மர்மம் என்ன?
மேற்கு வங்கத்தில் சாரதா குழுமத்தின் சீட்டு நிதி நிறுவனத்தில்
நடைபெற்றுள்ள ஊழல் மீண்டும் ஒருமுறை சலுகைசார் முதலாளிகளுக்கும், ஆளும்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் உள்ள கள்ளப்பிணைப்பினை
வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.
சாரதா குழுமத்தின் மோசடியான நடவடிக்கைகள் பல்லாயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி அவர்களின் சேமிப்புகளை விழுங்கியிருப்பதானது, இதுநாள்வரை ஊடகங்களால் தூக்கி நிறுத்தப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியின் சித்திரத்தைத் தூள்தூளாய் உடைத்தெறிந்துவிட்டது. சாரதா குழுமம் ஆயிரக்கணக்கான (இலட்சக்கணக்கான என்று கூட சொல்லலாம்) வர்களிடமிருந்து பல்வேறு பெயர்களில் டெபாசிட்டுகளைப் பெற்று, அப்பணத்தை முழுமையாக மோசம் செய்துவிட்டது.
அவர்களுடைய மோசடி
நடவடிக்கைகள் அனைத்தும் நிலைகுலைந்து, அதில் டெபாசிட்
செலுத்தியிருந்தவர்கள் தங்கள் பணத்தை முழுமையாக இழந்த நிலையில்
நிர்க்கதியாய் நின்று கொண்டிருக்கிறார்கள்.
சாரதா குழுமம் நடத்தி வந்த தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்கள் ஒளிபரப்பை நிறுத்திக்கொண்டதை அடுத்து, சாரதா குழுமம் நிலைகுலைந்து போய்விட்டது என்பது வெட்ட வெளிச்சமாகியது. சேமிப்புகளை மக்களிடமிருந்து வசூலித்த முகவர்கள் (ஏஜெண்டுகள்) வீதிக்கு வந்துவிட்டார்கள். மாவட்டங்களில் செயல்பட்டு வந்த சாரதா குழுமத்தின் அலுவலகங்கள் ஆவேசமடைந்த சேமிப்பாளர்களால் சூறையாடப்பட்டுள்ளன. இந்த ஆர்ப்பாட்டங்களின்போது, போராடிய மக்களின் ஆவேசம் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் தலைவர்களை நோக்கியே இருந்தன.
சாரதா குழுமத்தின் தலைவரான சுதிப்தா சென் கொல்கத்தாவிலிருந்து தப்பி ஓடி, பின்னர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். சாரதா குழுமும் தன் வணிகத்தை திரிணாமுல் காங்கிரசுடன் மிகவும் நெருக்கமாக இருந்து அதன் உதவியுடனேயே விரிவாக்கிக் கொண்டது என்பது ஊடகங்களில் வந்துள்ள தகவல்களிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக, 2009இல் மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அதிக இடங்களைப் பெற்றபின் மத்திய அரசிலும் அது அங்கம் வகித்த சமயத்திலேயே, சாரதா குழுமத்தின் நடவடிக்கைகள் பல்கிப் பெருகின.
2011 சட்டமன்றத் தேர்தலின்போது சாரதா குழுமத்தின் முகவர்களும், அதனுடன் இணைந்த மற்றும் பலரும் இடதுசாரிக் கட்சிகளுக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றுவார்களேயானால் அனைத்து சீட்டு நிறுவனங்களும் மூடப்பட்டுவிடும் என்று துஷ்பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு மக்களைப் பீதியடையச் செய்தனர்.
. பல்வேறுவிதங்களிலும் மிகவும் நுணுக்கமாக மோசடியில் ஈடுபட்டுவந்த இத்தகைய சீட்டுநிதி நிறுவனங்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக் கூடிய விதத்தில் ஒரு சட்டமுன்வடிவை இடது முன்னணி அரசாங்கம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு 2010இல் அனுப்பி வைத்தது.
