திங்கள், 31 ஜனவரி, 2011

வருகிறது இயற்கைவளத்தைக் கொள்ளையடிக்கும்..

எஃகுத் தொழிற்சாலைக்கு ஒப்புதல்
 
எஃகுத் தொழிற்சாலை

இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஆயிரத்து இருநூறு கோடி டாலர்கள் செலவில் மிகப்பெரிய எஃகுத் தொழிற்சாலை ஒன்றை போஸ்கோ என்ற தென்கொரிய நிறுவனம் அமைப்பதற்கு இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் நிபந்தனைகளுடன் கூடிய ஒப்புதலை வழங்கியுள்ளது.
இத்தொழிற்சாலை கட்டி முடிக்கப்படும் வேளையில் இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று மிக அதிகமாக முதலீடு செய்து நடத்தும் தொழிலாக அது அமையும்.
இத்தொழிற்சாலை வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பபடும் என்ற கவலைகள் காரணமாக இத்திட்டத்துக்கு இந்திய அரசின் ஒப்புதல் கிடைப்பது தாமதப்பட்டுவந்தது.
இத்தொழிற்சாலை அமைவதனால் இடம்பெயர நேருகின்ற மக்களை மீளக்குடியமர்த்துதல், அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குதல் போன்றவை தொடர்பான சட்டங்களையும், சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளையும் போஸ்கோ நிறுவனம் கடைப்பிடிக்க வேண்டும் என இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளுடன் கூடுதலாகப் புதிய பல நிபந்தனைகளை சேர்த்து தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
போஸ்கோ தொழிற்சாலைத் திட்டம் வருவதால் ஏற்படக்கூடிய சுற்றாடல் தாக்கங்களை நிபுணர் குழுவை வைத்து சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆராய்ந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
போஸ்கோ நிறுவனம் இந்தியாவில் எஃகுத் தொழிற்சாலை அமைக்கின்ற யோசனை 2005ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டிருந்தது.
பரதிப் என்ற துறைமுகத்தில் அமைக்கப்படக்கூடிய இத்தொழிற்சாலையால் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இத்தொழிற்சாலை வந்தால் ஒரிஸ்ஸாவின் இரும்பு கனிம வளம் இருபதே வருடங்களில் காலியாகிவிடும் என்றும் சுற்றாடல் பெரும் சேதமடையும் என்றும் பல குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்தன.
  ஆனால் வழக்கம் போல் இந்தியாவை உலகின் குப்பைக்கூடை யாக்கும்
 மத்திய அரசு சுவிசில் தனது கணக்கை ஏற்றிக்கொண்டு வாசலை  
 திறந்து விட்டது.
                                                                                                           நன்றி;பி.பி.சி ,தமிழ்.

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

கலை மாமணிகளே வருக,,,,

 தமிழகஅரசு தனது கலைமாமணிகள் பட்டியலை அறிவித்துள்ளது.பட்டியலில் நடிகை
தமன்னா வரை இடம் பெற்றுள்ளதை பார்க்க,படிக்க புல்லரித்துப்போய்விட்டது. அவர் 
இதுவரை ஆற்றியுள்ள கலைச்சேவைக்கு இந்தவிருது மிக தாமதமாக கொடுத்துள்ளதாக
மக்கள் ஆங்காங்கே பேசிக்கொள்வதைப் பார்க்க முடிகிறது.
           ஒருபுறம் அக்கா தமன்னாவுக்கு கொடுத்துள்ள தமிழக அரசு மன்மதன் அம்புவில்
மிக நன்றாக நடித்த சிறுவன்,சிறிமிக்குக் கொடுக்காதது மிக வருத்தத்தைத் தருகிறது.
சரி அவர்களுக்கு இன்னமும் காலம் இருக்கு.அடுத்த முறையா வது கொடுத்துவிடுங்க.
           தமிழேத்தெரியாத [ நடிக்கவும்] நடிகைக்கு நடிக்கவந்து ஒரு ஆண்டுக்குள் அரசு
கலைமாமணி பட்டம் கொடுப்பதைப் பார்த்தால் ,பட்டத்தை தலையில் கட்ட ஆளை
எதிர்பார்த்திருந்ததுபோல் இருக்கிறது.
            அப்படி கட்டாயம் கொடுத்தாகவேண்டிய அவசியம் என்ன உள்ளது? விருதுகள்
கொடுப்பவர்களுக்கும்,அதைவிட  வாங்கிய வர்களுக்கும்  பெருமையாக இருக்க
வெண்டும். பட்டியலைப் பார்த்து சிரிப்பதுபோல் இருக்கக்கூடாது.
          நடிகர்கள் விடயத்தில் கலைஞர் [அரசு] நடந்துகொள்வது கொஞ்சம் அதிகமாகத்
தான் உள்ளது.தமிழக அரசு சிறந்தநடிகர் தேர்வும் இந்த ஆக்கம்தான்.
கமல்
 சிறந்த நடிகர் என்றால் சிறப்புப்பரிசு நடிகர் ரஜினிக்கு.ரஜினி சிறந்த நடிகர் என்றால்
சிற்ப்புப்பரிசு கமலுக்கு. இவர்கள் படம் வெளியாகாவிட்டாலும் ஏதாவது பரிசு.
இதுபோன்ற விருதுகள் வாங்கிக்கொள்வது மட்டுமின்றி கொடுப்பதும் கூட
வெட்கப்பட வேண்டிய  பரிசுகுலுக்கல்.
        இது அய்யா ஆட்சியில் மட்டுமின்றி அம்மாஆட்சியிலும் நடந்த,இனி நடக்கப்
போகும் கொடுமைதான். என்ன செய்ய இவைகளைப் பார்த்து ரசிக்கும் நம்மையும்
அடுத்த கலைமாமணி ஆக்காமல் இருந்தா சரிதான். 

