ஞாயிறு, 31 டிசம்பர், 2017

போர் துவங்கியதும் விளங்கி விடும்,

இன்றைய பரபர செய்தி அரை நூற்றாண்டாக அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டே இருந்த ரஜினி மீண்டும் தனது அரசியல் வாயை திறந்துள்ளார்.

அவர் அரசியலுக்கு வருவதை பார்ப்பது நமக்கு காலத்தின் கட்டாயம் என்று வேறு அறிவித்து விட்டார்.

 வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன். காலம் குறைவாக உள்ளதால் அதற்கு முன் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை. லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து அப்போது முடிவு செய்யலாம். என்றும் மேலும் 
கதைத்துள்ளார்.

தான் அரசியலுக்கு வருவதும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாலும் இனி" நான் உட்பட யாரும் அரசியல் பற்றி பேசக்  கூடாது. யாரையும் விமர்சனம் செய்ய வேண்டாம். 

அரசியல் அறிக்கை விடவும், மக்களுக்காக போராட்டம் பண்ணவும் நிறைய பேர் உள்ளனர்."என்று சொன்னதுதான் ரஜினி அரசியல் செய்யப்போகிறாரா?அரசியல் பேசாமல் மக்களுக்காக போராடாமல் இவர் தேர்தலில் வென்று முதல்வராவது எப்படி?எதற்காக?என்பது புரியவில்லை.

இப்படி செய்யாமல் தினகரனின்  ஹவாலா முறையில் வென்று ஆட்சியைப்பிடிக்கப் போகிறாரா?அரசியலுக்கு வரும் முன்பே குழப்புவதை பார்த்தால் ரசிகர் (மூத்த குடிமக்) களை அரசியல் பேசாதே என்பதை பார்த்தால் அரசியலில் ரஜினி குதிக்கப் பயப்படுகிறார் என்பவர்கள் வாயை அடைக்க மட்டுமே இந்த அறிவிப்பு என்று எண்ணம் வருகிறது.

காவிரி பிரச்னைக்கு ஒரு கோடி ,பள்ளிக் கட்டிட வாடகை 3கோடி,மாநகராட்சி க்கு 3500க்குமேல் வாடகை போன்றவைகளை கொடுக்க முடியாமல்  வறுமையில் வாடும் ரஜினிக்கு இன்றைய தேர்தல் முறையில் அரசியலில் செலவழிக்க பணம் இருக்குமா?
அதனால் வரும் சட்டமன்றத்தேர்தல் போரில் கலந்து கொள்வது ஐயமே.

அடுத்து "அரசியல் மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது. சிஸ்டத்தை மாற்ற வேண்டும். உண்மையான, வெளிப்படையான, நேர்மையான, ஆன்மீக அரசியல் கொண்டு வர வேண்டும் என்பதே எனது நோக்கம்." 
என்கிறார் அரசியல் ஞானிஆகிக்கொண்டிருக்கும் நடிகர்  ரஜினி காந்த் .

தேசிய அரசியல்,திராவிட அரசியல்,தமிழ்த் தேசிய அரசியல் என்று வரிசைகட்டி நிற்கும் தமிழக அரசியல் நிலவரத்தில் ரஜினி  புதிதாக ஆன்மிக அரசியலை கொண்டுவர முனைகிறார்.
அது எந்த அளவுக்கு இருக்கும்,மக்கள் ஆதரவை பெற எந்த அளவு உதவும்.?

தமிழகத்தில் ஏற்கனவே ஆன்மிக அரசியல் இருக்கிறது.
இந்து ஆன்மிகத்துக்கு பாஜக,இந்து முன்னணி கள்,முஸ்லீம் ஆன்மிகத்துக்கு பல் லீக்குகள்,கிறிஸ்த முன்னேற்ற முன்னணி உடன்பட பல கிறிஸ்த ஆன்மிக அரசியல் அமைப்புகள் இருக்கத்தான் செய்கிறது.
இதில் ரஜினி ஆன்மிகம் எந்தவகை?அதை மக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் அளவு செய்யமுடியுமா?
இவை எல்லாம் கவைக்குதவா பேச்சு .
இன்றைய நிலையில் ரஜினி சொல்லும் ஆன்மிக அரசியல் பாஜகவை நோக்கிய ஆன்மிக வழிதான்.
ஆந்திராவில் நடிகர் சிரஞ்சிவி ஆரம்பித்த பிரஜா சக்தி கட்சி தேர்தலில் வென்ற பின்னர் காங்கிரசில் இணைந்தது போல் தான் அவரது ஆத்ம நண்பர் ரஜினி ஆன்மிக அரசியல் வழியும் தட்டப்படுகிறது.
கைக்காசை செலவழிக்க ரஜினிக்கும் விருப்பம் இல்லை .அவரது மனைவி,குடும்பமோ அதைவிட சிக்கனம் என்பதைத்தான் பள்ளிக்கட்டிட வாடகை,மாநகராட்சி கடை வாடகை எல்லாம் எடுத்துக் கூறும் வரலாறு.

இப்படிப்பட்டவர்கள் திமுகவையே திணறடிக்கும் தினகரன்,அதிமுக கட்சிகள் பண அரசியலுடன் போட்டியிட்டு மீள முடியுமா? 
கைக்காசை செலவழிக்க மிக,மிக யோசிக்கும் இதுவரை சம்பாதித்த தமிழக சினிமா வருமானத்தில் பெங்களூரில் சொத்துக்களை வாங்கி குவித்திருக்கும்,கர்நாடகாவில் தொழிற்சாலைகள் நடத்தும் சிக்கன ரஜின க்கு இன்றைய வாக்குக்கு காசுவாங்குவதை தடுத்த திமுகவையும்,காவல்துறையையும் எதிர்த்து சாலை மறியல்,காவல்நிலைய முற்றுகை நடத்தும் அளவுக்கு உள்ள தமிழக அரசியல் எந்த அளவுக்கு ஒத்துப் போகும்?
இதற்கான விடை எல்லாம் போர் துவங்கியதும் விளங்கி விடும்.
=========================================================================================
ன்று,
டிசம்பர்-31.

 • பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவிற்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது(1599)
 • விக்டோரியா மகாராணி, கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்(1857)
 • வெள்ளொளிர்வு விளக்கு முதல் முறையாக தாமல் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது(1879)
 • மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது(1909)
==========================================================================================
   இறுதியாக அந்நாள் வந்துவிட்டது...!?!

சனி, 30 டிசம்பர், 2017

டாக்சி தொழில் நுழையும் கார்பரேட்கள்.!

சென்னை, தில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் மக்களின் நலன் கருதி பஸ், மின்சார இரயில், மெட்ரோ என அரசாங்கத்தால் சேவை வழங்கப்பட்டு வருகிறது. 
இப்படிப்பட்ட சேவை வழங்கினாலும் இந்த பெரு நகரங்களில் நாம் நினைத்த இடத்திற்கு நாம் நினைத்த நேரத்தில் செல்ல ஆட்டோ, டாக்ஸி போன்ற சேவையை நாம் பயன்படுத்துவது உண்டு. 

