இந்திய-இலங்கை ஒப்பந்தம்,{ரகசிய .?}
தொலைபேசி மூலம் நடந்த இப்பேச்சு வார்த்தையில் விடுதைலைப்புலிகளுக்கு எதிரானபோர் முடிவுற்ற பின்னர் இந்தியாசெய்த உதவிகளுக்கு பலனாக வழங்கிய உறுதிமொழிகளே அவைகள்.
இதற்கு முன்உருவான ஒப்பந்தங்களையே ராஜபக்ஷே அலட்சியம் செய்யும் போது வெறும் வாய் வார்தைகளை மட்டும் வைத்துக்கொண்டு ரகசியமாக புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கென இந்திய_-சிங்கள அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்த ஆதரவு என்பது காங்கிரசின் துரோகத்தை மீண்டும் ஒருமுறை இப்போது பார்க்கப்போகின்றோம்.சிங்களம் வழங்கிய உறுதிமொழிகளில் அதிகரப்பரவலாக்கமும் அடங்குமாம்.
சில நாட்கள் முன்னர் அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்டு காவல்த்துறை செயற்படத் தொடங்கினால் தன்னால் கூட பாதுகாப்பாக தமிழர் பகுதிகளுக்கு சென்றுவர முடியாது என மகிந்த குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
போர்க்குற்றத்தில் நான் மாட்டினால் உன்னையும்[இந்தியாவின் ரகசியாஅதரவ்வையும் கூறி] மாட்டிவிடுவேன் என்ற மிரட்டலினாலேயே இந்தியா சிங்களத்திற்கு உதவு ஒப்புக்கொண்டிருக்கக் கூடும்.
எந்த விதத்திலும் சிங்கள அரசுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுக்கக் கூடாது என தமிழக தலைவர்கள் கருணாநிதி,ஜெயலலிதா,போன்றோர் தங்கள் பகை மனப்பாண்மையை விட்டு விட்டு ஒருமித்தக் குரல் கொடுக்க வேண்டும். உண்மையிலேயே தமிழர்,ஈழத்தமிழர் கள் நலனில் அவர்கள் கூறிவரும் அக்கறை இருந்தால் உடனே குரல் கொடுக்க வேண்டும்.
டைம்ஸ் குறிப்பாகத் தனது தலையங்கத்தில் கூறியவை உங்கள் பார்வைக்கு
டைம்ஸ் குறிப்பாகத் தனது தலையங்கத்தில் கூறியவை உங்கள் பார்வைக்கு
”இந்தப் போர் குற்றங்களில் வெளியாருக்கும் பங்குண்டு. இந்தியா சிறீலங்காவின் புலிகளுக்கு எதிரான போர்த்திட்டத்தை ஆதரித்ததுடன் 2010-ல் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகளில் ராஜபக்சேவுக்கு சிறப்பு மதிப்பும் அளித்தது. புலிகளை வெறுக்க இந்தியாவுக்கு சரியான காரணங்கள் இருந்தன, அவற்றில் 1991-ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதும் அடங்கும். மேலும் சிறீலங்காவில் சீனா தனது ஆதிக்கத்தை விரிவாக்கி வருவதைப் பற்றிய கவலைகளும் இந்தியாவுக்கு இருக்கிறது. ஆனால் இந்தியத் தலைவர்கள் தனது அண்டை நாட்டினால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களை புறக்கணிக்க முடியாது.”