தண்ணீர் தினம்..

 இன்று உலக தண்ணீர் தினம் .

தண்ணீரின் அருமை இன்று மக்கள் அனைவரும் உணர்ப்பித்து கொண்டுள்ளனர்.
அதை அவர்கள் கலிக்குடங்களுடன் ஆளாய் பார்ப்பதிலும்.குடமொன்றுக்கு 10 ரூபாய் வரை கொடுத்து வாங்குவதிலும் தெரிகிறது.
'நீரின்றி அமையாது உலகு' என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பது அறிந்ததே. பூமியில் 30 சதவீதம் மட்டுமே நிலப்பகுதி. மீதமுள்ள 70 சதவீதம் நீர்ப்பரப்புதான்.70 சதவீத பரப்பளவு நீர்இருந்தாலும் அதில் 97.5 சதவீதம் கடலில் இருக்கும் உப்பு நீர்தான். மீதியுள்ள 2.5 சதவீத அளவிற்கே நிலத்தடி நீர் உள்ளது. இந்த நீரைத்தான் உலக மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். 
இன்று 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீரை அளிக்கும் வசதியை பூமி இழந்து வருகிறது.அதற்கு மனித இனம்தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. 

1992ல் பிரேசில்நாட்டின் 'ரியோ டி ஜெனிரோ'நகரில் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த ஐக்கியநாடுகள் பேரவைக் கூட்டத் தொடர் நடந்தது. அதில், வைக்கப்பட்ட 21ம் நுாற்றாண்டின் செயல் திட்டப்படி 1993 முதல் ஒவ்வொரு ஆண்டு மார்ச் 22ம் நாள் 'உலக நீர் நாள்' எனக் கடைப்பிடிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்தநாளின் முக்கிய நோக்கம் என்னவென்றால், நீர்வளத்தின் ஒட்டு மொத்த திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி, நீர்வளப் பாதுகாப்பை வலுப்படுத்தி, நாள்தோறும் கடுமையாகி வரும் நீர் பற்றாக்குறை பிரச்னையை தீர்ப்பதாகும்.மேலும் நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும், இந்நாளின் ஒரு முக்கிய நோக்கம்.
1993ல் முதல் மார்ச் 22 உலக தண்ணீர் தினமாக அறிவிக்கப்பட்டு இன்றுவரை கொண்டாடித்தான் வருகிறோம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பலகோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வரும் நிலையும் இன்றுவரை அகலவில்லை.மக்கள் தொகை அதிகரிக்கிறது. அவர்களுக்குத் தேவையான குடிநீர் தேவையும் அதிகரிக்கிறது. தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கிடைக்கும் நீரைக் குடிக்கும் நிலைக்கு பல பகுதிகளில் உள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதன் விளைவு கடுமையான நோய்கள்.

முந்தைய காலத்தில் கோடைக்காலம் துவங்கி விட்டால், வீட்டுக்கு வெளியே பானையோ அல்லது ஒரு பாத்திரமோ வைத்து அதில் நீர் நிரப்பி வைப்பர். வழியில் செல்வோர் அந்நீரைக் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளட்டும் என்ற நல்ல நோக்கத்தோடு அவ்வாறு செய்யப்பட்டது.அதுபோன்றதொரு காட்சியை தற்போது நாம் எங்காவது பார்க்க இயலுமா? 

இப்போதும் காண முடிகிறது; வாசலில் குடங்கள் இருக்கின்றன. ஆனால், அவை நீர் நிரம்பியதாக அல்ல. நீரை நிரப்ப எப்போதாவது வரும் குழாய்நீருக்கும், குடிநீர் லாரிக்காகவும் காத்திருக்கும் குடங்கள்தான் அவை.

எனவே நிலத்தடி நீரைப்பாதுகாக்க வேண்டியதும், நீர்ஆதாரங்களை காக்க வேண்டியதும், நீர் மாசுபடாமல் இருக்க வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டியதும் மனித சமுதாயத்தின் கடமையாகிறது.

இந்த பிரபஞ்சமானது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐம்பூதங்களால் ஆனது. இந்த ஐம்பூதங்களும் இல்லையென்றால் இந்த உலகத்தில் எந்த உயிரினமும் வாழ முடியாது. ஆனால் தொழில் நுட்பயுகத்தில் வாழும் மனிதர்கள் இந்த ஐம்பூதங்களையும் மாசு
படுத்துகின்றனர். வளர்ச்சி என்ற பெயரில் இந்த உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் இயற்கையை அழித்து வருகின்றன.