இன்றைக்கு ஆட்டோவை காட்டிலும் டாக்ஸியின் பயன்பாடு என்பது பல மடங்கு உயர்ந்துள்ளது. 
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 2016ல் டாக்ஸியின் சேவை இந்தியாவில் 60 சதவிகிதமாக இருந்தது. இந்த வளர்ச்சி என்பது கடந்த மூன்று வருடத்தில் ஏற்பட்டது தான்.
 இந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன? 
டாக்ஸி சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தை மதிப்பில் ஏற்றத்துடன் இருப்பதை கண்டு பல நாடுகளில் ஆச்சரியப்படுகின்றனர். 
இதற்கான விடையை நாம் தேடுவதற்கு முன்பு டாக்ஸி என்ற சேவை பற்றிய வரலாற்றை பார்ப்போம்.

டாக்ஸி அல்லது கேப் என்று நாம் இன்று பயன்படுத்தும் சொல்லிற்கான அர்த்தம் 18ஆம் நூற்றாண்டுகளில் காப்ரியோலெட் ( CABRIOLET) எனப்படும் இரண்டு சக்கரங்களுடன் கூடிய குதிரை வண்டி பயன்பாட்டில் இருந்தது.
 அன்றைய காலக் கட்டத்தில் இந்த குதிரை வண்டியை மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு செல்ல பயன்படுத்தி வந்தனர். அப்படி பயன்படுத்துவதற்கு சேவை கட்டணமாக அந்த வண்டியை இயக்குபவர் குறிப்பிட்ட தொகையை வசூலிப்பார்.
 நாளடைவில் சேவை கட்டணத்தை மிக அதிகமாக வசூல் செய்வதாக குற்றச்சாட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 1891ல் ஜெர்மனைச் சேர்ந்த ப்ரீட்ரிச் வில்ஹெல்ம் குஸ்டாவ் ப்ரூன் என்பவர், முதல் டாக்ஸி மீட்டர் எனப்படும் கருவியை கண்டுபிடித்தார். 
இந்த கருவி மூலம் எவ்வளவு கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளோம் என்பதை கணித்து அதன் அடிப்படையில் சேவை கட்டணத்தை பெறுவார்கள். 
இந்த பெயரே நாளடைவில் கேப் டாக்ஸி, டாக்ஸி, கேப் என பல வகையில் மாறியது. அதன் பிறகு இந்த டாக்ஸி மீட்டர் நவீன தொழில் நுட்பத்துடன் கார்களில் பொருத்தப்பட்டு டாக்ஸி, கேப் என சேவைகளை வழங்கத் தொடங்கியது.

இந்தியாவில் டாக்ஸி என்ற சேவை ஆரம்பத்தில் விமான நிலையங்களில் தொடங்கியது. காரணம் வெளி நாடுகளில் இந்த சேவை என்பது நமது ஊர் ஆட்டோவை போல அனைவராலும் பயன்படுத்தும் வாகனமாக இருந்தது. 


வெளிநாட்டு இந்தியர்கள் மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட இந்த சேவை உள்நாட்டு மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. 

டாக்சிகளின் எண்ணிக்கை அதிகமான நிலையில் பெரு நகரங்களில் அவைகளை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கங்கள் செய்யாத நிலையில் எப்போதும் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தும் நிலை உள்ளது. இந்த நிலையில் தான் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தி உள்ளன. 

வாகனத்தில் பயணம் செய்பவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே வாகனத்தைவரவழைக்க நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இன்றைக்கு தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவானதோடு பெரும் தொழில் நிறுவனங்களாகவும் வளர்ச்சி பெற்றன.
ஓலா, உபேர் நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அந்த நிறுவனங்கள் பயன்படுத்திய வியாபார யுக்தி தான். ஜப்பானின் சாப்ட் பேங்க், டிஎஸ்டி குளோபல், டைகர் குளோபல் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட பல சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஓலா, உபேர் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளன. 

கூடவே எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளுடன் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு கார் வாங்க கடன் உதவி உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்து தங்கள் நிறுவனத்தில் டாக்ஸி ஓட்டுநர்களை இணைப்பதற்காக பல்வேறு சலுகைகளை அறிவித்தது. அதன் மூலம் இந்த நிறுவனத்தில் பல்லாயிரம் பேர் இணைந்தனர்.

சமீபத்தில் தில்லி அரசாங்கம் ஒரு அறிவிப்பை அறிவித்தது. தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் தனியார் நிறுவனங்கள் டாக்ஸி சேவையை அளிக்க டெண்டர் கோரப்பட்டது. 

இந்த டெண்டரில் பங்கு கொள்பவர் குறைந்தது 66 கார்கள் வைத்திருக்க வேண்டும் எனநிபந்தனை விதித்தது. ஓலா, உபேர் போன்ற பெரு நிறுவனங்களுக்கு சலுகை காட்டவே அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதைப் போல ஆந்திரா சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு துறைக்கும், ஓலா நிறுவனத்திற்கும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் 2022க்குள் 25,000 பேருக்கு வேலை வாய்ப்பினை ஓலா டாக்ஸி நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் உருவாக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த திட்டத்தை கடந்த சில மாதத்திற்கு முன்பாக மாநில முதல் அமைச்சர் சந்திர பாபு நாயுடு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.இந்தியாவில் தில்லிக்கு அடுத்தபடியான முக்கிய வர்த்தக நகரமான மும்பையில் ஓலா நிறுவனம் பேருந்து சேவை தொடங்க போவதாக அறிவித்தது. 

இந்த அறிவிப்பை அடுத்து ஓலா நிறுவனம் எப்படி பேருந்து சேவையை தொடங்க முடியும் என்று விளக்கம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறது மும்பை போக்குவரத்துக் கழக நிர்வாகம். குறிப்பிட்ட பாதைகளில் பயணிகளுக்கு சேவையை வழங்க அரசுக்கு மட்டும் தான் சட்டப்படி அனுமதி உள்ளது. ஆனால் சட்டத்தை மீறி ஓலா நிறுவனம் செயல்படுகிறது. 

தற்போது மத்திய அரசாங்கம் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் மூலம் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க ஏற்பாடு செய்து வருகிறது. 
நமது நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் நிலையில் படித்து வேலை கிடைக்காத, படிக்க வசதியில்லாத இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிலாக சாலைப் போக்குவரத்து தொழில் உள்ளது. 
அதையும் பன்னாட்டு நிறுவனங்கள் வசம் ஒப்படைத்து வாழ்வாதாரத்தை பறிக்க நினைக்கிறது மத்திய அரசு.

பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் போராட்டம் நடைபெற்றது. இதற்கான காரணம் உபேர் டாக்ஸி நிறுவனத்தின் செயல்பாடே. தற்போது இந்தியாவில் எப்படி இந்த நிறுவனங்கள் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு உரிய பணத்தை தராமல், பல்வேறு காரணங்களை சொல்லி கிலோ மீட்டர் கட்டணத்தை குறைத்து வியாபாரம் நடத்தி வருவது போல் செயல்பட்டதால் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர். 

