" இளமை தரும் இளநீர்...."


suran

 இப்போது கோடை காலம் மென்பானங்கள் மூலம் மனிதர்கள் தங்கள் வெப்பத்தை தணிக்கும் காலம்.
இன்று கடைகளில் கிடைக்கும் மென்பானங்கள் நமது பணத்தை மட்டும் போக்கடிக்கவில்லை.நமது உடல் நலத்தையும் இல்லாமல் ஆக்கி விடுகிறது.வெப்பத்தை தணிப்பது போல் முதலில் இருந்தாலும் நமது ஆரோக்கியத்தையும் தனித்து விடுகிறது.
காரணம் அதில் கலந்துள்ள ரசாயனங்கள்.துத்த நாகம்,ஈயம் போ ன்றவற்றை  அந்த பகாசுர பணம் விழுங்கி கோலா நிறுவனங்கள் சேர்ப்பதுதான்.
தனது கோலாவை ,பானங்களை வாங்கும் அடிமையாக்கும் போதை சமாச்சாரங்களுக்காக வே அவை சேர்த்து விற்கப்படுகிறது.
எனவே அது போன்ற விளம்பரங்களை அள்ளி விடும் -ஸ்பான்சர் பானங்களை அறவே ஓரங்கட்டுங்கள்.
அதை விடுத்து நமக்கு குளிர்ச்சி தரும் பானம் என்றாலோ கோடை க் காலம் என்றாலோ  இயற்கையாக முதலில் நமக்கு ஞாபகம் வருவது "இளநீர்" தான் .

 மற்ற பானங்களை விட இளநீருக் கு மவுசு அதிகம். இது இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பானம் என்பதால் இதை அதிகம் விரும்புவர்.


மேலும் இது தாகத்தை தணித்து புத்துணர்ச்சியும் அளிக்கிறது.
அடிக்கும் கோடை வெயிலில் இளநீரை நேரடியாக அதன் மட்டையிலிருந்து அப்படியே பருகுவது பேரானந்தமாகும்.

இது புத்துணர்ச்சி தருவது மட்டுமல்லாது, பல உடல் நல நன்மைகளையும் அளிக்கிறது.
இள  நீரில் வைட்டமின்கள், கனிமங்கள், மின்பொருட்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள், சைட்டோகைனின் ஆகியவை ஏரா ளமாக இருக்கின்றன. 
இளநீர் அதன் ருசிக்கும், நமக்கு அளிக்கும் புத்துணர்ச்சிக்கும், மருத்துவ குணங்களுக்கும் உலகம் முழுவதும் புகழ் பெற்று திகழ்கிறது.
 இளநீரில் உடலுக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சைன் ஃபோலேட் ஆகியவை இயற்கையிலேயே கிடைக்கிறது.
மேலோட்டமாக இது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இதில் உள்ள மருத்துவ குணங்களை கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம் .

இளநீர் குளிச்சியை மட்டும் நமக்கு தரவில்லை.கூடவே இளமையையும் அள்ளித்தருகிறது.

வயிற்றுப்போக்கு : வயிற்றுப்போக்கு அதிக அளவில் இருக்கும் போது நீர்ச்சத்து அதிக அளவில் குறைவதால், இளநீர் அருந்துவது மிகவும் நல்லது. இளநீரில் அமினோ அமிலங்கள், என்சைம்கள், சாப்பிடக்கூடிய நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற கனிமங்கள் அதிக அளவு உள்ளன. மேலும் இதில் உள்ள நல்ல அளவிலான எலெக்ட்ரோலைட் பொட்டாசியம், உடம்பில் வயிற்றுப் போக்கினால் ஏற்படும் எலெக்ட்ரோலைட் குறைபாட்டை நீக்க உதவும்.

எடை குறைவு : இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால், அதனை பருகினால் வயிறு நிறைந்து போவதால், அதிகமாக தேவையில்லாத உணவுகளை சாப்பிட முடியாமல் உடல் எடை குறைய உதவுகிறது.

நீரிழிவு : இளநீரில் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதனாலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாலும், சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது.

வைரஸ் கள் : சளிக் காய்ச்சல் மற்றும் ஹேர்ப்ஸ், இவை இரண்டுமே சில வைரஸ் கிருமிகள் நம் உடம்பை தாக்குவதால் ஏற்படுகிறது. இளநீரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அடங்கியிருப்பதால், மேற்கூறிய வைரஸ் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக இது அமைகிறது.

உடல் வறட்சி : உடல் வறட்சி பிரச்சனைக்கு இளநீரை நரம்பின் வழியாக உடம்பில் ஏற்றலாம். மிகவும் தொலைவில் எந்த ஒரு மருத்துவ வசதியும் இல்லாத இடத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு, இப்பிரச்சனை ஏற்பட்டால் தற்காலிகமாக இந்த அணுகுமுறையை கையாளலாம்.


இரத்த அழுத்தம் : இளநீரில் வளமான அளவு பொட்டாசியம் இருப்பதால் அது கூடுதல் இரத்த அழுத்தம் மற்றும் வாதத்திற்கும் நல்ல மருந்தாக அமைகிறது.

