யானைப் பசிக்கு சோளப்பொறி
கொரோனா வைரஸ் பாதிப்புக்கான மோதி அரசின் நிதி ஒதுக்கீடு - ஓர் அலசல் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 26ஆம் தேதியன்று மத்திய அரசு ஒரு நிதி தொகுப்பை அறிவித்தது. இது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் 21 நாட்களில் மோசமடைந்துவரும் பொருளாதார நிலைமையை மேம்படுத்த உதவும். எது எவ்வாறாயினும், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இந்த நிதி உதவிகள், தற்போதைய சூழ்நிலைக்கு எதிர்பார்த்ததை விட மிக மிகக் குறைவு என்பதுடன், போதுமானதாகவும் இல்லை. வரவிருக்கும் மாதங்களில் நிதி உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்கு நிச்சயமாக இது போதுமானதாக இருக்காது. இந்த நிதித் தொகுப்பு ஒதுக்கீடு செய்வதில் அரசு கஞ்சத்தனம் காட்டியுள்ளது. இந்த நேரத்தில் அரசாங்கத்தின் உதவி யாருக்கு தேவை என்பது முக்கியமானது. நாட்டின் அமைப்புசாரா துறையில் 90 சதவீத இந்திய மக்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு சட்டரீதியான தீர்வு எதுவும் இல்லை. அவர்களின் வாழ்வாதாரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு எந்தவொரு சட்ட பாதுகாப்பும் கிடையாது என்பதும், கோடிக்கணக்கான நகர்ப்புற மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் அமைப்புசாராத் துறையில் பண...