ஒரு இலைகூட ஒருவருக்கும் இல்லை
சந்தைப்படுத்தல்
உங்களது நிறுவனப் பொருட்களை சந்தைப்படுத்த திட்டம் ( மார்க்கெடிங் ப்ளானை) வகுக்க முக்கியமாக அடிப்படையான கு பத்துறிப்புகளை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
அந்த பத்து குறிப்புகளிலும் உங்களின் சந்தைப்படுத்தலில் இருக்கவேண்டியவை மூன்று முக்கியம்.
அவைகளை கொண்டே நாம் சந்தைப்படுத்தல் பற்றிய பத்து கட்டளைகளை வடிவமைக்கலாம்.
அந்த முதல் மூன்று விபரங்கள்:
1,நம் பொருட்களுக்கான சரியான தளத்தை தேர்ந்தெடுத்தல்
2, வாடிக்கையாளரை அடையாளம் காணல்
3, சரியான உள்ளடக்கத்தை உருவாக்கல் .
அதன் பின்னர் இந்த மூன்றை முன்கொண்டு பத்து கட்டளைகளை வடிவமைக்கலாம்.
1. நீங்கள் சந்தைப்படுத்தலில் இறங்கையில் கடுமையான பாதையை தேர்ந்தெடுக்காதீர். அதை முடிந்தவரை தவிருங்கள். எளிதான தெளிவான, நிலையான பாதையை தேர்வு செய்து, உங்கள் சந்தைப்படுத்தல் (மார்க்கெடிங்)களத்தை வடிவமையுங்கள்.
உங்களின் இலக்கை நிர்ணயம் செய்யுங்கள், வாடிக்கையாளரை அடையாளம் காணுங்கள், பட்ஜெட்டை தயார் செய்யுங்கள், அதற்கான செயல் உத்தியை வடிவமைத்து வேலையை துவக்குங்கள்.
2. உங்களின் சந்தைப்படுத்தல் பிரச்சாரம் சரியான சமயத்தில், முயற்சியில் தகுந்த செலவில் செய்யப்படவேண்டியது அவசியம். அதற்கு முன் சந்தை பற்றிய ஆராய்ச்சி செய்து தெளிவாகி கொள்ளுங்கள். பலமுறை ஆராய்ந்த பின் செயலில் இறங்கவேண்டும். அத்துடன் மற்றவர்களின் வெற்றி, தோல்வியை ஆராயந்து அதிலிருந்து உங்களின் முடிவை குழப்பமின்றி முடிவு செய்து கொள்ள வேண்டும் . உங்களின் மனம் கவர்ந்த பிரச்சாரங்களை ஆராயுங்கள், அது ஏன் உங்களை கவர்ந்தது, அதை எப்படி உருவாக்கினார்கள் என்று ஆராயுங்கள். அவைதான் மக்களின் மனதயும் கவரும்.இதுவே நீங்கள் உருவாக்கப்போகும் உங்கள் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல்பிரச்சாரத்துக்கு உதவியாக இருக்கும்.
3. நீங்கள் உங்கள் நிறுவனத்தின் மூலம் அடைய நினைக்கும் இலக்கு எது என்பதை முதலில் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் சந்தைப்படுத்தல் மற்றும் பிரச்சாரத்தை வடிவமைக்கவும். அதற்கு ஏற்ப தளத்தை தேர்ந்தெடுத்து செயல்படுத்துங்கள்.
4. உங்களின் சந்தைப்படுத்தல் உங்கள் நிறுவன பொருட்களை ,அடிப்படைகளை தெளிவாக மக்களுக்கு விளக்குவதாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் இணையவழியில் வாங்குபவர்களுக்கு சரியான புரிதல் உங்கள் நிறுவனத்தை,பொருட்களைப் பற்றிஉண்டாகும். அது வருங்கால வாடிக்கையாளர்களையும் உருவாக்கும்.
5. எல்லா சந்தைப்படுத்தல்களும் சில நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் உருவாக்கப்படுகிறது.
