தத்தளிக்கும் பல்கலைகள்
ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவர் ரோஹித் வெமுலாவைத் தொடர்ந்து நாட்டின் முதன்மை பல்கலைக் கழகமான ஜவஹர்லால் நேரு மத்தியப் பல்கலைக் கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருதலித் ஆராய்ச்சி மாணவர் முத்துகிருஷ்ணன்தற்கொலை செய்து கொண்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நமது கல்விமுறையில் பேணி வளர்க்கப்பட்டு வந்த மதச்சார்பற்ற கருத்தோட்டம், உலகளாவிய பார்வை, கருத்துரிமை, கல்வி வளாக ஜனநாயகம், மாணவர் ஒற்றுமை, உள்ளிட்டவைகள் நசுக்கப்பட்டு வருவதும், மேலும், கல்வி வளாகங்களில் இன்றும் தொடரும் சாதிய பாகுபாடும் இதுபோன்ற மரணங்களுக்கு முக்கியக் காரணம். கல்வியின் அவசியத்தை உணர்ந்த உலகின்பல நாடுகள் கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டுவந்து, கல்வியின் தரத்தையும், உயர் கல்வி நிலையங்களையும் மேம்படுத்தி வருகின்றன. மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனா உயர் கல்வி துறையில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி கொண்டிருக்கின்றன. 2000-ம் ஆண்டில் 1400 பல்கலைக்கழங்கள் இருந்த சீனாவில் இன்று 2553 ஆக உயர்ந்துள்ளது. உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை 2002-ல் 11.02 மில்லியனிலிருந்து 2014-ல் 23.91 ம...