சனி, 29 ஜனவரி, 2011

சாதி இரண்டொழிய

தமிழனுக்கு இப்போது நேரமே சரியில்லை.ஒரு பக்கம் இலங்கையில் இனப்படுகொலை.
கடலிலும் சுட்டுக்கொலை.
நம் தமிழர் ஒற்றுமைக் குறைவு.மலெசியாவில் புத்தகத்தில் நம்மைக்கேவலப்படுத்தி
கீழ்சாதிக்கரன் தமிழன் என்றாக்கிவிட்டது.
BBCTamil.com | முகப்பு | மலேஷியாவில் புத்தகத்தால் சர்ச்சை: "- Sent using Google Toolbar"

வெள்ளி, 28 ஜனவரி, 2011

தாங்க முடியல்ல,,,

இப்போ நம்ம நடிகர் தப்பு.தலைவர்களில் ஒருவரான விஜயகாந்த் பேச்சுக்கள் 
ரொம்ப உணர்ச்சியாக உள்ளது. 
முதலில் ஆண்டவனுடன் கூட்டணி,பிறகு மக்களுடன் கூட்டணி,கடைசியாக
இப்போ மக்களை சிரிக்கவைப்பவர்களுடன் கூட்டணி என்று உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.
அப்படி பார்த்தால் இவரைவிட மக்களை இந்த விலைவாசி உயர்வுகளையும்
மறந்து சிரிக்கவைத்தவர் வேறு யாரும் இல்லை.பின் யாருடன் கூட்டணி வைப்பார். அ.தி.மு.க,வுடன் பணம்,தொகுதி பற்றி இவர் பேசி வருவது ஊர்
அறிந்த பரம ரகசியம்.ஆனால் சுத்த சுயம்புவாக காட்டிக்கொள்ள இவர் விடும்
அறிக்கைகள் இவரை வெறும் காமெடி பீசாகக்காட்டி வருகிறது.
          நடமுறைப்படுத்த இயலாதவைகளை இவர் தனது கொள்கைகளகக்
காட்டுவது மிக தவறு.வீடு,வீடாக ரேசன் பொருட்களை வழங்குவது எந்த
முறையில் சாத்தியம்.இவர் பொருளைக் கொண்டு போகும் போது அந்த
கூலித்தொழிலாளி வேலைக்கு போய்விட்டால்,அல்லது இப்போது பொருள்
வாங்கப்பணம் இல்லை என்றால்,,,,இப்படி நடைமுறை சாத்தியமற்ற

காரணங்கள் ஏராளம்.அதை எப்படி செய்வார் இவர்.

    இவர் தொல்லைத்தாங்க முடியல.யாராச்சும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை இவர்தான் காலால் உதைச்சே போட்டுத்தள்ளினார்[படத்திலே]னு  அண்ணன் பின்லேடன்கிட்டே சொல்லுங்களேன்.

