மின்பற்றாக்குறையைச் சமாளிக்க;
"சூரியன் " கைகொடுக்கு ம்,
--------------------------------------------
-பேராசிரியர் கே.ராஜு
தேசிய மின்சார விநியோகப் பாதைக் கட்டமைப்பின் கடைக்கோடியில் தமிழ கம் இருப்பதால் வடமாநிலங்களில் உள்ள மின்உற்பத்தி நிலையங்களிலிருந்து நமக் குத் தேவையான மின்சாரத்தைப் பெற முடிவதில்லை.
தில்லி மாநிலம் உபரி என அறிவித்த மின்சாரத்தைக் கூட நாம் பெற முடியவில்லை.
மத்திய அரசின் நிதி உத வியுடன் தமிழகத்தில் செயல்பட்டு வரும் மின்உற்பத்தி நிலையங் களிலிருந்து கிடைக்கும் மொத்த மின்சாரத்தையும் இடைக்கால ஏற்பாடாக ஓராண்டிற்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்குமாறு தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை யும் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.
இந்த சூழ்நிலையில் தமிழக முதல மைச்சர் 2012 அக்டோபர் மாதம் அறிவித்த சூரியசக்தி மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி என்ற திட்டம் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் சூரிய சக்தி மின்சார உற்பத்தியாளர்கள் அத் திட் டத்தை ஏற்பதற்கு அவ்வளவாக உற்சாகம் காட்டவில்லை. 500 மெகாவாட்டிற்கு மட்டுமே ஏலம் கேட்கப்பட்டிருக்கிறது. அந்த மின்சாரமும் 2013 இறுதியில்தான் கிடைக்குமாம்.
காற்றாலை மூலம் மின் உற்பத்தியை நம்பியிருக்க முடியாத சூழ லில் தமிழகத்தில் வரும் கோடைக்காலம் மக்களுக்கு சோதனைக்காலமாக இருக் கவே வாய்ப்புகள் அதிகம். மின்விநி யோகத்தை சில மணி நேரம் நிறுத்தி வைப்பதால் மின்நுகர்வைக் குறைத்து விடலாம் என்று நினைப்பதே ஒரு மாயைதான்.
வீடுகள், பள்ளிகள், மருத்து வமனைகள் மற்றும் அரசு அலுவலகங் களில் இன்வர்ட்டர்-பாட்டரி மூலம் முன் கூட்டியே அதே மின்சார வாரிய விநி யோக ஏற்பாட்டிலிருந்து மின்சாரத்தை எடுத்து சேமித்துவைத்து, மின்வெட்டு நேரங்களில் பயன்படுத்திக் கொள்ளும் முறைதான். 8-10 மணி நேர மின்வெட்டு அமலில் இருக்கும் பகுதிகளில் இதுவும் சாத்தியமில்லாமல் போகிறது.
டீசல் ஜெனரேட்டர்களைப் பயன் படுத்தி மின்சாரத்தை ஓரளவுக்கு உற் பத்தி செய்து கொள்ளலாம். தமிழக அரசு அறிவித்துள்ள தனிப்பட்டவர்களின் வீட்டு மொட்டை மாடிகளில் சூரியசக்தித் தகடு களைப் பதித்து பரவலாக மின் உற்பத்தி செய்து கொள்ளும் முறையில் அது மின்சார வாரியத்தின் மின்விநி யோகக் கட்டமைப்புக்குள் இருக்குமாறும் செய்ய முடியும். அதற்குள் இல்லாமல் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள முடியும்.
சராசரியாக மாதம் 300 யூனிட்டுகள் செலவாகும் (ஏர்கண்டிஷனர் இல்லாத) ஒரு வீட்டை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.
2.5 கிலோவாட் சக்தி தரும் ஒரு சூரியசக்தி போட்டோவோல்டையிக் அமைப்பு சூரியவெளிச்சம் பிரகாசமாக உள்ள ஓர் நாளில் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை 10-லிருந்து 15 யூனிட்டுகள் வரை (அதாவது மாதம் 300-லிருந்து 450 யூனிட்டுகள் வரை) உற்பத்தி செய்யவல்லது.
ஏர்கண் டிஷனர் போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் கருவிகளை இயக்க மின் வாரியக் கட்டமைப்பைச் சார்ந்திருக்க வேண்டும்.
ஆனாலும் சூரியசக்தி மின் சாரத்தையும் பயன்படுத்தும்போது மாதாந் திர நுகர்வுக்கான அமைப்புப் படிகளில் குறைவான படிக்கு வந்துவிடும் என்பதால் செலுத்த வேண் டிய மின்கட்டணம் குறைவாகவே இருக் கும். தமிழகத்தில் 10 லட்சம் வீடுகள் அல்லது குடியிருப்புகள் “மொட்டை மாடி, மொட்டை மாடி.. சூரியனே போற்றி, சூரி யனே போற்றி” எனப் பாட ஆரம்பித்தால் ஒரு நாளைய மின்வாரியக் கட்டமைப்பின் சுமையில் ஒரு கோடி யூனிட்டுகள் குறைக்க முடியும்.