இதை அடுத்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் உபேர் நிறுவனத்திற்கு தடை விதித்தார். இதை போல பல நாடுகளில் உபேர் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகின்றது. இப்போது இந்தியாவில் ஒவ்வொரு பகுதிகளிலும் ஓலா, உபேர் நிறுவனங்களுக்கான எதிர்ப்பு குரல் வலுத்து வருகிறது. 
சென்னை நகரம் இதில் முன்னிலையில் இருக்கின்றது. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்நிறுவனங்களுக்கு எதிராக 30,000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். 
அதன் தொடர்ச்சியாக ஜனவரி 3ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. 

மத்திய, மாநில அரசுகள் உரிய காலத்தில் தலையிடாவிட்டால் நாடு தழுவிய அளவில் மிக பெரிய போராட்டமாக மாறும் என்பதற்கு மற்ற நாடுகளில் நடந்ததே முன் உதாரணம்.
                                                                                                                                                     -பாரதி
நன்றி:தீக்கதிர்,

===================================================================================================================================

கந்து வட்டி வங்கிகள்,
இதுவரை இந்திய மாநில வங்கி( எஸ்.பி.ஐ.), வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களில் குறைந்த அளவு இருப்பு இல்லாதவர்களிடமிருந்து,  அபராதமாக மொத்தம் ரூ.1,771 கோடிகளை  வசூல் செய்துள்ளது.
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.5,000 வைத்திருக்க வேண்டும் என்றும் அவ்வாறு வைத்திருக்க தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. 
இதன்படி பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்ச தொகையாக ரூ.5000-மும், 
நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.3000-மும், 
புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் ரூ.2000-மும், 
கிராமப்புறங்களில் இருப்பவர்கள் ரூ.1000-மும் வைத்திருக்க வேண்டும். 
இந்நடைமுறையை கடந்த  ஏப்ரல் 1 (முட்டாள்கள் தினம் )முதல் கொண்டுவந்தது .
அதன்படி  இருப்புப் பணம் வைத்திராத  பொதுமக்களின் வங்கி கணக்குகளில் இருந்து அபராதம் என்ற பெயரில் இதுவரை 1,771.77 கோடி ரூபாயை எஸ்.பி.ஐ., தன்னிசையாக எடுத்திருப்பதாக நிதித்துறை மக்களவையில் அறிவித்துள்ளது.
3000 கூட  இருப்பில் வைக்க இயலாதவர்களிடமிருந்து பணத்தை கறாராக கந்து வட்டிக்காரன் போல்  வசூலிக்கும் இந்த  வங்கிகள்தான்  30000கோடிகள் கடன் விஜய் மல்லையாவிடம் மண்டியிட்டு நிற்கின்றன.
=======================================================================================
ன்று,
டிசம்பர்-30.
விக்ரம் சாராபாய்


 • சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது(1922)

 • சுபாஷ் சந்திர போஸ், அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலை கொடியை ஏற்றினார்(1943)

 • உலகின் முதல் வண்ண தொலைக்காட்சி பெட்டி விற்பனைக்கு விடப்பட்டது(1953)

 • 'இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை' என அழைக்கப்படும், விக்ரம் சாராபாய்,காலமானார் (1971)
========================================================================================
                                                சாமிகளிலும் அம்பானிகள் உண்டு.
                                

வெள்ளி, 29 டிசம்பர், 2017

கூகுளின் மை ஆக்டிவிட்டி(My activity)

 பிரபலமான தேடல் தளமாக கூகுளை பற்றி சில உண்மைகளைப் பார்ப்போம்.
நீங்கள் கூகுள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, அதை நம்பி உங்களைப் பற்றிய பல செய்திகளை  அளிக்கிறீர்கள்''
தமது பயனர்களுக்கான அந்தரங்க உரிமை விதிமுறைகள் மற்றும் நிபந்தனையின் முதல் வரியில் கூகுள் தெளிவாகக் கூறியுள்ளது.
ஆனால், ''மை ஆக்டிவிட்டி (My activity)'' செயல்பாட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை விரும்பினால் நீங்கள் அகற்றிக்கொள்ளக் கூடிய  வசதியை  கூகுள் வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
பலர் அறியாமல் உள்ளனர் .
எளிமையான வழிமுறைகளில் எப்படி இதைச் செய்வது என்பதை விளக்குகிறோம்.
மை ஆக்டிவிட்டியை அழிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