புதன், 26 ஜனவரி, 2011

கருப்பான பணம்


Posted by Picasa
இந்தப்பணத்தைப்பதுக்கியது யார்,யார்,,,?
சொல்லுமா அரசு

மீண்டும் படுகொலை

மீண்டும் இலங்கைப் படையினர் ஒரு மீனவரை  படுகொலை செய்துள்ளனர்.
இடு தினசரி நிகழ்வாகிப்போனது.ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தாகிவிட்டது.
இப்போது இந்தியாவில் வந்து கொல்லுகின்றனர்.
நமக்குஒரு பாதுகாப்பும் இல்லை என்றாகிவிட்டது.
ஓரு கொலை நடந்தவுடன்  தமிழ் நாட்டை ஆள்வோர்  ஒரு மடல் தீட்டுவர்,
இந்தியாவை ஆள்வோர் ஒரு கண்டனம் தெரிவிபர், இலங்கை அரசு  நாங்கள்
செய்யவில்லை  அல்லது  இதுதான் பூலோகமா? எனக்கேட்கும்
 நாடகம் முடிந்துவிடும்.
இதை பார்த்து,கேட்டு  சலித்துவிட்டது. சிதம்பரம் உள்துறை அமைச்சர் .
இவர் தமிழராக இருந்து ஒருப்பயனும் இல்லை.அவர் காங்கிரஸ்காரரகப்
போய்விட்டா ர். அவர்கள் தான் தமிழன் என்றாலே  எட்டிக்காய் போன்று
முகம் சுழிப்பவர்களாகிவிட்டனரே.
வேன்டும் என்றேதான் இந்தப்படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றதோ
என்ற சந்தேகம் இப்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது. காரணம் இந்திய 
அரசு இந்தப்படுகொலைகள் விடயத்தில்  ஒரு அழுத்தமான  ,வலிவான
நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. இலங்கையைப்பார்த்துப்பயப்
படும் தோற்றம் உள்ளது.
கச்சத்தீவு தாரைவார்ப்பு  நடக்கும் படு கொலைகலுக்கு முக்கிய காரணமாக
உள்ளது.அதன் பக்கம் நம்மவர்களை வரவிட மாட்டேன்  என்கிறார்கள்.
அங்கு இந்தியாவுக்கு  குறிப்பாக தமிழகத்திற்கு அதன் பாதுகாப்பிற்கு
கேடு விளைவிக்கும் செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.
       சரி  அதை எல்லாம் விடுங்க,,,,,,,
  இந்தியாவில்  கடலோரப் பாது காப்புப் படை  என்று ஒன்று உண்டே
     அவர்கள்  வேலை என்ன செய்வது..
தமிழக மீனவர்களைச்சுடும்  இலங்கைக் காடையருக்குப் பாதுகாப்பு
கொடுப்பதுதானா,,,. நாள் தவறாமல் நடை பெறும்  இந்தக் கொலைகளில்
அவர்கள்  பாதுகப்பு லட்சணம்   பற்றி மிகப்பெரிய கேள்வி எழுகிறது.
அவர்கள்  இந்தியபாதுகாப்புப் படையினரா?
இலங்கை படையினர் பாதுகாவலர்களா,,,
காரணம்  ,, இப்போது காவல் துறையினர்  இலங்கை தூதரகத்திற்கும்,
இலங்கை வங்கிக்கும், புத்தமடத்திற்கும் தானே பாதுகாப்பு தருகிறார்கள்.
தமிழக மீனவர்களுக்கு அல்லவே,,,
அன்பு உரு புத்தனை வணங்கும்  இவர்களை அந்த புத்தன் தான்
காப்பாற்றவேண்டும், 
இப்போது மீனவர்கள் மத்தியில்..ஒரு கருத்து நிலவுகிறது.
அது விடுதலைப்புலிகள் இருகும் வரை இது போன்ற கொலைகள்
நடக்க வில்லை என்பதுதான்,,,,,
புத்தம் சரணம்  கச்சாமி,,,,,,,,,,,

செவ்வாய், 25 ஜனவரி, 2011

கறுப்புப்பணக்காரர்கள் பட்டியல் வெளியிடமாட்டோம்

|
கருப்புப் பண விவரங்களை வெளியிட இயலாது: பிரணாப் முகர்ஜி
வெளியிட காங்கிரஸுக்கு கிறுக்காப்பிடித்திருக்கு.
  • பின்னே அதை வெளியிட்டால் அதில் இருப்பது அவர்கள் கட்சி
உறுப்பினர் பெயராகத்தானே இருக்கும்.
மிச்சம் மீதி மத்த அரசியல்வியாதியினராக இருப்பார்கள்.
பிரணாப் கூறியதையும் படித்து விடுங்கள்.

