குழப்பும் அரசு ஆணைகள்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் இதுவரை 984 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.



ஊரடங்கால் போக்குவரத்து வசதியின்றி டெல்லியில் சிக்கித் தவித்த அண்டை மாநில மக்கள் ஆயிரக்கணக்கானோர் நடந்தே சொந்த ஊருக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், ஊரடங்கால் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக டெல்லி ஆனந்த் விஹார் பேருந்து முனையத்தில் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இதையடுத்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தத்தம் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து நடந்து வந்து ஆனந்த் விஹார் பேருந்து முனையத்தில் குவிந்துள்ளனர்.
இதனால், மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவும் என்பதால் ஊரடங்கை அறிவித்த அரசு, இப்போது ஆயிரக்கணக்கானோரை ஒரே இடத்தில் குழுமச் செய்திருப்பது அரசின் பெரும் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.
பிற அமைப்பினர்களை,சமூக நல ஆர்வலர்களை,எதிர்கட்சிகளை இணைத்து தடுப்பு நடவடிக்கைகளை ஆலோசிக்காமல் ஆள்வோர்களே  தனக்குத் தோன்றியவைகளை செயல்படுத்த மாற்றி,மாற்றிஆணைகளை வெளியிடுவதுதான் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம்.
தமிழ்நாட்டிலும் முதல்வர் பழனிச்சாமி தினந்தோறும் அறிவிப்புகள் மாற்றி,மாற்றி தொலைநோக்கின்றி வெளியிடுகிறார்.


நேற்று டெல்லி ஆனந்த் விகார் பேருந்து நிலையத்தில் கூடிய மக்கள் கூட்டம்.இப்படி கூட வைத்தது யார் தவறு.?
உணவகங்கள் திறக்கலாம் . எல்லோரும் பார்சலாகத்தான் வாங்கிவர வேண்டும்.என்றவர் வீடுகளுக்கு உணவு கோண்டுவந்து தரும் நிறுவனங்களுக்குத் தடை என்றார். அதனால் என்ன ஆகும் வெளியில் அனைவரும் வரும் நிலைதான் வரும்.பின் அந்நிறுவனங்களுக்கு மணிக்கணக்கில் உணவு வழங்க அனுமதி என்றார்.மளிகை,காய்கறி கடைகள் 24 மணிநேரம் செயல்படலாம் என்றார்.இப்போது 6 முதல் 2.30 வரை என்கிறார்.குறைவானக் கூட்டம் தற்போது அதிகமாக கூடுகிறது.
டாஸ்மாக் திறக்கப்படும் என்கிறார்.பேருந்துகளை நிறுத்தி விட்டு மாவட்டங்கள் மூடல் அவரவர் வீட்டுக்கு,ஊர்களில் முடங்குகள் என்று கோயம்பேட்டில் ஆயிரக்கணக்கில் மக்களை கூட்டி ஆலாய் பதறவைத்தார்.
இந்தக் கூட்டத்தில் ஒரே ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தாலும், நிலைமை மிக மோசமாகும் எனவும் பலர் அச்சம் தெரிவிக்கின்றனர். கொரோனா அச்சத்தை நீக்கி, மக்களைக் காப்பாற்ற இந்த அரசு என்ன செய்யப்போகிறது என்பதுதான் இப்போது எழுந்திருக்கும் மிகப்பெரிய கேள்வி.
----------------------------------+++---------------
எங்கிருந்து வந்தது?
உலகை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் எப்படி விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்பதைத் தெரிந்து கொள்ள ஹெலன் பிரிக்ஸ் விஞ்ஞானிகளிடம் சென்றார்.
சீனாவில் ஓர் இடத்தில், வானில் பறந்து கொண்டிருந்த நோய் தொற்று கொண்டிருந்த வௌவால் மேலிருந்து கீழே மலத்தைக் கழித்தது. அது ஒரு காட்டில் விழுந்தது. அங்கேயே இருக்கும் ஒரு விலங்கு, (ஒரு எறும்புத்தின்னி) இரையைத் தேடும்போது அந்த மலத்திலிருந்த வைரஸ் தொற்று அதற்குப் பரவியது. அது காட்டிலிருக்கும் பிற விலங்குகளுக்கும் பரவியது . அந்த விலங்கு ஒரு மனிதரிடம் சிக்கியது எனவே அந்த விலங்கின் மூலம் அந்த மனிதருக்கும் வந்திருக்கலாம்.
பிறகு அவரிடமிருந்து அவரின் வேலையாட்கள் என இப்படி உலகம் முழுவதும் பரவுவது தொடங்கியிருக்கலாம்.