ஒவ்வொரு முறை நீங்கள் கூகுளில் தேடும்போதும், அந்தத் தேடலை கூகுள் உங்களது கணக்குடன் தொடர்புபடுத்தி வைக்கிறது.
மின்னஞ்சல் (ஜி மெயில்) உள்பெட்டியில் தேடுவது, இணையத்தில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்வது என நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் இது பதிவிட்டுக்கொள்ளும்.
இத்தகவல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு ''மை ஆக்டிவிட்டி (My activity)'' எனும் தளத்தில் சேமிக்கப்பட்டு இருக்கும். நீங்கள் இங்குதான் முதலில் செல்ல வேண்டும்.
குறிப்பிட்ட பக்கங்களையே, குறிப்பிட்ட ஒரு நடவடிக்கையையோ அழிக்க வேண்டும் என்றால், தேடல் செயல்பாட்டைப் பயன்படுத்தி குறிப்பிட்ட பக்கத்தைத் தேடி அழிக்கலாம். அல்லது கொடுக்கப்பட்ட தேதி வரம்புவரை, தேர்வு செய்யப்பட்ட அல்லது அனைத்துப் பக்கங்களையும் அழிக்கலாம்.
இப்படி அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்த எச்சரிக்கை கூகுளிடம் இருந்து வரும். ஆனால் உண்மையில், உங்கள் தேடல் வரலாறை அழிப்பது, உங்கள் கூகுள் கணக்கில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
யூடியூபில் நீங்கள் எதை பார்க்கிறீர்கள் என்பதையும், எதை தேடுகிறீகள் என்பதையும் கூகுள் பின்தொடர்கிறது.
உங்கள் பார்வையில் உள்ள விருப்பங்களை அறிந்தே முதல் பக்கத்தில் அது தொடர்பான காணொளிகளை வரிசைப்படுத்தி காண்பிக்கிறது.
ஆனால், இதையும் எளிதாக அழித்துவிடலாம். இடது பக்கம் மெனுவில் உள்ள ஹிஸ்டரியை க்ளிக் செய்து, ''அனைத்து தேடுதல் வரலாறு'' மற்றும் '' அனைத்து பார்வை வரலாறு'' என இரண்டையும் க்ளிக் செய்யவும். 
இப்படி தேர்வு செய்தபின் உங்கள் விருப்பங்களை பதிவு செய்யாமல் அழிக்கலாம்.
கூகுள் உங்களைப் பற்றி தெரிந்துகொள்வதுடன், அதன் வாடிக்கை விளம்பரதாரர்களுக்கும் உங்களை பற்றிய தகவல்களைக் கொடுக்கிறது.
அதனால்தான் உங்கள் தேடல் விருப்பம் தொடர்பான  சில விளம்பரங்களை நீங்கள் அடிக்கடி காண்கிறீர்கள்.
ஆனால் நீங்கள் விரும்பினால் விளம்பரதாரர்களுக்கு உங்களைப்பற்றி என்ன தகவல்களை கூகுள்  அனுப்பியுள்ளது என்பதை நீங்கள் கண்டறியலாம்.
இதை பார்ப்பதற்கு கூகுள் கணக்குக்குள் லாகின் செய்து, தனிப்பட்ட தகவல் & அந்தரங்க உரிமை (Personal info & privacy) பக்கத்திற்குச் செல்லவும்.
பிறகு ஆட்ஸ் செட்டிங் (Ads Settings) ஆப்ஷனுக்கு சென்று, மேனேஜ் ஆட்ஸ் செட்டிங் (Manage ads settings) ஆப்ஷனை க்ளிக் செய்யவும். 
இதை நீங்கள் செயலிழக்க செய்வதன் மூலம், உங்களைப் பற்றி கூகுள் வைத்துள்ள தகவல்கள் தொடர்பாக விளம்பரங்கள் வராது. 
ஆனால் விளம்பரமே வராமல் செய்வதற்கான வாய்ப்பு இல்லை.காரணம் அது போன்ற விளம்பரங்கள் வருமானத்தில்தான் உங்களுக்கு இலவசமாக தேடல் வசதியை கூகுள் வழங்குகிறது.
நீங்கள் ஆண்ட்ராய்ட் சாதனம் வைத்திருந்தால், உங்கள் தொலைபேசியுடன் நீங்கள் சென்ற இடங்களின் பட்டியலை கூகுள் வைத்திருக்கும்.
கூகுள் மேப்ஸ் பக்கத்தில் இருந்து இத்தகவல்கள் அனைத்தையும் அழிக்கவேண்டுமானால் நீங்கள் இந்தப் பக்கத்துக்குச் செல்லவேண்டும்.
லோகேஷன் டிராக்கிங்கை ஆப் செய்யவும், முழு வரலாற்றையும் அழிக்கவும்.
குறிப்பிட்ட நாளுக்கான அல்லது நேரத்துக்கான வரலாற்றை அழிக்கவும் முடியும். 
கழிவுக்கூடை  வாய்ப்பை  கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் மேற்கொண்ட  ஒரு குறிப்பிட்ட பயணத்துக்கான பதிவை மட்டும்கூட அழிக்கலாம் .
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
போலிக்கு சிகப்பு முக்கோணம்.
போலிச் செய்திகளை பரிசோதனை செய்யும் வலைத் தளங்களால் பொய் என்று உறுதிசெய்யப்பட்ட செய்திகளின் அருகே கடந்த டிசம்பர் 2016 முதல் சிகப்பு நிற  சின்னத்தை முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனம் காட்டத் தொடங்கியது.
"சிகப்பு நிறக் குறியீட்டைப் போன்ற வலிய சின்னங்களை அந்தப் போலிச் செய்திகளுக்கு அருகில் வைப்பதால் அது அச்செய்தி மீது ஆழமான நம்பிக்கையை உருவாக்குகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது நாங்கள் அச்செய்தி பொய் என சொல்லும் வகையில் அதை காட்டும்  நோக்கத்திற்கு நேர் எதிரானது," என்று முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது .
அதனால் இனி சிகப்பு நிற எச்சரிக்கை சின்னத்துக்குப் பதிலாக  அந்தப் போலிச் செய்திகளின் அருகில் உண்மையான தொடர்புடைய செய்திகளை  காண்பிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அந்த எச்சரிக்கை சின்னம் காண்பிக்கப்படுவதால் போலிச் செய்திகள் படிக்கப்படுவது குறையாவிட்டாலும், அவை பகிரப்படுவது குறைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இனிமேல் எச்சரிக்கை சின்னம் காண்பிக்கப்படுவதற்கு பதிலாக போலி செய்திகளின் உண்மைத் தன்மை உறுதிசெய்யப்பட்ட செய்திகள் அந்தப் பதிவுகளின் அருகில் காண்பிக்கப்படும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேகம் குறையும் ஐபோன் 
புதிய ஐபோன்களை வாங்குவதை தூண்டுவதற்காக ஆப்பிள் நிறுவனம் பழைய ஐபோன்களின் வேகத்தை குறைக்கிறது என்ற சந்தேகம் நீண்டகாலமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
ஆனால்  பழைய ஐபோன்களில் பேட்டரியின் திறன் குறைவதால் அதற்கேற்றவாறு அதன் இயக்க வேகத்தை குறைப்பதாக ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.
தனது வாடிக்கையாளர்களின் சாதனங்களின் "வாழ்க்கையை நீடிக்க வேண்டுமென" தான் விரும்புவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயமானது 'ரெட்டிட்' என்ற சமூக இணையதளத்தில் பயனர் ஒருவர் தனது ஐபோனின் செயல்பாட்டு சோதனை முடிவுகளை வெளியிட்டவுடனே பலருக்கு தெரிய வந்தது. 
அதாவது, ஐபோன் 6 எஸ் மாடலை பயன்படுத்தி வந்த அவருடைய திறன்பேசியின் இயக்க வேகம் காலப்போக்கில் குறைந்துவிட்டது. 
ஆனால், அதன் பேட்டரியை புதியதாக மாற்றியவுடன் மீண்டும் அதன் வேகம் அதிகரித்து காணப்பட்டது.
"நான் எனது சகோதரரின் ஐபோன் 6 பிளஸ் மாடலை பயன்படுத்தியபோது அது என் மாடலைவிட வேகமாக செயல்படுவதை அறிந்தபோது இதில் ஏதோ பிழை இருப்பதுபோல் தோன்றியது" என்று ரெட்டிட்டில் பதிவிட்டுள்ளார் அந்த பயனர்.
வெவ்வேறு ஆப்பிள் இயங்குதள பதிப்புகளில் இயங்கும் பல ஐபோன்களை கொண்டு சோதனையை நடத்திய தொழில்நுட்ப இணையதளமான ஜீக்பென்ச், சில ஐபோன்களின் இயக்க வேகம் வேண்டுமென்றே குறைக்கப்படுவதை கண்டறிந்துள்ளது.
===================================================================================================================
நாட்டிலேயே முதல் இடம்.
குழந்தை திருமணம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது என்று மத்திய குற்ற ஆவண காப்பகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டி ருப்பதாவது,
கடந்த 2016 ஆண்டு தமிழகத்தில் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 55 வழக்குகள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்துக்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 51 வழக்குகளும், மூன்றாவது 41 வழக்குகள் பதிவாக மேற்கு வங்கம் 3வது இடத்தையும் பிடித்துள்ளது.

அதேவேளையில்,  அருணாச்சல பிரதேசம், பீகார், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், சண்டிகர், லட்சத்தீவு, கோவா ஆகிய மாநிலங்களில் ஒரு வழக்கு கூட பதிவாக வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நாடு முழுவதும்  திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் மொத்தம் 326 வழக்குகள் பதிவாகி  உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


கடந்த   2015-ம் ஆண்டில் 77 வழக்குகள் பதிவாகி உள்ள நிலையில், 2016ம் ஆண்டு இது 55ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

                                               1905 தீயணைப்பு வாகனம்.
======================================================================================
ன்று,
டிசம்பர்-30.
 • தாமஸ் ஆல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்(1891)
 • மங்கோலியா, கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது(1911)
 • ஐரிய சுதந்திர நாடு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது(1937)
 • உலகின் மிகப் பெரிய செப்பினாலான புத்தர் சிலை ஹாங்காங்கில் அமைக்கப்பட்டது(1993)
========================================================================

வியாழன், 28 டிசம்பர், 2017

அழகிரியில் மையம்

குறிஞ்சி மலர் பல ஆண்டுகள் இடைவெளிவிட்டு பூக்கிறதோ இல்லையோ மதுரைக்கார உடன்பிறப்பு அழகிரி இடையிடையே திமுகவை ஒழிப்பது ,ஸ்டாலின் தலைமை பற்றி குரல் கொடுப்பதற்கு தவறுவதில்லை.

