது. இடையில் நான்கு நாள்களே உள்ளன. நீரி நிறுவனம், உச்ச நீதிமன்றத்துக்குத் தரும் அறிக்கையின் நகல்கள், நமக்கும் தரப்படும்.

என்றுள்ளார்.
ஆளும் மத்திய அரசும்,மாசுக்கட்டுப்பாடு வாரியங்களும் வேதாந்தா குழும நி்றுவனங்கள் போல் செயல் படும் போது அறிக்கைகள் எப்படி இருக்கும் என்பது வெளிப்படை.
நமது மக்களையும்,மண்ணையும் காப்பாற்ற இப்போதைக்கு நாதியே கிடையாது.காரணம் ஆட்சியாளர்களும்,அதிகார வர்க்கமும்  மக்கள் நலனுக்கு எதிரானவர்களாக இருக்கிறார்களே.அவர்களுக்கு தேவையானவற்றை பகாசுர நிறுவனங்கள் தானே கொடுக்கின்றன.  நம்மைப் போன்றவர்களுக்கு வக்கு கிடையாதே,,,,,