சனி, 31 அக்டோபர், 2015

110கோடிகள் வழியில்லை.1000 கோடிகள் ?
அடங்காத ஆசை மக்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்காக வாழ்பவர்களுக்கும் இருக்கிறது.அதை அடக்க முடிவதில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கில்  சிறை சென்று வெளியெ குமாரசாமியின் தப்புக்கனக்கில் வெளியெ வந்தாலும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உயிர் பெற்றுள்ளது.
அதில் இருந்து இன்னமும் முழுமையாக மீளவில்லை .
ஆனால் இந்த ஆட்சிகாலத்துக்காண  குறீயிட்டை ஜெயலலிதா உடன் பிறவா சகோதரி ஆரம்பித்து விட்டாரா.அதில் ஒரு சிறு துளி வெளியே கசிந்து விட்டது.
அந்த துளியின் மதிப்பே 1000 கோடிகள் என்பதுதான் அதிர்ச்சி தரும் உண்மை.
110கோடிகள் அபராதம் கட்ட பணம் இல்லாதவர்கள் 1000 கோடிகளில் சொத்து வாங்கி குவித்தது எப்படி?
இத்தனை நெருக்கடியான காலத்திலும், தனது கொள்ளையை ஜெயலலிதா நிறுத்தவேயில்லை என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் உண்மை. ஜெயலலிதா தனது உடன்பிறவா சகோதரி, சசிகலாவின் பெயரில், வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள தியேட்டர்களை ஜாஸ் சினிமாஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக விலைக்கு வாங்கி விட்டார் . 
தங்கள் சினிமா தொழிலை விரிவடைய வைக்கும் வகையில், தற்போது மேலும் சில தியேட்டர்களை வாங்கும் முயற்சியில் மன்னார்குடி கும்பல் இறங்கியிருக்கிறது என்பது அதிர்ச்சியான செய்தி. 
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு, பல பினாமி நிறுவனங்கள் இருந்தன என்பது, நீதிபதி குன்ஹா தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள, 'ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட்' நிறுவனம், அத்தகைய பினாமி நிறுவனங்களில் ஒன்று. இதன் பெயரை, 'ஜாஸ்' சினிமா நிறுவனம் என மாற்றி, சத்யம் சினிமா நிறுவனத்திற்குச் சொந்தமான, 600 கோடி முதல், 1,000 கோடி ரூபாய் மதிப்புடைய, 11 திரையரங்குகளை, ஜெயலலிதாவுடனேயே இருந்து வரும் சசிகலாவும், இளவரசியும், அவரது உறவினர் பெயரில் வாங்கியிருக்கிற செய்தி, இன்று வீதிக்கு வந்துவிட்டது.

கடந்த டிசம்பர் மாதத்தில் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியானது. அது இந்தியாவின் மிகப்பெரிய மல்டிப்ளெக்ஸ்களை வைத்திருக்கும் பிவிஆர் நிறுவனம், தமிழகத்தின் சத்யம் குழுமத்தினரின் திரையரங்குகள் அனைத்தையும் வாங்க உள்ளது என்பதே அந்த செய்தி. 800 முதல் 1000 கோடி வரை இந்த பரிவர்த்தனை இருக்கும் என்று அந்த செய்தி மேலும் கூறியது. சத்யம் குழுமத்தினருக்கு சொந்தமாக தமிழகத்தில் 56 திரைகள் உள்ளன. இந்த திரையரங்கங்கள் 83 க்ரவுண்ட் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனைக்கான முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் டிசம்பர் மாதமே தொடங்கப்பட்டன. இந்த பரிமாற்றத்துக்கான மதிப்பீடுகளை கேபிஎம்ஜி (KPMG) என்ற நிறுவனம் செய்து வருகிறது. 
இந்த நிலையில் இந்த பரிவர்த்தனை வெற்றி பெறக்கூடாது என்பதில் மன்னார்குடி மாபியா முயற்று வருவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வந்துள்ளன. 

சத்யம் நிறுவனத்தினர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். பெரும் நிலச் சுவான்தார்கள். இத்தனை பெரிய செல்வந்தர்களையே, நில அபகரிப்புப் புகாரில் கைது செய்து, வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் இருந்த தியேட்டர்களை மன்னார்குடி கும்பல் எப்படி மிரட்டி வாங்கியுள்ளது 
பாருங்கள்..... 

. தற்போது சத்யம் குழுவினர் விற்பனை செய்வதற்கான காரணம், தொடர்ந்து மன்னார்குடி கும்பல் அளிக்கும் தொந்தரவுகளை சமாளிக்க முடியாததே. 

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஆம்ப்பா ஸ்கைவாக் என் மிகப் பெரிய மாலை பார்த்திராத சென்னைவாசிகள் இருக்கவே முடியாது. ஆறு மாடிகளோடு, 3 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடியில் இந்த மால் கட்டப்பட்டுள்ளது. செப்டம்பர் 2009ல் இந்த மால் திறக்கப்பட்டது. இந்த மாலில் மொத்தம் ஏழு தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களை இந்தியாவின் மிகப் பெரும் திரையரங்க நிறுவனமான பிவிஆர் இத்திரையரங்கங்களை லீஸ் அடிப்படையில் நடத்தி வருகிறது. 

2009 செப்டம்பரில் இந்த மால் தொடங்கப்பட்டபோது, சிஎம்டிஏ, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தடையில்லா சான்று பெற்ற பிறகே, இந்த மால் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் 2012ம் ஆண்டில், நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணா நகர் சந்திப்பில் 117 கோடி ரூபாய் செலவில் ஒரு பாலம் அமைக்க அரசு முடிவெடுத்தது. இதற்கான நில ஆர்ஜித ஆணை, நவம்பர் 2012ல் வெளியிடப்படுகிறது. ஆம்பா ஸ்கை வாக்குக்கு சொந்தமான சில நிலங்களும் இந்த பாலத்துக்காக கையகப்படுத்தப்படுகிறது. நிலம் கையகப்படுத்தப்பட்ட பிறகு பாலத்துக்கான வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

இந்த நேரத்தில், ஆம்பா ஸ்கைவாக் உரிமையாளர் வருடந்தோறும் வாங்க வேண்டிய தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்ற கேட்டு விண்ணப்பிக்கறார். 20 மார்ச் 2014 அன்று விண்ணப்பிக்கிறார். தீயணைப்புத் துறையின் இயக்குநர் 2 மே 2014 அன்று ஒரு பதில் எழுதுகிறார். அந்த பதிலில், “22 ஏப்ரல் 2014 அன்று, தீயணைப்புத் துறையின் குழு, ஸ்கை வாக் கட்டிடத்தை ஆய்வு செய்தது. அந்த ஆய்வின்போது, வடக்குப் பக்கத்தில் 2.85 மீட்டர் குறைகிறது, வடமேற்குப் பகுதியில் 4.5 மீட்டர் குறைகிறது, தெற்கு பகுதியில் முரண்பாடுகள் உள்ளது மற்றும் கிழக்குப் பகுதியில் குறைகள் உள்ளன, இதன் காரணமாக, தீவிபத்து ஏற்படும் நேரத்தில் உயரமான ஏணிகளை உடைய தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்த முடியாது என்ற காரணங்களை கூறி, தீயணைப்புத் துறை தடையில்லா சான்று மறுக்கப்படுகிறது. 

நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள். அந்த வீட்டின் முன்பாக 100 மீட்டர் இடம் விட வேண்டும் என்று சிஎம்டிஏ விதி என்று வைத்துக் கொள்வோம். அதன்படி, 100 மீட்டர் இடம் விட்டு, கட்டிடத்தை கட்டி முடிக்கிறீர்கள். மாநகராட்சியோ, நெடுஞ்சாலைத் துறையோ, பாலம் கட்ட அல்லது சாலை விரிவாக்கத்துக்காக உங்கள் இடத்தில் இருந்து 50 மீட்டரை நில ஆர்ஜிதம் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். சட்டபூர்வமாக ஒதுக்க வேண்டிய 100 மீட்டர் இடத்தை நீங்கள் ஒதுக்கத் தவறி விட்டீர்கள், ஆகையால் உங்கள் கட்டிடத்தை இடிக்கிறோம் என்று கூறினால் நீங்கள் என்ன செய்ய முடியும் ? 100 மீட்டர் இடத்தை நீங்களா ஒதுக்க மறுத்தீர்கள் ? 
இதுதான் ஆம்பா ஸ்கை வாக் விவகாரத்தில் நடந்துள்ளது. இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, ஸ்கைவாக் நிர்வாகத்தினர், நுழைவு வாயிலை விரிவாக்கம் செய்து, தீயணைப்பு வாகனங்கள் நுழையும் வகையில் கட்டுமானமும் செய்து விட்டனர். ஆனால், இது வரை, தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று வழங்கப்படவில்லை. இது குறித்து ஆய்வு செய்த சிஎம்டிஏ, 24 டிசம்பர் 2014 அன்று ஒரு கடிதம் எழுதுகிறது. அந்த கடிதத்தில், நெடுஞ்சாலைத் துறை ஆர்ஜிதம் செய்தது போக, தற்போது எஞ்சியுள்ள இடத்தையே போதுமான இடமாக கருதிக் கொள்ளலாம் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிஎம்டிஏவின் இந்தக் கடிதத்துக்குப் பிறகும், ஏறக்குறைய ஒரு வருடமாக, தீயணைப்புத் துறை தடையல்லா சான்று வழங்காமல், இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. 

பிறகு யாருடைய உத்தரவின்பேரில், தடையில்லா சான்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

17 ஜுலை 2014 அன்று, ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் என்ற நிறுவனத்தின் சிறப்பு கூட்டம், மக்கள் துணை முதல்வர் சசிகலா தலைமையில் நடந்தது. அந்த கூட்டம் நடந்த இடம் ஹாட் வீல்ஸ் இன்ஜினியரிங் நிறுவனத்தின் அலுவலகம் ப்ளாட் எண் 12, நாலாவது தளம், க்யான் அபார்ட்மென்ட்ஸ், பழைய எண் 19 மற்றும் 20/12, புதிய எண் 38/12, வெங்கட்ராமன் தெரு, தியாகராய நகர், சென்னை 17ல், இந்த கூட்டம் நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த முகவரியில், இந்த ஹாட் வீல்ஸ் மற்றும் ஜாஸ் சினிமாஸ் தவிர, குறைந்தது 15 நிறுவனங்களுக்கு மேல் செயல்பட்டு வருவதாக, பதிவாளர் அலுவலக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 15 நிறுவனங்கள் செயல்படும் அந்த இடம் எப்படித்தான் இருக்கிறது என்ற நேரில் சென்று பார்த்தால், அந்த இடம், சசிகலாவின் கணவர் நடராஜனின் தங்கை மகன் குலோத்துங்கனின் வீடு. 

அங்கே கம்பெனியும் நடக்கவில்லை, ஒரு புடலங்காயும் நடக்கவில்லை. இந்த அனைத்து நிறுவனங்களும் ஜெயலலிதாவின் பினாமி நிறுவனங்கள். வெறும் காகிதத்தில் மட்டுமே இயங்கும் நிறுவனங்கள். ஜெயலலிதா சட்டவிரேதமாக வசூல் செய்யும் லஞ்சப்பணத்தை வெள்ளையாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட நிறுவனங்களே இவை. 

தற்போது ஸ்கைவாக் நிறவனத்துக்கான அனுமதியை எதற்காக மறுக்க வேண்டும் ? 

பிவிஆர் குழுமம் சத்யம் திரையரங்கங்களை வாங்கினால், பீனிக்ஸ் மாலில் உள்ள 11 திரையரங்குகளையும் சேர்த்தே வாங்கும். அந்த 11 திரையரங்குகளும், சசிகலாவின் ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்துக்கு சொந்தமானவை. அந்த திரையரங்குகளை சத்யம் சினிமாஸ் லீஸ் அடிப்படையில் நடத்தி வருகின்றனர். அதே போல, ஆம்பா ஸ்கைவாக்கில் உள்ள 7 திரையரங்குகளையும் பிவிஆர் சினிமாஸ் லீஸ் அடிப்படையில் நடத்தி வருகின்றனர். பிவிஆர் தற்போது லீஸ் முறையில் நடத்தி வரும் ஆம்பா ஸ்கைவாக் திரையரங்கங்களின் லீஸ் உரிமையை ரத்து செய்ய வைத்து, அதை ஜாஸ் சினிமாஸ் பெற்றுக் கொண்டால், சத்யம் திரையரங்கங்களை வாங்கும் திட்டம் நிறைவேறாது அல்லவா ? முதலுக்கே மோசம் என்று பிவிஆர் துண்டை காணோம், துணியைக் காணோம் என்று ஓடுமா இல்லையா ? இதுதான் மக்கள் துணை முதல்வர் சசிகலாவின் திட்டம்.. 