அவரை திமுகவினரே மறந்து கட்சிப் பணியாற்றுகையில் தினமலர் போன்ற பத்திரிகைகள் அழகிரிக்கு கொம்பு சீவி விடுவதில் அயராது பணியாற்றிக்கொண்டுதான் இருந்தன,இருக்கின்றன.
 எல்லாம் போகட்டும் திமுகவில் இருந்து தலைவராலேயே  நீக்கப்பட்டவர் இப்படி திமுக வறட்சி பற்றி பேச உரிமை இருக்கிறதா?


அப்படி இருந்தாலும் அப்படி பேசும் தகுதி அழகிரிக்கு இருக்கிறதா?
ஸ்டாலின் முழுத் தலைமையில் 2016 தேர்தலை திமுக சந்தித்தது.

அப்போது இந்த அழகிரி திமுக தொண்டர்களை பாஜகவுக்கும்,அதிமுகவுக்கும் வாக்களிக்க அறிக்கைவிட்டவர்.பேட்டியளித்தவர் என்பதை திமுகவினருக்கு,தமிழநாட்டினரும் மறந்திருக்க மாட்டார்கள்.

அந்த தேர்தலில்தான் 89 என்ற அளவில் திமுகவை ஸ்டாலின் வெற்றி பெற வைத்தார்.
அதுவும் எப்படி பட்ட சூழல்.?
மத்திய மோடி அரசின் ஆதரவு,தேர்தல் ஆணையத்தின் நிபந்தனையற்ற ஆதரவு,அரசு அதிகாரிகள்,காவல்துறையினர் கொத்தடிமைத்தன பணிகள்,அனைத்துக்கும் மேலாக வாக்குக்கு மடை திறந்து விடப்பட்ட பணம்.

120 க்கும் மேலான திமுக முன்னணி 11 மணியளவில் வாக்குகள் பாதி கூட எண்ணப்படாத நிலையில் பிரதமர் மோடி ஜெயலலிதாவுக்கு முதல்வரானதும் வாழ்த்துகள்  என்ற உடனே சர,சர வென மாறியது.
ராதாபுரம் உடன்பட 7 தொகுதிகள் திமுக வென்றதாக கூறப்பட்ட நிலையில் தபால் வாக்குகள் செல்லாது என கூறி அதிமுகவை அதிகார  பூர்வமாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.எதிர்த்த திமுகவினர் துணை ராணுவத்தை வைத்து வெளியே தூக்கி எறியப்பட்டனர் .

இப்படி எல்லாம் பல இடையூறுகளுக்குப் பின்னர்தான் 89 இடங்கள் கிடைத்தன.

ஆனால் அதற்கு முன்னர் 2011 இல் இதே அழகிரி இருக்கையில்தான் அதுவரை தக்க வைத்திருந்த எதிர்க்கட்சி இடத்தை கூட விஜயகாந்த் கட்சியிடம் இழந்து நின்றது.

அப்போது அழகிரி தனது செல்வாக்கை எங்கே முடக்கி வைத்திருந்தார்?
 முந்தைய மதுரை மாநகராட்சி தேர்தலில் தனது சொந்த வட்டத்தில் அழகிரி நிறுத்திய அவரது ஆதரவாளர் திமுக சார்பில் நின்று பரிதாபமாக தோற்றுப்போனாரே அதற்கு அஞ்சா நெஞ்ச அழகிரி என்ன சொல்கிறார்.


ஒரு வட்டத்திலேயே அதுவும் குடியிக்கும் பகுதியிலே தனது ஆதரவாளரான திமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க முடியாத அழகிரி வாக்குக்கு 12000/-,6000/-என்று விலை கொடுத்து வாங்கப்பட்ட ஆர்.கே,நகர் இடைத்தேர்தலை திமுகவின் இமாலய தோல்வி என்பது எந்த வகையான மதிப்பீடு ?

அவருடைய திருமங்கலம் பணம் கொடுக்கும் முறையை விட அடுத்தக்கட்ட நம்பகமான ஹவாலா முறைக்கு தினகரன் போன பின் தினகரனுக்கு வெற்றி என்பது கிட்டாமல் போகுமா என்ன?

வாக்காளர் எண் குறிப்பிட்ட 20 ரூபாய் தாளைக் கொடுத்து  வாக்களித்தப்பின்னர்  12000 என்றால் அடித்தட்டு மக்கள் வாழும் தொகுதியில் அனைத்து வாக்குகளும் எங்கே விழும்.?
அது அவர்களின் ஒரு மாத ஊதியம் அல்லவா?ஒரு வீட்டில் 4 வாக்குகள் இருந்தால் 48,000/-இரண்டுபவுனுக்கு நகை எடுத்து விடலாமே.

வாடிக்கையான அதிமுக தொகுதியிலேயே 6000/- கொடுத்து,இரட்டை இலை சின்னத்தில் நின்றும் கூட அதிமுக தோற்றிருக்கிறது.

இவர்களுக்கிடையே ஸ்டாலின் வாக்குக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று அறிவித்தும் 12000/+குக்கரை புறந்தள்ளி திமுக பெற்ற வாக்குகள் 25000 .அதில் ஒவ்வொரு வாக்கும் விலைமதிக்கமுடியாதவை அல்லவா?

12000/,6000/-கொடுப்பதை இந்த கையாலாகாத தேர்தல் ஆணையம் தடுத்திருந்தால் நிலை என்னவாயிருக்கும்?
அனைத்து வாக்குகளும் உதய சூரியனை நோக்கி அல்லவா பாய்ந்திருக்கும்.

தொகுதிமக்களின் வறுமையை விலைபேசி வாக்குகளை வாங்கி பெற்ற வெற்றிக்கு பெயர் என்னவாயிருக்கும்.

விலைக்கு விற்றவர்கள் தொகுதிக்கு ஏதாவது கேட்டு கையை நீட்டி பேச முடியுமா?
ஒரு தொகுதியில் 12000+குக்கர் கொடுத்தவர் பொதுத்தேர்தலில் இப்படி கொடுக்க முடியுமா?

ஒவ்வொரு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெல்லும் என்பது எழுதப்படா விதியாக தமிழகத்தில் உள்ளது திருமங்கலம் புகழ் அழகிரிக்கு தெரியாதா?
திமுக ஆட்சி காலத்தில் பெண்ணாகரத்தில் அதிமுக காப்புத்தொகையை இழந்தது தெரியாதா அழகிரிக்கு.?
அதன்பின் வந்த தேர்தலில் அதிமுகதான் ஆட்சி அமைத்ததும் தெரிந்திருக்குமே?
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தினகரன்,எடப்பாடி அணிக்கு வாழ்வா?சாவா?நிலை.அதில் வெற்றிக்கு எந்த நிலைக்கு செல்ல அவர்கள் தயார்.