அந்த நம்பிக்கை எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். அரசு முடிவுகள்,பிற நிறுவனங்கள் மூலம் நம் முன்னர் எதிர்பாராமல் வரும் ஆபத்து மற்றும் சவால்களையும் நம் கவனத்தில் கொள்ள வேண்டும்.அவற்றை சமாளிக்க எப்போதும் தயாராக இருக்கும்படி பார்த்துக் கொள்வது மிக அவசியம்.
அந்த நம்பிக்கை எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். அரசு முடிவுகள்,பிற நிறுவனங்கள் மூலம் நம் முன்னர் எதிர்பாராமல் வரும் ஆபத்து மற்றும் சவால்களையும் நம் கவனத்தில் கொள்ள வேண்டும்.அவற்றை சமாளிக்க எப்போதும் தயாராக இருக்கும்படி பார்த்துக் கொள்வது மிக அவசியம்.
6. எல்லாரும் சரியாக இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. சில சமயம் சந்தைப்படுத்தல் சரியான புரிதலின்றி தவறு ஏற்பட்டு அது தோல்வி அடையலாம். ஆனால் அந்த தோல்வியில் இருந்து உடனடியாக மீள்வது மிக அவசியம். நன்கு ஆராய்ந்து செய்த பிரச்சாரம் வெற்றியடையவில்லை என்றாலும் மனம் தளர தேவையில்லை. உங்கள் சந்தைப்படுத்தல் இதில் தோல்வியை தழுவியது என்று அலசி ஆய்ந்து அதை சரி செய்து , மாறுதலுக்கு உட்படுத்தும் அளவிற்கு வடிவமைத்து செயல்படுங்கள்.வெற்றி கிட்டும் .
7. உங்களின் பிரச்சாரம், குறைந்த நாட்களுக்கு மட்டும் மக்களிடம் சென்றடைவது போல் அல்லாமல் நீண்ட கால விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் . இதற்காக கூடுதல் நேரத்தையும் பொருளையும் முதலீடு செய்ய தயங்காதீர். ஏனெனில் நீண்டகாலம் மக்கள் மனதில் இருக்கக்கூடிய சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள் நிறுவனத்துக்கு நல்ல வளர்ச்சியை தரும் .
7. உங்களின் பிரச்சாரம், குறைந்த நாட்களுக்கு மட்டும் மக்களிடம் சென்றடைவது போல் அல்லாமல் நீண்ட கால விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் . இதற்காக கூடுதல் நேரத்தையும் பொருளையும் முதலீடு செய்ய தயங்காதீர். ஏனெனில் நீண்டகாலம் மக்கள் மனதில் இருக்கக்கூடிய சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள் நிறுவனத்துக்கு நல்ல வளர்ச்சியை தரும் .
8. உங்கள் சந்தைப்படுத்தல் சந்தையில் எப்படி எடுத்துக்கொள்ளப்படுகிறது, மக்களிடம் வரவேற்பு உள்ளதா,அதற்கு உங்களின் போட்டியாளர் தரும் பதிலடி என்ன என்பதை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்.அதற்கேற்ப அன்றாடம் நமது சந்தைப்படுத்தல் வடிவமைப்பு இருந்து கொண்டேயிருக்க வேண்டும்.அவவ்ப்போது மக்களின் கருத்துக்களை கேட்டு,உணர்ந்து உடனடியாக தீர்வுகளை காணவேண்டும் . அப்போதே வாடிக்கையாளரின் மத்தியில் நாம் உரிய முதலிடத்தை பெறமுடியும்.
9. வருங்காலத்தை பற்றி சிந்திப்பது முக்கியம். அதே சமயம் கடந்த காலத்தில் நிகழ்ந்தை ஆராய்வது தேவையாக உள்ளது. உங்கள் யுக்திகளின் முடிவுகளை ஆராய்ந்து அதில் தேவையான மாற்றங்களை செய்து மேம்படுத்துவது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்து, விளம்பரங்களை பட்ஜெட்டுக்குள் வைப்பது நிறுவன வளர்ச்சிக்கு நல்லது. நல்ல முடிவுகளை தரப்போகும் பிரச்சாரங்களுக்கு மட்டும் செலவிடுங்கள். அதுதான் உங்கள் நிறுவனத்துக்கு மக்களிடம் நல்ல பெயரையும் பிரபலத்தையும்,மரியாதையையும் பெற்றுத்தரும்.
