கதைவிடும் நேரம்,,,?

                          ஜெ,,,யின் கதை........                                                                                                                           எழுத்தாளர் வாஸந்தியின் ஜெயலலிதா-ஒரு சொல்லோவியம் (ஏ போர்ட்ரேட்) என்ற புத்தகத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஜெயலலிதா தாக்கல் செய்த  வழக்கில் கூறப்பட்டு இருப்பதாவது: 

ஒருவரைப்பற்றிய தகவல்களை வெளியிட வேண்டுமானால், சம்பந்தப்பட்ட அந்த நபரிடம் தகவலை சரிபார்த்துவிட்டு, அவரது கருத்தையும் சேர்த்து வெளியிடுவதுதான் பத்திரிகைகளின் நடைமுறையில் இருந்து வரும் விஷயமாகும். ஒருவரது வாழ்க்கை சரிதையை வெளியிடுவதற்கு முன்பதாக இந்த நடைமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இந்த நிலையில் வாஸந்தி, "ஜெயலலிதா ஒரு சொல்லோவியம்'' (ஜெயலலிதா ஏ போர்ட்ரேட்) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்தை புதுடெல்லியில் உள்ள பென்குயின் புக்ஸ் இந்தியா என்ற தனியார் நிறுவனம் வரும் மே மாதம் வெளியிட உள்ளது.   வெளியாக இருக்கும் அந்த புத்தகத்தில் உள்ள ஒரு பகுதி ஆங்கில வாரப்பத்திரிக்கை ஒன்றில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில், எனது பிறப்பு, எனது ஆரம்பகால பெயர் விவரங்கள், "ஜெயா'' என்ற பெயர் எங்கள் குடும்பத்தில் வந்த விதம், எனது தந்தையைப் பற்றிய தகவல்கள், எனது சினிமா வாழ்க்கை, எனது நட்பு வட்டாரம், என்னிடம் பாசம் காட்டியவருக்கு நான் எழுதிய கடிதங்களின் விவரம், எனது அரசியல் பொது வாழ்க்கை, அதில் நான் சந்தித்த சவால்கள், வழக்குகள், தனிப்பட்ட வாழ்க்கை போன்றவற்றை குறிப்பிட்டு எழுதப்பட்டு உள்ளது. 

இந்த விவரங்கள் வெளியானால் என்னைப்பற்றி மக்களிடம் உள்ள நல்லெண்ணம் பாதிக்கப்படும். அரசியல் வாழ்க்கையில் எனது நிலையில் பாதிப்பு உருவாகும். எனது பொது வாழ்க்கைக்கு பங்கம் நேரிடும். இந்த விவரங்களை வெளியிடுவது, ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையின் உரிமைகளை மீறுவது போன்றது. என்னைப்பற்றி வாசந்தி எழுதியுள்ள சரிதை, பொய்யானது, மரியாதை குறைவானது, உள்நோக்கம் கொண்டது, அவதூறானது, நாகரீகமற்றது, எல்லை தாண்டிய அநாகரீகமானது.   எனது வாழ்க்கை பற்றி அவர் எழுதியுள்ள சரிதையில் சில விஷயங்கள் மறைமுகமாக தெரிவிக்கப்படுகின்றன. அவை உண்மைக்கு மாறானவை மற்றும் களங்கத்தை ஏற்படுத்தக் கூடிய அவதூறான தகவல்களாகும். எனவே அந்த புத்தகத்தை எந்த வடிவிலும், எந்த பெயரிலும், எந்த நாளிலும், எனது சரிபார்த்தல் இல்லாமல் வெளியிட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுவை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:  தன்னால் சரிபார்க்கப்படாத தகவல்கள் அவரது சரிதையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும் அவை பொய்யானவை என்றும் அவதூறானவை என்றும் வழக்கில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். அங்கீகாரம் இல்லாமல் எழுதப்பட்ட தகவல்களை சரிதை (பயோகிராபி) என்று குறிப்பிடமாட்டேன் என்று ஆங்கில நாளிதழில் வாசந்தி கூறியிருப்பதையும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அந்த வகையில் பார்க்கும்போது, சரிதை எழுதுவதற்கு ஜெயலலிதாவின் ஒப்புதல் பெறப்படவில்லை. வழக்கு வாதத்தின்போது ஜெயலலிதா தரப்பு வக்கீல், "ஜெயலலிதாவின் சரிதை புத்தகத்தை வாங்குவதற்கு இணைய தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டார்.   வெளியிடப்படும் கட்டுரையில் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை விவரங்கள் இருக்கிறது