ஊழல் வழக்கில் தண்டனை என்ற கத்தி தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கையிலேயே இத்தனை அயோக்கியத்தனங்களை அரங்கேற்றுகிறார்கள் என்றால், அந்த கத்தியும் இல்லாமல் போனால், தமிழகத்தின் நிலை என்ன என்பதை சற்றே யோசியுங்கள்..........வருமான வரித்துறைக்கு 110 கோடி யை என்னால் கட்ட இயலாது என்றுறு சொல்லிவிட்டு 1000 கோடியில் திரையரங்கு கள் வாங்கியுள்ளனர். இதை வருமான வரித்துறை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?
30-10-2015 தி இந்து ஆங்கில நாளிதழில் அதன் முதல் பக்கத்திலும், 7ஆம் பக்கத்திலும் அதிர்ச்சி தரத்தக்க செய்தி ஒன்று ஆதாரங்களோடு வெளி வந்துள்ளது. 
கடந்த சில மாதங்களாக இந்தச் செய்தி வார ஏடுகளில் வெளி வந்து பொது மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது என்ற போதிலும், அந்ந நாளிதழ் ஆதாரங்களோடு தொகுத்து இந்தச் செய்தியை புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளது.
"தமிழ்நாட்டில் திரையரங்குகள் நடத்துவதில் முன்னணியிலே உள்ள நிறுவனங்களில் ஒன்றான எஸ்.பி.ஐ. சினிமா நிறுவனம், வேளச்சேரியில் உள்ள "பீனிக்ஸ்" மார்க்கெட் சிட்டியில் உள்ள தங்களுடைய பதினோறு திரையரங்குகளையும் ஜாஸ் சினிமா நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்கள்" என்பது தான் முக்கிய செய்தியாகும்.
அந்தச் செய்தி பற்றி "இந்து" மேலும் அதாவது மத்திய அரசின் தனியார் நிறுவனங்கள் தொடர்பான அமைச்சகத்தின் வலைத்தளத்திலிருந்து அந்த இதழுக்குக் கிடைத்த தகவலின்படி, முன்னர் "ஹாட்வீல்ஸ் இஞ்சினீயரிங் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம் தான் தற்போது "ஜாஸ் சினிமா நிறுவனம்" என்று பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது. ஹாட்வீல்ஸ் இஞ்கினீயரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2005ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். 14-7-2014 அன்று வி.கே. சசிகலா மற்றும் ஜெ. இளவரசி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிறுவனத்தின் சிறப்புக் கூட்டத்தில் தான் பெயர் மாற்றம் பற்றி முடிவெடுக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. 
பிறகு நடைபெற்ற கூட்டத்திற்கு, ஜெ. இளவரசி தலைமை வகித்தார். கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானங்களை சசிகலா வழிமொழிந்தார்.
மேலும் பதினோறு திரையரங்குகள் கொண்ட "லக்ஸ் சினிமா" என்பது உரிய சான்றிதழ்களைப் பெறுவதில் ஏற்படுத்தப்பட்ட காலதாமதங்களுக்குப் பிறகு, கடந்த மார்ச் மாதம் திரைப்படங்களைப் பொது மக்களுக்குத் திரையிடத் தொடங்கியது என்றும், கார்த்திகேயன் கலியபெருமாள் மற்றும் சிவக்குமார் கூத்தப்பார் சத்தியமூர்த்தி ஆகியோர் "ஜாஸ்" சினிமா நிறுவனத்தின் இயக்குநர்கள் என்றும், அவர்கள் "மிடாஸ்" நிறுவனத்தின் இயக்குனர்களாகவும் இருக்கிறார்கள் என்றும் ஆவணங்களிலிருந்து தெரிய வருவதாக அந்த நாளேடு விரிவாக எழுதியுள்ளது. 
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் சென்னையிலுள்ள பி.வி.ஆர். திரைப்பட நிறுவனம், இந்த "லூக்ஸ்" திரைப்பட அரங்குகளை 600 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய் வரை விலைக்கு வாங்க பேசப்பட்டது
இதிலிருந்து சசிகலா, இளவரசி, கார்த்திகேயன் கலியபெருமாள், சிவக்குமார் கூத்தப்பார் சத்திய மூர்த்தி ஆகியோரெல்லாம் யார் என்பது ஒரு சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். இதில் சசிகலா என்பவர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி என்ற அங்கீகாரத்தோடு, அவரது வீட்டிலேயே பல ஆண்டுக் காலமாக வாழ்ந்து வருபவர் என்பதும், இப்போது கூட கோடநாட்டில் ஜெயலலிதாவுடன் அவர் தான் உடன் இருந்து வருகிறார் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்துக்கு, பிரபாவதி, அனுராதா என்று இரண்டு மகள்கள். பிரபாவதியின் கணவர் தான் டாக்டர் கே.எஸ். சிவக்குமார். இந்த சிவக்குமார் தான் ஹாட்வீல்ஸ் இஞ்சினீயரிங் நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டவர். 
மற்றொரு இயக்குனரான கார்த்திகேயன் கலியபெருமாள் யார் என்றால், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள இளவரசிக்கு இரண்டு மகள்கள். 
ஒருவர் பெயர் ஷகீலா ஜெயராமன். மற்றொருவர் பெயர் கிருஷ்ணபிரியா ஜெயராமன். ஒருவரின் கணவர் பெயர் ராஜராஜன். மற்றொருவரின் கணவர்தான் இந்தக் கார்த்திகேயன். இது தவிர இளவரசிக்கு விவேக் ஜெயராமன் என்றொரு மகன் உண்டு. 
அவர்தான் இப்போது போயஸ் தோட்டத்து கணக்கு வழக்குகளை கவனித்து வருகிறார்.
சென்னை வேளச்சேரியில் "ஃபீனிக்ஸ் மால்" என்று ஒரு வணிகவளாகம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த வணிகவளாகம் ஜனவரி 2013ல் தொடங்கப்பட்டது. இந்த வணிகவளாகம் மும்பையைச் சேர்ந்த பீனிக்ஸ் மில்ஸ் மற்றும் மற்றொரு தனியார் நிறுவனத்தோடு சேர்ந்து தொடங்கப்பட்டது. இந்த வணிகவளாகத்தில் "லூக்ஸ்" சினிமா என்ற பெயரில் மொத்தம் 11 தியேட்டர்கள் கட்டப்பட்டன. 
வணிகவளாகம் ஜனவரி 2013ல் தொடங்கப்பட்டாலும், இதில் உள்ள தியேட்டர்கள் மட்டும் மார்ச் 2014ல் தான் தொடங்கப்பட்டன. சென்னை மாநகரத்திலேயே மிகப்பெரிய வணிகவளாகத்தைக் கட்டியவர்களுக்கு தியேட்டரை மட்டும் உடனடியாக கட்டத் தெரியாதா? 
ஒரு ஆண்டு தாமதம் ஏன்? 
ஏன் தாமதம் என்றால் சென்னை மாநகரக் காவல்துறையும் இதர அமைப்புகளும், உள்நோக்கத்தோடு இந்த தியேட்டர்களைத் திறக்கத் தேவையான சான்றிதழ்களுடன் அனுமதி தரவில்லை.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பல பினாமி நிறுவனங்கள் இருந்தன என்பது நீதிபதி குன்ஹா அவர்களின் தீர்ப்பிலேயே சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. 
ஹாட்வீல்ஸ் இஞ்சினீயரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அத்தகைய பினாமி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் பெயரை "ஜாஸ்" சினிமா நிறுவனம் என்று மாற்றி, சத்தியம் சினிமா நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 600 கோடி ரூபாயிலிருந்து 1000 கோடி ரூபாய் மதிப்புடைய பதினோறு திரையரங்குகளை, ஜெயலலிதாவுடனேயே இருந்து வரும் சசிகலாவும், இளவரசியும், அவரது உறவினர் பெயரிலே வலியுறுத்தியும், மிரட்டியும் வாங்கியிருக்கின்ற செய்தி இன்று வீதிக்கு வந்து விட்டது.
 மேலும் இந்தக் குழுவினர் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள "போரம் மால்", மற்றும் "சத்தியம் திரையரங்கு வளாகம்" போன்றவைகளையும் வாங்குவதற்கான முயற்சியிலே ஈடுபட்டிருப்பதாகவும், ஆனால் அதன் உரிமையாளர்கள் அவற்றை விற்பதற்குத் தயங்குவதாகவும் செய்திகள் வந்து கொண்டு தான் உள்ளன.
தான் வாழ்வதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்காகத் தான் என்று கட்சியின் உடன்பிறப்புகளுக்கு "நீலிக் கண்ணீர்" கடிதம் எழுதிய ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் எப்படி யெல்லாம் சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கி விட்டன. 
முன்பு தமிழகமெங்கும் ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்தவர்கள் இப்போது திரைப்பட உலகத்தை வாங்குவதற்குத் திட்டமிட்டு இப்படிப்பட்ட செயல்களில் இறங்கியிருக்கிறார்கள்....

தான் வாழ்வதெல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்காகத் தான் என்று கட்சியின் உடன்பிறப்புகளுக்கு “நீலிக் கண்ணீர்” கடிதம் எழுதிய ஜெயலலிதாவுடன் இருப்பவர்கள் எப்படி யெல்லாம் சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கி விட்டன. 
முன்பு தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிக் குவித்தவர்கள் இப்போது திரைப்பட உலகத்தை வாங்குவதற்குத் திட்டமிட்டு இப்படிப்பட்ட செயல்களில் இறங்கியிருக்கிறார்கள். இவ்வாறு கோடிக்கணக்கிலே இந்தச் சொத்துக்களை வாங்குவதற்கு பின்னால் இருந்து முதலீடு செய்பவர்கள் யார்? 
அவர்களுக்கும், இவர்களுக்கும் என்ன தொடர்பு? 
இந்தக் கொள்முதல் எல்லாம் ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் நடக்குமா? 
என்ற அடுக்கடுக்கான கேள்விகள் தமிழக மக்கள் மனதில் எழாமல் இருக்குமா? 
இந்தப் புதிய சொத்துக் குவிப்பைப் பார்க்கும் போது
 “ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.


மது ஒழிப்பு பாடகர் கோவன் கைது:
டாஸ்மாக் அவலங்களை எடுத்துக்கூறி டாஸ்மாக்கை மூடு என்று மக்கள் மத்தியில் மது விலக்கை பாடிய குற்றத்துக்காக பாடகர் தோழர் கோவன் கைது.அதுவும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்.
அதுவு ம் மது பானத் தொழிற்சாலை நடத்தும் சாராய வியாபாரிகள் நிர்வாகத்தால்.
கைதுக்கு காரணமான பாடல் இதோ.

=========================================================================================
இன்று,
அக்டோபர்-31.

இந்திய விடுதலை போராட்ட வீரர் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்(1875)
 • இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு தினம்(1984)
 • முதல் தமிழ் பேசும் படமான காளிதாஸ் வெளியானது(1931)

இந்தியாவின் இரும்பு பெண்மணி  எனப்பட்ட இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி இதே நாளில் அவரது மெய்க் காவலர்களாகல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
===================================================================================
சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கு !
ந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை சர்தார்ஜி ஜோக்குகள் தமிழகம் உள்பட இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் ஃபேமசாக வலம் வந்தன. இந்திய பத்திரிகைகளில் குறிப்பாக ஆங்கில பத்திரிகைகள் மற்றும் வட இந்திய ஏடுகளில் இடம்பெறும் சர்தார்ஜி ஜோக்குகள் ரொம்பவே பாப்புலர்!
சர்தார் 1:  நாளைக்கு சினிமாவுக்கு போறேன் வாரியா?

