புலம் பெயர் தமிழர் செய்த குற்றம்,,,,,,,


சாய்பாபாவின் மரணம் குறித்தும், இதற்காக கிரிக்கெட் விளையாடாமல் பிரார்த்தனை செய்வதாக அறிவித்த சச்சின் டெண்டுல்கர் குறித்தும் விமர்சனம் செய்துள்ளார் வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். 




பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் முன் நடந்த தமிழர் ஆர்பாட்டம்

                                                                                                                                                                            ஐ நா அறிக்கை - புலம்பெயர் தமிழர் மீது குற்றச்சாட்டு 
-----------------------------------------------------------------------
இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் நிகழ்ந்த விடயங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலருக்கு ஆலோசனை கூற அமைக்கப்பட்ட மூவர் குழுவின் அறிக்கையில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் செயல்பாடுகளும் கணிசமாக விமர்சிக்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளுக்கு கணிசமான பொருளுதவியையும், தார்மீக ஆதரவையும் பல ஆண்டுகளாக புலம் பெயர் தமிழர்கள் வழங்கி வந்துள்ளனர் என்றும் இவர்கள் இலங்கை அரசு மீது மனக்குறைகளை கொண்டிருக்கின்றனர் என்றும் ஐ நா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரம் விடுதலைப் புலிகள் செய்யும் அத்து மீறல்களையும், வன்னியில் நடைபெற்ற மனிதப் பேரழிவில் புலிகள் வகித்த பங்கு குறித்தம் ஒப்புக் கொள்ள புலம் பெயர் தமிழர்கள் மறுப்பது, நீடித்த அமைதியை உருவாக்க தடையாக இருப்பதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
போரின் இறுதி கட்டத்தில் வன்னிப் பகுதியில் பல்லாயிரக்கணக்கானோரை கட்டாயமாக பிடித்து வைத்திருந்தது, தப்பிச் செல்ல முயன்றோரை வன்முறையால் தடுத்தது, சிறார்களை பலவந்தமாக படையணிகளில் சேர்த்தது போன்ற விடயங்களை புலிகள் செய்தாலும் புலம் பெயர் தமிழர்கள் பலர் இது பற்றி பேசத் தயங்கியதாக கூறப்பட்டுள்ளது.

வன்னிப் போரில் இரு தரப்புக்கும் இடையே சிக்கித் தவிக்கும் போது மக்களை காப்பாற்றுவதை விட தமிழ் ஈழம் என்ற அரசியல் கோட்பாட்டை காப்பாற்றவே புலம் பெயர் தமிழர்களில் ஒரு சாரார் முன்னுரிமை அளித்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் மாபியா கும்பல் போன்ற நடவடிக்கைகளை கைக் கொண்டு புலம் பெயர் தமிழர்களிடம் நிதி வசூல் செய்தார்கள் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் சார்பு அமைப்பாக வெளி நாடுகளில் செயல்பட்ட அமைப்பு தற்போது தனியார் வர்த்த அமைப்புக்கள் மூலம் இயங்குவதாகவும், சில கோயில் நிதிகளில் அது ஆதிக்கம் செலுத்துவதாகவும் ஐ நா கண்டறிந்துள்ளது.
பணம் வழங்கியது
புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும், பிற வழிகளில் இருந்தும் விடுதலைப் புலிகள் பெற்ற பணம் இன்னமும் இருப்பதாகவும், அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நலனுக்கு அது செலவிடப்பட வேணடும் என்றும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
புலம் பெயர் தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்கும் - புலிகளின் அதிதீவிர தமிழ் தேசியத்துக்கும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியமை இலங்கை தமிழர்கள் மத்தியில் எதிர்மறையான விளைவுகளை - அதாவது பிளவுகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் இந்த அறிக்கை இது சிங்கள தேசியத்தை பலப்படுத்தவும் வழி வகுத்ததாக கூறியுள்ளது. இலங்கையில் வாழும் அனைத்து இனத்தினர் மட்டுமல்லாது - புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்களும்- தமக்கு பொதுவான தாயகத்தில்- மற்றவர்களின் உரிமைகளை மதித்துப் போற்றி வாழ்வதில்தான் இலங்கைக்கு ஸ்திரமான எதிர்காலம் ஏற்படும் என்று யோசனை கூறப்பட்டுள்ளது.
நல்ல கல்வியறிவும், பொருளாதார வளமும் பெற்றுள்ள புலம் பெயர் தமிழர்களால் இலங்கையின் எதிர்காலத்தில் மேலும் ஆக்கபூர்வ பங்களிப்பை வருங்காலத்தில் வழங்க முடியும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. 
இலங்கை அரசைக் குறைகூறும் அறிக்கையில் இப்படி தமிழர்களைப் பற்றியும் சில குறைகளைக் கூறியுள்ளது அய்.நா.
உரிமைக்காக போராடும் ,வலிய ராணுவத்தை எதிர்த்துப் போராடும் போது இது போன்ற சில தவறுகள் ஏற்படுவது தவிர்க்க இயலா செயல்கள்.
 அப்பாவி மக்களை கொல்வதையே குறிக்கோளாகக் கொண்ட இலங்கை அரசை எதிர்கொள்ள பணமும் ஆயுதங்களும் தேவை என்பதை அறியாததல்ல அய்.நா,சபை.
இப்போதைய நிலமையே அப்பாவி மக்களை புலிகள் அழித்தொழிப்பு என்ற பெயரில் கும்பல்,கும்பலாகக் கொன்று குவித்ததற்கான போர்க் குற்றவாளி ராஜபக்‌ஷே என்ற பிரகடனமும் அதற்கான தண்டனையை சர்வதேச அரங்கில் வழங்க வேண்டும் என்பது தான்.
============================================================================
பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு.