சிறுநீரகக் கற்கள் : பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால், இது சிறுநீரகத்தில் கற்கள் வருவதை தடுக்கும்.

தோல் பிரச்சனைகள் : பருக்கள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை ஏற்பட்ட சருமங்களில் இளநீரை இரவில் படுக்கும் போது தடவி, காலையில் கழுவ வேண்டும். இதை தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால் தோல் பிரச்சனைகள் சரியாகும்.

புற்றுநோய் : சில ஆய்வுகளின் படி, இளநீரில் சைட்டோகைனின்கள் இருப்பதால் முதுமைத் தோற்றத்தை தடுக்கவும், ‘கார்சினோஜெனிக் மற்றும் த்ரோம் பாட்டிக் ஆகியவைகளை தடுக்கவும் உதவுகிறது. மேலும் இதிலுள்ள செலினியம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராகவும் விளங்கும்.

கொழுப்பு  : மிருகங்களை வைத்து செய்த ஆராய்ச்சிகளின்படி இளநீர் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்று கூறினாலும், அது வெறும் தொடக்க நிலையிலே இருக்கிறது. ஆனால் மற்ற பானங்களை விட இளநீர் பருகுவது உடம்புக்கு மிகவும் நல்லது என்பது உறுதி.

பொலிவாகும் சருமம் : இளநீரில் கால்சியம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம் போன்ற கனிமங்களின் கலவை உள்ளது. இந்த அளவு முன்பின்னாக இருந்தாலும், இவைகளில் உள்ள கனிமங்களின் கலவை, ஆரஞ்சு போன்ற பழங்களை விட அதிகமாகவே உள்ளன. ஆகவே சருமம் பொலிவாகி இளமையாக காணப்படும் .