எனவே ஒவ்வொரு ஆண்டும் நீர்வளப் பாதுகாப்பு குறித்த செயல் திட்டங்களை ஒருங்கிணைத்து அதனை உலக நீர்நாளில் முன்னெடுப்பதும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் திட்டமாகும். இத்
திட்டத்தின் படி 2006க்கான உலக நீர் நாள், யுனெஸ்கோவினால் 'நீரும் கலாசாரமும்' என்ற கருப்பொருளில் கடைபிடிக்கப்பட்டது. 2007ல் 'நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளல்' என்ற கருப்
பொருளில் முன்னெடுக்கப்பட்டது.
அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு கருப்பொருளைக கொண்டு இந்த நாள் கொண்டாடப்பட்டது. 2008ல் 'சுகாதாரத்திற்கான ஆண்டாகவும்', 2009ல் தண்ணீர் மற்றும் வாய்ப்புக்கள் பகிர்ந்துகொள்ளல்' ஆண்டாக வும், 2010ல் 'தரமான நீர்' என்ற கருப்பொருளை கொண்ட ஆண்டாகவும் கொண்டாடப்பட்டது. 

அதன்பின், 2011ல் நகரங்களுக்கு 'தண்ணீர் - நகர்ப்புறமாற்றங்களுக்கு பதிலளித்தல்', 2012ல் 'தண்ணீர் மற்றும் உணவு பாதுகாப்பு', 2013ல் 'நீர்நிறுவனம்', 2014ல் 'நீரும் ஆற்றலும்', 2015ல் 'நீரும் 
நிலையான மேம்பாடும்', 2016ல் 'சிறந்த நீர் சிறந்த தொழில்கள்' என்பன உள்ளிட்ட கருப்
பொருட்களில் ஆண்டுகள் கொண்டாடப்பட்டன. இந்த 2017ல் 'ஏன் நீரினை வீணாக்க வேண்டும்?' என்ற கருப்பொருள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
தற்போது உள்ள சூழ்நிலையில் தண்ணீரை சேகரிக்க, கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற 
வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

* பல் துலக்கும்போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்க வேண்டும். இதன் மூலம் ஒரு 
நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும்.
* தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்தபிறகு மறக்காமல் குழாயை அடைத்து விட 
வேண்டும்.
* வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் அதனை நாம் கண்டிப்பாக அடைக்க 
வேண்டும்.
* 'ஷவர்'ல் குளிக்கும்போது அதிக நேரம் நின்றுகொண்டு தண்ணீரை வீணடிக்க கூடாது. 'ஷவர்'ல் குளிக்கும் போது ஒரு நிமிடத்திற்கு 6 முதல் 45 லிட்டர் தண்ணீர் செலவாகிறது.
* வெயில் காலங்களில் 'ஷவர்'ல் குளிப்பதற்கு பதிலாக ஒரு வாளியில் தண்ணீரை பிடித்து வைத்துக் கொண்டு குளித்தால் நீரினை சேமிக்க முடியும்.
* வாஷிங்மெஷினில் துணிகளை துவைக்கும்போது முழு கொள்ளளவு துணிகளை பயன்படுத்த வேண்டும். குறைவான அளவுதுணிகளை மட்டுமே துவைக்கும் போது, அதிகமாக தண்ணீர் செலவாகும்.
* வீட்டில் மினரல் வாட்டர் பிளான்ட் போன்ற தண்ணீர் வடிகட்டும் கருவியை பயன்
படுத்தும்போது, வீணாக செல்லும் தண்ணீரை ஒரு வாளியில் பிடித்து அதனை துணி துவைக்கவோ அல்லது பாத்திரம் கழுவவோ பயன்படுத்தலாம்.
* தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும் போது, தொட்டி நிரம்பி தண்ணீர் வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* லாரியில் தண்ணீரைபிடிக்கும்போது போட்டிபோட்டிக் கொண்டு நீரை வீணடிக்காமல் பொறுமையாக தண்ணீர் பிடிக்கலாம்.
* புதிதாக வீடு கட்டுபவர்கள் மழைநீர் சேகரிப்பு தொட்டியை யும் சேர்த்து கட்டினால் 
நம்முடைய வருங்கால சந்ததியினர் அதிகம் பயன்பெறுவர்.இப்போது உலகில் சுமார் 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். 110 கோடி மக்கள் நீர்ப்பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். 