என்றால், அதை வெளியிடுவதற்கு முன்னதாக உண்மை நிலவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு இருக்க வேண்டும் என்று ஒரு வழக்கில் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. எனவே வாஸந்தி எழுதிய "ஜெயலலிதா ஏ போர்ட்ரேட்'' என்ற சரிதையை வெளியிடுவதற்கு ஜுன் 7ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. வழக்கு விசாரணை ஜுன் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அன்று பென்குயின் நிறுவனம், வாசந்தி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.என்றும் கூறப்பட்டுள்ளது.
 ============================================================================


ப. சிதம்பரம்
ப. சிதம்பரம்
      ஸ்பெக்ட்ரம் கதை              முடிந்து போன விசயம்,,,,?                                                        ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சர்ச்சையை முடிந்துபோன விவகாரமாகக் கருதும்படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அப்போதைய நிதி அமைச்சர் யோசனை கூறியிருந்ததாகவும் இது மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்றும் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு தெரிவித்துள்ளது. பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான இந்தக் குழு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடத்தி வரைவு அறிக்கை ஒன்றை உறுப்பினர்களிடையே சுற்றுக்கு விட்டுள்ளது.
ஆனால் தங்களிடம் கருத்துக் கேட்காமல் இந்த வரைவு தயாரிக்கப்பட்டு சுற்றுக்கு விட்டுள்ளதாக குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவி்த்துள்ளனர்.
அமைச்சர் சிதம்பரம் மட்டுமின்றி பிரதமர் கூட மறைமுகமாக அப்போதைய தொலைதொடர்பு அமைச்சர் ஆ.ராசா தன்னிச்சையாக செயல்பட அனுமதித்துவிட்டதாக வரைவு அறி்க்கையில் குறைகூறப்பட்டுள்ளது. அலைக்கற்று விஷயத்தில் சற்று ஒதுங்கியிருக்கும்படி பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொள்ளப்பட்டதால், தனது வஞ்சகத் திட்டத்தை ஆ.ராசா நிறைவேற்றிக்கொள்ள முடிந்துள்ளது என்று வரைவு அறிக்கை கூறுகிறது. ஆனால் 2007 நவம்பரி்ல் எழு,திய கடிதம் ஒன்றில் பிரதமரின் மேலான சில யோசனைகளை ஆ.ராசா புறக்கணித்தது குறித்து கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்சினை குறித்து தொலைதொடர்பு கமிஷன் ஆராய்ந்தபோதிலும் பரிந்துரை எதையும் கூறவில்லை என்றும் இதேபோன்று இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), பகிரங்க ஏலம் மூலம் இந்த ஒதுக்கீட்டை செய்யும்படி கூறவில்லை என்றும் பிரதமருக்கு ராசா கூறியது பாதி உண்மைதான், மீதி உண்மையையும் தன் உள்நோக்கத்தையும் அவர் மறைத்துவிட்டார் என்று வரைவு அறி்க்கை சாடியுள்ளது. இந்த விஷயத்தில் ஒளிந்திருந்த உண்மைகளையும் அதனால் நாட்டுக்கு ஏற்படக்கூடிய இழப்புகளையும் கண்டுகொள்ள பிரதமர் அலுவலகம் தவறிவிட்டது அல்லது மௌனம் காத்துவிட்டது என்று அது குறிப்பிட்டுள்ளது.
அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்ட அமைச்சர்கள் குழு ஒன்றை அமைக்கும்படி சட்ட அமைச்சர் கூறவில்லை என்று ராசா தெரிவித்திருந்தார். ஆனால் இது விஷயத்தில் சட்ட அமைச்சரின் யோசனையை பிரதமரின் அலுவலகம் அறிந்திருந்தும் ராசாவின் வார்த்தைகளே அவர்களிடம் எடுபட்டிருக்கிறது என்பதையும் வரைவு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. முதலில் வந்தவருக்கு முதலில் ஒதுக்கீடு என்ற கொள்கையால் இழப்பு எதுவும் பெரிதாக ஏற்பட்டுவிடவில்லை என்பதைப்போல் அமைச்சர் கபில் சிபல் கருத்து வெளியிட்டதை அறிக்கை கண்டித்துள்ளது.
அலைக்கற்றை அதிகம் இல்லை என்பதால் விண்ணப்பங்களை ஏற்பதற்கான தேதியை 2007 செப்.25 என நிர்ணயித்ததாகக் கூறிய ஆ.ராசா, புதிதாக சிலருக்கு வழங்கும் அளவுக்கு அலைக்கற்றை உள்ளது என்று ஒரு கட்டத்தில் கூறியுள்ளார். தமது உள்நோக்கத்தை நிறைவேற்றுிக் கொள்ளும் வகையில் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக் கொள்கையை அவர் திரித்துக்கொண்டிருக்கிறார். அலைக்கற்றை என்பது அரிதான ஒரு திறன்.. அதை மனதிற்கொண்டு அதற்கான மதிப்பை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறிய அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 2008 பிப்.15-ம் தேதி பிரதமருக்கு அனுப்பிய குறிப்பில் இந்த விவகாரத்தை முடிந்துபோன ஒன்றாகக் கருதும்படி கூறியது வருந்தத்தக்கது என்று வரைவு அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அதேநேரத்தில் அலைக்கற்றை ஒதுக்கீட்டை பகிரங்க ஏலத்தின் மூலம் ஒளிவு மறைவு இல்லாமல் செய்ய வேண்டும் என்று கூறியதாக அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அது பாராட்டியுள்ளது.
பொதுக்கணக்குக் குழுவின் கூட்டம் வியாழக்கிழமை நடக்கிறது. இதில் வரைவு அறிக்கை குறித்து ஆளும் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
==========================================================================
            நித்யாவின் அஞ்சலி கதை..                                                                                                     சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த நித்யானந்தா தனது பாதுகாவர்களுடன் பந்தாவாக வந்ததால் அந்தப் பகுதியில் தேவையற்ற சலசலப்பு ஏற்பட்டது. தன்னை விவிஐபிக்கள் இருந்த வரிசையில் அனுமதிக்குமாறு அவர் கோரியதற்கும் சாய்பாபா உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

