வெள்ளி, 30 அக்டோபர், 2015

பேஸ்புக் திட்டம்

இந்தியாவில்  வேட்டை, ஆரம்பம்.

வர்த்தகத்தில் இந்தியா எனும் மிகப் பெரிய சந்தையை கைப்பற்றும் நோக்கத்துடன் பன்னாட்டு பகாசுர கார்ப்பரேட் கம்பெனிகள் இடைவிடாமல் முற்றுகையிட்டு வரும் நிலையில், இணையதள வர்த்தகத் திலும் மிகப் பெரும் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் `முகநூல்’ என தமிழகத் தில் கூறப்படும் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் இந்தியா வந் துள்ளார்.
புதுதில்லியில் ஐஐடி மாண வர்களிடையே உரையாற்றிய அவர், ‘இணையச் சமநிலை’யை தான் ஆதரிப்பதாக கூறிக் கொண்டார்;
 அதே நேரத் தில், இலவச இணையச் சேவைபெறுவதற்கான மக்களின்உரிமை குறித்த கோட்பாடு களுக்கு எதிராகவே அவரதுமுழு உரையும் அமைந்திருந்தது.
புதனன்று தில்லிக்கு வந்த மார்க் ஜூக்கர்பெர்க், ஐஐடி வளாகத்தில் சுமார் 1000 மாண வர்கள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசி னார். 
அதிகாரமட்டத்தை தாண்டி மக்களுடனான சந்திப்பு என்ற முறையில், இந்தியாவில் மார்க் பங்கேற்றுள்ள முதல் நிகழ்ச்சி இது.அவர் பேசுகையில், தனதுபேஸ்புக் நிறுவனம் இணையச்சமநிலை என்ற கோட்பாட் டிற்கு இசைவு தெரிவிப்பதாக கூறினார். 
ஆனால் அதேநேரத்தில், தனது நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர் களுக்கு ‘ஜீரோ கட்டணம்’ (அதாவது இலவசம் என்ற பெயரில்) என்ற முறையில் அளிக்கப்படும் சேவைகள் அவசியம் அனைத்து மக்களை யும் சென்றடைய வேண்டும் என்றும் கூறினார்.
மாணவர்களுடனான கேள்வி - பதில் உரையாடலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பேஸ்புக் நிறுவனம் இணையச் சமநிலை என்ற கோட்பாட்டை ஆதரிக்கிறதா என்று எழுப்பப் பட்ட கேள்விக்கு பதிலளித்த மார்க், இணைய சமநிலையை ஆதரிக்கிறோம்; 
ஒழுங்குமுறை என்ற அடிப்படையில் பல்வேறு நாடுகள் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு உருவாக்கியுள்ள விதிகளையும் ஆதரிக்கிறோம் என்று குறிப்பிட்டார்.
மற்றொரு கேள்விக்கு பதி லளித்த அவர், உலகில் உள்ள ஒவ் வொரு குடிமகனுக்கும் இலவச இணையச் சேவை அளிப்பது என்பது மிக அதிகமான செலவு பிடிக்கும் ஒன்றாகும் என்று கூறியதுடன், தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது பய னாளர்களுக்கு இணையச் சேவையை கொண்டு சேர்ப்ப தற்காக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கின்றன என்று கூறினார்.
இந்தியாவில் தங்களது நிறு வனம் ‘ப்ரீ பேசிக்ஸ் டாட் ஆர்க்’ என்ற தளத்தின் மூலம் அளிக்கும் கட்டணமில்லா சேவையை அனைவருக்கும் கொண்டு செல்ல முயற்சிக்கிறோம் எனக்குறிப்பிட்ட மார்க் ஜூக்கர் பெர்க், இது இணையச் சம நிலையை உறுதி செய்யும் என்றும் கூறினார்.இந்தியாவை பொறுத்த வரை அனைவரும் இணைய தளச் சேவையை பெற வேண்டும்; 
ஒட்டுமொத்த இந்தியா வும் இணையத்துடன் இணைக் கப்படாமல் உலகத்துடன் இந்தியா இணைய முடியாது என்றும் அவர் கூறினார்.
தில்லி ஐஐடி நிகழ்ச்சியில் பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் பங்கேற்றதும் அவர் மேற்கண்ட முறை யில் உரையாற்றியதும் முழுக்கமுழுக்க இந்திய இணையதள சந்தையை கைப்பற்றுவதற் காகவே என்று இந்தியாவில் தீவிரமாக செயல்படும் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