பெட்ரோலுக்கு விலை நிர்ண யிக்கும் அதி காரத்தை கடந்த ஜூன் மாதம், எண்ணெய் நிறுவனங்க ளிடமே மத்திய அரசு ஒப்படைத் தது. விலை நிர்ணயத்தில் தனது பொறுப்பை அரசு கை கழுவியதன் விளைவாக 15 நாட்களுக்கு ஒரு முறை, பெட்ரோல் விலை உயர்த்தப் பட்டு வருகிறது. கடைசியாக, ஜனவரி மாதம் விலை உயர்த்தப் பட்டது.

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கிய தால், மத்திய அரசின் அறிவுறுத் தலின் பேரில், அதன் பிறகு பெட் ரோல் விலை உயர்த்தப்பட வில்லை.
 தமிழ்நாடு உள் ளிட்ட 4 மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்து விட்டது. மேற்கு வங்காளத்தில் மே 10ம் தேதியுடன் தேர்தல் முடிவடைகிறது. இந்நிலை யில், பெட்ரோல் விலையை உயர்த் தத் திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன.

இதுகுறித்து பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் தலைவர் ரன்பீர் சிங் புடோலா கூறுகையில்,” மக்களும், அரசும் அடங்கிய அமைப்பின் ஒரு அங்கமாகவே நாங்கள் உள்ளோம். குறிப்பிட்ட முடிவை எடுத்தால், எங்களுக்கு எதி ராக சூழ்நிலை திரும்பிவிடும். எனவே, சிறிது காலத்துக்கு இந்த நஷ்டத்தை தாங்கிக்கொள்ளலாம் என்று விலையை உயர்த்தாமல் இருந்தோம். தற்போது, கூடிய விரைவில் பெட் ரோல் விலையை உயர்த்த முடிவு செய் துள்ளோம்.

இன்றைய நிலையில், பெட் ரோலை லிட்டருக்கு ரூ.7.50 நஷ்டத் தில் விற்று வருகிறோம். டீசலை 18 ரூபாய் 11 காசுகளும், மண்ணெண் ணெயை 28 ரூபாய் 33 காசுகளும், கியாஸ் சிலிண்டரை 315 ரூபாய் 86 காசுகளும் நஷ்டத்தில் விற்று வருகிறோம். இதனால், தினமும் எங்களுக்கு ரூ.297 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. மாதத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி முதல் ரூ.6 ஆயிரம் கோடி வரை நஷ்டத்தைச் சந்தித்து வருகிறோம். இதன்மூலம், கடந்த மார்ச் மாதத்துடன் எங்களது கடன் அளவு ரூ.53 ஆயிரம் கோடி யாக உயர்ந்து விட்டது
” என்றார்.

லிட்டருக்கு
 
மே 15ம் தேதி பெட்ரோல் விலை உயர்வு பற்றி அறிவிக்கப் படும் என்றும், லிட்டருக்கு ரூ. 3 வரை இந்த உயர்வு இருக்கும் என் றும் இந்தியன் ஆயில் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரூ.50க்கு கீழ் இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல், கடந்தாண்டு தொடர்ந்து ஆறு முறை உயர்த்தப்பட்டு, தற் போது ரூ.60ஐத் தாண்டி விட்டது. இந் நிலையில் மே 10ம் தேதி இரவில் பெட்ரோல் விலை உயர்வு பற்றிய அறிவிப்பு வர லாம். இதன்மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 70 ஆக உயரும் ஆபத்து உள்ளது.
==========================================================================

சாய்பாபா மரணம்                  - தஸ்லிமா நஸ்ரின்


தற்போது ஸ்வீடன் நாட்டுக் குடியுரிமையைப் பெற்று ஸ்வீடனில் பாதுகாப்புடன் வசித்து வரும் இந்த நிலையில், சாய்பாபாவின் மரணம் குறித்தும், இதற்காக பிரார்த்தனை செய்யுமாறு சச்சின் டெண்டுல்கர் விடுத்த அழைப்பையும் தஸ்லிமா விமர்சித்துள்ளார்.
ஏன் சாய்பாபாவின் மரணத்திற்காக மற்றவர்கள் சோகமாக இருக்க வேண்டும். அவருக்கு 86 வயதாகி விட்டது. அவரை மரணமடைய அனுமதிப்பதுதான் சரியானது, நியாயமானது. சச்சின், அவருக்காக பிரார்த்தனை செய்வதாக கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது என்று கூறியுள்ளார் தஸ்லிமா.
இதேபோல இன்னொரு செய்தியில், சாய்பாபா இறந்து விட்டார். 2022 ஆம் ஆண்டுதான் இறப்பேன் என்று முன்பு அவர் கூறியிருந்தார். ஆனால் அதற்கு முன்பே இறந்து போய் விட்டார் என்று கிண்டலடித்துள்ளார்.
யாரும் சாய்பாபாவின் அஸ்தியை தங்களது விரல் நக இடுக்குகளில் மறைத்து எடுத்துக் கொண்டு வந்து அதைப் பத்திரப்படுத்த முயல மாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று சற்று காட்டமாகவே விமர்சித்துள்ளார்.
ஒரு பாபா போய் விட்டார். இனி ஆயிரக்கணக்கானோர் அந்த இடத்தைப் பிடிக்க முயல்வார்கள். காரணம், பக்தி பிசினஸ் தற்போது நல்ல லாபகரமானதாக இருப்பதால் என்று கூறியுள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?