உள்ளே வரும்போது மட்டுமல்ல வெளியே போகும் போதும் பிரமுகர்கள் வழியிலேயே செல்ல முயன்ற நித்தியாவை தடுத்து பொதுவழியிலேயேஅனுப்பிவைக்கப்பட்டார். பாவம் இன்னொரு கடவுள் அவதாரம்.
============================================================================
தனித் தமிழீழமே தி.மு.கவின் குறிக்கோள்.              [கதையல்ல நிஜம்]                                                                                     என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தி.மு.க உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தின் பின்னர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் யுத்தக் குற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் மனித உரிமை மீறலுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இதனால் இலங்கை அரசை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
இலங்கை யுத்தக் குற்றங்களுக்காக ஐ.நா. அமைப்பு நடத்திய விசாரணையில் இலங்கை கடற்படையினர் ஈழத்தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் நடைபெற்று இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா. குழு தெரிவித்துள்ளது.

இறுதி கட்டப்போரில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது போன்றவை உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளன.

போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. குழு பரிந்துரைத்தவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

போர் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் எனவும் மத்திய அரசை தி.மு.க உயர்நிலை செயல்திட்ட குழு வலியுறுத்துகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   குதிரை எல்லாம் ஒடியபின் லாயத்தை பாதுகாப்பாக மூடிவைப்பது போல்  கருணாநிதி அறிவிப்பு உள்ளது.
 ஓட,ஓட தமிழீழ மக்களை இந்தியாவின் துணையுடன் ராஜபக்‌ஷே குண்டுமழை பொழிந்து கொன்றுதீர்த்த்போது மெரினாவில் உட்கார்ந்து கவிதைக்கண்ணீர் வடித்து விட்டு,5மணிநேரம் உண்ணாநிலையில் இருந்ததுடன் தனது கடமையை முடித்து விட்டு இப்போது இவ்வாறு அறிக்கைவிடுவது எதற்காக?யாரை ஏமாற்ற அல்லது யாருக்கு எச்சரிக்கைவிட,,
 அய்யா கலைஞரே இந்தியா அய்.நா சபையில் இலங்கைக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடாது.அறிக்கைக்கு ஆதரவாக சீனா,ரஷ்யாவுடன் செயல்படும்.வெளிப்படையாக இல்லாவிட்டாலும்,மறைமுகமாக சேர்ந்துதான் இருக்கும். இப்போ என்ன செய்வீங்க,,?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?