பேஸ்புக் நிறுவனம் உலகம் முழுவதும் தனது பயனாளர்களாக இருக்கும் கோடிக் கணக்கான நபர்களின் பெயரில், அவர்களது ஒவ்வொரு பேஸ்புக் கணக்கிற்கும் 12.76 டாலர் அளவிற்கு கட்டணத்தை, விளம்பர தாரர்களிடமிருந்து வசூலித்துக் கொண்டிருக்கிறது என்பது பேஸ்புக் பயனர்களே அறியாத உண்மை; அதாவது தனது பயனர்கள் ஒவ்வொருவரையும் விளம்பரதாரர்களிடம் பேஸ்புக் நிறுவனம் விற்றுவிட்டது என்பதே இதன் பொருள் என கட் டற்ற மென்பொருள் இயக்கம் சுட்டிக்காட்டுகிறது.
இந்நிலையில், 2017ம் ஆண் டில் ஒவ்வொரு பயனருக்குமான கட்டணத் தொகையை 17.5 டாலராக நிர்ணயம் செய்வதற்கு மார்க் ஜூக்கர்பெர்க் திட்ட மிட்டுள்ளார். 
மேலும், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளில் பேஸ்புக் நிறுவனம் அதன் உச்சகட்ட பயனர்களை பெற்றுவிட்டது; இனிமேல் பெறுவதற்கு அங்குபயனர்கள் இல்லை. 
எனவே,புதிய பயனர்களை தேடி பேஸ்புக் நிறுவனம் புறப்பட்டிருக் கிறது. 
அப்படிப்பட்ட பெரும் சந்தையாக இந்தியாவையும், ஆப்பிரிக்க நாடுகளையும் அது குறிவைத்திருக்கிறது. 
அதனால்தான் ஒட்டுமொத்த இந்தி யாவும், தனது தளத்துடன் இணைய வேண்டும் என்றுஜூக்கர்பெர்க் கூறுகிறார் என் றும் கட்டற்ற மென்பொருள் இயக்கம் சுட்டிக்காட்டுகிறது.
மேலும், இந்தியாவில் பேஸ்புக் மட்டுமின்றி இன்டர் நெட் டாட் ஆர்க் என்ற தளத்தின்மூலம் இலவச சேவை என்ற பெயரில் பேஸ்புக், வாட்ஸ் அப், விக்கிபீடியா உள்ளிட்ட 4 தளங்களை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிப்பு செய்தது. இதில் ஒருமுக்கிய சூட்சமம் அடங்கி யுள்ளது. 
இலவச சேவை என்றபெயரில் மேற்கண்ட 4 தளங் களை மட்டுமே ஒரு நபர் பார்க்கமுடியும்; இதைத் தவிர வேறு எந்த தளத்தையும் பார்க்க முடியாது என்பதே உண்மை. இதை பேஸ்புக் நிறுவனம் இலவச சேவை என்றும், அதை அனை வருக்கும் கொண்டு செல்லப் போவதாகவும் கூறுகிறது. 
இதன்மூலம் எந்தவொரு இணையதள பயனரும், எந்தவொரு தளத்தை யும் பார்வையிடுவதற்கு உள்ள உரிமையை பேஸ்புக் நிறுவனம் பறிக்கிறது. இதுகுறித்து பிரச்ச னை எழுப்பப்பட்டதால் அந்தத் தளத்தின் பெயரை தற்போது ப்ரீபேசிக்ஸ் டாட் ஆர்க் என்று மாற்றியுள்ளது.
அதுமட்டுமல்ல, இந்த சேவைகள் அனைத்தையும் இந்தியாவில் ஏற்கெனவே மத்திய அரசின் மகத்தான பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நாடு முழுவதும் உருவாக்கி வைத்திருக்கும் ஆப்டிக்கல் பைபர் நெட்வொர்க் எனப்படும் கண்ணாடி இழை நெட்வொர்க் மூலமாகவே பேஸ்புக் நிறுவனம் கொண்டு செல்லப் போகிறது. 
அதாவது பொதுத்துறை நிறுவனம் போட்டு வைத்துள்ள பாதையை இலவசமாக பயன்படுத்தி பேஸ்புக் நிறுவனம் மிகப் பெரும்கொள்ளை லாபம் அடிக்கப் போகிறது. 
இதற்காகவே, பிரதமர் நரேந்திரமோடியின் ஆதரவுடன் மார்க் ஜூக்கர்பெர்க் இந் தியா வந்துள்ளார் என கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினர் குற்றம்சாட்டினர்.
=====================================================================================
மனிதனை விட மாடு  முக்கியம்.?