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங் களில் இன்னும் பெரிய அளவில் சூரிய சக்தி மின்உற்பத்திக் கட்டமைப்பை உரு வாக்கினால் மின்வாரியக் கட்டமைப்பின் சுமையைக் கணிசமாகக் குறைக்க முடி யும்.
அனல் மின்நிலையங்கள், சூரியசக்தி ஆலைகள் எல்லாம் முழுமையாகச் செயல்படத் தொடங்கும்போது நிலைமை மேலும் சீராக மாறிவிடும். 2.5 கிலோவாட் சூரியசக்தி அமைப்பை நிறுவ 2.5 லட்ச ரூபாயிலிருந்து 3 லட்ச ரூபாய் வரை செல வாகும். கார்களுக்கும் இரு சக்கர வாக னங்களுக்கும் கடனை வாரிவாரித் தரும் வங்கிகள் இந்தத் திட்டத்திற்குக் குறைந்த வட்டியில் கடன் தரத் தொடங்கினால் கடும் மின்வெட்டுக் கொடுமையிலிருந்து தமிழகம் தப்பிக்க முடியும்.
சுற்றுச் சூழ லுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மின்உற்பத் திக்கு அது பேருதவி செய் ததாகவும் இருக்கும்.
வங்கிகள் முன் வருமா?
[ கட்டுரை உதவி :- இந்து நாளிதழில் டி.வி.சுப்பிரமணியன் எழுதியது,]
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அரசிடம் ஊதியம் [அல்லது கிம்பளம்] பெற்ற பத்திரிகையாளர்கள்

---------------------------------------------------------------------------------------------------------
பாகிஸ்தான் அரசிடம் ரகசியமாக ஊதியம் பெற்ற பத்திரிகையாளர்களின் பட்டியலை அந்நாட்டு உச்சநீதிமன்றம் பகிரங்கமாக வெளியிட்டுள்ளது.
கடந்த 2011-12ம் ஆண்டு பாகிஸ் தானில் பெனாசிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சி நடந்து வந்தது. அப்போது, ஊடகத் துறையில் பணியாற்றும் பத்திரிகையா ளர்கள் செய்தித்துறை அமைச்சகத்திட மிருந்து ரகசியமாக ஊதியம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு பணியாற்றி யதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது அந்
நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்
படுத்தியது. மேலும், ஊடகத்தின் மீது மோசமான அபிப்பிராயத்தையும் ஏற்
படுத்தியது.இதுதொடர்பாக இரண்டு தனியார் தொலைக்காட்சி தொகுப்
பாளர்கள் பாகிஸ்தான் உச்சநீதிமன்
றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை செவ்வாயன்று பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் நடை
பெற்றது.
அப்போது செய்தித்துறை அமைச்சகத்திடமிருந்து ரகசியமாக ஊதியம் வாங்கிய பத்திரிகையாளர்
களின் பட்டியலை பகிரங்கமாக வெளி
யிட்டது. மேலும், இந்தப் பட்டியல் உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தி
லும் வெளியிடப்பட்டது. இதுதொடர்
பாக நடைபெற்ற விசாரணையில் மொத்தம் சுமார் ரூ.18 கோடி அளவிற்கு பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்
ளது.
வழக்கம் போல இக்குற்றச்சாட்டை செய்
தித்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. உச்சநீதிமன்றம் பத்திரிகையாளர்களின்
பெயரை பகிரங்கப்படுத்தியும் பெயர் வந்த பத்திரிக்கையாளர்கள் யாரும் இதுவரை வாயைத்திறந்து கருத்தும் தெரிவிக்க
வில்லை.
இது பாகிஸ்தானில் மட்டும் நடப்பதாக தெரியாவில்லை.
உலகம் முழுக்க கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் பணம் கொடுத்து தனக்கு ஆதரவாக செய்தியை வரவைக்கும் வழக்கமாகி விட்டது.
பெரும்பாலான இடங்களில் செய்தியாளர்களுடன் கதை முடிந்து விடுகிறது.ஊடக உரிமையாளர் விழிப்புடன் இருந்தால் செய்திகளுக்கு பணம் கொடுக்கும் முறை வந்து விடுகிறது.
இந்தியாவிலும் பணம் கொடுத்து வரும் செய்திகளுக்கு எதிராக மக்களவை வரை பிரச்னை எழுப்பப்பட்டது.
இங்குள்ள பத்திரிக்கைகள் பல வற்றில் அவ்வாறு செய்திகள் வருவது தெரிந்த விடயம்தான்.
அரசுக்கு ஆதரவாக வருவது முதல் ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களுக்கு ஆதரவாக செய்தி வருவதுவரை இங்கு நடக்கிறது.எல்லாமும் விளம்பரங்க்களக்காகவும் ,அவர்கள் தரும் சலுகைகள்,"கவர்"வதாலும் தானே .