வியாழன், 20 ஜனவரி, 2011

எரியும் செய்தி

வ்வப்போது மத்திய அரசு தான் இருப்பதாக காண்பிக்க ஏதாவது செய்கிறது.
அப்படி செய்ததுதான் பெட்ரோல் விலையை உயர்த்த அந்தந்த நிறுவனங்களுக்கு
அனுமதி அளித்தது.
                   இப்போது  வலைகுடா நாடுகளுக்கு லேசாக தலைவலித்தால் கூட இந்தியாவில்
பெட்ரோல் விலையை இவர்கள் உயர்த்திவிடுகிறார்கள்.
                 இந்தவிலை உயர்வால் விலைவாசி உயர்வதை தவிர வேறு நன்மை இல்லை.
இருப்பினும் அம்பானி வகையறாக்கள்,நன்மை அடைகிறார்கள்.என்பதாலே இது அனுமதிக்கப்படுகிறது.
                வேறுவழி.இன்று அரசாங்கம் அவர்கள் நன்மைக்காகத்தானே நடக்கிறது.
மக்கள் ஓட்டு போடமட்டும் தானே தேவை.வாக்குஎந்திரம்போல் மக்கள்  காசைவாங்கிக்கொண்டு வாக்களிக்கும் மற்றோர் எந்திரம்.
                 அது சரி.விலையை ஏற்ற இவர்கள் கூறும் காரணம் அதைவிட கேவலமான ஒன்று.
எண்ணை நிறுவனங்கள் இழப்பை சந்திக்கிறதாம். எந்த இடத்தில் வைத்து சந்தித்தது என்று கூறினால் நன்றாக இருக்கும்.
                   இந்திய எண்ணை நிறுவன்ங்கள் ஆயிரக்கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்து அதில்
அரசுக்கான ஈட்டுத்தொகையாக கணிச மான, கோடிக்கணக்கான தொகையை அரசிடம் கொடுக்கிறது.இப்படி பொய்கூறும் அமைச்சர்தான் அதிலும் பல்லைக்காட்டிக்கொண்டு
காசோலையை வாங்கி போஸ் கொடுக்கிறார். என்ன கொடுமைங்க இது?
                     நம்ம பக்கத்து நாடுகளில் நம் நாட்டை விட பெட்ரோல் விலை குறைவு.அதை விடுங்க
நம்ம சட்டாம்பிள்ளை அமெரிக்காவில் விலை என்ன என்று நம் ம[ண்]ன்மோகன்ஜிங் மன்னிக்கவும் சிங்கை விசாரிக்கசொல்லுங்க,,,,,

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

ரசிகனாக மட்டுமிரு

         தங்கள் அபிமான நடிகர் விஜய் நடித்த காவலன் படம் திரையிட தாமதமானதால் அவர் ரசிகர்கள் 
ரகளையில் ஈடுபட்டு சாலையில் சென்ற பேருந்தை அடித்து நொறுக்கியுள்ளனர்.
            அவர்கள் கையில் கிடைத்தது அரசுப்பேருந்து.[தனியார் பேருந்தை அடித்து நொறுக்கிட அவர்கள் என்ன முட்டாளா}
 மக்கள் சொத்தை சேதப்படுதிய ரசிகர்களை காவல் துறையினர் விசாரிக்கிறார்களாம். இதில் விசாரிக்க என்ன இருக்கிறது?
             ஒரு சினிமா படம் போட தாமதம் என்றால் ரகளையா? இவர்களை சுயபுத்தியுள்ள மனிதர்கள் பட்டியலில் சேர்க்கலாமா.
             இவர்களை கைது செய்து உடனெ சிறையில் அடைக்க வேண்டும். குண்டர்கள் போன்று செயல் பட்ட இவர்களை குண்டர் சட்டத்தில்  உள்ளே தள்ள வேண்டும்.
              அது தான் மற்ற ரசிகர்கள் என்று திரியும் சில தறுதலைகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.இதில்இவர்கள் இளைய தளபதி அரசியலில் வேறு குதிக்கப்போகிறாராம்.நாடு விளங்கிடும்.  
               ரசிகன் என்றால் கலாரசிகனாக இருக்க வேண்டும்.வெறிரசிகர்களாக இருக்கக்கூடாது. 