அதிமுகவுக்கு ஆணையம்,மோடி,அதிகாரிகள்,காவல்துறையினர் கூட்டு.மேலாக 6000 வாக்குக்கு விலை,இரட்டை இலை..
அப்படியிருந்தும் அதிமுக தோல்வி. காரணம் ஏலத்தொகை 12000/-குக்கர்.ஹவாலா முறையில் வாக்குப்பதிவு குக்கர் என்றால் 12,000 நிச்சயம் என்ற நிலை.

இவைகளை மீறி வாக்குக்கு பணம் தரும் வேலையை  திருமங்கலத்தில் அழகிரி ஆரம்பித்து வைத்ததை ஆர்.கே.நகரில் ஸ்டாலின் முடித்து வைத்திருக்கிறார்.அதற்கு தந்த விலைதான் காப்புத்தொகை இழப்பு.

ஆனால் பெற்ற 25000 வாக்குகள் என்பதில் ஒவ்வொரு வாக்குமே பலலட்சம் பெருமானமானது.
திமுகவுக்கு பெருமை தருவது.

திருமங்கலத்தில் திமுகவுக்கு ஏற்பட்ட திருமங்கல பார்முலா கறை தற்போது துடைத்து எறியப்பட்டுள்ளது .
அந்தவகையில் திமுக மாபெரும் வெற்றியைத்தான் பெற்றுள்ளது.
பாஜகவுக்கு சென்ற தேர்தலில் வாக்கு கேட்ட அழகிரிக்கு திமுக,ஸ்டாலின் பற்றி தற்போது பேச எந்த வித தகுதியோ,அருகதையோ இருப்பதாக தெரியவில்லை.

அவர் திமுகவை விட்டு தலைவர் கலைஞரால் நீக்கப்பட்டவர்.
மீண்டும் திமுகவில் சேர்க்கும் அளவு அவரின் நடவடிக்கைகளும் இல்லை.திமுக தொண்டர்கள் யாரும் அவரை ஒரு பொருட்டாக எண்ணவுமில்லை.

அழகிரி மக்கள் ஆதரவு உள்ளவர்,அவர் தலைமையேற்றால் திமுக வெற்றி பெறும் என்ற மாயையை உருவாக்குவது  ஊடகங்கள்தான்.
அவர்களின் குறியே திமுகவை அழிப்பதுதான்.

அதுதான் திமுக ஆரம்பிக்கப் பட்ட நாள் முதல் ஊடகங்களின் தலையாயப் பணியாக இருந்து வந்தது.இருக்கிறது.
அது சம்பத்,எம்ஜிஆர்,ஜெயலலிதா என்று வந்து அழகிரியில் மையம் கொண்டுள்ளது.
======================================================================================
ன்று,
டிசம்பர்-28.

 • லண்டன்  வெஸ்ட்மின்ஸ்டில் முதல்  தேவாலயம் திறக்கப்பட்டது(1065)
 • கலிலியோ கலிலி, நெப்டியக்ஷன் கோளைக் கண்டுபிடித்தார்(1612)
 • தெற்கு ஆஸ்திரேலியா, அடிலெய்ட் ஆகியன அமைக்கப்பட்டன(1836)
 • இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்டது (1885)
======================================================================================
*ஏழை மக்களுக்கு 24மணி நேரமும் ஆம்புலன்ஸ் சேவை செய்திட சிவகாசி, விருதுநகர் மற்றும் ஓசூர் உலகநாயகன் கமல்ஹாசன் நற்பணி இயக்கங்கள் சார்பாக முன்று இலவச ஆம்புலன்ஸ் பொதுமக்களுக்கு வழங்கி இயங்கி வருகிறது.
வாழ்த்துகள் !

புதன், 27 டிசம்பர், 2017

மாயப் பணம்

 "பிட்காயின்"
மாயப்பணம் என்ற உடன் ரா.கி.நகர்,தினகரன் உங்கள் நினைவுக்கு வரலாம்.அதில் தப்பே இல்லை.
ஆனால் நாம் இப்போது பார்ப்பது குக்கர் காயின் அல்ல பிட்காயின் .

இதுதான் இன்று உலகம் முழுக்க ஆக்கிரமித்துவரும் கையிலே வாங்கி உணர,காணக்கிடைக்காத பணம்.மாயப்பணம்.
இதில் வரவு செலவு வைக்கலாம் .பொருட்களை வாங்கலாம்.ஆனால் மீதிப்பணம் கணக்கிலேயே இருக்கும்.கைகளில் தட்டுப்படா பணம் இது.

இந்தியாவில் பொருளாதார அறிவு பெற்றோர் எண்ணிக்கை குறைவு. 
அவர்களில் அதிக பொருளாதார அறிவு உள்ளவர்கள் மத்தியிலும் பிட்காயின் என்பது  அறியப்படாத,குழப்பமான  ஒன்றாகும். 
ஆனால் பிட்காயினை பிரபலப்படுத்த  bitcoin-india.org என்ற இணையதளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அது போக பிட்காயின் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளக்கூடிய பயன்படுத்தக்கூடிய 25 ம்  மேற்பட்ட இணையதளங்கள் உள்ளன.


சட்டரீதியாக இந்தியாவில் பிட்காயின் தடைசெய்யப்படவில்லை. 
ஆனால், பிட்காயின் வணிகம் இங்கே ஊக்குவிக்கப்படுவதில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நாடுகள் பிட்காயின்களை பயன்படுத்துகின்றன. 
பிட்காயின்கள் என்றால் என்ன? அவை எவ்வாறு செயல்படுகிறது போன்ற கேள்விகள் உங்களுக்கு எழுவது சரியானதே?வரும் காலங்களில் இந்த பிட்காயின் நம் வாழ்க்கையில் பல விளைவுகளை உருவாக்க வாய்ப்புகள் அதிகம்.
மின்னணு பணம் என்று சொல்லி அலைகிற மோடி அரசு பிட்காயினை சட்டப்பூர்வமாக அங்கிகரிக்கும் அபாயத்தை புறந்தள்ளிவிட முடியாது.
தற்போதே இந்தியாவில், இந்த பிட்காயின் கரன்சி பரிவர்த்தனைக்கு தடை இல்லை.
 இதில் முதலீடு செய்வது ஆபத்தானது என்று மட்டுமே  ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

இந்தியாவில் பிட்காயின்களில்   முதலீடு செய்வது உயர்ந்து வருகிறது. 
பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றும், உலகளாவிய பண செலுத்துகை முறையுமாகும். நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் (பணப்பை) சேமிக்கலாம். 
மைனிங் என்ற செயல்முறையை முடித்தபின் நீங்கள் பிட்காயின்களை பெறலாம். பிட்காயின்களை உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டும் வாங்கலாம்.
வலைதளங்களில் புழங்கும், 'பிட்காயின்' போன்ற மெய்நிகர் கரன்சிகளின் பரி வர்த்தனைக்காகவே பலர், சமீபகாலமாக, நிறுவனங்களை துவக்கி வருவது தெரிய வந்துள்ளது.
வலைதளங்களில் மட்டும் புழங்கும், 'பிட்காயின், எத்திரியம், லைட்காயின்' உள்ளிட்ட, மெய்நிகர் கரன்சிகளை கட்டுப்படுத்த, எந்தவொரு அமைப்பும் இல்லை.

