காமன்வெல்த் [கல்]மாடி கட்டிட ஊழல் கைது,,,,
பெட்டியில் என்ன,?
இவர் காங்.,தலைவர் சோனியாவிற்கு நெருக்கமானவராக இருந்தவர். போட்டிக்கான மைதானம் அமைத்தல், போட்டி ஒளிபரப்பு உரிமம். தளவாட பொருட்கள் வாங்கியது , லண்டன் ஜோதி ஓட்டம் பணிகள் ஏற்பாடு உள்ளிட்ட கான்ட்ராக்ட் பணியில் பல கோடி முறைகேடு செய்தார் என்பது குற்றச்சாட்டு. இதனையடுத்து சி.பி.ஐ., பல மாதங்களாக விசாரணை நடத்தியது.
இதில் ஏ.எம்., பில், டி.எஸ்.ஆர்., கம்பெனிகளுக்கான கான்ட்ராக்ட் பணியில் முறைகேடு செய்ததற்கான ஆவணங்கள் கிடைத்தது. எனவே இன்று கல்மாடியை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர் முன்னதாக இன்று 4 வது நாளாக விசாரணை நடத்த சி.பி.,ஐ., தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். கல்மாடியை கைது செய்தது குறித்து சிபி.ஐ., செய்திதொடர்பாளர் தாரனிமிஸ்ரா இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இவர் மேலும் கூறுகையில் நாளை பாட்டியாலா கோர்ட்டில் கல்மாடி ஆஜர் செய்யப்படுவார் என்றும் தெரிவித்தார்.
லண்டன் சென்றசி.பி.ஐ., அதிகாரிகள் அங்குள்ள கம்பெனி நிறுவனத்தாரிடம் விசாரணை நடத்தி போதிய ஆவணஙகளை கொண்டு வந்தனர்.
இதனையடுத்து சுரேஷ் கல்மாடி காங்கிரஸ் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
டில்லி முதல்வர் மீது நடவடிக்கை எப்போது ? கல்மாடியின் கைது பற்றி சி.பி.எம்., பொலிட்பீரோ உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறுகையில்; குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சுங்குலி கமிட்டி விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சி.பி.ஐ.,விசாரணை தொடரப்பட வேண்டும். டில்லி முதல்வர் ஷீலாதீட்சித்துக்கும் இதில் தொடர்பு உண்டு எனவே விசாரணை துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.