வெள்ளி, 14 ஜனவரி, 2011

புஷ்சின் வழித்தோன்றல்


மத்திய அரசு இப்போது கவலைக்கிடமாக உள்ளது.விலைவாசி உயர்வால் மக்கள் துன்பப்படும் போது அவர்கள் பிடில் வாசிக்காத குறையாக மக்குகளாக நினைத்து அவர்கள் அடிக்கும் கூத்துக்கு அளவில்லை.
                               விலைவாசி குறையடவடிக்கை எடுக்காமல் அவர் காரணம்,இவர் காரணம்,என்று கூட்டணிகட்சிகளை கை காண்பிப்பது  ரொம்ப சின்னப்பிள்ளைத்தனமாக உள்ளது.பொருளாதர மேதைகள் ஆட்சி  பாடாதி.
                                         அதிலும் பொருளாதார வளர்ச்சியினால் இந்திய மக்கள் வாங்கும் திறன் அதிகரித்து ,பால்,இறைச்சி,மற்றும் பொருட்களை அதிகம் வாங்குவதால் தான் இப்படி விலைவாசி கூடி விட்டதாம்.இது எங்கெயோ கேட்டது போல் இல்லையா? அதான் நம்ம அமெரிக்க பழைய அதிபர் புஷ்  முன்பு திருவாய் மலர்ந்தது தாங்க.இப்போ அவரின் இந்திய அடிபொடிகள்,உலக வங்கியின்பொருளாதார மாமேதைகள் வழிமொழிகிறார்கள்.
                                   சரத் பவார் வியாபாரிகள்,தரகர்கள் நலனுக்குமட்டுமே செயல்படுகிறார்.அண்ணன் மன்மோகன் சிங்கோ அம்பானி வகையறாக்களுக்கு, அம்மா சோனியாவோ அமெரிக்க நலனுக்கு, நாடு விளங்கிடும்.இந்தியாவின் தலைநகர் வாஷிங்டன்.

வியாழன், 13 ஜனவரி, 2011

விலைவாசி ,,,,,

விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்.? ராகுல் கூட்டணி கட்சிகள் தான் என்கிறார்.
 பவார் கட்சியினருக்கோ கோபம் மூக்கு மேல் வருகிறது.
          ஆனால் பவார் தனது அமைச்சகத்தை கவனிப்பதை விட விளையாட்டு விசயங்களில் தான்
கவனம் செலுத்திவருகிறார்.
       தொழில் அதிபர்களுக்கு மேலும் பணம் கொட்டும் விதமாகவே அவர் செயல் படுகிறார். கட்டுப்பாடின்றி சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி கொடுத்து சர்க்கரை விலையை உயர்த்தினார்.
பருத்தி விசயத்திலும் அப்படியே.கிரிக்கெட்,காமன்வெல்த் போட்டிகளிலேயே அவர் கவனம்.
                                             அவரை வீட்டுக்கு அனுப்புங்கள்.அல்லது விளையாட்டுத்துறை அமைச்சராக்குங்கள்.
                                           அத்துடன் ஆன்லைன் சூதாட்டத்தையும் நிறுத்துங்கள்.
            பணம் தருகிறார்கள் என்பதுக்காக வியாபாரிகள்,தொழில் அதிபர்கள் கட்டுபாடின்றி  கொள்ளை லாபம் அடிப்பதை கட்டுப்படுத்தாமல் இருப்பதை விட்டு,கட்டுப்பாடுகளை கொணருங்கள்.
                                        மற்றவை பின்னர்,,,,

புதன், 12 ஜனவரி, 2011

தமிழ்ப் புத்தாண்டு அல்லது பொங்கல்

நாம் இப்போது கொண்டாடப்போவது பொங்கலா,தமிழ்ப்புத்தாண்டா?
             தமிழருக்கென்று சில அடையாளங்களை சொல்லி வைத்தாலும் அவை காலப்போக்கில் காணாமல் போய் விட்டது.அப்படி மறைந்து போனதில் தமிழ் மாதங்களும் உண்டு.இப்போது பலரும் தங்கள் வசதிகேற்றவாறு மாதங்களை கூறினாலும்,அவை உண்மையான பெயர்களா?அல்லது அவர்கள் சுயகற்பனையா?என்பது யாருக்குத் தெரியும்.
                 ஆனாலும் தை மாதம் முதலாக வைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்காது.மழைக்காலம் முடிந்து முதல் அறுவடை. உலகில் எல்லா நாடுகளிலும் அறுவடை தினம் கொண்டாடப்படுவது வழக்கமானதுதான்.எனவே நாம் தைரியமாக அவரவர் வசதிக்கெற்ப பெயர் வைத்துக்கொண்டாடலாம். கொண்டாடுவோம்.