இப்படியே போனால் இன்னும் சில நுாற்றாண்டுகளில் உலகமே பாலைவனமாக மாறிவிடும். 
மக்கள் குடிநீருக்காக ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக்கொள்ளும் நிலைதான் ஏற்படும். 
=======================================================================================
நினைவட்டை செயலிழப்பா?
மெமரி கார்டில் உங்கள் பதிவுகளை மீட்டெடுக்க....
நாம் அனைவருமே இண்டர்னெல் மெமரி எனப்படும் நமது கருவிகளின் உள்ளடக்க சேமிப்புத் திறனை மட்டுமே கையாளுவதில்லை. 
தரவுகளின் எண்ணிக்கைகளுக்கும் அளவுகளுக்கும் ஏற்ற வண்ணம் நாம் நமது கருவிகளுக்கான நினைவு  நீட்டிப்பு வசதி முறையான எஸ்டி நினைவட்டைகளையும் (மெமரி கார்டு) பயன்படுத்திவருகிறோம். 
அப்படியான எஸ்டி கார்டை நாம் கவனமாக தேர்வு செய்ய வேண்டும். விலை குறைவான மற்றும் அங்கீகாரமில்லாத அட்டைகளை வாங்கினால் அவைகள் மிக விரைவில் பழுதாகி  நமக்கும் நம் முக்கியமான தரவுகளுக்கும் சிக்கலை விளைவிக்கலாம். 
அதுபோன்றதொரு மெமரி கார்ட் பழுது  சிக்கலில் நீங்கள் உள்ளீர்கள் என்றால் நீங்கள் என்னென்ன வழிமுறைகள் கொண்டு உங்கள் தரவுகளை மீட்கலாம் என்பதை கண்டு கொள்ளுங்கள்.
முதலில் உங்கள் கார்டில் எவ்வளவு சேமிக்கலாம்  என்பதை பாருங்கள். 
அதாவது அதன்சேமிப்பு இடம் எவ்வளவு  உள்ளது என்பதை அறிய வேண்டும். உங்கள் எஸ்டி கார்டு சாதாரண வகை அல்லது உயர் கெபாசிட்டி அடங்கியதா என்று பார்க்க வேண்டும். மெமரி அல்லோகேஷன் என்பது ஒவ்வொரு கார்டுக்கும் மாறுபட்டிருக்கும்.
உங்கள் தரவுகள் எஸ்டிஎச்சி கார்டில் இருந்தால் உங்களுக்கு ரீட் செய்வதற்கு எஸ்டிஎச்சி டிவைஸ் தேவை. சில டிவைஸ்களில் மென்பொருள் டவுன்லோட்ஸ் இருக்கும். இவற்றை பயன்படுத்தி டிவைஸை அப்கிரேட் செய்து கார்டுகளை ரீட் செய்யலாம். ஆகையால் கார்டின் உற்பத்தியாளர்கள் அளிக்கும் வெப்சைட்டுக்கு சென்று அதைப் பற்றி படியுங்கள்.
டிரைவ் லெட்டர் கணினியில் பொருத்தப்படவில்லை என்றால் கணினி ரீட் செய்யாது. சிலவற்றில் ஒரு டிரைவ் லெட்டரை ரீடர் நியமித்திருக்கும். நீங்கள் அதன் மீது கிளிக் செய்தால் உங்களுக்கு இன்சர்ட் டிஸ்க் டூ ட்ரைவ் இ (insert disk into drive E) தகவல் கிடைக்கும். அப்படியென்றால் இதனால் கார்டை ரீட் பண்ண முடியவில்லை என்று அர்த்தம்.
உங்கள் ரீடர் சில கோப்புகளை மட்டும் படித்து மற்றவற்றை விட்டுவிட்டால் ஒரு சில கோப்புகள் மட்டும்தான் பாழாகி உள்ளது என்று அர்த்தம். அதற்கு ஃபைல் ரிக்கவரி புரோகிராம்களை இணையத்தில் தேடி பிரச்சனையை முடியுங்கள்.
சில நேரத்தில் கார்டை ஸ்கேன் செய்வதால் பிரச்சனையை தீர்க்க முடியும். இது கரப்ட் ஆன கோப்பை சரி செய்ய வேண்டும் என்று இல்லை. மை கம்ப்யூட்டர் அல்லது விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் ( My computer or windows explorer) கார்டை தேடி எடுத்து அதன் மீது ரைட் க்ளிக் செய்யவும். பாப் அப் மெனுவிலிருந்து ப்ராப்பர்டீஸ் மீது கிளிக் செய்யவும். இப்பொழுது டூல்ஸ் டேபை தேர்வு செய்து எரர் செக்கிங் பட்டன் (Error checking button) மீது கிளிக் செய்யவும். செக் பாக்ஸை கிளிக் செய்து கோப்பின் தவறுகளை சரி செய்யவும்.
கோப்பின் பெயர்களை டைரக்ட்ரி பட்டியலிடும். அதன் பின்பும் சரி செய்ய முடியவில்லையென்றால் டிரைவ் லெட்டர் மீது ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்டீஸை தேர்வு செய்யவும். எல்லா காலி இடத்தையும் இது காண்பித்தால் ஒன்று ஃபைல் டெலீட் ஆகியிருக்கலாம் அல்லது டைரக்ட்ரீ நீங்கி இருக்கலாம். இந்த சமயத்தில் ஃபைல் ரிக்கவரி அல்லது அன்டெலீட் ப்ரோகிராம் ஃபன்க்ஷன் உங்களுக்கு உதவும்.
உங்கள் கார்ட் ஓகே என்று ரீட் செய்தும் ஃபைலை சேமிக்க முடியவில்லை என்றால் உங்கள் கார்ட் ரைட் ப்ரொடக்டட் (write protected) ஆக இருக்கலாம். இதற்கு கார்டின் ஓரத்தில் உள்ள லாக் செல்லவும். இந்த சுவிட்ச் நழுவி இருந்தால் இதை லாக்டு ஆர் ரைட் ப்ரொடக்டட் (locked or write protected) என்று உறுதிப் படுத்தி கொள்ளுங்கள். சுவிட்ச் (Switch)மூடப்படாத நிலையில் இருக்கும் பொழுது இதை சேவ் செய்யவும்.
=====================================================================================
ன்று,
மார்ச்-22.

