அவுட்டா ..டவுட்டா 2ஜி

தீர்ப்பு தேதி, மிக நெருக்கத்தில் வந்து விட்டதால், எளிதில் புரிந்து கொள்ள இயலாத தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ரீதியில், நுட்பமான வகையில் அமைந்த, '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்த பரபரப்பு, டில்லி அரசியல் வட்டாரத்தில், தொற்றிக் கொள்ள துவங்கி உள்ளது.

முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சிக் காலத்தில், '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில், 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல் செய்தது. 

இது தொடர்பான வழக்கு விசாரணை, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து முடிந்து, 21ல், தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது
இந்த வழக்கில், தி.மு.க.,வைச் சேர்ந்தவரும், முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சருமான, ராஜா, தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மகள், கனிமொழி உள்ளிட்டோர் மீது, குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. 
தீர்ப்பு நெருங்கும் நேரத்தில், இந்த 2ஜி விவகாரம்  பற்றி பார்ப்போம்.

ஸ்பெக்ட்ரம் ஏலம் விஷயத்தில், 2 கட்டண முறைகள் நிர்ணயிக்கப்பட்டன. அதில், முதலாவது, 'என்ட்ரி பீ' எனப்படும், நுழைவு கட்டணம். ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரும் விண்ணப்பக் கட்டணம் 



இது. இந்த கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம், தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்'க்கே உண்டு. இந்த கட்டணத்தை செலுத்தி, உள்ளே நுழைந்த பின், அலைவரிசை இலவசம்.


இரண்டாவதுகட்டணம், 'ஸ்பெக்ட்ரம் பிரைசிங்' எனப்படும், அலைவரிசை கட்டணம். உரிமம் பெற்ற பின், அதை பயன்படுத்த துவங்கும் நிறுவனத்தின் லாபத்தில் இருந்து, அரசு மேற்கொள்ளும் சேவை வசூல் கட்டணம் தான், அலைவரிசை கட்டணம்; இதை நிர்ணயிக்க, நிதித் துறையின் ஆலோசனை தேவை.

இவற்றில், நுழைவு கட்டணம் தான் பிரச்னையே. 2001ல் நிர்ணயித்த விலையை, 'டிராய்' மாற்றவில்லை. இந்த கட்டணத்திற்கு அதிகாரம் படைத்தது, 'டிராய்' தான்என்பதால், அதன் முடிவை மாற்றவில்லை, தொலை தொடர்பு துறை.இதில் குறுக்கிட்ட நிதித் துறை, 'ஏன் பழைய விலையே நிர்ணயிக்கப்பட்டது; இது, நியாயமில்லையே' என, கேட்டு எழுதிய கடிதத்திற்கு, 'விலையை நிர்ணயிப்பது நாங்களல்ல; தொழில்நுட்ப விஷயங்கள், 'டிராய்'க்கு தான் தெரியும். எனவே, நுழைவு கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமை, 'டிராய்'க்கு தான் உள்ளதே தவிர, எங்களுக்கு இல்லை' என, தொலை தொடர்பு துறை பதில் கடிதம் எழுதுகிறது.

இதையடுத்து, நிதித் துறை, டிராயிடம் இருந்து உரிய விளக்கங்கள் கேட்டு வாங்கி, சமாதானமானது. ஒரு வழியாக, உரிமங்கள் தரப்பட்டு விட்டன.
 யாரும், யார் மீதும் குற்றம் சொல்லவில்லை. 
இருஆண்டுகள் கழித்தே பிரச்னை வெடிக்கிறது, 


சி.ஏ.ஜி., ரூபத்தில். நிதித் துறை, தொலை தொடர்பு துறை பரிமாறிய, மேற்கூறிய இரு கடிதங்கள் தான், அந்த அறிக்கையின் ஆதாரம்.அதில், 'ஏலம் விட்டு இருந்தால், '3ஜி' போல அதிகலாபம் வந்திருக்கும். நுழைவு கட்டணம் குறித்த நிதியமைச்சகஅறிவுரையை,தொலை தொடர்பு துறை புறக்கணித்து, 2001ல் நிர்ணயிக்கப்பட்ட விலையையே, 2007ம் ஆண்டிலும் நிர்ணயித்ததால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, அறிக்கை அளித்தது, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி.
'நுழைவு கட்டணத்துக் கும், அலைவரிசை கட்டணத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல், சி.ஏ.ஜி., பேசுகிறது. 
தயவு செய்து, 2003 மத்திய அமைச்சரவை முடிவுகளை பாருங்கள்' என, ராஜா தரப்பும் மோத துவங்க, தேசிய அரசியலில், பிரச்னை பூகம்பமாக வெடித்தது.

 உச்ச நீதிமன்றம் தலையிட்டு, சி.ஏ.ஜி., அறிக்கையை வைத்து, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உத்தர விட்டது. நுழைவு கட்டணத்தை யார் நிர்ணயிக்க வேண்டுமென்பது தான், இந்த பிரச்னையின் அடிப்படையாக உள்ளது. 

இதிலிருந்து கிளம்பும் கிளை குற்றச்சாட்டுகள் தான், 'கட் - ஆப்' தேதி மாற்றம், தகுதியற்ற நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது, 
கலைஞர், 'டிவி'க்கு பணப் பரிமாற்றம் நடந்தது போன்றவை எல்லாம்.பொதுவாக, சி.ஏ.ஜி., அறிக்கை பார்லிமென்டுக்கு போவது தான் வழக்கம். 