சர்தார் 2: முடிஞ்சா வாரேன் 

சர்தார் 1 : முடிஞ்ச பின்னாடி எதுக்குடா வாரே ஆரம்பிக்கும் போதே வந்துடு
                                                                                  ------

சர்தார்: என்னோட செக்புக் தொலைஞ்சு போச்சு 

மேலாளர் : பார்த்து சார் யாராவது உங்க கையெழுத்த போட்டு ஏமாத்திட போறாங்க

சர்தார் : நான் என்ன பேக்கா இப்படியெல்லாம் நடக்கும்னுதான் முதல்லயே எல்லா செக்குளையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்.

                                                                        ---------
சர்தார் 1 : டேய் எதுக்குடா மெழுகுவர்த்தி ஏத்தி வச்சிருக்கே

சர்தார் 2 : கரண்ட் இல்லடா

சர்தார் 1 : சரி... சரி அந்த பேனையாவது போடு

சர்தார் 2 :  ஏண்டா உனக்கு அறிவு இருக்குதா ... மெழுகுவர்த்தி அணைஞ்சுடாது?
                                                                          --------
சர்தார்ஜியின் தந்தை இறந்து விட்டார். அவர் ரொம்பவே அழுது கலங்கி போய் இருந்தார். அந்த சமயத்தில் சர்தார்ஜிக்கு ஒரு போன் வந்தது. போனில் சொன்ன தகவலை கேட்டதும் சர்தார்ஜி இன்னும் கதறி அழத் தொடங்கினார். ஐயோ நான் என்ன செய்வேன்... இப்போதான் என் தங்கை போன் செஞ்சா... அவளோட  தந்தையும் இறந்து போய் விட்டாராம் என்று சொல்லியவாறே மீண்டும் மீண்டும் குலுங்கி  குலுங்கி அழுதார். 
இந்நிலையில் சர்தார்ஜிக்களை முட்டாள்களாகவும், அறிவற்றவர்களாகவும் சித்தரிக்கும் இந்த சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
ஹர்வீந்தர் சவுத்ரி என்பவரால் தொடரப்பட்ட இந்த பொதுநல வழக்கினை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு மும்பையில் சர்தார்ஜிகளை கிண்டல் அடித்து 'சண்டா பாண்டா' என்ற பெயரில் புத்தகம் வெளியிடப்பட்டது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த புத்தக வெளியீட்டாளர் ரஞ்சித் பிரானாடே என்பவர் கைது செய்யப்பட்டார். 
வெள்ளி, 30 அக்டோபர், 2015

பேஸ்புக் திட்டம்

இந்தியாவில்  வேட்டை, ஆரம்பம்.

வர்த்தகத்தில் இந்தியா எனும் மிகப் பெரிய சந்தையை கைப்பற்றும் நோக்கத்துடன் பன்னாட்டு பகாசுர கார்ப்பரேட் கம்பெனிகள் இடைவிடாமல் முற்றுகையிட்டு வரும் நிலையில், இணையதள வர்த்தகத் திலும் மிகப் பெரும் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் `முகநூல்’ என தமிழகத் தில் கூறப்படும் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் இந்தியா வந் துள்ளார்.
புதுதில்லியில் ஐஐடி மாண வர்களிடையே உரையாற்றிய அவர், ‘இணையச் சமநிலை’யை தான் ஆதரிப்பதாக கூறிக் கொண்டார்;
 அதே நேரத் தில், இலவச இணையச் சேவைபெறுவதற்கான மக்களின்உரிமை குறித்த கோட்பாடு களுக்கு எதிராகவே அவரதுமுழு உரையும் அமைந்திருந்தது.
புதனன்று தில்லிக்கு வந்த மார்க் ஜூக்கர்பெர்க், ஐஐடி வளாகத்தில் சுமார் 1000 மாண வர்கள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசி னார். 
அதிகாரமட்டத்தை தாண்டி மக்களுடனான சந்திப்பு என்ற முறையில், இந்தியாவில் மார்க் பங்கேற்றுள்ள முதல் நிகழ்ச்சி இது.அவர் பேசுகையில், தனதுபேஸ்புக் நிறுவனம் இணையச்சமநிலை என்ற கோட்பாட் டிற்கு இசைவு தெரிவிப்பதாக கூறினார். 
ஆனால் அதேநேரத்தில், தனது நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர் களுக்கு ‘ஜீரோ கட்டணம்’ (அதாவது இலவசம் என்ற பெயரில்) என்ற முறையில் அளிக்கப்படும் சேவைகள் அவசியம் அனைத்து மக்களை யும் சென்றடைய வேண்டும் என்றும் கூறினார்.
மாணவர்களுடனான கேள்வி - பதில் உரையாடலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பேஸ்புக் நிறுவனம் இணையச் சமநிலை என்ற கோட்பாட்டை ஆதரிக்கிறதா என்று எழுப்பப் பட்ட கேள்விக்கு பதிலளித்த மார்க், இணைய சமநிலையை ஆதரிக்கிறோம்; 
ஒழுங்குமுறை என்ற அடிப்படையில் பல்வேறு நாடுகள் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு உருவாக்கியுள்ள விதிகளையும் ஆதரிக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
மற்றொரு கேள்விக்கு பதி லளித்த அவர், உலகில் உள்ள ஒவ் வொரு குடிமகனுக்கும் இலவச இணையச் சேவை அளிப்பது என்பது மிக அதிகமான செலவு பிடிக்கும் ஒன்றாகும் என்று கூறியதுடன், தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது பய னாளர்களுக்கு இணையச் சேவையை கொண்டு சேர்ப்ப தற்காக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கின்றன என்று கூறினார்.
இந்தியாவில் தங்களது நிறு வனம் ‘ப்ரீ பேசிக்ஸ் டாட் ஆர்க்’ என்ற தளத்தின் மூலம் அளிக்கும் கட்டணமில்லா சேவையை அனைவருக்கும் கொண்டு செல்ல முயற்சிக்கிறோம் எனக்குறிப்பிட்ட மார்க் ஜூக்கர் பெர்க், இது இணையச் சம நிலையை உறுதி செய்யும் என்றும் கூறினார்.இந்தியாவை பொறுத்த வரை அனைவரும் இணைய தளச் சேவையை பெற வேண்டும்; 
ஒட்டுமொத்த இந்தியா வும் இணையத்துடன் இணைக் கப்படாமல் உலகத்துடன் இந்தியா இணைய முடியாது என்றும் அவர் கூறினார்.
தில்லி ஐஐடி நிகழ்ச்சியில் பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் பங்கேற்றதும் அவர் மேற்கண்ட முறை யில் உரையாற்றியதும் முழுக்கமுழுக்க இந்திய இணையதள சந்தையை கைப்பற்றுவதற் காகவே என்று இந்தியாவில் தீவிரமாக செயல்படும் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பேஸ்புக் நிறுவனம் உலகம் முழுவதும் தனது பயனாளர்களாக இருக்கும் கோடிக் கணக்கான நபர்களின் பெயரில், அவர்களது ஒவ்வொரு பேஸ்புக் கணக்கிற்கும் 12.76 டாலர் அளவிற்கு கட்டணத்தை, விளம்பர தாரர்களிடமிருந்து வசூலித்துக் கொண்டிருக்கிறது என்பது பேஸ்புக் பயனர்களே அறியாத உண்மை; அதாவது தனது பயனர்கள் ஒவ்வொருவரையும் விளம்பரதாரர்களிடம் பேஸ்புக் நிறுவனம் விற்றுவிட்டது என்பதே இதன் பொருள் என கட் டற்ற மென்பொருள் இயக்கம் சுட்டிக்காட்டுகிறது.
இந்நிலையில், 2017ம் ஆண் டில் ஒவ்வொரு பயனருக்குமான கட்டணத் தொகையை 17.5 டாலராக நிர்ணயம் செய்வதற்கு மார்க் ஜூக்கர்பெர்க் திட்ட மிட்டுள்ளார். 
மேலும், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளில் பேஸ்புக் நிறுவனம் அதன் உச்சகட்ட பயனர்களை பெற்றுவிட்டது; இனிமேல் பெறுவதற்கு அங்குபயனர்கள் இல்லை. 
எனவே,புதிய பயனர்களை தேடி பேஸ்புக் நிறுவனம் புறப்பட்டிருக் கிறது. 
அப்படிப்பட்ட பெரும் சந்தையாக இந்தியாவையும், ஆப்பிரிக்க நாடுகளையும் அது குறிவைத்திருக்கிறது. 
அதனால்தான் ஒட்டுமொத்த இந்தி யாவும், தனது தளத்துடன் இணைய வேண்டும் என்றுஜூக்கர்பெர்க் கூறுகிறார் என் றும் கட்டற்ற மென்பொருள் இயக்கம் சுட்டிக்காட்டுகிறது.
மேலும், இந்தியாவில் பேஸ்புக் மட்டுமின்றி இன்டர் நெட் டாட் ஆர்க் என்ற தளத்தின்மூலம் இலவச சேவை என்ற பெயரில் பேஸ்புக், வாட்ஸ் அப், விக்கிபீடியா உள்ளிட்ட 4 தளங்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு செய்தது. இதில் ஒருமுக்கிய சூட்சமம் அடங்கி யுள்ளது. 
இலவச சேவை என்றபெயரில் மேற்கண்ட 4 தளங் களை மட்டுமே ஒரு நபர் பார்க்கமுடியும்; இதைத் தவிர வேறு எந்த தளத்தையும் பார்க்க முடியாது என்பதே உண்மை. இதை பேஸ்புக் நிறுவனம் இலவச சேவை என்றும், அதை அனை வருக்கும் கொண்டு செல்லப் போவதாகவும் கூறுகிறது. 
இதன்மூலம் எந்தவொரு இணையதள பயனரும், எந்தவொரு தளத்தை யும் பார்வையிடுவதற்கு உள்ள உரிமையை பேஸ்புக் நிறுவனம் பறிக்கிறது. இதுகுறித்து பிரச்ச னை எழுப்பப்பட்டதால் அந்தத் தளத்தின் பெயரை தற்போது ப்ரீபேசிக்ஸ் டாட் ஆர்க் என்று மாற்றியுள்ளது.
அதுமட்டுமல்ல, இந்த சேவைகள் அனைத்தையும் இந்தியாவில் ஏற்கெனவே மத்திய அரசின் மகத்தான பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நாடு முழுவதும் உருவாக்கி வைத்திருக்கும் ஆப்டிக்கல் பைபர் நெட்வொர்க் எனப்படும் கண்ணாடி இழை நெட்வொர்க் மூலமாகவே பேஸ்புக் நிறுவனம் கொண்டு செல்லப் போகிறது. 
அதாவது பொதுத்துறை நிறுவனம் போட்டு வைத்துள்ள பாதையை இலவசமாக பயன்படுத்தி பேஸ்புக் நிறுவனம் மிகப் பெரும்கொள்ளை லாபம் அடிக்கப் போகிறது. 
இதற்காகவே, பிரதமர் நரேந்திரமோடியின் ஆதரவுடன் மார்க் ஜூக்கர்பெர்க் இந் தியா வந்துள்ளார் என கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினர் குற்றம்சாட்டினர்.
=====================================================================================
மனிதனை விட மாடு  முக்கியம்.?