10. இலக்கை அடைய திட்டம் வகுத்துக்கொள்ளுங்கள். யார் யாருக்கு என்னென்ன பணிகள் என்று பிரித்து கொடுங்கள். அதை ஒருங்கிணைப்பது முக்கிய பணி.அதை தகுதியான ஒருவரிடம் ஒப்படையுங்கள். உங்கள் இலக்கை நிர்ணயித்தவுடன் உடனே செயலில் இறங்குங்கள்.தாமதமே வேண்டாம் .
நூறாண்டு வாழப்போகிறவன் போல் யோசி.ஆனால் நாளையே வாழ்வின் முடிவை காணப்போகிறவன் போல் அதை செயல்படுத்து .இது பொன்மொழி.அதை கடைபிடித்தால் வெற்றி உறுதி.
சாத்தியம் என்பது செயல்.வெறும் வார்த்தையல்ல.
-சுகுமாரன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று,
மார்ச்-23.
- உலக வானிலை தினம்
- கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது(1868)
- தமிழக அறிவியலாளர் ஜி.டி.நாயுடு பிறந்த தினம்(1893)
- இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் இறந்த தினம்(1931)
மாவீரன் பகத்சிங்
நாட்டின் விடுதலை போராட்ட வீரரும் விடுதலை இயக்கத்தில் முக்கிய புரட்சியாளருமான, பகத் சிங் பஞ்சாப் மாநிலம் லாயல்பூர் மாவட்டம் பங்கா எனும் கிராமத்தில் சர்தார் கிஷன் சிங் - வித்யாவதி தம்பதிக்கு மகனாக 1907 செப்., 28ல் பிறந்தார்.
நாட்டின் விடுதலை போராட்ட வீரரும் விடுதலை இயக்கத்தில் முக்கிய புரட்சியாளருமான, பகத் சிங் பஞ்சாப் மாநிலம் லாயல்பூர் மாவட்டம் பங்கா எனும் கிராமத்தில் சர்தார் கிஷன் சிங் - வித்யாவதி தம்பதிக்கு மகனாக 1907 செப்., 28ல் பிறந்தார்.
இளம் வயதில் ஐரோப்பிய புரட்சி இயக்கங்கள் குறித்து படிக்க துவங்கிய இவர், பொதுவுடைமை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.
பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொண்டார்.
'இந்துஸ்தான் குடியரசு அமைப்பு' என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். இளைய புரட்சி இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டார்.
அகிம்சைக்கு மாறாக, தாக்குதல் நடத்தி ஆங்கிலேயரை விரட்ட முயன்ற வீரன் பகத் சிங். முதுபெரும் தலைவர் லாலா லஜபதி ராய் இறப்புக்கு காரணமாக இருந்த காவல் அதிகாரியை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக மாவீரர் பகத் சிங் 1931 மார்ச் 23ல் துாக்கிலிடப்பட்டார்.
அகிம்சைக்கு மாறாக, தாக்குதல் நடத்தி ஆங்கிலேயரை விரட்ட முயன்ற வீரன் பகத் சிங். முதுபெரும் தலைவர் லாலா லஜபதி ராய் இறப்புக்கு காரணமாக இருந்த காவல் அதிகாரியை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக மாவீரர் பகத் சிங் 1931 மார்ச் 23ல் துாக்கிலிடப்பட்டார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு இலைகூட ஒருவருக்கும் இல்லை.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான சசிகலா மற்றும் ஓ.பன்னிர்செல்வம் தரப்புகள் விவாதம் தேர்தல் ஆணையத்தில் நடந்தது.
இரட்டைஇலை முடக்கத்துக்கு முன்னர் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையில் நடந்த இந்த விவாதத்தின் போது நடந்த முக்கிய நிகழ்வுகள்.