கடுமையான ஷரத்துக்களைக் கொண்டிருந்த இச்சட்டமுன்வடிவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மீளவும் மாநில அரசுக்குத் திருப்பி அனுப்பப்படவே இல்லை. அப்போது ஐ.மு.கூட்டணி அரசின் ஓர் அங்கமாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ்தான் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் தடுத்து நிறுத்தி வந்ததாக மிகவும் விரிவானஅளவில் நம்பப்படுகிறது.திரிணாமுல் காங்கிரசுக்கும் சாரதா குழுமத்திற்கும் இடையிலிருந்த பிணைப்பு மிகவும் ஆழமானது என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
திரிணாமுல் காங்கிரசின் இரு மாநிலங்களவை உறுப்பினர்கள், குணால் கோஷ் மற்றும் சிரிஞ்சாய் போஸ், இக்குழுமத்திலிருந்து நேரடியாகவே ஏராளமான தொகைகளை அள்ளிச் சென்றிருக்கிறார்கள் அல்லது பல்வேறு ‘‘பேரங்களில்’’ ஈடுபட்டிருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. மற்றொரு மக்களவை உறுப்பினரும் இக்கம்பெனியின் ‘தூதராக’ச் செயல்பட்டிருக்கிறார். பல்வேறு அமைச்சர்கள், மாவட்ட மற்றும் ஸ்தல மட்டத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராகவும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.இது தொடர்பாக சுயேச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இடதுமுன்னணி அரசாங்கத்தால் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறாமல் கிடப்பில் உள்ள சட்டமுன்வடிவு குடியரசுத்தலைவரின் ஒப்புதலுடன் மீளவும் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணியும் கோருகின்றன. மாநில முதல்வர் தன்னுடைய சகாக்களையும், கட்சித் தலைவர்களையும் பாதுகாப்பதில் மிகவும் சுறுசுறுப்பாயிருக்கிற அதே சமயத்தில், பணத்தை இழந்தவர்களுக்கு ‘‘போனது போனதுதான், பொறுமையாய் இருங்கள். உங்களுக்காக சட்டம் கொண்டு வர இருக்கிறோம்’’ என்று அறிவுரை வழங்கி இருக்கிறார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மேற்குவங்க மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சூர்யகாந்த் மிஸ்ரா, ‘‘முதல்வரின் செய்தி தெளிவானது.
போனது போனதுதான், மேலும் திருடுவதற்கு ஏதேனும் இருந்தால், அதையும் திருடிவிடுங்கள் என்று சொல்கிறார்’’ என கூறியிருக்கிறார்.
தனி நபர் பண மோசடிக்கு மம்தா அரசுபணம் 500 கோடிகளை பாதிக்கப்பட்ட வர்களுக்கு கொடுக்க உடனே ஒதுக்கியது ஏ ன்?
மர்மம் என்ன?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
“இளைய தலைமுறை’
இலக்கிய அமைப்பு சார்பில், கோவையில், இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலை ஞானி "கமல்ஹாசன்"
கலந்து கொண்டார்.
விழாவில் இலக்கியவாதிகளான கவிஞர் புவியரசு, கோவை ஞானி, தொ.பரமசிவம் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இவ்விருதுகளை வழங்கி நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

"விருது பெற்ற இலக்கியவாதிகள் தாங்கள் எழுவது ஒன்றாகவும், வாழ்வது ஒன்றாகவும் இல்லாமல், தங்களின் கருத்துகளுக்கு ஏற்ப வாழ்ந்துகாட்டி வருகின்றனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தத் தவறினால், நாம் சுயமரியாதை இழந்தவர்களாவோம்.
என்ன தவம் செய்தனை… இதுபோன்ற அறிஞர்கள் இருப்பதே நமக்குப் பெருமை.
இவர்களைப் போன்ற இலக்கியவாதிகள் பலர் இன்னமும் கண்டு கொள்ளப்படாமல்
உள்ளனர். மக்களின் கருத்துக்களை எடுத்துக் கூறும் இவர்களுக்கு மக்களின்
பாராட்டுக் கிடைக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. இவர்களின் உழைப்பையும்,
ஈடுபாட்டையும் பார்க்கும் போது, எனது தேசம், எனது மொழி என்ற கர்வம்
ஏற்படுகிறது. தங்கள் எழுத்தின் வலிமை தெரிந்து தான் இவர்கள் எழுதவே
வந்தனர். இவர்களின் கருத்தை நாம் ஏற்பது மட்டுமே, இவர்களது உழைப்பின்
வியர்வையைத் துடைக்கும் வகையில் இருக்கும்.
என் ரசிகர்கள் மாறுபட்டவர்கள்… சினிமாக்காரன் என்பதால், எனக்கு விசில்
அடிக்கவும், கரவொலி எழுப்பவும், தோரணம் கட்டவும் தான் ரசிகர்கள் இருப்பதாக
பலர் கருதுகின்றனர். எனது ரசிகர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்பதை
கடந்த 30 வருடங்களாக நிரூபித்து வருகின்றனர்.
வீட்டிலிருந்தே அரசியல்… நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று
கேட்கிறார்கள். அரசியல் என்பதை ஓட்டுக்காகச் செய்ய வேண்டியதில்லை. நாட்டைக்
காக்க வேண்டிய கடமை வீட்டில் இருந்தே புறப்படுகிறது.
வரலாறு ரொம்ப முக்கியம்… நாட்டைக் காக்க வேண்டிய கடமை அனைவருக்கும்
இருக்கிறது. அதற்கு நமது சரித்திரம், ஒதுக்கக்கப்பட்டவர்களின் கோபம் ஆகியவை
குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும்.
நான் ஒரு கண்ணாடி போல… இலக்கியவாதிகளிடம் இருந்து தான் ஞானம்
கிடைக்கிறது. சினிமாவில் நான் பிரதிபலிப்பது இலக்கியவாதிகளிடம் இருந்து
பெற்றுக் கொண்டதைத்தான்'
-என்றார் கமல்ஹாசன்.