இதன் பரிவர்த்தனைக்காக, வலைதள நிறுவனங்கள் பல உருவெடுத்து வருகின்றன. 
பல வலைதளங்கள், அவற்றின் பலதரப்பட்ட சேவைகளுக்கு ஈடாக, மெய்நிகர் கரன்சிகளை பெற்றுக் கொள்கின்றன.

தற்போது, பலர் மெய்நிகர் கரன்சி பரிவர்த்தனைக்காக, அலுவலக கட்டமைப்புடன், தனி நிறுவனங்களையே துவக்கி வருகின்றனர். 

இந்த வகையில், சில வாரங்களில், 'பிட்காயின்' என்ற பெயரை இணைத்து, 'பிட்காயின் இந்தியா, பிட்காயின் பஜார், பிட்காயின் எக்ஸ்சேஞ்ச், பிட்காயின் இந்தியா சாப்ட்வேர் சர்வீசஸ்' என்ற பெயர்களில், பலநிறுவனங்கள், இந்திய நிறுவனங்கள் பதிவாளர் அலுவலகத்தில், பதிவு செய்யப்பட்டு உள்ளன.

பல நிறுவனங்கள், 'காயின்' என்ற சொல்லை இணைத்து, 'இந்திகாயின், பாரத்காயின், ஸ்வச்காயின்' என, நுாதன பெயர்களையும் பதிவு செய்து உள்ளன.ஒரு நிறுவனம், தனிநபர் மற்றும் வீட்டு பயன்பாட்டு பொருட்களின் பழுது நீக்கும் பணியை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது.
புலனாய்வு பத்திரிகை தொழிலை ஊக்குவிப்பதாக, ஒரு நிறுவனம் சொல்லிக் கொள்கிறது.

பல் சிகிச்சைக்கு என, மெய்நிகர் கரன்சிகளை வழங்குவதாகவும், இடைத்தரகரின்றி, குறைந்த செலவில் சேவையும், சுலபமாக காப்பீடும் பெறலாம் என, ஒரு நிறுவனம் கூறுகிறது.வயது வந்தோருக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும்,பாலுறவு கருவிகள் வர்த்தகத்திற்கும், 'செக்ஸ் காயின்'களை வழங்குவதாக, ஒரு நிறுவனம் தெரிவிக்கிறது.

இது மட்டுமின்றி, மெய்நிகர் கரன்சிகளுக்கு என, 'கிரிப்டோ அட்வைசர்ஸ், கிரிப்டோ லேப்ஸ், கிரிப்டோ மைனிங்,கிரிப்டோ யோ காயின் இந்தியா' போன்ற ஆலோசனை நிறுவனங்களும் முளைத்துள்ளன.
மத்திய அரசு, மெய்நிகர் கரன்சி கொள்கையை, விரைவில் அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவரை, மெய்நிகர் கரன்சி நிறுவனங்கள் பெருகத்தான் செய்யும். முதலீட்டாளர்களும், நுகர்வோரும் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

'பிட்காயின்' சந்தைகள், முறைகேடான பணப் பரிமாற்றத்திற்கு துணை புரிவதாக வந்த புகாரை அடுத்து, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட ஐந்து நகரங்களில் உள்ள, ஒன்பது பிட்காயின் சந்தைகளில், சமீபத்தில், வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.

அதில், 'ஜெப்பே' பிட்காயின் சந்தையின் விற்றுமுதல், ஒரே ஆண்டில், 1,000 கோடி ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துஇருப்பது தெரிய வந்துள்ளது.
தற்போது உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிட்காயின்களை கொண்டு இணையதளங்களில் பொருட்கள் வாங்கலாம், விரும்பிய நாட்டின் பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம். பிட்காயின்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களும் 'பிளாக்செயின்' என்னும் பாதுகாப்பு வழிமுறையில் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தாண்டு ஆகஸ்டு மாதம் பிட்காயின்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. நாணய அலகுகளாக ஆன்லைனில் கொள்முதல் செய்ய பொதுவாக செலவிடப்படும் கிளாசிக் பிட்காயின்கள் எனப்படும் BCT ஒரு வகையாகவும், BCH எனப்படும் ஹார்ட் ஃபோர்க் பிட்காயின் மற்றொரு வகையாகவும் பிரிக்கப்பட்டது. கிளாசிக் பிட்காயின்கள் 1 முதல் 0.1, 0.01, 0.001 ஆகிய மதிப்புகளில் உள்ளன. இது குறைவான பணத்தில் பிட்காயின்களை வாங்க உதவுகிறது.
இந்த வருடத்தின் தொடக்கத்தில் 1000 டாலர்களுக்கு விற்கப்பட்ட ஒரு பிட்காயினின் மதிப்பு, தற்போது 10,000 டாலர்களை கடந்துவிட்டது. 2013ன் பிற்பகுதியில் முதல் முறையாக 1,000 டாலர்களை கடந்த பிட்காயின்களின் மதிப்பு அதன் பிறகு தொடர்ந்து சரியத்தொடங்கி தள்ளாடி தற்போது திடீர் வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக, சில நிதி கட்டுப்பாட்டு அமைப்புகள் பிட்காயின்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இதன் மதிப்பு திடீரென உயர்ந்து வருவதற்கான காரணம் தெளிவாக இல்லை.