வாய்ச்சொல்லில் வீராரான மோடியின் வானத்தை வில்லாக்கும் பேச்சில் மயங்கி வாக்களித்த மக்கள் எல்லோரும் இந்த ஓராண்டு ஆட்சியில் வாயில்லா மாடுகளாகி விட்டனர்.
அதனால் மாடுகள் தங்கள் மதிப்பை ஆர்.எஸ்.எஸ்.தயவில் உயர்த்திக்கொண்டது.
இங்கு மனிதனை கொள்வதை விட மாடுகளை இறைச்சிக்காக  கொல்வது மிக கொடுமையான குற்றமாகி விட்டது.
மாட்டின் இறைச்சிகளை முஸ்லீம்  பெயரில் நிறுவனங்களை நடத்தி ஏற்றுமதி செய்து பணம் குவிக்கும்  பாஜ .க வினர் மற்றவர்களை மாட்டிறைச்சி தின்றார்கள் என்று தவறாக  சொல்லி பரிதாபமாக கொல்லும் அநியாயங்களை இந்த நாட்டில் பிரதமர் கண்டுகொள்ளாதது மிக அநீதி.இவர் இந்த நாட்டில் உள்ள தீவிர இந்துக்களுக்கு மட்டும் பிரதமர் இல்லை.
இங்கு வாழும் 112 கோடி மக்களுக்கும் பிரதமர் என்பதையே மறந்து விட்டார்.
அதில் கோடிகே கணக்கில் இசுலாமியர்களும் உண்டு,கிருத்துவர்களும் உண்டு.
வெங்காயத்தால் மாநில ஆட்சியை இழந்தவர்களை பார்த்த இந்தியா மாட்டிறைச்சிக்காக இந்தியாவின் ஆட்சியை விரைவில் பறி கொடுக்கும் காவி தீவிரவாதிகளையும் பார்க்கத்தான் போகிறது.

புதுதில்லியில் உள்ள கேரள அரசு இல்லத்தில் மாட்டிறைச்சி பரிமாறப்படுகிறதா ? 

என மத்திய உள்துறை அமைச்சகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தில்லி போலீசார் மற்றும் இந்து சேனா குண்டர்கள் இணைந்து சோதனை நடத்தியிருக்கின்றனர். 
இதுஇந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக் கிறது. மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பின்னர், ஆர்எஸ்எஸ் வழி காட்டுதல்படி இந்து மதவெறி அமைப்புகள் எந்த எல்லைக்கும் செல்வதை சமீபகாலமாக பார்க்க முடிகிறது. மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வதந்தியைபரப்பி தாத்ரியில் முகமது இக்லாக் என்ற பெரிய வரைபாஜகவினர் அடித்தே கொன்றனர். 
அதைத் தொடர்ந்தே காஷ்மீரில் மாட்டை கடத்துவதாக வதந்தியைகிளப்பி ஷியத்அகமத் என்ற இளைஞரை சங்பரிவாரஅமைப்பினர் அடித்துக் கொன்றனர்.
இமாச்சலப் பிரதேசத்திலும் இதே போல் மாடுகளை வெட்டுவதற்கு ஏற்றுவதாகக் கூறி நோமன் என்பவரை பஜ்ரங்தள் கும்பல் அடித்தே கொன்றது.
இதே போன்றுஇந்த காலத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 5 பேர் மாட்டிறைச்சியைத் தொடர்புபடுத்தி சங்பரிவாரஅமைப்புகளால் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டிருக்கின்றனர். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதரைக் கடித்த கதையாக, மாட் டுக்கறி சாப்பிட்டதாகக் கூறி காஷ்மீர் மாநில சட்ட மன்றத்திலேயே எம்எல்ஏ ஒருவர் பாஜகவினரால் தாக்கப்பட்டார். தற்போது தில்லியில் உள்ள கேரள அரசு இல்லத்தில் எம்பிக்களை குறிவைத்து இந்து சேனா காயை நகர்த்தத் துவங்கியிருக்கிறது. இது மாட்டிறைச்சியோடு முடியும்பிரச்சனையல்ல, மத்திய அரசிற்கும் மாநில அரசிற் கும் இடையிலான அர சியல் சாசன ரீதியான உறவுக்குஉலை வைக்கும் நடவடிக்கையாகும். 
யாராக இருந்தாலும் நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதைத்தான் மற்றவர்கள் செய்ய வேண்டும் எனசங்பரிவாரம் விடுக்கும் மிரட்டலாகவே இதுஇருக்கிறது.