இவ்வாறு பரவியது உண்மையா எனக் கண்டறிய அனைத்து விலங்குகளையும் பரிசோதனை செய்யத் தொடங்கியுள்ளனர், இது துப்பறியும் கதை போல் உள்ளது என்கிறார் லண்டன் விலங்கியல் பேராசிரியர் அண்ட்ரூ கன்னிங்கம் . ஆனால் விலங்குகளிடமிருந்து பரவியிருக்கலாம். குறிப்பாக வௌவால்கள் தான் இதற்கு முன்பு பரவிய கொரோனா வைரஸின் காரணமாக அமைந்தது என்கிறார்.
சீன விஞ்ஞானிகள் ஒரு நோயாளியிடமிருந்து இந்த வைரஸை கண்டறியும்போது வௌவால்களையும் சோதனை செய்தனர்.
பாலூட்டிகள் பெரும்பாலும் கூட்டமாக வாழும் இயல்புடையவை. பல மைல் தூரங்கள் பறப்பவை. அவை பொதுவாக நோய்க்கு ஆளாகக்கூடியவை இல்லை. ஆனால் வைரஸ்களை பரப்ப அதிகம் வாய்ப்புகள் கொண்டவை.
லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் கேட்ஸ் ஜான் கூறுகையில், வௌவால்கள் வைரஸ்களுடன் போராடும் திறன் கொண்டவை. அவை வைரஸால் தாக்கப்பட்டால் தங்களை தாங்களே சரி செய்து கொள்ளும் டிஎன்ஏ கொண்டுள்ளன. இதனால் நோய்களுக்கு உள்ளாவதற்கான முன் அது மீண்டிருக்கலாம். இது இப்போதைக்கு நிலவும் ஒரு கருத்து மட்டுமே என்றார் .
வௌவால்கள் ஒருமுறை வைரஸால் தாக்கப்பட்டால் அது தங்களுக்குள் அந்த வைரஸை வளர்த்துக் கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
வௌவால்கள் பாலூட்டிகள் என்பதால் அவை மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குகளின் மூலமாகவோ பரப்பி இருக்கலாம் என்கிறார் நாட்டிங்கம் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோனாதன் பால்.
இந்த புதிரில் அடுத்து சந்தேகப்படும் விலங்கு எறும்புத்தின்னி. உலகம் முழுவதும் மிகச் சுலபமாக மக்கள் இருக்கும் இடங்களுக்கு வரக்கூடிய விலங்கு. அது மட்டுமல்லாமல் இது அழியக்கூடிய நிலையில் உள்ளது . ஆசியாவில் எறும்புத் திண்ணிக்கு கடும் தேவை இருக்கிறது. சீனாவின் பாரம்பரிய மருந்து ஒன்றைத் தயாரிக்க இவை தேவைப்படுகின்றன. மேலும் இதன் இறைச்சியைச் சீனாவில் பலரும் உண்பர்.