வாய்ச்சொல்லில் வீராரான மோடியின் வானத்தை வில்லாக்கும் பேச்சில் மயங்கி வாக்களித்த மக்கள் எல்லோரும் இந்த ஓராண்டு ஆட்சியில் வாயில்லா மாடுகளாகி விட்டனர்.
அதனால் மாடுகள் தங்கள் மதிப்பை ஆர்.எஸ்.எஸ்.தயவில் உயர்த்திக்கொண்டது.
இங்கு மனிதனை கொள்வதை விட மாடுகளை இறைச்சிக்காக  கொல்வது மிக கொடுமையான குற்றமாகி விட்டது.
மாட்டின் இறைச்சிகளை முஸ்லீம்  பெயரில் நிறுவனங்களை நடத்தி ஏற்றுமதி செய்து பணம் குவிக்கும்  பாஜ .க வினர் மற்றவர்களை மாட்டிறைச்சி தின்றார்கள் என்று தவறாக  சொல்லி பரிதாபமாக கொல்லும் அநியாயங்களை இந்த நாட்டில் பிரதமர் கண்டுகொள்ளாதது மிக அநீதி.இவர் இந்த நாட்டில் உள்ள தீவிர இந்துக்களுக்கு மட்டும் பிரதமர் இல்லை.
இங்கு வாழும் 112 கோடி மக்களுக்கும் பிரதமர் என்பதையே மறந்து விட்டார்.
அதில் கோடிகே கணக்கில் இசுலாமியர்களும் உண்டு,கிருத்துவர்களும் உண்டு.
வெங்காயத்தால் மாநில ஆட்சியை இழந்தவர்களை பார்த்த இந்தியா மாட்டிறைச்சிக்காக இந்தியாவின் ஆட்சியை விரைவில் பறி கொடுக்கும் காவி தீவிரவாதிகளையும் பார்க்கத்தான் போகிறது.

புதுதில்லியில் உள்ள கேரள அரசு இல்லத்தில் மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறதா ? 

என மத்திய உள்துறை அமைச்சகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தில்லி போலீசார் மற்றும் இந்து சேனா குண்டர்கள் இணைந்து சோதனை நடத்தியிருக்கின்றனர். 
இதுஇந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக் கிறது. மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பின்னர், ஆர்எஸ்எஸ் வழி காட்டுதல்படி இந்து மதவெறி அமைப்புகள் எந்த எல்லைக்கும் செல்வதை சமீபகாலமாக பார்க்க முடிகிறது. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வதந்தியைபரப்பி தாத்ரியில் முகமது இக்லாக் என்ற பெரிய வரைபாஜகவினர் அடித்தே கொன்றனர். 
அதைத் தொடர்ந்தே காஷ்மீரில் மாட்டை கடத்துவதாக வதந்தியைகிளப்பி ஷியத்அகமத் என்ற இளைஞரை சங்பரிவாரஅமைப்பினர் அடித்துக் கொன்றனர்.
இமாச்சலப் பிரதேசத்திலும் இதே போல் மாடுகளை வெட்டுவதற்கு ஏற்றுவதாகக் கூறி நோமன் என்பவரை பஜ்ரங்தள் கும்பல் அடித்தே கொன்றது.
இதே போன்றுஇந்த காலத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 5 பேர் மாட்டிறைச்சியைத் தொடர்புபடுத்தி சங்பரிவாரஅமைப்புகளால் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டிருக்கின்றனர். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதரைக் கடித்த கதையாக, மாட் டுக்கறி சாப்பிட்டதாகக் கூறி காஷ்மீர் மாநில சட்ட மன்றத்திலேயே எம்எல்ஏ ஒருவர் பாஜகவினரால் தாக்கப்பட்டார். தற்போது தில்லியில் உள்ள கேரள அரசு இல்லத்தில் எம்பிக்களை குறிவைத்து இந்து சேனா காயை நகர்த்தத் துவங்கியிருக்கிறது. இது மாட்டிறைச்சியோடு முடியும்பிரச்சனையல்ல, மத்திய அரசிற்கும் மாநில அரசிற் கும் இடையிலான அர சியல் சாசன ரீதியான உறவுக்குஉலை வைக்கும் நடவடிக்கையாகும். 
யாராக இருந்தாலும் நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதைத்தான் மற்றவர்கள் செய்ய வேண்டும் எனசங்பரிவாரம் விடுக்கும் மிரட்டலாகவே இதுஇருக்கிறது.