தேர்தல் கமிஷனில்(22-ம் தேதி) காலை இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து வாதம் நடந்தது.
தேர்தல் கமிஷனில்(22-ம் தேதி) காலை இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து வாதம் நடந்தது.
இதில் சசிகலா தரப்பில் சல்மான் குர்ஷித், அரிமா சுந்தரம் , மோகன் பராசரன் ஆகியோர் வாதாடினர். ஓ.பி.எஸ்., தரப்பில் சி.எஸ்.வைத்தியநாதன், குரு கிருஷ்ணகுமார், மனோஜ் பாண்டியன் ஆகியோர் வாதாடினர்.
ஏற்கனவே ஓ.பி.எஸ்., தரப்பில் வாதாடிய ஹாரீஸ் சால்வே சசிகலா தரப்பு கவனிப்பால் வரவில்லை.
இந்த விவாதத்தில்,இடைத்தேர்தல் நடப்பதால் அவசரமாக இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது பற்றி மட்டுமே விசாரணை நடத்துவதாகவும் பொது செயலாளர் பற்றி தனியாக விசாரிப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.
முதலில் ஓ.பி.எஸ்., தரப்பினர் விவாதத்தை துவக்கினர். இதற்கு சசிகலா தரப்பினர் பதிலளித்தனர். அதற்கு ஓ.பி.எஸ்., தரப்பினர் விளக்கமளித்தனர்.
ஓ.பி.எஸ்., தரப்பில் தற்காலிக பொது செயலாளர் பதவி என்பதே கிடையாது. மூத்த உறுப்பினர்கள், தொண்டர்கள் எங்களிடம் தான் உள்ளனர் என விளக்கமளிக்கப்பட்டது.
ஓ.பி.எஸ்., தரப்பில் மேலும், சசிஅறிவித்த வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குவது கட்சியின் சட்ட திட்டத்திற்கு புறம்பானது .
ஓ.பி.எஸ்., தரப்பில் தற்காலிக பொது செயலாளர் பதவி என்பதே கிடையாது. மூத்த உறுப்பினர்கள், தொண்டர்கள் எங்களிடம் தான் உள்ளனர் என விளக்கமளிக்கப்பட்டது.
ஓ.பி.எஸ்., தரப்பில் மேலும், சசிஅறிவித்த வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குவது கட்சியின் சட்ட திட்டத்திற்கு புறம்பானது .
இரட்டை இலை சின்னத்தை அளிப்பது, சசிகலாவை பொது செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பதற்கு சமம்.
சசிகலாவே போட்டியிட தகுதி இல்லாத போது அவர் எப்படி வேட்பாளரை அங்கீகரிக்க முடியும். சசிகலா தண்டனை பெற்ற குற்றவாளி. கட்சியின் பொது செயலாளர் தான் சின்னத்தை ஒதுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
சசிகலா தரப்பில் ஆஜரான அரிமா சுந்தரம் வாதிடுகையில்.
"1912 பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் கையெழுத்திட்ட பிரமாண பத்திரத்தை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளோம். பன்னீர் செல்வம் அணியில் 65 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். சசிகலா பொது செயலாளராக தொடர சட்டப்படி தடை விதிக்கப்படவில்லை. அதிமுகவிற்குள் எந்த பிளவும்இல்லை.
எம்.பி.,க்கள், எம்எல்.ஏ.,க்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். பெரும்பாலான செயற்குழு பொதுக் குழு ஆதரவு தருகின்றனர். சட்டப்படி சசி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏ, எம்பிக்கள் உள்ளதால், எங்களுக்கேஇரடடை இலை சின்னம் ஒதுக்க வேண்டும். உ.பி.,யில் அகிலேஷ்க்கு சைக்கிள் ஒதுக்கப்பட்டது போல், எங்களுக்கு ஒதுக்க வேண்டும்" என வாதாடினார்.
அதற்கு ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் இரட்டை இலையை ஒதுக்க கட்சி தலைவர் மதுசூதனனுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எங்களுக்கு சின்னம் கிடைக்க வேண்டும் " என்றார்.