அதனை ஆமோதிக் கும் விதத்தில் சர்வாதிகாரத் தோரணையில் எதற்கும் அசைந்து கொடுக்காமல் கள்ள மவுனம் காக்கிறார் பிரதமர் மோடி. பன்முகத்தன்மை கொண்ட இந்தியா வை இந்துத்துவம் என்ற பாசிசக் குடுவைக்குள் அடைப்பதற்கான முயற்சி நடக்கிறது. மாடு தின்னும் புலையர் என்று இதே மாட்டுக்கறியின் பெயரால்தான் வரலாறு நெடுகிலும் கோடானகோடி தலித் மக்களும் ஆதிவாசிகளும் தீண்டாமைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள். 
தற்போது அதே ஆயுதத்தை சிறு பான்மையினருக்கு எதிராக, பசு புனிதம் என்ற பெயரில் இந்து மதவெறியர்கள் பயன்படுத்து கிறார்கள். உழைக்கும் இந்து மக்களுக்கு எதிராக இந்துத்துவ மதவெறி சக்திகள் மாட்டிறைச்சியின் மூலம் மனுநீதியை நிலைநாட்ட முயல்கின்றனர்.
இந்தியாவிலிருந்து உலகம் முழுவதும் மாட்டி றைச்சி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய மாட்டிறைச்சியை வெளிநாட்டினர் உண்ணலாம். ஆனால்இந்தியாவில் பிறந்த உழைக்கும் மக்கள் உண்ணக்கூடாது என்பதுதான் இந்துத்துவ வாதிகளின் நியதி. 
இந்தியாவில் இன்று அதிகமாக இருக்கும்பசுக்களுமே பன்னாட்டுக் கலப்பினம் என்பது வேறுகதை. புனிதமாகக் கருதுபவர்கள் மாட்டிறைச்சியை உண்ணாமல் இருக்கலாம், அது அவர்களின் உரிமை. ஆனால் மற்றவர்களை கட்டாயப்படுத்துவதற்கு என்ன உரிமை இருக்கிறது? 
இதனை அனுமதித் தால் நாளை, என்னென்ன சொல்வார்களோ? 
இது ஏதோ மாட்டிறைச்சி சாப்பிடுபவருக்கும், சாப்பிடாதவர்களுக்கும் உள்ள பிரச்சனையல்ல. இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பன்முகத்தன்மையை சவக்குழியில் புதைக்கும் ஏற்பாடு இது.
 இந்தியாவின் நல்லிணக்கத்தை பாது காக்க, இந்துத்துவ கும்பல்களின் உள் அரசியலை புரிந்து கொண்டு, மக்களை பிளவுபடுத்துவதை ஜனநாயக சக்திகள் அனுமதிக்கக் கூடாது.
======================================================================================

இன்று,
அக்டோபர்-30.
  • உலக சிக்கன தினம்
  • இந்தியா ஐநாவில் இணைந்தது(1945)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் பிறந்த தினம்(1908)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கம் நினைவு தினம்(1963)
  • செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்த ஹென்றி டியூனாண்ட் நினைவு தினம்(1910)நடிகர் விவேக் மகன் மூளைக் காய்ச்சலால் மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்த 40 நாட்களாக பிரசன்னா(13) மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் விவேக் மகன் பிரசன்னா உயிர் பிரிந்தது.
நம்மை எல்லாம் சிரிக்க வைத்தவருக்கு சோகம்.
======================================================================================
                                  வாலிக்கு 29அக்டோபர் பிறந்த தினம்.