அதனை ஆமோதிக் கும் விதத்தில் சர்வாதிகாரத் தோரணையில் எதற்கும் அசைந்து கொடுக்காமல் கள்ள மவுனம் காக்கிறார் பிரதமர் மோடி. பன்முகத்தன்மை கொண்ட இந்தியா வை இந்துத்துவம் என்ற பாசிசக் குடுவைக்குள் அடைப்பதற்கான முயற்சி நடக்கிறது. மாடு தின்னும் புலையர் என்று இதே மாட்டுக்கறியின் பெயரால்தான் வரலாறு நெடுகிலும் கோடானகோடி தலித் மக்களும் ஆதிவாசிகளும் தீண்டாமைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள். 
தற்போது அதே ஆயுதத்தை சிறு பான்மையினருக்கு எதிராக, பசு புனிதம் என்ற பெயரில் இந்து மதவெறியர்கள் பயன்படுத்து கிறார்கள். உழைக்கும் இந்து மக்களுக்கு எதிராக இந்துத்துவ மதவெறி சக்திகள் மாட்டிறைச்சியின் மூலம் மனுநீதியை நிலைநாட்ட முயல்கின்றனர்.
இந்தியாவிலிருந்து உலகம் முழுவதும் மாட்டி றைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய மாட்டிறைச்சியை வெளிநாட்டினர் உண்ணலாம். ஆனால்இந்தியாவில் பிறந்த உழைக்கும் மக்கள் உண்ணக்கூடாது என்பதுதான் இந்துத்துவ வாதிகளின் நியதி. 
இந்தியாவில் இன்று அதிகமாக இருக்கும்பசுக்களுமே பன்னாட்டுக் கலப்பினம் என்பது வேறுகதை. புனிதமாகக் கருதுபவர்கள் மாட்டிறைச்சியை உண்ணாமல் இருக்கலாம், அது அவர்களின் உரிமை. ஆனால் மற்றவர்களை கட்டாயப்படுத்துவதற்கு என்ன உரிமை இருக்கிறது? 
இதனை அனுமதித் தால் நாளை, என்னென்ன சொல்வார்களோ? 
இது ஏதோ மாட்டிறைச்சி சாப்பிடுபவருக்கும், சாப்பிடாதவர்களுக்கும் உள்ள பிரச்சனையல்ல. இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பன்முகத்தன்மையை சவக்குழியில் புதைக்கும் ஏற்பாடு இது.
 இந்தியாவின் நல்லிணக்கத்தை பாது காக்க, இந்துத்துவ கும்பல்களின் உள் அரசியலை புரிந்து கொண்டு, மக்களை பிளவுபடுத்துவதை ஜனநாயக சக்திகள் அனுமதிக்கக் கூடாது.
======================================================================================

இன்று,
அக்டோபர்-30.
 • உலக சிக்கன தினம்
 • இந்தியா ஐநாவில் இணைந்தது(1945)
 • இந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் பிறந்த தினம்(1908)
 • இந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் நினைவு தினம்(1963)
 • செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்த ஹென்றி டியூனாண்ட் நினைவு தினம்(1910)நடிகர் விவேக் மகன் மூளைக் காய்ச்சலால் மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்த 40 நாட்களாக பிரசன்னா(13) மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் விவேக் மகன் பிரசன்னா உயிர் பிரிந்தது.
நம்மை எல்லாம் சிரிக்க வைத்தவருக்கு சோகம்.
======================================================================================
                                  வாலிக்கு 29அக்டோபர் பிறந்த தினம்.புதன், 28 அக்டோபர், 2015

ஆன்லைனில் ஆபத்து[ மருந்து ] விற்பனை
 மருந்துகளையும் ஆன்லைனில் விற்பதற்கு அனுமதியளிக்க முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு. விரைவில் ஆன்லைன் மருந்துக்கடைகள் முளைக்க இருக்கின்றன. ஆனால், ‘‘இது தேசத்தை ஆபத்தில் தள்ளிவிடும். மக்களின் உயிரோடு விளையாடும் முயற்சி இது’’ என்று எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
‘‘இந்தியாவில் 7.25 லட்சம் மருந்துக்கடைகள் இருக்கின்றன. 75 ஆயிரம் மொத்த விற்பனையாளர்கள் இருக்கிறார்கள். 
ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு வணிகம் நடக்கிறது. இந்த வணிகத்தை மொத்தமாக பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதற்காகவே  ஆன்லைன் பார்மசிகளை அனுமதிக்கப் பார்க்கிறது மத்திய அரசு...’’ என்பது மருந்து வணிகர் சங்கங்களின் குற்றச்சாட்டு. 
அரசின் முடிவைக் கண்டித்து கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் எனக் களமிறங்கியிருக்கின்றன அந்த அமைப்புகள்.


‘‘எலெக்ட்ரானிக் பொருட்கள், ஆடைகளை ஆன்லைனில் விற்பதற்கும், மருந்துப் பொருட்களை விற்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. 
மருந்து வணிகம் மிகவும் கட்டுக்கோப்பானது. விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மாத்திரைக்கும் ஒரு நீண்ட வரலாறை மருந்தகங்கள் பராமரிக்கின்றன. குறிப்பிட்ட நாளில் விற்ற ஒரு மாத்திரையில் பிரச்னை இருப்பதாகக் கருதினால், அதைத் தயாரித்த கம்பெனி, தயாரித்து பேக் செய்யப்பட்ட நாள், அதன் டிஸ்ட்ரிபியூட்டர், மருந்தகத்திற்கு வந்த நாள், விற்ற நாள், வாங்கிய நபர் உள்பட அத்தனை தகவல்களையும் சில நிமிடங்களில் எடுத்து விடலாம்.  மருந்தில் பல வகைகள் உண்டு.

 ‘ஓவர் த கவுன்ட்டர்’ பிரிவில் வரும் மருந்துகளை பெட்டிக்கடைகளில் கூட வைத்து விற்கிறார்கள். சில மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்தால் மட்டுமே தர வேண்டும். சைக்கியாட்ரிக் நோய்களுக்கான மாத்திரைகளில் போதை தரக்கூடிய சில ரசாயனங்கள் உண்டு. 
மருத்துவரின் சீட்டு இருந்தால் மட்டுமே அந்த மாத்திரைகளை விற்க வேண்டும். தவறாகக் கொடுத்து விட்டாலோ, காலாவதியான மாத்திரைகளைத் தந்து விட்டாலோ பல விளைவுகள் ஏற்படும்.

இவ்வளவு பொறுப்புகள் நிறைந்த மருந்து விற்பனையை ஆன்லைனில் கொண்டு வருவது நிச்சயம் எதிர்பாராத பாதிப்புகளை உருவாக்கிவிடும். இதில் இரண்டு விதமான பாதிப்புகள் உண்டு. 
ஒன்று மக்களுக்கானது, மற்றொன்று மருந்து வணிகர்களுக்கானது. 
‘மருத்துவர் தரும் மருந்துச் சீட்டை ஸ்கேன் செய்து ஆர்டர் செய்தால், ஆன்லைன் பார்மசி மருந்தை வீட்டுக்கே அனுப்பும்’ என்கிறார்கள்.

மருத்துவர்கள் எழுதும் மருந்துச்சீட்டை பழக்கப்பட்ட நபர்களால் மட்டுமே படித்துப் புரிந்துகொள்ள முடியும். அடுத்த தெருவில் இருக்கும் மருந்தகங்களுக்குச் சென்றாலே, நன்கு விசாரித்தபிறகுதான் ‘இந்த மருந்து’ என்று முடிவு செய்வார்கள். 
ஆன்லைனில் அனுப்பும் மருந்துச்சீட்டை ஆன்லைன் பார்மசியில் இருப்பவர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்கள் என்பது முதல் நடைமுறைச் சிக்கல்.

பெரும்பாலான மக்களுக்கு மருந்தைப் பற்றி எதுவும் தெரியாது. மருத்துவர்கள் எழுதும் மருந்தை பார்மசியில் உள்ளவர்கள் சரியாகத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் வாங்கிச் சாப்பிடுபவர்களே அதிகம்.

ஒருவேளை மருந்து ஒவ்வாமை ஏற்படுத்தினாலோ, காலாவதி ஆகியிருந்தாலோ, தவறாகத் தந்துவிட்டாலோ உடனடியாக சம்பந்தப்பட்ட மருந்தகத்துக்கு வந்து கேட்பார்கள். ஆன்லைன் பார்மசியில் அதற்கான வாய்ப்பு இல்லை. 
ஆன்லைன் பார்மசியின் அலுவலகம் இந்தியாவின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும். அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து பொறுப்பேற்கச் செய்வது எளிதில்லை.

