மர்மம் என்ன?
மேற்கு வங்கத்தில் சாரதா குழுமத்தின் சீட்டு நிதி நிறுவனத்தில் நடைபெற்றுள்ள ஊழல் மீண்டும் ஒருமுறை சலுகைசார் முதலாளிகளுக்கும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் உள்ள கள்ளப்பிணைப்பினை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. சாரதா குழுமத்தின் மோசடியான நடவடிக்கைகள் பல்லாயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி அவர்களின் சேமிப்புகளை விழுங்கியிருப்பதானது, இதுநாள்வரை ஊடகங்களால் தூக்கி நிறுத்தப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியின் சித்திரத்தைத் தூள்தூளாய் உடைத்தெறிந்துவிட்டது. சாரதா குழுமம் ஆயிரக்கணக்கான (இலட்சக்கணக்கான என்று கூட சொல்லலாம்) வர்களிடமிருந்து பல்வேறு பெயர்களில் டெபாசிட்டுகளைப் பெற்று, அப்பணத்தை முழுமையாக மோசம் செய்துவிட்டது. சாரதா குழும நிறுவனர் சுதீப்தா சென் உடன் மம்தா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் குணால்கோஷ். அவர்களுடைய மோசடி நடவடிக்கைகள் அனைத்தும் நிலைகுலைந்து, அதில் டெபாசிட் செலுத்தியிருந்தவர்கள் தங்கள் பணத்தை முழுமையாக இழந்த நிலையில் நிர்க்கதியாய் நின்று கொண்டிருக்கிறார்கள். சாரதா குழுமம் நடத்தி வந்த தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்கள் ...