இவை எல்லாமும் இருந்தாலும் இப்போது இளநீரின் விலை அதிகமாக இருப்பதுதான் நமது பர்சை மெலி வாக்கி விடுகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா முன்மொழிந்த கட்டணத்தை உயர்த்துமாறு வற்புறுத்தாதது ஏன்? சட்ட விரோதம் என்று தெரிந்தும் உரிமங்களை ரத்து செய்யாதது ஏன்?
'சொல்லுங்க   ப.சிதம்பரம்  சொல்லுங்க  '
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத் தில் இன்னும் பதிலளிக்கப்படாத கேள் விகளுக்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம் பரம், நாடாளுமன்ற கூட்டுக்குழுவிடம் பதிலளித்தே ஆகவேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினரும், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் உறுப் பினருமான சீத்தாராம் யெச்சூரி வலி யுறுத்தியுள்ளார். ஏற்கெனவே பிரதமர் மன்மோகன் சிங், கூட்டுக்குழுவிடம் பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர்.
சிதம்பரத்தின் பதில்கள் கிடைக்கப் பெறாமல் அல்லது அவரிடம் விசாரிக் காமல் எப்படி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான இறுதி விசாரணை அறிக் கையை தயாரிக்க முடியும் ?என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்த மாக விசாரணை செய்து வந்த நாடாளு மன்ற கூட்டுக்குழுவில் அங்கம் வகிக் கும் சக உறுப்பினர்களுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தா ராம் யெச்சூரி எம்.பி., குறிப்பு ஒன்றை அனுப்பியிருக்கிறார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் வந்துள்ள சில கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சரும் பதில் சொல்லியாக வேண்டிய தேவை எழுந்துள்ளது. 
நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ தயாரித்துள்ள வரைவு அறிக்கையில் நிதி அமைச்சர் குறித்து எண்ணற்ற விஷயங்களைக் கூறியிருக்கிறார்.
நிதி அமைச்சரின் பங்களிப்பு தொடர்பாக கீழ் வரும் கேள்விகளுக்கு விடை தெரியாமல், நாடாளுமன்ற கூட்டுக்குழு எந்த முடி வுக்கும் வருவது சாத்தியமில்லை.சாக்கோ தயாரித்துள்ள வரைவு அறிக்கையில், 10.43ஆவது பிரிவு பின் வருமாறு கூறுகிறது:
‘‘தொலைத்தொடர்புத் துறையி லிருந்து 2007 நவம்பர் 29 தேதியிட்டு வந்த கடிதத்திற்கு, நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொருளாதார விவகாரங் களுக்கான துறை எவ்விதத் தகவலும் அனுப்பவில்லை என்று கூட்டுக்குழு விற்கு, நிதி அமைச்சகம் தெரிவித்திருக் கிறது. நடைபெற்றுள்ள நிகழ்வுகளிலி ருந்து, ஏற்கனவே உள்ள உரிமதாரர் களிடம் ஸ்பெக்ட்ரம் தொழில்நுட்பப் பயன்பாட்டிற்காக அனுமதித்துள்ள கட்டணம் தொடர்பாக தொலைத் தொடர்புத்துறை மேற்கொண்டுள்ள நிலைப்பாட்டோடு நிதி அமைச்சகம் ஒத்துப்போகிறது என்றே கூட்டுக்குழு அனுமானிக்கிறது.’’இவ்வாறு, தொலைதொடர்புத் துறை 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமக் கட் டணங்கள் தொடர்பாக மேற் கொண்ட நிலைப்பாட்டோடு நிதி அமைச்சகமும் ஒத்துப்போனதாக, நாடாளுமன்ற கூட்டுக்குழு தன் வரைவு அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதை நிதி அமைச்சர் ஒப்புக்கொள்கிறாரா? 2.1.2(3)வது பிரிவின்படி, நிதி அமைச் சகத்திற்கும் தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கும் இடையே ஒப்பந் தம் ஏற்பட்டிருக்க வேண்டியது கட் டாயம், என்று தொலைத்தொடர்புத் துறை அமைச்சரவைக்கு அனுப்பிய குறிப்பிலிருந்து நன்கு தெரிந்தும் கூட, 2001ம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட அள விலேயே நுழைவு மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களை 2008ல் வசூலிக்கக் கூடாது என்று நிதி அமைச்சகம் ஏன் வலியுறுத்தவில்லை?உரிமக்கட்டணங்களை நிர்ணயிப் பதில் நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் அவசியம் என்றிருக்கக்கூடிய நிலை யில், நிதி அமைச்சகம் அத்தகைய ஒப் புதலை அளித்ததா?
ஆ.ராசா,சாக்கோவிற்கு அனுப்பி யுள்ள கடிதத்தில், உரிமக் கட்டணங் கள் சம்பந்தமாக தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுடனும், 2008 ஜனவரி முதல் வாரத்தில் நிதி அமைச் சரை அவர் சந்தித்தபோது அவர் அளித்த ஒப்புதலின் அடிப்படையிலும் தான் மேற்கொள்ளப்பட்டது என்று கூறியிருக்கிறாரே? அவ்வாறு இருவருக் குமிடையே சந்திப்பு நடந்தது உண் மையா? 
ஆம் எனில், 2008ஆம் ஆண் டிற்கான உரிமங்களுக்கு 2001இல் நிர் ணயித்த அதே உரிமக் கட்டணத்தை வசூலிக்க மத்திய நிதி அமைச்சர் தன் சம் மதத்தை அளித்ததாகக் கூறியி ருப்பது சரிதானா? 2008 ஜனவரி 15 அன்று அவர் பிர தமருக்கு எழுதியுள்ள கடிதத்தின்படி 2008 ஜனவரி 10 அன்று நுழைவு மற் றும் உரிமக் கட்டணங்கள் தொடர் பாக மேற்கொள்ளப்பட்ட முடிவு முடிந்துபோன விசயம் என்று குறிப் பிட்டிருக்கிறீர்களே, ஏன் அவ்வாறு ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள்?.
 நாட்டின் மிகவும் புகழ்பெற்ற வழக் கறிஞர்களில் ஒருவர் என்ற முறையில், மத்திய நிதி அமைச்சர் அவர்களுக்கு உரிமக்கட்டணங்களுக்கான அனு மதிக் கடிதத்தை எந்த சமயத்திலும் ரத்து செய்யலாம் என்று சந்தேகமற நன்கு தெரியும். 2008ஆம் ஆண்டில் அளிக்கப்படும் நுழைவு மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களாக 2001 ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட கட்டணத் தொகையையே பெறுவதற்கு, அவரது சம்மதம் அவசியம். அமைச்சரவைக் குறிப்பு எப்படி இருந்த போதிலும் இந்திய அரசின் (வர்த்தக நடைமுறை)விதி 4ன்கீழ், நிதி அமைச்சர் உடன்பாட்டைத் தெரி விப்பது கட்டாயமாகும். அத்தகு சமயத் தில் அவர் ஏன் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை?அதேபோன்று இந்திய அரசின் (வர்த்தக நடைமுறை) விதி 7இன்கீழ், நிதி சம்பந்தப்பட்ட வழக்குகளில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அமைச்சர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு வரும் பட்சத்தில், நிதி அமைச்சர் அமைச்சரவைக் கூட்டத் தைக் கூட்டி அமைச்சரவை முடிவைக் கோரலாமே, ஏன் அவ்வாறு நிதி அமைச்சர் கோரவில்லை?
மிகவும் உயர்ந்த இடத்தில் அமர்ந் திருக்கும் நிதி அமைச்சர், இக்கேள்வி களுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு வின் முன்பு நேரிலோ அல்லது எழுத்து மூலமாகவோ பதிலளிக்க முடியும். மேற்கண்ட அம்சங்கள் குறித்து நிதி அமைச்சரின் பதிலைப் பெறாமல் நாடாளுமன்ற கூட்டுக்குழு இப்பிரச் சனையில் நிதி அமைச்சகம் அல்லது நிதி அமைச்சரின் பங்களிப்பு குறித்து எந்த முடிவுக்கும் எப்படி வரமுடியும் என்பது புரியாத புதிராகவே இருக் கிறது.
-இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கேள்விகளை  தொடுத்துள் ளார். 
பதில் வழக்கமான கல்லுளி மங்கத்தனமா ன  மவுனம்தான்.
---
-----------------------------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?