வருகிறது இயற்கைவளத்தைக் கொள்ளையடிக்கும்..

எஃகுத் தொழிற்சாலைக்கு ஒப்புதல்
 
எஃகுத் தொழிற்சாலை

இந்தியாவின் ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஆயிரத்து இருநூறு கோடி டாலர்கள் செலவில் மிகப்பெரிய எஃகுத் தொழிற்சாலை ஒன்றை போஸ்கோ என்ற தென்கொரிய நிறுவனம் அமைப்பதற்கு இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் நிபந்தனைகளுடன் கூடிய ஒப்புதலை வழங்கியுள்ளது.
இத்தொழிற்சாலை கட்டி முடிக்கப்படும் வேளையில் இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று மிக அதிகமாக முதலீடு செய்து நடத்தும் தொழிலாக அது அமையும்.
இத்தொழிற்சாலை வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பபடும் என்ற கவலைகள் காரணமாக இத்திட்டத்துக்கு இந்திய அரசின் ஒப்புதல் கிடைப்பது தாமதப்பட்டுவந்தது.
இத்தொழிற்சாலை அமைவதனால் இடம்பெயர நேருகின்ற மக்களை மீளக்குடியமர்த்துதல், அவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குதல் போன்றவை தொடர்பான சட்டங்களையும், சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளையும் போஸ்கோ நிறுவனம் கடைப்பிடிக்க வேண்டும் என இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளுடன் கூடுதலாகப் புதிய பல நிபந்தனைகளை சேர்த்து தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
போஸ்கோ தொழிற்சாலைத் திட்டம் வருவதால் ஏற்படக்கூடிய சுற்றாடல் தாக்கங்களை நிபுணர் குழுவை வைத்து சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆராய்ந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
போஸ்கோ நிறுவனம் இந்தியாவில் எஃகுத் தொழிற்சாலை அமைக்கின்ற யோசனை 2005ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டிருந்தது.
பரதிப் என்ற துறைமுகத்தில் அமைக்கப்படக்கூடிய இத்தொழிற்சாலையால் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இத்தொழிற்சாலை வந்தால் ஒரிஸ்ஸாவின் இரும்பு கனிம வளம் இருபதே வருடங்களில் காலியாகிவிடும் என்றும் சுற்றாடல் பெரும் சேதமடையும் என்றும் பல குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்தன.
  ஆனால் வழக்கம் போல் இந்தியாவை உலகின் குப்பைக்கூடை யாக்கும்
 மத்திய அரசு சுவிசில் தனது கணக்கை ஏற்றிக்கொண்டு வாசலை  
 திறந்து விட்டது.
                                                                                                           நன்றி;பி.பி.சி ,தமிழ்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?