Image captionஎறும்புத்திண்ணி

எறும்புத்தின்னிகளில் கொரோனா வைரஸ் போன்ற வைரஸ்கள் இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்த விஷயத்தில் முடிவுக்கு வருவதற்கு முன்னர் விஞ்ஞானிகள் மிகவும் கவனமாக இருக்கின்றனர், ஏனென்றால் எறும்புத்தின்னி ஆராய்ச்சிகள் இன்னும் வெளிவரவில்லை. அதனால் இதைச் சரிபார்க்க முடியவில்லை.
பேராசிரியர் கன்னிங்கம் கூறுகையில், எந்த சூழல் மற்றும் எத்தனை எறும்புத்தின்னிகள் இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது முக்கியம் என்கிறார்.
''பல எறும்புத்தின்னிகள் ஆராயப்பட்டிருந்தால் ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் பரிசோதனைக்கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒன்றை ஆராய்ந்தால் அது ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று தெரிவித்தார் கன்னிங்கம் .
''எறும்புத்தின்னிகள் மற்றும் பிற விலங்குகள் இதில் வௌவால்களும் அடங்கும் , இறைச்சி சந்தையில் வைக்கப்படும். இது ஒரு விலங்கிலிருந்து மற்றொரு விலங்குக்கு வைரஸ் பரவுவதற்குக் காரணமாக அமையும். மேலும் இங்கேயே விலங்கிலிருந்து மனிதர்களுக்குக் கூட வரவும் வாய்ப்புள்ளது,'' என கன்னிங்கம் கூறுகிறார்.
''எறும்புத்தின்னிகள் மற்றும் வௌவால்கள் உட்படப் பிற விலங்குகள் இறைச்சி சந்தையில் வைக்கப்படும். இது ஒரு விலங்கிலிருந்து மற்றொரு விலங்குக்கு வைரஸ் பரவுவதற்குக் காரணமாக அமையும். மேலும் இங்கேயே விலங்கிலிருந்து மனிதர்களுக்குக் கூட வரவும் வாய்ப்புள்ளது,'' என கன்னிங்கம் கூறுகிறார்.
சீனாவின் வூஹானில் கொரோனாத்தொற்று பரவத் தொடங்கி ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சந்தையில் வன விலங்குகளின் மாமிசமும் விற்கப்பட்டன. இதில் உயிருடனும் துண்டுகளாகவும் விற்கப்பட்டன. ஒட்டகங்கள், கோலாக்கள் மற்றும் பறவைகள் ஆகியவை இருந்தன.
கார்டியனில் வெளிவந்த செய்தியில், அந்த சந்தையில், ஓநாய் குட்டிகள், வண்டுகள், தேள்கள் , எலிகள், அணில்கள், நரிகள், புனுகுப்பூனைகள், முள்ளம்பன்றிகள், பல்லிகள், முதலைகள் மற்றும் ஆமைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
வௌவால்கள் மற்றும் எறும்புத்தின்னிகள் அதில் இல்லை என்றாலும் சீன உளவுத்துறை இதை விசாரித்து வருகிறது. இதில் என்னென்ன விலங்குகள் இருந்தன என்பதை தெரிந்து கொள்வது முக்கியம். அப்போதுதான் வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்கிறார் பேராசிரியர் பால்.
இப்போது உள்ள நிலையில் நாம் எதிர்கொள்ளும் பல வைரஸ்கள் வன விலங்குகள் மூலமாகப் பரவுவதுதான். எபோலா , ஹெச் ஐ வி , சார்ஸ் தற்போது கொரோனா வைரஸ். மனிதர்கள் அதை கண்டறிவதால், வனவிலங்குகளுடன் அதிகம் நெருக்கமாவதால் , காட்டை மாற்றியமைப்பதால் , இது போன்ற வைரஸ்கள் வருகின்றன என்கிறார் பேராசிரியர் பால்.
நிலப்பரப்பை மாற்றியமைப்பதன் மூலம் மனிதர்கள் சந்திக்காத பல வைரஸ்களை இப்போது நாம் சந்திக்கிறோம் என்கிறார் அவர்.






இது எப்படி நடந்தது என்று தெரிந்து கொண்டால், விலங்குகளைத் தாக்காமல் நம்மால் இதைத் தடுக்க முடியும் என்கிறார் பேராசிரியர் கன்னிங்கம்.
"'வெளவால்கள் சுற்றுச்சூழல் சுழற்சிக்கு முக்கியம். வண்டுகளால் பூச்சிகளால் பரவக்கூடிய பல நோய்களைத் தடுக்கிறது. மேலும் சில மரத்தின் விதைகள் பரவ உதவி செய்கிறது என்கிறார்கள்" என்கிறார் அவர்.
2002-2003ல் சார்ஸ் பரவியபோது சீனா மற்றும் சில நாடுகளில் வன விலங்கு சந்தைகள் தடை செய்யப்பட்டன. ஆனால் விரைவிலேயே சீனா, வியட்நாம் மற்றும் சில தெற்காசிய நாடுகளில் அது மீண்டும் திறக்கப்பட்டது.
சீனா தற்போது மீண்டும் வன விலங்கு சந்தைகளை மூடி விட்டது. ஆனால் இது நிரந்தரமாக இருக்கும் என சில அறிக்கைகள் தெரிவித்துள்ளது.
இதற்கான காரணம் என்னவென்று தெரிந்தாலும் இப்போது இதைத் தடுக்க முடியாது. ஆனால் இது போன்ற இன்னொரு சம்பவத்தைத் தடுக்க முடியும் என்கிறார் பேராசிரியர் டயானா பெல்.
---------------------------------------------------------
இன்றைய உலக  நிலை.
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக சீனா இருக்கிறது. இரண்டாவதாக ஐரோப்பாவின் இத்தாலியில் நாளுக்கு நாள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,215-ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அங்கு 80,589-ஆக அதிகரித்துள்ளது.
”பொறுப்பற்ற மக்கள்” - மக்களை சாடும் ஸ்பெயின் :
அதனையடுத்து, கொரோனா வைரஸ் தாக்கம், ஸ்பெயினில் தொடர்ந்து தீவிரமாக இருந்து வருகிறது. அங்கு செவ்வாய்க்கிழமை மட்டும் ஒரே நாளில் 493 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,858-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,056-ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பாவில் இத்தாலிக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் விளங்குகிறது.