ஓ.பி.எஸ்., ஆதரவு வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் கூறுகையில்"தற்காலிக பொது செயலாளர் சின்னத்தை ஒதுக்க முடியாது. பொது செயலாளர் தான் சின்னத்தை ஒதுக்க முடியும்.பொதுச்செயலாளர் இல்லாத நிலையில் அவைத்தலைவர் சின்னத்துக்கு கடிதம் கொடுக்கலாம்." என்றார்.
ஓ.பி.எஸ்., ஆதரவு வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் கூறுகையில்"தற்காலிக பொது செயலாளர் சின்னத்தை ஒதுக்க முடியாது. பொது செயலாளர் தான் சின்னத்தை ஒதுக்க முடியும்.பொதுச்செயலாளர் இல்லாத நிலையில் அவைத்தலைவர் சின்னத்துக்கு கடிதம் கொடுக்கலாம்." என்றார்.
சசி அணி மற்றும் பன்னீர் அணி ஆகியோரின் தரப்பு வாதங்கள் நடந்து முடிவடைந்த நிலையில் வாதங்களைவைத்து இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி ஆலோசனை செய்தார்.
இதையடுத்து நஜிம் ஜைதி (மார்ச், 22) இரவு 11 மணியளவில் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
" இரட்டை இலை யாருக்கும் இல்லை எனவும்,அச்சின்னத்தை தற்காலிகமாக முடக்கி வைப்பதாகவும் அஇஅதிமுக கட்சியின் சின்னத்தையோ, கட்சியின் பெயரையோ எங்கும்,எந்தவழியிலும் பயன்படுத்தக்கூடாது. இரட்டை இலை சின்னம் முடக்கம் என்பது இடைக்கால ஆணைதான். கடசிக்கு உரிமைகோரும் இருத்தரப்பினரும்,பொதுவாக நடந்து கொள்ளவே இப்படியான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. "என அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்தார்.
இதனால் இரட்டை இலையில் ஒரு இலைகூட ஒருவருக்கும் இல்லை என்றாகிவிட்டது.
இரட்டை இலை முடங்கினால் என்ன?இந்த "இரட்டை நாரை"சின்னமாக கேட்கலாமே?
இரட்டை இலை முடங்கினால் என்ன?இந்த "இரட்டை நாரை"சின்னமாக கேட்கலாமே?
26 ஆண்டுகளுக்கு பின் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் அதிமுக ஜானகி அணி,ஜெயலலிதா அணி என்று மோதிக்கொண்டதால் 1989-ல் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.
1989 தேர்தலில் ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டைப்புறா சின்னத்திலும் போட்டியிட்டனர். பட்டு தோல்வியை சந்தித்தனர்.
அப்போதுதான் இரட்டை இலை இல்லாவிட்டால் தாங்கள் வெல்வது அரிது என்று இரு அணிகளும் இணைந்து மீண்டும் இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொண்டனர்.
26 ஆண்டுகளுக்குப்பின்னரே வரலாறு திரும்பியுள்ளது.
ஆனால் இரட்டை இலை இனி மீண்டும் கிடைப்பது ஐயமே.கிடைத்தாலும் இலை துளிர்த்து பசுமையாக இருப்பது மிகவும் ஐயமே.தற்போதைய இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை மின்கம்பம் சின்னமும்,சசிகலா அணிக்கு தொப்பி சின்னமும் தலைமை தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதலில் சசிகலா அணிக்கு ஒதுக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை வேண்டாம் என்று ம் , தொப்பி சின்னம் தான் வேண்டும் என கோரியதால் . தேர்தல் ஆணையம் அவர்களுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கியது.
எல்லோருக்கும் இதுவரை போட்ட குல்லாவையே தேர்தலிலும் சசி தரப்பு கேட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்திலும், மதுசூதனன் இரட்டை மின்கம்பம் சின்னத்திலும் போட்டியி்ட உள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற கட்சிப் பெயரையும் சசிகலா அணிக்கு அதிமுக அம்மா என்ற கட்சி பெயரையும் தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.