இம்மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும்' டெரிவேட்டிவ்' எனப்படும் நிதி ஒப்பந்த வணிக நிறுவனமான சிஎம்இ குழுமம், தான் 2017ன் இறுதிக்குள் பிட்காயினை அடிப்படையாகக் கொண்ட ஃப்யூச்சர்ஸ் டெரிவேட்டிவ் என்ற ஒரு நிதிச்சந்தை பண்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு பிட்காயின் மீதான நம்பிக்கைக்கு ஊக்கமளித்தது.
மேலும், சர்ச்சைக்குரிய திட்டமான Segwit2xஐ கைவிடுவதற்கு தீர்மானித்ததும் பிட்காயின்கள் மதிப்பேற்றதின் மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.
தற்போது பிட்காயின் சார்ந்த பரிமாற்றங்களை செய்வதற்கு உதவும் தொழில்நுட்பமான பிளாக்செயின், மேலும் திறம்பட செயல்படுவதற்கு இது உதவியிருக்கும்.
இம்முடிவானது பிட்காயின் சமூகம் இரண்டாக பிளவுபடும் ஆபத்தையும் கொண்டுள்ளது.
பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் உயர்வு தொடர்ந்து நிற்காமல், திடீரென்று கீழிறங்கும் என்று பல தொழில்துறை பார்வையாளர்கள் நம்புகின்றனர்.
தற்போது பரபரப்பான செய்தியாக இருக்கும் பிட்காயின்களில் முதலீடு செய்வதற்கு பலர் விருப்பத்துடன் உள்ளார்கள். ஆனால் நிதி வல்லுனர்கள் இந்த ஆர்வம் சரியா என்பதில் சந்தேகம் கொண்டுள்ளனர். ஏனெனில், இதுவரை பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்ட இந்த திடீர் எழுச்சிக்கான உண்மையான காரணம் அறியப்படவில்லை.
மேலும், முற்றிலும் ஆன்லைனில் நடக்கும் பிட்காயின் வர்த்தகத்தை மேற்பார்வை செய்வதற்கு எந்த கட்டுப்பாட்டு அமைப்பும் இல்லை. பிட்காயின் வர்த்தகங்கள் ஆன்லைன் வாயிலாக இரண்டு பேர் அல்லது இரண்டு கணக்குகளுக்கு இடையில் நடைபெறுகின்றன.
பிட்காயின்களின் மதிப்பு எவ்வளவு வேகமாக உயர்ந்ததோ அதே வேகத்தில் வீழ்ச்சியடையும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். 
உலகம் முழுவதும் உள்ள பிட்காயின் பயன்பாட்டாளர்கள் இதுகுறித்த வேறுபட்ட கருத்தை கொண்டுள்ளனர். அவர்களை பொறுத்தவரை பிட்காயின்களே எதிர்காலத்தின் நாணயம்.
பெரும்பாலான நாடுகளில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பிட்காயின்கள் இணைய வழி பணப்பரிமாற்றத்திற்கு உபயோககரமானது. 
ஆனால், பலர் பிட்காயின்களை ஒரு முதலீடாக பார்கின்றனர். முதலீட்டிற்கு கிடைத்த வருவாய் காரணமாகவே பிட்காயின் தலைப்புச் செய்தியாகியுள்ளது. ஆனால் முதலீட்டாளர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
காரணம் பிட்காயின் என்ற இணைய  தளம் உருவாக்கியவர்கள் யாரென்றே தெரியாத நிலைதான் தற்போதும்.அதை உலகளவில் ஆங்காங்கே நிர்வகிப்பவர்கள் வெளிப்படையாக தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை.
அவர்கள் தங்களை சாடோஷி நாகமோட்டோ என்று அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் இருப்பிடம் யாருக்கும் தெரியாது. 
மேலும், குறிப்பாக பிட்காயின்களில் முதலீடு செய்பவர்கள் பெரும்பான்மையானோர் ஹேக்கிங் மற்றும் சூதாட்டங்களுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது.
கடந்த 2009ம் ஆண்டு பிட்காயின் தொடங்கப்பட்டது. 2010யில் ஒரு பிட்காயினின் மதிப்பு வெறும் 0.0003 டாலர்கள்தான். அதன் பிறகு திடீர் ஏற்றத்தை கண்டது. இதன் காரணமாகவே பிட்காயின் குறித்த எச்சரிக்கையை வல்லுநர்கள் விடுகிறார்கள்.
சமீபத்தில் உலகம் முழுவதுமுள்ள கணினிகள் ரான்சம்வேர் வைரஸால் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த காலகட்டத்தில் பிட்காயின்கள் மூலமாகவே ஹாக்கர்கள் பணம் திரட்டியதாக நம்பப்படுகிறது. நீங்கள் பிட்காயினின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்தால் அதில், நீங்கள் பிட்காயின் அல்லது எவ்விதமான வளரும் தொழில்நுட்பங்களை கொண்டும் பணக்காரராக நினைக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுளது தெரியும்.
"நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக தோன்றுகிற, அடிப்படை பொருளாதார விதிகளை மீறும் வகையில் இருப்பவற்றைப் பற்றி எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். பிட்காயின்கள் மிகவும் விரைவான விகிதத்தில் இதுவரை வளர்ச்சியுற்றாலும், அதன் வளர்ச்சி தொடரும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. இதன் வழிமுறைகள் அனைத்தும் போட்டித்தன்மையுடன் செயல்படக்கூடியது என்பதால் இலாபத்திற்கான உத்தரவாதமும் இல்லை," என்றும் பிட்காயின் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராதாகிருஷ்ணன் நகர்
ராதாகிருஷ்ணன் நகர் திமுக தோல்விக்கு பல அறுவை சிகிசசைகள் நடந்து முடிவுகள் வருகினறன.
கலைஞரை மோடி சந்தித்ததால் சிறுபான்மையினர் வாக்குகளை மாற்றி போட்டுவிட்டனர்.

திமுகவினர் வாக்குகளை மாற்றி போட்டனர்.


திமுகவை (ஸ்டாலின் தலைமையை ) மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இன்னும் பல.


ஆனால் உண்மை ஒன்றே ஒன்றுதான்.


அழகிரி திருமங்கத்தில் அடித்து காட்டிய பண விநியோகம் இங்கு தினகாரனால் பரிணாமம் மாறியுள்ளது.


அவரின் அனுபவத்தில் பெற்ற ஹவாலா பாணியில் வாக்களித்து 20ரூபாயை காட்டினால் வாக்குக்கு 10000 நிச்ச்யம் என்ற முறைதான் வென்றுள்ளது.கட்சிகள் அடுத்த கட்டமாகி விட்டது.


அடித்தட்டு மக்கள் நிரம்பிய தொகுதியில் பலருக்கு 10000 என்பது கிட்டத்தட்ட ஒரு மாத ஊதியம் .
5வாக்குகள் உள்ள குடும்பத்தில் ஏற்கனவே வாங்கிய குக்கருடன் 2000போக இந்த 50000சின்ன தொகையா?


ஆனாலும் இந்த 10000த்தையும்,அதிமுக தந்த 6000த்தையும் மீறிதிமுக 25000 வாக்குகளை பெற்றிருப்பது உள்ளபடியே ஸ்டாலின்தலைமைக்கு கிடைத்த வெற்றி.


உள்ளபடியே இரட்டை இலை சின்னம்,6000ரூபாய்,அதிகாரவர்க்க உறுதுணை கொண்டிருந்த அதிமுகத்தான் அம்மணமாகியுள்ளது.திமுக வாக்கு பெற காசு கொடுக்க மாட்டோம் என்ற நிலைக்கு அமோக ஆதரவுதான் திமுக பெற்ற வாக்குகள்.


 திமுக வாக்குகள் மாறி விட்டன என்பதும் வடிகட்டிய பொய் .ராதாகிருஷ்ணன் நகர் என்றுமே அதிமுக செல்வாக்கான தொகுதி.
இது ஊடகங்களுக்கு தெரிந்தும் திமுகவுக்கு அவமானம் என எழுதுவது திமுக தொண்டர்களை சோர்வு உண்டாக்கி முடக்கி வைப்பதுதான் .

கழகத்தில் குழப்பத்தை உண்டாக்கும் முயற்சி மட்டும்தான் .சின்ன தொகுதிக்கு இப்படி வாரி இறைத்த பாரிகள் பொதுத்தேர்தலில் எப்படி வாருவார்கள்?
=======================================================================================
ன்று,
டிசம்பர்-27.
 • வடகொரியா அரசியலமைப்பு தினம்
 • பேர்சியா நாடு  ஈரான் என்ற பெயருக்கு மாறியது (1934)
 • உலக வங்கி உருவானது(1945)
 •  தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது(1956)
 • ஸ்பெயின் ஜனநாயக நாடானது(1978)
=======================================================================================