  • உ லக தண்ணீர் தினம்
  • லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை முதன் முதலாக காண்பித்தனர்(1895)
  • ஆர்தர் ஷாவ்லொவ் மற்றும் சார்லஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தை பெற்றனர்(1960)
  • அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது(1945)
  • இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப்-ஐ அறிமுகம் செய்தது(1993)
  • =====================================================================================


23  ’போலி’பல்கலைக் கழகங்கள்

நா டு முழுவதும், 23 பல்கலைகள் மற்றும் 279 தொழில்நுட்பக் கல்லுாரிகள், அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு கல்வி ஆண்டு துவக்கத்துக்கும் முன், நாட்டில் உள்ள போலி பல்கலைகள் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிகள் குறித்த விபரங்களை, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழுவும், ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும் வெளியிடுகின்றன. 


அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான பட்டியலை இவை வெளியிட்டுள்ளன. நாடு முழுவதும், 23பல்கலைகளும், 279 தொழில்நுட்பக் கல்லுாரிகளும் அனுமதி பெறாமல் இயங்கி வருகின்றன. இவற்றில் படித்தால், அங்கீகாரம் பெற்ற கல்விச் சான்றிதழ் கிடைக்காது என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இந்த பட்டியலில், 66 போலி கல்லுாரிகள் மற்றும் 23 போலி பல்கலைகளுடன், டில்லி முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடத்தில், தெலுங்கானா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மஹாராஷ்டிர மாநிலங்கள்உள்ளன.


’இந்த போலி கல்லுாரி, பல்கலைகள் குறித்து, அந்தந்த மாநிலங்களுக்கு தகவல்  கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், உரிய அனுமதியை பெறும்படி, இந்த கல்வி அமைப்புகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது’ என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.

போலி கல்வி நிறுவனங்கள் குறித்த தகவலை, www.ugc.ac.in  மற்றும் www.aicte-india.org  இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என்றும், யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?