உணவு முழுக்க விசம் !
ரசாயன மய விளை நிலங்கள்,? மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் பூச்சிக்கொல்லிகளும் ரசாயன உரங்களும் விளைநிலங்களை மட்டும் விட்டு வைக்குமா என்ன?தமிழக அரசு நடத்தியிருக்கும் மண்வள ஆய்வு ஒன்றில், நச்சுத்தன்மை கொண்டதாக விளைநிலங்கள் மாறியிருப்பது தெரிய வந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் உணவுப் பொருள் உற்பத்திக்கே தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிவிடலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். ஏற்கெனவே, வளைகுடா நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நம்முடைய உணவுப் பொருட்கள் தரமற்றவை என்ற சர்ச்சை யில் இருக்கிறது. சமீபத்தில், ‘தமிழக காய்கறிகளில் நச்சுத்தன்மை அதிகம்’ என்று தமிழக விளைபொருட்களை வாங்க மறுத்ததுடன், தமிழக அரசுக்கு கடிதமும் அனுப்பியிருக்கிறது கேரள அரசு. ரசாயன உணவுகளாலேயே பல்வேறு பாதிப்புகளுக்கு நாம் ஆளாகி வரும் நிலையில், விளைநிலமே நஞ்சாகி இருப்பது என்னென்ன விளைவுகளை உண்டாக்கும் என இதய சிகிச்சை மருத்துவரான முகுந்தனிடம் கேட்டோம். ‘‘காய்கறிகளில் கலக்கிற பூச்சிக் கொல்லிகளும், ரசாயனங்களும் Micronutrients என்கிற நுண்சத்துகளை முழுமையாக அழித்துவிட்டன. குறிப்பாக மாலிப்டினம...