ஆனால் இந்த விவகாரத்தை திமுகவை தனது கட்டுக்குள் வைக்க ப.சிதம்பரம் ஆலோசனையின் பேரில் சோனியா கையில் எடுத்து இது மாபெரும் ஊழல்.இதை காங்கிரசுக்கு தெரியாமல் பிரதமர் மன்மோகன் சிங்,நிதித்துறை ப.சிதம்பரம் ஆகியோர் கவனத்துக்கு கொண்டுவராமல் திமுகவை சார்ந்த மத்திய அமைச்சர் ஆ.ராசா செய்து அரசுக்கு கெட்டப்பெயரை உண்டாக்கிவிட்டார் என்றும் தகவல்களை காங்கிரசு மேலிடம் ஊடகங்கள் மூலம் பரப்பி ,சிபிஐ விசாரணைக்கும் ஆணையிட்டது.

காங்கிரசு தலைமையிலான பாராளுமன்ற குழு முன் நடந்த 2ஜி முறைகேடு தொடர்பான விசாரணையில் காங்கிரஸ் ஆ.ராசாவை விசாரிக்கவோ,அவரது தரப்பு வாதத்தை,ஆவணங்களை கேட்காமலேயே திமுகவை குற்றம் சாட்டியது.
 பாராளுமன்ற  நடைமுறை உள்ள உலக நாடுகளிலேயே மத்திய அரசுக்கு வழங்கிய சி.ஏ.ஜி.,யின் அறிக்கையை பகிரங்கப்படுத்தி புலனாய்வு  வழக்கிற் காக பயன்படுத்தப்பட்டது 2ஜி யில்  தான் முதன்முறை.
காரணம் சி.ஏ.ஜி ,அறிக்கை மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து இப்படி செய்தால் செலவினம் குறைவாக இருக்க கூடும் என்று அறிக்கை தரும் நிறுவனம்தான்.ஊழல்களை ஆய்வு செய்வதல்ல அதன் வேலை.
இப்போது 2ஜி யில் கொடுத்ததும் இவ்வளவுக்கு ஏலம் போயிருந்தால் இவ்வளவு லாபம் என்ற கருத்து கணக்கிட்டுதான்.மனக்கணக்குதான்.

அது தவறான கணக்கீடு என்பதை 2016இல் 4ஜி அலைக்கற்றை ஏலம் காட்டிவிட்டது .
4ஜி ஏலம் ஆ.ராசா ஏலம் விட்டு முறைகேடு செய்ததாக கூறிய 2ஜி ஏலத்தொகையை விட குறைவாகவே போய் உள்ளது.

மேலும் 2ஜி வழக்கில் தங்களுக்கு தெரியாமல் என்ற காங்கிரசை அம்பலப்படுத்தி சிபிஐ இறுதி விசாரணையில் ஆ.ராசா வெளியிட்ட ஆவணங்கள் 
"பிரதமர் மன்மோகன் சிங்,நிதித்துறை அமைச்சகங்களுக்கு ஆ.ராசா அனுப்பிய ஏல விபரங்கள் குறித்த கடிதங்கள் அதில் மன்மோகன் சிங்,ப.சிதம்பரம் விபரங்கள் கேட்டும்,அனுமதித்தும் எழுதிய குறிப்புகள்'கோப்புகள் விசாரணையையே திசைதிருப்பி சிபிஐ வழக்குரைஞ்சர் திணறும்படி ஆயிற்று.
அவை தீர்ப்பை கண்டிப்பாக திருத்தி எழுத வைத்திருக்கும்.  
2 ஜி யில்  சி.ஏ.ஜி. கூறிய மனக்கணக்குப்படி 1.76 லட்சம் கோடிகள் இழப்பு  என்றும் அதை ஆ.ராசா ஊழல் செய்து விட்டார் என்றும்  வரிந்துக் கட்டிக்கொண்டு முதல் பக்கத்தில் மாதக்கணக்கில் எழுதிய பத்திரிகைகள் எல்லாம் பின் அதை விட மேம்பட்ட 3ஜி ஏலம்  சி.ஏ.ஜி வழிகாட்டலில் நடந்த போது வெறும் 36,000 கோடிகளுக்கு மட்டுமே ஏலம் போனதை பற்றி வாயே திறக்கவில்லை.
அப்படி என்றால் இப்போது  சி.ஏ.ஜி மனக்கணக்குப்படி  கிட்டத்தட்ட 4லட்சம் கோடிகள் ஊழல் நடந்ததாக அல்லவா எடுத்துக்கொள்ள வேண்டும் ?
=======================================================================================
ன்று ,
டிசம்பர்-18.
  • சர்வதேச இடம்பெயர்வோர் தினம்
  • கத்தார் தேசிய தினம்
  • நியூஜெர்ஸி,அமெரிக்காவின் 3வது மாநிலமாக இணைந்தது(1787)
  • நைஜர் குடியரசு தினம்(1958)
  • ஹச்.டி.எம்.எல்., 4.0 வெளியிடப்பட்டது(1997)
=========================================================================================
குஜராத்தில் மோடியின் அபார வளர்ச்சி


ஆண்டு =இடங்கள்
2002 - 127 2007 - 117 2012 - 116 2017 - 99


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?