புஷ்சின் வழித்தோன்றல்
விலைவாசி குறைய நடவடிக்கை எடுக்காமல் அவர் காரணம்,இவர் காரணம்,என்று கூட்டணிகட்சிகளை கை காண்பிப்பது ரொம்ப சின்னப்பிள்ளைத்தனமாக உள்ளது.பொருளாதர மேதைகள் ஆட்சி பாடாதி.
மத்திய அரசு இப்போது கவலைக்கிடமாக உள்ளது.விலைவாசி உயர்வால் மக்கள் துன்பப்படும் போது அவர்கள் பிடில் வாசிக்காத குறையாக மக்குகளாக நினைத்து அவர்கள் அடிக்கும் கூத்துக்கு அளவில்லை.
அதிலும் பொருளாதார வளர்ச்சியினால் இந்திய மக்கள் வாங்கும் திறன் அதிகரித்து ,பால்,இறைச்சி,மற்றும் பொருட்களை அதிகம் வாங்குவதால் தான் இப்படி விலைவாசி கூடி விட்டதாம்.இது எங்கெயோ கேட்டது போல் இல்லையா? அதான் நம்ம அமெரிக்க பழைய அதிபர் புஷ் முன்பு திருவாய் மலர்ந்தது தாங்க.இப்போ அவரின் இந்திய அடிபொடிகள்,உலக வங்கியின்பொருளாதார மாமேதைகள் வழிமொழிகிறார்கள்.
சரத் பவார் வியாபாரிகள்,தரகர்கள் நலனுக்குமட்டுமே செயல்படுகிறார்.அண்ணன் மன்மோகன் சிங்கோ அம்பானி வகையறாக்களுக்கு, அம்மா சோனியாவோ அமெரிக்க நலனுக்கு, நாடு விளங்கிடும்.இந்தியாவின் தலைநகர் வாஷிங்டன்.