“மக்களை சாடும் ஸ்பெயின்; வென்ட்டிலேட்டர் இல்லாமல் அவதிப்படும் நியூயார்க்” - கொரோனா பாதிப்பின் நிலை என்ன?
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு விதித்த சில கட்டுப்பாடுகளை மீறியதற்காக ஸ்பெயின் மக்களை அந்நாட்டு காவல்துறையினர் ”பொறுப்பற்ற மக்கள்” என விமர்சித்துள்ளனர். அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பலர், மருத்துவர்களின் அனுமதி இன்றி அவர்களே வீட்டிற்குச் சென்றதாக அந்நாட்டு காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.
வென்ட்டிலேட்டர் பற்றாக்குறையில் தவிக்கும் நியூயார்க்!
அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. அமெரிக்காவில் 85,755க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 25,000 பேர் நியூயார்க்கைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் கொரோனா பலி 1,304 ஆக அதிகரித்துள்ளது.
நியூயார்க்கில் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது. புல்லட் ரயில்களை விட கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதாக நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரு தெரிவித்தார். 30,000 சுவாச கருவிகள் (வென்ட்டிலேட்டர்) தேவைப்படும் இடத்தில் வெறும் 7000 சுவாசக் கருவிகள் மட்டுமே உள்ளன என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
சுவாசக்கருவிகள் அதிகம் தேவையென்ற நிலையில் இந்திய அரசு அதிகம் இருப்பு வைக்காமல் பொறுப்பின்றி ஏற்றுமதி செய்துள்ளதை மதுரை மக்களவை மார்க்சிஸட் உறுப்பினர் வெங்கடேசன் கண்டித்துள்ளார்.




“மக்களை சாடும் ஸ்பெயின்; வென்ட்டிலேட்டர் இல்லாமல் அவதிப்படும் நியூயார்க்” - கொரோனா பாதிப்பின் நிலை என்ன?
மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 2,378 பேர் உயிரிழந்துள்ளனர்; 32,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி போலி செய்திகளையும் வதந்திகளையும் நம்பி ஈரானில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய ஆட்சியாளர்களும்,கொரோனாவும்.
அந்தவகையில் கொரோனாவால் பிரிட்டனின் இதுவரை 578 பேர் உயிரிழந்துள்ளனர். 11,816 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டன் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் நடீன் டோரீஸ் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
அதனையடுத்து இளவரசர் சார்ள்ஸுக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் முக்கிய ஆட்சியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது நாட்டு மக்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.




“மக்களை சாடும் ஸ்பெயின்; வென்ட்டிலேட்டர் இல்லாமல் அவதிப்படும் நியூயார்க்” - கொரோனா பாதிப்பின் நிலை என்ன?
இந்நிலையில், கொரோனா பாதிப்பில் இரண்டாம் கட்டத்தில் உள்ள இந்தியாவில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 860-ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான்?
பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,252 ஆக உள்ளது. இந்தியாவைக் காட்டிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள பாகிஸ்தான் அரசு, இன்னும் அந்நாட்டில் முழு அடைப்பை அறிவிக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானின் சில மாகாணங்கள் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மற்ற நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் ஊடரங்கை கடைபிடித்து வருகின்றன. மக்களிடையே சமூக விலகல் குறித்து கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?