ஏற்கனவே ஆன்லைன் வணிகத்தில் ஏகப்பட்ட மோசடிகள் நடக்கின்றன. மொபைல் போன் வாங்க பணம் கட்டினால் செங்கல் வருகிறது. தவறு செய்யும் ஆன்லைன் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு நம்மிடம் தொழில்நுட்பமும் இல்லை. 
கட்டுப்பாடாக விற்கப்பட வேண்டிய போதை தரும் மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகள் எல்லாம் சர்வசாதாரணமாக ஆன்லைனில் விற்கப்படலாம். அறைக்குள் இருந்தபடியே மாத்திரை வாங்கும் வாய்ப்பு கலாசாரச் சீரழிவை
உருவாக்கலாம்.

அமெரிக்கா, பிரிட்டன், பல்கேரியா ஆகிய நாடுகளில் ஆன்லைன் பார்மசிகள் உள்ளன. அங்கெல்லாம் மிகப்பெரிய ஆன்லைன் டேட்டாபேஸ் இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்தனியாக நம்பர் தந்திருக்கிறார்கள்.

தவிர, டாக்டர்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், மருந்தாளுனர்கள் அனைவரையும் ஆன்லைனில் இணைத்து ஒரு டேட்டா லிங்க் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். 
மருத்துவமனைக்கு ஒரு நோயாளி வந்தால் அவரைப் பற்றிய டேட்டா, அவர் வாங்குகிற மருந்து, வாங்குகிற மருந்தகம், பார்த்த மருத்துவர் வரை அனைத்தும் ஆன்லைனில் பதிவாகிவிடும்.

இத்தனை ஏற்பாடுகள் இருந்தும் கூட அங்கு ஏராளமான பிரச்னைகள் நடக்கின்றன. அமெரிக்காவில் 360 ஆன்லைன் பார்மசிகளை அரசு அங்கீகரித்திருக்கிறது. ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி பார்மசிகள் ஆன்லைனில் இருக்கின்றன. 
வயாக்ராவில் இருந்து, கருக்கலைப்பு மருந்துகள் வரை அனைத்தும் விற்கின்றன.

இந்தியாவில் இப்போதுதான் 10 சதவீதம் பேர் இணையத்தை உபயோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ‘டிஜிட்டல் இந்தியா’ என்கிற குரலே இப்போதுதான் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. மருத்துவமனைகள், மருத்துவர்கள் சார்ந்த முழுமையான கணக்கெடுப்புகள் எதுவும் அரசிடம் இல்லை. 
ஆன்லைன் தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமையும் நமக்கு இல்லை. இப்படியான சூழலில் ஆன்லைன் பார்மசிகளை அனுமதிப்பது பெரும் பாதகத்தை உருவாக்கும்.

ஆன்லைன் வணிகத்தில் உணவுப்பொருட்களை சேர்த்ததால் ஏற்பட்ட விளைவுகளை இன்றைக்கும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். தொழிலுக்குத் தொடர்பில்லாத பெரு முதலாளிகள் உள்ளே நுழைந்து கோலோச்சத் தொடங்கிவிடுவார்கள். 
ஒரு கட்டத்தில் மருந்துக் கடைகளே இல்லாமல் போய்விடும். 
அவசரகால தேவைக்கான மருந்துக்குக்கூட ஆன்லைன் பார்மசிகளை நாட வேண்டியிருக்கும். கிராமப்புற, அடித்தட்டு மக்களுக்கான மருத்துவத் தேவைகள் நிறைவேறாமல் போய் விடும் அபாயம் உள்ளது’’ என்கிறார் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தின் செயலாளர் எஸ்.எஸ்.செல்வம்.

‘‘இந்தியாவில் 8 லட்சம் பேர் நேரடியாக பார்மசி தொழிலைச் சார்ந்திருக்கிறார்கள். சுமார் 40 லட்சம் பேர் இந்தத் துறையில் பணியாற்றுகிறார்கள். அவர்களை நம்பி ஒன்றரைக் கோடிப் பேர் இருக்கிறார்கள். வேலைவாய்ப்புகளை உருவாக்கி வாழ்வளிக்க வேண்டிய அரசு இத்தனை பேரின் வாழ்வாதாரத்தைப் பிடுங்கி சாலையில் நிறுத்தப் பார்க்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். 
அரசின் முடிவை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்துவோம்...” என்கிறார் அவர். இந்திய மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் சங்கமும் அரசின் முடிவை எதிர்க்கிறது.

‘‘டிரக்ஸ் அண்ட் காஸ்மெடிக்ஸ் சட்டம், மேஜிக் ரெமெடி அண்ட் அப்ஜெக்‌ஷனபிள் அட்வர்டைஸ்மென்ட் ஆக்ட் ஆகிய சட்டங்கள் மருந்து வணிகத்தை கட்டுப்பாடாகவும், தவறில்லாமலும் நடத்த வழிவகை செய்கின்றன. 
இந்த இரண்டு சட்டங்களுக்கும் முரணானது அரசின் முடிவு. ‘
ஷெட்யூல்டு டிரக்ஸ்’ எனப்படும் மிகக் கவனமாகக் கையாளவேண்டிய மருந்துகள் பல இருக்கின்றன.

அவற்றை ஆன்லைனில் விற்பது பெரும் ஆபத்தில் முடியும். தனி நபர்களின் நலனைக் கருதி அரசு முடிவெடுக்கக்கூடாது. ஒட்டுமொத்த மக்களின் உயிர் பிரச்னை இது. 
மிகவும் கவனமாகவும், அக்கறையோடும் நடந்து கொள்ள வேண்டும்...
நடந்து கொள்ளுமா அரசு..?

கட்டுப்பாடாக விற்கப்பட வேண்டிய போதை தரும் மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகள் எல்லாம் சர்வசாதாரணமாக ஆன்லைனில் விற்கப்படலாம்.
                                                                                                                 -வெ.நீலகண்டன்
நன்றி:குங்குமம்.
---                                                    
===================================================================================
இன்று,
அக்டோபர்-29.
 • துருக்கி குடியரசு தினம்(1923)
 • தங்கனிக்கா மற்றும் சன்சிபார் ஆகியவை இணைந்து தான்சானியா குடியரசு உருவானது(1964)
 • கல்கியின் பொன்னியின் செல்வன் புதினம், முதல் முறையாக தொடராக வெளிவர ஆரம்பித்தது(1950)

 • சுவிட்சர்லாந்தில் 16 நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அமைக்க தீர்மானித்தனர்(1863)
நேபாள நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக- நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) சார்பில் போட்டியிட்ட வித்யா தேவி பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

அவர், நேபாள நாட்டின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். நேபாளத்தில், 2008-ஆம் ஆண்டு மன்னராட்சிக்கு முடிவு கட்டப்பட்டு, மக்களாட்சி நிறுவப்பட்டது. ராம்பரண் யாதவ் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
இந்நிலையில் அண்மையில் நேபாளத்துக்கான புதிய அரசியல் சாசனம் பிரகடனப் படுத்தப்பட்டது. நேபாளம் ‘மதச்சார்பற்ற’ நாடு என அறிவிக்கப்பட்டது. 
புதிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சர்மா ஒலி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஆவார். 
அதைத்தொடர்ந்து, புதிய அரசியலமைப்பு சட்டத்தின் கீழான முதலாவது குடியரசுத் தலைவர் தேர்தல் புதனன்று நடைபெற்றது.

நேபாள காங்கிரஸ் கட்சியின் குல் பகதூர் குருங், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) துணைத் தலைவரான வித்யா தேவி பண்டாரி, நேபாள உழைப்பாளர் மற்றும் விவசாயிகள் கட்சி சார்பில் நாராயண் மகாஜன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) சார்பில் போட்டியிட்ட வித்யாதேவி பண்டாரி வெற்றிபெற்றார். 
மொத்தம் பதிவான 549 வாக்குகளில் வித்யாதேவி பண்டாரி 327 வாக்குகளைப் பெற்று குடியரசுத் தலைவர் ஆனார். 
அவருக்கு அடுத்தபடியாக வந்த நேபாள காங்கிரஸ் கட்சியின் குருங் 214 வாக்குகள் பெற்றார்.
குடியரசுத் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்ட வித்யாதேவி பண் டாரி, நேபாளத்தில் இப்பதவிக்கு வந்த முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றார்.

 நவ., 13ல் உலகம் அழியுமா?
பூமிக்கு  வரும் ஆபத்து
விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு மர்மப் பொருள், பூமியை நோக்கி அசுர வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. இது, நவ., 13ம் தேதி இலங்கைக்கு அருகே விழப் போகிறதாம். இதனால் உலகம் அழியும் என்ற பீதி மீண்டும் கிளம்பியுள்ளது.

விண்வெளியில் இருந்து அடையாளம் தெரியாத 'டபிள்யு.டி.1190எப்' என பெயரிடப்பட்ட ஒரு மர்மப் பொருள் பூமியின் மேற்பரப்பை நோக்கி பறந்து வருவதாக ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 7 அடி நீளமுள்ள வளையும்தன்மையுடைய அந்த பொருள் விண்வெளியில் உள்ளகுப்பை, விண்கற்கள் அல்லது அப்பல்லோ விண்கலத்தின் ஒரு பாகமாக கூட இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். 

வழக்கமாக விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் பொருட்கள் வரும்வழியிலேயே எரிந்து சாம்பலாகி விடும். ஆனால், இந்த பொருள் எரியாமல் நேரடியாக பூமியின் மேற்பரப்பில் மோதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மர்ம பொருளை 2013ல் கேட்டலினா ஸ்கை சர்வே மூலம் முதன் முதலில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். 
இதன் பின் விஞ்ஞானிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது, வரும் நவ., 13ம் தேதி காலை 11.45 மணிக்கு இந்தியப்பெருங்கடலில் இலங்கையின் தென் பகுதியில் 65 கி.மீ., தொலைவில் கடலில் விழும் என கணிக்கப்பட்டுள்ளது. இது சிறிய அளவே இருப்பதால் பாதிப்பு அரிதாகத் தான் இருக்கும். உலகம் அழிய வாய்ப்பு இல்லை. பூமி மூன்று பங்கு கடலால் சூழப்பட்டுள்ளதால், கடலில் எங்கு விழுந்தாலும் பாதிப்பு ஒன்றுமில்லை.


ஏன் கடினம்:விண்வெளியில் சுற்றி வரும் இம்மாதிரியான மர்மப் பொருட்கள் பற்றிய முழுமையான விவரத்தை கண்டறிவது மிகவும் கடினம்.இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம்(நாசா) வெளியிட்டுள்ள அறிக்கையில்,'விண்வெளியில் நுாற்றுக்கணக்கான செயற்கைக் கோள்கள், விண்கலன்கள் ஏவப்பட்டு சுற்றி வருகின்றன. 

இதில், காலாவதியான செயற்கைக்கோள்கள் செயல்பாட்டிலுள்ள செயற்கைக்கோள்களுடன் மோதுதல் உள்ளிட்ட காரணங்களால் விண்வெளி குப்பைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இவை மணிக்கு 28,100 கி.மீ., வேகத்தில் சுற்றி வருகின்றன. அதுவும் 5 லட்சம் பொருட்கள் இந்த மாதிரி விண்வெளியில் உள்ளன. 

செயற்கைக்கோள்கள் ஒன்றோடொன்று மோதுவதை தடுப்பது கடினமான பணியாக உள்ளது. தற்போது விண்வெளி குப்பைகளை சுத்தம் செய்யும் திட்டத்தை தொடங்க உள்ளோம்' என, குறிப்பிட்டுள்ளது.

===================================================================================
மீண்டும் நன்றிகள்!


'சுரன் "பக்கம் வந்து சென்றவர்கள் எண்ணிக்கை 6,00,000 ஆறு லட்சத்தை தாண்டியுள்ளது.


வந்தவர்கள் எல்லோரும் முழுக்கப் படித்தார்கள் என்றோ சுரன் இடுகைகள்  அவர்கள்  மனம் கவர்ந்ததென்றொ தெரியாது.

படித்தவைகளில் பாதித்தவைகள்,கவர்ந்தவைகளையே "சுரன்"பக்கங்களில் தந்துள்ளேன்.
அது மற்றவர்களையும் கவரும்,கவர வேண்டும் என்பது கட்டாயமில்லையே. 


எனினும் வந்து சென்றதற்காக மீண்டும் இதய நன்றிகள்!!

===================================================================================
மக்கள் கவிஞர் வரிசையில் இந்தத் தலைமுறைக் கவிஞர்களில் பவள விழா கொண்டாடிய கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களும் மிக முக்கியமானவர்.
அவர்தம் சமுதாய அக்கறை எப்படிப்பட்டது?
இதோ ஒரு அற்புதமான பேனா நர்த்தனம்!
கவிக்கோ கவிதைகள் என்ற நூல் ஓர் அருமையான கவிதைத் தொகுப்பு - அதில் 10.10.1987 இல் எழுதிய பாருக்குள்ளே நல்ல நாடு என்ற தலைப்பில், ஓர் கவிதை:
                          "அவர்களைச் சிறையில் சந்தித்தேன்.
என்ன குற்றம் செய்தீர்கள்?
என்று கேட்டேன்.
ஒவ்வொருவராகச் சொன்னார்கள்:

எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு
ஒருவன் ஓடினான். திருடன், திருடன்
என்று கத்தினேன். அமைதிக்குப்
பங்கம் விளைவித்ததாக என்னைக்
கைது செய்துவிட்டார்கள்!
என் வருமானத்தைக் கேட்டார்கள்
நான் வேலையில்லாப் பட்டதாரி, என்றேன்.
வருமானத்தை மறைத்ததாக வழக்குப்
போட்டுவிட்டார்கள்.
நான் கரிமூட்டை தூக்கும் கூலி,
கூலியாகக் கிடைத்த ரூபாய் நோட்டு
கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது. கறுப்புப்
பணம் வைத்திருந்ததாகக் கைது செய்துவிட்டார்கள்.
என் வயலுக்கு வரப்பெடுத்துக் கொண்டிருந்தேன்
பிரிவினைவாதி என்று பிடித்துக்கொண்டு வந்து
விட்டார்கள்.
அதிகாரி லஞ்சம் வாங்கினான்; தடுத்தேன்.
அரசுப் பணியாளரை அவருடைய கடமையைச்
செய்யவிடாமல் தடுத்ததாகத் தண்டித்துவிட்டார்கள்.
அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படச்
சுவரொட்டியை ஒட்டிக்கொண்டிருந்தேன்.
சட்டமன்ற உறுப்பினர்களை அவதூறு
செய்ததாக அழைத்துக்கொண்டு வந்து
விட்டார்கள்
ஊழல் பேர்வழிகளை நாடு கடத்தவேண்டும்
என்று எழுதினேன், கடத்தல்காரன் என்று
கைது செய்துவிட்டார்கள்.
நான் பத்திரிகை ஆசிரியன். தலையங்கத்தில்
உண்மையை எழுதினேன், நாட்டின்
ஸ்திரத் தன்மையைக் குலைத்ததாகக்
கொண்டு வந்துவிட்டார்கள்.
சுதந்திர தின விழாவில் ஜன கண மன பாடிக்
கொண்டிருந்தார்கள். நான் பசியால் சுருண்டு
படுத்துக்கொண்டிருந்தேன். எழுந்து நிற்க
முடியவில்லை. தேசிய கீதத்தை அவமதித்ததாகச்
சிறையில் அடைத்துவிட்டார்கள்.
அக்கிரமத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தச்
சொன்னான் கண்ணன் என்று யாரோ கதா
காலட்சேபத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
என் பெயர் கண்ணன். பயங்கரவாதி என்று
என்னைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டார்கள்.
நான் வெளியே வந்தேன்
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எதுவும்
இல்லாமல் நாடு அமைதியாக இருந்தது.."
======================================================================================